மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக இருக்கிறார். தொழில்துறை சம்பந்தமாக சில நல்ல முடிவுகளை எடுக்கலாம். என்றாலும் கேது செவ்வாயுடன் சம்பந்தப்படுவதால், சில பிரச்சினைகளை சந்தித்து அதன்பிறகே சுமுகமான நிகழ்வுகள் அமையும். தேக சுகத்தில் சௌகரியக் குறைவுகளை சந்திக்க நேரும். தவிர்க்கமுடியாத பயணங்களும் ஏற்படும். சிலருக்கு அது வீண் அலைச்சலாகவும் அமையும். கடந்த காலத்தில் 3-க்குடைய புதன் வக்ரமாக இருந்ததால் உடன்பிறந்தவர் வகையில் கருத்து வேற்றுமை, தைரியக் குறைவு போன்றவற்றை சந்தித்திருக்க லாம். இந்த மாதம் 3-ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே மேற்கண்ட பலனில் ஒற்றுமையும் நல்லுறவும் உண்டாகும். 9-ல் உள்ள சனி வக்ரமாக இருக்கிறார். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியங்கள் பூர்த்தியாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத் தில் சிலர் நல்ல மாற்றங்களை சந்திக்க நேரும். வேலையில்லாமல் கவலைப்பட்டோ ருக்கு நல்ல வேலை அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதத் தொடக்கத்தில் கன்னி ராசிக்குச் செல்கிறார். சுக்கிரனுக்கு கன்னி ராசி நீச வீடு. ராசிநாதன் நீசமடைகிறார். உங்களு டைய செயல்பாடுகள், முயற்சிகளில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றங்களை சந்திக்க முடியாது. நினைத்ததை உடனடியாக செய்ய முடியவில்லையே என்ற கவலை உண்டாகும். குடும்ப வாழ்விலும் பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் இதுவரை ஆதரவாக இருந்த மேலதிகாரிகள் மாற்றலாகி புதிய அதிகாரிகள் வந்து உங்களுக்கு இடைஞ்சல் களை ஏற்படுத்தலாம். 2-க்குடைய புதன் ஆகஸ்ட் 3-ல் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலிலில் சில அனுகூலமான சூழலும் நிலவும். என்றாலும் குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரயங்களும் உண்டாகும். அதை சுபவிரயமாக மாற்ற முயற்சிப்பது புத்திசாலிலித்தனம். சுயதொழில் செய்பவர்களுக்கு சற்று மந்தமான நிலை காணப்படும். வெளிநாட்டு வேலை அல்லது வெளியூர், வெளிமாநில வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்திலேயே வக்ர நிவர்த்தியடைகிறார். உங்கள் காரியங்கள் யாவும் பூர்த்தியாகும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி விலகும். எதிர்கால முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகம், தொழிலிலில் உயர்வு ஏற்படும். 5, 12-க்
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக இருக்கிறார். தொழில்துறை சம்பந்தமாக சில நல்ல முடிவுகளை எடுக்கலாம். என்றாலும் கேது செவ்வாயுடன் சம்பந்தப்படுவதால், சில பிரச்சினைகளை சந்தித்து அதன்பிறகே சுமுகமான நிகழ்வுகள் அமையும். தேக சுகத்தில் சௌகரியக் குறைவுகளை சந்திக்க நேரும். தவிர்க்கமுடியாத பயணங்களும் ஏற்படும். சிலருக்கு அது வீண் அலைச்சலாகவும் அமையும். கடந்த காலத்தில் 3-க்குடைய புதன் வக்ரமாக இருந்ததால் உடன்பிறந்தவர் வகையில் கருத்து வேற்றுமை, தைரியக் குறைவு போன்றவற்றை சந்தித்திருக்க லாம். இந்த மாதம் 3-ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே மேற்கண்ட பலனில் ஒற்றுமையும் நல்லுறவும் உண்டாகும். 9-ல் உள்ள சனி வக்ரமாக இருக்கிறார். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியங்கள் பூர்த்தியாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத் தில் சிலர் நல்ல மாற்றங்களை சந்திக்க நேரும். வேலையில்லாமல் கவலைப்பட்டோ ருக்கு நல்ல வேலை அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதத் தொடக்கத்தில் கன்னி ராசிக்குச் செல்கிறார். சுக்கிரனுக்கு கன்னி ராசி நீச வீடு. ராசிநாதன் நீசமடைகிறார். உங்களு டைய செயல்பாடுகள், முயற்சிகளில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றங்களை சந்திக்க முடியாது. நினைத்ததை உடனடியாக செய்ய முடியவில்லையே என்ற கவலை உண்டாகும். குடும்ப வாழ்விலும் பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் இதுவரை ஆதரவாக இருந்த மேலதிகாரிகள் மாற்றலாகி புதிய அதிகாரிகள் வந்து உங்களுக்கு இடைஞ்சல் களை ஏற்படுத்தலாம். 2-க்குடைய புதன் ஆகஸ்ட் 3-ல் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலிலில் சில அனுகூலமான சூழலும் நிலவும். என்றாலும் குரு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரயங்களும் உண்டாகும். அதை சுபவிரயமாக மாற்ற முயற்சிப்பது புத்திசாலிலித்தனம். சுயதொழில் செய்பவர்களுக்கு சற்று மந்தமான நிலை காணப்படும். வெளிநாட்டு வேலை அல்லது வெளியூர், வெளிமாநில வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்திலேயே வக்ர நிவர்த்தியடைகிறார். உங்கள் காரியங்கள் யாவும் பூர்த்தியாகும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி விலகும். எதிர்கால முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகம், தொழிலிலில் உயர்வு ஏற்படும். 5, 12-க்குடைய சுக்கிரன் நீசமாகிறார். பிள்ளைகள் வகையில் உங்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதில் தடை, தாமதங்களை சந்திக்க நேரும். அவர்களால் சில பிரச்சினைகளையும் சந்தித்து சரிக்கட்ட வேண்டிய நிலையும் உண்டாகும். தொழில் அல்லது வேலை சம்பந்தமான பயணங்கள் உடல் அலைச்சலையும் வைத்தியச் செலவையும் உண்டாக்கும். மனைவிவழியில் சில சங்கடங்கள் உருவாகும். ஆனாலும் பெரியளவு பாதிப்புகளை ஏற்படுத்தாது. 11-க்குடைய செவ்வாய் 8-ல் உச்சம் பெற்று 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் புதிய உத்தியோகம் அல்லது நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பாகப்பிரிவினை சம்பந்தமாக சுமுக முடிவுகள் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்கு 3-க்குடைய புதன் இந்த மாதம் வக்ர நிவர்த்தியாகிறார். சகாய ஸ்தானாதிபதியின் வக்ர நிவர்த்தி யால் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக் குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக் கொடுப்பர். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பிவந்து உறவுகொண்டாடுவார்கள். ஒருசிலருக்கு எதிர்பார்த்தபடியே வெளிநாட்டு யோகம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவியும் தேடிவரும். சுபவிரயங்களும் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம். ஆடை அணிகலன்களும் சேரும். ஜென்ம ராகு சிலசமயம் உங்களது முயற்சிகளில் தளர்ச்சியை ஏற்படுத்தலாம். உடல் சோர்வும் உண்டாகும். என்றாலும் 10-க்குடைய செவ்வாய் 7-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். உங்கள் தடைகளை முறியடித்து வெற்றி காணலாம். 6-ல் உள்ள சனி உங்கள் காரியங்களையும் செயல்பாடுகளையும் பூர்த்திசெய்து வைப்பார். ஒருசிலர் புதிய சொத்துகள் வாங்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதிவரை விரய ஸ்தானமான 12-ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவருடன் ராகுவும் இணைந்திருக்கிறார். வரவு வருவதற்கு முன்னரே செலவு வந்து காத்திருக்கும். ஒரு செயலை முடித்துக்கொடுத்தும் அதற்குண்டான பலனை அனுபவிக்க முடியாத சூழ்நிலை. உதாரணமாக, ஒரு வீட்டுத்தரகர் புதிய வீடு ஒன்றை ஒருவருக்கு முடித்துக்கொடுத்துப் பத்திரமும் பதிந்து முடித்துவிட்டார். ஆனால் வங்கி லோன் குறைவாகக் கிடைத்த காரணத்தால், வீட்டை விலைக்கு வாங்கியவர் வீட்டுத்தரகருக்குத் தரவேண்டிய தொகையில் கால்பகுதியை மட்டும் கொடுத்துவிட்டு, மீதிக்குப் பின் தேதியிட்ட காசோலையைத் தந்துவிட்டார். தரகருக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் இழுபறியானது. இதுதான் ஒரு செயலை முடித்தும் அதற்குண்டான பலனை அனுபவிக்கமுடியாத நிலை. 4-க்குடைய செவ்வாய் வக்ரமாக இருக்கிறார். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். பங்காளிப் பகை உருவாகலாம். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஒருசிலருக்கு உண்டாகும். அவை நல்ல மாற்றமாகவும் நிகழும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். சிலருக்கு உடல்ரீதியாக இருந்துவந்த தொல்லைகள் விலகி சௌகரியம் உண்டாகும். மாத முற்பகுதிவரை விரயாதிபதி சூரியன் 11-ல் இருக்கிறார். விரயத்திற்கேற்ற லாபம் வரும். எதைச் செய்தாலும் பணத்தை வைத்துக்கொண்டு செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. காரியத்தைத் தொடங்கிவிட்டால் அதற்குரிய தொகை ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்துசேரும். 4-ல் உள்ள சனி வக்ரமாக இருக்கிறார். சனி நன்மை தரும் விதத்தில் உங்களுக்குப் பலவிதக் காரியங்களை முடித்துக் கொடுப்பார். தாயார் உடல்நலனில் சற்று அக்கறை காட்டுவது நல்லது. 2-ல் உள்ள குரு, பொருளாதாரத் தடைகளை நீக்கி தேவைகளை நிறைவேற்றுவார். 6-ஆம் இடத்தை குரு பார்க்கிறார். தொழில் சம்பந்தமாகவோ, சிலருக்கு படிப்பு சம்பந்தமாகவோ வங்கிக்கடன் அமையும். இந்த மாதம் 2-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். சில எதிர்பாராத மாற்றங்கள் வந்துசேரும். வாழ்க்கைத்துணை வழியே வந்த மனக்கசப்புகள் மாறும். சில நேரங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகளையும் சந்திக்கலாம். கொடுக்கல்- வாங்கலிலில் கவனம் தேவை.
துலாம்
இந்த மாதம் கோட்சார கிரகநிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பாதகம் எதுவுமில்லாமல் நற்பலன்களாக நடக்கும். திருமணத் தடை விலகும். புத்திர பாக்கியம் உண்டாகும். வெளியில் கொடுத்த பணம்- வரவேண்டிய பணம் வந்துசேரும். ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைத்து வட்டி அதிகமாகி வேதனைப் பட்டோருக்கு விடிவுகாலம், விமோசனம் பிறக்கும். சொத்துப்பிரச்சினைகள் விலகி பங்குபாகங்களில் தங்குதடைகள் நீங்கி நியாயம் கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் நிலவிய விரிசல்கள் விலகி நெருக்கம் ஏற்படும். படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமும் அக்கறையும் உருவாகும். ஞாபக சக்தி பெருகும். குடும்பப் பெண்களுக்கு ஆடை அணிகலன்கள், ஆபரணச் சேர்க்கை உண்டாவதால், மகிழ்ச்சியும் மனநிறைவும் உருவாகும். உறவினர்கள் அல்லது அக்கம் பக்கம், அண்டை அயலாரின் பொறாமையை நீக்க செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 2-க்குடைய குருவும் 12-ல் மறைவு. எனவே பொருளாதாரச் சிக்கலை போராடித்தான் சமாளிக்கவேண்டும். நகமும் சதையுமாகப் பழகியவர்கள் எதிரும்புதிருமாக மாறி விரோதிகளாகி இடையூறு செய்வார்கள். உங்கள் தரப்பிலிலிருந்தே ஒருவர் அவர்களுக்கு ஐந்தாம்படையாக மறைமுக உதவி செய்யக்கூடும். இராவணன் வீழ்ச்சிக்கு சகோதரன் விபீஷணனே காரணமாக இருந்தான் அல்லவா! சிலருடைய அனுபவத்தில் வளர்த்த கடாவே மார்பில் பாயலாம். கூட இருந்தே குழிபறிப்பவர்களை அடையாளம்கண்டு ஒதுக்கிவிடவேண்டும். மாதப்பிற்பகுதியில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திலும் குழப்பம் நீங்கி குதூகலம் ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் மாதம் முழுவதும் தெளிவான நிலை காணப்படும்.
தனுசு
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் சிலருக்கு தேக ஆரோக்கியத்தில் மாறிமாறி பிரச்சினைகள் உருவாகி மனவருத்தம் ஏற்படலாம். சிலருக்கு ஓய்வுஒழிச்சல் இல்லாமல் பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு போட்டி பொறாமைகள் உருவாகலாம். உங்களிடம் வேலை பார்த்தவர்களே தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு, கருவாட்டுக்கடைக்கு எதிர்க்கடை போட்ட மாதிரி போட்டி வியாபாரம் ஆரம்பிக்கலாம். எது எப்படியிருந்தாலும் ராசிநாதன் 11-ல் பலம்பெறுவதால் எல்லா சங்கடங்களும் பிரச்சினைகளும் சூரியனைக் கண்ட பனிபோல ஓடிவிடும். பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சீராக இயங்கும். சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் மிளகு தீபமேற்றி வழிபட வேண்டும். அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து அந்த எண்ணிக்கை மிளகை சிவப்புத்துணியில் கட்டிப்போடவும்.
மகரம்
மகர ராசிக்கு விரயச்சனி நடக்கிறது. சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 10-ல் பலம்பெற்று 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், விரயச்செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் வந்துசேரும். தொழில் இயக்கமும் துவண்டுபோகாமல் செயல்படும். செலவுகள் வந்தாலும் அவை பயனுள்ள செலவுகள்தான். சுபச்செலவுகள்தான். நல்ல காரியம் நடக்கும். திட்டங்கள் நிறைவேறும். சிலருக்கு அன்புத்தொல்லையால் தவிர்க்கமுடியாத செலவுகள் ஏற்படலாம். பேரன் பேத்திக்காக அல்லது பிள்ளைகளுக்காக செய்யும் செலவுகள் நல்ல செலவுகள்தானே! தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். ஜென்ம கேது சுகக்குறைவை உருவாக்கினாலும் சுகஸ்தானத்தை குரு பார்ப்பதால் பயப்பட வேண்டாம்; பாதிப்பு ஏற்படாது. தன்வந்திரி பகவானை வழிபடவும். தன்வந்தரி மூலமந்திரத்தை ஜபம் செய்யவும்.
கும்பம்
ராசிநாதன் சனி 11-ல் இருப்பதும், அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 11-ல் நின்று ராசியைப் பார்ப்பதும் உங்களுக்கு அனுகூலமான திருப்பம்! முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் வசதிகள் பெருகும். தொழில்துறையில் வளர்ச்சியும் லாபமும் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதியும் ஆனந்தமும் பெருகும். திருமணத்தடை விலகும். வாரிசு இல்லாதோருக்கு வாரிசு உதயமாகும். குலதெய்வ வழிபாடும், தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறுதலும் மனதில் திருப்தியையும் உற்சாகத்தையும் உருவாக்கும். சிலர் தெய்வத் திருப்பணிக் கைங்கர்யங்களில் ஆர்வமாகி செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு தங்குதடையின்றி செயல்படும். வரவேண்டிய பணம் வந்துசேரும். கொடுக்கவேண்டியவை ஓடியடையும். தேக ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் தெரியும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 8-ல் அக்டோபர்- 4 வரை இருப்பது உங்களுக்கு ஒருவகையில் மைனஸ் பாயின்டுதான். கடந்த மாதம்வரை அவர் 8-ல் வக்ரமாக இருந்தது மிகமிக சோதனை! வேதனை! இப்போது வக்ரம் நீங்கி விட்டாலும், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கும் நிலை! சிலருக்கு இட மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் உண்டாகும்! வரவுக்குமேல் செலவு அல்லது வருவதெல்லாம் செலவு! மிச்சமில்லாத நிலை. நாளை வரவு வரப்போகிறதென்றால் அதற்கு இன்றே ஒரு செலவு வந்து வாசலில் காத்திருக்கும். சிலர் கையிருப்பை செலவு செய்யலாம். சிலர் கடன் வாங்கி செலவு செய்யலாம். சிலர் தனக்கோ அல்லது குடும்பத்தில் உங்ளளவர்களுக்கோ வைத்தியச் செலவு செய்யலாம். காரணமில்லாத கவலைகளும் கற்பனை பயமும் சிலருக்கு அமைதியைக் கெடுக்கும்! நாம் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை; அதனால் நமக்கு எந்தக் கெடுதலும் அணுகாது. தெய்வம் துணையிருக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். நம்பினோர் கெடுவதில்லை- நான்கு மறைதீர்ப்பு!