1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் மாத முற்பகுதியில் அலைச்சலையும் செலவை யும் சந்திப்பார்கள். பிற்பகுதியில் ஒரு ஸ்திரத் தன்மை ஏற்படும். மேலும் மாதத்தின் கடைசி வாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நல்ல லாப முன்னேற்றமும் கிடைக்கும். முக்கியமான முடிவுகளையும் செயல் களையும் மாத முற்பகுதியில் வைத்துக் கொள்வது சீரான நிலையைத் தரும். இந்த மாதம் ஊடகத்துறையினர் தங்கள் முன்னேற்றம் பொருட்டு இடம் மாறக் கூடும். இளைய சகோதரி பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறுவார். பெற்றோருக் கிடையே ஏற்படும் சிறு சச்சரவுகள் பிறகு சரியாகிவிடும். வாரிசுகளுடன் அவ்வப் போது மனஸ்தாபம் வந்துபோகும். மாதக்கடைசியில் குடும்ப ஒற்றுமையுடன் திருமணம் நடக்கும். உங்கள் வாரிசுகள் சிலரது போக்கு புரிபடாமல் திணற நேரிடும். பங்கு வர்த்தகம் மாதக் கடைசி வாரத்தில் கொஞ்சம் லாபம் கண்ணைச் சிமிட்டும். உயர்கல்வியில் ஏற்பட்டிருந்த மறைமுகத் தொல்லைகள் இரண்டாவது வாரத்திலிருந்து சரியாகும். விவசாயத்தில் புது முறையிலிருந்து விலகி பழைய முறையைப் பின்பற்றுவீர்கள். மற்ற தொழில் புரிவோரும் விரைவில் விருத்தி காண்பர். தொழிலில் லாபம் வரும் வேலைகளை மாத முதல் வாரத்தில் முடிவெடுத்து செயல் படுத்துவது மிகவும் உத்தமம். அரசியல் வாதிகள் இடம் மாறுவது கண்டிப்பாக நடக்கும். அந்த மாற்றம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆதாயத்தைக் கொடுக்கும். உங்கள் மருமகன் மிக உயரிய நிலைக்குச் செல்வார். மாத முற்பகுதியில் தம்பதியரிடையே உரசல் அதிகரிக்கும். மறுமணம் வேண்டு வோருக்கு அது நடக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.

Advertisment

பரிகாரம்: இந்த மாதம் உங்கள் மருமகனின் உயர் வாழ்வைப் பார்த்து மகிழ்வீர்கள். கும்பகோணம் படவேட்டு அம்மனை வணங்கவும். பிற மத வழிபாட்டுத் தலங்களில் தேவையறிந்து முதலுதவிப் பொருட்களை வாங்கிக் கொடுக்கவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் செலவு கரைகாணாமல் கரைபுரண்டோடும். எனினும் மாதப் பிற்பகுதியில் வரும் பணவரவைக்கொண்டு சமாளித்துவிடுவீர்கள். உங்கள் இளைய சகோதரம் வெளிநாடு செல்லும் செலவுண்டு. சிலர் புதிதாக கைபேசி வாங்குவீர்கள். உங்களில் சிலர் ஊடகத்துறை ஏஜென்சி, குத்தகை சார்ந்து முதலீடு செய்வீர்கள். பணியாட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிதாரர்கள் வெகு மேன்மை பெறுவர். உங்கள் மாமனார் ஒரு நல்ல நிகழ்வை அல்லது சுபச்செலவை சந்திப்பார். வாகனம், வீடு விஷயங்களில் பழுதுநீக்கும் நிலை ஏற்படும். சிலரது கெட்ட பழக்கங்கள் மாறும். வாரிசுகள் வெளிநாட்டு வேலை சம்பந்தமாக வேறிடம் செல்வர். கலைத் துறையினர் வேறு மொழி, வேறு நாட்டு சம்பந்தம் பெறுவர். சிலரது தொழிலில் நிறைய எதிர்மறை சிந்தனைகள் பொங்கி வழியும். சிலரது தந்தை சிறு உடல்நலக் குறைவை சந்திப்பார் அல்லது ஏதாவது பொருளை பறிகொடுத்துவிடக்கூடும். திருமணம் சற்று இடர்ப்பாடுகளுடன் நடக்கும். மாதக் கடைசி வாரத்தில் ஆன்மிகப் பயணமுண்டு. விவசாயத் தொழில் கொண்டோர் தங்கள் விளைபொருட்களை வெளிநாட்டு ஏற்றுமதிக்குத் தயார் செய்வர். அனைத்துத் தொழில் சார்ந்தோரும் ஏதோவொருவகையில் லாபமும் மனநிறைவும் பெறுவர். உங்களது மூத்த சகோதரி வெளியூர், வெளிநாடு சென்றுவருவார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பலரும் வெளிநாடு, வெளியூர்ப் பயண திட்டத்தை சந்திப்பீர்கள்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: இந்த மாதம் பயணங்கள் மகிழ்வு தரும். சமயபுரம் மாரியம்மனை வணங்கவும். தொழில் செய்யுமிடத்தில் பிற இன, மொழி இளைஞர்களுக்குத் தேவை யைக் கேட்டறிந்து உதவிசெய்யவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் தாயின் அனுசரணை அதிகமாகும். வீடு, மனை வாங்க முதலீடு செய்ய கடன் கிடைக்கும். உங்களில் சிலர் வாரிசுகளின் வெளிநாட்டுப் பயணத்திற்குக் கடன்வாங்க நேரிடும். கடன் வாங்கினா லும் இந்த மாதம் முடிவதற்குள்ளாகவே அதைத் திரும்ப செலுத்தும் வல்லமையும் ஏற்பட்டுவிடும். எதிரிகள் மறையும் நேரமிது. இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க் கைத் துணைவர் நல்ல அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்று சொந்தத் தொழில் ஆரம்பித்து விடுவார். கௌரவப் பட்டங்கள் தேடிவரும் காலமிது. கணக்கு சார்ந்த தொழில் கொண்டவர்கள் மிகவும் மதிப்பு பெறுவர். ஏற்றுமதி- இறக்குமதி செய்பவர்கள் நல்ல லாபம் காண்பர். அரசியல்வாதிகள் தங்கள் மீது ஏற்பட்ட களங்கத்தை நீக்கும் வேலையில் ஈடுபட்டு வெற்றிகாண்பர். சில அரசியல் வாதிகள் மறைவுநிலையை ஏற்படுத்தி, அந்த மறைவின்மூலம் மிகுந்த லாபத் தைப் பெற்றுவிடுவர். உங்களில் சிலருக்கு தந்தையாகும் பாக்கியமுண்டு. அரசுசார்பு இனங்கள், அரசு அதிகாரிகள் நல்ல நிறைவைப் பெறுவர். உங்களது மாமியார் மிகுந்த கீர்த்தி பெறப்போகிறார். மாத முற்பகுதி யில் அரசு சம்பந்தமாக அலைச்சல் ஏற்பட்டு பிறகு நிறைவேற்படும். இந்த மாதம் கடன், நோய், எதிரிகளிடமிருந்து உங்களால் விடுபட இயலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: சொந்தத் தொழில் செய்வோர் நல்ல மனமகிழ்வு பெறுவர். பன்னாரி மாரியம்மனை வணங்கவும். பிற மத, இன குழந்தைகளின் நலன், கல்வி சார்ந்து உதவிசெய்யுங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு முதலிரண்டு வாரங்கள் சற்று தேக்கநிலை, குழப்பம் என மனம் அலைபாயும். பின்னர் சரியாகிவிடும். திருமணம் பற்றிய தகவல் வரும். சிலருக்கு கைபேசி பணம் தரும். குத்தகை, ஒப்பந்தம் நல்ல வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் அழைத்துவரும். அரசு அதிகாரத்திடம் கைகலப்புவரை சென்று, பின்னர் பேச்சுவார்த்தைமூலம் சரியாகிவிடும். வாரிசுகள் வேலை பெறுவர். சிலர் கணக்குத் துறை, ஊடகம், தொலைக்காட்சி போன்ற செய்தித் துறைகளில் வேலை கிடைக்கப் பெறுவர். போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்றவற்றில் பணிபுரிவோர் ஏதோவொரு நன்மை கிடைக்கப்பெறுவர். அவசியமான நிகழ்வுக்கு கடன்வாங்க நேரிடும். கலப்பு மணம் நடக்கும். காவல்துறையினர் முதலிரண்டு வாரங்கள் சற்று இறுக்கமாக இருக்க நேரிடும். பின்னர் சரியாகும். மனை விவகாரங் கள் சற்று கலவரமாகி பிறகு தெளிவு கிடைக்கும். விவசாயிகள் குழப்பமடைந்து தெளிவர். வெளிநாட்டுத் தொடர்புகள் விறுவிறுப்பு பெறும். துணி சம்பந்தமான வியாபாரம் கொண்டோர் ஒரு இறுக்கத்திற்குப்பிறகு லாபம் பெறுவர். தொழிற்சாலை சம்பந்தம் கொண்டோர் தொழிலில் விருத்தி தொடரக் காண்பர். உங்கள் மாமனார் ஏதோவொரு இன்னலை ஏற்படுத்தக்கூடும். உங்கள் உடல் நலன் சார்பாக பயிற்சி மேற்கொள்வீர் கள். அரசியல்வாதிகள் தங்கள் இருப்பைநிலைப் படுத்திக்கொள்ளச் செய்வார்கள். மருமகன் வருவார். கலைத் துறையினர் சிறு சங்கடங் களுக்குப்பிறகு நிம்மதி பெறுவார்கள். காதல் விஷயங்களில் சலசலப்பு ஏற்பட்டு பிறகு சரியாகும். உங்களிடம் பணிபுரியும் ஆட்களின் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: இந்த மாதம் ஏதேனுமொரு கைத்தொழிலைக் கற்றுக்கொள்ளத் தொடங்குவது மிக மன சந்துஷ்டியைத் தரும். மதுரகாளியை வணங்கவும். உங்களுக்குத் தெரிந்த நட்பு வட்டத்தில், உங்கள் தெருவிலுள்ள பிற மத, இன மக்களின் குறைகளை நீக்க உதவுங்கள்.

dd

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களில் பலர் சொந்தத் தொழில் ஆரம்பிக்க முதலீடு செய்வீர்கள். சிலருக்கு அரசுமூலம் அனுகூலம் கிடைக்கும். இந்த மாதக் கடைசியில் வெகு கௌரவம் கிடைக்கப்பெறுவீர்கள். பேசும்போது சொற்களில் கவனமும் கட்டுப்பாடும் தேவை. தொழில் தொடங்க தந்தையின் உதவி கிடைக்கும். இளைய சகோதரர் களுடன் கடந்த மாதம் ஏற்பட்ட வில்லங்கத் துக்கு இந்த மாதம் தீர்வேற்பட்டு முடிவுக்கு வரும். கைபேசி பழுது சரியாக் கப்படும். ஊடகத்துறையினர் எதிர் கொண்ட சில தலைகுனிவுகள் சரியாகும். குத்தகை, ஒப்பந்தம், டெண்டர் விஷயங் களில் ஏற்பட்ட குளறுபடிகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி தெளிவுபெறும். தாயாரின் உடல்நலம் சற்று பாதிக்கப் படலாம். காதல் விஷயங்கள் கசக்கும். சொந்தத்தில் திருமணம் நடக்கும். மாதத்தின் முதல் பத்து நாட்கள் தயவுசெய்து கவனமாக இருத்தல் அவசியம். காது அல்லது மர்ம உறுப்பு பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படக்கூடும். இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தையர் சிலர் சொந்தத் தொழில் தொடங்குவர். பலர் தொழிற் சாலையில் பணிக்குச் சேர்வர். பெண்களில் சிலர் அழகுக்கலை சார்ந்த "பொட்டிக்' கடை களை ஆரம்பிப்பர். கலையுலகினர் வெகு மதிப்பும் லாபமும் பெறுவர். சிலர் கலைச் சேவை புரிய வெளிநாடு செல்வர். அரசியல் வாதிகள் மிக தாராளமாக செலவுசெய்ய வேண்டிவரும். அல்லது இடமாறுதல் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: புதிய தொழில் தொடங்கும் பூஜைகள், நிகழ்வுகள் மன நிறைவைத் தரும். புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்கவும். மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை வேண்டியிருக்கும் பிறமொழி மனிதர்களுக்குத் தேவைப்பட்ட உதவியைச் செய்யவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நேர்மையான சிந்தனைகள் குறைந்து எதிலும் குழப்பமடைவீர்கள். இதனால் உண்மையான தர்ம சிந்தனையின்றி பிறர் பாராட்டுவதற்காக தர்மம் செய்வீர்கள். ஆடம் பரச் செலவுகள் அதிகரிக்கும். இதற்கு இன் னொரு காரணம், வாழ்க்கைத் துணையின் மூலம் கிடைக்கும் மறைமுக வருமானமாகும். செய்தித் துறை, மருத்துவமனை, ஊடகம், கைபேசி அமைப்பு, ஏஜென்சி, ஒப்பந்தம், டெண்டர் போன்றவை சார்ந்து வேலை கிடைக்கும். உங்கள் இளைய சகோதரத்துடன் சற்று மனஸ்தாபம் வரும். உங்களில் சிலர் வீடு மாறுவீர்கள். கலப்புத் திருமணம் நடக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழிலில் அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் தொழிலின் பொருட்டு வெளிநாடு செல்வார்கள். மறுமணம் நடக்கும். வாரிசு களின் கல்வியில் அரசு சம்பந்தமான நெருடல் ஏற்படும். உங்களது உயர்கல்வி யிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டு, பின் அதுவே உங்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பைத் தரும். உயர்கல்வியின் பொருட்டு வெளிநாட்டுப் பயணமுண்டு. வேலையில் பதவி உயர்வும் அதன்பொருட்டு இடமாற்றமும் கிடைக்கும். கொழுப்பு அதிகமாகும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. பணிபுரிய நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். பங்குச்சந்தை சற்று ஆட்டம் காட்டும். சிலரது வீட்டில் பூஜை சம்பந்தமான பொருட்கள் களவுபோக வாய்ப்புள்ளது. உங்களில் பலர் யோகா, தியான வகுப்புகளுக்குச் செல்வீர்கள். பலர் பாதம் சம்பந்தமான நல்ல நகைகள் வாங்குவீர்கள். பயணங்கள் பயன் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: ஆன்மிகப் பயணங்கள், வெளி நாட்டுக் கல்வி மனம் மகிழச் செய்யும். இருக்கன்குடி மாரியம்மனை வணங்கவும். பிறமொழி தம்பதியருக்கு ரத்த காயம் ஏற்பட்டால் மருந்து வாங்கிக்கொடுங்கள்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களில் சிலருக்கு கலப்புமணம் நடைபெறும். சிலர் பழைய வீட்டை வாங்குவீர்கள். வெளிநாட்டுப் பணம் சம்பாதிக்கும் வரன் கிடைப்பார். அல்லது உங்கள் வாழ்க்கைத்துணை வெளிநாட்டு சம்பாத்தியம் பெறுவார். உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் பணிபுரிவோர் உங்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள வாய்ப்புண்டு. உங்கள் இளைய சகோதரம் சற்று சிக்கலில் அகப்பட்டுக்கொண்டு வந்து நிற்பார். வாரிசுகள் கல்வி விஷயமாக வேறிடம் செல்வர். கலையுலகினர் தங்களது தொழில் மேன்மையின் பொருட்டு வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். சிலருக்கு மருத்துவமனை செலவுகள் ஏற்படும். இதற்குப் பரிகாரமாக நீங்கள் முன் கூட்டியே உங்களால் முடிந்த தொகையை நோயுள்ளவர்களுக்கு தானமாக அளித்து விடுங்கள். நீங்கள் சந்திக்கும் நபர்கள் சற்று கோபமும் நிறைய எதிர்மறைத் தன்மையும் கொண்டவர்களாக உணர்வீர்கள். தந்தை யின் காதுகேட்கும் கருவி பழுதாக வாய்ப் புண்டு. அரசு சார்பாக ஏதேனும் பட்டம், பட்ட யம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசியல் வாதிகள் தனி சாம்ராஜ்ஜியம் நடத்த இயலும். இந்த தனித்தன்மையை நிரூபிக்க நிறைய செலவுசெய்ய நேரும். உங்களை எதிர்த் தவர்களின் மறைமுக செயல்கள் நீங்கி விடும். நீங்கள் எவ்வளவு அதிகமாக செலவு செய்கிறீர்களோ அவ்வளவுக்கு உயர்வும் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: பாதங்களில் அலைச்சலும் பர்சின் கரைதலும் மிகப்பெரிய யோகத்தைக் கொண்டுவந்து சேர்க்கும். தில்லைக் காளியை வணங்கவும். பிற மதத் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத்தின் முதல் 15 நாட்கள் உங்கள் தந்தையுடன் மன வேற்றுமை ஏற்படும். மறுபாதி 15 நாட்கள் உங்கள் மகளிடம் பிணக்கு கொண்டிருப்பீர்கள். இந்த மாதம் இவ்வாறே ஓடிவிடும். இந்த மனவேற்றுமை அனைத்தும் பணத்தின் பொருட்டே நிகழும். உங்களிடம் பணி புரியும் வேலையாட்கள் வேறிடம் சென்று விடக்கூடும். சிலரது கைபேசி தவறுதலாக கீழே விழுந்துவிடும். ஒப்பந்தம், குத்தகை மாற்றம் காணும். வீடு மாற்றும் படலம் ஆரம்பிக்கும். சிலரது தாயாருக்கு என்ன வியாதிதான் என்று கண்டுபிடிக்க முடியா மல் மருத்துவர் திணறுவார். திரைப்படம், நாடகம், தொலைக்காட்சித் துறையினர் அதிக பனிச் சுமையினால் திணறினாலும், அது தரும் யோகம் அபரிமிதமாக அமையும். இந்த மாத முதல் மூன்று வாரத்துக்குள் விபரீத ராஜயோகம் ஒன்று கிடைக்கும். வேலை கிடைக்காமல் தவித்துக்கொண்டிருப்பவர் களுக்கு இந்த மாதம் நல்ல வேலை கிடைத்து விடும். சில தம்பதிகளுக்குள் மனப்பிணக்கு வந்துபோகும். பேரன்- பேத்திகளைக் கொஞ்சும் பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.உங்கள் தொழிற்சாலை அல்லது வேலை செய்யுமிடத் தில் சற்று பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அரசியல்வாதிகள் தங்கள் உழைப்பின் மேன்மையை வெளிக்காண்பிக்க, பிடிக்காத ஆட்களிடம்கூட நட்பாகப் பழகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். பதவி உயர்வானது பழைய இடத்திற்கே கொண்டுபோய் சேர்க்கும். சிலருக்கு மருமகன் வருவார். அதீத உழைப்பு அதிக பெருமை சேர்க்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எங்கள்: 7, 16, 25.

பரிகாரம்: சேலம் கோட்டை மாரியம்மனை வணங்கவும். அரசியலில் அடிமட்டத்திலுள்ள வேற்றுமொழி பேசுபவருக்கு உணவு- குறிப்பாக அசைவ உணவு வாங்கிக் கொடுக்கவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கடந்த ஒன்றரை மாதமாக உங்களை பிடித்திருந்த ஒரு துன்பம் இந்த மாதம் முதலிரண்டு வாரங்களுக்குப்பின் நீங்கும். உங்களில் சிலரது இளைய சகோதரியும் மனைவியும் பண உதவி செய்துகொள்வார்கள். கலைத்துறையில் உள்ளவர்கள் ஏதோவொருவகையில் புகழ்பெறுவர். பத்திரிகை, ஊடகத்துறையைச் சார்ந்த பெண்கள் வெகு நேர்த்திபெறுவர். மேலும் இவர்கள் அதிகம் உழைக்கவும் வேண்டியிருக்கும். அருமையான ஒப்பந்தம் கையெழுத்தாகும். குத்தகை சரியாக அமையும். உங்களின் சிலருக்கு டெண்டர் சம்பந்தமான இடங்களில் வேலை கிடைக்கும். இல்வாழ்க்கைத் துணை கண்டிப்பாக வேலை கிடைக்கப்பெறுவார். பங்கு வர்த்தகம் நற்பலன் தரும். ஆரோக்கியம் மேம்படும். பெரிய அளவில் கடன் வாங்க நேர்ந்தாலும் அதனை திரும்பச் செலுத்தும் வாய்ப்பும் வசதியும் தேடிவரும். பணம் அல்லது சொற்கள் சம்பந்தமாக ஒரு அவமானம் ஏற்பட வாய்ப்புண்டு; கவனம் தேவை. மனை விஷயங்களில் சற்று சிரத்தை எடுத்துக்கொள்ளவும். பேரன், பேத்திகள் மற்றும் உயர்கல்வி பொருட்டு வெளிநாட்டுப் பயணமுண்டு. கோவில், தர்ம ஸ்தாபனங்களுக்கு நிறைய செலவழிப்பீர்கள். தங்கத்தில் முதலீடு உண்டு. தொழிற்சாலையில் சில நாட்கள் அரசு அதிகாரிகளின் பிரச்சினை இருப்பி னும், தொழில் சம அளவில் நன்றாகவே ஓடும். அதிக வேலைச்சுமை இருக்கும். அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் வாழ்வின் ஸ்திரத் தன்மைக்காக சிலபல முக்கிய முடிவுகள் எடுப்பர். தங்களது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள எந்த வழியையும் கையாண்டு முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: திருவேற்காடு கருமாரியம் மனை வணங்கவும். உங்கள் வீட்டருகே இருக்கும் பிறமொழி பேசும் இளைஞர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யவும்.