தட்சிணாயன காலத்தைச் சார்ந்த ஆவணி மாதத்தை ஜோதிட சாஸ்திரம் "சிங்க மாதம்' என்று கூறுகிறது. இந்த மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், இம்மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் போற்றப் படுகின்றன. கிழமைகளில் சூரியனின் ஆதிக்கம் நிறைந்தது ஞாயிற்றுக்கிழமை என்கின்றன வேத நூல்கள். மேலும், உலகிற்கு ஒளிதரக்கூடிய ஞாயிறு ஆட்சிபுரியும் ஆவணி மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த ராசியில் இடம்பெறுவதால் சிங்கம்போல வீறுநடைபோடுவதாக ஞானநூல்கள் கூறுகின்றன.
ஆவணியில் சூரிய பகவான் சிம்மச்சூரியன் என்று தனிப்பெருமை பெறுவதால், அத்தகு மகிமை கொண்ட மாதத்தில் சூரியனை வழிபட நலன்கள் யாவும் கைகூடும். எனவே, ஜாதகத்தில் சூரியனின் பலம்குன்றியவர்கள் இந்த ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால் சூரியபலம் பெற்றுத் திகழலாம். மற்றவர்கள் மேன்மேலும் பலம்கூடி வளமாக வாழ்வர் என்று சாஸ்திரம் கூறுகிறது.
தட்சிணாயன காலத்தின் ஆரம்ப மாதமான ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தவிர்க்கப்பட்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவதுபோல், ஆவணியில் சுபகாரியங்கள் மேற்கொள்ள நல்ல முகூர்த்த நேரங்கள் உள்ளதால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெற சிங்க மாதமாக ஆவணி திகழ்கிறது.
பொதுவாக, சூரியன் நமஸ்காரப்பிரியன் என்று சொல்லப்படுவதால், தினந்தோறும் சூரிய உதய காலத்தில் இந்திரதிசை என்று சொல்லப்படும் கிழக்கு நோக்கி வழிபாடு செய்தால் கண்ணொளி பிரகாசிக்கும்; உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்று ஆன்மிகம் சொல்வதை அறிவியலும் ஏற்கிறது.
சூரியனிலிருந்து கிடைக்கும் உயிர்ச்சத்தான வைட்டமின்-டி நம் உடல்நலனைப் பேணிக்காப்பதில் முதலிடம் வகிப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
ஆகவே, காலையில் சூரிய வழிபாடு மேற்கொள்வ தால் நலம் பல பெற்று வளமுடன் வாழலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
உயிர்சக்தியினை அளிக்கும் சூரியன் ஆவணி யில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடுதலான சக்தியை வெளிப்படுத்துவத

உயிர்சக்தியினை அளிக்கும் சூரியன் ஆவணி யில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடுதலான சக்தியை வெளிப்படுத்துவதால், அன்று சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடுவதும்- குறிப்பாக ஆதித்யஹிருதயம், ஸ்தோத்திரங்கள் படிப்பதும், காயத்ரி மந்திரங்கள் ஜபிப்பதும் சிறப்பான பலன் களைத் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்று சிவாலயத்தில் அமைந்துள்ள நவகிரகத் தொகுப்பில் நடுநாயகமாக வீற்றிருக்கும் சூரிய பகவானுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சில சிவாலயங் களில் சூரியனுக்கென்று தனிச்சந்நிதியும் அமைந்திருக்கும். அந்தச் சந்நிதியில் நெய் விளக்கேற்றி சூரிய காயத்ரியினை ஜெபிக்க அறிவிற்சிறந்து விளங்கலாம்.
சூரிய காயத்ரி
"ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதயுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்:'
மேலும் சூரிய பகவானை அவரது அருளாசி நிறைந்த திருத்தலங்களுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பர்.
சூரிய பகவான் அருள்புரியும் திருத்தலங் கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளன. அவற்றுள் சில:
கும்பகோணம் அருகில் ஆடுதுறைவழியில் அமைந்திருக்கும் சூரியனார்கோவில் சிவசூரியன், திருவாரூர் அருகே செதலபதி (திலதர்ப்பணப்புரி) திருத்தலத்திலுள்ள சூரிய பகவான், தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும்வழியிலுள்ள திருக்கண்டியூர் தலத்தில், கண்டீஸ்வரர் கோவிலின் கிழக்குப் பகுதியிலுள்ள மண்டபத்தில் மேற்கு திசை நோக்கி சுமார் ஆறடி உயரத்தில் எழுந்தருளியுள்ள கல்ப சூரியன் ஆகியோர் புகழ்பெற்றுத் திகழ்கிறார்கள்.
அது என்ன கல்ப சூரியன்?
திருக்கண்டியூரில் எழுந்தருளியுள்ள கல்பசூரியன் விக்ரகம் ஏழு மன்வந்த்ரங்களுக்கு முற்பட்டதாம்.
யுகங்கள் நான்கு. அவை: கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பவையாகும். இந்த நான்கு யுகங்களையும் சேர்த்தால் ஒரு சதுர்யுகம் எனப்படும்.
அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் வருடங்கள்.
இதைப்போல 71 சதுர்யுகங்கள் சேர்ந்தால் ஒரு மன்வந்த்ரம் எனப்படும். அதாவது 30 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் வருடங்கள். இதைப்போல் 14 மன்வந்த்ரங்கள் சேர்ந்தால் ஒரு கல்பம் எனப்படுகிறது.
அதாவது ஒரு கல்பம் என்பது 429 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகள்.
திருக்கண்டியூரில் உள்ள கோவில் நம் மன்னர்கள் காலத்தில் எழுந்தது என்றா லும், இங்கு அருள்பாலிக்கும் கல்பசூரியன். ஏழு மன்வந்த்ரங்களுக்கு முற்பட்டதாம். அதாவது 214 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஏனெனில், நாம் கடந்துகொண்டிருப்பது ஏழாவது மன்வந்த்ரத்தைதான்.
மேலும், சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்களும், சூரிய புஷ்க ரணி உள்ள கோவில்களும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் போற்றப்படுகின்றன. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திரு மங்கலக்குடி, தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள பருதியப்பர் ஆலயம் எனப்படும் பரிதிநியமம் திருத்தலம், பழனி அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி, மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் பேரளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர், சிவகங்கையிலிருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவாடானை, தஞ்சை- திருவையாறுக்கு அருகேயுள்ள திருச்சோற்றுத்துறை ஆகிய திருத்தலங்கள் சூரியன் தேவ வடிவில் வழிபட்ட தலங்களாகும்.
இதேபோல சூரியன் தன் ஒளிக்கதிர் களால் சிவலிங்கத்தை வழிபட்ட கோவில் களும் தமிழகத்தில் உள்ளன. அவை: கும்ப கோணத்திற்கு அருகே திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள நாகேஸ்வர சுவாமியை சித்திரை 11, 12, 13 தேதிகளிலும், காரைக்கால் அருகேயுள்ள கோயிற் பத்து தலத்தில் இறைவன் ஸ்ரீபார்வதீஸ்வரரை பங்குனி 13 முதல் பத்து நாட்களும்; திருவாரூருக்கு தெற்கேயுள்ள திருநெல்லிக்கா திருத்தலத்தில் அருள்புரியும் இறைவன் நெல்லிவனநாதரை ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசிமுதல் ஏழு நாட்கள் மற்றும் மாசி மாதம் 18-ஆம் தேதிமுதல் ஏழு நாட்களும்; விழுப்புரம் அருகேயுள்ள பனையபுரம் எனப்படும் புறவார்பனங்காட்டூர் தலத்தில் அருள்புரியும் பனங்காட்டீஸ்வரரை சித்திரை முதல் தேதியிலிருந்து 7-ஆம் தேதிவரையிலும்; தஞ்சைக்கு அருகே கண்டியூர் தலத்தில் எழுந்தருளியுள்ள வீரட்டேஸ்வரரை மாசி 13, 14, 15 தேதிகளிலும்; திருமீயச்சூர் இறைவன் மேகநாதரை சித்திரை 21 முதல் ஏழு நாட் களும்; சீர்காழி அருகிலுள்ள மகேந்திரபள்ளி தலத்தில் அருள்புரியும் திருமேனியழகர் சுவாமியை பங்குனி முதல் நாளிலிருந்து ஏழு நாட்கள் வரையிலும் சூரியன் தன் ஒளிக் கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரவிட்டு வழிபடுகிறான். மேலும் குடந்தை அருகி லுள்ள இன்னாம்பூர் மற்றும் திருப்புறம்பியம் தலங்களிலும் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறவைனை வழிபடுகிறான்.
தமிழகத்தில் சூரிய பகவானுக்கு கோவில் களில் விக்கிரகங்கள் இருப்பதுபோல் வடநாட்டில் பல இடங்களில் சூரியனுக் கென்றே கோவில்கள் உள்ளன.
பீகார் மாநிலத்தில் கயா திருத்தலத்தில் அமைந்துள்ள சூரியன் கோவிலை "தக்ஷிணார்கர்' என்பர். மகாவிஷ்ணுவின் பாதங்கள் அமைந்துள்ள விஷ்ணு பாதக் கோவிலுக்கு அருகில், கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் சூரிய பகவான் மார்பில் வெள்ளிக்கவசம் விளங்க, இடுப்பில் ஒட்டியாணத்துடன் நீளமான காலணிகள் அணிந்து அழகாகக் காட்சி தருகிறார். மேலும், கயாவிலும், கயாவைச் சுற்றிலும் சூரியனுக்கு பல கோவில்கள் உள்ளன.
மத்தியப்பிரதேசத்தில் ஜான்ஸிக்கு அருகிலுள்ள திருத்தலம் "உனாவ்'. இங்கு சூரியனுக்கென்று தனிக்கோவில் உள்ளது. சூரியனின் சிலாரூபத்திற்கு வெள்ளிக்கவசம் சாற்றியிருக்கிறார்கள்.
அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்பாரா என்ற ஊருக்கு அருகிலுள்ள "சூர்ய பஹார்' என்ற குன்றில் சூரியன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வட்டவடிவ கல்மேடையில் பன்னிரண்டு சூரியர்கள் எழுந்தருளியுள்ளனர்.
அவர்களின் பெயர்கள்: ஆதித்தன், அம்சு மான், சவிதா, பானு, பாஸ்கரன், திவாகரன், அர்க்கன், மார்த்தாண்டன், அர்யமா, மித்திரன், விஸ்வான், பர்ஜன்யன்.
இதேபோல் சூரியனுக்கு ரவி, லோகப் பிரகாசன், ஸ்ரீமான், லோகரட்சகன், கர்த்தா, திரிலோகேசன், ஹர்த்தா, தமிஸாஹன், தபனஸ், சசி, தாபனர், சப்தஸ்வரவாஹனன், சர்வதேவன் என்று பல பெயர்கள் உள்ளதாக சூரிய புராணம் கூறுகிறது.
ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் திருத்தலம் அருகில் அரசவல்லி சூரியநாராயணசாயி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐந்தடி உயரத்துடன், கையில் தாமரை மொட்டு வைத்தபடி உஷா- சாயா தேவியர்களுடன் காட்சி தரும் சூரியனுக்கு பத்மபாணி என்று பெயர்.
காஷ்மீரிலுள்ள மார்த்தாண்டம் சூரியன் கோவில், ஒடிசாவில் பூரி என்னுமிடத்திலுள்ள கோனார்க் சூரியன்கோவில், குஜராத் மாநிலம் மோதேரா சூரியன்கோவில் ஆகியவை மிகவும் புகழ்பெற்றவையாகும். தவிர, பாகிஸ்தானின் மூல்தான் நகரிலிருந்த சூரியன்கோவில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பஞ்சாப் மாநிலத்தை ஆண்ட மன்னனால் கட்டப்பட்டது. இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோவில் என்று வரலாறு கூறுகிறது. இது ஔரங்கசீப் காலத்தில் அழிவுற்றதாகவும் வரலாறு கூறுகிறது.
இந்தியாவில் பல இடங்களில் சூரியன் கோவில்கள் இருப்பதுபோல் உலகில் சில இடங்களிலும் கோவில்கள் உள்ளன. குறிப்பாக பாரசீகத்திலும், தென் அமெரிக்காவிலும் சூரியனுக்கு கோவில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சூரிய பகவானை உத்ராயன புண்ணிய காலமான தை மாதம் முதல் தேதி வழிபடுவதுபோல, தட்சிணாயன மாதமான ஆவணியிலும் சூரியன் எழுந்தருளியுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து சூரியனை வழிபட சகலபாக்கியங்கள் பெற்று வளமுடன் வாழலாம் என்று சொல்லப்படுகறது.
சூரிய பகவான் அருள்புரியும் கோவிலுக்குச் செல்ல இயலாத நிலையில், அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை (சிவலிங்கம்) வழிபடலாம். ஏனெனில் சிவபெருமானின் வலது கண், சூரிய அம்சம் நிறைந்தது என்று புராணம் கூறுகிறது. அதேபோல் இடது கண், சந்திரனின் அம்சம் கொண்டது எனப் படுகிறது. சூரியனின் அதிதேவதை சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆவணி ஞாயிறு அம்மனுக்குரிய நாளாகவும் கருதப்படுவதால், அன்று அம்பாளையும் வழிபட்டுப் பேறுகள் பெற்று வளமுடன் வாழலாம்.