Advertisment

நாத்திகத்தை மதித்த ஆத்திக அடிகளார்! - சக்திப்ரியா

/idhalgal/om/atheists-respect-atheism-shaktipriya

மயம்

இலக்கியம்

பேச்சாற்றல்

எழுத்தாற்றல்

பத்திரிகை ஆசிரியர்

நூலாசிரியர்

kk

பதிப்பாளர்

வெளியீட்டாளர்

பகுத்தறிவாளர்

அறிவியல் ஆர்வலர்

சமய ஒற்றுமை

சமூக நலம்

அரசியல் விழிப்புணர்வு

இத்தனை துறைகளிலும் ஒரு மடாதிபதியால் அரை நூற்றாண்டுகளாக ஜொலிக்க முடியுமா?

Advertisment

"முடியும்' என நிரூபித்துக் காட்டியவர் குன்றக்குடி ஆதீனத்தின் மடாதிபதியாகத் திகழ்ந்த குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

Advertisment

அப்போது அரங்கநாதனுக்கு ஆறேழு வயது இருக்கும். தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளையின் வீட்டு ஜன்னலோரம் நின்று தினமும் ஒரு திருக்குறளை ஒப்பிப்பான் அந்தச் சிறுவன். தினம் ஒரு குறள் ஒப்பித்தால் தினம் ஒரு காலணா காசு பரிசு கிடைக்கும்.

காசுக்காக

மயம்

இலக்கியம்

பேச்சாற்றல்

எழுத்தாற்றல்

பத்திரிகை ஆசிரியர்

நூலாசிரியர்

kk

பதிப்பாளர்

வெளியீட்டாளர்

பகுத்தறிவாளர்

அறிவியல் ஆர்வலர்

சமய ஒற்றுமை

சமூக நலம்

அரசியல் விழிப்புணர்வு

இத்தனை துறைகளிலும் ஒரு மடாதிபதியால் அரை நூற்றாண்டுகளாக ஜொலிக்க முடியுமா?

Advertisment

"முடியும்' என நிரூபித்துக் காட்டியவர் குன்றக்குடி ஆதீனத்தின் மடாதிபதியாகத் திகழ்ந்த குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

Advertisment

அப்போது அரங்கநாதனுக்கு ஆறேழு வயது இருக்கும். தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளையின் வீட்டு ஜன்னலோரம் நின்று தினமும் ஒரு திருக்குறளை ஒப்பிப்பான் அந்தச் சிறுவன். தினம் ஒரு குறள் ஒப்பித்தால் தினம் ஒரு காலணா காசு பரிசு கிடைக்கும்.

காசுக்காக திருக்குறள் பழகிய அரங்க நாதன் நாளடைவில் தன் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவே வள்ளுவரின் குறளைக் கொண்டார். அந்தக் குறளை சமூகத்தின் சாதாரண மனிதர்களுக்கு தன் குரல் வழியே உரக்க உணர்த்தினார்.

திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறள் செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர், திருக்குறள் பேசுகிறது, குறள் நூறு... என திருக்குறள் பாற்கடலைக் கடைந்து அமிர்தமாக பல நூல்களைப் படைத்தார் குன்றக்குடியார்.

இது தவிர சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் படித்தாய்ந்து சில நூல்களையும் படைத்தார். மணிமொழி, தமிழகம், அருளோசை, மக்கள்- சிந்தனை மற்றும் அறிக அறிவியல் ஆகிய பத்திரிகைகளையும் நடத்தினார்.

"ஆன்மிகத்தை ஆன்மிகமாக மட்டும் அறிதல் முக்கியமல்ல; ஆன்மிகத்தை பகுத்தாய்ந்து அறிவியல்பூர்வமாக அறியவேண்டும்' என்கிற கொள்கைக் கருத்து கொண்டவர் குன்றக்குடி அடிகளார். அதனால்தான் மிகப் பெரும் கடவுள் மறுப்பாளரான; மத மூடநம்பிகை எதிர்ப்பாளரான "நாத்திகவாதி, பெரியாரும்'; "ஆத்திகவாதி' அடிகளாரும் நண்பர்களாகப் பழக முடிந்தது.

1986-ல் தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, 1989-ல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் "டாக்டர் பட்டம், 1991-ல் மத்திய அரசின் செய்தி பரப்பும் தேசியக்குழுவின் தேசியவிருது ஆகிய கௌரவங்கள் அடிகளாருக்குக் கிடைத்தது.

மயிலாடுதுறை திருவாளப்புத்தூரை அடுத்த நடுத்திட்டு கிராமத்தில் (அன்றைய தஞ்சாவூர் ஜில்லா- பிரிட்டிஷ் இந்தியா) சீனிவாசப்பிள்ளை- சொர்ணம் தம்பதியின் மகனாக 1925 ஜூலை 11 அன்று பிறந்தார்.

சமூக அக்கறையும், தீண்டாமைக்கு எதிரான மனோபாவமும் இலங்கை அறிஞர் விபுலானந்த அடிகளின் தாக்கத்தால் குன்றக்குடி அடிகளுக்கும் ஏற்பட்டது.

kk

பள்ளிப்படிப்பை முடித்ததும் தருமபுர ஆதீன மடத்தில் கணக்குப்பிள்ளை யாகப் பணியில் சேர்ந்தார். தருமபுர ஆதீன கல்லூரியில் தமிழ் படித்து வித்துவான் ஆனார்.

தருமபுர ஆதீன மடத்தின் 25-ஆவது பட்டம் சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுரைப்படி துறவறம் மேற்கொண்டு "கந்தசாமித் தம்பிரான்' ஆனார்.

தருமபுரம் ஆதீனம் சார்பில் குன்றக்குடியில் நடந்த குருபூஜையில் அடிகளார் ஆற்றிய சொற்பொழிவு அன்றைய ஆதீன கர்த்தரை வியப்பில் ஆழ்த்தவே... அதன் விளைவாக 5-9-1949-ல் குன்றக்குடி ஆதீன இளைய தலைவராக்கப்பட்டு. 16-6-1952-ல் குன்றக் குடி ஆதீன 45-ஆவது குருமகா சந்நிதான மாக ஆனார்.

தமிழகத்தில் தீவிரமான கடவுள் மறுப்புக்கொள்கை திராவிட அரசியலால் வேறூன்ற ஆரம்பித்த நேரத்தில் "அருள்நெறித் திருக்கூட்டம்' எனும் சமய- தமிழ் மாநாட்டை குன்றக் குடியில் சாதித்தார்.

குன்றக்குடி அடிகளார் சமயத்திற்கும், தமிழுக்கும், ஆற்றிய தொண்டு என்றும் போற்றத் தகுந்தவை.

15-4-1995 அன்று மறைந்தார் குன்றக் குடி அடிகளார்.

சமயத்தாரும், சமய உடன்பாடற்றோ ரும் கூட "ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' ஆகிய குன்றக்குடி அடிகளாரின் சேவையை அவரது நூற்றாண்டு தருணத் தில் நினைவுகூர்வோம்!

om010824
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe