பார்போற்றும் ஞானம் தரும் பரிமுகன்!

/idhalgal/om/baroness-wisdom

வாதிராஜர் ஆராதனை- 9-3-2019

-மும்பை ராமகிருஷ்ணன்

மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்தாலே எல்லா பள்ளி, கல்லூரிகளி லும் தேர்வு வரும். அதன் பொருட்டு கல்வி, கலைகளுக்கு உன்னதம் கொடுக்கும் தெய்வங்களுக்கு அபிஷேகம், பூஜை, சகஸ்ரநாமப் பாராயணம், ஹோமங்கள் செய்து அருள்பெறுவது வழக்கம். ஆக, அது குறித்து சிறிது சிந்தித்து அருள் பெற முயற்சிப்போமே! மாணாக்கர்களும் மகிழட்டுமே!

✷ கல்வி, கலைகளுக்கு தேவியான சரஸ்வதி தனிக்கோவில் கொண்ட தலம் கூத்தனூர்.

அற்புதமான கோவில். சரஸ்வதியைப் போற்றும் இரு துதிகள் காண்போம்.

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்தி: பவதுமேஸதா//

ஸுரஅசுரை: ஸேவிதா கரேவிராஜத் கமனீயபுஸ்தகா

விரிஞ்சிபத்னி கமலாஸனஸ்திதா ஸரஸ்வதி ந்ருத்யது வாசிமேஸதா//

ஒட்டக்கூத்தர், கம்பர், சாரங்கபாணி (ஊமை), குமரகுருபரர் போன்றோருக்கு அருள்புரிந்த தேவி. ஒட்டக்கூத்தரின் பெயராலேயே இவ்வூர் கூத்தனூர் என்றானது.

✷ ஞானஸ்வரூபி தட்சிணாமூர்த்தியை எல்லா சிவன் கோவில் களிலும் காணலாம். மயிலாடுதுறை வள்ளலார்கோவிலில் நந்தியின்மேல் அமர்ந் திருக்கும் ஞானகுரு அழகை வேறெங்கும் காணமுடியாது. குரு என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

parimugan

குகாரஸ்து அந்த காரஸ்ச

ருகாரஸ்தேன உச்யதே

அக்ஞான க்ராஸகம் பிரம்ம

குருஏவ நஸம்ஸய:

"கு' என்றால், அஞ்ஞானம், அறியாமை, இருள், மடைமை. "ரு' என்றால் அதனை அழித்து, ஞானம், மனத்தெளிவு, புத்தி, பிரகாசம் அளிப்பவர்.

✷ சூரியனையே குருவாகப் பெற்றவர் அனுமன்.

புத்திர்: பலம் யசோ: தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக் படுத்வம் ஹனுமத் ஸ்மரணாத் பவேத். அனுமனது புத்திக் கூர்மைக்கு அளவே இல்லை. ஆகவேதான் ராமர் அவரை இராவண னிடம் தூதனுப்பினார்.

✷ மகாபாரத யுத்த களத்தில் மாவீரன் அர்ஜுனன் மதிமயங்கி சண்டையிட மறுத்தான். தேரோட்டி கண்ணன் பகவத் கீதை என்று 700 துதிகளால் அவன் மனதை மாற்றினான். ஆகவேதான் "க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்' என்று போற்றுகிறோம்.

பகவத் கீதை உலக ப்ரசித்தமாகியுள்ளது.

✷ வைணவ மதாச் சாரியர் ராமானுஜருக்குப் பின்பு வைணவ மதத் திற்குப் புத்துயிர் கொடுத்து நூற்றுக்கணக் கான இரந்தங்களை எழுதியவர் ஸ்ரீவேதாந்த தேசிகர். "கவிதார்க்கிக ஸிம்மம்' என்று பெயர் பெற்றவர். யாதும் குதிரை முக ஹயக்ரீவரின் அருளினாலேயே தந்துள்ளார். அவர் ஹயக்ரீவர்மீது 33 துதிகள் செய்துள்ளார். முதல் துதி:

ஞானானந்தமயம்

வாதிராஜர் ஆராதனை- 9-3-2019

-மும்பை ராமகிருஷ்ணன்

மார்ச், ஏப்ரல் மாதங்கள் வந்தாலே எல்லா பள்ளி, கல்லூரிகளி லும் தேர்வு வரும். அதன் பொருட்டு கல்வி, கலைகளுக்கு உன்னதம் கொடுக்கும் தெய்வங்களுக்கு அபிஷேகம், பூஜை, சகஸ்ரநாமப் பாராயணம், ஹோமங்கள் செய்து அருள்பெறுவது வழக்கம். ஆக, அது குறித்து சிறிது சிந்தித்து அருள் பெற முயற்சிப்போமே! மாணாக்கர்களும் மகிழட்டுமே!

✷ கல்வி, கலைகளுக்கு தேவியான சரஸ்வதி தனிக்கோவில் கொண்ட தலம் கூத்தனூர்.

அற்புதமான கோவில். சரஸ்வதியைப் போற்றும் இரு துதிகள் காண்போம்.

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்தி: பவதுமேஸதா//

ஸுரஅசுரை: ஸேவிதா கரேவிராஜத் கமனீயபுஸ்தகா

விரிஞ்சிபத்னி கமலாஸனஸ்திதா ஸரஸ்வதி ந்ருத்யது வாசிமேஸதா//

ஒட்டக்கூத்தர், கம்பர், சாரங்கபாணி (ஊமை), குமரகுருபரர் போன்றோருக்கு அருள்புரிந்த தேவி. ஒட்டக்கூத்தரின் பெயராலேயே இவ்வூர் கூத்தனூர் என்றானது.

✷ ஞானஸ்வரூபி தட்சிணாமூர்த்தியை எல்லா சிவன் கோவில் களிலும் காணலாம். மயிலாடுதுறை வள்ளலார்கோவிலில் நந்தியின்மேல் அமர்ந் திருக்கும் ஞானகுரு அழகை வேறெங்கும் காணமுடியாது. குரு என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

parimugan

குகாரஸ்து அந்த காரஸ்ச

ருகாரஸ்தேன உச்யதே

அக்ஞான க்ராஸகம் பிரம்ம

குருஏவ நஸம்ஸய:

"கு' என்றால், அஞ்ஞானம், அறியாமை, இருள், மடைமை. "ரு' என்றால் அதனை அழித்து, ஞானம், மனத்தெளிவு, புத்தி, பிரகாசம் அளிப்பவர்.

✷ சூரியனையே குருவாகப் பெற்றவர் அனுமன்.

புத்திர்: பலம் யசோ: தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக் படுத்வம் ஹனுமத் ஸ்மரணாத் பவேத். அனுமனது புத்திக் கூர்மைக்கு அளவே இல்லை. ஆகவேதான் ராமர் அவரை இராவண னிடம் தூதனுப்பினார்.

✷ மகாபாரத யுத்த களத்தில் மாவீரன் அர்ஜுனன் மதிமயங்கி சண்டையிட மறுத்தான். தேரோட்டி கண்ணன் பகவத் கீதை என்று 700 துதிகளால் அவன் மனதை மாற்றினான். ஆகவேதான் "க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்' என்று போற்றுகிறோம்.

பகவத் கீதை உலக ப்ரசித்தமாகியுள்ளது.

✷ வைணவ மதாச் சாரியர் ராமானுஜருக்குப் பின்பு வைணவ மதத் திற்குப் புத்துயிர் கொடுத்து நூற்றுக்கணக் கான இரந்தங்களை எழுதியவர் ஸ்ரீவேதாந்த தேசிகர். "கவிதார்க்கிக ஸிம்மம்' என்று பெயர் பெற்றவர். யாதும் குதிரை முக ஹயக்ரீவரின் அருளினாலேயே தந்துள்ளார். அவர் ஹயக்ரீவர்மீது 33 துதிகள் செய்துள்ளார். முதல் துதி:

ஞானானந்தமயம் தேவம்

நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம்

ஹயக்ரீவம் உபாஸ் மஹே.

இறுதி துதி:

வாக் அர்த்த ஸித்தி ஹேதோ:

படத ஹயக்ரீவ ஸம்ஸ்துதிம் பக்த்யா.

ஹயக்ரீவர் அருளினால் அனைத்து வித்தைகளும் கைகூடும் என்று அடித்துக் கூறுகிறார்- கைமேல் பலன் பெற்றவர்! தேசிகரது காலம் 1238-1369.

ஹயக்ரீவர் அருளைப்பெற்று வாரிவாரி வழங்கிய மத்வமத ஆச்சார்யார் ஸ்ரீவாதிராஜர் என்பவர். அவர் ஸோதே மடத்தைச் சேர்ந்தவர். 120 வருடங்கள் வாழ்ந்து, மாசி மாத திரிதியை திதியில் (இவ்வருடம் 9-3-2019) ஜீவசமாதி அடைந்தவர். அவர் சரிதம் நினைத்து குரு திருவருளும், குரு ஹயக்ரீவர் அருளும், ஞானமும் பெறலாமே! மாணாக்கர்கள் அதிக மதிப்பெண் பெறலாமே!

த்வைத மதம் ஸ்தாபித்த மத்வாச்சாரி யார் காலம் கி.பி. 1238-1317. அவர் உடுப்பி யில் ருக்மிணி வழிபட்ட கிருஷ்ணனைப் பூஜிக்க எட்டு மடங்களை அமைத்தார். அதனில் ஸோதே மடமும் ஒன்று. அதனில் வாழ்ந்தவரே ஹயக்ரீவ பக்த வாதிராஜ ஸ்வாமிகள். அவரது காலம் 1480-1600. ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளும் ஜீவசமாதி அடைந்தவரே.

அவரது காலம் 1575-1671. ஆக, இருவரும் சமகாலத்தவாகள். வியாச தீர்த்தர் (1460-1530), ஸ்ரீபாதராயர் (1404-1582) ஆகிய மடாதிபதிகளும், சங்கீதப் பிதாமகர் என கூறப்படும் புரந்தரதாசரும் (1484-1564) சமகாலத்தவர்களே. ஆக, அவர் காலம் சர்வக்ஞர்களின் பொற்காலம் எனலாம்.

ஸோதே மட குருநாதர் வாகீச தீர்த்தர் உடுப்பிக்கு நாற்பது கிலோமீட்டர் தொலை விலிருக்கும் ஹுவ்வன்கரே கிராமத்தில் நடந்து கொண்டிருந்தார். ராமபட்டர்- கௌரி தம்பதிகள் அவரை நமஸ்கரித்து புத்திர பாக்கியம் வேண்டினர்.

அவர் தீர்க்கதரிசனத்தோடு யோசித்து, ""முதல் குழந்தையை மடத்துக்குத் தந்துவிடவேண்டும்'' என்றார். அவர்கள் மகிழ்ந்தாலும், மடத்துக்குத் தர வேண்டுமே என்று கவலை கொண்டனர். அதை யுணர்ந்த ஸ்வாமிகள், ""குழந்தை வீட்டுக்கு வெளியே பிறந்தால் மடத்துக்கு; உள்ளே பிறந்தால் உங்களி டமே'' என்றார். மனது சமாதானம் ஆயிற்று.

guru

அவர்கள் வீடு சிறியது. சுற்றியிருந்த நிலத்தில் சாகுபடிசெய்து வாழ்ந்தனர். கௌரி கருவுற்று ஏழு மாதமானதும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. ஒருநாள் துவாதசி. ராமபட்டர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கௌரி துளசி பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது சில கால்நடைகள் வயலில் பயிரை நாசப்படுத்தின. ராமபட்டர் கூற, கௌரி அவற்றை விரட்ட வயலுக்கு கோலுடன் போனாள். அச்சமயம் பிரசவ வேதனை அதிகமாகி அங்கேயே ஆண் குழந்தை பிறந்தது! அன்று தை மாத சுத்த துவாதசி நாள். (இவ்வருடம் 18-1-2019). வீட்டுக்கு வெளியே பிறந்த தால் வாகீச தீர்த்த ஸ்வாமிகளுக்குத் தகவல் அனுப்பப் பட்டது. அவர் சுமங்கலிகளிடம் தங்கத் தாம்பாளம் தந்து குழந்தையை அதில் எடுத்துவரக் கூறினார்.

குழந்தையின் முக வடிவு, சாமுத்திரிகா லட்சணங்களைக் கண்ட அவர், இவன் வெகு க்யாதி யுடன் சந்நியாசியாக விளங்கு வான் என்றெண்ணி பூவராகர், ஹயக்ரீவர் அபிஷேகப்பால் குழந்தைக்கு ஈந்து, பூவராகன் என பெயரிட்டு, ""பெற்றோர் களை வளர்க்கச் சொல்லுங்கள். பின்பு மடம் வந்துசேர்வான்'' என்றார். பூவராகனுக்கு ஸ்வாமி கள் கல்வி கற்க மடத்தின்மூலம் ஏற்பாடு செய்தார். பூவராகனுக்கு எட்டு வயதானதும், ஸ்வாமிகள் சந்நியாசம் வழங்கி வாதிராஜ தீர்த்தர் என்று பெயரிட்டார். (குழந்தை பிறந்த வயலில் சிறிய கோவில் உள்ளது.) ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளது சிறுபெயர் ராயரு; ஸ்ரீவாதிராஜரது சிறுபெயர் ராஜரு.

உடுப்பி அஷ்ட மடங்களில் கும்பாஸி என்பது ஒரு மடம். அதுவே ஸோதே மடமாக மாறியது. கும்பாஸி, பரசுராம புண்ணியத்தலங்கள் ஏழினுள் ஒன்று. ஸ்ரீவாதிராஜர் தனது குரு வாகீசரிடமும், வித்யாநிதி தீர்த்தரிடமும், பின்பு வியாஸ தீர்த்தரிடம் முழு சாஸ்திர அப் யாசம் செய்தார்.

எல்லா வாதப்ரதிவாதங்களிலும் யாவரையும் வென்றார். இருமுறை பாரத தேசம் முழுவதும் யாத்திரை செய்துள்ளார். யாத்திரைத் தலங்களின் சிறப்புகளை "தீர்த்த பிரபந்தம்' என செய்தார்.

யாத்திரை செல்வதற்குமுன், தன்னைப் போல ஒரு விக்ரகம் செய்து அன்னைக்கு ஈந்தாராம். அத்தகைய மாத்ருபக்தி!

அவரது மகிமையை சற்று சிந்திப்போமா?

✷ ஒருசமயம் திருமண ஊர்வலம் வீதிவழியே வந்துகொண்டிருந்தது. அப்போது மாப்பிள்ளையின் தலைப்பாகையிலிருந்த பாம்பு கடித்து மாப்பிள்ளை இறந்தான். அனைவரும் கதறியழுது ஸ்வாமிகளிடம் வேண்ட, அவர் "ஸ்ரீலக்ஷ்மி ஷோபன ஹாகு' என்ற கன்னட கிருதி பாட, இறந்த மாப்பிள்ளை உயிர்பெற்று எழுந்தான். யாவரும் மகிழ்ந்தனர். எல்லா திருமண விழாக்களிலும் இப்பாடலைப் பாடுகிறார்கள்.

✷ மூப்பிதார என்ற கிராமத்திலுள்ள ஜைன ஆலயத்தில் நுழைந்து, பச்சைக் கல்லால் செய்த மகாவீரர் சிலையைப் பார்த்தபோது, அது பச்சை விட்டலனாக மாறியதாம். வியந்த ஜைனராஜா ஸ்வாமிகளிடமே விட்டல விக்ரஹம் அளிக்க, அது இன்றும் ஸோதே மடத்தில் பூஜையில் உள்ளது.

✷ கிருஷ்ண தேவராயர் வாதிராஜரின் மகிமை, பாண்டித்யத்தில் மகிழ்ந்து "ப்ரஸங்காபரண தீர்த்தர்' என்றாராம்.

✷ கர்நாடகாவில் பொற்கொல்லர்கள் அதிகம் உண்டு. "ஆசாரி' என்பர். ஆனால் தகுந்த அந்தஸ்து பெறவில்லை. ஒருவர் கணபதி உருவம் செய்ய பஞ்சலோகக் கலவையை வார்ப்பில் இட்டு மூடினார். திறந்து பார்த்தால் அது ஹயக்ரீவ (குதிரைமுக விஷ்ணு) உருவமாக இருந்தது. அது மிகவும் சூடாக இருந்ததால் மீண்டும் உருக்கி கணபதி உருவம் செய்ய எத்தனித்தான். ஆனால் இயலவில்லை. இரவில் அவர் கனவில் தோன்றிய ஹயக்ரீவர், அதனை வாதிராஜருக்கு தரச்சொல்ல, அவ்வாறே தரப்பட்டது. தனது இஷ்டதேவதை வினோதமாகத் தன்னிடம் வந்ததில் ஸ்வாமி களுக்கு மிக சந்தோஷம்! பொற்கொல்லர்கள் யாவரும் ஸ்வாமிகளைப் பணிய, அவர்களை தைவஞ பிராம்மணர்கள் ஆக்கினாராம். பூணூல் அணிவார்கள். வாதிராஜரையே குருவாக வணங்குவர்.

✷ திருமலை திருப்பதிக்கு வந்தபோது மலையே சாளக்ராமமாகத் தெரிய, பாதம் படாது முட்டியால் நகர்ந்து மேலே வந்தாராம்! பெருமாளுக்கு சாளக்ராம மாலை அணிவித்தாராம். அது இன்றும் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறதாம்.

✷ அயோத்தி வந்தபோது, அங்கே ஒரு அனுமன் விக்ரகம் கிடைக்க, அதனை ஸோதே மடத்தில் பிரதிஷ்டை செய்தார்.

✷ மத்வாச்சார்யர் பிறந்த இடமான உடுப்பிக்கு அருகேயுள்ள மாறக க்ஷேத்திரத்தில் மத்வர் சிலையைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

✷ பண்டரிபுரத்தில் தங்கி விட்டலனுக்கு வழிபாடுகள் செய்தார். ஒருநாள் ஒரு தனவந்தர் ஸ்வாமிகளிடம், ""நான் வயலில் கடலை பயிரிட்டுள்ளேன். தினமும் ஒரு வெள்ளைக்குதிரை வந்து வயலை நாசம் செய்துவிட்டு, நீங்கள் இருக்குமிடம் வந்துசேருகிறது. குதிரையைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் இங்கே குதிரை தென்படவில்லையே? இது ஒரு வாரமாக நடக்கிறது'' என்றார். ஸ்வாமிகள், ""என்னிடம் வெள்ளைக்குதிரை இல்லை. வா, உன் வயலுக்குப் போகலாம்'' என்று சொல்ல, சென்று பார்த்தனர். எங்கெல்லாம் குதிரை வாய்வைத்ததோ அங்கெல்லாம் தங்கக்கடலை! தனவான் வியந்து, ஸ்வாமிகள் ஹயக்ரீவர் மகிமை புரிந்து, அந்த நிலத்தை மடத்துக்கு ஈந்தார்.' ஸ்வாமிகள் அச்சமயம் தசாவதார ஸ்துதி செய்தார்.

✷ ஸ்வாமிகள் தன் உபாஸனாமூர்த்திக்கு "ஹயக்ரீவ மண்டி' என்று ஒருவித நிவேதனம் செய்வார். ஏலக்காய், திராட்சை, கொப்பரை, சர்க்கரை, நெய், வாழைப்பழம், கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கலந்து வேகவைத்து பூர்ணம்போல செய்ய சொல்வார். பூஜை முடிந்தபிறகு அதை ஒரு தலாம்பாளத்தில் இட்டு, தலைமேல் வைத்துக்கொள்வார்.

அப்போது ஹயக்ரீவர் குதிரை வடிவமாய் வந்து, அவரது தோளில் இரு கால்களை வைத்து உண்டுவிட்டு, சிறிது மீதம் பிரசாதமாக வைக்கும். இது தனியறையில் நடக்கும்.

சில விஷமிகள் அவரேதான் சாப்பிடுகிறார் என்றெண்ணி, ஸ்வாமிகள் அஹோபில க்ஷேத்திரத்தில் இருந்தபோது, சமையல்காரனுக்குப் பணம் கொடுத்து அப்பண்டத்தில் விஷம் கலக்கச் செய்தனர். ஸ்வாமிகள் அதை உண்டு இறந்துவிடுவார் என எதிர்பார்த்தனர். அன்று குதிரையின் சத்தம் அதிகம் கேட்டது. மீதம் வைக்காமல் சாப்பிட்டது. விஷமிகள் பயந்து ஓடினர்; ரத்தம் கக்கி இறந்தனர்.

இதுபோன்ற சம்பவம் உடுப்பியிலும் நடந்ததாம். ஹயக்ரீவ பஞ்சலோகமூர்த்தி விஷம் உண்டதால் நீலநிறமாகியது. ஸ்வாமிகள் வேண்ட, ஹயக்ரீவர் மட்டே கிராமத்தில் விளையும் குள்ளே எனும் கத்தரிக்காயைப் பதம்செய்து ஒரு மண்டலம் நிவேதனம் செய்யச் சொன்னார். கடைசியில் நீலவண்ணம் கடுகளவு கழுத்தில் மட்டும் தங்கியதாம்.

அதனை இன்றும் காணலாம்.

✷ ஒருசமயம் விஜய நகரத்தை ஆண்ட அச்யுத ராஜனுக்கு மிகப்பணக்கஷ்டம் வந்தது. என்ன செய்வதென அறியாமல் ஸ்வாமிகளிடம் முறையிட்டான். அவரோ வாலிக்குகைக்கு அழைத்துச்சென்று, ஓரிடத்தில் பூமியில் புதைந்திருந்த அமோக நிதியைக் காண்பித்து அரசுப்பணிகளுக்கு மட்டும் பயன்படுத்துமாறு கூறினார். "தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று மன்னன் மன்றாட, அந்த நிதிக்குவியலிலிருந்த சுக்ரீவன் பூஜித்த ராம விக்ரகத்தையும், வாலி பூஜித்த விட்டல விக்ரகத்தையும் பெற்று ஸோதே மடத்தில் ஸ்தாபித்தார்.

✷ நேத்ராவதி நதிக்கரையில் தர்மஸ்தலா அமைந்துள்ளது. ஸ்வாமிகள் அங்கு சஞ்சாரம் செய்தபோது, அப்பகுதி மக்கள் அங்கு பூஜைசெய்யுமாறு வேண்டினர். அப்பகுதி பிசாசுகள் நிரம்பியதாக இருந்ததால், தூய்மையான இடமில்லை என்று ஸ்வாமிகள் மறுத்தார். அனைவரும் மிக வேண்டிக்கேட்க, கத்ரி கோவிலிலிருந்து மஞ்சுநாதேஸ்வர சிவனை அங்கு பிரதிஷ்டை செய்து பூஜித்தார். பிசாசு, பூதத் தொந்தரவுகள் அகன்றன. சிவனைப் பூஜிக்க சிவானி மத்வர் களை ஏற்படுத்தினார்.

அவ்விடம் உன்னத திவ்யத் தலமாக மாறியது.

இவ்வாறு பற்பல அற்புதங்களை வாதிராஜ தீர்த்தர் ஹயக்ரீவரின் அருளால் நிகழ்த்தினார்.

அவரது ஆராதனை நாளில் அவரை வணங்கி குருவருள் பெறுவோம். கல்விக் கடவுள்களை வணங்கி நல்லறிவு, நல்லொழுக்கம், நல்வாழ்வு பெறுவோம்.

om010319
இதையும் படியுங்கள்
Subscribe