லலிதா சகஸ்ரநாமம் தந்த பாஸ்கர ராயர்!

/idhalgal/om/bhaskara-raya-who-gave-lalitha-sahasranamam

திசங்கரர் தம் குறுகியகால வாழ்க்கையில் பல அரிய செயல்களைச் செய்ததன் பயனாய் இன்று இந்து மதம் ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்துள்ளது. கிருஷ்ண பகவான் உபதேசித்த பகவத்கீதைக்கும், வேதவியாச மகரிஷி எழுதிய பிரம்மசூத்திரத்திற்கும் விளக்கவுரை (பாஷ்யம்) எழுதினார். மேலும், அம்பிகையைப் போற்றும் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்கவுரை எழுத முற்பட்டபோது, அம்பிகையே அசரீரியாக வந்து, தன் சகோதரர் மகாவிஷ்ணுவின் சகஸ்ர நாமத்திற்கு விளக்கவுரை எழுதச் சொன்னதாகவும்; லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க வுரை எழுத வேறொரு மகான் பிறப்பார் என்று சொன்னதாகவும் கூறுவார்கள்.

அப்படி அம்பிகையே சொன்ன மகான் தான் ஸ்ரீபாஸ்கர ராயர் (பாஸுரானந்த நாதர்) என்கிற வேதபண்டிதர் ஆவார். இவர் பிறப்பால் மகாராஷ்டிர மாநிலத்தவராக இருந்தாலும், தமிழ்நாட்டிலேயே பலகாலம் வாழ்ந்து, இறுதியில் கும்பகோணம் அருகே யுள்ள திருவிடைமருதூரில் 95-ஆம் வயதில் சித்தியடைந்தார். இவர் சிறந்த ஸ்ரீவித்யா உபாசகர் மட்டுமல்ல; அம்பிகையின் மந்திர, தந்திர சாஸ்திரத்தில் பெரிய பண்டிதர் ஆவார். ஆதிசங்கரருக்குப்பின்பு ஸ்ரீவித்யையின் பெருமையை நிலைநாட்டியவர்.

"அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்' என மகாகவி பாரதியார் சொன்னது போன்று, கருணை உள்ளம் கொண்டவ ளும், மங்கள வடிவமானவளும், உலகத்து உயிரினங்களுக்கெல்லாம் அன்னைபோலிருந்து காத்து வருபவளுமான தேவி பராசக்தி யின் ஒரு வடிவமே ஸ்ரீலலிதாம்பிகை. பரப் பிரம்மமான சிவனிடமிருந்து தோன்றிய சைதன்ய சக்தியை பராசக்தி, ஆதிசக்தி, மூலசக்தி என்று அழைக்கிறோம். தன்னை சரண டைந்தவர்களுக்கு சகல சௌபாக்கியங் களையும் அளிக்கும் பராசக்தியின் உபாசனைதான் ஸ்ரீவித்யை (வித்யா) எனச் சொல்வார்கள். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பிரம்ம தத்துவத்தைப் பெண் வடிவமான தெய்வமாக உபாசிப்பதற்கு "ஸ்ரீவித்யை' எனப் பெயர். இந்த ஸ்ரீவித்யை லலிதா பர்யாயம், சண்டீ பர்யாயம் என இருவகைப்படும்.

பாவனோபநிஷத், கௌலோப நிஷத், மஹோபநிஷத், காளிகோப நிஷத், குஹ்யோபநிஷத் போன்ற உபநிஷத்துகள் பராசக்தியைக் குறிப்பன. வேதவியாச மகரிஷி இயற்றிய பதினெண் புராணங் களில் பிரம்மாண்ட புராணத்தின் உத்தர காண்டத்தில் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா த்ரிசதீ, லலிதோபாக்யானம் முதலியவை சொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்தையும் துதிக்க சத, த்ரிசத, சஹஸ்ரநாமம் என்னும் பெயரில் வழிபாட்டு முறைகள் உண்டு. இவற்றைப் பாராயணம், அர்ச்சனை மூலம் சொல்ல லாம். இறைவனின் அருளைப் பெறுவதற்கு தற்போதைய கலியுகத்தில் சுலபமான மார்க்

திசங்கரர் தம் குறுகியகால வாழ்க்கையில் பல அரிய செயல்களைச் செய்ததன் பயனாய் இன்று இந்து மதம் ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்துள்ளது. கிருஷ்ண பகவான் உபதேசித்த பகவத்கீதைக்கும், வேதவியாச மகரிஷி எழுதிய பிரம்மசூத்திரத்திற்கும் விளக்கவுரை (பாஷ்யம்) எழுதினார். மேலும், அம்பிகையைப் போற்றும் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்கவுரை எழுத முற்பட்டபோது, அம்பிகையே அசரீரியாக வந்து, தன் சகோதரர் மகாவிஷ்ணுவின் சகஸ்ர நாமத்திற்கு விளக்கவுரை எழுதச் சொன்னதாகவும்; லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க வுரை எழுத வேறொரு மகான் பிறப்பார் என்று சொன்னதாகவும் கூறுவார்கள்.

அப்படி அம்பிகையே சொன்ன மகான் தான் ஸ்ரீபாஸ்கர ராயர் (பாஸுரானந்த நாதர்) என்கிற வேதபண்டிதர் ஆவார். இவர் பிறப்பால் மகாராஷ்டிர மாநிலத்தவராக இருந்தாலும், தமிழ்நாட்டிலேயே பலகாலம் வாழ்ந்து, இறுதியில் கும்பகோணம் அருகே யுள்ள திருவிடைமருதூரில் 95-ஆம் வயதில் சித்தியடைந்தார். இவர் சிறந்த ஸ்ரீவித்யா உபாசகர் மட்டுமல்ல; அம்பிகையின் மந்திர, தந்திர சாஸ்திரத்தில் பெரிய பண்டிதர் ஆவார். ஆதிசங்கரருக்குப்பின்பு ஸ்ரீவித்யையின் பெருமையை நிலைநாட்டியவர்.

"அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்' என மகாகவி பாரதியார் சொன்னது போன்று, கருணை உள்ளம் கொண்டவ ளும், மங்கள வடிவமானவளும், உலகத்து உயிரினங்களுக்கெல்லாம் அன்னைபோலிருந்து காத்து வருபவளுமான தேவி பராசக்தி யின் ஒரு வடிவமே ஸ்ரீலலிதாம்பிகை. பரப் பிரம்மமான சிவனிடமிருந்து தோன்றிய சைதன்ய சக்தியை பராசக்தி, ஆதிசக்தி, மூலசக்தி என்று அழைக்கிறோம். தன்னை சரண டைந்தவர்களுக்கு சகல சௌபாக்கியங் களையும் அளிக்கும் பராசக்தியின் உபாசனைதான் ஸ்ரீவித்யை (வித்யா) எனச் சொல்வார்கள். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் பிரம்ம தத்துவத்தைப் பெண் வடிவமான தெய்வமாக உபாசிப்பதற்கு "ஸ்ரீவித்யை' எனப் பெயர். இந்த ஸ்ரீவித்யை லலிதா பர்யாயம், சண்டீ பர்யாயம் என இருவகைப்படும்.

பாவனோபநிஷத், கௌலோப நிஷத், மஹோபநிஷத், காளிகோப நிஷத், குஹ்யோபநிஷத் போன்ற உபநிஷத்துகள் பராசக்தியைக் குறிப்பன. வேதவியாச மகரிஷி இயற்றிய பதினெண் புராணங் களில் பிரம்மாண்ட புராணத்தின் உத்தர காண்டத்தில் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா த்ரிசதீ, லலிதோபாக்யானம் முதலியவை சொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்தையும் துதிக்க சத, த்ரிசத, சஹஸ்ரநாமம் என்னும் பெயரில் வழிபாட்டு முறைகள் உண்டு. இவற்றைப் பாராயணம், அர்ச்சனை மூலம் சொல்ல லாம். இறைவனின் அருளைப் பெறுவதற்கு தற்போதைய கலியுகத்தில் சுலபமான மார்க்கம் ஸ்தோத்திரங்களைப் படிப்பது, இறை நாமங்களைப் போற்றிப் பாடுவது (பஜனை) போன்றவையாகும்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் அற்புதமான ஸ்தோத்திரம். ஒரு பெயர் ஒருமுறை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. திரும்பச்சொல்லும் "புனருக்தி' என்பது கிடையாது. இது உயர்ந்த மந்திர சாஸ்திர நூல் மட்டுமின்றி, முக்தியைத் தரும் நூல் என்றே சொல்லலாம். ஸ்ரீலலிதாம்பிகையின் திருவுருவ அழகைப் பற்றி 12-ஆவது நாமங்களிலிருந்து 40-ஆவது நாமம்வரை வர்ணிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் "கேசாதி பாதாந்த வர்ணனை' எனக் கூறுவார்கள். "ஸ்தோத்ர ப்ரியா' என்கிற 927-ஆவது நாமத்திற்கு "ஸ்தோத்திரத்தை விரும்புபவள்' என்று பொருள். பொதுவாக ஸ்தோத்திர முறையை நமஸ்காரம், ஆசிர் வாதம், சித்தாந்தத்தைக் கூறுவது, வீர, தீர பராக்ரமத்தை விளிப்பது, விபூதியைக் கூறுவது, பிரார்த்தனை என ஆறுவகையாகப் பிரித்துச்சொல்வதற்கேற்ப-

627- த்ரிஜகத்வந்த்யா- நமஸ்காரம்

448- ஸ்வஸ்திமதீ- ஆசிர்வாதம்

735- மித்யாஜகததிஷ்டானா- சித்தாந்தம்

79- பண்டாஸுரேந்த்ர நிர்முக்த சஸ்த்ரப்ரத்யர்ஷ வர்ஷிணீ'- பராக்ரமம்

658- "இச்சாசத்தி ஞானசக்தி க்ரியாசக்தி ஸ்வரூபிணி'- விபூதி

என்று ஆயிரம் நாமங்களில் மேற்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளது.

ஜகன்மாதாவான லலிதாம்பிகையை வாக்தேவிகளான வசினீ, காமேச்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேச்வரீ, கௌலினீ என்கிற எட்டுபேரும் ஸ்ரீபுரத்தின் அரண்மனையில் வீற்றிருக்கும்போது துதிப்பது இந்த லலிதா சகஸ்ரநாமத்தைதான். "சிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயனாம்...'

என்னும் தியான சுலோகத்துடன் துவங்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை மகாவிஷ்ணு வின் அம்சமான ஸ்ரீஹயக்ரீவர் (பரிமுகப் பெருமாள்) தமிழ் முனிவரான அகத்தியருக்கு உபதேசம் செய்தார். திருவாரூர் மாவட்டத்தி லுள்ள திருமீயச்சூரில்தான் ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமம் முதலில் அரங்கேற்றப்பட்டது. இந்த சகஸ்ரநாமத்தின் பொருளை அறியவும், எளிதாகப் புரிந்துகொள்ளவும் விளக்க வுரையை (சர்ற்ண்ஸ்ரீங்) விமர்சாநந்த நாதர் என்பவரால் "விமர்சா நந்தீயம்' என்னும் பெயரி லும், பட்ட நாராயணன் என்னும் பண்டிதர் "ஜய மங்களா' என்னும் பெயரிலும் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. இவை காலப்போக்கில் அழிந்துபோயின. "சௌபாக்கிய பாஸ்கரம்' என்னும் பெயரில் பாஸ்கர ராயர் சமஸ்கிருத மொழியில் எழுதியது போன்று, அதற்கு நிகராக இதுவரை யாரும் எழுதவில்லை. காரணம் அவருடைய புலமை மட்டுமல்ல; அம்பிகையின்மீது அவருக் கிருந்த பக்தியும், அம்பிகையின் பரிபூரண அருளும்தான். அவருக்குப் பின்பு சிம்மம் புட்ல இராமமூர்த்தி சாஸ்திரிகள் உள்ளிட்ட சிலர் விளக்கவுரை எழுதினார்கள். பாஸ்கர ராயரின் விளக்கவுரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜி.வி. கணேசன் என்னும் பண்டிதர் தமிழில் மொழிபெயர்த்தார்.

அன்றைய மகாராஷ்டிர தேசத்தில் பாகா எனும் சிற்றூரில் கி.பி. 1690-ஆம் ஆண்டு கம்பீர ராயர்- கோனாம்பிகா தம்பியினருக்கு மகனாக, விஸ்வாமித்திர கோத்திரத்தில் பாஸ்கர ராயர் அவதரித்தார். கம்பீர ராயர் சிறந்த வேதபண்டிதர். அன்றைய விஜயநகர அரசனின் சபையில் மகாபாரதத்தைப் பற்றி மிகச்சிறப்பாக சொற்பொழிவாற்றியதால், மனம் மகிழ்ந்த அரசன் இவருக்கு "பாரதி' என்னும் பரம்பரைப் பட்டத்தை அளித்து கௌரவித்தான். தன்னைப்போல தன் மகனும் பிற்காலத்தில் ஒரு பண்டிதனாக வரவேண்டுமென்னும் எண்ணத்தில், சிறிய வயதிலேயே பாஸ்கர ராயருக்கு உபநயனம் முடிந்தவுடன் சரஸ்வதி உபாசனையை கம்பீர ராயர் செய்தார். இதனால் இவருக்கு நல்ல ஞானம் ஏற்பட்டது. காசியில் வாழ்ந்த நரசிம்ம ஹாத்வரீ என்னும் பண்டிதரிடம் வேதாந்தம், சாஸ்திரங்கள், அம்பிகையின் பூஜைமுறைகள் போன்றவற்றைக் கற்றார். ஸ்ரீவித்யை உபதேசத்தை சிவதந்த சுக்லர் என்னும் மகான்மூலம் பெற்று, "பாஸுரானந்த நாதர்' என்னும் தீட்சா நாமத்தைப் பெற்றார்.

l

அதர்வண வேதத்தை முறையாகக் கற்று அதை பிறருக்கு போதித்துவந்தார். கங்காதர வாஜ்பேயீ என்னும் பண்டிதரிடம் கௌட தர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். தேவி பாகவதத்தை ஆங்காங்கே சொற்பொழிவாக நிகழ்த்திவந்தார்.

திருமணவயது வந்தவுடன் பெற்றோர் இவருக்கு ஆனந்தி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்தனர். இல்வாழ்க்கை யால் இவருக்கு பாண்டுரங்கன் என்னும் மகன் பிறந்தான். பல பண்டிதர்களுடன் சாஸ்திரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தர்க்கம் (வாதம்) செய்து அவர்களை வெற்றி கண்டார்.

மத்வ சம்பிரதாய வித்வானை வாதத்தில் வெற்றிபெற்றதால், அவருடைய உறவினர் பெண்ணான பார்வதியைத் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று. இரு மனைவிகளுடன் குடும்பத்தை நல்லமுறையில் நடத்திவந்தார். இவருடைய சீடனாக இருந்த சந்திரசேனன் என்னும் சிற்றரசனின் வேண்டுகோளுக்கிணங்கி கிருஷ்ணா நதிக்கரையில் சிறிதுகாலம் குடும்பத்துடன் வசித்துவந்தார்.

இவருடைய குருவான கங்காதர வாஜ்பேயீ தமிழ்நாட்டில் திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவருடன் தங்கியிருக்கவேண்டும் என்னும் எண்ணத்தில், இவரும் குடும்பத்துடன் திருவாலங்காட்டில் வசிக்கத் தொடங்கினார். இவருடைய புலமையைக் கேள்விப்பட்ட தஞ்சைப்பகுதியை ஆண்டுவந்த "போஸ்லே' வம்சத்து அரசர், இவர் தங்குவதற்காக பெரிய நிலப்பகுதியைக் காணிக்கையாகக் கொடுத்து கௌரவித்தார். அந்த இடமே "பாஸ்கர ராஜபுரம்' என மாறியது.

பாஸ்கர ராயர் காசியில் வாழ்ந்துவந்த சமயத்தில், அவருடைய பெயரும் புகழும் பல இடங்களில் பரவியது. இதனால் சில பண்டிதர்கள் அவர்மீது பொறாமையும் கோபமும் கொண்டனர். அம்பிகைக்காக இவர் நடத்திய பெரிய யாகத்திற்கு வந்த பண்டிதர்கள் இவருடைய புலமையை சோதிக்க நினைத்தனர்.

இதையறிந்த குங்குமானந்த ஸ்வாமி என்னும் மகான் அவர்களைத் தடுத்துப் பார்த்தார். (குங்குமானந்த ஸ்வாமி அம்பிகையின் அருளைப்பெற்றவர். இவர் விபூதியை நெற்றியில் வைத்துக்கொண்டால் அது உடனே குங்கும நிறத்தில் சிவப்பாக மாறிவிடுமாம்). இருப்பினும் பண்டிதர்கள் கேட்கவில்லை. வேதம், சாஸ்திரம், இதிகாசங்கள் போன்றவற்றிலிருந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கர ராயர் தகுந்த பதிலை அளித்தார்.

கடைசியாக லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் 237-ஆவது நாமமான "மஹா சதுஷ்சஷ்டி கோடி யோகினீ- கண- ஸேவிதாயை' என்பது 64 ஆயிரம் கோடி யோகினி பற்றிக் குறிப்ப தால், 64 ஆயிரம் கோடிக்கான பெயர்களை வரிசையாகச் சொல்லும்படி கேட்டனர். இவ்வளவு கோடி பெயர்களை இவர் எப்படிச் சொல்லுவார் என அந்த பண்டிதர்கள் நகைத்தனர். ஆனால் பாஸ்கர ராயர் சற்றும் கலங்காமல், அம்பிகையை வணங்கிவிட்டு விடைதர சம்மதித்தார். கேள்வி கேட்ட பண்டிதர்களிடம் தான் பெயர்களைச் சொல்லச் சொல்ல எழுதிக்கொள்ளுமாறு கூறி, வரிசையாக கடகடவென சொல்லிக் கொண்டே வந்தார். தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த நிகழ்வு நடந்துகொண்டே இருந்தது. கேள்வி கேட்ட பண்டிதர்கள் அதற்குமேல் எழுதமுடியாமல் கைவலியால் துடித்தனர். ஆனால் பாஸ்கர ராயர் சற்றும் களைப்படையவில்லை. வந்த பண்டிதர்கள் எல்லாரும் பிரமித்துப்போய் செய்வதறியாமல் தவித்தனர். குங்குமானந்த ஸ்வாமி பண்டிதர்களை பாஸ்கர ராயரிடம் மன்னிப்பு கேட்கச் சொல்ல, அனைவரும் அவ்வாறே செய்தனர்.

இதேபோன்று இவரது ஆன்மபல சக்தியை அறியாத ஒரு சந்நியாசி அறியாமையால் தவறா கப் பேசிவிட்டு பின்னர் இவரிடம் மன்னிப்பு கேட்டார்.

அதாவது, பாஸ்கர ராயர் திருவிடை மருதூரில் தங்கியிருந்த சமயத்தில், மாலை வேளையில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம். வேப்பத்தூரில் வசித்துவந்த ஒரு சந்நியாசி இவரது வீடுவழியாக தினமும் மகாலிங்கசுவாமி கோவிலுக்குச் செல்வார். இங்ஙனம் அந்த சந்நியாசி வரும்போது பாஸ்கர ராயர் எழுந்துநின்று வணங்கவோ, மரியாதை செலுத்தவோ மாட்டார். அவர் ஏதோ சிந்தனையில் உட்கார்ந்திருப்பார். ஒரு துறவியைக் கண்டால் எழுந்துநின்று வணங்கவேண்டும் என்னும் சம்பிரதாயத்தை அறிந்தும், பாஸ்கர ராயர் அதைக் கடைப்பிடிக்காததைக் கண்டு அந்த சந்நியாசிக்கு மனதிற்குள் வருத்தம் இருந்தது. இது நாளடைவில் பாஸ்கர ராயர்மீது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

ஒருநாள் மகாலிங்க சுவாமி கோவிலில் இருவரும் நேருக்குநேராக சந்திக்கும் சூழ்நிலை தற்செயலாக ஏற்பட்டது. அப்போது அந்த சந்நியாசி அங்கு வந்தவர்களிடம் பாஸ்கர ராயர் புலமை பற்றியும், அதனால் அவருக்கு தலைக்கனம் அதிகம் உள்ளது எனவும் கூறி அவரை கேலிசெய்தார். இதை வந்தவர்கள் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் பாஸ்கர ராயரிடமே விளக்கம் கேட்க, அவர் சந்நியாசியின் மன ஓட்டத்தை அறிந்துகொண்டார்.

""எனக்கு தலைக்கனம் எதுவுமில்லை. அந்த சந்நியாசிக்கு தரையில் வீழ்ந்து வணங்கவோ, மரியாதை செலுத்தவோ தவறியதற்குக் காரணம் அவர் நன்றாக இருக்க வேண்டுமென்கிற எண்ணம்தான்'' எனக் கூறினார். இந்த சமாதான விளக்கத்தை சந்நியாசி உட்பட யாரும் ஏற்கவில்லை. தான் சொன்னதை நிரூபிக்க அவருடைய தண்டம், கமண்டலம் ஆகியவற்றை தரையில் ஓரிடத்தில் வைத்துவிட்டு, அதை பாஸ்கர ராயர் தரையில் வீழ்ந்து சஷ்டாங்கமாக வணங்கினார். அடுத்த நொடியே தண்டமும் கமண்டலமும் சுக்கு நூறாக உடைந்து சிதைந்தன. இதைக்கண்ட அனைவரும் திடுக்கிட்டனர். தான் வணங்கி இருந்தால் சந்நியாசிக்கும் இதே கதிதான் ஆகியிருக்கும் எனக் கூறினார். இவருடைய மகிமையை உணர்ந்த அந்த சந்நியாசி பாஸ்கர ராயரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இப்படி சில சுவையான சம்பவங்கள் பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் நடந்துள்ளன.

அம்பிகையின் பரிபூரண அருளைப்பெற்ற இந்த மகான் வேதாந்தம், மீமாம்சை, வியாகரணம், நியாயம், மந்திர சாஸ்திரம் போன்றவற்றில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில காலப்போக்கில் அழிந்துவிட்டன.

காசி, கொங்கண தேசம், இராமேஸ்வரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் புதிய கோவில் களை உருவாக்கினார். இவரது சீடரான உமானந்தநாதர் "ஸ்ரீபாஸ்கர விலாஸம்' எனும் நுலில் இவருடைய மகிமையைப் பற்றி எழுதியுள்ளார். தம்முடைய 95-ஆம் வயதில், கி.பி. 1785-ஆம் ஆண்டு திருவிடைமருதூரில் சித்தியடைந்தார். இவரது நினைவாக பாஸ்கர ராஜபுரத்தில் ஆனந்தவல்லி சமேத ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் திருக்கோவில் கட்டப் பட்டது. அண்மையில் 2016-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைப்போன்று, ஆதிசங்கரர் எழுதிய "சௌந்தர்ய லஹரி', அபிராமி பட்டர் எழுதிய "அபிராமி அந்தாதி' போன்ற நுல்களைத் துதித்து, லலிதாம்பிகையே துணையென்று அப்பெருமாட்டியின் திருவடி யைப் பற்றிக்கொள்வோம்.

om010419
இதையும் படியுங்கள்
Subscribe