மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முழுவதும் 5-ல் திரிகோணமாக இருக்கிறார். இதுவரை சகோதர வழியிலும் ஆரோக்கியத்தி லும் பிரச்சினைகளை சந்தித்து அவதிப்பட்டவர்களுக்கு நிம்மதியடையும்வகையில் பிரச்சினைகள் எல்லாம் விலகும். தேகநலம் தெளிவுபெறும். குடும்பப் பிரச்சினைகள் குறையும். 17-ஆம் தேதிமுதல் சிம்ம ராசிக்கு மாறும் சூரியன் 5-ல் ஆட்சி பெறுகிறார். எனவே, உங்களது திட்டங்கள், எண்ணங்கள் செயலாகும். இதுவரை குடும்பத் தில் உங்களைப் பற்றிய தவறான கருத்து களை நினைத்து உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள், இனி உங்கள் அருமை பெருமைகளை அறிவார்கள். நீங்களும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து மன்னித்து அனுசரித்து நடப்பீர்கள். எதிர்கால நலன்கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும். பிள்ளைகளுக்கான வேலைவாய்ப்பு கைகூடும். தொழில்வளம் நன்றாக இருக்கும். இந்த மாதம் இனிய மாதமாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் 12-ஆம் தேதிவரை 4-ல் கேந்திரமாக இருக்கிறார். வீடு, மனை, வாகனம் இவற்றில் முன்னேற்றகரமான சூழல் தென்படும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் நன்றாக நடைபெறும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்யலாம். 12-ஆம் தேதிக்குப் பிறகு ராசிநாதன் நீசமடைவார். அந்த கால கட்டத்தில் சற்று அக்கறையோடு- கவனத் துடன் செயல்படவேண்டும். உத்தியோகம் மற்றும் தொழிலில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வது நல்லது. கூட்டுத் தொழில்புரிவோர் தனித்து இயங்க வாய்ப்புகள் கிûடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றகரம் ஏற்படும். 2-க்குடைய புதன் 4-ல் மாறுகிறார். கல்விவகையில் நல்லபலன்கள் உண்டாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க நேரிட்டாலும் அடைக்கும் யோகமும் உண்டாகும். சிம்மச் செவ்வாய் சகோதர ஒற்றுமையைத் தரும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 3-ஆமிடமான சிம்மத் திற்கு மாறுகிறார். அவருடன் 11-க்குடைய செவ்வாயும் 12-க்குடைய சுக்கிரனும் இணைகிறார்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எடுத்த முடிவை அடிக்கடி மாற்றியமைக்கும் மனப் பான்மையோடு செயல் படுவீர்கள். 12-க்குடைய வர்
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முழுவதும் 5-ல் திரிகோணமாக இருக்கிறார். இதுவரை சகோதர வழியிலும் ஆரோக்கியத்தி லும் பிரச்சினைகளை சந்தித்து அவதிப்பட்டவர்களுக்கு நிம்மதியடையும்வகையில் பிரச்சினைகள் எல்லாம் விலகும். தேகநலம் தெளிவுபெறும். குடும்பப் பிரச்சினைகள் குறையும். 17-ஆம் தேதிமுதல் சிம்ம ராசிக்கு மாறும் சூரியன் 5-ல் ஆட்சி பெறுகிறார். எனவே, உங்களது திட்டங்கள், எண்ணங்கள் செயலாகும். இதுவரை குடும்பத் தில் உங்களைப் பற்றிய தவறான கருத்து களை நினைத்து உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள், இனி உங்கள் அருமை பெருமைகளை அறிவார்கள். நீங்களும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து மன்னித்து அனுசரித்து நடப்பீர்கள். எதிர்கால நலன்கருதி எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும். பிள்ளைகளுக்கான வேலைவாய்ப்பு கைகூடும். தொழில்வளம் நன்றாக இருக்கும். இந்த மாதம் இனிய மாதமாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் 12-ஆம் தேதிவரை 4-ல் கேந்திரமாக இருக்கிறார். வீடு, மனை, வாகனம் இவற்றில் முன்னேற்றகரமான சூழல் தென்படும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் நன்றாக நடைபெறும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்யலாம். 12-ஆம் தேதிக்குப் பிறகு ராசிநாதன் நீசமடைவார். அந்த கால கட்டத்தில் சற்று அக்கறையோடு- கவனத் துடன் செயல்படவேண்டும். உத்தியோகம் மற்றும் தொழிலில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வது நல்லது. கூட்டுத் தொழில்புரிவோர் தனித்து இயங்க வாய்ப்புகள் கிûடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றகரம் ஏற்படும். 2-க்குடைய புதன் 4-ல் மாறுகிறார். கல்விவகையில் நல்லபலன்கள் உண்டாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க நேரிட்டாலும் அடைக்கும் யோகமும் உண்டாகும். சிம்மச் செவ்வாய் சகோதர ஒற்றுமையைத் தரும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 3-ஆமிடமான சிம்மத் திற்கு மாறுகிறார். அவருடன் 11-க்குடைய செவ்வாயும் 12-க்குடைய சுக்கிரனும் இணைகிறார்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எடுத்த முடிவை அடிக்கடி மாற்றியமைக்கும் மனப் பான்மையோடு செயல் படுவீர்கள். 12-க்குடைய வர் 3-ல் மறைவது நன்மைதான். 11-க்குடைய வர் மறைவது அவ்வளவு நல்லதல்ல. உத்தியோகத்தில் உள்ளவர்கள்மீது வீண்பழி சுமத்தப்படலாம். தொழில்துறையில் சங்கடங் கள் ஏற்படலாம். அட்டமச்சனி ஒருபுறம் அலைக்கழிக்க வைக்கலாம். என்றாலும் குரு திரிகோணம் பெற்று 3-ஆமிடத்தைப் பார்ப்பதால், இவை அனைத்தையும் சமாளிக் கும் ஆற்றலும் உருவாகும். இவற்றிற்கு சகோதரவழியில் ஒருவித உதவியும் ஆதரவும் கிடைக்கும் அல்லது நண்பர்களால் சகாயம் உண்டாகும். வேலை அல்லது குடியிருப்பு ரீதியாக இடமாற்றத்தை சந்திக்க நேரலாம்.
கடகம்
கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் இருக்கிறார். கடகம் என்றால் நண்டு. மற்ற ஜீவராசிகளைப்போல் இல்லாமல் நண்டுக்கு நாற்புறமும் கால்கள் இருப்பதால், உடம்பை வளைக்காமலேயே எந்த திசையிலும் பயணிக்கும் ஆற்றல் உண்டு. அதுபோல எந்த ஒரு காரியத்தை யும் சாதிக்கும் வல்லமை கடக ராசிக்கு உண்டு. 10-க்குடைய செவ்வாய் 2-ல் இருப்பதும், அவரை 9-க்குடைய குரு பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகமாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். காரிய வெற்றியும் கைகூடும். தனவரவு வருவதற்கான வழி பிறக்கும். தடைகள் எல்லாம் தானாக உடைபடும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலர் சுயதொழில் முயற்சியில் ஆர்வம் காட்டலாம். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றிதரும். குடும்பத்தினரிடையே பனிப்போர் விலகி ஒற்றுமையுணர்வு பிறக்கும். தேகநலன் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் மறைகி றார். 12-ஆமிடம் விரயஸ்தானம். அலைச்சல், வீண்விரயம், மனநிம்மதிக் குறைபாடு இவற்றை சந்திக்கவேண்டிய காலகட்டம். காரிய தாமதம் உத்தியோக மாற்றம், வேளையில் இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். 17-ஆம் தேதி முதல் சூரியன் ஜென்மத்திற்கு மாறி ஆட்சிபெறுகிறார். நல்ல திருப்பங்கள் உண்டாகும். தொழில்துறையில் வளர்ச்சி காணலாம். ராசியையும் ராசிநாதனையும் குரு பார்ப்பது மேலும் ஒரு சிறப்பு. தடைப்பட்டு வந்ததாமதமாக இருந்த செயல்பாடுகள் யாவும் பூர்த்தியாகும். 9-க்குடைய செவ்வாயும் 10-க்குடைய சுக்கிரனும் சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்தும். 12-ஆம் தேதிமுதல் சுக்கிரன் நீசமடைவார். கணவன் அல்லது மனைவிவகையில் தேகநலக்குறைவு ஏற்படலாம். சிறுசிறு வைத்தியச் செலவுகள் உருவாகலாம்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 12-ல் மறைகிறார். பொதுவாக மற்ற கிரகங்களைப்போல புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. "மறைந்த புதன் நிறைந்ததனம்' என்பார்கள். புதன் 10-க்குடையவர். தொழில்துறையில் நண்பர்களினால் சகாயம் உண்டாகும். குரு 12-ஆமிடத்தைப் பார்த்தாலும், 2-ஆமிடம், 10-ஆமிடத்தையும் பார்ப்பதால் சுப முதலீடு செய்யும் யோகமும் ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில்துறையில் உள்ளவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்த கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். கடன்பட்டாலும் அவற்றை நாணயமாக திருப்பி அடைத்துவிடலாம். கௌரவ பாதிப்புக்கு இடம் வராது. 8-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவதால் விபரீத ராஜயோகத்திற்கு இடமுண்டு. சிலசமயம் எதிர்பாராத நன்மைகளும் உண்டாகும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ஆம் தேதி லாப ஸ்தானமான 11-ல் இருக்கிறார். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்- வாங்கல் சீராக இயங்கும். சிலருக்கு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு வேலையில் மாற்றம் ஏற்படலாம். அது நன்மையான மாற்றமாகவும் அமையும். 12-ஆம் தேதிக்குப் பிறகு ராசிநாதனும் 8-க்குடையவருமான சுக்கிரன் கன்னியில் நீசம் பெறுகிறார். என்றாலும் ராசியை குரு பார்ப்பதால் திறமை, கீர்த்தி, செல்வாக்கு எதற்கும் குறை வராது. எனினும் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது அவசியம். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வாய்ப்புகள் கைகூடும். எதிர்பார்த்த இடமாறுதல் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் விலகி சுமுகமான தீர்வு உண்டாகும். சொத்து விற்பதன்மூலம் கைகளில் பணம் புரளும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவு ஏற்படாது. அன்யோன்யம் அதிகமாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் இருக்கிறார். 2-க்குடைய குரு 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில்வளம் நன்றாக இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றிபெறலாம். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்வுகள் உண்டாகும். திருப்தியான வருமானம் எதிர்பார்க்கலாம். தொய்வாக நடந்த வேலைகள் எல்லாம் துரித வேகத்தில் செயல்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளிடையே நன்மதிப்பும் மரியாதையும் உண்டாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் வரலாம். சுயதொழில் தொடங்க முனைவோருக்கு பண உதவி கிடைக்கும். அடிமை வேலையில் இருந்தவர்கள் தனியாகத் தொழில் ஆரம்பிக்கலாம். தேகநலம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்காக வேலை முயற்சிகள் எடுப்பவர்களுக்கு பலன் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு இடமுண்டு.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைவாக இருக்கிறார். சகோதரவழியே சிறுசிறு மனக் கசப்புகள், சங்கடங்கள் ஏற்பட்டாலும் பிரிவு, பிளவு உண்டாகாது. ஒற்றுமையிலும் பாதிப்புக்கு இடமிருக்காது. 3-ல் மறையும் குரு 7, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கி றார். கணவன்- மனைவிக்குள் அன்பு, பாசம் அதிகமாகும். பூமி, மனை, வீடு இவற்றில் பிரச்சினைகள் உண்டானாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் ஏற்படும். 17-ஆம் தேதிமுதல் 9-ல் சூரியன் ஆட்சி. தந்தைவழி உறவில் இருந்த விரிசல், மனக்கசப்பு விலகும். பூர்வீக சொத்து சம்பந்தமாக நிலவிய வில்லங்கம், விவகாரம் யாவும் சாதகமான முடிவுகளைத் தரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்துமுடிக்கலாம். அரசுவழியில் அனுகூலங் கள் கிடைக்கும். பிறருக்கு வாங்கிக்கொடுத்த தொகை பிரச்சினையின்றி வந்துசேரும். தனவரவும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. ராசிநாதன் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். வக்ரத்தில் உக்ரபலம். அவ்வப்போது மனச் சோர்வு, உடல்சோர்வு ஏற்பட்டு விலகும். 12-க்குடையவர் 2-ல் இருக்கிறார். தனவரவுக்கு இடமுண்டு. தேவைக்கேற்ப பணம் வந்துகொண்டிருக்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு முயற்சிகள் கைகூடும். சூரியன் 8-ல் ஆட்சி பெறுகி றார். பூர்வீக சொத்து தொடர்பாக தகப்பனார் வழியே சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். 5-க்குடைய சுக்கிரன் 9-ல் நீசம் பெறுகிறார். அந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் தோன்றலாம். பிள்ளைகளைப் பற்றிய கவலையும் மனதை வாட்டலாம். உடன்பிறந்தவர்களால் உதவியும் ஒத்தாசையும் கிடைக்கும் என்றா லும், அது உரிய நேரத்தில் அமையாததால் சில தொந்தரவுகளையும் சந்திக்க நேரும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 12-ல் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். தன லாபாதிபதி யான குரு உங்கள் ராசியிலேயே வக்ரமாக சஞ்சரிக்கிறார். எனவே, செலவு சற்று கூடுதலாகத்தான் இருக்கும். ராசிநாதன் விரயத்தில் நின்றாலும் பெரிய பாதிப்புகளை உண்டாக்கமாட்டார் என்று நம்பலாம். 3-க்குடைய செவ்வாய் 7-ல் இருக்கிறார். அவருக்கு குரு பார்வை கிடைக்கிறது. சகோதரவழியில் நன்மைகளும் சுபமங்கள காரியங்களும் நடைபெறும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். 17-ஆம் தேதிமுதல் 7-ல் சூரியன் ஆட்சி. தகப்பனா ருக்கு வரவேண்டிய அரசு பாக்கிகள் வந்துசேரும். அந்தத் தொகை உங்களுக்கும் ஒரு உதவியாக அமையும். வீடு, நிலம் வாங்குவதில் கவனம் செலுத்தலாம். பழைய வீட்டை சிலர் புதுப்பிக்கலாம். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். கல்வி முயற்சிகள் கைகூடும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சனி குருவுக்கு 12-ல் மறைவு. குடும்பச் சுமை, ஆரோக்கியத்தில் தொல்லை, வீண்விரயம், இடமாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பற்றி யாரிடமும் பகிரவேண்டாம். அதனால் பிரச்சினைகளை சந்திக்க நேரும். 6-க்குடைய சூரியன் 6-ல் ஆட்சி. சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். ஆபரேஷன் போன்ற சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளநேரிடும். 3-க்குடைய சுக்கிரன். 7-ல் நீசம் பெறுகிறார். மனைவிவழியிலும் ஆரோக்கியக் குறைவும் வைத்தியச் செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன்கூடிய புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களும் நல்ல அறிகுறி தென்படும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம்கண்டு கொள்ளலாம். தாய்மாமன் வகையினரால் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு சில செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும்.