"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.'
-திருவள்ளுவர்
உள்ளக்கமலத்தில் உறைகின்ற இறைவனின் மாட்சிமை பொருந்திய திருவடிகளைச் சேர்ந்தவர்கள், இவ்வுலகில் நீடூழி வாழ்வார்கள்.
மலர் என்பது பக்தர்களின் இதயந்தான். யார் தம்மை நினைக்கிறார்களோ அவர்களது இதயத் தில் வெளிப்படும் காரணத்தால் இறைவனை "மலர்மிசை ஏகினான்' என்கிறார் வள்ளுவர். கடவுள், தம்மை நினைக்காதவர்களின் இதயத் தில் வெளிப்படாவிட்டாலும் மறைவாக இருக்கிறார். அதனால் தான் "ஓராதார் உள்ளத் தில் ஒளிக்கும் ஒளி யானே' என்கிறார் மாணிக்கவாசகர்.
"இரும்பு போன்ற இதயம்- வஞ்சகம் நிறைந்த கல்மனம் சிலருக்குண்டு. அப்படிப் பட்டவர்களின் உள்ளத் திலும் சாட்சிப்பொரு ளாக இருப்பவன் இறைவனல்லவா' என்கிறார் தாயுமானவர். வானத்தைப் பற்றி நாம் நினைத் தாலும் நினைக்கா விட்டாலும், அது நம்மைச் சூழ்ந்திருப் பதைப்போல இறைவன் நம்மைச் சூழ்ந்தும், உள்ளும் இருக்கிறார். "அண்டவெளிகளும், ஐம்பூதங்களும் நீயில்லை. ஆராய்ந்து பார். நீ அவற்றை உணரும் உணர்வாக இருக்கிறாய்; அந்த உணர்வுதான் எங்குமுள்ள இறைத் தத்துவம்' என்று தாயுமானவருக்கு அவருடைய குரு, இறைவனின் தன்மையை அன்புடன் உபதேசித்தார். இத்தகைய இறைவனின் நாமங்களை மந்திரமாக உருவேற்றுவது அரிய செயல்.
வீராசாமி என்பவர் முக்கியப் பணி காரணமாக வீட்டை விட்டுப் புறப்பட்டார். தான் நாடிப் போகும் பணி நல்லவிதமாக முடிய வேண்டுமே என்ற கவலையோடு சென்றுகொண்டிருந்தவரின் காதில் யாரோ சொன்ன "ராமா' என்ற திருநாமம் கேட்டது.
மனம் ராமநாமத்தில் பதிய, சென்ற காரியம் சுலபமாக முடிந்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை வீராசாமிக்கு. எனவே படுக்கையை விட்டு எழுந்தவுடன் தான் சந்திக்கும் முதல் நபரை ராமநாமம் சொல்லச் சொல்லி, அதன்பின் தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.
இவ்வாறே பல நாட்கள் சென்றன.
ஒரு நாள் வீராசாமியின் கண்ணில் கோபாலன் என்பவர் அகப் பட்டார். அவரை ராமநாமம் சொல்லுமாறு வற்புறுத்தி னார். கோபாலனோ மறுத்தார். வீராசாமி விடவில்லை. ""ராம நாமம் சொன்னாலன்றி உன்னை விடமாட்டேன்...'' என்று கோபாலனின் ஆடையைப் பிடித்தார். விவரமறிந்து ஊர்மக்கள் கூடினர். ""அவர் சொல்லாவிட்டால் என்ன... நாங்கள் சொல்கிறோம்'' என எல்லாரும் ராமா என்று கூவினர்.
""நான் முதலில் பார்த்தது கோபாலனைத்தான். எனவே என் வழக்கப்படி அவர்தான் சொல்லவேண்டும்'' என்றார் வீராசாமி. கோபாலனோ மீண்டும் மறுத்தார். பிரச்சினை அரசரிடம் போனது.
இருதரப்பின் விவர மறிந்த அரசர், ""ஏன் மறுக்கி றாய் கோபாலா? ஒருமுறை ராமநாமத்தைச் சொல்லேன்'' என்றார். ""அரசே, எனக்கு மனைவி, மக்கள் இருக்கின்ற னர். அவர்களுக்கு என்னை விட்டால் ஆதரவில்லை... அப்படியிருக்க நான் எப்படி சொல்வேன்..?'' என்றார் கோபாலன்.
அனைவருக்கும் ஆச்சரியம்! எந்த ஒரு திருநாமம் சொன்னால் எல்லா வினைகளும் தீருமோ- அதைச் சொன்னால் ஆபத்து என்கிறாரே என்று வியந்தனர்.
அரசரோ சொல்லுமாறு வற்புறுத்தினார்.
""சரி அரசே. என் மனைவி, மக்களின் வாழ்வுக்கு வழிசெய்தால் சொல்கிறேன்'' என்றார் கோபாலன்.
அதை ஏற்ற அரசர், கோபாலனின் குடும்பத்திற்கு நிலங்கள் எழுதிவைத்து செல்வமும் வழங்கினார். அப்போதும் வீராசாமியிடம், ""சொல்லித்தான் ஆகவேண்டுமா'' என்று கேட்டார் கோபாலன். ""ஆம்'' என்றார் வீராசாமி.
கைகளைத் தலைக்குமேல் குவித்து, கண்களில் வழிந்த கண்ணீர் உடலை நனைக்க, கண்களை மூடியபடியே ""ராமா'' என்றார். அதே

கைகளைத் தலைக்குமேல் குவித்து, கண்களில் வழிந்த கண்ணீர் உடலை நனைக்க, கண்களை மூடியபடியே ""ராமா'' என்றார். அதே விநாடியில் கோபாலனின் கபாலம் பிளக்க, அதிலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டு ஆகாயத்தை நோக்கிச் சென்றது. அவர் உடல் தரையில் சாய்ந்தது. ராமநாமம் சொல்லச் சொல்லி வற்புறுத்திய வீராசாமி மற்றும் அரசர் உட்பட அனைவரும் கோபாலனின் தூய்மை யான ராமபக்தியைக் கண்டு கண்ணீர் சிந்தினர்.
கோவனூர் என்ற கிராமத்தில் ஒரு ஏழையும் பணக்காரரும் ஒரே நேரத்தில் இறந்தனர். இருவரது ஆன்மாக்களையும் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர் கடவுளின் தூதுவர்கள்.
உலகில் வாழ்ந்தபோது செய்த நல்லறங்களை சரிபார்த்து, அவரவர்க்குத் தகுதியான சொர்க்க அறையை முடிவுசெய்யும் வேலை துவங்கி யது. கணக்கு வழக்குகள் முடித்த தூதுவர்கள் பணக்காரரிடம், "ஐயா... தங்களை சொர்க்கத் தின் நடுவிலிருக்கும் அறையில் தங்க உத்தர விட்டுள்ளார் கடவுள்...'' என்றனர். ஏழையிடம், ""ஐயா... உங்களுக்கு கடவுளின் பக்கத்து அறை ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.
பணக்காரர் அதிர்ச்சியடைந்தார். ""ஒரு அரசனைப்போல் வாழ்ந்தவன். ஏராளமான தானதர்மங்கள் செய்திருக்கிறேன். அப்படி யிருந்தும் கடவுளின் பக்கத்தில் அறை ஒதுக்கப் படவில்லையே'' என்று கோபமாக முறையிட் டார். பதட்டமடைந்த தூதுவர்கள், ""ஐயா, கடவுள்தான் அவ்வாறு ஆணையிட்டுள்ளார்'' என்று கூறினர். பணக்காரர் சமாதானமடையவில்லை. நியாயத்தைக் கடவுளிடமே கேட்கும் முடிவுக்கு வந்தனர்.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள், ""நீங்கள் தானதர்மங்கள் செய்ததற்கான பலன்களை யெல்லாம் பூலோகத்தில் முழுமையாகப் பெற்று விட்டீர்களே... ஏழை அங்கு எந்தப் பலனும் பெறவில்லை. அதனால் சொர்க்கத்தில் உங்களைக் காட்டிலும் அதிக பலன் பெறுகிறார்'' என்றார். வியப்பும் அதிர்ச்சியுமடைந்த பணக்காரர், ""அப்படி என்னதான் செய்திருக்கி றார் இந்த ஏழை?'' என்று கேட்டார்.
""வாழ்நாள் முழுவதும் அன்பான வார்த்தை களையே பேசியிருந்தார். ஒருவர் மனதைக்கூட புண்படுத்தியதில்லை. இதுதான் தானதர்மங் களைவிட உயர்வானது'' என்றார் கடவுள்.
இப்படி வாழ்நாள் முழுவதும் அன்பான வார்த்தைகளைப் பேசி தெய்வ நாமத்தை நாடி நரம்பெல்லாம் ஊடுருவும்படியாக உருவேற்றிய மகான்கள் பலர் அன்றும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு திருத்தலம்தான் பாலமலை அரங்கநாதசுவாமி திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீஅரங்கநாதசுவாமி.
இறைவி: செங்கோதையம்மன், பூங்கோதை யம்மன்.
உற்சவர்: செங்கோதை, பூங்கோதை சமேத அரங்கநாதர்.
ஊர்: கோவனூர்.
புராணப்பெயர்: பால்மலை (பாலமலை).
தீர்த்தம்: பத்மதீர்த்தம், சக்கர தீர்த்தம்.
தலவிருட்சம்: காரை மரம்.
சித்தர் பெருமக்கள் தாங்கள் வணங்குவதற் காக மலைக்குமேல் இறைவடிவங்களை பிரதிஷ்டை செய்தார்கள் என்று சித்தர் புராணங்கள் கூறுகின்றன. இயற்கை அழகும் ஏராளமான அற்புதங்களும் நிறைந்து, யுகம் பல கண்ட பெருமைகளுடன் மலைமேல் காட்சிதரும் இத்தகைய ஆலயங்களை தரிசிப்பது கலியுகத்தில் நாம் செய்த பேறு.
அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் பாலமலை அரங்கநாதர் திருக்கோவில்.
புராதன காலத்தில் "பால்மலை' அதாவது க்ஷீ ராசலம் எனப்பட்டது. (க்ஷீ ரம் என்றால் வடமொழியில் "பால்' என்று பொருள்.) நாளடை வில் மருவி பாலமலை என்றாகிவிட்டது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் இங்குள்ள கிராமத் தைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் பசுமாடுகளை மேய்ச்சலுக்காக பாலமலைக்கு ஓட்டிவருவர். அப்போது ஒரு காராம் பசு ஓரிடத்தில் பாலைச் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதையறிந்த மக்கள் திகைத்தனர்.
அவ்வூரில் இறைபக்தி பூண்ட காளிதாசர் என்ற பெரியவர் வசித்துவந்தார். கௌதன்ய மகரிஷி கோத்திரத்தில் பிறந்த அவர், அந்தக் காராம் பசு பால் சொரிந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்து, அந்த இடத்தில் சிறு குடிசை அமைத்து, தினமும் பால்கொண்டு அபிஷேகம் செய்து பூஜித்துவந்தார். அவருக்கு பாலமலையைச் சுற்றியுள்ள இருளர்கள் என்னும் ஆதிவாசிகள் அன்றாடப் பூஜைகளுக்குப் பெரிதும் உதவிவந்தனர். பக்தர்களும் பெருமளவில் வர ஆரம்பித்தனர். அபிஷேகம் நடக்க நடக்க அரங்கனும் பூமியின் அடியிலிருந்து சிறிது சிறிதாக சுயம்புமூர்த்தியாக வெளிவர ஆரம்பித்தான். கண்டவர் மெய்சிலிர்த்தனர். அடியவர் கண்கலங்கினர்.
மனம் நெகிழ்ந்து தரிசனத்திற்கு வந்திருந்த கவுடர் இனப்பெருமக்கள் அரும்பாடுபட்டு திருக்கோவிலை எழுப்பினர். பசு பால் சொரிந்து சுயம்பு மூர்த்தம் வெளிப்பட்ட தலம் என்பதால் இவ்விடம் "பாலமலை' என அழைக்கப்படுகிறது.
""உங்கண கவுடர் கூரைசாலை கட்டிப் பூஜிக்க, அவர் வம்சத்தில் பிறந்த நஞ்சுண்ட கவுடர் அஸ்தகிரி, கோபகிரி, கருட ஸ்தம்பம், உற்சவ விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்திவந்தார். அதன்பின்னர் வனத் துறையைச் சார்ந்த முனியப்ப பிள்ளை கோவில் படிக்கட்டுகளைக் கட்டினார். கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஷோபன மண்டபம் ஆகியவை கட்ட ஆரம்பித்தபோது அதற்குத் தேவையான கல், மணல் கிடைக்க வில்லை. இதுகுறித்து அரங்கனிடமே முறையிட்டனர். இந்நிலையில் ஒருநாள் இரவு கோவிலின் மேற்குப்பகுதியில் பல வெடிச்சத்தம் கேட்க, பயந்துபோனார்கள் கிராம மக்கள், விடிந்தபின் ஓசை கேட்ட இடத்திற்கு விரைந்தார்கள். அங்கே கோவில் மண்டபம் கட்டுவதற்குத் தேவையான அளவில் பாறையிலிருந்து பாளம் பாளமாக வெடித்துச் சிதறியிருந்தன கற்கள். இது பெருமாளே மண்டபம் கட்ட செய்த ஏற்பாடு என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தனர்.
அனைத்துக் கோவில் பணிகளும் முடிந்த நிலையில், அரங்கனின் உற்சவ மூர்த்தம் இல்லையே என்ற மனக்குறை அனைவரையும் வாட்டியது. இந்நிலையில் பாலமலையில் வசித்துவந்த வயோதிகரின் கனவில் தோன்றிய பெருமாள், தனது உற்சவத்திருமேனி திருமலா- திருப்பதியில் இருப்பதாகவும், அதை வைத்திருப்பவருடைய அங்க அடையாளங்களையும் கூறி மறைந்தார். உடனே ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி பேசி, திருப்பதிக்குச் சென்று அரங்கன் சொன்ன அடையாளங்களுடன்கூடிய நபரைக் கண்டு பிடித்தார்கள். பின்னர் உற்சவ மூர்த்தங்களைப் பெற்று பாலமலை அரங்கன் ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.
யுகம் பல கண்ட பெருமைகளைப் பார்ப்போமா...
கிருத யுகத்தில் நடந்த அற்புதம்
கந்தர்வனான விஸ்வாவஸுவின் குமாரன் தூர்தமன். ஒருமுறை இவன் தன் மனைவி யருடன் நதியில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது கயிலையில் பரமேஸ்வரனை தரிசித்துவிட்டு தனது ஆசிரமத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் வசிஷ்டர். மகரிஷியைக் கண்ட தூர்தமனின் மனைவியர் அனைவரும் தத்தமது உடைகளை அணிந்து, மங்களச் சின்னங்களை தரித்துக் கொண்டு அருந்தவசீலரின் ஆசிக்காக அவரது திருப்பாதம் பணிந்தனர். அவர்களை அன்போடு ஆசிர்வதித்தார் மகரிஷி. ஆனால் தூர்தமன் மட்டும் கரையேறாமல், வசிஷ்டரைக் கண்டும் காணாமல் இருந்தான். கோபமான வசிஷ்டர், ""ஒரு குருவை அவமதித்த நீ குரூரகுணம் கொண்ட அரக்கனாவாய்'' என்று சபித்தார்.
அடுத்த கணமே அகோரத் தோற்றத்துடன் அரக்கனாக உருவெடுத்தான் தூர்தமன். இதுகண்டு பதைபதைத்த அவன் மனைவியர் வசிஷ்டரின் பாதங்களில் சரணடைந்து, ""தேவரீர்! எங்கள் கணவர் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும்.
அவர் பழைய நிலையடைய அருள்புரியுங்கள்'' என்று வேண்டினர். வசிஷ்டர் மனமிரங்கி, ""மாதரசிகளே! ஸ்ரீமந் நாராயணனை நித்தமும் பூஜித்துக்கொண்டிருங்கள். விஷ்ணுவின் அருளால் குறிப்பிட்ட காலத்திற்குள் பழைய நிலையை அவன் அடைவான்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
காலங்கள் உருண்டோடின. விஷ்ணு பக்தரான காலவ மகரிஷி, வனத்தில் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் தூர்தமனின் பிரச்சினையைச் சொல்ல, மகரிஷி தியானத்தின்மூலம் திருமாலிடம் சொல்ல, பக்தரின் துயர்துடைக்க சர்வ வல்லமைவாய்ந்த சக்ராயுதத்துடன் கிளம்பினார் ஸ்ரீமந் நாராயணன். சக்கராயுதத்தைப் பிரயோகித்து அரக்கனை அழிக்க, தூர்தமன் சுயரூபம் பெற்றான்.
அங்கே காலவ மகரிஷிக்கும், கந்தர்வனான தூர்தமனுக்கும் நேரடியாகக் காட்சி தந்தார் பரந்தாமன். அவர் திருக்காட்சி தந்த அதே இடத்தில் அரங்கநாதன் என்ற திருநாமத்துடன் இன்றளவும் பாலமலையில் அருட் காட்சி தந்துகொண்டிருக்கிறார். தூர்தமனின்மேல் சக்ராயுதத்தின் ஸ்பரிசம் ஏற்பட்ட இடம் சக்கரத் தீர்த்தம் (பத்ம தீர்த்தம்) என்ற பெயரில் ஆலயத்தின் அருகே இன்றளவும் சிறப்பாக விளங்குகிறது.
திரேதா யுகத்தில் நடந்த அற்புதம்
விஸ்வாமித்ர மகரிஷி மன்னராக இருந்து துறவியானார் என்பது பலருக்கும் தெரியும். அவர் மன்னராக இருந்தபோது வசிஷ்டரின் காமதேனுப் பசுவை அபகரிக்க முயன்று தோற்றார். அவரைப்போல தான் வலிமை பெற எண்ணி, மணி முடி துறந்தார். நாட்டை விடுத்துக் காட்டை அடைந்தார். தவத்தில் மூழ்கினார். ஆயிரம் வருடகாலம் அருந்தவம் புரிந்தார். இவரது தவத்தால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்று அஞ்சிய தேவர்கள் தேவலோக அழகியான ரம்பையை அனுப்பினர். தன்னை சபலப்பட வைப்பதற்காக வந்த ரம்பையைக் கல்லாகும்படி சபித்தார் விஸ்வாமித்திரர்.
கல்லாக மாறிய ரம்பை அகத்திய முனிவரின் சீடரும் மகா தபஸ்வியுமான ஸ்வேத மகரிஷியின் ஆசிரமத்தின் வாயிலில் பல ஆண்டுகள் கிடந்தாள். அப்போது ஒரு தவசீலரின் சாபத்தால் கிருதாசி என்ற தேவகன்னிகை அரக்கியாக மாறி, ஸ்வேத மகரிஷியின் ஆசிரமம் வந்து அட்டகாசம் செய்தாள். அரக்கியை நோக்கி அருகிலிருந்த கல்லை (ரம்பை) எடுத்து மந்திரங்களை உச்சரித்து வீசினார் ஸ்வேத மகரிஷி.
அந்தக் கல் அரக்கியை இழுத்துச்சென்று பத்ம தீர்த்தத்தில் தள்ளியது. தீர்த்தத்தின் ஸ்பரிசத்தால் கல் ரம்பையானது; அரக்கி கிருதாசி ஆனாள். சுயரூபம் பெற்ற இருவரும் பகவானை ஆராதித்து புஷ்பக விமானத்தி லேறி தேவலோகம் சென்றனர். ரம்பைக்கும் கிருதாசிக்கும் சாபவிமோசனம் தந்த இந்த பத்ம தீர்த்தத்தில் கங்கை நித்தியவாசம் செய்கிறாள். இங்கு நீராடியவர்கள் பிரயாகை போன்ற சர்வ தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைவதாக பாலமலைத் தலபுராணம் சொல்கிறது.
துவாபர யுகத்தில் நடந்த அற்புதம்
துவாபர யுகத்தின் முடிவில் வசித்துவந்த மன்னர் நந்தபூபாலர். ஒரு கட்டத்தில் துறவின்மேல் பற்று கொண்டு ஆட்சிப் பொறுப்பைத் தன் குமாரர் தர்மகுப்தரிடம் ஒப்படைத்துவிட்டு கானகம் சென்றுவிட்டார். தர்மநெறிகளைக் கடைப்பிடித்து ஆட்சி செலுத்தி வந்தார் தர்மகுப்தர். ஒரு நம்பிக்கைத் துரோகத்தின் காரணமாக மனநோய்க்கு ஆளானார் தர்மகுப்தர். அமைச்சர் பெருமக்கள் திகைத்தனர்.
கானகத்தில் தவம்புரியும் தந்தை நந்த பூபாலரிடமே அழைத்துச் சென்றனர்.
விஷயமறிந்து கலங்கிய தந்தை தன் மகனை அழைத்துக்கொண்டு ஜைமினி முனிவரிடம் சென்றார். ""சக்கரவர்த்தியே, கவலை வேண்டாம். பிரம்மஹத்தி தோஷத்தைவிட மோசமானது நம்பிக்கைத் துரோகம். ஆனால் இவை எல்லாவற்றையும் போக்கக்கூடிய க்ஷேத்திரம் பாலமலை. அங்கே சென்று பத்ம தீர்த்தத்தில் நீராடி அரங்கநாத சுவாமியை வழிபடு; எல்லாம் நலமாகும்'' என்றார் ஜைமினி முனிவர். அதன்படியே செயல்பட்டு நலமுற்றனர்.
""கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் அல்லாது இதோ இந்தக் கலியுகத்திலும் தன்னை நாடிவந்து துதிக்கும் அன்பர்களது அருள் உள்ளத்திற்கு இரங்கி, அவர்கள் வேண்டும் வரத்தை வாரிவழங்குபவர்தான் இந்த வள்ளல் பிரானான அரங்கநாதப் பெருமாள்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள் பரம்பரை அறங்காவலரான ப. ஜெகதீசன் மற்றும் தலைமை அர்ச்சகரான கிருஷ்ணமூர்த்தி.
திருக்கோவில் அமைப்பு
பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் அழகான மலைமேல் ஆறு ஆதிவாசி கிராமங்களான மாங்குனி, பசுமணி, பசுமணிபுதூர், குஞ்சூர்பதி, பெரும்பதி, பெருக்கப்பதி புதூர் ஆகியவற்றுக்கு நடுவில், கிழக்கு முகமாய் மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாள் ஆலயத்துக் குரிய எல்லா சந்நிதிகளும் சிறப்பாக உள்ளன.
அடிவாரத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் படிக்கட்டுகள் வழியாகவும், எழில் சூழ்ந்த மலைப்பாதையில் யானைகள் நடமாட்டமுள்ள வாகன சாலைகள் வழியாகவும் பாலமலைக்கு வரலாம்.
புராதனக் காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் அத்திரி, கௌதமர், ஜாம்பாலி, பரத்வாஜர், புலஸ்தியர், வாமதேவர், அகஸ்தியர் ஆகிய மகரிஷிகளுக்கு ஸுத மகரிஷி க்ஷீ ராசலம் எனும் பாலமலையின் தெய்வீகப் பெருமையை விளக்கியதாகப் புராணங் கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீமத் ராமானுஜர் திருவரங்கத்தைவிட்டு திருநாராயண புரம் செல்லும்வழியில் உடல் ஆயாசம் தீர தங்கி தரிசனம் செய்த தலம் இது. நான்கரை மணி நேரம் மலைமேல் நடந்து சென்றால் உள்ள ஆலயம் அரங்கன் மேல்முடி (சிரசு) என்றும், காரமடை அரங்கனின் திருவடிகள் என்றும், பாலமலை அரங்கனின் வயிற்றுப்பகுதி என்றும் பெரியோர்கள் போற்றுகின்றனர்.
சித்ரா பௌர்ணமிக்கு தேரோட்டத் துடன் பத்து நாள் திருவிழா நடக்கும். தென்கலை பாஞ்சராத்திர ஆகமவிதிப்படி பூஜைகள் நடக்கின் றன. சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்டு பொலிவுடன் காட்சிதருகிறது. பாலாரிஷ்டதோஷம், பிதுர்தோஷம், பித்ருசாபம், தேவசாபம் ஆகியவற்றைப் போக்கி பன்மடங்கு நற்பலன்களைத் தரவல்லதொரு தலமான பாலமலைக்கு மார்கழி மாதத்தில், வைகுண்ட ஏகாதசி நாளில் சென்று சொர்க்கவாசல்வழியே அரங்கனை மனங் குளிர தரிசிப்போம். மழலைகள்முதல் மகான்கள்வரை மகிழ்ச்சி கண்டு வாழ்வோம்.
காலை 6.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை ஆலயம் திறந்திருக்கும். இடையில் நடைசாற்றுவதில்லை.
ஆலயத்தொடர்புக்கு: ப. ஜெகதீசன், அலைபேசி: 94433 48564, 97865 00166.
அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக் கோவில், பாலமலை, நாயக்கன்பாளையம் (அஞ்சல்), கோயம்புத்தூர்-641 020.
அமைவிடம்: கோயம்புத்தூர்- மேட்டுப் பாளையம் மார்க்கத்தில், பெரியநாயக்கன் பாளையத்துக்கு நேர்மேற்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து கோவனூர் 25 கிலோமீட்டர்; மேட்டுப் பாளையத்திலிருந்து கோவனூர் 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவனூரிலிருந்து பாலமலை ஆறு கிலோமீட்டர். மலைப்பாதையில் தனியார் ஜீப்மூலம் அல்லது நடைப்பயணம்மூலம் செல்லலாம். விழாக் காலங்களில் சிறப்புப் பேருந்து உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா