பாபாவின் அற்புதங்கள்! (13) - சாய்ராம்ஜி

/idhalgal/om/babas-miracles-13-sairamji

ம் சாயி சொந்தங்களில் சில சொந்தங்கள் "கொரோனா' என்னும் கொடிய நோய் வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள். பொதுவாகவே, நமது சாயி பக்தர்கள் நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்று, மற்றவர்களுக்கும் நம்பிக்கை யூட்டும் நற்செயலை செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் மட்டும் நம்பிக்கையிழந்து, சளி பிடித்தாலே, ஜுரம் வந்தாலே, உடம்பு வலித்தாலே நமக்கு அந்த நோய்தான் வந்து விட்ட தென பயந்து நடுங்குகிறார்கள். இன்றைக்கு அனைவருக்கும் பரிசோதனை செய்தால், சமூகத்தில் முக்கால்வாசி பேர்களுக்கு அந்த நோய் இருப்பதற்கான வாய்ப்புண்டு. ஆனால், இது அஞ்சி நடுங்கவேண்டிய நோயல்ல. இது நாம் தனிமையில் இருந்து வந்தால் சரியாகிவிடும். தைரியமில்லாத அன்பர் களுக்காக நமது சாயிநாதர் மந்திரத்தை, இந்த நோய் பயம் அகல, நோயிலிருந்து மீள அடியேன் உங்களுக்குத் தருகிறேன். அதை தினமும் 18 முறை சாயிபாபாவிடம் சொல்லி பூஜை செய்துவந்தால், நோய் பயம் நீங்கும். உலகையே அச்சுறுத்தும் இந்த நோயை நாம் அச்சுறுத்தி ஓடச்செய்யலாம். இதற்கான சிறப்பு மந்திரம் இது...

"ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய ஸர்வரோக நிவாரணாய

ஆரோக்ய க்ஷேமதாய மம தத்கால லோப்ரசித்தி

சீக்கிரம் நிவாரய நிவாரய ஹும்பட் ஸ்வாஹா.'

ஏற்கெனவே சிங்கப்பூர் சாயிபக்தர்கள் ஐம்பது பேர்கொண்ட குழுவினர் இம்மந்திரத்தைச் சொல்லி இந்த நோயிலிருந்து விடுபட்டு, நமக்கும் பாபாவுக்கும் நன்றி தெரிவித்து, பாபா கோவிலில் அன்னதானம் செய்து மகிழ்ந்தார்கள். இதுபோலவே அடியேன் Sai Ba

ம் சாயி சொந்தங்களில் சில சொந்தங்கள் "கொரோனா' என்னும் கொடிய நோய் வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள். பொதுவாகவே, நமது சாயி பக்தர்கள் நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்று, மற்றவர்களுக்கும் நம்பிக்கை யூட்டும் நற்செயலை செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் மட்டும் நம்பிக்கையிழந்து, சளி பிடித்தாலே, ஜுரம் வந்தாலே, உடம்பு வலித்தாலே நமக்கு அந்த நோய்தான் வந்து விட்ட தென பயந்து நடுங்குகிறார்கள். இன்றைக்கு அனைவருக்கும் பரிசோதனை செய்தால், சமூகத்தில் முக்கால்வாசி பேர்களுக்கு அந்த நோய் இருப்பதற்கான வாய்ப்புண்டு. ஆனால், இது அஞ்சி நடுங்கவேண்டிய நோயல்ல. இது நாம் தனிமையில் இருந்து வந்தால் சரியாகிவிடும். தைரியமில்லாத அன்பர் களுக்காக நமது சாயிநாதர் மந்திரத்தை, இந்த நோய் பயம் அகல, நோயிலிருந்து மீள அடியேன் உங்களுக்குத் தருகிறேன். அதை தினமும் 18 முறை சாயிபாபாவிடம் சொல்லி பூஜை செய்துவந்தால், நோய் பயம் நீங்கும். உலகையே அச்சுறுத்தும் இந்த நோயை நாம் அச்சுறுத்தி ஓடச்செய்யலாம். இதற்கான சிறப்பு மந்திரம் இது...

"ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய ஸர்வரோக நிவாரணாய

ஆரோக்ய க்ஷேமதாய மம தத்கால லோப்ரசித்தி

சீக்கிரம் நிவாரய நிவாரய ஹும்பட் ஸ்வாஹா.'

ஏற்கெனவே சிங்கப்பூர் சாயிபக்தர்கள் ஐம்பது பேர்கொண்ட குழுவினர் இம்மந்திரத்தைச் சொல்லி இந்த நோயிலிருந்து விடுபட்டு, நமக்கும் பாபாவுக்கும் நன்றி தெரிவித்து, பாபா கோவிலில் அன்னதானம் செய்து மகிழ்ந்தார்கள். இதுபோலவே அடியேன் Sai Baba Prayer என்னும் Prayer You Tube Channel-லில் இந்த மந்திரத்தின் மகிமையைச் சொல்லி, அதன்பயனாக நமதுநாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மிக்க பயனடைந்து வருகிறார்கள். இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கிறார்களோ இல்லையோ, மந்திரம் நம்மிடம் இருக்கிறது. நமது மருத்துவர் சாயிபாபா எல்லா நோய்க்கும் மருந்து வைத்துள்ளார். அவர் நம்மைக் காத்து ரட்சித்து அனைவருக்கும் ஆரோக்கியம் தருவார். நம்பித் தொழுவோம்; நலமுடன் வாழ்வோம்.

saibaba

இனி, பக்தர்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்களைக் காண்போம்.

நம்பிக்கையை நிறைவேற்றுவார் சாய்பாபா!

என் பெயர் செல்வராணி. ஊர் கோவை. நான் சென்னை, வண்டலூர் வழித்துணை பாபா கோவிலுக்கு 2018-லிருந்து வந்துகொண்டிருக்கிறேன்.

அப்பொழுது சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். நினைத்தபொழுதெல்லாம் கோவிலுக்கு வருவேன். கூட்டுப் பிரார்த்தனைக்கு எழுதிப் போடுவேன். என்னுடைய கனவு, நான் சிங்கப்பூர் சென்று வேலைசெய்ய வேண்டும் என்பது.

ஒருமுறை சிங்கப்பூர் சென்றுவர "சோஷியல் விசிட்'டில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வேலை கிடைக்கவில்லையென்றாலும் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி சென்று செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி திரும்பிவந்தேன். அது என் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. இப்பொழுது மீண்டும் சென்னைக்கு வேலைதேடி வந்துள்ளேன். நல்ல வேலையாக பாபா எனக்கு அமைத்துத் தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது. நல்ல வேலை, வீடு, மகனுடைய படிப்பு என அனைத்தையும் பாபா எனக்கு அமைத்துத் தருவார்.

மாறுதல் தந்தார்!

என் பெயர் ஆர். சண்முகம். சென்னை, பொழிச்சலூரில் வசித்து வருகிறேன். வண்டலூர் வழித்துணை பாபாவின் அற்புதம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

எனது மருமகள் மறைமலைநகர் அஞ்சல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார்.

அவருக்கு "டெபுடேˆன்' (Deputation) என்ற முறையில், அந்த நகரைச் சுற்றி யுள்ள பல அஞ்ச லகங்களுக்குப் பணிக்கு அனுப்பு வது வழக்கம். இது மிகவும் சிரமமாக இருந்தது. எனது மகன் சென்னை, பாரிமுனையிலுள்ள ஒரு நிறுவனத் தில் பணிபுரிகிறார். அங்குள்ள அலு வலகத்தில் பணி கிடைத்தால் எனது மருமகளுக்கு சௌகரியமாக இருக்கும் என்பதால் இடமாறுதலுக்கு மனு கொடுத்தார். மூன்றாண்டுகள் எவ்வளவோ முயன்றும் மாறுதல் கிட்டவில்லை.

எனவே, நான் வண்டலூர் வழித் துணை பாபாவிடம் வேண்டி, அங்கு சாய்ராம்ஜி கூட்டுப் பிரார்த்தனையில் மேற்படி வேண்டுதலை வைத்தேன். பிரார்த்தனையில் கலந்துகொண்டேன். பாபாவின் கருணையால், மனு அதிகாரியின் பார்வைக்குச் சென்றது. ஆனாலும் அந்த அதிகாரி, "உடனே ஆவன செய்ய இயலாது. எங்களி டம் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. எனவே அனுப்பினாலும் அனுப்புவோம். இல்லையென்றால் இங்கேயே தொடரவேண்டி இருக்கலாம்' என்று கூறிவிட்டார்.

இருப்பினும் பாபா சொன்ன நம்பிக்கை, பொறுமை இரண்டையும் மனதிற்கொண்டு, இங்கு கூட்டுப் பிரார்த்தனையில் எனது வேண்டுதலை வைத்தேன். வெற்றி கிடைத்தது. எனது மருமகள் பதவி உயர்வுடன், விரும்பிய இடமாறுதலும் கிடைத்து, தற்போது மகிழ்ச்சியாகப் பணிபுரிகிறார்.

பார்க்கப் பார்க்கப் பரவசம்!

என் பெயர் சாய் திலகா. நான் ஒரு அழகுக் கலை நிபுணர். வண்டலூர் வழித் துணை பாபா ஒரு கண்கண்ட தெய்வமாக அருள்புரிகிறார் என்றால் அது மிகையல்ல. நம் எல்லாருக்கும் வாழ்க் கையை செம்மைப்படுத்த ஒரு நெறி தேவைப்படுகிறதல்லவா? நாம் ஆன்மிகத் தில், பக்தி நெறியில் இருந்தால் பாபாவின் அருட்கடாட்சம் கண்டிப் பாகக் கிடைக்கும் எண்ணற்ற துன்பங்கள், துயரங்கள் எல்லா வற்றையும் தாங்கிக்கொள்ளும் சக்தி, மன அமைதி, பொறுமை, சாந்தி ஆகிய வற்றை நல்கி, "உனக்கு நான் இருக்கிறேன்' என கூறுவதுபோல் அவர் கண்கள் இருக்கும்.

அவரது கருணை முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாமெனத் தோன்றும்.

நான் இங்கு கடந்த ஆறு வருடத்திற்கு மேலாக பாபாவிற்கு சேவை செய்கிறேன். பாபாவின் அருகிலேயே இருக்க மனம் விரும்பும். ஒருமுறை பாபாவை தரிசித்து விட்டால் அவரைப் பிரிய யாருக்குமே மனம் வராது. ஒன்று மட்டும் உறுதியாகக் கூறமுடியும். பாபாவை வணங்கினால் எல்லா பிரச்சினைகளும் தூள்தூளாகும். எங்கள் அழகு பாபாவைக் காண எப்போது வருகிறீர்கள்?

திருமணக் கடனை அடைத்த பாபா!

என் பெயர் பி. பெருமாள். நான் சென்னை, கே.கே. நகரில் வசிக்கிறேன். எனது தங்கையின் திருமணத்திற்கு மூன்றரை லட்சம் கடன் வாங்கினேன். கடன் வாங்கி இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. என்னால் பணத்தைத் திரும்பக் கொடுக்கமுடியாததால், கடன் கொடுத்தவர்கள் என் மனம் நோகும்படி பேசிவிட்டனர். நான் மனமுடைந்து பாபா விடம் வேண்டிக்கொண்டேன். ஒரு வியாழனன்று வண்டலூர் வழித்துணை பாபா ஆலயத்தில் ஆரத்தியில் கலந்து கொண்டிருந்தபோது ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், "எங்கள் கம்பெனி யில் பெயிண்டிங் வேலை செய்து கொடுக்க வேண்டும்' என்று சொன்னார். நானும் சென்று பேசி வேலையை ஆரம்பித்தேன். "கொரோனா' வந்ததும் கம்பெனியை மூடிவிட்டார்கள். மீண்டும் திறந்தபோது வேலை முடித்த ஏரியாவை அளந்து "பில்' கொடுக்கும்போது ஏரியா மூன்று மடங்காக வந்துவிட்டது. வேலை செய்யும்போதும் சம்பளம் சரியாகக் கொடுக்காமல் இழுத்தடிக் கப்பட்டது. நான் முன்பணமாக ரூ. 1,80,000 வாங்கியிருந்தேன். மொத்தத் தொகை 6,00,000 வந்துவிட்டது. என் "பில்'லை மேனேஜர் கிடப்பில் போட்டுவிட்டார். நான் பாபா விடம் அழுது வேண்டிக்கொண்டேன். கடந்த 5-8-2020, புதன்கிழமையன்று கம்பெனியில் என்னை அழைத்தனர். நான் பாபாவிடம், "என் மனதில் எண்ணியிருக்கும் தொகை வந்தால் போதும். மனநிறைவுடன் பெற்றுக்கொள்கிறேன்' என்று சங்கல்பம் செய்துகொண்டு சென்றேன்.

கம்பெனி முதலாளியிடம் பேசினேன்.

அவர், ""நாமிருவரும் எதிர்பாராத தொகை வந்து விட்டது. உனக்கும் நட்டம் வேண்டாம்; எனக்கும் நட்டம் வேண்டாம்'' என்று ஒரு பொதுவான தொகையைச் சொன்னார்.

அது, நான் பாபாவிடம் சங்கல்பம் செய்து கொண்ட தொகையாகும். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது வண்டலூர் வழித் துணை பாபா எனக்குச் செய்த அற்புதமாகும்.

சென்னை, வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், அலை பேசி: 86087 00700

om011020
இதையும் படியுங்கள்
Subscribe