அச்சம் நீக்கி அபயம் தரும் அழகன்! -ஸ்ரீ ஞானரமணன்

/idhalgal/om/beauty-removes-fear-and-gives-danger-sri-gnanaraman-0

முருகு என்றாலே அழகு, அறிவு, ஞானம் என்று பொருள். புராணங்களில் முதன்மையானது கந்தபுராணம். பெண்கள் சம்பந்தமற்ற புராணமிது.

ஆணவம், கன்மம், மாயை என்னும் கலி சாபத்தையும் தோஷத்தையும் நீக்கவல்லது முருகனின் நாமம். எமபயத்தை நீக்கி, இறுதியில் எளிதான மரணத்தை அருளக்கூடியது முருகவழிபாடு. முருக வழிபாட்டின் சிறப்பு யாதெனில், வாழ்வில் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க வைத்து, இறுதியில் மோட்சநிலையைத் தரவல்லதாகும். ஒவ்வொரு உயிரிலும் உள்முகமாக இருக்கும் ஆன்மஜோதியைக் காட்டவல்லது.

velan

மு- முகுந்தன், நாராயணன்;

ரு- பரமேஸ்வரன்; கா- கமலன்- பிரம்மா. ஆக, மும்மூர்த்திகளும் முருகா என்னும் பெயருக்குள் அடக்கம்.

உலகின் முதன் முதலாக சிவ- பார்வதி திருமண நிகழ்ச்சியில்தான் 'கௌரி கல்யாண வைபவமே' என்னும் பாடல் பாடப்பட்டது. அதை நாம் வழிவழியாகப் பாடிவருகிறோம்.

நமது திருமண நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் பாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுவாக நாம சங்கீர்த்தனம

முருகு என்றாலே அழகு, அறிவு, ஞானம் என்று பொருள். புராணங்களில் முதன்மையானது கந்தபுராணம். பெண்கள் சம்பந்தமற்ற புராணமிது.

ஆணவம், கன்மம், மாயை என்னும் கலி சாபத்தையும் தோஷத்தையும் நீக்கவல்லது முருகனின் நாமம். எமபயத்தை நீக்கி, இறுதியில் எளிதான மரணத்தை அருளக்கூடியது முருகவழிபாடு. முருக வழிபாட்டின் சிறப்பு யாதெனில், வாழ்வில் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க வைத்து, இறுதியில் மோட்சநிலையைத் தரவல்லதாகும். ஒவ்வொரு உயிரிலும் உள்முகமாக இருக்கும் ஆன்மஜோதியைக் காட்டவல்லது.

velan

மு- முகுந்தன், நாராயணன்;

ரு- பரமேஸ்வரன்; கா- கமலன்- பிரம்மா. ஆக, மும்மூர்த்திகளும் முருகா என்னும் பெயருக்குள் அடக்கம்.

உலகின் முதன் முதலாக சிவ- பார்வதி திருமண நிகழ்ச்சியில்தான் 'கௌரி கல்யாண வைபவமே' என்னும் பாடல் பாடப்பட்டது. அதை நாம் வழிவழியாகப் பாடிவருகிறோம்.

நமது திருமண நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் பாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுவாக நாம சங்கீர்த்தனம், பஜனை போன்ற நிகழ்ச்சிகளில் இரு கைகளைத் தட்டியும், ஆடியும் பாடியும், குதித்தும் வழிபாடு செய்கின்றனர்.

இதனால் என்ன பயனென்றால், நமது முன்னோர்கள் பித்ருக்கள் சிலர் சொர்க்கத்திலும், சிலர் நரகத்திலும் இருக்கலாம். இது நமக்குத் தெரியாது. நமது முன்னோர்களுக்கு எது ஆனந்தம் தருமென்றால், நமது வம்சத்தைச் சேர்ந்தவன் சத்சங்கத்தில் ஈடுபடுகிறான் என்பதுதான். நாம் கைகளைத் தட்டி பஜனைசெய்தால், சொர்க்கத்தில் உள்ளவர்கள் மோட்சமடைவார்கள். குதித்து பஜனை செய்தால் நரகத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிட்டும்.

ஒருசமயம் முருகப்பெருமானை கவனிக்காமல் சென்ற பிரம்மதேவனை முருகன் அழைத்து, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்க, அதற்கு பிரம்மா, "படைப்புத் தொழிலைச் செய்கிறேன்" என்றார். "எதை அடிப்படையாகக் கொண்டு அந்தத் தொழிலைச் செய்கிறீர்கள்?" என்று முருகன் கேட்க, "ஓம் என்னும் பிரணவ மந்திரத்தைக் கொண்டு செய்கிறேன்" என்றார்.

"அவ்வாறாயின் அந்த பிரணவ மந்திரத்திற்குப் பொருள் கூறுங்கள்" என்று முருகன் கேட்டான். அப்போது பிரம்மா பொருள்கூறத் தெரியாமல் விழித்தார். 'நான்'என்னும் ஆணவம் அவருக்கு மேலோங்கி இருந்ததை அறிந்துகொண்ட முருகன், பிரம்மாவை சிறையிலிட்டான். இது தெரிந்ததும் சிவபெருமான் அங்கு விரைந்துவந்தார்.

இதற்கிடையில், பிரம்மாவின் படைப்புத் தொழிலை நானே செய்கிறேன் என்று கூறி, முருகன் களிமண்ணைப் பிசைந்து படைப்புத் தொழிலுக்கு முயன்றார். அது சரியாக வரவில்லை. (அவ்வாறு முருகனால் படைக்கப் பெற்ற மனிதர்கள்தான் இன்று நைஜீரியாவிலுள்ள நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல டாஸ்மேனியா போன்ற நாடுகளிலும் வழக்கத்திற்கு மாறான உடலமைப்பு, முடி அமைப்பு உள்ளது.) பிறகு சிவபெருமான் பிரம்மதேவனை சிறையிலிருந்து விடுவித்தார்.

'தமிழுக்காக நான் மிகவும்

உழைத்துப் பாடுபட்டேன்' என்று பலரும் சொல்வதைக் கேட்கிறோம்.

இவர்களுக்கெல்லாம் முன்பாக தமிழ் மொழிக்காகப் பாடுபட்டவர்கள் முருகப்பெருமான், பரமேஸ்வரன், அகத்தியப் பெருமான்தான். எனவே தமிழ் மொழியானது இறையருள் பெற்ற மொழி.

முதன்முதலாக உலகைச் சுற்றி வலம் வந்தவன் முருகப் பெருமான்தான். தமிழ்நாட்டின்மீதும் தமிழ்மொழியின்மீதும் மக்கள்மீதும் முருகனுக்கு ஒரு தனி ஈடுபாடு ஏற்பட்டு, இந்த தெய்வத் திருநாட்டில் அறுபடை வீடுகொண்டான். ஞானம் கிட்டவேண்டுமெனில், முருகப் பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலையை தரிசனம் செய்தால் கிட்டும். நாம் செய்த புண்ணியமே தமிழ்நாட்டில் பிறவி எடுத்திருக்கிறோம்.

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்னும் வாக்கியத்திற்கேற்ப, சிவனது சொல்லைக் கேட்டு பிரம்மனை சிறையிலிருந்து விடுவித்தான் முருகன். தந்தைக்கே பிரணவத்தின் பொருளுரைத்து தகப்பன்சாமி என பெயர் கொண்டான். குரு- சீடன் பாவத்தில், உலகைக் காக்கும் இறைவன் கைகட்டி, வாய்பொத்தி வலது காதில் உபதேசம் பெற்றார்.

அதன் அடிப்படையில்தான் காயத்ரி மந்திர உபதேசம் பெற்றோர்களால் பிரம்மோபதேசம், காயத்ரி மந்திரம் வலது காதில் உபதேசிக்கப் பெறுகின்றது.

'உலகை யார் முதலில் சுற்றிவருகிறார் களோ அவருக்கே இந்த ஞானப்பழம்' என்று தந்தை ஈஸ்வரன் சொன்னவுடன், அதை சிரமேற்று மயில் வாகனத்தில் உலகைச் சுற்றிவந்தான் முருகப்பெருமான். இது எதை உணர்த்துகிறதென்றால், எதையும் முழுமையாகப் பெற வேண்டும் என்பதையே. பிள்ளையார் பெற்றோரைச் சுற்றிவந்து கனிபெற்றார் என்பது ஒரு சமாதான நோக்காகும். முருகப்பெருமான் தந்தை சொன்னதைச் செய்தார்.

திருவண்ணாமலை திருத்தலத்தில், அருணகிரிநாதருக்கு கம்பத்து இளையனார் மண்டபத்தின் அனைத்து தூண்களிலும் முருகன் காட்சிதந்தது அடியாருக்கு இரங்கி அருளிய செயலே! அதுபோல சென்னை அரசு பொது மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் தூணில் காட்சிதந்த இடத்தை இன்றும் காணலாம். வள்ளல் பிரானுக்கு முருகன் கண்ணாடியில் காட்சி தந்ததும் நாமறிந்ததே.

கலியுகத்தில் ஆழ்ந்த பக்தர்களுக்கு நேரில் காட்சிதந்து அருள்பவன் முருகனே. அவனை வணங்கி நல்வாழ்வு பெறுவோம்.

om010721
இதையும் படியுங்கள்
Subscribe