மேஷம்

சித்திரை 1-ல் பிறக்கும் புது வருடம் விகாரி உங்கள் ராசிக்கு 4-ஆவது ராசி, 4-ஆவது லக்னமாகிய கடகத்தில் பிறக்கிறது. வருடம் முழுவதும் சனியும் குருவும் 9-ல் இருக்கிறார் கள். எனவே தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவ தால், இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் இனிமையும் வளமையும் சேர்க்கும். கொடுக்கல்- வாங்கல் நாணய பங்கமில்லாமல் நடைபெறும். தெய்வீகப் பணிகளுக்கான சுபச்செலவுகள், பிரார்த்தனைச் செலவுகள் உண்டாகும். தகப்ப னார்வழியில் சிறு பங்குபாகங்கள் கிடைக்கும். வைகாசிமுதல் ஐப்பசிவரை குரு 8-ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால், மனதில் குழப்பங்களும் உடல் நலக்குறைவும் ஏற்பட் டாலும், ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பலமாக இருப்பதால் வைராக்கியத்தோடு சோதனைகளை வென்று சாதனைகளைப் படைக்கலாம். மீண்டும் குரு 9-ல் ஆட்சிபெறும்போது குருவின் வக்ரத்தில் நிலவிய நஷ்டங்களை ஈடுசெய்யலாம்.

பரிகாரம்: திருப்பரங்குன்றம் (மதுரை) திருக்கூடல்மலையிலுள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகளின் ஜீவசமாதிகளை வழிபடவும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியும், 11-க்குடைய குருவும் 8-ல் மறை கிறார்கள். வைகாசிமுதல் ஐப்பசிவரை, குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கும் காலம் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமண மானவர்களுக்கு வாரிசு யோகம் உண் டாகும். வேலைதேடி அலைபவர்களுக்கு வெற்றிச் செய்தி கிட்டும். வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். அட்ட மத்துச்சனி நடப்பதால் வெளியூர்வாசம் அல்லது வெளிநாட்டு வேலை அமையும். உள்ளூரில் இருப்போருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் உண்டாகும். ஐப்பசி மாதம் குரு மீண்டும் 8-ல் மறைந்தாலும் ஆட்சிபெறுவதாலும், தர்மகர்மாதிபதியுடன் சேர்வதாலும் பாதிப் புக்கு இடமிருக்காது. சில காரியங்கள் உடனுக் குடன் முடியும். சில காரியங்கள் தாமதமாக நிறைவேறும்.

பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் தட்சிணாமூர்த்தி ஜீவசமாதியை வழிபடவும்.

மிதுனம்

Advertisment

மிதுன ராசிக்கு 2-ஆமிடத்தில் (கடகத்தில்) விகாரி புதுவருட லக்னமும் ராசியும் அமைகிறது. உங்கள் ராசிநாதனான புதனின் நட்சத்திரத்தில்தான் இந்த வருடம் பிறக்கிறது. எனவே இந்த வருடம் முழுவதும் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும். முயற்சிகள் தளர்ச்சியில்லாமல் வளர்ச்சியடை யும். 7, 10-க்குடைய குரு வைகாசிமுதல் ஐப்பசி வரை 6-ல் மறையும் காலம் திருமணத்தடைகள், திருமணமானவர்களுக்கு குடும்பக் குழப்பம் அல்லது மனைவிக்கு தேக ஆரோக்கிய பாதிப்பு, எதிர்பாராத வைத்தியச்செலவு, கடன்கள் போன்ற பலன்களை சந்திக்கநேரும். என்றாலும் அக்காலம் 10-க்குடையவரே 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் சிறப்பாக அமையும். பணவரவு தாராள மாக இருக்கும். அதனால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கலாம். வடிவேலு பாடியதுபோல "எட்டணா இருந்தால் என் பாட்டு எட்டு ஊருக்கு கேட்கும்' என்பது மாதிரி!

பரிகாரம்: திண்டுக் கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

கடகம்

சித்திரை 1-ல் பிறக்கும் விகாரி புது வருடம் உங்கள் ராசியிலும், உங்கள் லக்னத்திலும்தான் பிறக்கிறது. (கடக ராசி, கடக லக்னம்). குறிப்பாக ஆயில்ய நட்சத்திரத்தில் பிறக்கிறது. எனவே கடக ராசி, கடக லக்னம், ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கெல் லாம் அமிழ்தினும் இனிய வருடமாகத் tதிகழும். 2-க்குடைய சூரியன் வருடத் தொடக்கத்தில் 10-ல் உச்சமாக இருப்ப தால், தாராளமான பொருளாதார வசதி கள் ஏராளமாக அமையும். கொடுக் கல்- வாங்கல் குறிப் பிட்டபடி நிறை வேறும். வைகாசி முதல் ஐப்பசிவரை 9-க்குடைய குரு 5-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்ப தால் ராஜயோகமாக இருக்கும். அடிப் படை வசதிகள் பெருகும். வீடு, மனை, விளைநிலம், தோட்டம் துரவு, வாகனங்கள் போன்ற வகையில் அனுகூலமும் ஆதாயமும் பெருகும். பழம் நழுவிப் பாலி−ல் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்தமாதிரி எல்லாம் நல்லபடியாக நிறைவேறும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு அமையும்.பரிகாரம்: சிங்கம்புணரியில் உள்ள முத்துவடுகச் சித்தர் ஜீவ சமாதி சென்று வழிபடவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு 12-ஆம் இட மான கடக ராசியிலும், கடக லக்னத் திலும் விகாரி புதுவருடம் பிறப்ப தால், இந்த வருடம் தவிர்க்க முடியாத விரயச் செலவுகளும் அலைச்சல்களும் பயணங்களும் காணப்படும். வைகாசிமுதல் ஐப்பசிவரை குரு 4-ஆமிடத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபா ரம், உத்தியோகம் ஆகியவற்றில் சிறுசிறு தேக்க நிலைகளும், தடை, தாமதங்களும் ஏற்படலாம். என்றாலும் 10-ஆமிடத்துக்கு குரு பார்வை கிடைப்பதால் தொழில், வாழ்க்கை ஆகிய வற்றில் பாதிப்புக்கு இடமிருக் காது. ஒருசிலருக்கு தேக ஆரோக் கியத்தில் கவனம் தேவைப்படும். வைத்தியச்செலவுகள், சுகக்குறைவுகள் காணப்படலாம். அப்படி யிருந்தால் தன்வந்திரி பகவானை வழிபடலாம். தசாபுக்திரீதியான பரிகாரங்களைத் தேடிக்கொள்ள லாம். மீண்டும் ஐப்பசிமுதல் 5-ல் குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கும் காலம் எல்லாத் தடை களும் விலகும். படைபலம், பண பலம் உண்டாகும்.

பரிகாரம்: பொள்ளாச்சி அருகில் புரவிபாளையத்தில் கோடிசுவாமிகள் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிநாதனான புதன் தசையில், புதன் நட்சத்திரமான ஆயில்யத்தில் விகாரி புது வருடம் பிறக்கிறது. உங்கள் ராசிக்கு 11-ஆவது லக்னம், 11-ஆவது ராசி. ஆகவே, இக்காலம் தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணும் பொன்னாக மாறும் காலம். எண்ணியதெல்லாம் ஈடேறும் காலம். நினைத்த தெல்லாம் நிறைவேறும் காலம். திட்டங்கள் எல்லாம் மட்டில்லாத வெற்றிபெறும் காலம். சித்திரை முழுவதும், பிறகு ஐப்பசி 11 முதல் பங்குனி முடியவும் 4-க்குடைய குரு 4-ல் ஆட்சிபெறுவதால் தொழில், வியாபாரம், விவசாயம் எல்லாவற்றிலும் முன்னேற்றங் களும், நன்மையும், வெற்றியும் உண்டாகும். 5, 6-க்குடைய சனி 4-ல் கேது- ராகு சம்பந்தம் பெற்று ராசியைப் பார்ப்பதால் போட்டி பொறாமைகளும், எதிர்ப்பு இடையூறுகளும், தடை தாமதங்களும் அவ்வப்போது காணப்பட்டாலும், சனி 5-க்குடையவர் என்பதால் தன்னம் பிக்கையாலும் தைரியத்தாலும் மனவுறுதியாலும் எல்லாவற்றையும் சமாளிக்கலாம்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று ஜோதி மௌனகுரு சுவாமிகள் ஜீவசமா தியை வழிபடவும்.

துலாம்

உங்கள் ராசிக்கு 10-ஆம் இடமான கடகத்தில்தான் விகாரி புதுவருட லக்னமும், ராசியும் அமைகிறது. ராசிக்கு 3-ல் சனி, குரு, கேது அமர்ந்து மறைவாக இருக்கிறார்கள். என்றாலும் குரு ஆட்சி என்பதால் தோஷமில்லை. 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கும் குரு திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, குலதெய்வ வழிபாடு, தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றல் போன்ற நற்பலன்கள் நடக்கும். 5-க்குடைய சனி 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் "எண்ணிய எண்ணி யாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்ற திருக்குறளுக்கேற்ப, உங்கள் வைராக்கியத்தாலும், தன்னம்பிக்கையாலும், தைரியத்தாலும் எண்ணியதை அடைவீர் கள்; நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். வைகாசிமுதல் ஐப்பசிவரை 2-ல் குரு இருப்ப தால் தாராளமான பண வசதிகளும், கொடுக்கல்- வாங்கலிலில் நிம்மதியும், எதிர் பாராத அதிர்ஷ்டங்களும் எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று சுயம்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனியின் கடைசிக்கூறு குடும்பச்சனி நடக்கிறது. வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும் என்பார் கள். பேசுவதை சிந்தித்துப் பேசவேண்டும். அக்கம்பக்கம் பார்த்துப் பேசவேண்டும். வாக்குச்சனி கேது- ராகு சம்பந்தமும் பெறுவ தால் சொல்லாததை சொன்னதாகப் பழி பாவமும் ஏற்படலாம். குடும்பத்திலும் எந்தக் கருத்துகளையும் வெளிப்படையாகச் சொல்லா மல் மனதிற்குள் போட்டு மூடிமறைத்து வாய்மூடி மௌனியாக இருந்தால் பூகம்பம் வெடிக்காது. புயல் வீசாது. கலகம் உண்டா காது. வைகாசிமுதல் ஐப்பசிவரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் பிரச்சினைகள் உருவாகலாம். வைத்தியச் செலவுகள் ஏற்படலாம். உணவுப் பழக்க வழக்கம், மது, மாது, புகை, போதை போன்ற வகையில் கட்டுப்பாடாகவும், பத்தியமாகவும் இருந்தால் பெரும் வைத்தியச்செலவுகளைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செம்பூ தியில் சிவந்திலிங்க சுவாமிகள் தம்பதி சகிதமாக ஜீவசமாதியாக விளங்குகிறார்கள். (செம்பூ திச்சித்தர்). அங்கு சென்று வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு வைகாசி 4 வரை ஜென்ம ராசியில் நின்று 5, 7, 9-ஆம் இடங் களைப் பார்க்கிறார். குரு பார்க்கக் கோடி நன்மை என்பார்கள். அதிலும் குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். அப்படிப்பட்ட ஸ்தானங்களை ஆட்சிபெற்ற குரு பார்ப்பதால், ஜென்மச்சனி நடைபெற்றா லும், உங்களுக்கு பொங்குசனியாக மாறி பொலிலிலி வைத்தரும்; பூரிப்பைத்தரும். சுறுசுறுப்போடு பணியாற்றுவீர்கள். குடும்பத்திலும், வேலை செய்யுமிடத்திலும் மதிப்பும் மரியாதையும் கௌரவமும் ஏற்படும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். திட்டங்கள் எளிதாக வெற்றியடையும். நல்லோர் உதவியாலும், நண்பர்கள் தயவினாலும் காரியங்கள் கைகூடும். வைகாசிமுதல் ஐப்பசிவரை குரு 12-ல் இருக்கும் காலம் செலவு ஏற்பட்டாலும், அது மங்களச் செலவு, சேமிப்பு முதலீடு என்று ஆறுதல் அடையலாம்.

பரிகாரம்: புதுக்கோட்டை புவனேஸ்வரி ஆலயம் சென்று ஜட்ஜ் சுவாமிகள் ஜீவ சமாதியை வழிபடவும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 12-ல் இருந்தாலும் (வருடம் முழுவதும்) 2-ஆமிடத்தையும், 6-ஆமிடத்தையும், 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி என்றா லும், சனி உங்கள் ராசிநாதன் என்பதால் பெரும் வீண்விரயங்களைத் தரமாட்டார். வீடு கட்டுதல், பழுது பார்த்தல், பூமி வாங்குதல், நூதன வாகனம் வாங்குதல் போன்ற சுபச் செலவுகளை சந்திக்கலாம். சிலரின் குடும்பத் தில் மங்கள விரயங்கள் நிறைவேறும். தங்கு தடை யில்லாத பணப்புழக்கம் காணப்படும். வர வேண்டியது வந்துசேர்வதால் கொடுக்க வேண்டியதும் ஓடியடையும். வைகாசிமுதல் ஐப்பசிவரை குரு 11-ஆமிடத்தில் சஞ்சரிப்பதால் வரவு- செலவுகள் திருப்திகரமாக அமையும். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றி பெறும். வேலையாட்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி மனநிறைவை ஏற்படுத்தும்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகில் பனையப்பட்டியில் உள்ள சாது புல்லான் சுவா மிகள் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி வருடம் முழுவதும் 11-ல் இருக்கிறார். தன் ராசியைத் தானே பார்க்கிறார். 5-ஆமிடம், 8-ஆமிடங்களையும் பார்க்கிறார். ஒருசில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும். ஒருசில காரியங்கள் தடை தாமதமாக நிறைவேறும். என்றாலும் மனம் தளராமல்- கவலைப்படாமல்- தளர்ச்சி யடையாமல் சுறுசுறுப்போடு விறுவிறுப்பாக செயல்பட்டால், "உன்னால் முடியும் தம்பி' என்று கமல்ஹாசன் பாடியதுபோல எல்லா வற்றையும் சாதிக்கலாம். அதற்குண்டான ஆற்றலை- நல்ல வாய்ப்புகளை 11-ஆமிடத் துக்கு குரு தருவார். வைகாசிமுதல் ஐப்பசிவரை குரு 10-ல் மாறி 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடத் தைப் பார்க்கும் காலம் தேவைகளும் திட்டங் களும் நிறைவேறும். அதற்காக கடன்களும் வாங் கநேரும். அது சுபக்கடன்தான். பூமி, மனை, வீடு, வாகனம் சம்பந்தமான சுபச்செலவுகள் எனலாம்.

பரிகாரம்: திருச்சி அருகில் திருவெள்ள றையில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மீனம்

வருடத்தொடக்கத்தில் ராசிநாதன் குரு 10-ல் இருக்கிறார். வைகாசிமுதல் ஐப்பசிவரை 10-க்குடைய குரு 9-ல் விருச்சிகத்துக்கு மாறி ராசியைப் பார்க்கிறார். பிறகு மீண்டும் 10-ல் ஆட்சி பெறுவார். ஆக, விகாரி வருடம் 12 மாதங்களும் வற்றாத ஜீவநதி கங்கையைப்போல் உங்கள் வாழ்க்கையில் வளமும் நலமும் வசந்தமும் இருக்கும். "10-ஆமிடத்துச் சனி பதிமாறச் செய்யும்' என்பது பழமொழி. ஆனாலும் சொந்தவீட்டுக்கு மாறும் யோகமும், பதவி உயர்வும், வெளிநாட்டு வேலை யோகமும் ஏற்படுத்துவார். சொத்துப் பிரச்சினைகள் சாதகமாகும். புதிய பூர்வீகச் சொத்து இல்லாத வர்கள் சுய சம்பாத்தியத்தால் சொத்து சுகங்களைத் தேடிக்கொள்ளலாம். 4-க்குடைய புதன் நட்சத்திரத்தில் (ஆயில்யம்) விகாரி வருடம் பிறப்பதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர்ந்த படிப்பு படிப்பார்கள்.

பரிகாரம்: காரைக்குடி அருகில் கோட் டையூரில் எச்சில்பொறுக்கி சுவாமிகளின் ஜீவச மாதி இருக்கிறது. சென்று வழிபடவும்.