டந்த இதழில் நாம ஜெபத்தை எவ்வாறான பாவத்தோடு செய்யவேண்டும் என்று அருணகிரிநாதர் விளக்கியதை செய்யுள் 14 மற்றும் 15-ல் கண்டோம். மேலும் கர்மவினைகள் எவ்வாறு கழியும் என்பதையும் பார்த்தோம். இந்த இதழில் 16 மற்றும் 17ஆம் செய்யுள்களின் விளக்கத்தைக் காண்போம்.

செய்யுள்-16

"பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

ஓரா வினையேன் உழலத் தகுமோ

Advertisment

வீரா முதுசூர்பட வேல் எறியும்

சூரா சுரலோக துரந்தரனே.'

விளக்கம்: ஆசை எனும் நோயில் நான் கட்டுண்டு மீண்டும் மீண்டும் பிறக்கின்றேனே. இந்தப் பிறப்புலி இறப்பு சுழற்சியிலிருந்து, சூரபத்மனைக் கொன்று தேவலோகத்தைக் காத்த பெருமானே, நீதான் என்னையும் காக்கவேண்டும்.

Advertisment

n

15லிஆம் செய்யுளில் பாவத்தோடு நாமஜெபம் செய்யவேண்டும் என்ற வரத்தைக்கேட்ட அருணகிரி நாதர், இந்தப் பாடலிலில் பேராசை பற்றி பேசுகிறார். ஆசைக்கும் பேராசைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இங்கு பேராசை என்பது, ஒருவன் தான் செல்வந்தன் ஆகவேண்டும் என்பதோ அல்லது நிறைய சொத்து, வீடு போன்றவற்றை சேர்க்கவேண்டுமென்று நினைப்பதோ அல்ல. சனாதன தர்மம், என்றுமே உலக வாழ்வு வேண்டவே வேண்டாம் என்று கூறிய வாழ்க்கைமுறை அல்ல.

மாறாக இக, பர சௌபாக்கியம் என்று இரண்டையுமே கடவுளிடம் வேண்டிய ஒரு தர்மமாகவே இருந்துள்ளது; இன்னும் இருக்கும்.

"வசனமிக வேற்றி' என்ற திருப்புகழில் அருணகிரி நாதர் "இசைபயில் ஷடாக்ஷர மதாலே இகபர சௌபாக்ய மருள்வாயே' என்று கேட்கிறார்.

அப்படியென்றால் இகம் என்று குறிப்பிடப்படும் இந்த பூமியில் சௌபாக்கியம் வேண்டுமென்று கேட்பதும் ஆசை என்ற வட்டத்திற்குள் வந்துவிடுமா? இதை நாம் சற்று ஆராயவேண்டும். இந்தப் பாடலிலில் அருளாளர் பேராசை எனும் பிணி என்றுதான் கூறினாரே தவிர, ஆசை என்ற பதத்தை உபயோகிக்கவில்லை. ஆசை என்ற உந்துதல் இல்லை யென்றால் இந்த உலகில் எந்த செயலும் நடைபெறாது.

அப்படியானால் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியா சம்? இதை அறிந்தால்தான் இறைவனை அடையும்வழி சற்று தெளிவுபெறும்.

"கரவாது இடுவாய்' என்ற பாடலிலில் ஆசைப்பட வேண்டாம் என்ற அருணகிரி நாதர், இந்தப் பாடலில் ஆசைப் படலாம் என்று கூறியதுபோல தெரிவது சற்று குழப்பமடையச் செய்யலாம். ஆனால் அருணகிரி நாதர் ஆசை என்னும் சொல்லை உபயோகப்படுத்தி, அதனால் தமக்கு துன்பம் நேர்ந்தது என்று சொல்லும் பாடல்கள் அனைத்திலும் பேராசையை மட்டுமே சொல்கிறார். பேராசை என்பது ஆழ்மனதில் புதைந்துள்ள கர்மவினைகள். எத்தனையோ பிறவிகளின் பதிவுகள். இந்த பூமியில் சௌக்கியமாக வாழ நினைப் பது ஆசையன்று. ஆனால் எல்லாம் தமக்கே, நான்தான் எல்லாம், எனக்காகவே என் சுற்றம், என் விருப்பப்படியே எல்லாரும் நடக்கவேண்டும் என்றெல்லாம் நினைப்பதும், நமக்கு நாமே விலங்கிட்டு நம்முடைய சுதந்திரத்தைக் கெடுத்துகொள்வதும் இந்த ஆழ்மன ஆசைகளினால் தான்.

அருணகிரிநாதர் முன்னர் சொன்னது ஸ்தூலமான ஆசைகளை. இந்தப் பாடலிலில் சொல்வது ஒருபடி உள்சென்று மனதிலுள்ள சூட்சுமமான ஆசைகளை. பின்வரும் "தூசா மணியும்' என்ற பாடலிலிலும் "ஆசா நிகளம்' என்று ஆசை விலங்கைப் பற்றிப் பேசுவார். அது ஆசையின் மூலமான கர்மவினைகளைப் பற்றி வரும். இந்தப் பாடலிலில் அருணகிரிநாதர் சொல்வது, மனதின் எண்ணற்ற பதிவுகளால் உண்டான தேவையில்லாத ஆசைகளை. அதுவே பேராசை எனப்படும். இந்த பேராசையானது ஆன்மிக வாழ்வில் உள்ளவர்களை பாதாளத்தில் விழச்செய்யும். உதாரணமாக; சில மந்திரங்களை பல நாட்கள் ஜெபம் செய்து சித்திபெற்றவர்களுக்கு மூன்று காலங்களையும் உணரமுடியும். சிலர் தேவதைகளோடு பேசமுடியும். சில மந்திரங்களால் பரிவார தேவதைகளான பூத, வேதாள கணங்களைக்கொண்டு சில காரியங்களை சாதிக்கமுடியும். மந்திரத்தில் விபூதி வரவழைப்பது, மனதில் உள்ளதைப் படிப்பது போன்ற சித்திகள் கைவரப்பெறுவார்கள். அதேபோல் எந்த மந்திர ஜெபம் செய்தாலும் நெறிமுறைகளைப் பின்பற்றிச் செய்யும் சாதகனுக்கு சில சித்திகள் கைவரப்பெறும்.

ஆனால் அதைக்கொண்டு உலக வாழ்வில் வித்தை காட்டி பொருள் ஈட்டுவதையோ மக்களைத் தன்வசம் தேவையில்லாமல் இழுப்பதையோ ஒரு சாதகன் செய்வானாயின், அது ஆன்மிக வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளியாகிவிடும். இவ்வாறு செய்யும் சாதகர்களை குரு என்று நம்பி ஏமாறும் மக்கள் ஏராளம். இவ்வாறான பேராசை என்ற நோய் தம்மை அணுகாமல் காக்கவேண்டும் என்றுதான் அருணகிரிநாதர் கேட்கிறார்.

மாறாக உலகவாழ்வே வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. பாம்பன் ஸ்வாமிகளும் அவருடைய குமாரஸ்தவத்தில் "இக பர பதயே நமோ நமஹ' என்று இரண்டு வாழ்வையும் கேட்கிறார்.

அருணகிரிநாதர் இங்கு கிரௌஞ்ச மலையை அழித்த வேலவனை தம்மைக் காக்குமாறு அழைக்கிறார். பேராசை என்பது மலைபோன்று எழுந்து நின்று, "அகந்தையினால்தான் இவ்வாறு செய்கி றோம்' என்ற உன்மையை மறைக்கிறது, மேலும் இந்த ஆசையே அகந்தையையும் மறைத்து அதற்கு மேலும் வலு சேர்கிறது. இவ்வாறாக வளர்க்கப்பட்ட அகந்தை, பல பிறவிகளாக ஆன்மா இறைவனை அடையாமல் தடுக்கிறது. மாறாக இறைவனே வந்து ஆசையை அழித்து அகந்தையைக் களைந்தாலொழிய ஆன்மா கடைத்தேறாது.

அதனாலேயே அருணகிரிநாதர் கிரௌஞ்ச மலையை வேல்கொண்டு தகர்த்த வேலவனை, தன்னுடைய வேலால் தம் ஆசை மலையைத் தகர்க்க சரணடைகிறார். சரணாகதி தத்துவம் இங்கே மெதுவாக அரங் கேறுகிறது.

இந்தப் பாடலிலில் அருணகிரிநாதர் "ஓரா வினையேன்' என்று சொல்வதுலி வினைகள் தம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் நிலையை. "உழல' என்ற சொல்லால்,லி பேராசையானது பல பிறவிகள் தம்மை சூழ்ந்துவருவதைச் சொல்கிறார். ஆசை என்பது தேவி மாகத்மியம் கூறும் "ரக்தபீஜன்' என்ற அசுரனைப்போல! எவ்வாறு ரக்தபீஜன் தன்னுடைய ஒவ்வொரு துளி உதிரத்திலிருந்து, தம்மைப்போலவே பராக்கிரமமான அசுரனை உண்டுபண்ணினானோ, ஆசையும் ஒன்று தீர்ந்தால் அதைப்போலவே வலிலிமையான மற்றுமொரு ஆசையை உண்டுபண்ணியே செல்கிறது. இவ்வாறு பல பிறவிகள் சேர்த்த இந்த ஆசைக்கடலே கர்மவினைக்கு மூலகாரணமாக அமைகிறது. அபிராமி அந்தாதியில் பட்டர் "ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி' என்று இதே பதத்தைப் பயன்படுத்துகிறார். ஆகவே ஆசையானது ஒரு ஆன்மாவைப் பல பிறவிகள் தொடர்ந்து வந்து துன்பம் தரும் பண்புடையது என்பதை நிரூபித்து, நாமஜெபத்தில் பாவனை சேர்த்து, ஆசையைக் களைய முருகனிடம் சரணாகதி அடையு மாறு செய்வதே இந்தப் பாடலிலில் அருளாளர் சொல்லும் உட்கருத்து.

லலிலிதையின் நாமங்கள் ஆயிரத்தில் "நிஷ்காமா' என்ற நாமம் "லலிலிதை ஆசைகள் அற்றவள்; அவளைத் துதித்தால் ஆசைகள் நமக்கும் இல்லாமல் போகும்' என்ற பொருளிலும், "பரப்ரஹ்மம் ஆசைகளற்ற ஒரு வஸ்து' என்ற பொருளிலும் வரும். இந்த நாமம் "பர சௌபாக்கியம்' அருளும். அதேபோல் "காமதாயினி' என்ற நாமம், "ஆசைப்பட்டதை எல்லாம் அருள்பவள்' என்ற பொருளிலும், "ஆசைப்படுவதை நாம் மற்றவர்க்குக் கொடுத்து விடமுடியும்' என்ற பொருளிலும் வரும். இந்த நாமம் "இக சௌபாக்கியம்' அருளும் நாமம். இவ்வாறு அனுபூதியும் லலிலிதையின் நாமங்களும் இக, பர சௌபாக்கியம் அருள்வதை நாம் காணமுடிகிறது.

செய்யுள்-17

"யாமோதிய கல்வியும் எம்மறிவும்

தாமேபெற வேலவர் தந்ததனால்

பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே.'

விளக்கம்: நாம் கற்ற கல்வி, அறிவு எல்லாமே வேலவன் தந்த கொடை. அதனால் இந்த பூவுலகின்மீதுள்ள மையல் போய் உண்மைப் பொருளான பரமாத்மாவை எப்போதுமே நினைத்துக்கொண்டும், இறைவனின் புகழைப் பாடிக்கொண்டும், அவரின் நாமத்தை ஜெபம்செய்துகொண்டும் இருப்போமாக.

ஆன்மிக வாழ்வில் "ஸ்வாத்யாயம்' என்று ஒரு ஒழுக்கம் உண்டு. அதாவது ஆன்மிக விஷயங்களை, புத்தகங்களை தினந்தோறும் ஒரு சாதகன் படிக்க வேண்டும். மேலும் இவ்வளவு நாட்களாக குருவானவர் அவனுக்கு பல்வேறு ஆன்மிகத் தத்துவங்களை விளக்கியுள்ளதை நாம் சென்ற பாடல்களிலும் பார்த்தோம். இவ்வாறாக பெற்ற கல்வியும், தாம் படிக்கும் புத்தகங்களும் சாதகனுக்கு ஒவ்வொருமுறையும் ஒருமாறுபட்ட மற்றும் மேம்பட்ட புரிதலைக் கொடுக்கும். அதனாலாயே சனா தன தர்மத்தில் எந்த ஆன்மிக நூலையும் பலமுறை ஓதும் பாராயண நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக பெற்ற கல்வியை சாதகன் எவ்வாறு உபயோகிக்கவேண்டும் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.

இனியேலி இனிமேல்; பூமேல் மையல் போய்லி இந்த மாயம்கொண்ட உலகிலுள் ளது எல்லாம் உண்மை என்று நம்பி வாழும் மயக்கத்தைவிட்டு; அறம் மெய் புணர்வீர்லி இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை படைப்புகளுக்கும் ஆதாரமாய் இருப்பது ஒரே பரம்பொருளே. அந்த ஒற்றைப் பொருளே பல்வேறு நாமரூப பேதங்கள்கொண்டு உலகில் எல்லாமுமாய் இருக்கிறது என்ற புரிதலைக் கொள்வீராக. நாமேல் நடவீர் நடவீர்லி அப்படிப்பட்ட பரம்பொருளின் புகழை எப்போதும் பாடிக்கொண்டு, அந்த இறைவனின் (முருகனின்) நாமத்தை ஜெபித்துகொண்டு இருப்பீராக.

ஆன்மிக வாழ்விலும் சில சங்கடங்கள் உண்டு. சிலர் தமக்குத் தெரிந்த உண்மையான தத்துவ விளக்கங்களைப் பிறருக்கு சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். இதுவும் ஒருவிதமான அகந்தையே. பின்வரும் பாடல்களில் "கரவாது கல்வி உளார்' என்று அருணகிரிநாதர் இதைக் கூறுகிறார். இவ்வா றாக இருப்பவர்பின் சென்று என்னதான் நம் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டாலும், நமக்கு உண்மை தெரியப்போவதில்லை. அதனாலேயே அருணகிரிநாதர், "தாமே பெற வேலவர் தந்ததனால்' என்று கூறுகிறார்.

நமக்கு வேண்டிய கல்வியை நமக்கு வேண்டிய நேரத்தில் நம் பக்குவமறிந்து சரியாக போதிப்பவர் முருகன் ஒருவனாக மட்டுமே இருப்பார். அதனால் "தாமே' என்ற பதத்தை இங்கு வைக்கிறார்.

"தாமே' என்ற சொல்லுக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. சாதகனுக்கு முருகனே "தாமே'லி அதாவது தன்னையே பொருளாகக் கொடுக்கிறார். இந்த பொருளிலேயே மாணிக்கவாசகர் "தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை' என்ற பொருள்பட பாடுகிறார். இறைவனை நோக்கி தூய அன்பில் சாதகன் செய்யும் ஒவ்வொரு செயலும், இறைவனை அவனை நோக்கி மிகவும் வேகமாக இழுக்கிறது. பல சமயங்களில் இறைவன் வலுவில் வந்து சாதகனை ஆட்கொள்கிறார்.

அவ்வாறுதான் அருணகிரிநாதரையும் முருகன் வலுவில் வந்து தடுத்தாட்கொள்கி றார். அதனால்தான் "தாமே பெற வேலவர்' என்ற பதம் இங்குவருகிறது. இதற்கு இன்னொரு விளக்கமும் உண்டு. சீடன், குரு, தெய்வம் மூன்றும் வெவ்வேறல்ல. அதனால் குரு கொடுக்கும் மந்திரத்தை எப்போதும் ஜெபம் செய்யும் சீடன், குருவைப்போலவே அந்த தெய்வத்தைத் தானும் அடைகிறான். தானும் தெய்வநிலை எய்துகிறான். இங்கு தெய்வநிலை என்பது வேதங்கள் கூறும் மகா வாக்கியங்களைதான். தானே பரமாத்மா என்று உணர்வது. இவ்வாறாக அநுபூதியுள் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன.

லலிலிதையின் நாமங்களில் "ஆத்ம வித்யா'லி தானே ஆத்ம ஞானமாக இருப்பவள். "மகா வித்யா'லி வித்தைகளுக்கெல்லாம் பெரிய வித்தையாய் இருப்பவள். "ஸ்ரீ வித்யா'லி புனிதமான ஞானமாக இருப்பவள். "சுத்த வித்யா'லி வேதங்கள் கூறும் மகா வாக்கியங்களில் ஒளிரும் ஞானமாக இருப்பவள். "சிவஞான ப்ரதாயினி'லி லலிலிதையே குருவாக இருந்த சிவஞானத்தை அருள்பவள். அதன்மூலம் தம்மையே தம் அடியாருக்குக் கொடுப்பவள். லலிலிதையின் மேற்கண்ட நாமங்கள் இந்தப் பாடலிலில் வரும் "தாமே பெற வேலவர் தந்ததனால்' என்ற வரிக்கு ஏற்ற பொருள் கொண்டுவரும்.

மேலும் "நாம பாராயண ப்ரீத்தா'லி இறைவனின் நாமங்களைப் பாடுவதில், ஓதுவதில் பிரியம் உள்ளவள் என்ற நாமம், "நாமேல் நடவீர்' என்ற வரிக்கு பொருள் தந்து பறைசாற்றும்.

இவ்வாறாக லலிதா சஹஸ்ரநாமமும் கந்தர் அனுபூதியும் ஒரே பரம்பொருளை அடைய சாதகனுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்த இரு கிரந்தங்களையும் பலமுறை பாராயணம் செய்யும் ஒரு சாதகனுக்கு மெய்ப்பொருள் விளக்கத்தை தானே புரியச்செய்து, இறைவனை அடைய வழிவகுக்கிறது.

(அனுபூதி தொடரும்)