1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத முற்பகுதியில் செலவும் அலைச்சலும் இருக்கும். பிற்பகுதியில் இதன் பலன் தெரியும். அலைச்சல்கள் ஆதாயமாக மாறும். செலவுகள் வருமானத்தைத் தரும். மாத முற்பகுதியில் எவ்வளவு அலைச்சல் உள்ளதோ அவை அனைத் தும் பிற்பகுதியில் முதலீடாக மாறும். தாய்- தந்தையரின் பிணக்கு மறைந்து அனுகூலம் தருவார்கள். உங்கள் தொழிலில் நீங்களே நினைத் தறியாத மேன்மை கிடைக்கும். வேற்று இனத்தவர் ஒருவரின் உதவிமூலம் லட்சியங்களை எளிதில் அடைய முடியும். உணவு சார்ந்த ஒப்பந்தம் பெறுவீர்கள். சிலசமயங்களில் யோசனைகள் தடுமாற்றம் அடையும். அப்போது விநாயகரையும் சித்தரையும் மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். மனத் தெளிவு கிடைக்கும் வேலை, வியாபார இடங்களில் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் சிரமம் தவிர்க்கப்படும். காவல்துறை, தீயணைப்புத் துறையில் உள்ளோர் ஆகஸ்ட் 17 வரை சற்று கவனமாகப் பணிபுரியவும். அதன்பின் ஒரு நன்மை கிடைக்கும். வெளிநாட்டுத் தகவல்தொடர்பு நன்மை தரும். சிலருக்கு மறுமணம் முடிவாகும். பிற இன, மத வரனாக அமையும். ஆகஸ்ட் 17-க்குப் பிறகு பணவரவு அதிகரிப்பதால் நீங்கள் பிறருக்கு உதவுவீர்கள். அரசியல்வாதிகள்- அதுவும் பெண் அரசியல்வாதிகளுக்கு ஒரு வியத்தகு நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 4, 13, 22, 31.
எச்சரிக்கை தேதி: 8, 17, 26.
பரிகாரம்: அரசுக் கட்டணம் செலுத்த திணறுபவர்களுக்கு முடிந்த உதவி செய்யவும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதுமே கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும். சிலசமயம் சிறு அலைச்சல் மூலமும் பணவரவு இருக்கும். தாயார், மூத்த சகோதரிகளால் கொஞ்சம் செலவுண்டு. அது வெளியூர்ப் பயணச் செலவாக இருக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் அருமையாகக் கைகூடும். அது உங்கள் புத்திசாலித்தனத்தினாலோ அல்லது சிலரின் வாரிசுகளின் துணையாலோ இருக்கலாம். உங்கள் கடனில் ஒரு பகுதி அடையும்.பண விஷயத்தால் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சிறு சண்டை வரும். அதற்குக் காரணம் வங்கி நிறுவனங்கள் அனுப்பும் கடன் நினைவூட்டல் கடிதமாக இருக்கலாம். காவல்துறையினர் தங்கள் வேலையில் ஸ்திரம் கொள்வர். அரசுப் பணியாளர்கள் சிறு தூர இடமாற்றம் பெறுவர். பெண்கள் தந்திரமாக செலவு செய்து அதிலிருந்து பன்மடங்கு லாபத்தைப் பெற்றுவிடுவர். "செலவு எட்டணா வரவு எண்பதணா' என்பர். சிலருக்கு பூர்வீக மனை கிடைக்கும். வெளிநாட்டு உறவினர் வரக்கூடும். தொழிலாளர்களுக்கு பழைய இடத்திலேயே தொழில் கிடைக்கும். அவர்களுக்கு அரசு உதவிப் பணமும் கிடைக்கலாம். விவசாயிகள் லாபம் பெறுவர். செலவும் இருக்கும். வியாபாரிகளுக்கும் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும். சிலரது வாழ்க்கைத் துணைக்கும் பங்குதாரர்களுக்கும் உடல்நிலை கெடலாம். மருத்துவச் செலவுக்குப் பின்பு குணம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 9, 18, 27.
எச்சரிக்கை தேதி: 6, 15, 24.
பரிகாரம்: முதிய தம்பதியருக்கு உதவுங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் எதிர்பார்க்காமல் திடீரென்று திருமணம் பேசி முடிக்கப்படும். மாத முற்பகுதியில் கொஞ்சம் இழுபறியாகி பிற்பகுதியில் முடிந்துவிடும். பணவரவு சுமாராக இருக்கும். இளைய சகோதரரால் செலவு வரும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் பற்றி இனம்புரியாத பயம் மனதில் இருக்கும். இதற்காக இயற்கை மருத்துவத்தை அதிகம் நாடுவீர்கள். பங்கு வர்த்தக முதலீடு உண்டு. அறிவு சார்ந்த பயணங்கள், செலவுகள் உண்டு. காவல் துறையினருக்கு பணியிட மாற்றம் வரும். அவசரத்துக்கு உங்கள் மனைவி பணம் கொடுத்து உதவுவார். அல்லது அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து கடனுக்கு ஏற்பாடு செய்வார். சிலருக்கு தந்தைமூலம் அரசு வேலை கிடைக்கலாம். இந்த மாதப் பிற்பகுதியில் உங்கள் தொழில், வேலை என அனைத்தும் மிக எளிதாக நடந்துவிடும். எனவே முக்கியமான விஷயங்களை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குமேல் தொடங்குங்கள். வேலை திருப்தியாக நடக்கும். மனைவிக்கு வேலையில் பதவி உயர்வுண்டு. உங்களில் சிலரது பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருவர். வியாபாரிகள் எவ்வளவு உழைக்கிறார்களோ, அவ்வளவு லாபம் பெறலாம். தம்பதிகளுக்குள் உறவினர்களால் பிணக்கு வரலாம்.
அதிர்ஷ்ட தேதி: 9, 18, 27.
எச்சரிக்கை தேதி: 4, 13, 22, 31.
பரிகாரம்: வயதான பெண்மணிக்குத் தேவையறிந்து உதவவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் சிந்தனைகள் கொடிகட்டிப் பறக்கும். அதிலும் கலைத்துறையில் உள்ளவர்கள் ஆட்டைத் தூக்கி குட்டியில் போடுவர். குட்டியைத் தூக்கி ஆட்டில் போடுவர். இதுவரையில் இல்லாத அளவுக்கு புதுவகையில் திரைப்படம் தயாரித்து வெளியிடுவர். இதில் புத்தி முதலீடே மிகுந்திருக்கும். நிறைய பேருக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். காவல்துறையினரின் செயல்பாட்டில் புதுவகை யோசனைகள் மிளிரும். வயதானவர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணைக்கு அரசு அல்லது கல்வி சார்ந்த வேலை கிடைக்கும். உங்களின் சேவைகள் பாராட்டுப்பெறும். வேலைச்சுமை அதிகமானாலும் அது பலவித மேம்பாடுகளைக் கொண்டுவரும். விவசாயிகள் அரசு சார்ந்து சிறு பயணங் களை, அரசு வாகனங்களைப் பயன்படுத்தும் வசதியை அரசுமூலம் பெறுவர். மனை, வீடு, வாகன விற்பனை நன்றாக இருக்கும். பெண்களிடம் கவனமாகப் பழகவும். வியாபாரிகள் வேறுவிதமான வியாபார யுக்தியில் பணியாற்றுவர். மனைவி வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் ஷாப்பிங் செய்து வெகு செலவு இழுத்துவிடலாம். அரசு பிளாட்டில் முதலீடு செய்வீர்கள். சிலரது வாகனம் அரசால் கவரப்பட்டுப்பின் வந்துசேரும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
எச்சரிக்கை தேதி: 8, 17, 26.
பரிகாரம்: ஊனமுற்ற முதியவர்களுக்கு உதவவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ஆகஸ்ட் மாத முற்பகுதி மிக நல்ல பலன்களை- நிறைவைக் கொடுப்பதாக இருக்கும். பிற்பகுதி சற்று விரயத்தைக் கொடுக்கும். இயன்றவரை முக்கியமான விஷயங்களை மாத முற்பகுதியிலேயே முடிக்க முயலுங்கள். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு அயலினப் பெண் உதவுவார். காவல்துறையினர்- அதிலும் போக்குவரத்துப் பிரிவினர் கவனமாக இருக்க வேண்டும். சிலரது யோசனைகள் அவ்வப்போது குழப்பமடையும். விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. வியாபாரம், தொழிலில் பெண்களால் அனுசரணையும் உண்டு; அலைக்கழிப்பு முண்டு. தொழிலில் வரவேண்டிய வெளிநாட்டுப் பணம் இப்போது வந்து சேரும். மனைவியின் தொழில் தொடங்கும் ஆசை நிறைவேறும். கலைத்துறையில் போட்டோகிராபி, எடிட்டிங், கம்ப்யூட்டர் மூலம் பணியாற்றுபவர்களுக்கு ஓய்வில் லாமல் வேலை இருக்கும். அரசால் லாபமும் உண்டு; நஷ்டமும் உண்டு. செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றைக் கையாளும்போது கவனம் தேவை. பெற் றோருக்கும் உங்களுக்கும் சிறு மனஸ்தாபம் ஏற்படலாம். மேலும், உங்கள் தாயும் தந்தையும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வர். இதற்கு மூன்றாம் மனிதர் காரணமாக இருப்பார். வீட்டில் ஒரு சித்தரின் படத்தை வாங்கி மாட்டுவீர்கள். தாயார் உங்களுக்கொரு நல்ல வெகுமதி கொடுப்பார்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24.
எச்சரிக்கை தேதி: 9, 18, 27.
பரிகாரம்: இளைஞர்கள் இருந்தால் தேவையான உதவியைச் செய்யவும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும். அது அனேகமாக கேஷியர், ரிசப்ஷனிஸ்ட் போன்ற வேலையாக அமையும். சிலருக்கு மருந்துக் கடைகளில் வேலை கிடைக்கும். அடித்தட்டு வேலைகளில் நிறைய வயதான பெண்கள் சேர்வர். தம்பதிகள் வெவ்வேறு இடங்களில் வாழும் நிலையுண்டு. மூத்த சகோதரரை நன்கு கவனித்துக் கொள்ளவும். சமையல் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலரது பங்குதாரர் விலகிச் செல்வர். வியாபார இடத்தில் மாற்றம் நடக்கும். தொழில் ஏற்ற இறக்கமாக இருக்கும். பேச்சில் கவனம் தேவை. சிலசமயம் உங்கள் சொற்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு சண்டை வந்து சேரலாம். உங்களுக்கும் மருமகனுக்கும் இடையே மனஸ்தாபம் வரலாம். மாத முற்பகுதியில் வீடு மாற்றுவீர்கள். அரசியல் வாதிகள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். இந்த மாதம் மிக எளிதாக நினைத்த அளவில் கடன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையால் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு அவமானமும் ஏற்படக்கூடும். திருமண விஷயங்கள் தள்ளிப்போகும். வீடு, மனை விற்பனை மற்றும் அவை சார்ந்த தரகுத் தொழில் இந்த மாதம் நன்கு நடக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28; 5, 14, 23.
எச்சரிக்கை தேதி: 3, 12, 21, 30.
பரிகாரம்: கோவிலில் வேலை செய்பவருக்கு உதவவும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் மனதில் ஒரு பயமும் திகிலும் இருந்துகொண்டே இருக்கும். கடவுளை வணங்கலாமா வேண்டாமா- அதில் பயனிருக்கிறதா இல்லையா என மனம் மிகவும் அலைபாயும். தன்னம்பிக்கை இராது. வேறிடம் செல்ல முற்படுவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில், வியாபார இடத்தில் இம்சை உண்டாகும். அதனால் அவற்றை ஏறக்கட்டிவிட்டு பிறந்த ஊர் சென்றுவிடலாமா என்று தோன்றும். இந்த நிலை மாதப் பிற்பகுதியில் மாறி விடும். தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரம் தொடர்ந்து நடக்கும். நீங்கள் நினைத்தபடி வேறொரு இடத்தில் வேலை கிடைக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலர் அசைவ ஹோட்டல் நடத்துவர். அல்லது அதில் வேலைக்கு சேர்வர். மனைவிக்கு வேலை கிடைக்கும். பணவரவு சற்று தாமதமாகும். குறித்த நேரத் தில் கிடைக்காது. கொடுத்த செக்குகளும் ஒழுங்காக பாஸ் ஆகாது. பணம் வருகிறதோ இல்லையோ- அது சம்பந்தமான மெசேஜ் மட்டும் வரும். அரசு விஷயங்கள் முதலில் இம்சையும், பிறகு நன்மையும் தரும்.
அதிர்ஷ்ட தேதி: 9, 18, 27.
எச்சரிக்கை தேதி: 2, 11, 20, 29.
பரிகாரம்: வீட்டு வேலை செய்பவருக்கு உதவவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வீடு மாற்றம் உண்டு. இளைய சகோதரர் வேறிடம் செல்வார். வேலை அதிகரிப்பால் உடலில் நோய் ஏற்படலாம். சிலரது வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். அல்லது புதிய தொழில் தொடங்குவர். கலைஞர்களுக்கு வேலை, கௌரவம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் நீங்கள் சற்றும் நினைத்தறியாத ஒரு நல்ல நிகழ்வு நடக்கும். வீடு விஷயமாக எண்ணிய எண்ணம் நிறைவேறும். காவல் துறையினருக்கு கேட்டது கிடைக்கும். விவசாயம் நல்ல நிலைமை பெறும். நோய் மறையும். கடன்களை அடைத்துவிடுவீர்கள். வெளிநாட்டுத் தொழில் சம்பந்தமான வேலைகள் சுறுசுறுப்படையும். ஒப்பந்தம் கிடைக்கும்போது வேலையாட்கள் இன்றி சிரமப்படுவீர்கள். பெண்களுக்கு கலைத்துறை, விளையாட்டு, குழந்தை கள் சார்ந்த வேலை, பங்கு வர்த்தக அலுவலகத் தில் வேலை கிடைக்கும். அல்லது அவை சார்ந்த தொழில் தொடங்குவர்.வாழ்க்கைத் துணையோடு சற்று கருத்து வேறுபாடு வரலாம். மாதப் பிற்பகுதியில் உங்கள் வேலை, தொழில் சம்பந்தமான நற்செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். அல்லது வேலையிலிருக்கும் துன்பம் மறையும். சிலர் கோவில்களுக்கு தங்கள் பிரார்த்தனைக் காணிக்கையை கைபேசிமூலம் அனுப்புவர். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். கைபேசியில் வரும் தகவலை நம்பினால் மோசம் போக நேரும்; கவனம் தேவை.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23.
எச்சரிக்கை தேதி: 1, 10, 19, 28.
பரிகாரம்: கீழ்மட்ட அரசுப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத முற்பகுதியில் நீங்கள் யோசித்தே பாராத நன்மைகளை அனுபவிப்பீர்கள். சிரமங்கள் எல்லாம் மறைந்து நிம்மதியாக உணர்வீர்கள். மாதப் பிற்பகுதியில் இயல்பான வாழ்க்கையாகிவிடும். கைபேசியின் குறுந்தகவல் பணம் கொண்டு வரும். மற்றும் ஒப்பந்தங்கள்மூலமும் தனவரவு உண்டு. தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவுக்கு கடன் வாங்க நேரிடும். சிலருக்கு பள்ளிகளில் வேலை கிடைக்கும். அது பகுதி நேர வேலை அல்லது தொலைத்தொடர்பு சாதனம் சம்பந்தமான வேலையாக இருக்கும். இந்த இக்கட்டான நேரத்திலும் வாழ்க்கைத்துணை சம்திங் பணம் கொண்டுவந்துவிடுவார். மாதப் பிற்பகுதியில் சிலர் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு ஆளாகநேரும். உங்கள் தொழிலை நன்றாக யோசித்து, கைபேசியின் துணையும் கொண்டு உழைத்தால் ஓரளவு நன்றாக நடக்கும். உழைப்பு அதிகமாகவும் லாபம் குறைவாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
எச்சரிக்கை தேதி: 5, 14, 23.
பரிகாரம்: நோயுற்றவர்களுக்கு மருந்து வாங்கிக் கொடுக்கவும்.