ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் - ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

/idhalgal/om/august-month-zodiacs

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருக்கிறார். ஆகஸ்ட் 10-ல் நீசம் தெளிந்து 5-ஆம் இடத்துக்கு மாறுகிறார்; 8-ஆமிடம், 11-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்க்கி றார். 7-ஆம் தேதிமுதல் குருவும் வக்ர நிவர்த்தியாகி றார். குருவைச் செவ்வாய் பார்க்கிறார். சுபவிரயம் உண்டாகலாம். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் முயற்சியை மேற்கொள்ள லாம். தேக சுகத்தில் சிறு சுகவீனம் ஏற்பட்டு விலகும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் காரிய சித்தி உண்டாகும். ராகு- கேதுக்களின் 3, 9-ஆமிட சஞ்சாரத்தால் சொந்த பந்தங்களால் ஆதரவும் ஆதாயமும் கிட்டும். சமுதாய அந்தஸ்து உயரும். கௌரவப்பதவி தேடிவரும். ஆன்மிக வழிபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் செலவுகள் இருந்தாலும் லாபமும் ஏற்படும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்திலும் ஒற்றுமை நிலவும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்த வகையில் நல்லவை நடைபெறும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் புதனுடன் சஞ்சாரம். அவர்களுடன் ஆகஸ்ட் 17-ஆம் தேதிவரை சூரியனும் 3-ல் கூடியிருக் கி றார். உடன்பிறந்தவர்களால் மனக்குழப்பமும், வீண் சங்கடங்களும் உண்டாக லாம். 2-க்குடைய புதனோடு சுக்கிரன் சேர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் தேவை கள் பூர்த்தியடையும். பதவி யில் இருப்போருக்கு திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அது நல்ல மாற்றமாகவும் அமையும். சிலருக்கு பதவி உயர்வும் உண்டாகலாம். ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குப் பிறகு குரு வக்ர நிவர்த்தியாகி றார். 7-ல் இருக்கும் குரு திருமணத்தடைகளை நீக்குவார். ராசியையும் குரு பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். அட்ட மத்துச்சனியால் காரிய தாமதம், மந்தத்தன்மை ஆகியவற்றை சந்தித்தாலும், குரு ராசியைப் பார்ப்ப தால் அவை நிறைவேறும்; தடையாகாது. பிள்ளை களால் நன்மையும் அனு கூலமும் எதிர்பார்க்கலாம். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படும் என்றா லும், அது சுபச்செலவாக அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு லாபாதிபதியான செவ்வாய் 2-ல் நீசமாக இம்மாதம் 10-ஆம் தேதிவரை இருக் கிறார். பொருளாதாரத்தில் தேக்க நிலை, குடும்பத்தில் குழப்பம் ஆகியவை காணப் பட்டாலும், செவ்வாய் நீசம் தெளிந்து 3-ஆமிடத் துக்கு மாறியபின் இவற் றில் நிவாரணம் தெரியும். 7-ல் உள்ள சனி கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசமாக இருக்கிறார். ஆகஸ்ட் 10-ல் நீசம் தெளிந்து 5-ஆம் இடத்துக்கு மாறுகிறார்; 8-ஆமிடம், 11-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்க்கி றார். 7-ஆம் தேதிமுதல் குருவும் வக்ர நிவர்த்தியாகி றார். குருவைச் செவ்வாய் பார்க்கிறார். சுபவிரயம் உண்டாகலாம். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் முயற்சியை மேற்கொள்ள லாம். தேக சுகத்தில் சிறு சுகவீனம் ஏற்பட்டு விலகும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் காரிய சித்தி உண்டாகும். ராகு- கேதுக்களின் 3, 9-ஆமிட சஞ்சாரத்தால் சொந்த பந்தங்களால் ஆதரவும் ஆதாயமும் கிட்டும். சமுதாய அந்தஸ்து உயரும். கௌரவப்பதவி தேடிவரும். ஆன்மிக வழிபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் செலவுகள் இருந்தாலும் லாபமும் ஏற்படும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்திலும் ஒற்றுமை நிலவும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்த வகையில் நல்லவை நடைபெறும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ல் புதனுடன் சஞ்சாரம். அவர்களுடன் ஆகஸ்ட் 17-ஆம் தேதிவரை சூரியனும் 3-ல் கூடியிருக் கி றார். உடன்பிறந்தவர்களால் மனக்குழப்பமும், வீண் சங்கடங்களும் உண்டாக லாம். 2-க்குடைய புதனோடு சுக்கிரன் சேர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் தேவை கள் பூர்த்தியடையும். பதவி யில் இருப்போருக்கு திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அது நல்ல மாற்றமாகவும் அமையும். சிலருக்கு பதவி உயர்வும் உண்டாகலாம். ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குப் பிறகு குரு வக்ர நிவர்த்தியாகி றார். 7-ல் இருக்கும் குரு திருமணத்தடைகளை நீக்குவார். ராசியையும் குரு பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். அட்ட மத்துச்சனியால் காரிய தாமதம், மந்தத்தன்மை ஆகியவற்றை சந்தித்தாலும், குரு ராசியைப் பார்ப்ப தால் அவை நிறைவேறும்; தடையாகாது. பிள்ளை களால் நன்மையும் அனு கூலமும் எதிர்பார்க்கலாம். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படும் என்றா லும், அது சுபச்செலவாக அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு லாபாதிபதியான செவ்வாய் 2-ல் நீசமாக இம்மாதம் 10-ஆம் தேதிவரை இருக் கிறார். பொருளாதாரத்தில் தேக்க நிலை, குடும்பத்தில் குழப்பம் ஆகியவை காணப் பட்டாலும், செவ்வாய் நீசம் தெளிந்து 3-ஆமிடத் துக்கு மாறியபின் இவற் றில் நிவாரணம் தெரியும். 7-ல் உள்ள சனி கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவார். 6-ல் இருக்கும் குருவை 3-ல் மாறும் செவ்வாய் பார்க்கிறார். தொழில் போட்டி, வியாபாரப் போட்டி ஆகியவற்றில் சத்ரு ஜெயம் உண்டாகும். கடன்கள் ஏற்பட்டாலும் அவை சுபக்கடனாக அமையும். ஜென்ம ராகு உடலில் சோம்பல், அசதி ஆகியவற்றை ஏற்படுத்த லாம். பாக்கிசாக்கிகள் வசூலாகும். உறவினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிடிவாதத்தைக் கைவிட்டு அமைதி காப்பது நல்லது. பெரியவர் களை அனுசரித்து நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும். யாருக்கும் ஜாமின் பொறுப்பேற்க வேண்டாம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் மிக அவசியம்.

கடகம்

கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 2-ல் மாறுகிறார். குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் குருவைப் பார்க்கிறார். 9-க்குடைய குருவை 10-க்குடைய செவ்வாய் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. தொழிலில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும். அடிமை வேலையில் இருப்பவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம். முன்னேற்றகரமாகவும் லாபகரமானதாகவும் அமையும். குரு ராசியைப் பார்ப்பதால் உங்கள் திறமை பளிச்சிடும். செயல்பாடு, கீர்த்தி யாவும் நிறைவாக செயல்படும். வரவேண்டிய பாக்கிசாக்கிகள் இழுபறியாக இருந்தாலும் வசூலாகிவிடும். கௌரவம், அந்தஸ்து உயரும். தேகசுகத்தில் இருந்து வரும் பிணி, பீடைகள் விலகி ஆரோக்கியம் பிறக்கும். கடன்கள் அடைபடும். எந்தச் செயலையும் துணிவுடன் செய்து வெற்றியாக்க லாம். பணபலம், படைபலம் இந்த இரண்டை யும்விட தெய்வபலம் உங்களைக் காத்து நிற்கும். குருவருளும் திருவருளும் துணைபுரியும்.

சிம்மம்

மாத முற்பகுதிவரை சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் இருக்கிறார். (17-8-2019 வரை). அவருடன் 10-க்குடைய சுக்கிரனும் கூடியிருக்கிறார். தொழில்துறையில் எதிர் பார்த்த அளவு மாற்றங்கள் ஏற்படாமல் சங்கடத்தை ஏற்படுத்தும். வேலை பார்க்கு மிடத்தில் உயரதிகாரிகள் அல்லது உடன் பணிபுரிவோரால் மனவருத்தத்தை சந்திக்க நேரும். மந்தத்தன்மையும் தாமதமும் நிகழும். 10-ஆம் தேதிமுதல் 9-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசிக்கு மாறுகிறார்; 4-ல் இருக்கும் குருவைப் பார்க்கிறார். பூமி, வீடு, மனை, வாகன வகையில் சில அனுகூலமான பலனை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்து சம்பந்த மான வில்லங்க விவகாரங்கள் நல்ல முடிவுக்கு வரும். உடன்பிறந்தோரால் ஏற்பட்ட களங்கம், வருத்தம் மாறி ஒற்றுமையுணர்வு உண்டாகும். ஜென்மத்தில் சூரியன் ஆட்சிக்கு வரும்போது அரசு சம்பந்தப் பட்ட காரியங்கள் நிறைவேறம். அரசு உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு இழுபறியாக இருக்கும் நிலை விலகி செயல்பாடுகள் பூர்த்தியாகும். 5-ல் உள்ள சனி, கேது பிள்ளைகள் வகையில் சில செலவு, விரயங்களை ஏற்படுத்தலாம்.

கன்னி

sss

கன்னி ராசிநாதன் புதன் 11-ல் இருக்கிறார். அவருடன் 9-க்குடைய சுக்கிரனும் இணை கிறார். தொழில்துறையில் லாபகரமான சூழல் நிலவும். நல்ல சிப்பந்திகள் அமையப் பெற்று வியாபாரத்தை நல்லமுறையில் நடத்தலாம். 10-ஆம் தேதிமுதல் 9-க்குடைய செவ்வாய் 12-ல் மறைகிறார். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவிகள், அனுகூலங்கள் ஏமாற்ற மாகலாம். அவர்களால் சங்கடங்களும் வருத் தங்களும் உண்டாகும். செலவினங்களையும் சந்திக்கநேரும். பூர்வீகம் மற்றும் தந்தைவழி சொத்துகளால் வில்லங்கம், வியாஜ்ஜியம், வழக்கு ஆகியவற்றை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் உள்ளோர் புதிய யுக்திகளைக் கையாண்டு விருத்தி செய்யலாம். ராகு- கேது 10, 4-ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் வெளிவட்டாரப் பழக்கங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத வகையில் சில உபரி வருமானங்களும் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லதொரு ஒப்பந்தம் கையெழுத்தாகும். குடும்பத்தில்தான் கணவன்- மனைவிக்குள் சச்சரவு, வாக்குவாதம் இருந்துகொண்டே இருக்கும். என்றாலும் பிரிவினைக்கு இடமிருக்காது.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் மாத முற்பகுதிவரை 10-ல் இருக்கிறார். அவருடன் 9-க்குடைய புதனும் இணைந்து 10-ல் இருக்கிறார். எனவே தர்மகர்மாதிபதி யோகம் செயல்படும். முயற்சிகளில் வெற்றியும் நன்மையும் அடையலாம். கோரிக்கை ஈடேறும். 2-ல் உள்ள குரு 7-ஆம் தேதிமுதல் வக்ர நிவர்த்தியடை கிறார். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். 10-ஆம் தேதிமுதல் 10-ல் உள்ள செவ்வாய் நீசம் தெளிந்து 11-ல் மாறுகிறார். இதுவரை செயல்பாட்டில் இருக்கும் தேக்கநிலை மாறும். தொழில்துறையில் நிலவும் தொய்வுகள் விலகும். சுறுசுறுப்பும் வேகமும் உண்டாகும். 2-க்குடையவர் 2-ஆமிடத்தையே பார்க்கிறார். வீடு, வாகன வகையில் கடன்கள் உருவானாலும் அது சுபக்கடனாக அமையும். கணவருக்கு மனைவியாலும், மனைவிக்கு கணவராலும் சகாயம் ஏற்படும். புராணத்தில் பாமாவின் உதவியால் ஒரு அசுரனை கிருஷ்ணர் வதம்செய்ய வெற்றி கிடைக்கப்பெற்றது. அதை "பாமா விஜயம்' என்பார்கள். அது போல மனைவியால் கணவருக்குப் பெருமை உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 10-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 2, 5-க்குடைய குரு ஜென்மத்தில் இருப்பதால், பொருளாதாரத்தில் தட்டுப்பாடில்லை என்றாலும், தேவைகள் குறிப்பிட நேரத்தில் நிறைவேறாது. ஏராளமான வரவுகள் வந்தாலும், அதற்குச் சமமான தாராள செலவுகளும் காணப்படும். 2-ல் உள்ள சனி, கேது குடும்பத்தில் அவ்வப் போது சச்சரவுகள், பிரச்சினைகள், வெறுப்பு களை உண்டாக்குவர். வாக்குச்சனி கோப்பைக் குலைக்கும் என்பதுபோல் பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது மிக அவசியம். "ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும்' என்ற பழமொழியை மனதில் வைத்து கவனமுடன் நடந்துகொள்ளவும். குரு 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகள் வகையில் நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும். உத்தியோகத்துறையில் இருப்போருக்கு இடமாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம்.

தனுசு

தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. 8-ல் நீசம்பெற்ற செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 9-ல் மாறுகிறார்; 12-ல் இருக்கும் குருவைப் பார்க்கிறார். தொழில்துறை சம்பந்தமான விரயங்கள் கட்டுக்குள் இருக்கும். ஜென்மத்திலுள்ள கேதுவும், அவரைப் பார்க்கும் ராகுவும் காரணமில்லாத கவலைகளையும், மனபயத்தையும் உண்டாக்குவார்கள். 9-க்குடைய சூரியன் 8-ல் மறைகிறார். சிலருக்கு தகப்பனாரு டன் கருத்து வேறுபாடு, பனிப்போர் போன் றவை நிலவும். இன்னும் சிலர் பெற்றோரு டன் சண்டை போட்டு பேசாமல் விலகிச்செல்வர். 17-ஆம் தேதிமுதல் சூரியன் 9-ல் ஆட்சிபெறும்போது இந்த நிலை மாறும். யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வதன்மூலம் உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்படலாம். "நீரடித்து நீர் விலகாது', "கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை' என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்கள் திங்கட் கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த குரு சனிக்கு 12-ல் மறைவு. குருவுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 8-ல் மறைவு. ஆக எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்கமுடியாமல் இழுபறியாக இருக்கும் நிலை. களஸ்திரகாரகன் சுக்கிரன், களஸ்திர ஸ்தானத்தில் இருக்கி றார். கணவன்- மனைவிக்குள் பிரச்சினை எழலாம். திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமணம் தடைப்படலாம்; தாமதமாகலாம். என்றாலும் 11-ல் உள்ள குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால், தடைகளை சமாளித்து முயற்சிகளை வெற்றியாக்கலாம். ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதால் சிலருக்கு மந்தப்போக்கு, மறதித்தன்மை ஏற்படலாம். இன்று செய்வதை நாளை செய்வோம் என்று ஒத்திப்போட்டு சோம்பேறித்தனப்படலாம். யாருக்கும் ஜாமின் பொறுப்பேற்று கையெழுத்துப் போடவேண்டாம். அநாவசிய அலைச்ச லும், தேவையற்ற விரயமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் உண்டாகலாம்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கி றார். அவருடன் கேது சம்பந்தம். 2-க்குடைய குரு 10-ல் திக்பலம் பெறுகிறார். நீண்டகால கனவுத்திட்டங்களை செயல்படுத்தலாம். வெற்றி ஏற்படும். மூத்த சகோதரர்கள்வழி அனுகூலம் உண்டாகும். இளைய சகோதர சகோதரிகளுக்கு உங்களால் இயன்ற உதவி, ஒத்தாசைகளும் கிடைக்கும். 7-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. தகப்பனாருக்கு சில சங்கடங்களும் செலவுகளும் ஏற்படலாம். தேகசுகத்தில் மருத்துவச் செலவுகளும் தவிர்க்கமுடியாதவையாக அமையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக யாரையும் நம்பி பணமோ பொருளோ கொடுத்து ஏமாற வேண்டாம். ராகு 5-லும், கேது 11-லும் சஞ்சரிப்பதால், அயல்நாடு செல்லும் முயற்சி வெற்றிதரும். குடும்பத்தில் சுகமும் சந்தோஷ மும் நிலவும். பிள்ளைகள்வகையில் அதிக பிரயாசைக்குப் பிறகே காரிய சித்தி உண்டாகும். சிலர் புதிய உத்தியோகத்தில் மனநிறைவைப் பெறலாம். கணவர்வகை உறவினரால் சங்கடம் நேர்ந்தாலும், "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற தத்துவத்தின்படி பொறுமையாக நடந்துகொள்ளவும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 7-ஆம் தேதிமுதல் வக்ர நிவர்த்தியாகிறார். சிலருக்கு தொழில்வகையில் இடமாற்றம் அல்லது ஊர்மாற்றம் ஏற்பட்டு தொழிலை சிறப்பு டன் இயக்கலாம். மனைவிவகையிலும் ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டாகும். அதிக அலைச்சல் உடல்நலத்தில் சோர்வையும் அசதியையும் உண்டாக்கும். 2-க்குடைய செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 6-ல் மறைகிறார். பொதுவாக 2-க்குடையவர் 6-ல் நின்றால் நமது பணம் அந்நியரிடத்தில்; 6-க்குடையவர் 2-ல் நின்றால் அந்நியர் பணம் நமது வசம் என்பது ஜோதிடமொழி. இங்கு 2-க்குடையவர் 6-ல் என்பதால் வரவேண்டிய பாக்கிசாக்கிகள் இழுபறியாக இருக்கும். அடுத்தவர் விஷயத்தில் அதிகம் தலையிடா மல், உங்களது வேலையை மட்டும் கவனித் தாலே நேரம் போதவில்லை என்று தோன்றும். வியாபாரத்தில் கவனம் செலுத்தி முன்னேறும் வழிமுறைகளைக் கடைப்பிடித்து செயல்படவும். எல்லாரையும் திருத்துவது நமது வேலையல்ல. நம்மை நாமே முதலில் திருத்திக்கொள்வது நல்லது. 9-ஆம் இடத்து குரு அதை நிவர்த்திசெய்து தருவார். குருவருள் பெருகும்.

om010819
இதையும் படியுங்கள்
Subscribe