1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியனை உங்கள் எண்ணின் நாயக னாகக் கொண்டவர்கள். இந்த ஆவணி மாதம் உங்கள் எண்ணின் நாயகன் சூரியன் முழுபலம் பெற்றுத் திகழ்வார். எனவே இந்த மாதம் உங்கள் திறமை பளிச்சிடும். பெருமை தன்னிச்சையாக வந்துசேரும். அரசு பதவி உயர்வு தரும். அரசியல்வாதிகள், மிக உயரிய பதவி பெறுவர். அது நிதி சார்ந்ததாக அமையும். நிறைய அரசு அதிகாரிகள் நிதி சார்ந்த பதவிக்கு உயர்வடைவீர்கள். உங்களின் வாழ்வு நிலை எது வாயினும் உங்களுக்கு, வாழ்வு நிலையில் சில படிகள் உயர்வு ஏற்படுவது உறுதி. பணப்புழக்கம் மிக அதிகமாக இருக்கும். பெற்றோரின் மனை ஒன்று உங்கள் கைக்கு வந்துசேரும். அல்லது அது சம்பந்தமான பணம் கிடைக்கும். உங்கள் இளைய சகோதரி, வேலை விஷயமாக வேறிடம் நகர்வார். பணியாட்கள் மாறுவர்: திருமணம் கண்டிப்பாக நடக்கும். ஆனால் நடக்கும் விதம்தான் கலவரமாக இருக்கும். ஒன்று கலப்புக் கல்யாணமாக நடக்கும். அல்லது கலாட்டா கல்யாணமாக நடக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்க முதலீடு செய்வீர்கள். சிலர் வியாபார விஸ்தரிப்புக்கு பணம் செலவழிப்பீர்கள். சிலர் கடையின் இடத்தை வேறு பகுதிக்கு மாற்றுவீர்கள். பணவரவு வந்துகொண்டே இருப்பதால் செலவும் தாரளமாகச் செய்வீர்கள். கவனம் தேவை: பணியாட்களிடம் பார்த்துப் பழகவும். இளம் பெண்களால் விரயம் ஏற்படும். உங்கள் தந்தை பாத்ரூம் செல்லும்போதோ, வாக்கிங் செல்லும் போதோ கவனமாக பார்த்துக்கொள்ளுங் கள்.
ஆவணி மாதம் 18, 19, 20-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: சூரிய நாராயணர் அல்லது சங்கரன் கோவில் சுவாமியை வணங்கவும். இந்த மாதம் உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் இடையில் யுத்தமே வரும். எனவே தந்தை மற்றும் வயதானவர்களை அன்புடன் கவனித்துக்கொள்ளுங்கள். இஷ்ட கோவில்களில் நிறைய தீபமேற்றுவது மனக்கிலேசங்களைக் குறைக்கும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சந்திரன். இந்த மாதம் பெரும்பாலோர், அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவீர்கள். வேறு சிலர், அழகான புதுமையான மாடல் வீடு கட்டுவர். உங்களில் சிலர், பன்மைத் தன்மை யில்- அதாவது, பல வீடுகள் வாங்க இயலும் பணவரவு இருந்துகொண்டே இருக்கும். எனினும், அதனை மிஞ்சி பணச்செலவு இருக்கும். அரசு ஒப்பந்தம் அதிக பணவரவு. நிறைந்த செல்வம் கொண்டுவந்து சேர்க்கும். உங்கள் இளைய சகோதரன், இதன் பொருட்டு அலைவார். தகவல் தொடர்புத்துறை அல்லது சீருடைத் துறையில் கணினி சம்பந்த வேலை கிடைக்கும். மிகச் சிலர், சொத்து பிரிவினை, வீடு, மனை குத்தகை விஷயமாக காவல்துறையை நாட வேண்டியிருக்கும். சொந்த ஊரி-ருந்து பணியாளர் கிடைப்பர். பெண் அரசியல்வாதிகள், மிக அழகான வீட்டை கைக்கொள்வர் அல்லது தங்களது மாளிகையை, மேலும் பொருட்செலவில் நவீனப்படுத்துவர். உங்கள் வீட்டில், ஒரு பெண் அரசியல்வாதி தோன்றுவார். உங்கள் வாரிசுகள், கல்வி, தொழில், வேலை விஷயமாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லவேண்டி இருக்கும். வெளிநாடு சார்புடைய வேலை கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் போக்கு, மிக எரிச்சலைத் தரும். சில சமயம், நீங்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவரும், வீட்டில் அக்னி நட்சத்திர நடிகர்கள்போல் முறைத்துக் கொள்வீர்கள். சிலர், உங்கள் தந்தை யின் வேலையை அடிப்படையாகக் கொண்ட சொந்தத் தொழில் ஆரம்பிப்பீர்கள். சில பெண்கள் அமைப்பு, சமையல் சார்ந்த சுயதொழில் ஆரம்பித்து விடுவீர்கள். கவனம் தேவை: நீங்கள் வெளியில், வேலையில், தொழி-ல் அனுசரணையானவர் என்று கொண்டாடப்படும்போது, வீட்டில் எதிரிகளுடன் மோதுவதுபோல் நிலை உண்டாக
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியனை உங்கள் எண்ணின் நாயக னாகக் கொண்டவர்கள். இந்த ஆவணி மாதம் உங்கள் எண்ணின் நாயகன் சூரியன் முழுபலம் பெற்றுத் திகழ்வார். எனவே இந்த மாதம் உங்கள் திறமை பளிச்சிடும். பெருமை தன்னிச்சையாக வந்துசேரும். அரசு பதவி உயர்வு தரும். அரசியல்வாதிகள், மிக உயரிய பதவி பெறுவர். அது நிதி சார்ந்ததாக அமையும். நிறைய அரசு அதிகாரிகள் நிதி சார்ந்த பதவிக்கு உயர்வடைவீர்கள். உங்களின் வாழ்வு நிலை எது வாயினும் உங்களுக்கு, வாழ்வு நிலையில் சில படிகள் உயர்வு ஏற்படுவது உறுதி. பணப்புழக்கம் மிக அதிகமாக இருக்கும். பெற்றோரின் மனை ஒன்று உங்கள் கைக்கு வந்துசேரும். அல்லது அது சம்பந்தமான பணம் கிடைக்கும். உங்கள் இளைய சகோதரி, வேலை விஷயமாக வேறிடம் நகர்வார். பணியாட்கள் மாறுவர்: திருமணம் கண்டிப்பாக நடக்கும். ஆனால் நடக்கும் விதம்தான் கலவரமாக இருக்கும். ஒன்று கலப்புக் கல்யாணமாக நடக்கும். அல்லது கலாட்டா கல்யாணமாக நடக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்க முதலீடு செய்வீர்கள். சிலர் வியாபார விஸ்தரிப்புக்கு பணம் செலவழிப்பீர்கள். சிலர் கடையின் இடத்தை வேறு பகுதிக்கு மாற்றுவீர்கள். பணவரவு வந்துகொண்டே இருப்பதால் செலவும் தாரளமாகச் செய்வீர்கள். கவனம் தேவை: பணியாட்களிடம் பார்த்துப் பழகவும். இளம் பெண்களால் விரயம் ஏற்படும். உங்கள் தந்தை பாத்ரூம் செல்லும்போதோ, வாக்கிங் செல்லும் போதோ கவனமாக பார்த்துக்கொள்ளுங் கள்.
ஆவணி மாதம் 18, 19, 20-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: சூரிய நாராயணர் அல்லது சங்கரன் கோவில் சுவாமியை வணங்கவும். இந்த மாதம் உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் இடையில் யுத்தமே வரும். எனவே தந்தை மற்றும் வயதானவர்களை அன்புடன் கவனித்துக்கொள்ளுங்கள். இஷ்ட கோவில்களில் நிறைய தீபமேற்றுவது மனக்கிலேசங்களைக் குறைக்கும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சந்திரன். இந்த மாதம் பெரும்பாலோர், அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவீர்கள். வேறு சிலர், அழகான புதுமையான மாடல் வீடு கட்டுவர். உங்களில் சிலர், பன்மைத் தன்மை யில்- அதாவது, பல வீடுகள் வாங்க இயலும் பணவரவு இருந்துகொண்டே இருக்கும். எனினும், அதனை மிஞ்சி பணச்செலவு இருக்கும். அரசு ஒப்பந்தம் அதிக பணவரவு. நிறைந்த செல்வம் கொண்டுவந்து சேர்க்கும். உங்கள் இளைய சகோதரன், இதன் பொருட்டு அலைவார். தகவல் தொடர்புத்துறை அல்லது சீருடைத் துறையில் கணினி சம்பந்த வேலை கிடைக்கும். மிகச் சிலர், சொத்து பிரிவினை, வீடு, மனை குத்தகை விஷயமாக காவல்துறையை நாட வேண்டியிருக்கும். சொந்த ஊரி-ருந்து பணியாளர் கிடைப்பர். பெண் அரசியல்வாதிகள், மிக அழகான வீட்டை கைக்கொள்வர் அல்லது தங்களது மாளிகையை, மேலும் பொருட்செலவில் நவீனப்படுத்துவர். உங்கள் வீட்டில், ஒரு பெண் அரசியல்வாதி தோன்றுவார். உங்கள் வாரிசுகள், கல்வி, தொழில், வேலை விஷயமாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லவேண்டி இருக்கும். வெளிநாடு சார்புடைய வேலை கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் போக்கு, மிக எரிச்சலைத் தரும். சில சமயம், நீங்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவரும், வீட்டில் அக்னி நட்சத்திர நடிகர்கள்போல் முறைத்துக் கொள்வீர்கள். சிலர், உங்கள் தந்தை யின் வேலையை அடிப்படையாகக் கொண்ட சொந்தத் தொழில் ஆரம்பிப்பீர்கள். சில பெண்கள் அமைப்பு, சமையல் சார்ந்த சுயதொழில் ஆரம்பித்து விடுவீர்கள். கவனம் தேவை: நீங்கள் வெளியில், வேலையில், தொழி-ல் அனுசரணையானவர் என்று கொண்டாடப்படும்போது, வீட்டில் எதிரிகளுடன் மோதுவதுபோல் நிலை உண்டாகும். இந்த மாதம் இதனைத் தவிர்க்க இயலாது. இதற்கு சில வதந்திகள் காரணமாக இருக்கும்.
ஆவணி 20, 21, 22-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது சிறப்பு. அருகில் உள்ள சிவன் கோவி-ல் சிவனுக்கும், சனீஸ்வரருக்கும், திங்கட்கிழமைகளில் அபிஷேகத் துக்கு பால் வாங்கி கொடுக்கவும். வயதான ஊனமுற்ற பெண்களுக்கு உணவு வாங்கிக்கொடுங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களின் எண் நாயகன் குரு ஆவார். இம்மாதம் உங்களுக்கு அரிய பெரிய யோசனைகள் ஆர்ப்பரித்து வரும். இச்செயல், என்னால் வடிவமைக்கப்பட்டது என அனைவரிடமும் பெருமையாகக் கூறும் சூழ்நிலை ஏற்படும். பூர்வீக சம்பந்த வில்லங்கம் ஒரு முடிவுக்கு வரும். சொந்த ஊர் மனையை விற்க ஏற்பாடு செய்வீர்கள். பணவரவு சுமாரான நிலையில் இருக்கும். உங்கள் இளைய சகோதரனும் அவரின் மனைவியும் வெகு சண்டையிடும் சூழல் உண்டு. அதுபோல் உங்களின் இளைய சகோதரனும், உங்களின் தந்தையும் எ-யும், பூனையுமாக அலைவர். உங்களின் கைபேசி தகவல் பதிவு, அரசாங்கத்தால் கண்டிக்கப்படும். இந்த மாதம் பெண்களால் சில பல இடையூறுகள் வரும். அதேநேரம் சில எதிர்பாராத விஷயங்களும் நடக்கும். திருமணம், அனேகமாக சொந்தத்தில் அமையும். வரும் வரனின் குடும்பம் வியாபாரம், அல்லது அரசு சார்புடையதாக அமையக்கூடும். உங்கள் மூத்த சகோதரியால் சில இன்னல் நேரிடும். சமையல் செய்யும்போது, சில காயங்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. பெண் அரசியல்வாதிகள் சில அவமானங்களை சந்திக்க நேரிடும். கலைத்துறையில், சில பகைமையும், இடரும் வரும். சிலர் தாத்தா அல்லது தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். வங்கி போன்ற பணி கிடைக்கும். சிலருக்கு வேலையில் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும்பொழுது வேறு சிலர் வேலையை விட்டு நீக்கப்படவும் கூடும். பரம்பரை தொழில் செய்வோர், இடமாற்றம் காண்பர். கவனம் தேவை: இந்த மாதம் சற்றும் எதிர்பாரத விதத்தில், இடத்தில் வெகு துன்பம் ஏற்படும். இளம் பெண்கள் அதிக கவனத்துடன் இருத்தல் அவசியம்.
ஆவணி 24, 25, 26 தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: தர்ம சாஸ்தாவை வணங்கவும். குலதெய்வ வழிபாடு மற்றும் அருகில் உள்ள ஐயப்பன், அய்யனார் கோவிலுக்கு நெய்விளக்கு தீபம் ஏற்றுங்கள். குலதெய்வ கோவில் அர்ச்சகர் அல்லது ஓதுவாருக்கு புது வஸ்திரம் வாங்கிக்கொடுங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் ராகு. எப்போதும் எதிர்மறை சிந்தனை கொண்ட நீங்கள், இப்போது வேலை விஷயத்திலும், அதேவித யோசனைகளை கொள்வீர்கள். சிலசமயம் அது க்ளிக் ஆகிவிடும். சரி; வேலை நல்ல விதமாக நடந்துவிட்டதே, என்று கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்த கிளம்பிவிடுவீர்கள். அங்கு போனவுடன் அங்குள்ள அர்ச்சகருடன் ஒரு விதண்டா வாதம் பண்ணிவிட்டு வருவீர்கள். நீங்கள் கிளம்பியவுடன் சாமியும், அர்ச்சகரும் அக்கடா என்று இருப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வாரிசு யோகம் ஏற்படும். சிலரின் வாரிசுகள் கைபேசியில், ஏதேனும் குளறுபடி பண்ணிவிடுவர். அதனைப் பழுதுபார்க்க நேரிடும். தாய் மாமன் சம்பந்தமான சுபநிகழ்ச்சி நடக்கும். உங்களுக்கு திருமணம் கூடிவரும். கடன் பேரில் மனைவாங்க முடியும். அல்லது விவசாய வாகனம் வாங்குவீர்கள். இந்த எண்ணில் பிறந்த குழந்தைகள் சிலரின் தந்தைக்கு வாத்தியார் வேலை, அதுவும் அரசு சார்ந்து கிடைக்கும். தொழில் சம்பந்தமாக, உங்களுக்கும் உங்கள் வாரிசுக்கும் மனபேதம் ஏற்படும். அது கணக்கு பார்க்கும் விதம் அல்லது வேலையாட்களால் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் நிறைய மண்டைக் குழப்பம் வரும். சிலர் அரசு சார்ந்த குத்தகை, ஒப்பந்தம் பெறுவர். இதனால் நம்பிக்கை மிகும். வாழ்வில் முன்னற்றப் பாதையில் செல்கிறோம் என ஒரு மனத் தீர்மானம் ஏற்படும். கலைஞர்கள் வீடு வாங்குவர். அரசியல்வாதிகள் நிறைய சேவை செய்தாலும், ஒரு நெருடலும் இருந்துகொண்டே இருக் கும். வயிற்றுக்கோளாறு அவ்வப்போது வரும். கவனம் தேவை: யாருடனாவது, அதுவும் உங்களைவிட பலம் குறைந்தவர்களுடன் சண்டையிட மனசு பரபரக்கும் தயவுசெய்து அமைதியாக இருக்க முயலுங்கள்.
ஆவணி 23 நல்லவை நடக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: சரபேஸ்வரரை வணங்கவும். அருகிலுள்ள சிவனை தீபமேற்றி வணங்கவும். வறிய வயதானவர்கள் சாப்பிட, அவர்கள் விருப்பப்படி சைவ, அசைவ உணவு வாங்கிக் கொடுங்கள்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் புதன். இந்த மாதம் மாறுதல்கள் நிறைய இருக்கும். தொழிலை மாற்றுவீர்கள். அல்லது வேலையை ஷிஃப்ட் பண்ணுவீர்கள். அரசு விஷயமாக வெளியூர், வெளிநாடு பயணம் உண்டு இருக்கும் வீடு திடீரென்று இடிந்து விழுவதாலோ, அல்லது ரொம்ப பழுது ஆவதாலோ, கண்டிப் பாக வீட்டை மாற்றுவீர்கள். அந்த மாதிரி சூழ்நிலை அமையும். உங்களில் சிலருக்கு பணவரவு அதிகம் இருப்பதால், வசதியான அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறக்கூடும். உங்கள் தந்தை உங்கள் மூத்த சகோதரியுடன் சென்று தங்குவார். உங்கள் வாரிசுக்கு, வேலை கிடைக்க அல்லது தொழில் முதலீட்டு விஷயமாக, உங்களுக்கும் வாரிசுக்கும் பெரிய சண்டை வரும். உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது தாயார் உடல்நலம் கெடக்கூடும். பணம், காசு இருந்தாலும், உங்களுக்கு மன நிம்மதியின்றி, ஒருவித மன அழுத்தத்தோடு அலைவீர்கள். குடும்பத்தில் மருமகள் வர வாய்ப்புண்டு. இந்த மாதம் ஒரு பெரிய அதிர்ஷ்ட நிகழ்வு உங்களுக்கு நடக்கும். அதன் அளவு எவ்வளவோ, அதே அளவு சங்கடங்களும் வரும். இது நல்லவை கிடைத்த திருஷ்டியால் இருக்கலாம் என்று மனத்தை ஆற்றுப்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் வயதான தந்தை மறதி நோயால், காணாமல் போக வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் பெரும் பதவி கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி யடைவர். கலைஞர்கள் வெகு நன்மையும், அரசாங்க தொல்லையும் ஒருங்கே பெறுவர். கவனம் தேவை: இந்த மாதம் வீடு, வாகனம், தாயார், வாழ்க்கைத் துணை என ஒருவித பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட நிகழ்வு களை, வெளியே தெரியாமல் மனசுக்குள் மகிழ்ந்து கொள்ளவும். திருஷ்டி தாக்கம் அதிகம் வர வாய்ப்புள்ளது.
ஆவணி மாதம் 2, 3, 4-ஆம் தேதிகள் மற்றும் 30, 31-ஆம் தேதிகள் நன்மையை கூட்டிவரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: மகாலட்சுமி தாயாரை, இனிப்புகளுடன் வணங்கவும். அதிக திருஷ்டி ஏற்படும் என்பதால், மகிஷரசுர மர்த்தினியை எலுமிச்சம் பழம் கொண்டு வணங்கவும் இனிப்புகள் தானம் நன்று.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவார். இந்த மாதம், வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். பண வரவும், லாபமும் வந்துகொண்டே இருக்க, அதற்கு ஈடான செலவும் ஆகும். ஆக கடைசியில், பைசா கையில் நிற்காது. நிறைய சுபச் செலவுகள் இருக்கும். சிலர், கல்யாண விஷயமாக, கடன் வாங்க நேரிடும். உங்கள் வியாபாரம், தொழில் விஷயமாக ஒரு வதந்தி பரவும். பணியாட் களிடம் சண்டையிடுவதால், போகிற போக்கில் நாலு வதந்தியை நச்சென்று நங்கூரம் பாய்ச்சிவிட்டுப் போய்விடுவர். இதனால் உங்கள் தொழில் சற்று பின்னடவை சந்திக்கும். அதற்கு முழுக்க நீங்களே காரணம் ஆவீர்கள். சிலர் வேலையில் மாறுதல் கிடைப்பதால், வாழ்க்கைத் துணையைவிட்டு பிரிய நேரும். இந்த மாதம், உங்கள் தந்தையின் ஆதரவு மிக கிடைக்கும். தந்தை மற்றும் அரசு சார்ந்து லாபம் கிடைக்கும். அரசு பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவர். உங்கள் மகனுக்கும், மருமகனுக்கும் மிக அதிக சண்டை வர வாய்ப்புள்ளது. அல்லது உங்கள் வாரிசுகள், உங்களின் ரகசிய துணையுடன் மல்லுக்கு நிற்பர். அரசியல்வாதிகள் யோகமும், லாபமும், மேன்மையும் பெறுவர். கூடவே சில காதல் சார்ந்த வில்லங்கத்தை சந்திக்க வேண்டியிருக்கும். காதல் உண்டு. காதல் கல்யாணம் உண்டு. காத-ல் அடியும் உண்டு. தலை சற்று பாரமாக இருப்பதாக உணர்வீர் கள். பங்கு வர்த்தகம் லாபமும், நஷ்டமும் தரும். கவனம் தேவை: உங்களிடம் வேலை செய்வோரிடம் ரொம்ப கவனமாக இருக்கவும். தொழில் பாதிப்பை செய்து, முதலுக்கே மோசம் உண்டாக்கி விடுவர். காத-ல் கவனம் தேவை. இந்த மாதம் காதலுக்கு விடுமுறை அளித்து விடுங்கள்.
ஆவணி 15, 16, 17 தேதிகளில் நன்மை நடக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: பெருமாளுடன் கூடிய லட்சுமியை வணங்கவும். நீர்நிலைகள் அருகில் உள்ள மகாலட்சுமி தாயாரை வணங்கவும். திருமணத்திற்கு, யாராவது கடன் என்று கேட்டால், குறைந்த தொகையையாவது பரிசாகக் கொடுத்து விடுங்கள். இது சுபச்செலவில் சேர்ந்து விடும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் கேது, இந்த மாதம் மனசு, எதை எதையோ நினைத்து பொங்கிப் பொங்கி வரும். ஒரு பைசா பெறாத பயல்கள் எல்லாம் கௌரவமா, நல்லா இருக்கான். நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒன்னும் இல்லாமல் இருக்கிறது என நொந்து புலம்புவீர்கள். வீடு பற்றிய யோசனை அதிகரிக்கும். இருக்கும் வீட்டை விற்றுவிடலாமா! வேறு புது வீட்டுக்கு போகலாமா என்றெல்லாம் யோசனை அலையடிக்கும். உங்கள் மகன், தன் சார்பாக, நீ எனக்கு என்ன சேர்த்து வச்சிருக்கப் பக்கத்து வீட்டு அப்பனைப்பார், எதுத்த வீட்டு அப்பனைப்பார், நீயும் இருக்கியே என்று வெறுப்பேற்றுவான். வீடு, வாகனம் அவ்வப் போது பழுது ஏற்படும். நிறைய ஆட்களிடம் பழகும், தொடர்பு கொள்ளும் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை கிடைக்கும். மனை சம்பந்த செலவுகள் உண்டு. கொஞ்சம் செலவுசெய்த பிறகுதான் அரசு அனுகூலம் கிடைக்கும். கலைஞர்கள், நிறைய வேலைப் பளுவை சந்திப்பர். அரசியல்வாதிகள், தங்கள் நாற்கா-யை, கெட்டியாகப் பிடித்துக் கொள்வர். அவர்களது பதவிக்கு குந்தகம் ஏற்படாமல் பெருமுயற்சி செய்து, பதவியைக் காப்பாற்றிக்கொள்வர். இந்தப் பதவியை தக்க வைக்கும் போராட்டம், மன அசதியைத் தரும். திருமணம் சற்று கலப்பாக நடக்கும். உங்களில் சிலர் காதல், கலப்பு மணம் புரிவீர்கள். கவனம் தேவை: பயணங்களில் கவனம் தேவை. வாரிசுடன் அமைதியாகச் செல்லவும். இல்லாவிட்டால், உங்களுக்கு காயம், சேதாரம் நிச்சயம். தொழி-ல், குறைவாக எதிர்மறைத் தன்மையைக் கடைப் பிடிக்கவும்.
ஆவணி, 9-ஆம் தேதி நல்லவை நடக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்கவும். அருகில் உள்ள விநாயகருக்கு, அறுகம்புல், இனிப்பு கொண்டு வணங்கவும். நவகிரகத்தில், கேதுவை வணங்குங்கள் வயதான கிறிஸ்துவப் பெருமக்களுக்கு, வஸ்திர தானம் செய்வது நல்லது.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சனி ஆவார். இந்த மாதம் உங்கள் வாக்கில் உறுதித்தன்மை மிகும். அரசு வேலை சம்பந்தமாக, முன்பு வரவேண்டிய சம்பள பாக்கி பற்றிய வழக்கில் வெற்றி ஏற்பட்டு, பணம் வந்து சேர்ந்துவிடும். இந்த மாதம், உங்களின் வீர, தீர, பராக்கிரமத்தைக் கண்டு, எதிரிகள் மறைந்து கொள்வர். அடுத்த மாசம் உனக்கு இருக்குடா என்று கருவிக்கொண்டே, பகைவர்கள் பம்முவர். வீடு மாற்றம் உண்டு. உங்கள் பெற்றோர் தங்களுக்குள் பெரிய சண்டை போட்டுக்கொள்வர். காதல் துளிர்க்கும். ரொம்ப நாள் காத-த்தவர்கள், இப்போது திருமணம் செய்துகொள்வர். இம்மாதம் எதிர்பாராத யோகம் ஒன்று உங்கள் கதவைத் தட்டும். அது சற்று அரசு சம்பந்தம் அல்லது உங்கள் தந்தை சார்ந்ததாக இருக்கும். இந்த மாதம் அரசு வேலை என்பது எட்டாக்கனியாக இருக்கும். மேலும், அரசு வேலை வாங்கித் தருகிறேன் என யாராவது கூறினால், பணம் கொடுத்துவிடாதீர்கள் ஏமாற்றம் நிச்சயம். உங்களில் சிலர் உங்கள் தந்தை அல்லது அரசாங்கம் மீது வழக்கு தொடர்வீர்கள். சிலர் தாய்மாமன்மீது செம கோபமாகி சண்டையிடுவீர்கள். பூமி தோண்டும்போது புதையல் கிடைக்க வாய்ப்புண்டு உங்களில் சிலர் டி.வி அல்லது சினிமா தொடங்க முனைவீர்கள். அதற்கான நடிக, நடிகையரைத் தேர்ந்தெடுப்பதில் பிஸியாவீர்கள். உங்களில் சிலர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வாய்ப்பும் பெறுவீர்கள். உங்கள் வியாபாரம் மற்றும் தொழி-ல் பெண் பங்குதாரரை சேர்த்துக்கொள்வீர்கள். அரசியல் வாதிகள் சொந்த இடத்தில் நிறைய அதிர்ஷ்டமும், அதிக பகையும் பெறுவர். வீட்டில் மாமியார், மாமனார் தலையீடு அதிகம் இருக்கும். பணியாட்கள் மாறுதல் உண்டு. கவனம் தேவை: பணம் கொடுத்து ஏமாற வாய்ப்புண்டு. ஆன்மிக மற்றும் அரசியல்வாதிகளிடம் கவனமாக இருப்பது அவசியம்.
ஆவணி 4, 5, 6-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமெற்றவும். சனீஸ்வர சந்நிதி அர்ச்சகருக்கு தீபமெற்ற எண்ணெய், திரி, தீப்பெட்டி இவை வாங்கிக் கொடுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய். ஆன்மிக யாத்திரை செல்ல இயலும். சிலர் மேற்கல்விக்காக, வெளிநாடு செல்வீர்கள். நீங்கள் முடிவு செய்து வைத்த செயல்கள் தடையாகும். ஆனால் கொஞ்சமும் எதிர் பார்க்காத செயல் நடக்கும். அது வழக்கு அல்லது கடன் அல்லது வங்கிக் கடன் சார்ந்து அமையலாம். உங்கள் வாழ்க்கைத் துணை கண்டிப்பாக வேலை வாய்ப்பு பெறுவார். அலைபேசியில் ஆரோக்கியம், குழந்தைகள் பற்றிய செய்தி, தகவல் வெளியிடுவீர்கள். உங்களுக்கு காது, தோள் சம்பந்த பிரச்சினை வந்து போகும். வாழ்க்கைத் துணையின் வேலை சார்ந்து, குவார்ட்டர்ஸ் வீடு கிடைக்கும். வாரிசு யோகம் உண்டு. வாரிசுகளால் நன்மை உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தமாக நீங்களும், உங்கள் மூத்த சகோதரரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகள், அரசு இவர்களுடன் உங்கள் மோதல் தொடரும். தொழி-ல் நல்ல லாபம் கிடைப்பதாலும் இவ்விதம் ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் மாமனாருக்கும். உங்களுக்கும், குழந்தைகள் சம்பந்தமாக கருத்து வேற்றுமை ஏற்படும். உங்கள் குடும்பத்தில் மருமகன் வரவுண்டு. ஏற்கெனவே வந்த மருமகன், உரிய கௌரவம் தரவில்லை என்று சண்டைக்கு நிற்பார். கலைஞர்கள் பேர், புகழ்பெறுவதோடு, கொஞ்சம் உடல் நலக்கேடும் பெறுவர். அரசியல்வாதிகள் அரசுடன் செம சண்டையிடுவர். அல்லது அரசிய-ல் இருப்போர், தங்களின் பழைய முந்தைய அரசியல் பங்குதாரருடன் மிக அதிகமாக மோதுவர். கவனம் தேவை: உடல் நலனில் கவனம் தேவை. உங்களிடம் பணி புரிபவர்களே, எதிரிகளுடன் சேர்ந்து உங்களை இம்சைப் படுத்துவர்.
ஆவணி 11, 12, 13-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: கார்த்திகேயனை வணங்கவும். முருகனுக்கு சந்தனம் வாங்கிக் கொடுங்கள். உடல்நிலை சரியில்லாத, சிறு குழந்தைகளுக்கு மருந்து வாங்கிக் கொடுங்கள்.
செல்: 94449 61845