ஓம் சாயிராம். சீரடியில் சாயி பாபா அநேக அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதேபோல, இன்றும் அவர் கலியுக தெய்வமாக வாழ்ந்துகொண்டு, உலகெங்கும் வியாபித்து, வேண்டியவர் களுக்கு வேண்டிய வரங்களைத் தந்துகொண்டுள் ளார். அன்று அவர் கோதுமையை எடுத்து கல் இயந் திரத்தில் இட்டு அரைத்துக் கொண்டிருந் ததைப் பார்த்து விட்டு, சீரடியில் இருந்த நான்கு பெண்கள் பாபாவைக் கேட்காமலேயே அவரை விலக்கிவிட்டு அரைக்கத் தொடங்கி விட்டனர். பிறகு பாபாவும் அவர்களை ஒன்றும் சொல்லாமல் இருந்தார். அந்த கோதுமையை அரைத்து முடித்து, மாவை மூட்டைகட்டி அவர்கள் பங்கிட்டு எடுத்துச்செல்ல முயன்றபொழுது, பாபா கோபப்பட்டு அவர்களைத் தடுத்து, அந்த ஊர் எல்லைவரை அந்த கோதுமை மாவைத் தூவிவிட்டு வரச்சொல்ல, அதுவே அந்த நகரில் பரவியிருந்த காலரா நோய்க்கு கண்கண்ட மருந்தாகி, அந்த நோய் நீங்கப்பெற்று, மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதை நாம் சாயி சரித்திரத்தில் படித்ததுபோல், உலகெங்கிலும் உள்ள சாயி பக்தர்கள் பாபா வின் உதியினையே சக்திமிகுந்த பிரசாத மாகவும் மருந்தாகவும் வெற்றித் திலகமாக வும் உபயோகித்து பாவித்துவருகிறார் கள்.
நமது அருள்மிகு சாயிபாபாவின் பெருமைமிகு அற்புதங்களை நாம் சொல்லிவருவதும், நமது கூட்டுப் பிரார்த் தனைக்குழுவில் இணையும் சாயி சொந்தங்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே இருப்ப தும், சாயிபாபா விடம் எழுதிவைக்கும் பிரார்த்தனைகளும், தொலைபேசிமூலமாக என்னிடம் வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளும், நேரடியாக நமது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த் தனை, கோபுரத்திற்கே வந்து வேண்டிக் கொள்பவர்களின் பிரார்த்தனைகளையும் நமக்கு அந்தந்த வேளைகளில் தவறாமல் சாய்பாபாவே நிறைவேற்றித் தருகிறார்.
"தாயினும் சாலப்பரிந்து' என்கிற வாக்கியத் தின்படி, தனது பக்தர்களைக் காத்துவருகிறார் பாபா. அதை அவர்களின் அனுபவங்கள் மூலம் நாம் அறிந்துவருகிறோம். இதைப் படிக்கும் பக்தர்களும், இந்த அற்புதங்களை எழுதிவரும் அன்பர்களும் தொடர்ந்து வெற்றிகளைக் கண்டு வாழ அடியேன் வாழ்த்துகிறேன்.
சக்திமிகுந்த சாயிபாபாவின் கூட்டுப் பிரார்த்தனைக் குழுவில் கோரிக்கைகளான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பினாலோ தொலைபேசிமூலமாகத் தெரிவித்தாலோ மதங்கடந்து, இனங்கடந்து எந்த நாட்டி லிருந்தாலும், அவர்களுடைய நியாயமான பிரார்த்தனைகளை சாயிபாபா காது கொட
ஓம் சாயிராம். சீரடியில் சாயி பாபா அநேக அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதேபோல, இன்றும் அவர் கலியுக தெய்வமாக வாழ்ந்துகொண்டு, உலகெங்கும் வியாபித்து, வேண்டியவர் களுக்கு வேண்டிய வரங்களைத் தந்துகொண்டுள் ளார். அன்று அவர் கோதுமையை எடுத்து கல் இயந் திரத்தில் இட்டு அரைத்துக் கொண்டிருந் ததைப் பார்த்து விட்டு, சீரடியில் இருந்த நான்கு பெண்கள் பாபாவைக் கேட்காமலேயே அவரை விலக்கிவிட்டு அரைக்கத் தொடங்கி விட்டனர். பிறகு பாபாவும் அவர்களை ஒன்றும் சொல்லாமல் இருந்தார். அந்த கோதுமையை அரைத்து முடித்து, மாவை மூட்டைகட்டி அவர்கள் பங்கிட்டு எடுத்துச்செல்ல முயன்றபொழுது, பாபா கோபப்பட்டு அவர்களைத் தடுத்து, அந்த ஊர் எல்லைவரை அந்த கோதுமை மாவைத் தூவிவிட்டு வரச்சொல்ல, அதுவே அந்த நகரில் பரவியிருந்த காலரா நோய்க்கு கண்கண்ட மருந்தாகி, அந்த நோய் நீங்கப்பெற்று, மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதை நாம் சாயி சரித்திரத்தில் படித்ததுபோல், உலகெங்கிலும் உள்ள சாயி பக்தர்கள் பாபா வின் உதியினையே சக்திமிகுந்த பிரசாத மாகவும் மருந்தாகவும் வெற்றித் திலகமாக வும் உபயோகித்து பாவித்துவருகிறார் கள்.
நமது அருள்மிகு சாயிபாபாவின் பெருமைமிகு அற்புதங்களை நாம் சொல்லிவருவதும், நமது கூட்டுப் பிரார்த் தனைக்குழுவில் இணையும் சாயி சொந்தங்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே இருப்ப தும், சாயிபாபா விடம் எழுதிவைக்கும் பிரார்த்தனைகளும், தொலைபேசிமூலமாக என்னிடம் வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளும், நேரடியாக நமது வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த் தனை, கோபுரத்திற்கே வந்து வேண்டிக் கொள்பவர்களின் பிரார்த்தனைகளையும் நமக்கு அந்தந்த வேளைகளில் தவறாமல் சாய்பாபாவே நிறைவேற்றித் தருகிறார்.
"தாயினும் சாலப்பரிந்து' என்கிற வாக்கியத் தின்படி, தனது பக்தர்களைக் காத்துவருகிறார் பாபா. அதை அவர்களின் அனுபவங்கள் மூலம் நாம் அறிந்துவருகிறோம். இதைப் படிக்கும் பக்தர்களும், இந்த அற்புதங்களை எழுதிவரும் அன்பர்களும் தொடர்ந்து வெற்றிகளைக் கண்டு வாழ அடியேன் வாழ்த்துகிறேன்.
சக்திமிகுந்த சாயிபாபாவின் கூட்டுப் பிரார்த்தனைக் குழுவில் கோரிக்கைகளான பிரார்த்தனைகளை எழுதி அனுப்பினாலோ தொலைபேசிமூலமாகத் தெரிவித்தாலோ மதங்கடந்து, இனங்கடந்து எந்த நாட்டி லிருந்தாலும், அவர்களுடைய நியாயமான பிரார்த்தனைகளை சாயிபாபா காது கொடுத்துக் கேட்பார். உடனுக்குடன் அவரே பரிசீலித்து அதற்கான தீர்வளித்து நமது துன்பங்களைத் தீர்ப்பார். குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ள, “இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ்’ என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், “வர்ன் பன்க்ஷங் ஈட்ஹய்ய்ங்ப்’-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசியிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை-600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.
பாபாவின் அற்புதங்களை அனுபவித் தவர்கள், அந்த விவரங்களை மேற்கண்ட முகவரி யில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந்தெர்ந்தெடுக்கப் படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.
இனி, நமது சாயி சொந்தங்களின் அற்புத அனுபவங்களைப் பார்ப்பாம்.
மருத்துவ அற்புதம் நிகழ்த்திய பாபா
எனது பெயர் லோகநாதன். வண்டலூரில் ஒரு உணவகம் நடத்தி வருகிறேன். இந்த வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம் ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளாக நான் இங்குவந்து பிரார்த்தனை செய்து வருகிறேன். என்னைப் பற்றி சொல்லவேண்டுமென் றால் நான் ஒரு அதிசயப் பிறவி என்றே சொல்லவேண்டும். நான் ஒரு குடல் நோயாளி. நான் மருத்துவரைப் பார்த்தவுடன் அவர் கூறிய வார்த்தை, “"உங்களது குடல் முழுவதும் பழுதடைந்துவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்கள்தான் உங்களால் உயிர்வாழ முடியும். அதற் குத் தகுந்தாற் போல் நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்' என்றார். அதைக்கேட்டு என் மனைவி, குழந்தைகள் அனைவரும் அழுது விட்டார்கள். உடனே நான் வழித்துணை பாபா கோவிலுக்குச் சென்று கூட்டுப் பிரார்த்தனைக் குழுவில் அமர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டேன். அடுத்த மாதம் முழுவதும் எனக்கு ரத்த வாந்தி தொடர்ந்தது. மறுபடி மருத்துவரிடம் சென்று சோதனை செய்தபொழுது எனக்கு வேதனைதான் அதிகமானது. எனது குடலிலில் நான்கு இடங்களில் பெரிய பெரிய ஓட்டைகள் இருந்தன. அதை சைக்கிள் டயர் பஞ்சர் ஒட்டு வதைப்போல பேட்ச் வைத்து ஒட்டி விடுவதாக மருத்துவர் சொன்னார். நானும் எனது குடும்பத்தினரும் வழித்துணை பாபாவிடம் பாரத்தைப் போட்டுவிட்டு அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். அது நல்லவிதமாக நடந்து, இன்றுவரை ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் இன்று நலமாக உள்ளேன் என்றால் அதற்கு வழிகொடுத்தது நமது வழித்துணை பாபாதான். அதேபோல பாபாவின் அற்புதங்கள் எனது வாழ்வில் ஒன்றிரண்டு அல்ல. எனது மகள் குமுதா பி.சி.ஏ. படித்துக் கொண்டிருந்தபோதே ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. எனது மகனுக்கும் படித்து முடித்ததும் வேலை கிடைத்தது. வண்டலூர் பாபா கோவிலுக்கு ஒருமுறை வந்த வர்கள் மறுபடி மறுபடி வருவார் கள்.
வாழ்வெல்லாம் துணைவருவார் வழித்துணை பாபா
எனது பெயர் மங்கலலஷ்மி. நான் வேளச்சேரியிலிருந்து வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வாரம் தவறாமல் வியாழக்கிழமைகளில் பாபாவை தரிசனம் செய்யவருகிறேன். அங்கு நான் அழுது கொண்டு சென்றேன் என்றால், திரும்பி வரும்பொழுது என்னை பாபா சிரிக்கவைத்து அனுப்புவார். அதேபோல அங்கு பாபாவுக்கு சேவைகள் செய்துவரும் சாய் உபாசகர் சாய்ராம்ஜி, வருகிற பக்தர்களுக்கு என்ன பிரார்த்தனை தேவையிருக்கிறதோ, அவற்றை யெல்லாம் பாபாவிடம் படித்துப் பிரார்த்தனை செய்வார். அவற்றை பாபா நிறைவேற்றித் தருகிறார் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை. பாபாவின் உத்தரவுகள் மற்றும் திருவாக்குகளை பக்தர்கள் சாயி சித்தரின்மூலமாகவே கேட்டுக்கொள்கிறோம். ஒரு நாளைக்கு அவருடைய கைபேசியின்மூலமாகவே நூற்றுக்கணக்கான பிரார்த்தனைகளும் வருகின்றன. இந்த பிரார்த்தனை கோபுரத்தில் எழுதிப்போடும் பிரார்த்தனைகளும் மலைபோல குவிந்திருக்கின்றன. அதற்கு ஒரு உதாரணமாக, எனது நண்பர் தைலாவரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜனுக்கு விபத்தில் பலத்த அடிபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபொழுது, இந்த கூட்டுப் பிரார்த்தனைக் குழுவில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டேன்.
அப்போது சாயி சித்தர், "சுந்தர்ராஜன் வரும் 8-ஆம் தேதிக்குள் உயிர்பிழைத்து நலமாக வீடு சேர்வார்' என்று வாக்கு சொன்னார்! அதுபோலவே அவரும் நலம்பெற்று வீடு சேர்ந்தார். எனக்கு வேலை வேண்டியும் பிரார்த்தனை செய்தேன். அதற்கும் சாயி சித்தரின் வாக்கு 8-ஆம் தேதி கிடைக்கும் என்று வந்தது. அதே போல எனக்கு அடுத்த எட்டாம் தேதியே வேலை யும் கிடைத்து விட்டது. அதை விட ஒரு ஆனந்த மான செய்தி எனக் குக் கிடைத்தது. அதே 8-8-2019-ஆம் தேதி தான் நமது சாயி சித்தர் ஐயாவிற்குப் பிறந்த நாள் என்பதுதான். அன்றைய தினம் நமது கூட்டுப் பிரார்த்தனைக் குழுவினர் அனைவருடன் வந்திருந்த சிறப்பு விருந்தினரான, தலைசிறந்த மனிதர் என்கிற பட்டம் பெற்ற சமூக சேவகர் அன்பு பாலம் கலிலியாண சுந்தரம் ஐயா, டிஎஸ்ஆர் சுபாஷ் (தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்), உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குடவாசல் முனைவர் சிவசங்கரன், சிவத்திரு பாம்பன் கலைச்செல்வன் ஆகியோர் இணைந்து சாயி சித்தரை வாழ்த்தி எங்களுடன் கூட்டுப் பிரார்த்தனை செய்தது, பக்தர்கள் அனைவரது உள்ளங்களிலும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பிரார்த்தனை கோபுரத்தை புனிதமான கோபுரமாக மிளிரச் செய்துவர வேண்டுமென்பது எங்களைப் போன்ற சாயி பக்தர்களின் பிரார்த்தனையாகும். பாபா தரிசனம் பாபவிமோசனம். வியாழ தரிசனம் விடியல் நிதர்சனம். வண்டலூர் வாருங்கள்- வலிலியெல்லாம் மறப்பீர்கள்.
பாபாவின் பக்திக்கு கிடைத்த பரிசு என் பெயர் கே. மோகனரங்கம். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் ரயில்வேயில் 31 வருடங்களாகப் பணிசெய்து வந்தேன். என் மகள் எம். அபிநயா, மகன் எம். வெங்கட்ராமன் இருவரும் படித்து வேலைக்கு முயற்சிசெய்து வருகின்றனர். என் மகள் அபிநயா திருமணத்திற்காக வரன் பார்த்துக்கொண்டிருந்தோம். பாபாவின் அருளால் நல்ல வரன் கிடைத்தது. திருமணமும் மனமகிழ்ச்சியுடன் நடந்தது. விருப்ப ஓய்வுக்கு மனு கொடுத்து, அதில்வரும் தொகையைப் பெற்று, திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மத்திய அரசு வங்கியின் தலைமையிடம் கர்நாடக மாநிலம், மணிபால் உடுப்பியில் இருக்கிறது. அங்கிருந்து வரவேண்டிய ஓய்வுப்பணம் சற்று காலதாமதமாகிக் கொண்டிருந்தது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந் தேன். அப்போது தான் நண்பர்மூலம் வண்டலூர் வழித் துணை பாபாவின் பிரார்த்தனை கோபுரம் பற்றி அறிந்தேன். அங்கு சென்று கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டு கோரிக்கை வைத் தேன். பாபாவின் அருளைப்பெற்ற சாய்ராம்ஜி சொன்ன வாக்கு பலித்தது. எங்கள் பிரார்த்தனையும் பலித்தது.
அவர்கள் சொன்னபடியே ஏழு நாட்களுக்குள் வரவேண்டிய ஓய்வுப்பணம் கிடைத்தது. திருமணத்திற்கு வாங்கிய கடன்களும் முழுமையாக அடைக்கப்பட்டன. பாபாவின் அருளால் நானும் என் குடும்பத்தாரும் மனமகிழ்ச்சியுடன் உள்ளோம். பாபாவை நம்பியவர் துன்பங்களிலிருந்து விடுபடுவார் என்பது என் வாழ்வில் உண்மையானது.
மறந்த காணிக்கையை மன்னித்து வாங்கிய பாபா!
எனது பெயர் பிரேமலதா. நான் மதுரையிலிருந்து சென்னைக்கு என் மகனைப் பார்க்க அவன் படிக்கிற கல்லூரிக்குச் சென்றிருந்தேன். வழியில் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு பாபாவை வழிபட சென்றேன். அப்போதைய எனது பிரச்சினை என்னவென்றால், எனது மகன் அந்த கல்லூரியில் படிப்பதற்குப் பிடிக்கவில்லை; வேறு கல்லூரிக்குச் சென்றுதான் படிக்கவேண்டுமென்று அடம்பிடித்து வந்தான். அப்படிச் செய்தால் மிகுந்த பொருட்செலவும், கூடுதல் சிரமமும், நேரவிரயங்கள் ஆகும் என்பதாலும் அதை நான் விரும்பவில்லை. இந்த பிரச்சினை யினால் என் மகனுக்கு படிப்பில் ஒரு வருடம் வீணாகிவிடும் நிலையும் இருந்தது. எனவே நான் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டு எனது கோரிக்கையை சாய்பாபாவிடம் சமர்ப்பித்துவிட்டு, சாய்ராம்ஜி அப்பா விடமும் கேட்டுக்கொண்டேன்.
அப்பொழுது அவர், "நீ தைரியமாக கல்லூரிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் பேசு. சாய்பாபா கூடவே வருவார்' என்று சொன்னார். பிறகு நான் என் மகனுடன் கல்லூரிக்குச் சென்று பிரின்ஸிபாலை சந்தித்தபொழுது, அவர் பாபாவின் ரூபத்திலேயே எங்களுக்குத் தெரிந்தார். அவரே எனது மகனுக்குப் பக்குவமாக அறிவுரைகளை எடுத்துச்சொல்லி எனது மகனின் மனதை மாற்றினார். எனது மகனும் அதை ஏற்றுக்கொண்டு, அதே கல்லூரியில் படிக்க ஒப்புக்கொண்டான். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியைத் தந்த அவருக்கு காணிக்கை செலுத்த நினைத்திருந்தேன். ஆனால் கோவிலில் இருக்கும்பொழுது அதை மறந்துவிட்டேன். வரும் வழியில் மிகவும் வருத்தப்பட்டேன். பிறகு அன்றிரவு கனவில் பாபா வந்து, "நான் உனது கோரிக்கையை நிறைவேற்றிவிட்டேன். நீயோ எனக்குத் தருவதாக நினைத்த காணிக்கையை தராமலேயே போய்விட்டாய்' என்றார். அதன் பிறகு நான் எனது தவறை உணர்ந்து, என்ன செய்வதென்று சாயி சித்தரிடம் தொலைபேசியில் கேட்டேன்.
அவரோ, "எல்லாம் பாபாதான்; எங்கிருந் தாலும் பாபாதான். உங்களது வீட்டின் அருகிலுள்ள பாபா கோவிலில் காணிக்கையை செலுத்துங்கள்' என்று அறிவுரை சொன்னார். அதன்படியே செலுத்திவிட்டேன். பிறகு மீண்டும் 12-8-2019 அன்று வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து வழிபட்டு, எனக்கு வரவேண்டிய சொத்து நீதிமன்றத்தில் நல்லமுறையில் தீர்ப்பாகி வரவேண்டும் என்று பிரார்த்தனைச் சீட்டு எழுதினேன். அதுபோலவே வந்துசேரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.
(தொடரும்)