உத்தரப்பிரதேச மாநிலம், யமுனை நதிக்கரையிலுள்ள அலகாபாத் தலமானது பாரதநாட்டின் தீர்த்தத் தலங் களில் முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. இங்கு அமைந்துள்ள "தீர்த்தராஜ் பிரயாகை' எனப்படும் திரி வேணி சங்கமத்தில், 15-1-2019 முதல் 4-3-2019 வரை ஆறாண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளா நடைபெறவுள்ளது.
காசிக்குச் சென்று கங்கை நதியில் நீராடவேண்டும்; காசி விஸ்வநாதரையும், அன்னை விசாலாட்சியையும், ஸ்ரீஅன்னபூரணி மற்றும் அங்கு அருள் புரியும் தெய்வங்களையும் வழிபடவேண்டும் என்று புனிதப் பயணம் செல்பவர்கள், முதலிலில் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் (யமுனையில்) நீராடி, அங்கு நதிநீரில் படகில் அமர்ந்து சாஸ்திர சம்பிரதாயப் படி சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நியதி உள்ளது.
அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி (உள் முகமாக) ஆகிய மூன்று புனித நதிகளும் சங்கமமாகின்றன. கங்கை செந்நிறமாகவும், யமுனை பச்சை வண்ணத்திலும், சரஸ்வதி வெண்ணிறத்தி லும் சங்கமிக்கின்றன. திரிவேணி சங்கமக் கரையானது மிகவும் அழகு வாய்ந்தது. அதேசமயம் யாத்திரிகர்களால் பரபரப்படன் திகழும் இடமாகவும் விளங்குகிறது.
இங்கு கரையோரம் அமைந்துள்ள பெரிய பாழடைந்த கோட்டைக்குள்தான் அக்ஷயவடம் என்னும் புனித மரம் உள்ளது. ராமன்- சீதாதேவி வனவாச காலத்தில், பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி சீதாதேவி திரிவேணியில் நீராடி அக்ஷயவடம் என்னும் ஆலமரத்தைப் பூஜித்தாள் என்கிறது புராணம்.
புராணப் புகழ்பெற்ற இந்த அக்ஷயவடம் மரத்தினை திரிவேணியில் நீராடும்போதே காணலாம்.
இந்த மரம் தேவலோகத்திலிலிருந்து வந்தது என்பது ஐதீகம். இதற்கு வேர்கள் இல்லையென்றும், இதை யாராலும் அழிக்கமுடியாது என்றும், எப்போதும் வளர்ந்துகொண்டே இருக் கும் என்றும் கூறப்படுகிறது. தெய்வாம்சம் நிறைந்த இந்த விருட்சம் தன்னை வணங்குவோருக்கு கேட்கும் அருளினைத் தரும் என்பது காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கை. அதனால்தான் சிருங்கேரி புறத்திலிலிருந்து படகுமூலமாக வந்த சீதை, யமுனைக்குப் பூஜைசெய்து, பிறகு அக்ஷயவடத்திற்கும் பூஜைசெய்து வேண்டிக்கொண்டாள் என்கிறது புராணம்.
இந்த மரமுள்ள பகுதியில் ஒரு கோவில் உள்ளது. சுரங்கப்பாதையைப்போல் உள்ள வழியாகச் சென்றால் உள்ளே சிவன், விஷ்ணு, கங்காதேவி, நவகிரகங்கள் உள்ளிட்ட நிறைய சந்நிதிகள் உள்ளன.
வளர்ந்து செழித்துப் படர்ந்திருக்கும் அக்ஷயவடத்தின் பகுதிகளை யாரும் தொடமுடியாதபடி இரும்புக்கம்பிகளால் வேலிலி அமைத்திருக்கிறார்கள். இந்த அக்ஷய வடம் ஒரு காலத்தில் அந்நியர்களின் ஆட்சி யின்போது அடியோடு வெட்டி வீழ்த்தப் பட்டதாம். இருந்தாலும், இந்த மரம் தனித் தன்மையுடன் வளர்ந்து கோட்டைக்கு வெளியேயும் காட்சிதருகிறது.
அம்மரத்தை தரிசித்துவிட்டு வெளியே வந்தால் தென்புறத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் எழுப்பிய ஆதிசங்கரருக்கான கோவில் பல அடுக்குகளாக அமைந்துள்ள தைக் காணலாம். மிக அழகாகக் காட்சி தரும் இந்தக் கோவிலிலில் அருமையான ஓவியங் களையும், ஆதிசங்கரரின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம். கோவிலின் மேலே செல்ல படிக் கட்டுகள் உள்ளன. மேலே சென்றுபார்த்தால் திரிவேணி சங்கமத்தின் முழுத்தோற்றத் தையும், யமுனை நதி ஓடும் அழகையும் காணலாம்.
கங்கையும், யமுனையும், கண்களுக்குத் தெரியாத சரஸ்வதியும் ஒன்றாக இணையும் உன்னதமான அலகாபாத் தலத்தில்தான் கும்பமேளா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்தியாவின் எல்லா பகுதிகளிலிலிருந்தும், இந்துக்களால் போற்றப்படும் திருத்தலம் அலகாபாத் திரிவேணி. மாறுபட்ட திசை களிலிலிருந்து வேகத்தோடு நதிகள் இணையும் பகுதி அறுபது அடி ஆழமிருக்கலாம் என்கிறார்கள்.
திரிவேணி நீரில் நீராடுவதற்கு வசதியாக பெரிய படகுகள் நங்கூரமிடப்பட்டிருக் கின்றன. அவை ஜோடிகளாக, இரண்டிற்கும் இடையில் ஆறடி இடைவெளி இருக்கும் வகையில் மூங்கில்களால் இணைக்கப் பட்டிருக்கின்றன. இந்த இடைவெளியில் நான்கு பக்கமும் பிடித்துக்கொள்ள வசதி யான சட்டத்துடன் ஒரு சதுரமேடை தொங்குகிறது. நதியினுள்ளே மூழ்கியிருக்கும் இதை இணைக்கும் வலுவான கயிறுகளை படகிலிலிருக்கும் பணியாளர்கள் இயக்க, நதியில் மிதக்கும் அந்தக் குளியல் மேடையில் இறங்கி பயமில்லாமல் நீருக்குள்மூழ்கி நீராடி புனிதம் பெறலாம். பெண்கள் ஆடைகள் மாற்றிக்கொள்ள ஒரு படகும் அங்குள்ளது. இந்த வசதிகளை அங்குள்ள நிர்வாகம் செய்துள்ளது. இதற்குக் கட்டணமாக சிறு தொகையும் வசூலிலிக்கப்படுகிறது. மிதக்கும் படகிலில் அமர்ந்துகொண்டே நதிக்கு பூஜையும், சடங்குகளையும் மேற்கொள்ள பண்டாக் களும் அங்கு தனிப்படகுகளில் அமர்ந்து பக்தர்களுக்கு உதவுகிறார்கள். இவையெல் லாம் சாதாரண நாட்களில் நடைபெறும் வழிமுறைகள். கும்பமேளா சமயத்தில் அதற் குரிய இடத்தினை யமுனைக் கரையோரங் களில் அமைத்து வசதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக திரிவேணி அலகாபாத் (பிரயாகை) யமுனை நதியில் நீராடுவது மகாபுண்ணியமாகும். அதைவிட மகா கும்பமேளாவில் நீராடுவது மகா மகா புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. மேலும், தைமாதம் அமாவாசை அன்று நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது.
இந்த வருடம் 4-2-2019 அன்று (தை- 21) தை அமாவாசை. அன்று திங்கட்கிழமை. திங்கட்கிழமை வரும் அமாவாசையை அமாசோம அமாவாசை என்று போற்றுவர். (இந்த நாளில் ஏராளமான பக்தர்கள்- சுமார் நான்கு கோடி பக்தர்கள் நீராடுவார்கள் என்று விழாக்குழுவினர் எதிர்பார்க்கிறார்களாம். அதற்கான வசதிகள் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.)
அலகாபாத் திரிவேணியில் பக்தியுடன் அடிமேல் அடி எடுத்து வைத்து மெல்ல நடந்து, இடுப்பளவு நீரில் நின்று சூரியனைப் பார்த்து வணங்கி, நீருக்குள் மூழ்கியெழுந்து பக்தர்கள் புனிதம் பெறுகிறார்கள்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பல அரிய பொருட்கள் தோன்றின. இறுதியாக அமிர்தம் கிடைத்தது. அசுரர்கள் கையில் அது கிடைக்கக்கூடாது என்று கருடனிடம் அமிர்தகும்பத்தைக் கொடுத்தார் மகாவிஷ்ணு. கும்பத்துடன் கருடன் பறக்கும்போது கருடனுக்கும் அசுரர் களுக்குக்கிடையே நடந்த சண்டையில், கும்பத்திலிலிருந்து சில அமிர்தத்துளிகள் பூமியில் விழுந்தன. அவ்வாறு விழுந்த இடங்கள்தான் அலகாபாத், ஹரித்வார், நாசிக், உஜ்ஜயினி. அதனால்தான் இந்த நான்கு இடங்களிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது. இருந்தாலும் சிலசமயங்களில் இந்த நடைமுறை மாறிவருவதும் உண்டு. அந்த வகையில் 2019-ஆம் வருடம், ஜனவரி 15-ஆம் தேதி முதல் மார்ச் 4-ஆம் தேதிவரை அலகா பாத் புனிதத்தலத்தில் அர்த்த கும்பமேளா நடைபெறுகிறது.
இந்தக் கும்பமேளா நடைபெறும் நாட்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடினால் கிடைக்கும் புண்ணியம் ஏராளம் என்கின்றன ஞானநூல்கள்.
ஜமுனா என்று வட இந்தியர்கள் போற்றும் இந்த நதியானது பாரதத்தில் ஓடும் ஏழு புனித நதிகளுள் ஒன்று. கங்கைக்கு அடுத்த நதியாகக் கருதப்பட்டாலும், கங்கை அவதாரத்திற்கு பல யுகங்களுக்கு முன்பே யமுனை அவதரித்துவிட்டாளாம். வராக கல்பத்தில் சத்திய யுக ஆரம்பத்தில்- அதாவது மூன்று லட்சம் ஆண்டுகளுக்குமுன்பே தோன்றிவிட்டதாக புராண ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள்.
சூரிய பகவான், சஞ்சனாதேவியை மணந்தார். இவர்களிருவருக்கும் பிறந்த முதல் மகன் வைவஸ்வத்மனு. இரண்டாவதாக ஒரு ஆண்- ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு யம், யமி என்று பெயர் சூட்டி வளர்த்தார்கள். இந்த "யம்'தான் பிற்காலத்தில் எமன் என்னும் எமதர்மராஜன் ஆனார்; அதேபோல் யமிதான் யமுனை நதி ஆனாள் என்கிறது புராணம்.
வட இந்திய பஞ்சாங்கத்தின்படி, "சைத்ரமாதம், கிருஷ்ண பக்ஷம், சஷ்டிதிதி நண்பகலிலில் யமுனை நதி உருவம் பெற்று நானிலம் அடைந்தாள்' என்று பத்மபுராணம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15-க்கு இடையில் வரும் அந்த சுபநாளை வெகுவிமரிசையாக வடமதுராவாசிகள் ஜமுனா ஜெயந்தி எனும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
புராணக்கூற்று பலவாறாக இருந்தாலும் யமுனை நதி உத்ராஞ்சல் மாநிலத்தில், கடு வால் மாவட்டத்திலுள்ள இமயமலைப் பகுதியில், 3,463 மீட்டர் உயரம் கொண்ட பந்தர்பூஞ்ச் (வானரவால்) என்ற நெடும் மலைத்தொடர்ப்பகுதியில், காளிந்தி எனும் பனிமலைச் சிகரத்திலிலிருந்து உற்பத்தி யாகிறது. அது உற்பத்தியாகும் இடத்திலிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் கீழே, இந்த நதிக்கரையிலுள்ள முதல் புனிதத்தலம் யமுனோத்திரி ஆகும்.
யமுனை உத்தரவாகினியாகப் பாய்வதால் அந்த இடத்திற்கு யமுனா+உத்தரி (வடக்கு) யமுனோத்திரி என்று பெயர்பெற்றது.
உயரமான பகுதியில் உற்பத்தியாகி, நீர்வீழ்ச்சியாக வீழ்ந்து நிலப்பரப்பினை சந்திக்கும்போது, அங்குள்ள இன்னொரு நீர்வீழ்ச்சியுடன் கலந்து யமுனை என்றும், ஜானவி என்றும் அந்த நீர்வீழ்ச்சிகள் யமுனோத்திரி தலத்தில் ஒன்று சேர்ந்து, யமுனை பூரணநதியாக மாறி வேகமாகப் பாய்ந்து செல்கிறாள்.
யமுனோத்திரியில் யமுனை அம்மனுக்கு ஒரு கோவில் உள்ளது. இங்கு யமுனாதேவி சதுர்புஜங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிலிக்கிறாள்.
யமுனை வரும் பனிமலைப் பிரதேசத்தில், அங்குள்ள பாறைகளின் வெடிப்புப் பகுதியிலிலிருந்து கந்தகம் கலந்த வெந்நீர் ஊற்றுகள் பல உள்ளன. இதில் பக்தர்கள் நீராடி, யமுனா தேவியை வழிபடுகிறார் கள். இக்கோவில் மே மாதம் அட்சய திரிதியை நாளில் திறக்கப்பட்டு, நவம்பர் இறுதிவரை திறந்திருக்கும். மற்ற காலங்களில் மழை, பனி அதிகமாக இருப்பதால் இப்பிரதேசம் மனித சஞ்சாரமின்றிக் காட்சி தரும்.
1,380 கிலோமீட்டர் நீளமுள்ள யமுனையின் இருபுறங்களிலும் ஏராளமான புனிதத் தலங்கள் உள்ளன. அங்கெல்லாம் கும்ப மேளாவையொட்டி மக்கள் நீராடிப் புனிதம் பெறுகிறார்கள்.
இந்த யமுனை நதிக்கரையிலுள்ள வட மதுராவில்தான் பகவான் கிருஷ்ணர் பால்ய லீலைகள் புரிந்தார். அதனால், வட மதுரா மற்றும் கோகுல பிருந்தாவனம் முதலிய எழில்மிக்க நகரங்கள் இன்றும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
கும்பமேளா வைபவத்தில் பகவான் பாதங்கள் பட்ட யமுனையில் நீராடினால் புனிதம் கிடைப்பதுடன், சுவர்க்கத்தில் ஓரிடம் கிடைக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.