அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 10 - இரா த சக்திவேல்

/idhalgal/om/arunagirinathar-gandhar-decoration-10-ra-tha-sakthivel

பாடல்: 19

"சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல்

மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று

நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்

டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.'

பொருள்: முன்பு கூரிய கிரௌஞ்ச மலையில் உள்ளே நுழைந்து செல்லும்படி துளைகள் செய்த கூரிய வேலாயுதத்தைக் கையில் கொண்டுள்ள அரசனே; கடம்ப மரத்தின் மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை மார்பில் அணிந்தவனே; மௌனநிலை அடைந்து, உன்னை அறிந்து அறிந்து எல்லாக் காரணங்களும் அடங்கிய, நிர்குணத்தை அடைந்து, அடியேனாகிய என்னை மறந்து நான் அறியாமல் இருந்தேன். இதோ இந்த உடம்பு இறந்தே விட்டது.

ss

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

அனுபூதி நிலையில் அருணகிரியார் இருக்க, அவரின் பூத உடல் இறந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார்.

ஆன்மிகப் பரவெளியில் "அடுத்த பிறவி யில் பிறப்பு வேண்டாம்' என பிறப்பறுத்தலை வேண்டுவர். இருக்கையிலேயே உடல் இறத்தல் எப்படி சாத்தியம்?

எளிமையாகச் சொல்வதானால்....

நீங்கள் அடிக்கடி சந்தித்த ஒருவரை, பல ஆண்டுகளாக பார்க்க முடியவில்லை. மீண்டும் சந்திக்கும்போது அவர் "என்னப்பா ஆளையே பார்க்க முடியல?' என்பதுதான். நீங்கள் இருக் கிறீர்கள்; ஆனால் உங்களை அவரால் பார்க்க முடியவில்லை. இதன் பொருள்; நீங்கள்

அவருடன் தொடர்பிலில்லை என்பது தான். அதுபோலவே புலன்களுக் கும், உடம்பிற்கும் இடையேயான தொடர்பை நீங்கள் துண்டித்து

விட்டால் நீங்கள் சமாதிநிலைக்குச் சமம். நிர்மலமான அமைதியில் முருகப்பெருமானைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்த அருணகிரியார் "என் உடம்பு இறந்தே போய்விட்ட

பாடல்: 19

"சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல்

மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று

நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்

டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.'

பொருள்: முன்பு கூரிய கிரௌஞ்ச மலையில் உள்ளே நுழைந்து செல்லும்படி துளைகள் செய்த கூரிய வேலாயுதத்தைக் கையில் கொண்டுள்ள அரசனே; கடம்ப மரத்தின் மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை மார்பில் அணிந்தவனே; மௌனநிலை அடைந்து, உன்னை அறிந்து அறிந்து எல்லாக் காரணங்களும் அடங்கிய, நிர்குணத்தை அடைந்து, அடியேனாகிய என்னை மறந்து நான் அறியாமல் இருந்தேன். இதோ இந்த உடம்பு இறந்தே விட்டது.

ss

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

அனுபூதி நிலையில் அருணகிரியார் இருக்க, அவரின் பூத உடல் இறந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார்.

ஆன்மிகப் பரவெளியில் "அடுத்த பிறவி யில் பிறப்பு வேண்டாம்' என பிறப்பறுத்தலை வேண்டுவர். இருக்கையிலேயே உடல் இறத்தல் எப்படி சாத்தியம்?

எளிமையாகச் சொல்வதானால்....

நீங்கள் அடிக்கடி சந்தித்த ஒருவரை, பல ஆண்டுகளாக பார்க்க முடியவில்லை. மீண்டும் சந்திக்கும்போது அவர் "என்னப்பா ஆளையே பார்க்க முடியல?' என்பதுதான். நீங்கள் இருக் கிறீர்கள்; ஆனால் உங்களை அவரால் பார்க்க முடியவில்லை. இதன் பொருள்; நீங்கள்

அவருடன் தொடர்பிலில்லை என்பது தான். அதுபோலவே புலன்களுக் கும், உடம்பிற்கும் இடையேயான தொடர்பை நீங்கள் துண்டித்து

விட்டால் நீங்கள் சமாதிநிலைக்குச் சமம். நிர்மலமான அமைதியில் முருகப்பெருமானைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்த அருணகிரியார் "என் உடம்பு இறந்தே போய்விட்டது' என்கிறார்.

இது ஆசாபாசங்கள் எனும் தொடர்பு எல்லைக்கு வெளியே உடலைக் கொண்டு சொல்லும் நிலை.

"இருக்கையிலேயே இறப்பு' என்பது "சமாதி நிலை' எனப்படுகிறது. "சமாதியடைதல்' என்றாலே மரணத் துடன் சம்பந்தப்படுத்துவது நம் இயல்பு. ஞானிகளின் இயல்பு அதுவல்ல.

"சமாதி என்பது தியானிக்கப்படும் பொருளின் வடிவமோ, தியானிப்பவர் அந்தச் சமயத்தில் இருக்கும் இடமோ, சுற்றுப் புறச் சூழலிலோ புலப்படாது. எந்த வடிவமும் இன்றி கருத்தை மட்டும் உணரும் நிலையை அடைந்துவிட்டால்; தியானத்தின் அந்த நிலையை "சமாதி நிலை' என்று குறித்துள்ளார் யோக சூத்திரம் எழுதிய பதஞ்சலி முனிவர்.

தியானத்தில் ஈடுபடும்போது தியானத்தில் ஈடுபடுபவர் தன்னைப் பற்றியும், தியானிக்கப்படும் பொருள் பற்றியும், தியானம் செய்யும் முறை பற்றியும் கவனத்துடன் இருப்பார்.

ஆனால் சமாதி நிலையில் தியானம் செய்பவருக்கு தன்னைப் பற்றியும், தியானம் செய்வதைப் பற்றியுமான விஷயங்கள் அறிவுக்கு எட்டாமல் போய், தியானிக்கப்படும் பொருள் ஒன்றுதான் மனதில் இருப்பதைப் போன்ற அனுபவம் ஏற்படும்.

இப்படியான சமாதி நிலையையே

"என் உடம்பு இறந்தே விட்டது' எனக்

குறிப்பிட்டுள்ளார் அருணகிரி நாதர்.

"கடம்ப மலர் மாலையை மார்பில் சூடிய முருகன்' என அருணகிரியார் குறிப்பிட்டிருக்கிறார்.

கடம்பம் தெய்வங்களுக்கு உகந்தது. அதிலும் கடம்ப மலர் மாலையை அணிவதில் பெரும் விருப்பம் கொண்டவர் முருக பிரான்.

மதுரை மாநகரின் ஆதிகால காரணப் பெயர் "கடம்ப வனம்' என்பதாகும். கடம்ப மரங்கள் அதிகம் விளைந்திருந்த வனமாக அது இருந்தது. காட்டை அழித்து நாட்டை உருவாக்கிய காலத்தில் கடம்ப வனம் அழிக்கப்பட்டது. நகருடன் சேர்ந்து பெரும் கோவிலாக மதுரை மீனாட்சி யம்மன்- சொக்கநாதர் கோவிலும் கட்டப் பட்டது.

மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கடம்ப மரம் ஒன்று இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மரம் சிதிலமடைவதைத் தடுக்க வெள்ளித் தகட்டால் மூடப்பட்டு பக்தர்கள் பார்த்து, வணங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இடும்பன் இரண்டு மலைகளைக் காவடியாகச் சுமந்து கொண்டு வந்தான். வழியில் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி, பழநி நகருக்கு வெளியே காவடிக் கிரிகளை இறக்கி வைத்தான். மாம்பழக் கோபத்துடன் தனக்கு தனியிடம் தேடிவந்த முருகன், இடும்பன் காவடியாக கொண்டுவந்து இறக்கிவைத்த சக்திகிரி மலையைத் தன்னிடமாக ஆக்கிக்கொண்டார். கடம்ப மரங்கள் நிறைந்திருந்த சக்திகிரியையே தேந்தெடுத்தார் முருகன். அதனால் கடம்பப் பூக்கள் முருகனுக்கு பிடித்த பூ ஆனது. கடம்ப மாலை அணிந்த முருகனும் "கடம்பன்' என அழைக்கப்பட்டார். முருகனுக்கு மலை தந்த இடும்பனைக் கௌரவிக்கும் பொருட்டே, பழநி செல்லும் பக்தர்கள் முதலில், நகருக்கு வெளியே இருக்கிற இடும்பன் மலைக் கோவிலில் வணங்கிவிட்டு, பிறகு பழநி மலை சென்று முருகனை வணங்கிவரும் பழக்கம் வெகுகாலமாக உண்டு.

"கடம்பமர் நெடுவேளன்ன மீளி'' என்று (75-ஆவது அடியில்) பெரும்பாணாற்றுப் படையும்,

"அரும் கடி வேலன் முருகொடு வளைஇ

அரி கூடு இன்னியம் கறங்க நேர்நிறுத்து

கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்

சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ

மன்றுதொறும் நின்ற குரவை.'

(மதுரைக் காஞ்சி: பாடல் அடிகள்- 611 - 615)

குறிஞ்சி மக்கள் முருகனை வழிபடும் முறைகளில் ஒன்றான, "வேலன் வெறியாட்டு' எனும் நிகழ்வின்போது; வாத்தியங்களின் ஓசைக்கேற்ப, ஒருவரை ஒருவர் கைகளால் தழுவிக்கொண்டு ஆடுவார்கள். அப்போது வாத்தியச் சத்தமும், மக்களின் வாய்மொழிச் சத்தமும் கலந்து உண்டாகும் விநோதமான ஒலியுடன் வேலன் வெறியாட்டமாடுவார்கள். அப்போது மழைக்காலத்தில் பூக்கும் குறிஞ்சிப் பூவைச் சூடி, முருகக் கடவுளாக வணங்கப்படும்; முருகனின் உருவமாக துதிக்கப்படும் கடம்ப மரத்தின் வழியே முருகனை வணங்கி குரவைக் கூத்து ஆடுவர்.

"காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்

ஆர்க்கு பரமாம் அறுமுகவா - பூக்கும்

கடம்பா முருகா கதிர்வேலா! நல்ல

இடங்காண் இரங்காய் இனி.'

(நக்கீரர்- திருமுருகாற்றுப்படை வெண்பா -8)

என்னைக் காக்கவேண்டியது உன் கடமை; அந்தக் கடமையை நீ செய்யத் தவறினால், அதனால் யாருக்கு கஷ்டம்? யாருடைய குற்றம்? ஆறுமுகத்தானே; கடம்பப் பூக்கள் பூக்கும் வனத்தில் இருப்பவனே; கந்தா! கடம்பா! முருகா! இந்த இடம் நல்ல இடமே. அதனால் நீ இறங்கி வா!

- இது இந்தப் பாட்டின் பொருள்.

கடம்ப மரம் முருகக் கடவுளின் குறியீடு களில் ஒன்று.

கந்தா... கடம்பா... கதிர்வேலா...

புதையலும் உதவாது!

பாடல்: 20

"கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே

வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்

ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்

ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே.'

பொருள்: சேவற்கொடியுடையோனாகிய முருகனின் திருவடிகளை அடிபணியாமல், இந்த உலகத்தில் வாழ்ந்துவிட நினைக்கிற அறிவற்றவர்களே! உங்களுடைய துன்பமான வினைப்பயனால் உண்டாகும் நோயானது; ஊழ்வினையின் வலிமையானது உங்களின் செல்வத்தை நீங்கள் அனுபவிக்க விடாது. மண்ணுக்கடியில் புதைத்து வைத்துக் காத்த செல்வமாக இருந்தாலும், உங்களின் பூதவுடல் பயணத்தின் போது அந்தப் புதையல் வருமா? வராது!

"மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே

இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை

தினையாமளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம்

தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.'

"மனைவியும், பிள்ளைகளும், இந்த வாழ்வும், சேர்த்த செல்வமும் வீட்டின் வாயில்வரை மட்டும்தான் வரும். சொந்தபந்தம், சுற்றம் நட்பு சுடுகாடுவரை மட்டுமே வரும். இறந்தவனின் வழித் துணையாக இறுதிவரை அவை வராது. தினையளவு இல்லாவிட்டாலும் எள்ளளவாவது முன்புசெய்த தவத்தால்; நற்காரியத்தால் மட்டுமே பரலோகம் வாய்க்கும் என்பது சத்தியமே.'

-இவ்வாறு பாடிய பட்டினத்தார்....

"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக

மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு

கைத்தலம் மேல்வைத்து அயும் மைந்தரும் சுடுகாடு மட்டே

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.'

(பட்டினத்தார் மெய்யுணர்வு பாடல்கள்)

"செல்வமும், வாழ்வும் வீடுவரைதான், அழுதபடி வரும் பெண்கள் வீதிவரை தான்; விம்மி விம்மி அழும் மகனும் சுடுகாடுவரைதான் வருவான். மாண்டவனு டன் கடைசிவரை பயணிப்பது அவனுடைய இரு வினைகளாகிய பாவமும், புண்ணியமும் மட்டுமே!'

-என்று நிலையாமை சொல்கிறார்.

"முருகனின் திருவடிகளைச் சரணடைவதே வாழ்க்கைக்கு நல்லது. மற்றபடி நீ புதையல் மூடிவைத்தாலும் உன் கடைசி யாத்திரையில் உடன் வராது' என அருணகிரியார் சொல்லிஉள்ளார்.

(பாட்டு வரும்)

om010325
இதையும் படியுங்கள்
Subscribe