Advertisment

ஏழு வடிவங்கள் கொண்ட அர்த்தேஸ்வரி!

/idhalgal/om/artheswari-seven-forms

சுந்தாதேவி ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜலோர் மாவட்டத்தில், ஆரவல்- மலையில் அமைந்துள் ளது. இந்தக் கோவில் கடல் மட்டத்திலிருந்து 1,220 மீட்டர் உயரத்தில், மவுன்ட் அபுவிலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

Advertisment

இது 900 வருடங்களுக்கு முன்னர் புதுப் பித்துக் கட்டப்பட்டது. தேவி சாமுண்டாவின் ஆலயமிது. ஆனால், இங்கு அன்னை யின் பெயர் "சுந்தா மாதா.'

குஜராத்திலிருந்தும் ராஜஸ்தானிலிருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடிவருகிறார்கள். அங்கிருக்கும் இயற்கையழகு பக்தர்களின் மனதைக் கொள்ளைகொள்ளும். ஜெய் சால்மாரில் தோண்டி எடுக்கப்பட்ட மஞ்சள்நிறக் கற்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வெட்டில் மூன்று வரலாறுகள் கூறப் பட்டிருக்கின்றன.

1262-ஆம் ஆண்டில் சவுகான் மன்னர் கள் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்திருக்கின்றனர். பர்மார் வம்சத்தைச்

சுந்தாதேவி ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜலோர் மாவட்டத்தில், ஆரவல்- மலையில் அமைந்துள் ளது. இந்தக் கோவில் கடல் மட்டத்திலிருந்து 1,220 மீட்டர் உயரத்தில், மவுன்ட் அபுவிலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

Advertisment

இது 900 வருடங்களுக்கு முன்னர் புதுப் பித்துக் கட்டப்பட்டது. தேவி சாமுண்டாவின் ஆலயமிது. ஆனால், இங்கு அன்னை யின் பெயர் "சுந்தா மாதா.'

குஜராத்திலிருந்தும் ராஜஸ்தானிலிருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடிவருகிறார்கள். அங்கிருக்கும் இயற்கையழகு பக்தர்களின் மனதைக் கொள்ளைகொள்ளும். ஜெய் சால்மாரில் தோண்டி எடுக்கப்பட்ட மஞ்சள்நிறக் கற்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வெட்டில் மூன்று வரலாறுகள் கூறப் பட்டிருக்கின்றன.

1262-ஆம் ஆண்டில் சவுகான் மன்னர் கள் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்திருக்கின்றனர். பர்மார் வம்சத்தைச் சேர்ந்தவர்களை போரில் சவுகான் வம்சத்தினர் தோற்கடித்தனர்.

Advertisment

1326-ல் இந்த ஆலயம் புதுப்பித்துக் கட்டப்பட்டது. 1727-ஆம் வருடத்தில் இந்தக் கோவில் மீண்டும் புதுப்பிக்கப் பட்டது.

பண்டைக் காலத்தில் நாத் வம்சத் தைச் சேர்ந்த துறவிகள் இந்த ஆலயத் தில் பூஜைகளைச் செய்ததுடன், நிர்வாகத் தையும் கவனித்திருக்கின்றனர். ரப்பா நாத் என்ற துறவி இந்த ஆலயத்தை மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்திருக்கிறார்.

aa

இந்த ஆலயத்தில் துர்க்கையின் தலைவடிவமே மூலவராக இருக்கிறது. இந்த கோவில் சக்தி பீடங்களில் ஒன்று.

இதைப் பற்றிய புராணக் கதை...

அன்னை பார்வதியின் தந்தையான தட்சப் பிரஜாபதி, தன் மருமகன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்தான். அதைக் கேட்பதற்காகச் சென்ற பார்வதியை அவமானப்படுத்தினான். அதை யடுத்து சிவபெருமானுக்கும் பார்வதிக் குமிடையே மிகப்பெரிய சொற்போர் நடந்தது. அதன் இறுதியில் விபரீத முடிவை பார்வதி எடுக்க, யாகத்தீயில் விழுந்து கருகிய பார்வதியின் உடலைத் தோளில் வைத்துக் கொண்டு ஆவேசத்துடன் ருத்ர தாண்டவமாடி னார் சிவன்.

சிவனது கோபத்தால் பூலோகத்திற்கு பெரிய பாதிப்பு உண்டாகிவிடுமோ என்றெண் ணிய மகாவிஷ்ணு, தன் சுதர்சன சக்கரத்தைச் செலுத்த, பார்வதியின் உடல் பல்வேறு துண்டுகளாகப் பல்வேறு இடங்களிலும் சிதறி விழுந்தது. அவ்வாறு அன்னை பார்வதியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களெல்லாம் சக்திபீடங்களாக மாறின. இந்த இடத்தில் அன்னையின் கழுத்துப் பகுதி விழுந்திருக்கிறது.

வெறும் கழுத்து மட்டும் இங்கிருப்பதால், இந்த அன்னை அர்த்தேஸ்வரி என்றும் அழைக் கப்படுகிறாள். அதாவது அரை ஈஸ்வரி என்று அர்த்தம். புராண நூல்களில் இந்த அன்னையைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.

திரிபுர் என்னும் கொடூர அரக்கன் தேவர் களைப் பல வகைகளிலும் தொல்லைகளுக்கு ஆளாக்கினான். தாங்கமுடியாத தேவர்கள் அன்னையிடம் முறையிட்டனர். அடுத்த நிமிடமே அன்னை அவர்களுக்குமுன் தோன்றி அபயம்தந்து அந்த கொடூர அரக்கனை அழித்தாளாம். அதைத் தொடர்ந்து உண்டா னதே இந்த ஆலயம்.

இங்கு அன்னை யின் சிலைக்கருகில் புரேஸ்கர் என்னும் பெயரில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதற்கு தினசரி பூஜைகள் நடக்கின்றன. இந்த கோவிலுக்கு அருகில் சாகி என்னும் நதி ஓடுகிறது.

இந்த ஆலயம் ஒரு குகைக்குள் உள்ளது. இங்கு சிவனும் சக்தியும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள்.

பகாசுரன் என்னும் அரக்கனை இந்த அன்னை அழித்திருக்கிறாள். அப்போது மாறுபட்ட ஏழு உருவ அமைப்புகளுடன் அன்னை தோன்றினாளாம். அந்த ஏழு உருவங்களும் கோவிலில் இருக்கின்றன.

பல அரசர்களும் இந்த அன்னையை குலதெய்வமாக வழிபட்டிருக்கின்றனர். நவராத்திரியின்போது இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.கோவிலுக்குச் செல்வதற்கு "ரோப் கார்' வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜி இந்த ஆலயத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறான். பின்னர் புதுப்பிக்கப் பட்டது.

வீடுகளில் சிதிலமடைந்த நிலையிலுள்ள சிலைகளை இந்த ஆலயத்தில் கொண்டுவந்து வைத்தால், பிரச்சினைகள் அனைத்தும் தீரு மென்பது ஆழமான நம்பிக்கை. இப்போது ஆலயத்தில் சலவைக் கற்களைப் பயன் படுத்தி திருப்பணி செய்துள்ளனர். காலை 8.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை ஆலயம் திறக்கப்பட்டிருக்கும்.

"ரோப்' மூலம் ஆறு நிமிடங்களில் ஆலயத்தை அடையலாம். ஆலயத்திற்குச் செல்வதற்கு அக்டோபரிலிருந்து மார்ச் வரை ஏற்ற காலமாகும். அருகிலிருக்கும் ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து 140 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை அடையலாம்.

சென்னையிலிருந்து ஜோத்பூர் செல்லும் ரயிலில் 2,126 கிலோமீட்டர் பயணித்து, பிந்த்வாரா என்ற இடத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து 53 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

om011021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe