சித்தர் கால சிறந்த நாகரிகம் 12 - அடிகளார் மு. அருளானந்தம்

/idhalgal/om/best-civilization-siddhartha-period-12-adikallar-m-arullanandam

குண்டலினி என்ற மகா சக்தி மனித மூளைப் பகுதியில் பெரிய அளவிலான மாற்றத் துடன்கூடிய பரிணாம வளர்ச்சியை உருவாக்கியது.

இதை அறிந்ததும், அந்த சக்தியைப் பயன்படுத்தி மனித உடலியலைப் பற்றிய கூரிய ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கினார்கள் சித்தர் பெருமக்கள்.

உயிர் காக்கும் உடற்சூடு!

அவர்களின் ஆய்வு மனிதனின் இயற்கை மரணத்தைப் பற்றியதாக இருந்தது. பல பெரிய மனிதர்கள் வயதாகி இயற்கையாக இறக்கும்போது அருகிலேயே இருந்து, பந்த பாசமற்ற நிலையில் அவர்களின் மரணத்தறுவாயில், அவர்களின் உடற்கூறு களில் எவ்வெவ்வகையிலெல்லாம்

மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும், தொடர்ச்சி யாக பல்வேறு கால கட்டங்களில் நடந்த வற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்த பொழுது, எல்லா வற்றிற்கும் பொது வான நிகழ்வு நடந்திருப்பதை உணர்ந்தனர். அது என்னவெனில், ஒருவருக்கு மரணம் சம்பவிக்கும்பொழுது அவர்களது உடற்சூடு முழுவதும் குறைந்து குளிர்ந்துவிடுகிறது என்பதாகும். இதை, தொடர்ச்சியாக அனைவரது மரணத்தின்பொழுதும் கவனித்ததால், உடற்சூட்டிற்கும் உயிருக்கும் மிகுந்த தொடர்பிருப்பதைக் கண்டறிந்தனர். இந்த உடற்சூட்டைத் தணியவிடாமல் செய்வதன் மூலம் மரணத்தைத் தள்ளிப்போட முடியுமென்ற தீர்வுக்கு வந்தனர். இந்த உடற்சூட்டிற்கு "அகத்தீ' அல்லது நம்+தீ=நந்தீ எனப்பெயரிட்டனர்.

nn

இழுத்துவிடப்படும் மரணப் பெருமூச்சு!

இதற்கடுத்து, ஒருவரது மரணம் சம்பவிப் பதற்கு 30 நாழிகைகளுக்கு முன், அவரது தலைப் பகுதியி-ருந்து மூச்சுக் குழாய் வழியே நுரையீரலுக்கு சளி இறங்கி வருவதைக் கண்டறிந்தனர். இவ்வாறு சளி இறங்கத் தொடங்கிய பொழுதி-ருந்து மரணிக்கப் போகிறவர் தனது நுரையீரல் நின்றுவிடாமல் தொடர்ந்து இயங்கவேண்டும் என்பதற்காகத் தனது சுய நினைவுகளை இழந்து விட்ட போதிலும், நீண்ட பெரிய மூச்சை கடினப்பட்டு இழுத்து விடுவதைக் க ண் ட ன ர் . இ ந் த மூச்சுக்கு மரணப் பெருமூச்சு என்று பெயரிட்டு, அதைக் கண்டு அஞ்சத் ù த ô ட ங் கி ன ர் .

இந்த நிகழ்வுகளிலிரு ந் து ஒ ரு மனிதன் இயற்கை மரணம் எய்துகின்ற பொழுத

குண்டலினி என்ற மகா சக்தி மனித மூளைப் பகுதியில் பெரிய அளவிலான மாற்றத் துடன்கூடிய பரிணாம வளர்ச்சியை உருவாக்கியது.

இதை அறிந்ததும், அந்த சக்தியைப் பயன்படுத்தி மனித உடலியலைப் பற்றிய கூரிய ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கினார்கள் சித்தர் பெருமக்கள்.

உயிர் காக்கும் உடற்சூடு!

அவர்களின் ஆய்வு மனிதனின் இயற்கை மரணத்தைப் பற்றியதாக இருந்தது. பல பெரிய மனிதர்கள் வயதாகி இயற்கையாக இறக்கும்போது அருகிலேயே இருந்து, பந்த பாசமற்ற நிலையில் அவர்களின் மரணத்தறுவாயில், அவர்களின் உடற்கூறு களில் எவ்வெவ்வகையிலெல்லாம்

மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும், தொடர்ச்சி யாக பல்வேறு கால கட்டங்களில் நடந்த வற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்த பொழுது, எல்லா வற்றிற்கும் பொது வான நிகழ்வு நடந்திருப்பதை உணர்ந்தனர். அது என்னவெனில், ஒருவருக்கு மரணம் சம்பவிக்கும்பொழுது அவர்களது உடற்சூடு முழுவதும் குறைந்து குளிர்ந்துவிடுகிறது என்பதாகும். இதை, தொடர்ச்சியாக அனைவரது மரணத்தின்பொழுதும் கவனித்ததால், உடற்சூட்டிற்கும் உயிருக்கும் மிகுந்த தொடர்பிருப்பதைக் கண்டறிந்தனர். இந்த உடற்சூட்டைத் தணியவிடாமல் செய்வதன் மூலம் மரணத்தைத் தள்ளிப்போட முடியுமென்ற தீர்வுக்கு வந்தனர். இந்த உடற்சூட்டிற்கு "அகத்தீ' அல்லது நம்+தீ=நந்தீ எனப்பெயரிட்டனர்.

nn

இழுத்துவிடப்படும் மரணப் பெருமூச்சு!

இதற்கடுத்து, ஒருவரது மரணம் சம்பவிப் பதற்கு 30 நாழிகைகளுக்கு முன், அவரது தலைப் பகுதியி-ருந்து மூச்சுக் குழாய் வழியே நுரையீரலுக்கு சளி இறங்கி வருவதைக் கண்டறிந்தனர். இவ்வாறு சளி இறங்கத் தொடங்கிய பொழுதி-ருந்து மரணிக்கப் போகிறவர் தனது நுரையீரல் நின்றுவிடாமல் தொடர்ந்து இயங்கவேண்டும் என்பதற்காகத் தனது சுய நினைவுகளை இழந்து விட்ட போதிலும், நீண்ட பெரிய மூச்சை கடினப்பட்டு இழுத்து விடுவதைக் க ண் ட ன ர் . இ ந் த மூச்சுக்கு மரணப் பெருமூச்சு என்று பெயரிட்டு, அதைக் கண்டு அஞ்சத் ù த ô ட ங் கி ன ர் .

இந்த நிகழ்வுகளிலிரு ந் து ஒ ரு மனிதன் இயற்கை மரணம் எய்துகின்ற பொழுது அவனது தலைச்சளியைக் குறைத்து விட்டால் அவனது மரணக் காலத்தைத் தள்ளிப்போடலாம் எ ன் ப û த யு ம் கண்டறிந்தனர்.

கண்களை ஆராய்ந்து கண்டறிந்தவை!

ஒரு மனிதனின் மரணத்தின்போது அவனது இரு கண்விழி களையும் உற்றுப்பார்த்து ஆராய்ந்தனர். அப்பொழுது அவனது இடது கண் விழியைக்காட்டிலும் சிறிது நொடிகள் சென்றபின்னே வலதுவிழி பாவைத் துளை மூடிவிடுவதைக் கண்டறிந்தனர். இதிலிருந்து மனித உயிருக்கும் வலது கண்பாவைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். வலதுகண்ணிமைப்பாவை முழுவதுமாக மூடியபின்தான் உடல் தனது சூட்டை இழக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். உடலானது, தன் சூட்டை இழந்த ஆறு நாழிகைக்குப்பிறகு, தனது அவயங்களில் உள்ள திசுக்கள் தங்களுக்கிடையிலான பிணைப்பைத் துண்டித்துக்கொள்வதை உணர்ந்தனர். அதன்பின், தோல் முழுவதும் உள்ள திசுக்களில் உள்ள செல்களானது, தங்களுக்குள் சுரக்கும் அமிலத்தை வெளியேற் றிக் காற்றில் கலந்துவிடச் செய்வதையும்,அதனால்தான் இறந்தவர் உடலைச் சுற்றியிருப் பவர்களுக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வுகள் ஏற்படுகின்ன என்பதையும் அறிந்தனர்.

நாடித்துடிப்பின் முன்னறிவிப்பு!

மூச்சுக் குழாய்களுக்குள் சளி இறங்கியவு டன் மூச்சுத் திணறி உயிர்மூச்சு நின்றவுடன் அவனது மலசலக்கழிவுகள் வெளியேறுவது மட்டுமல்லாமல், நாத விந்துவும் வெளியேறி விடுவதை உணர்ந்தனர். இதன்மூலம், நாத விந்துவிற்கும் மரணத்திற்கும் தொடர்பிருப் பதைக் கண்டறிந்தனர். வயதாகி உடல் சக்தி இழந்தவர்களின் கைகளில் சிரை இரத்த நாளங்களானது, தோலுக்கு மேலெழும்பி தெளிவாகத் தெரியும். அவ்வாறு தெரிகின்ற வர்களது கைகளில், உள்ளங்கைக்குப் பக்கத்தில் மணிக்கட்டிற்குமேல், முன்கைப் பகுதியின் பெருவிரலின் அடிப்பகுதிக்கு மேல் இரண்டு விரல் இடைவெளி அளவில், அந்நபரின் கபாலச்சளியானது தொண்டைப் பகுதியில் இறங்கி வருகின்றபோது, அவரது சிரைநாளங்கள் பெரிய அளவில் வீங்கி வீங்கித் துடிப்பதைப் பார்த்தனர். மரணத் திற்குமுன் அனைவருக்கும் இப்படி துடிப்ப தைப் பார்த்த சித்தர்கள், இதை சிலேட்டும நாடித்துடிப்பு அல்லது மரணநாடித்துடிப்பு என்று குறிப்பெடுத்தனர்.

வயதானவர்களுக்கும், கடுமையான நோயுற்றவர்களுக்கும் இந்த நாடி துடித்து விட்டால் அல்லது துடிக்கத் தொடங்கினால், அது மரணத்துக்கான எச்சரிக்கை என்பதை உணர்த்தினர். இந்த சிலேட்டும நாடி வெளியே தெரியவில்லை என்றாலும், அந்த இடத்தில் தங்களது விரலை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு, அதாவது, பெரு விரலுக்கு அடியில் மணிக் கட்டுப் பகுதியில் இரு விரலளவில் சிலேட்டும நாடி துடிக்கின்றதா என்பதை சோதித்துத் தெரிந்துகொள்வர்.

அந்நாடி துடிக்கவில்லையென்றால், அந்த நோயாளியைக் காப்பாற்றிவிடலாம் என்பதை யும் அறிந்தனர்.

சிலேட்டும நாடி துடித்துக்கொண்டிருந்தால், அந்த நோயாளி இரண்டு நாட்களுக்குள் இறந்துவிடுவார் என்பதை அறிந்து, அத்தகவலை சுற்றத்தாரிடம் தெரிவித்து வி டு ம் ப டி ù ச ய் த ன ர் .

ஆகவே, ஒரு மனிதன் தனது கபாலத்தில் இ ரு க் கு ம் சளியை அவன் ந ன் ற ô க திடகாத்திர மாக இருக்கும் போதே, வேறு வி த த் தி ல் வ ô யி ன் வழியே வெளி யேற்றி விடும் மு û ற û ய க் கண்டறிந்துவிட்டால், மரணத்தை நீண்ட நாட்களுக்குத் தள்ளிப்போடலாம் என்பதை உணர்ந்தனர். அவ்வாறு கபாலச் சளியை வெளியேற்றும் முறையைக் கண்டறிவதற்கு ஆசைப்பட்டனர்.

உயிர் பிரிவதற்கான மூன்று காரணிகள்!

ஒருவன் மரணமடைந்தபிறகு, அவனது உடம்பு உடற்சூட்டை இழந்தபின், அவனு டைய உடம்பைக் கத்தியால் கீறிப்பார்த்த பொழுது, அவன் இரத்தம் உறைந்துவிட்டதை யும், நுரையீரல் நின்றுவிட்டதையும் கண்டனர். எனவே உடற்சூட்டிற்கும், அதாவது நந்தீக்கும், இரத்தஓட்டம், மூச்சுஆகியவற்றிற்கும் நெருங்கிய தொடர்பி ருப்பதாகக் கருதினர்.

ஒருவன் உடம்பில் ஓடும் இரத்த ஓட்டத்தை சக்தி ஓட்டம் எனவும், அவன் விடும் மூச்சுக் காற்றோட்டத்திற்கு சிவ ஓட்டம் எனவும் பெயரிட்டு அழைத்தனர். எனவே ஒருவனது சிவ ஓட்டமும்,சக்தி ஓட்டமும் அவனுடைய உடம்பில் நந்தீ இருக்கும்வரை இருக்கும்.

ஆகவே, நந்தீ இருக்கும் வரை ஒருவனுக்கு மரணம் வருவதில்லை என்ற மிகப் பெரிய ரகசியத்தைக் கண்டுணர்ந்தனர். எனவே, இந்த அகத்தீ அல்லது நந்தீயை பாதிக்கக்கூடிய காரணிகள் எவை என்பதைக் கண்டறிய முற்பட்டனர். அடுத்து, ஏதாவது ஒரு நோயுற்று இறப்பவர்கள், இறுதி யாக எந்தெந்த காரணங்களால் இறக்கின்றனர் என்பதைப் பல காலங்களாகப் பல இடங்களில் அருகிலிருந்து ஆய்வுசெய்தனர்.

இந்த நீண்டகால ஆய்வின் முடிவில் ஒரு அரிய உண்மையை வெளிக்கொணர்ந்தனர்.

அது என்னவெனில், சிலர் மார்புச்சளி அதிகரித்து இறக்கின்றனர்; சிலர் ஜீரணிக்க முடியாமல் வயிறு ஊதி மரணிக்கின்றனர்.

இன்னும் சிலர் செல்களில் ஏற்படும் வெப்பு நோய் (கேன்சர்) காய்ச்சல் மிகுதியாகி மரணிக்கின்றனர் என்பதேயாகும்.

இவ்வாறு சளி அதிகமானவுடன் நாம் முதலில் கூறியவாறு சிலேட்டும நாடி துடித்தது. உட்கொள்ளும் உணவை ஜீரணிக் கும் சக்தியை உடல் இழந்தவுடன், நாம் முதலில் சொன்ன சிலேட்டும நாடிக்கு ஒரு விரல் இடைவெளியில் நாடி மேலெழுந்து துடித்தது. இதனைக் கண்டறிந்து, "அஜீரண நாடி அல்லது பித்த நாடி' என்றழைத்தனர்.

ஒரு நோயாளியின் உடல் அதிக சூடாகி வெப்புநோய் வந்ததும், நாம் முத-ல் கூறியபடி, பித்தநாடிக்கு மேல் ஒரு விரல் இடைவெளியில் அதிகமாகத் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டுணர்ந்தனர். இந்த நாடிக்கு "வாத நாடி' எனப் பெயரிட்டு அழைத்தனர்.

இவ்வாறு, ஒரு மனிதனின் உடலில் நிலைத்திருக்கும் அகத்தீ அல்லது நந்தீயை ப ô தி க் கு ம் காரணிகள் மூன்றெனக் கண்டுபிடித்தனர்.

நல்ல ஆரோக்கியமான பல மனிதர்களின் கையைப் பிடித்து, அவர்களது மணிக் கட்டிற்குமேல் வாத, பித்த, சி ú ல ட் டு ம ந ô டி க ள் வெளிப்படும் இடங்களில் தங்களது ஆள்காட்டி, நடுவிரல், மோதிரவிரல்களை வைத்து, அழுத்திப்பிடித்துப் பார்க்கும்போது, மூன்று இடங்களிலும் சமமாகத் துடித்ததைக் கண்டு அதிர்ந்துபோயினர்.

இதிலிருந்த ஒரு பேருண்மையை உலகத்திற்கு வெளியிட்டனர். அது என்னவென்றால், நம் உட-ல் உள்ள நந்தீயை அகலவிடாமல் செய்வதன்மூலம், நமது சக்தி ஓட்டம், சிவ ஓட்டங்களைக் காப்பாற்றலாம்; சக்தி மற்றும் சிவ ஓட்டங்களைக் காப்பாற்றுவதன் மூலம் மரணத்தையும் வெல்லலாம் என்பதே.

எல்லா நேரங்களிலும் வாத, பித்த, சிலேட்டும நாடிகள் சமஅளவில் துடிக்கு மாறு வைத்துக் கொள்ளும்வரை, நம் உடலிருந்து நந்தீ அகலாது என்ற தத்து வத்தை வெளியிட்டு, அது மக்கள் மனதிலிருந்து ஒரு கணம்கூட அகலாதிருக்க வேண்டும் என்பதற்காக, தங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் மரணமுற்ற நிலையில், பரிதவிப்புடன் அவர்களைச் சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லும்போது, மூன்று குச்சிகளை முக்கோண வடிவத்தில் பொருத்தி, அதன் மீது ஒரு மண்சட்டியில் அக்கினி வளர்த்து, அதை மூன்று கயிறுகளால் கட்டி, அந்த மூன்று முனைகளும் சமமாக இருக்குமாறு வைத்து, மரணித்தவர்களுக்கு முன்னால் அனைவரும் உற்று நோக்கி கவனிக்கும் வண்ணம் வெட்டியானை எடுத்துச் செல்லுமாறு செய்தனர்.

இறுகப்பிடித்து மரணத்தை வெல்!

இதி-ருந்து சித்தர்கள் நமக்கு எதை உணர்த்துகிறார்களென்றால், ஒரு மானிடன் நோயற்று ஆரோக்கியமாக இருக்கும்போது, அவன் உடம்பிலுள்ள உடற்சூடே அகத்தீ அல்லது நந்தீ ஆகும். இது அகலாமல் உடம்பில் இருக்கும் வரை உனக்கு மரணம் வராது. வாத, பித்த, சிலேட்டும நாடிகளை சமஅளவு ஓடுமாறு பார்த்துக்கொள்ளும் வரை, இந்த அகத்தீயை அல்லது நந்தீயை நம் உடம்பி-ருந்து அகலவிடாமல் செய்யலாம்.

இந்த மூன்று நாடிகளில் ஒன்றை உயரவோ, ஒன்றைத் தாழவோ செய்துவிட்டால், உன்னுடைய உடம்பி-ருக்கும் நந்தீ சரிந்து விடும். நந்தீ சரிந்துவிட்டால். உன்னுடைய சக்தி ஓட்டமும், சிவ ஓட்டமும் நின்றுவிடும்.

இவையிரண்டும் நின்றுவிட்டால், உன் உயிர் பிரிந்து உடல் அழியும். எனவே, நந்தீயை இறுகப்பிடித்து மரணத்தை வெல்லும் சாகாக் கலையைக் கற்றுக்கொள் என்பதேயாகும்.

இந்த நந்தீயை சிவலிங்கம் கருவறையாகப் பெற்ற கோவில்களிலும், சிவ- பார்வதியைக் கருவறையாகக் கொண்டிருக்கும் கோவில் களிலும், முன்மண்டபத்தில் உவமையாகக் காளையை இடம்பெறச்செய்து, காளை வாகனத்தை நந்தீயாக வழிபட வைத்ததன் காரணம் என்ன?

வரும் இதழில் விடை காண்போம்!

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om010919
இதையும் படியுங்கள்
Subscribe