Advertisment

பாவங்களைப் போக்கும் மாக ஸ்நானம் -அயன்புரம் த.சத்தியநாராயணன்

/idhalgal/om/ayanpuram-t-sathyanarayanan

ருசமயம் மிகவும் கொடூரமான அரசன் ஒருவன் அனைத்து மக்களுக்கும் கொடுமைகள் புரிந்துவந்தான். அவனைத் திருத்த முடியாமல் அந்த அரச னின் குரு தவித்தார். அதற்கான வழியைத்தேடி வருணனைப் பார்க்கச் சென்றார். யாரோ எதிரி வருகிறான் என தவறாக நினைத்த வருணன், அவர்மீது ஆயுதத்தை வீச, குரு இறந்துபோனார். அப் போது அங்கு ஒரு பேயுருவம் தோன்றி, வருணனின் கை, கால்களைக்கட்டி கடலிலில் தூக்கிப் போட்டது. அங்கு அவன் பல காலம் துன்பங்களை அ

ருசமயம் மிகவும் கொடூரமான அரசன் ஒருவன் அனைத்து மக்களுக்கும் கொடுமைகள் புரிந்துவந்தான். அவனைத் திருத்த முடியாமல் அந்த அரச னின் குரு தவித்தார். அதற்கான வழியைத்தேடி வருணனைப் பார்க்கச் சென்றார். யாரோ எதிரி வருகிறான் என தவறாக நினைத்த வருணன், அவர்மீது ஆயுதத்தை வீச, குரு இறந்துபோனார். அப் போது அங்கு ஒரு பேயுருவம் தோன்றி, வருணனின் கை, கால்களைக்கட்டி கடலிலில் தூக்கிப் போட்டது. அங்கு அவன் பல காலம் துன்பங்களை அனுபவித் தான். வருணன் இல்லாததால் தேவர் களும் மக்களும் பல இன்னல் களை அடைந்தனர். எனவே, அவர் கள் வருணனைக் காப்பாற்ற சிவபெருமானை வேண்டினர்.

Advertisment

அவர்களது வேண்டுதலுக்கு இரங்கிய ஈசன் கடலுக்குள் எழுந்தருளி, வருணனின் கட்டுகளை அவிழ்த்து அவரை விடுவித்தார். இந்த புனித நிகழ்வு நிகழ்ந்த நாள் மாசிமகம் ஆகும்.

ss

தன்னைத் துன்பத்திலிருந்து விடுவித்த ஈசனிடம் வருணன், ""இந்த நாளில் புனித தீர்த்தத் தில் நீராடுவோரின் அனைத்து பாவங்களையும் போக்கி முக்தி யளிக்க அருள்புரியவேண்டும்'' என்று வேண்டிக்கொண்டான். ஈசனும் அவ்வாறே அருளினார்.

Advertisment

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திர நாளில் புனித தீர்த்தங் களில் நீராடினால் பாவங்களும் தோஷங்களும் அகன்றுவிடும். இது "மாக ஸ்நானம்' என்று அழைக்கப்படுகிறது.

மாக ஸ்நானம் செய்பவர்கள் தீர்த்தத்தில் மூன்றுமுறை தலைமூழ்கி எழவேண்டும். இதற்கான காரணம் என்னவெனில்- முதல் குளியல்- பாவங்களைப் போக்கும்.

இரண்டாம் குளியல்- வைகுண்ட பாக்கியம் கிட்டும்.

மூன்றாம் குளியல் செய்துவிட்டால்-

"நான் என்ன பலன் தருவது? கடனாளி ஆகிவிட் டேனே'

என்று இறைவன் நினைப்பார் என "மாக புராணம்' கூறுகிறது.

புண்ணிய தலமில்லாத இடங்களில் வசிப்பவர்கள் வேறொரு புண்ணிய தலம் சென்று நீராடினால் பாவங்கள், தோஷங்கள் அகலுமாம். இதனை-

"அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம்

புண்ணிய க்ஷேத்ரே விநச்யதி'

என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது.

புண்ணிய தலங்களில் வசிப்பவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் காசியில் சென்று நீராடினால் போகும் என்பதனை-

"புண்ணிய க்ஷேத்ர க்ருதம் பாபம்

வாராணஸ்யாம் விநச்யதி'

என்று ஸ்லோகம் கூறுகிறது. ஆனால்-

கும்பகோணத்தில் வசிப்பவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் கும்பகோணத்தில் நீராடினாலே அகன்று விடுமாம். இதனை-

கும்பகோணே க்ருதம் பாபம்

கும்பகோணே விநச்யதி'

என்கிறது புராணம்...

எனவே மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடிப் பயன் பெறுவோம்!

om010320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe