பாபாவின் அற்புதங்கள்! - சாய்ராம்ஜி

/idhalgal/om/babas-miracles-sairamgi

பாண்டம் பலவாயினும் மண் ஒன்றே! பாடல் பலவாயினும் பண் ஒன்றே! பிரார்த்தனைகள் எழுதும் விலாசங்கள் பலகோடி இருந்தாலும் சேருமிடம் கடவுள் இருக்கும் ஒரே விலாசம்தான்.

இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் நம் ஷீரடி சாய்பாபாவினுடைய புகழ் மேலோங்கி நிற்கிறது. அவருடைய சத்சரித்திரத்தை எழுதுபவர்கள், படிப்பவர் கள், அவரைத் தொழுபவர்கள் அனைவரும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்தோ, அவருக்குப் பணிவிடைகள் செய்தோ, அவருடைய ஸ்பரிசம் பட்ட கல்லாகவோ, மண்ணாகவோ, அவருக்கு நிழல் தந்த மரமாகவோ, அவர் வளர்த்த செடியாகவோ, அவர் சுவாசித்த மூச்சுக் காற்றாகவோ, அவர் உண்ட உணவாகவோ இருந்திருந்தால் மட்டும்தான், அந்த புனித மகான் சாய்பாபாவுடன் தொடர்புகொண்டு இருந்திருப்பார்கள். இன்று எத்தனையோ மதங்கள் இருந்தாலும், அந்த மதங்களைக் கடந்த மகானாக- மனிதர்கள் தொழுகின்ற சத்குருவாக உலகெங்கிலும் சாய்பாபாவை மக்கள் வணங்குகிறார்கள்.

இன்றைக்கு எல்லா நாட்டிலும், எல்லா மாநிலங்களிலும் அவருக்கான குரு பீடங்கள் அமைக்கப்பெற்று, மக்களால் வணங்கப் பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட நூறு ஆண்டு களுக்கு முன்பாக வாழ்ந்த இந்த மகான், சிறுவயதிலேயே ஆன்மிகத்துறையில் நாட்டம்கொண்டு அற்புதங்கள் பல செய்தவர். அவர் பார்த்த பார்வையிலேயே பாதகங்கள் பறந்தோடும். அவர் பேசுகின்ற பேச்சிலேயே பேய் பிசாசுகள் ஒடுங்கிவிடும். அவர் தொட்டவுடனேயே தோஷங்கள் நீங்கி விடும். அவரைத் தாங்கிப்பிடித்த நிலமெல் லாம் இன்று தங்கமாக ஜொலிக்கிறது. அவரைத் தாங்கிப் பிடிக்கின்ற மனதைக் கொண்ட பக்தர்கள் எல்லாம்கூட தங்கமாக ஜொலிக்கிறார்கள். யாரெல்லாம் பொறுமை யையும் நம்பிக்கையையும் கடைப்பிடிக்

பாண்டம் பலவாயினும் மண் ஒன்றே! பாடல் பலவாயினும் பண் ஒன்றே! பிரார்த்தனைகள் எழுதும் விலாசங்கள் பலகோடி இருந்தாலும் சேருமிடம் கடவுள் இருக்கும் ஒரே விலாசம்தான்.

இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் நம் ஷீரடி சாய்பாபாவினுடைய புகழ் மேலோங்கி நிற்கிறது. அவருடைய சத்சரித்திரத்தை எழுதுபவர்கள், படிப்பவர் கள், அவரைத் தொழுபவர்கள் அனைவரும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்தோ, அவருக்குப் பணிவிடைகள் செய்தோ, அவருடைய ஸ்பரிசம் பட்ட கல்லாகவோ, மண்ணாகவோ, அவருக்கு நிழல் தந்த மரமாகவோ, அவர் வளர்த்த செடியாகவோ, அவர் சுவாசித்த மூச்சுக் காற்றாகவோ, அவர் உண்ட உணவாகவோ இருந்திருந்தால் மட்டும்தான், அந்த புனித மகான் சாய்பாபாவுடன் தொடர்புகொண்டு இருந்திருப்பார்கள். இன்று எத்தனையோ மதங்கள் இருந்தாலும், அந்த மதங்களைக் கடந்த மகானாக- மனிதர்கள் தொழுகின்ற சத்குருவாக உலகெங்கிலும் சாய்பாபாவை மக்கள் வணங்குகிறார்கள்.

இன்றைக்கு எல்லா நாட்டிலும், எல்லா மாநிலங்களிலும் அவருக்கான குரு பீடங்கள் அமைக்கப்பெற்று, மக்களால் வணங்கப் பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட நூறு ஆண்டு களுக்கு முன்பாக வாழ்ந்த இந்த மகான், சிறுவயதிலேயே ஆன்மிகத்துறையில் நாட்டம்கொண்டு அற்புதங்கள் பல செய்தவர். அவர் பார்த்த பார்வையிலேயே பாதகங்கள் பறந்தோடும். அவர் பேசுகின்ற பேச்சிலேயே பேய் பிசாசுகள் ஒடுங்கிவிடும். அவர் தொட்டவுடனேயே தோஷங்கள் நீங்கி விடும். அவரைத் தாங்கிப்பிடித்த நிலமெல் லாம் இன்று தங்கமாக ஜொலிக்கிறது. அவரைத் தாங்கிப் பிடிக்கின்ற மனதைக் கொண்ட பக்தர்கள் எல்லாம்கூட தங்கமாக ஜொலிக்கிறார்கள். யாரெல்லாம் பொறுமை யையும் நம்பிக்கையையும் கடைப்பிடிக்கிறார் களோ, அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கை யைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

baba

இந்த பொறுமை, நம்பிக்கை என்னும் இரண்டு சொற்களும் நமது வாழ்க்கையில் இரண்டு கால்கள், இரண்டு கைகள், இரண்டு கண்களைப் போன்றவை. ஏனென்றால் இவையிரண்டும் சாதாரண மான சொற்களல்ல. நம் வாழ்க்கையின் உயிர்மூச்சாகும். வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பைபிள், குரான், பகவத்கீதை ஆகியவையெல்லாம் கற்றுத்தேர்ந்து பெற்றுவருகிற அறிவையெல்லாம் மிகப்பெரிய பாத்திரத்திலிட்டுக் காய்ச்சி, வடிகட்டி, சுண்ட சூடாக்கி, பஸ்மங்களாக்கி, நமது வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கை, பொறுமை என்னும் இரண்டு மாத்திரைகளாக நமக்கு பாபா தந்தார். அதனால்தான் அவரை மேலான ஒரு சத்குருவாக- சாட்சாத் கடவுளாக சர்வமத மக்களும் விரும்பித் தொழுகிறார்கள்.

குழந்தைகள்கூட பாபா என்று குதூகலித்துச் சொல்கின்றன. அந்த குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற பாபா கோவிலுக்கு இளம் பெற்றோர்கள் செல்கிறார்கள். அங்கு அவர்கள் கேட்ட வரத்தை பாபா அவர்களுக்கு அள்ளித் தருகிறார். முதியோர்களோ, தங்கள் வாழ்நாள் முழுவதும் பல வழிபாடுகள் மேற்கொண்டும் கிடைக்காத வரத்தைப் பெறுவதாக நம்புகிறார்கள். இளைஞர்கள், இளம் பெண்களும்கூட நேர்முகத் தேர்வுக்கு, வெளிநாடு செல்ல, விசாவுக் காக, வேலை தேடும்பொழுது, திருமணத்திற்காக, தாம் விரும்பிய வாழ்க்கையைப் பெற இவரையே கண்கண்ட தெய்வமாக வணங்குகிறார் கள். நாம் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும், எந்த தெய்வத்தை வணங்கியிருந்தாலும், சாய்பாபாவை வணங்கியவுடன் அனைத்து மதங்களும் தெய்வங்களும் அவருக்குள் ஒடுங்கி "மரத்தில் மறைந்தது மாமத யானை' என்று திருமூலர் சொன்னதற்கேற்ப சிவபெருமான், மகாவிஷ்ணு, அல்லா, ஏசு என எல்லாரும் அவராகவே காட்சி தருகிறார் கள். அவரை வணங்கியவுடன் பக்தர்களை அவர் தமதாக்கிக்கொண்டு, அவராகவே அவர்களை மாற்றிக்கொள்கிறார்.

இன்று நம்முடைய வீட்டிலும், நாம் செல்லும் சாலையிலும், பயணம் செய்யும் வாகனத்திலும் சாய்பாபா தவிர்க்கவே முடியாத தனிப்பெரும் கடவுளாக தனித்து நிற்கிறார். உலகெங்கிலும் இருக்கும் பக்தர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அவர் களுடைய பிரார்த்தனைகளைப் பரிசீலித்துத் தீர்த்து வைக்கிறார். இவர் செய்த அற்புதங்கள் ஏராளம்.

அன்று கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கு முன்பாக சீரடியில் மக்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்டு அநேகர் உயிரிழந்தபொழுது, தனது இயந்திரத்தின்மூலம் கோதுமை மாவை அரைத்து, அந்த மாவையே நகரெங்கிலும் தூவச்செய்து, அதன்மூலம் காலரா நோயினை குணப்படுத்திய குருவாக விளங்கினார். சாந்தப் பட்டேன் என்கின்ற செல்வந்தர் தனக்குப் பிடித்தமான குதிரை காணாமல்போய் நாட் கணக்கில் தேடிவருங்கால், ஒரு நிமிடத்தில் அந்த குதிரையின் இருப்பிடத்தைச் சொல்லி பக்தரின் துயர் தீர்த்தார். நீரும் நெருப்பும் இல்லாத நேரத்தில், தான் கையில் வைத்திருந்த சட்கா எனும் இரும்புத் தகட்டி னால் தரையில் அடித்து, அதன்மூலம் நீரையும் நெருப்பையும் வரச்செய்தவர்.

அந்த நெருப்பையே "தூனி' என்னும் அக்னி குண்டமாக்கி, அதில் விறகுக்கட்டைகளை எரித்து அதில் வரும் சாம்பலை "உதி' என்கிற பிரசாதமாக- நோயுற்ற மக்களுக்கு மருந்தாக அளித்து குணமடையைச் செய்து வந்தார்.

தான் பிச்சை எடுத்து உண்டு, அதையே தனது பக்தர்களுக்கும் அளித்துவந்தார். உணவைத் தனது கைகளாலேயே ஏழைகளுக்கு வழங்கி வந்தார். "அல்லா மாலிக்' என்றும், "இறைவன் ஒருவனே' என்றும் அடிக்கடி முழக்கமிட்டு வந்தார். இவரை ஏழைகள் மட்டுமல்ல; இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பல பிரபுக்களும் தரிசித்து தீர்வுகண்டு வந்தனர்.

சீரடியில் துவாரகா மாயி என்கிற மசூதியி லும், அதனருகிலுள்ள சாவடி என்கிற சிறிய கட்டடத்திலும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறித் தங்கிவந்தார். சீரடியில் இராமபிரானின் ராமநவமி, இஸ்லாமியப் பண்டிகையான சந்தனக்கூடு உருஸ் ஆகிய இரண்டு பண்டிகைகளையும் ஒரே நாளில் நடத்தி இந்து- இஸ்ஸாமிய ஒற்றுமையை உருவாக்கினார். இவரை நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் வாழுகின்ற மகானாக, சத்குருவாக, கடவுளாக மக்கள் மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள். இவர் தான் சமாதியடையும் முன்பாக தனது பக்தர்களுக்குச் சொன்ன 11 உறுதிமொழிகள் உலகப்புகழ் பெற்றவை. அதில் ஒரு உறுதிமொழி "இந்த உடலைவிட்டு எனது உயிர் நீங்கியபிறகும் எனது பக்தனுக்காக, அவன் எங்கிருந்தாலும் அவனது துயரைத் துடைக்க அங்கு செல்வேன்' என்பதாகும்.

அதற்கு உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த டாக்டர் வெங்கட்ராம் என்பவருக்கு நிகழ்ந்த உண்மை அனுபவத்தை இங்கு காணலாம்.

குடியிலிருந்து மீட்டெடுத்த பாபா

""நான் பத்து வருடங்களுக்குமுன் என் வாழ்க்கையில் பெரிய தோல்வியை அடைந் தேன். அதனால் மிகவும் மனவருத்தத்துடன் அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தேன். நான் தோல்வியிலிருந்து விடுபட பல கோவில் களுக்குச் சென்றேன். ஆனால் அமைதி கிடைக்கவில்லை. நண்பர் ஒருவர் கூறியதால், ஒரு வியாழக்கிழமை மயிலாப்பூர் சாயி கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தேன். சாயி யார்? அவர் எப்படி என்னைக் காப்பாற்றுவார் என்று எனக் குள் கேட்டுக்கொண்டு, நன்றாகக் குடித்துவிட்டு கோவிலுக்குச் சென்றேன். நான் பாபாவை தரிசித்து விட்டு பிரசாதம் சாப்பிட் டேன். அதுவும் ஒரு முறையல்ல; ஐந்துமுறை. பிரசாதம் கொடுத்தவர்கள் என்னை அதிசயமாகப் பார்த்தார்கள். பிறகு, நான் திரும்பி வந்து தனியாக என்னுடைய ஆபீஸ் அறையில் படுத்துவிட்டேன்.

இரவு யாரோ ஒருவர் என்னுடைய இதயத்தைத் தொடுவதுபோல் உணர்ந்தேன். விழித்துப் பார்த்தேன். அப்போது என் அருகில் ஒரு கரிய முதியவர் கையில் கம்புடன் இருந்தார். பிறகு வேகமாக நடந்து சென்றுவிட்டார். எனக்கு மயக்கம் தெளிந்தது. அப் பொழுதுதான் உணர்ந்தேன்- என் அறையை உள்பக்கமாக நான் பூட்டியிருந்தேன். யாரும் வரமுடியாது. இவர் எப்படி வந்தார்? நான் பயந்துவிட்டேன். தூக்கம் வரவில்லை.

காலையில் பாபாவின் உருவம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. மறுபடியும் மயிலாப்பூர் சாயி கோவிலுக்குச் சென்றேன். மனது அமைதியானது. அப்போது நான் பாபா பற்றித் தெரிந்துகொள்ள ஒரு புத்தகம் வாங்கினேன்.

அதில் விசேஷம் என்னவென்றால், நான் படித்த முதல் பகுதியில், குடிப்பவரை பாபா நேரில்வந்து இதயத் தைத் தொட்டு அந்த பழக்கத்திலிருந்து விடுவிப்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. பாபாவே எனக்காக இரவு வந்து என்னை விடுவித்தார். நான் தேடிய கடவுள் இவர்தான் என முடிவுசெய்து, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரைத் தேடினேன். அவர் சரித்திரத்தை படித்தும், ஷீரடி சென்றும் அவரைக் கண்டு கொண்டேன்.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடி யிலும் அவர் என் தாயாக, தந்தையாக, குருவாகக் காப்பாற்றுகி றார். பாபாவை ஷீரடி சென்றுதான் காண வேண்டிய அவசியம் இல்லை. நாம் அவரை நம்பினால் போதும், நம் முன்னே வருவார். இது சத்தியம்.''

(அற்புதங்கள் தொடரும்)

om010619
இதையும் படியுங்கள்
Subscribe