அரசன் பெரியவனா, ஆண்டவன் பெரியவனா என்னும் போட்டி இரு பிச்சைக்காரர்களுக்கிடையே இருந்துவந்தது. தினமும் இவர்கள் இணைந்தே கிராமங்களுக்குச் சென்று பிச்சை எடுப்பார்கள். அப்போது ஒருவர் "ராஜசகாய பிச்சை போடுங்கள்' என்று கேட்பார். இன்னொருவர் "ராமசகாய பிச்சை போடுங்கள்' என்று கேட்பார். இவ்வாறு பிச்சை கேட்கும்போதுகூட ஒருவர் ஆண்டவன் பெயரிலும், மற்றொருவர் அரசன் பெயரிலும் பிச்சையெடுத்து வந்தனர்.
ஒருநாள் அப்பகுதியை ஆட்சி செய்துவந்த குறுநில மன்னர் தனது அமைச்சருடன் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பிச்சைக் காரர்கள் இருவரும் ஆண்டவன் பெயரையும் அரசரின் பெயரையும் சொல்லிப் பிச்சை எடுப்பதை கவனித்தார். அது அவருக்கு வியப்பாக இருந்தது. அந்த அரசரோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவர் இருவரையும் அழைத்து, ""நீ ராமசகாயம் என்று பிச்சை கேட்கிறாய்;
அவர் ராஜசகாயம் என்று பிச்சை கேட்கிறார். இதற்கு என்ன அர்த்தம்'' என்று கேட்டார்.
அதற்கு ராமசகாயம் என்று சொல்லி பிச்சை கேட்டவர், ""ஐயா, இந்த உலகமக்கள் உட்பட அனைத்து ஜீவன்களும் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். உணவையளிப்ப வர் கடவுள் அவதாரமான ராமபிரான்தான். அந்த ராமபிரானின் சகாயம் இருந்தால் எல்லா செல்வங்களும் வந்துசேரும். அதனால் நான் அவர் பெயரைக்கூறி பிச்சை எடுக்கி றேன்'' என்றார்.
அடுத்தவரைப் பார்த்து ""நீ ராஜசகாயம் என்று கூறி பிச்சை எடுப்பதற்குக் காரணமென்ன'' என்று அரசர் கேட்க, அதற்கு அவர், ""ஐயா, கண்ணுக்குத் தெரியாத கடவுளைவிட கண்ணுக்குத் தெரியும் அரசர் மேலானவர் அல்லவா? நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அந்த நாட்டு அரசரின் சகாயம் இருந்தால் எல்லாம் கிடைக்குமென்பது என் கருத்து. அதனால் இந்த நாட்டை ஆளும் அரசர் பெயரால் பிச்சை எடுக்கிறேன்'' என்று கூறினார்.
அவர்களைப் போகச்சொன்ன அரசர், தன்னுடன் மாறுவேடத்திலிருந்த அமைச்ச ரிடம், ""அமைச்சரே, ராஜசகாயம் என்று கூறும் பிச்சைக்காரர் அதிபுத்திசாலி'' என்றார். அதற்கு அமைச்சர், ""மன்னா, இந்த நாட்டு மன்னர் எந்தவிதத்தில் மனிதர்களுக்கு உதவிசெய்தாலும், ஆண்டவன் அருள் இல்லாவிட்டால் அரசர் அளிக்கும் உதவி அந்த மனிதனுக்குக் கிடைக்காது என்பது என் கருத்து'' என்றார். ""அப்படியா! தங்கள் கருத்து மேலானதா- ராஜசகாயம் என்று கூறிய பிச்ச
அரசன் பெரியவனா, ஆண்டவன் பெரியவனா என்னும் போட்டி இரு பிச்சைக்காரர்களுக்கிடையே இருந்துவந்தது. தினமும் இவர்கள் இணைந்தே கிராமங்களுக்குச் சென்று பிச்சை எடுப்பார்கள். அப்போது ஒருவர் "ராஜசகாய பிச்சை போடுங்கள்' என்று கேட்பார். இன்னொருவர் "ராமசகாய பிச்சை போடுங்கள்' என்று கேட்பார். இவ்வாறு பிச்சை கேட்கும்போதுகூட ஒருவர் ஆண்டவன் பெயரிலும், மற்றொருவர் அரசன் பெயரிலும் பிச்சையெடுத்து வந்தனர்.
ஒருநாள் அப்பகுதியை ஆட்சி செய்துவந்த குறுநில மன்னர் தனது அமைச்சருடன் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பிச்சைக் காரர்கள் இருவரும் ஆண்டவன் பெயரையும் அரசரின் பெயரையும் சொல்லிப் பிச்சை எடுப்பதை கவனித்தார். அது அவருக்கு வியப்பாக இருந்தது. அந்த அரசரோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவர் இருவரையும் அழைத்து, ""நீ ராமசகாயம் என்று பிச்சை கேட்கிறாய்;
அவர் ராஜசகாயம் என்று பிச்சை கேட்கிறார். இதற்கு என்ன அர்த்தம்'' என்று கேட்டார்.
அதற்கு ராமசகாயம் என்று சொல்லி பிச்சை கேட்டவர், ""ஐயா, இந்த உலகமக்கள் உட்பட அனைத்து ஜீவன்களும் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். உணவையளிப்ப வர் கடவுள் அவதாரமான ராமபிரான்தான். அந்த ராமபிரானின் சகாயம் இருந்தால் எல்லா செல்வங்களும் வந்துசேரும். அதனால் நான் அவர் பெயரைக்கூறி பிச்சை எடுக்கி றேன்'' என்றார்.
அடுத்தவரைப் பார்த்து ""நீ ராஜசகாயம் என்று கூறி பிச்சை எடுப்பதற்குக் காரணமென்ன'' என்று அரசர் கேட்க, அதற்கு அவர், ""ஐயா, கண்ணுக்குத் தெரியாத கடவுளைவிட கண்ணுக்குத் தெரியும் அரசர் மேலானவர் அல்லவா? நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அந்த நாட்டு அரசரின் சகாயம் இருந்தால் எல்லாம் கிடைக்குமென்பது என் கருத்து. அதனால் இந்த நாட்டை ஆளும் அரசர் பெயரால் பிச்சை எடுக்கிறேன்'' என்று கூறினார்.
அவர்களைப் போகச்சொன்ன அரசர், தன்னுடன் மாறுவேடத்திலிருந்த அமைச்ச ரிடம், ""அமைச்சரே, ராஜசகாயம் என்று கூறும் பிச்சைக்காரர் அதிபுத்திசாலி'' என்றார். அதற்கு அமைச்சர், ""மன்னா, இந்த நாட்டு மன்னர் எந்தவிதத்தில் மனிதர்களுக்கு உதவிசெய்தாலும், ஆண்டவன் அருள் இல்லாவிட்டால் அரசர் அளிக்கும் உதவி அந்த மனிதனுக்குக் கிடைக்காது என்பது என் கருத்து'' என்றார். ""அப்படியா! தங்கள் கருத்து மேலானதா- ராஜசகாயம் என்று கூறிய பிச்சைக்காரர் கருத்து மேலானதா என்பதைப் பரீட்சித்துப் பார்த்துவிடுவோம்'' என்றார் மன்னர்.
மறுநாள் நகர் முழுவதும் தண்டோரா போடப்பட்டது. "வரும் ராமநவமியன்று அரசர் அரண்மனையில் தானம் வழங்கு கிறார்; அதைப்பெற விரும்பும் மக்கள் வந்து பெற்றுச் செல்லலாம்' என்று அறிவிக்கப்பட்டது. அந்தநாளில் தானம் பெறுவதற்காக அரண்மனைமுன் நீண்டவரிசையில் மக்கள் காத்திருந்தார்கள். அரசர் ஒவ்வொருவருக்கும் புத்தாடையும் அதனுடன் ஒரு பூசணிக்காயையும் தானமாகக் கொடுத்தார். அந்த வரிசையில் பிச்சைக் காரர்களான ராமசகாயமும் ராஜசகாயமும் காத்திருந்தனர். அரசரிடம் தானம் பெறுவதற்கு வரிசைப்படி வந்தார் ராஜ சகாயம். அவரை அடையாளம் கண்டு கொண்ட அரசர் அமைச்சரின் காதில் ஏதோ ரகசியமாகக் கூறினார். அதையடுத்து அமைச்சர் உள்ளே சென்று ஒரு பூசணிக் காயை எடுத்துவந்து அரசரிடம் கொடுக்க, ராஜசகாயம் புத்தாடையுடன் பூசணிக்காயையும் பெற்றுக்கொண்டார்.
அதையடுத்து ராமசகாயத்திடம் அங்கிருந்த பூசணிக்காயுடன் புத்தாடையும் கொடுக்க, அவரும் அதைப் பெற்றுக்கொண்டு இருவரும் சென்றுவிட்டனர்.
சில மாதங்கள் கடந்தன. மன்னர் வழக்கம் போல அமைச்சருடன் நகர்வலம் சென்றார். அப்போது இரு யாசகர்களில் ஒருவரான ராஜசகாயம் எனக்கூறிப் பிச்சை எடுப்பவர் அப்போதும் அரசர் பெயரைக்கூறிப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த மன்னருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. மறுநாள் அவரை அரண்மனைக்கு அழைத்துவரச் செய்த மன்னர், பிச்சைக்காரரிடம், ""ராமநவமியன்று நான் தானமளித்தபோது உமக்கு ஒரு பூசணிக்காயை அளித்தேன். அதை என்ன செய்தாய்?'' என்று கேட்டார். அதற்கு அவர், ""சந்தையில் கொண்டு விற்றுவிட்டேன். அதில் கிடைத்த பணத்தில் சில நாட்கள் சாப்பிட முடிந்தது. பிறகு மீண்டும் பிச்சையெடுக்கிறேன்'' என்று கூறினார்.
உடனே அரசர், ""முட்டாளே, உமக்கு நான் வழங்கிய பூசணிக்காய்க்குள் தங்கம், முத்து, வைரம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங் களை வைத்திருந்தேன். அதைக்கொண்டு பல தலைமுறைக்கு செல்வத்தோடு நீ வாழ்ந்திருக்கலாம். பூசணிக்காய்க்குள்ளிருந்த சூட்சுமத்தை அறியமுடியாமல் அதை விற்றுவிட்டு மீண்டும் பிச்சை எடுக்கிறாயே!
இப்படி ஒரு ஏமாளியா நீ?'' என்று கேட்டுவிட்டு அவரை அனுப்பிவிட்டார்.
சில நாட்கள் கழித்து மன்னர் மீண்டும் நகர்வலம் சென்றார். அப்போது ஒரு பல்லக்கை பலர் தூக்கிச் செல்வதைக் கண்ட மன்னர் அமைச்சரிடம், ""பல்லக்கில் செல்லுமளவுக்கு வசதியான அந்த நபர் யார்?'' என்று கேட்டார். ""அவர்தான் தங்களிடம் பூசணிக்காயை தானம் பெற்ற- ராமரின் பெயர்சொல்லி பிச்சையெடுத்த ராமசகாயம்'' என்றார் அமைச்சர். அவரை நாளைக்கு அரண்மனைக்கு அழைத்துவாருங்கள் என உத்தரவிட்டு அரசர் அரண்மனைக்குச் சென்றுவிட்டார்.
மறுநாள் அரசர் கூறியபடி ராமசகாயத்தை அரசர்முன் கொண்டுவந்து நிறுத்தினார் அமைச்சர். அரசர் ராமசகாயத்தைப் பார்த்து, ""சிறிது நாள் முன்புவரை தெருத்தெருவாய் பிச்சையெடுத்த நீ தற்போது பல்லக்கில் போகுமளவுக்குப் பணக்காரனாய் மாறியது எப்படி'' என்று கேட்டார். அதற்கு அவர், ""எல்லாம் ராமசகாயம்தான் காரணம். இறந்துவிட்ட என் தந்தைக்குத் திதி கொடுக்க வேண்டியிருந் தது. நானோ தெருத்தெருவாகப் பிச்சை எடுப்பவன். பணவசதி இல்லை. அதனால் சில பிராமணர்களுக்கு திதியின்போது பூசணிக்காயின் கீற்றுகளை மட்டும் தருவது வழக்கம். அந்த வகையில் பிச்சையெடுத்த காசில் சந்தைக்குச் சென்று ஒரு பூசணிக் காய் வாங்கினேன். அதை வீட்டுக்குக் கொண்டு போய் கீறியபோது அதனுள்ளே தங்கம், முத்து, வைரம் என்று விலையுயர்ந்த ஆபரணங்கள் இருந்தன. அவை எனக்குக் கிடைக்கக் காரணம் அந்த ராமபிரானின் சகாயத்தினால் தான் என்பது உண்மையாயிற்று. அதைக் கொண்டு பணக்காரனானேன்'' என்று கூறினார்.
அதன்பின் உண்மையை உணர்ந்தார் மன்னர். கடவுள் அருள் இருந்தால்தான் ஒருவன் உயர்வுபெற முடியும் என்பதற்கு இந்த யாசகனே சாட்சி. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை உணர்ந்த மன்னர், இறைநம்பிக்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அவரது நாட்டிலிருந்த ஆலயங்களைப் புதுப்பித்து, அதற்கான பூஜைகள், திருவிழாக்கள் அனைத் தும் சிறப்பாக நடக்கும்படி நடைமுறைப் படுத்தி வந்தார்.
இவ்வாறு இறைவனின் அருள் இருந்தால் தான் அனைத்துமே கிடைக்குமென்பதற்கு உதாரணமாக, இறையூரிலுள்ள அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அனைத்து சுகபோகங்களையும் செல்வத் தையும் செல்வாக்கையும் வழங்கிவருகிறார்.
இதுகுறித்து கோவில் பரம்பரை அறங் காவலர் பாலசுப்பிரமணியன் பிள்ளை கூறும்போது, ""எங்களது மூன்றாவது பாட்டனார் நாராயணன் பிள்ளை- அவரது துணைவியார் அலமேலு தம்பதிகளுக்குத் திருமணமாகி ஏழு குழந்தைகள் பிறந்தும் அவை இறந்து போனதால், மீண்டும் குழந்தை பாக்கியம் வேண்டிப் பல்வேறு கோவில்களுக்கும் சென்று இறைவனை வணங்கிவந்தனர்.
ஒருநாள் நாராயணன் பிள்ளையின் கனவில் தோன்றிய பெருமாள், "என்னை வணங்க எங்கும் சென்று அலையவேண்டாம். உமது ஊரிலேயே என் பெயரில் ஒரு ஆலயம் எழுப்பு. உனக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நாராயணன் பிள்ளை, பெருமாளுக்கு ஆலயம் எழுப்பும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத் திக் கொண்டார். கோவில்கட்டி கும்பா பிஷேகமும் நடத்தி முடித்தாராம் அப்போது முதல் இவ்வாலய இறைவன் அழகிய மணவாளப் பெருமாள் என்று பெயர் கொண்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருளாட்சி செய்துவருகிறார்.
சில மாதங்களுக்குப்பிறகு நாராயணன் பிள்ளை- அலமேலு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இறைவனின் பெயரான கிருஷ்ணன் என்னும் பெயரைச் சூட்டி வளர்த்துவந்தனர். அதன்பிறகு கிருஷ்ணன் பிள்ளை- கல்யாணி தம்பதிக்குத் திருமணமானது. அவர்களுக்கு ராஜகோபால், அலமேலு என இரு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் ராஜகோபால்- ஆண்டாள் தம்பதிக்கு முருகேசன், பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். மற்றும் அமுதவல்லி என ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. முருகேசன்- சிவகாமசுந்தரி தம்பதிக்கு ராதாகிருஷ்ணன், சுமதி, அம்பிகா என மூன்று குழந்தைகள். இதில் ராதாகிருஷ்ணன்- லதா தம்பதிக்கு ரோஹித் கிருஷ்ணன் என ஒரு ஆண்பிள்ளை உள்ளது. முருகேசன் சகோதரர் பாலசுப்பிரமணியன்- சாந்தி தம்பதியர்க்கு சரவணன், விக்னேஷ் என இரு ஆண் பிள்ளைகள். இதில் சரவணன்- சிவசங்கரி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நான்கு தலைமுறை கடந்து ஐந்தாவது தலைமுறைப் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெற்று வாரிசுகளுடன் வளமுடன் உள்ளனர்.
இந்த வம்சத்தினர் மட்டுமல்ல; அழகிய மணவாளப் பெருமாளை மனமுருக வணங்கு வோருக்கு மகப்பேறு செல்வங்களை வழங்கிவருகிறார் பெருமாள். மேலும் திருமணத்தடையுள்ள ஆண்-பெண்கள் இவ்வாலயப் பெருமாளை வழிபடுவதன்மூலம் தடை நீங்கப்பெற்று நல்ல முறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. சீர்குலையும் குடும்பங்களை ஒன்றுசேர்த்து வருகிறார் பெருமாள். அதேபோன்று கல்வியில் தேர்ச்சி பெறவும், படித்து முடித்தவர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறவும் இவ்வாலயம் வந்து வணங்கிச் செல்கின்றனர். அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. இவ்வாறு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அனைத்து வளங்களையும் தந்து வாழவைத்து வருகிறார் மணவாளப் பெருமாள் என்றார்.
இந்த ஆலயத்தில் திருமணம் செய்தகொள்ளும் தம்பதிகளுக்கு அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கின்றன. அதே போன்று மூத்த தம்பதிகளுக்கு 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தி, 80 வயதில் பீமரத சாந்தி, நூறாவது சதாபிஷேகம் என இவ்வாலயத்தில் சிறப்பாகத் திருமண வைபவங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இவ்வாறு செய்துகொள்ளும் தம்பதியர் நீண்ட ஆயுளைப் பெறுகிறார்கள். இதனால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
""காலப்போக்கில் இவ்வாலயம் சிதில மடைந்தது. பக்தர்களின் உதவியோடு மிகுந்த முயற்சிசெய்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அனுமதியோடு, கடந்த பிப்ரவரி மாதம் குடமுழுக்கு விழா மிகவும் சிறப் பாக நடைபெற்றது. சனிக்கிழமைதோறும் சிறப்புப் பூஜைகள், மார்கழி சொர்க்கவாசல் திறப்பு, மாதந்தோறும் பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர சிறப்புப்பூஜைகள் என அனைத்துப் பூஜைகளும் விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன'' என்கிறார் கள் பரம்பரை அறங்காவலர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் மற்றும் ஆலய அர்ச்சகர் தேசிங்கு பட்டாச்சாரியார்.
மன்னர்கள் காலத்தில் ஊர்கள்தோறும் ஆலயங்களைக் கட்டி மக்களுக்கு இறையுணர்வைப் பெருக்கினார்கள். அதிகாலை நேரத்தில் "ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய' என்னும் நாமங்கள் கோவில்கள்தோறும் ஒலிக்கும். இதனால் நாட்டில் நேர்மையும் நீதியும் மக்களிடையே வளர்ந்தது. அத்தகைய ஊர்களில் ஒன்று தேவாரத்தில் இடம்பெற்ற திருமாறன்பாடி என்னும் இறையூர். இவ்வாலயத்திற்கு மேற்கே திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தாகம்தீர்த்தபுரீஸ்வரர்- அன்னபூரணி ஆலயமும், திருஞானசம்பந்தருக்கு சிவபெருமானால் முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு அளிக்கப்பட்ட திருவறத் துறை எனும் திருவட்டத்துறை ஆலயமும் அமைந்துள்ளன.
விருத்தாசலம்- திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அருகில், சென்னை திருச்சி ரயில் பாதையில் பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இறையூர். பஸ் நிலையம் அருகிலேயே கோவில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 77084 63839, 94429 83538.