Advertisment

கணியர் இடத்தில் ஆரியர்! - அடிகளார் மு.அருளானந்தம் 37

/idhalgal/om/aryan-computer-place-ataikalaara-mauaraulaananatama-37

ரு தந்தை இறந்தபின் அவரது மகன் தன் தந்தைக்குச் செய்யும் நீத்தார் வழிபாட்டுச் சடங்கு முறையை "தென்புலத்தார் கடன்' என்று ஆதித்தமிழர்கள் அழைத்தனர். இந்த நிகழ்வின்போது, அனைத்துச் சுற்றத்தார் களும் கலந்துகொள்ள வேண்டுமென்பது தமிழர்களின் மரபாக இருந்தது.

பிதுர்க் கடன்- திதி கொடுத்தல்-

மாறிய வழிபாட்டுமுறை!

Advertisment

இறந்தவர்களை "தென்னவர் தென்புல வாழ்நர்' என ஆதித்தமிழர்கள் அழைத்துவந்தனர். இதில் தென்புலம் என்பது, ஆதிகாலத்தில் கடல்கோள்களால் அழிவுபட்ட குமரிக்கண்டத்தைக் குறிக்கும். அங்குதான் இறந்தவர்கள் வாழும் ஆவி உலகம் இருப்பதாகக் கருதினர்.

அக்குமரிக்கண்டத்தை முன்னாளில் ஆட்சிசெய்துவந்த பாண்டிய மன்னர் களை "நெடியோன்' என்றும், பின்னா ளில் தற்போதுள்ள தென் தமிழகத்தை ஆட்சிசெய்த சங்ககாலப் பாண்டிய மன்னர் களை "நெடியோன் உம்பல்'- அதாவது நெடியோனின் வாரிசுதாரர் எனவும் அழைத்த னர். இறந்துபட்ட மாவீரர்களையும் மன்னர் களையும், இறந்தவர்கள் வாழ்வதாகக் கருதப்படும் தென்புலத்திலிருந்து மீட்டு, மீண்டும் உடலெடுத்து, தன் குழந்தையாகப் பிறப்பெடுக்கச் செய்யும் வழிபாட்டு முறையை "தென்புலத்தார் கடன்' என்று அழைத்தனர்.

இதுவே, ஆரியர்களின் வருகைக்குப்பின், பல ஆரியச் சடங்குமுறைகள் புகுத்தப்பட்ட வழிபாட்டை பிதுர்க்கடன் என மாற்றியபிறகு, திதி கொடுத்தல் எனும் சடங்கு முறைகள் உருவாயின.

வள்ளுவரும் ஜோதிடரும் வானறிஞர்களே!

Advertisment

ஆதியில் தென்புலத்தார் கடன் செய்யும் நிகழ்வில், இறந்த மன்னவன் தன் வாழ்நாளில் விரும்பி அணிந்த உயர்வகைப் பட்டாடைகள், அணிகலன்கள், அவனுக்குப் பிடித்த உணவு வகைகள் அவனது பள்ளிப் படை இருக்கும் இடத்திற்குக் கொண்டு வரப்படும். அப்போது, அவனது கருவாகக் கருதப்படும் தொப்புள்கொ

ரு தந்தை இறந்தபின் அவரது மகன் தன் தந்தைக்குச் செய்யும் நீத்தார் வழிபாட்டுச் சடங்கு முறையை "தென்புலத்தார் கடன்' என்று ஆதித்தமிழர்கள் அழைத்தனர். இந்த நிகழ்வின்போது, அனைத்துச் சுற்றத்தார் களும் கலந்துகொள்ள வேண்டுமென்பது தமிழர்களின் மரபாக இருந்தது.

பிதுர்க் கடன்- திதி கொடுத்தல்-

மாறிய வழிபாட்டுமுறை!

Advertisment

இறந்தவர்களை "தென்னவர் தென்புல வாழ்நர்' என ஆதித்தமிழர்கள் அழைத்துவந்தனர். இதில் தென்புலம் என்பது, ஆதிகாலத்தில் கடல்கோள்களால் அழிவுபட்ட குமரிக்கண்டத்தைக் குறிக்கும். அங்குதான் இறந்தவர்கள் வாழும் ஆவி உலகம் இருப்பதாகக் கருதினர்.

அக்குமரிக்கண்டத்தை முன்னாளில் ஆட்சிசெய்துவந்த பாண்டிய மன்னர் களை "நெடியோன்' என்றும், பின்னா ளில் தற்போதுள்ள தென் தமிழகத்தை ஆட்சிசெய்த சங்ககாலப் பாண்டிய மன்னர் களை "நெடியோன் உம்பல்'- அதாவது நெடியோனின் வாரிசுதாரர் எனவும் அழைத்த னர். இறந்துபட்ட மாவீரர்களையும் மன்னர் களையும், இறந்தவர்கள் வாழ்வதாகக் கருதப்படும் தென்புலத்திலிருந்து மீட்டு, மீண்டும் உடலெடுத்து, தன் குழந்தையாகப் பிறப்பெடுக்கச் செய்யும் வழிபாட்டு முறையை "தென்புலத்தார் கடன்' என்று அழைத்தனர்.

இதுவே, ஆரியர்களின் வருகைக்குப்பின், பல ஆரியச் சடங்குமுறைகள் புகுத்தப்பட்ட வழிபாட்டை பிதுர்க்கடன் என மாற்றியபிறகு, திதி கொடுத்தல் எனும் சடங்கு முறைகள் உருவாயின.

வள்ளுவரும் ஜோதிடரும் வானறிஞர்களே!

Advertisment

ஆதியில் தென்புலத்தார் கடன் செய்யும் நிகழ்வில், இறந்த மன்னவன் தன் வாழ்நாளில் விரும்பி அணிந்த உயர்வகைப் பட்டாடைகள், அணிகலன்கள், அவனுக்குப் பிடித்த உணவு வகைகள் அவனது பள்ளிப் படை இருக்கும் இடத்திற்குக் கொண்டு வரப்படும். அப்போது, அவனது கருவாகக் கருதப்படும் தொப்புள்கொடி இருக்கும் பெட்டகத்தையும் கொண்டுவருவர்.

இவ்வாறு தென்புலத்தார் கடன்செய்யும் மகனுக்கு உறுதுணையாக இருந்து, இதனைச் சிறப்புறச் செய்வதற்கு உடனிருப்பவர் தாய்மாமன் மற்றும் சுற்றத்தார்களே. இச்சடங்குகளை முற்காலத்தில் கணியர் என்று அழைக்கப்படும் வானவியல் ஆய்வறிஞர்கள், நாவிதர்கள் என்றழைக்கப்படும் மருத்துவர், வண்ணார் என அழைக்கப்படும் நீர் உலர்த்திகள் கலந்துகொள்வர்.

சங்ககால வானறிஞர்களில் எடுத்துக் காட்டாக கணியன் பூங்குன்றன், பக்குடுக்கை நன்கணியார், கணிமேதாவியார் போன்றோர் அறிவர் மடத்தில் குருகுலக் கல்வி பயின்றவர்கள். இவர்களில் சில வள்ளுவர்கள், பின்னா ளில் ஜோதிடர்கள் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர்.

வாழ்நாள் முழுவதையும் கணிக்கும் கணிதமுறை!

அறிவர் அல்லது கணியர்கள் வானப் பெருவெளியில் பூமியைச் சுற்றியிருக்கும் விண்மீன்களை இருபத்தேழு குழுக்களாகப் பிரித்தனர். பூமியைச் சுற்றி கிழக்கு- மேற்காக அமைந்த நீள்வட்ட விண்மீன் மண்டலத்தின் 360 பாகையை, 30 பாகைகள்கொண்ட 12 பிரிவுகளாகப் பகுத்து, அவற்றை ஓரைகள் அல்லது ராசி மண்டலங்கள் என அழைத்தனர். இந்த ஓரைகள் இருக்கும் நீள்வட்டப்பாதையும், சூரியனைப் புவி சுற்றிவரும் நீள்வட்டப்பாதையும், ஒன்பது பாகையளவு சாய்வுற்றுள்ளது என அறிந்திருந்தனர்.

பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் சுற்றிவருவதாகத் தோன்றும் வான் மண்டலத்தில், சூரியன் ஒவ்வொரு ஓரையிலும் இடம்பெறும் கால அளவே ஒரு மாதமென வரையறுக்கப்பட்டது. இது எந்தக் காலத்திலும் மாறாதிருப்பதைக் கண்டுணர்ந்தனர். இந்த 12 ஓரைகளின் தோற்றத்தை வைத்து பின்வருமாறு பெயரிட் டனர்.

1. ஆடு அல்லது மேழம்

2. காளை அல்லது விடை

3. இருவர் அல்லது ஆடவை

4. நண்டு அல்லது கடகம்

5. அரிமா அல்லது மடங்கல்

6. கன்னி அல்லது இளம்பெண்

7. துலாம் அல்லது நிறைகோல்

8. தேள் அல்லது நளி

9. வில் அல்லது சிலை

10. சுறா அல்லது சுறவம்

11. கும்பம் அல்லது குடம்

12. மீனம் அல்லது கயல்கள்

இந்தப் பன்னிரண்டு ஓரைகளும் அல்லது ராசிகளும் மாதத்திற்கு ஒன்றாக கதிரவனுக்குப் பின்னால் மறையும். இதனை ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன்னும், சூரிய மறைவிற்குப் பின்னும் வானில் தோன்றுவதன்மூலம் கண்டறிந்தனர்.

ஒரு மாதம் முழுவதும் ஒரே ராசி மண்டலம் அல்லது ஓரை தெரியும். அடுத்த மாதம், அடுத்த ஓரை தெரியும்.

fadf

இதைக்கொண்டுதான் 12 மாதங்களின் கால அளவுகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆகவேதான், இந்த ஓரை மண்டலத்தைப் பொருத்து தமிழ் மாதங்கள் இருபத்து ஒன்பது நாட்களையும், ஒருசில மாதங்கள் முப்பத்திரண்டு நாட்களையும் கொண்டதாக உள்ளன.

சூரியன் இருக்கும் ஓரையிலிருந்து ஏழாவது ஓரையில்தான் பூமி இருக்கும் என்பதைக் கண்டறிந்தனர். இதேபோல், நமது சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள் எந்தெந்த ஓரைகள் அல்லது ராசியில் இருக்கின்றனவோ, அதைக்கொண்டுதான் ஒருவர் பிறக்கின்றபோது இருக்கும் அமைப்புகளைப் பன்னிரண்டு கட்டங்களில் எழுதுவார்கள். அதைக்கொண்டு ஒருவரது வாழ்நாள் முழுவதுமாக கோள்களின் இருப்பிட மாற்றங்களைக் கணித்துப் பலன்கூறும் கணிதமுறையை உருவாக்கினர். உதாரணமாக, சூரியன் மேழ ஓரையில் இருந்தால், நம் புவியுலகம் மேழ ஓரையிலிருந்து ஏழாவது ஓரையான நிறைகோலில் இருக்கும்.

ஒவ்வொரு ஓரையிலும் சூரியன் இருக்கும் மாதங்கள் பின்வருமாறு:

1. மேழம் - சித்திரை

2. விடை - வைகாசி

3. ஆடவை - ஆனி

4. கடகம் - ஆடி

5. மடங்கல் - ஆவணி

6. கன்னி - புரட்டாசி

7. துலாம் - ஐப்பசி

8. நளி - கார்த்திகை

9. சிலை - மார்கழி

10. சுறவம் - தை

11. கும்பம் - மாசி

12. மீனம் - பங்குனி

இதேபோல் ஒவ்வொரு மாதத்திலும் வானில் தோன்றும் விண்மீன் கூட்டங்களின் தோற்றத்தைக்கொண்டு, கீழ்வருமாறு ஆதித் தமிழர்கள் பெயரிட்டனர்.

1. சித்திரை- அறுவை

2. வைகாசி- முறம்

3. ஆனி- குருகு

4. ஆடி- கடைக்குளம்

5. ஆவணி- காக்கை

6. புரட்டாசி- நாழி

7. ஐப்பசி- குதிரை

8. கார்த்திகை- ஆரல்

9. மார்கழி- மான் தலை

10. தை- காற்குடம்

11. மாசி- கொடுநுகம்

12. பங்குனி- உத்திரம்

வானறிவியலுக்கு வடமொழிப் பெயர்கள்!

ஆரியர்கள் அறிவர். கணியர்களின் வானறிவியலைக் கண்டுவியந்து, அதனை வடமொழி வடிவத்தில் பெயர்மாற்றம் செய்தனர். உதாரணமாக, இருபத்தேழில் முதல் நட்சத்திரக் கூட்டம் குதிரை வடிவில் இருப்பதால், அசுபதி எனப் பெயரிட்ட னர். இவ்வாறு அடுப்பு வடிவில் இருப்பதை பரணி என அழைத்தனர். பிற்கால மன்னர் களைப் பயன்படுத்தி, கணியர் இருந்த இடத்தில் அவர்கள் கோலோச்சத் தொடங்கினர்.

adfஆதிக் கணியர்கள் ஒவ்வொரு ஓரை மண்டலத்திலும், இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டேகால், இரண்டேகால் பாகங்களாக ஒவ்வொரு மாதத்திலும் தெரியும் முதல் நட்சத்திரத்தை வைத்தே, அம்மாதத்திற்குப் பெயர் சூட்டினர்.

புரிதலுக்காக தற்போது வழக்கத் திலுள்ள பெயர்களைக்கொண்டு கீழே விளக்கியிருக்கிறோம்.

1. சித்திரை

ப் சித்திரை அரை பாகம்

ப் சுவாதி முழுபாகம்

ப் விசாகம் முக்கால் பாகம்

மொத்தம் இரண்டேகால் பாகம் நட்சத்திரக் கூட்டம் இருக்கும்.

2. வைகாசி

ப் விசாகம் கால்பாகம்

ப் அனுஷம் முழுபாகம்

ப் கேட்டை முழுபாகம்

மொத்தம் இரண்டேகால் பாகம்.

3. ஆனி

ப் மூலம் முழுபாகம்

ப் பூராடம் முழுபாகம்

ப் உத்திராடம் கால்பாகம்

மொத்தம் இரண்டேகால் பாகம்.

4. ஆடி

ப் உத்திராடம் முக்கால் பாகம்

ப் திருவோணம் முழுபாகம்

ப் அவிட்டம் அரை பாகம்

மொத்தம் இரண்டேகால் பாகம்.

5. ஆவணி

ப் அவிட்டம் அரை பாகம்

ப் சதயம் முழுபாகம்

ப் பூரட்டாதி முக்கால் பாகம்

மொத்தம் இரண்டேகால் பாகம்.

6. புரட்டாசி

ப் பூரட்டாதி கால்பாகம்

ப் உத்திரட்டாதி முழுபாகம்

ப் ரேவதி முழுபாகம்

மொத்தம் இரண்டே கால் பாகம்.

7. ஐப்பசி

ப் அசுபதி முழுபாகம்

ப் பரணி முழுபாகம்

ப் கார்த்திகை கால் பாகம்

மொத்தம் இரண்டே கால் பாகம்.

8. கார்த்திகை

ப் கார்த்திகை முக்கால் பாகம்

ப் ரோகினி முழுபாகம்

ப் மிருகசீரிடம் அரை பாகம்

மொத்தம் இரண்டே கால் பாகம்.

9. மார்கழி

ப் மிருகசீரிடம் அரை பாகம்

ப் திருவாதிரை முழுபாகம்

ப் புனர்பூசம் முக்கால் பாகம்

மொத்தம் இரண்டேகால் பாகம்.

10. தை

ப் புனர்பூசம் கால்பாகம்

ப் பூசம் முழுபாகம்

ப் ஆயில்யம் முழுபாகம்

மொத்தம் இரண்டேகால் பாகம்.

11. மாசி

ப் மகம் முழுபாகம்

ப் பூரம் முழுபாகம்

ப் உத்திரம் கால்பாகம்

மொத்தம் இரண்டேகால் பாகம்.

12. பங்குனி

ப் உத்திரம் முக்கால் பாகம்

ப் அஸ்தம் முழுபாகம்

ப் சித்திரை அரை பாகம்

ஆகமொத்தம் இரண்டேகால் பாகம்.

இவ்வாறு கணியர்கள் மூலம் நீத்தார்களது இறந்த நேரத்தைக் கொண்டு சில சடங்கு முறைகள் உருவாக் கப் பட்டன. இது முதலில் மருதநிலத் தலை வனுக்காக உருவாக்கப் பட்டது. பின், பல இடங் களில் மக்களின் சூழலுக்கு ஏற்றாற்போல் பரிணாம மாற்றங்கள் அடைந்துள்ளன.

இளவல் செய்ய விருந்த தென்புலத்தார் கடன் அல்லது பிதிர்க் கடன் தீர்க்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அம்மான் மகளின் மணவாழ்வு, தன் செய்கையால் இத்தருணத்தில் தொடரப் போவதை அறியாத சிறுபிள்ளையாக இருந்த வளை, அவளுடைய செவிலித் தாய் தன் இருகரம் நீட்டி குழந்தையை அணைத்ததுபோல் அணைத்து, அவளது காதுகளில் சில விடயங்களை முணுமுணுத்தாள்.

அது என்னவென்று வரும் இதழில் பார்ப்போம்!

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om010422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe