அரிச்சந்திரனுக்கோர் ஆலயம்!

/idhalgal/om/arichandranukkore-temple

தாவதொரு விஷயத்திற்குப் பொய் சொல்லவேண்டுமென்று நண்பர் களிடமோ உறவினர்களிடமோ கூறினால், மனசாட்சியுள்ளவர்கள் "பொய் சொல்ல மாட்டேன்' என்று கூறுவார்கள். அப்போது, "நீ என்ன பெரிய அரிச்சந்திரனா? அரிச்சந்திரனுக்கு அண்டைவீட்டுக் காரனா?' என்று கோபத்துடன் கேட்பார் கள்.

எத்தகைய சூழ-லும் பொய் பேசாமல், மனித வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அரிச்சந்திரன். இவரது கதை பொம்மலாட்டம், மேடை நாடகம், தெருக் கூத்து என பல வடிவங்களில் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. அப்படிப் பட்ட அரிச்சந்திரன், அவரது மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசன் ஆகியோர் தெய்வங்களாக இருந்து மக்களைக் காத்து வருகிறார்கள். இவர்களுக்குக் காவல் தெய்வமாக வீரகருப்புசாமி விளங்குகிறார்.

இவர்கள் அனைவரும் தங்களை நாடிவரும் பக்தர்களின் துன்பத்தைப் போக்கி வாழ்க்கையை வளம்பெறச் செய்து வருகிறார்கள்.

hh

அரிச்சந்திரன் கதைச் சம்பவங்கள் வடமாநிலங்களில் நடந்ததாகக் கூறப் பட்டாலும், அவர்கள் நாடு நகரம் அனைத் தையும் இழந்து அல்லல்பட்டு துன்பப்பட்டு அலைந்து திரிந்து, அதி-ருந்து விடுபடும் நேரத்தில் நமது தமிழகத்திற்கு வந்தனர்.

இங்குதான் அவர்கள் பட்ட துன்பங்கள் அவர்களைவிட்டுச் சென்றதென்று மக்கள் நம்புகின்ற னர். அதன் காரணமாகத்தான் அவர்கள் தெய்வமாக இங்குள்ள மக்களால் வழிபடப்பட்டு வருகின்றனர்.

மகத நாட்டு மன்னன் திரிசங்கு மகாராஜாவின் மகன் அரிச்சந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் உண்மை, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப் பிடித்தவர். நேர்மையாக ஆட்சி செய்து நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பிறகு அவர் நாட்டைத் துறந்து, மனைவி, மக்களைப் பிரிந்து, சுடுகாட்டில் பிணமெரிக்கும் நிலைவரை வந்தததற்கு என்ன காரணம்?

அரிச்சந்திரன்- சந்திரமதி இருவரும் முன் ஜென்மத்தில் கணவன்- மனைவியாக இணைந்தவர்கள். அடுத்த ஜென்மத்திலும் அவர்கள் கணவன்- மனைவியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது எப்படி தெரியுமா? காசி நகரத்தை ஆண்ட காசிராஜனின் மகள் இளவரசியான மதிவதனி அழகும் அறிவும் நிறைந்தவள். அவளை மணம்புரிவதற்கு பலநாட்டு அரசர்களும் போட்டி போட்டனர். இந்த நிலையில் காசிராஜன் தன் மகள் மதிவதனி திருமணத்தை சுயம்வரம்மூலம் நடத்தப் போவதாக அறிவித்தார். இந்தத் தகவல் கிடைத்த பலநாட்டு அரசர் களும் இளவரசர்களும் மதிவதனியின் சுயம்வரத்தில் கலந்துகொள்வதற்காக காசி மாநகரத்தில் குவிந்தனர். இதற்காக பெரிய மைதானம் உருவாக்கப்பட்டு அதைச் சுற்றிலும் மன்னர்களுக்கு ஆசனம் போடப்பட்டது.

சுற்றிலும் அரசர்களும் இளவரசர்கள் பலரும் அவரவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, நடுவில் ஒரு பெரிய இரும்புக் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த கூண்டுக்குள்ளே சிங்கம் ஒன்று கர்ஜித்தபடி சுற்றிச்சுற்றி வந்தது. அப்போது மன்னன் காசிராஜன் எழுந்து, "எனது மகள் மதிவதனியைத் திருமணம் செய்ய விரும்பும் அரசர்கள் இந்த கூண்டுக்குள் செல்லவேண்டும். அவர்கள் உள்ளே சென்றவுடன் கதவு அடைக்கப்பட்டுவிடும். கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்துடன் சண்டையிட்டு அதை அடக்கும் அரசருக்குதான் என் மகள் மாலையிட்டு அவரை கணவராகத் தேர்வுசெய்வாள்'' என்று அறிவித்தார்.

இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிங்கத்துடன் சண்டையிட்டு அதை அடக்கும் தைரியம் அங்கிருந்த யாருக்கும் இல்லை. பலர் சொல்லாமல்

இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிங்கத்துடன் சண்டையிட்டு அதை அடக்கும் தைரியம் அங்கிருந்த யாருக்கும் இல்லை. பலர் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்தனர். ஆனால் ஒரே ஒருவன் மட்டும் எழுந்து கூண்டுக்குள் சென்று சிங்கத்தை அடக்க முன்வந்தான். அவன்தான் மகதநாட்டு மன்னன் திரிலோசனன்.

இவனது துணிவைப் பார்த்து எல்லாரும் வியந்தனர். மன்னரின் அறிவிப்பின்படி திரிலோசனன் சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று அதனுடன் வீரமாக சண்டையிட்டு சிங்கத்தைக் கொன்றான். இதைக்கண்ட மன்னர் காசிராஜனும் அவரது நாட்டு மக்களும் சந்தோஷத்தைக் கொண்டாடினார் கள். காசிராஜன் உறுதியளித்தபடி இளவரசி மதிவதனி திரிலோசனனுக்கு மாலையிட்டாள்.

அன்று மாலை புதுமணத் தம்பதிகள் இருவரும் கங்கை நதிக்கரையின் அழகை ரசித்தபடி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில், மதிவதனியை மணக்கமுடியாத ஏக்கத்திலும் கோபத்திலு மிருந்த ஒரு நாட்டு மன்னன், மறைந்திருந்து பின்புறமாக திரிலோசனனின் தலையை வாளால் வெட்டிச் சாய்த்தான். கணவர் இறந்தது கண்டு துடித்துப்போனாள் மதிவதனி. தா-கட்டிய கயிறு ஈரம் காய்வதற்குள் கணவரை இழந்துவிட்டபிறகு இனிநாம் எதற்கு உயிரோடு வாழவேண்டுமென்று முடிவு செய்த மதிவதனி ஓடும் கங்கை நீரில் குதித்தாள். நீரில் மிதந்தபடி மதிவதனி செல்லும்போது, கங்கையில் நீராட வந்த கௌதம முனிவர் அவளைக் காப்பாற்றிக் கரைசேர்த்தார்.

கழுத்தில புதுத்தா-, மேனியில் புத்தாடைகள்! திருமணம் நடந்து சந்தோஷமாக இருக்கவேண்டிய இந்தப் பெண் ஏன் கங்கை நதியில் மிதந்து வந்தாள் என்று கவுதம முனிவர் சிந்தித்துக்கொண்டிருந்த நேரத் தில், மதிவதனி மயக்கம் தெளிந்து விழித்தெழுந்தாள். அவளைப் பார்த்த முனிவர், "என்றும் தீர்க்க சுமங்க-யாக வாழ்ந்திருப் பாயாக'' என்று ஆசிர்வதித்தார். அதைக் கேட்டு மதிவதனி கண்ணீர்விட்டு அழுதாள்.

"ஏனம்மா அழுகிறாய்?'' என்று முனிவர் கேட்க, "சிங்கத்தை அடக்கி என்னை மணம்செய்த வீரனான என் கணவர்மீது பொறாமை கொண்ட மன்னன் ஒருவன் அவரைக் கொலை செய்து விட்டான். கணவரை இழந்த நான் எப்படி சுமங்க-யாக வாழ்வேன்? தங்களுடைய வாக்கு எப்படி ப-க்கும்?'' என்று மதிவதனி கேட்க, அப்போது கௌதம முனிவர், "இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டா லும் அடுத்த ஜென்மத்தில் அவர்தான் உனது கணவர். இருவரும் ஒன்றுசேர்வீர்கள். தற்போது உன் கழுத்தி-ருக்கும் தா- உன்னுடனேயே இருக்கும். அடுத்த ஜென்மத்தில் நீ கழுத்தில் தா-யுடன் பிறப் பாய். இந்த தா- மற்றவர் கண்களுக்குத் தெரியாது. உன் கழுத்திலுள்ள தா- எந்த ஆண்மகன் கண் களுக்குத் தெரிகிறதோ அவர்தான் உனது இறந்துபோன கணவர். எனது வாக்கு நிச்சயம் ப-க்கும். உனது ஆசை நிறைவேறும்'' என்று கூறி ஆசிர்வதித்தார். கௌதம முனிவரது ஆசிரமத்திலேயே தன் இறுதிக் காலம்வரை அவருக்குப் பணிவிடை செய்து மரணமடைந்தாள் மதிவதனி.

முனிவரின் வாக்குபோலவே அடுத்த ஜென்மத்தில் மன்னனின் மகள் சந்திரமதி யாகப் பிறந்தாள் மதிவதனி. அதேபோல் திரிலோசனனும் அரசன் மகன் அரிச்சந்திர னாகப் பிறந்தான். இருவரும் திருமண வயதை அடைந்தனர். சந்திரமதி திருமணத் திற்கு அவளது தந்தை சுயம்வரம் வைத்தார். அப்போது சுயம்வரத்தில் கலந்துகொண்ட மன்னர்களிடம், "எனது மகள் பிறக்கும்போதே கழுத்தில் தா-யுடன் பிறந்தவள். ஆனால் அந்த தா- யார் கண்களுக்கும் தெரியாது. இங்கு வந்துள்ள மன்னர்களில் ஒவ்வொருவராக என் மகள் முன்னே நின்று பார்க்கவேண்டும். யார் கண்களுக்கு என் மகள் கழுத்தி-ருக்கும் தா- தெரிகிறதோ அவரையே கணவராக ஏற்றுகொண்டு மாலையிடுவாள்'' என்று அறிவித்தார். அதன்படி மன்னர்கள் ஒவ்வொருவரும் சந்திரமதியை அருகில்வந்து பார்க்க, யார் கண்களுக்கும் தா- தெரிய வில்லை. ஆனால் அரிச்சந்திரன் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. அவருக்கு மாலையிட்டு சந்திரமதி கணவராக அடைந்தாள்.

இந்திரன் தலைமையிலான தேவசபை கூடியது. அங்கே முனிவர் கள், தேவர்களிடையே, "பூமியில் மக்கள் நீதி, நேர்மை, சத்தியம் தவறி நடக்கின்றனர். இதில் அரசர்களும் அடக்கம். வாய்மையுடன் ஆட்சி செய்யும் அரசர்கள் யார்?' என்ற விவாதம் வந்தது. அப்போது குறுக்கிட்ட வசிஷ்ட மாமுனிவர், "காசி மாநகரத்தை தலைநகர மாகக்கொண்டு ஆட்சிசெய்து வரும் அரிச்சந்திரன் சத்தியம் தவறாத உத்தமசீலன்'' என்று கூறி னார். இதைக்கேட்ட விசுவாமித் திரர், "அப்படிக்கூட ஒருவர் இருக்கமுடியுமா என்ன?'' என்று எள்ளி நகையாடினார். அப்போது வசிஷ்ட முனிவர், "எனது சீடன் அரிச்சந்திரன் உண்மை, நேர்மையுள்ளவன். அவன் எந்த நிலை யிலும் எப்போதும் பொய் கூறமாட்டான்'' என்று கூறினார்.

அதைக்கேட்டு கோபமடைந்த விசுவாமித்திரர், "நீங்கள் சொல்வதுபோல் இருக்கமுடியாது. அரிச்சந்திரனிடம் நான் சென்று அவனது நேர்மையைத் தவறவைக்கிறேன். அவனிடமிருந்து பொய் வார்த்தையைக் கூறவைக்கிறேன்'' என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டார்.

அதன்பிறகு விசுவாமித்திரர் அரிச்சந்திரனின் நேர்மையை சிதைப்பதற்காக- பொய்பேச வைப்பதற்காக பல்வேறு இன்னல்களைக் கொடுத்தார். அரிச்சந்திரனிடமிருந்து நாட்டைப் பறித்தார். முனிவரின் சூழ்ச்சி காரணமாக அரிச்சந்திரன் மனைவி, மகனை விற்றார்; தன்னையும் விற்றார்.

தர்ப்பைப் புல் அறுக்கச்சென்ற லோகிதாசன் பாம்பு கடித்து இறக்க நேர்ந்தது. கதறித் துடித்த சந்திரமதி ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்டு, மகனை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றாள். அங்கே பிணம் எரிக்கும் வேலை செய்துகொண்டிருப்பது தனது கணவன் என்றறியாமல், இறந்துபோன தன் மகனைத் தகனம் செய்யவேண்டுமென்று கூற, சுடுகாட்டைக் காவல் காத்த அரிச்சந்திரன், "நான் பட்ட கடனுக் காக ஆண்டை வீரபாகுவிடம் விற்கப் பட்டு, அவருக்கு அடிமையாக வேலை செய்துவருகிறேன். இங்கு பிணமெரிக்க வருபவர்கள் கால்காசு, முழம் துண்டு, வாய்க்கரிசி கொடுக்கவேண்டும். அந்த வாய்க்கரிசியை சமைத்துதான் நான் சாப்பிடுவேன். கால்காசும் முழம் தூண்டும் எனது முதலாளிக்கு சேர வேண்டும். உனது நிலையைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நீ வேலை செய்யும் வீட்டுக்காரரிடம் சென்று, எனக்கு சேரவேண்டிய வாய்க்கரிசி கொடுக்கவேண்டாம்; கால்காசு, முழம் துண்டு பெற்றுவந்து கொடுத்தால்தான் இந்த சுடுகாட்டில் உனது மகனின் பிணத்தை எரிக்க முடியும்'' என்று தனது நிலையை எடுத்துக்கூறினார். அப்போதுதான் அந்தப் பெண்ணின் கழுத்திலுள்ள தா- அரிச்சந்திரன் கண்களுக்குத் தெரிந்தது.

"ஒரு வீட்டில் அடிமையாக விற்கப் பட்ட பெண் என்று கூறுகிறாய். உன் கழுத்தில் தா- மின்னுகிறதே'' என்று கேட்க, "இந்த தா- நான் பிறக்கும் போதே என்னுடன் பிறந்தது. இது மற்றவர் கண்களுக்குத் தெரியாது. எனது கணவர் கண்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்கும்போது மயானத்தில் பிணமெரிக்கும் அடிமையான உனது கண்களுக்கு எப்படி தெரிந்தது!'' என்று சந்திரமதி கேட்க, அப்போதுதான் தாங்கள் கணவன்- மனைவி என்பதை உணர்ந்தனர்; புரிந்தனர்.

இறந்துபோன தனது மகன் உடலென்று தெரிந்தபிறகும் நேர்மை யி-ருந்து விலகாத அரிச்சந்திரன், "கால்காசு, முழம் துண்டு வாங்கிவந்தால் தான் நமது மகனேயானாலும் அவனை எரிக்கமுடியும். நான் இன்னொரு வருக்கு அடிமையாக இருந்து வேலை செய்யும்போது அவரது கட்டளையை மீறமுடியாது'' என்று உறுதியாகக் கூறினார்.

வேறு வழியின்றி, "விதியோ இது சதியோ' என்று சந்திரமதி புலம்பி அழுதபடி தன் எஜமானர் வீட்டிற்குச் சென்றாள். வழியில் தன் மகனைப் போன்று ஒரு சிறுவன் சடலமாகக் கிடப்பதைப் பார்த்த சந்திரமதி, தன் குழந்தையைபோல எண்ணி அவனைத் தனது மடியில் வைத்துக் கதறி அழுதுகொண்டிருந்தாள். அப்போது அவளைச் சுற்றிலும் கூர்மையான ஈட்டிமுனைகளைப் காட்டியபடி அந்த நாட்டு வீரர்கள் சுற்றி வளைத்து நின்றனர். காரணம், அந்த நாட்டு மன்னரின் மகனான இளவரசனைக் கொலைசெய்து இங்கே போட்டுள்ளனர். இந்தப் பெண்தான் கொலை செய்திருக்க வேண்டுமென்று சந்திரமதியைக் கைது செய்து மன்னர்முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

தீர விசாரிக்காத மன்னன், தன் மகனைக் கொன்ற குற்றத்திற்காக சந்திரமதியின் தலையை சீவி எறியுமாறு உத்தரவிட்டான். சந்திரமதியை அதே சுடுகாட்டுக்குக் கொண்டுசென்ற வீரர்கள், அங்கிருந்த வீரபாகுவிடம் சந்திரமதியை ஒப்படைத்து, "இவளது தலையை சீவி எறியுமாறு மன்னர் உத்தரவு'' என்று கூறினார்கள். வீரபாகு தனது அடிமையான அரிச்சந்திரனை அழைத்து, சந்திரமதியின் தலையை வெட்டுவதற்கு உத்தரவிட்டான். தன்னை விலைக்கு வாங்கிய முதலாளியின் உத்தரவை சிரமேற்கொண்டு, சந்திரமதியின் கழுத்தை வெட்டுவதற்கு வாளை ஓங்கி வீசினார். அந்த வாள் சந்திரமதியின் கழுத்தில் மாலையாக விழுந்தது. இது என்ன அதிசயம்! அந்த நேரத்தில் வானி-ருந்து தேவர்கள் பூமாரி பொழிந்த னர். அப்போது சிவபெருமான், அரிச்சந்திரன்- சந்திரமதி தம்பதிகளுக்குக் காட்சிகொடுத்து, இறந்து போன குழந்தை லோகிதாசனையும், கொலை செய்யப்பட்ட மன்னனின் மகனையும் உயிர்ப்பித்துக் கொடுத்தார். அங்கே இந்திரன், விசுவாமித்திரர், வசிஷ்டர் உட்பட தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடினர். "அரிச்சந்திரனிடமிருந்து பொய்யான வார்த்தை யைப் பெறமுடியவில்லை. எந்த நிலையிலும் நீதி தவறாதவன் என்பதை அரிச்சந்திரன் உறுதிபடுத்தி விட்டார்'' என்று கூறிய விசுவாமித்திரர், அரிச்சந்திர னுக்களித்த இன்னல்களுக்காக வருத்தம் தெரிவித்தார்.

இதே இறுதிச் சம்பவம் இன்னொரு விதமாகவும் கூறப்பட்டுள்ளது. சந்திரமதியின் கழுத்தை அரிச்சந்திரன் வெட்டப் போகும்போது அங்கே வந்த விசுவாமித்திரர் அரிச்சந்திரனைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர்களை கயிலாயம் அனுப்பிவைத்தார். அங்கேசென்ற அரிச் சந்திரன் சிவபெருமானை வழிபட்டார்.

அப்போது சிவபெருமான் உமது விருப்பம் என்னவென்று கேட்க, "ஐயனே, நான் இனிமேல் பூலோகத்தில் மனிதப் பிறவியாகப் பிறக்கக்கூடாது. அப்படி பூலோகம் செல்ல வேண்டுமானால் அங்கே என்னை மனிதர்கள் பூஜை செய்யவேண்டும். அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து பாதுகாக்கவேண்டும். அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றி நற்பலன் கள் அளிக்கவேண்டும். எனக்கு அங்கே பெரிய கோவில்கள் எதுவும் வேண்டாம். மயானக் கரைப் பகுதிகளில் அமர்ந்து மக்களின் காவல் தெய்வமாக இருக்க விரும்புகிறேன்'' என்று கூற, சிவபெருமான் அப்படியே வரமளித்து அனுப்பிவைத்தார். அதன்படி பல ஊர் மயானங்களின் அருகில் அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன.

"பொய்பேசாத உத்தமன் அரிச்சந்திரனுக்கு ஏற்பட்ட துன்பங்களைப்போல ஒவ்வொரு வருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒருவிதத்தில் சிலவற்றையாவது அனுபவித்திருப்பார்கள். எனவே மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் நீதி நேர்மையுடன், பொய்பேசாமல் வாழ்வதன் மூலம் அவர்கள் வாழ்வு செழிக்கும். அவர்களின் சந்ததிகளுக்கும் நல்வாழ்வு அமையும்.

அப்படிப்பட்ட அரிச்சந்திரன் துன்பத்தி-ருந்து விடுபட்ட சம்பவம் நடந்ததாகக் கூறப் படும் எல்லப்ப நாயக்கன் பேட்டையில் அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன், ஏவல் தெய்வமாக வீர கருப்பன் ஆகியோர் தெய்வமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவருகிறார்கள்'' என்கிறார் இங்கு தினசரி பூஜை செய்துவரும் பரம்பரை பூசாரி பழனி.

உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ் சாலையில், உளுந்தூர்பேட்டையி-ருந்து மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது எலவனாசூர்கோட்டை. இந்த ஊருக்கு அருகிலுள்ளது எல்லப்ப நாயக்கன் பேட்டை. இங்குள்ள மலையடிவாரத்தில், இயற்கை சூழ்ந்த அமைதியான சூழ-ல் இக்கோவில் உள்ளது. இங்கிருந்து சுமார் நூறு மீட்டர் தூரத் தில் அந்த ஊரின் சுடுகாடு அமைந்துள்ளது.

இங்குவந்து அரிச்சந்திரனை வழிபட்டுச் செல்வோர் துன்பம்நீங்கி இன்பவாழ்வு பெறுகிறார்கள். இதற்கு எத்தனையோ சம்பவங் கள் உள்ளன. உதாரணமாக, விருத்தாசலம் அருகேயுள்ள சேக் உசேன் பேட்டையைச் சேர்ந்த முஸ்-ம் தம்பதிகள் ஒருமுறை இங்கு வந்து தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டு மென்று வேண்டுதல் வைத்தனர். அவர்கள் வேண்டுதல்படி ஆண் குழந்தை பிறந்தது. அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இக்கோவி லுக்கு பெரிய ஓசை எழுப்பும் மணியை வாங்கி வைத்துள்ளனர். மேலும் ஆசனூர் கோட்டை யைச் சேர்ந்த முரளி தம்பதிகளுக்கு திருமண மாகி ஐந்தாண்டுகள் வரை குழந்தை இல்லை. இங்குவந்து வழிபட்டபிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

"இங்கு நடந்த உண்மைச் சம்பவம் ஒன்று.

1970-ஆம் ஆண்டு எனது தந்தை கோபால் அந்த காலகட்டத்தில் அரிச்சந்திரன் சாமிக்கு வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார். ஒருநாள் இரவு இங்கிருந்த அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் சிலைகளை யாரோ ஒருவர் களவாடிச் சென்றுவிட்டார். சிறிது தூரம் சென்றதும் அவருக்கு இரு கண்களும் தெரியாமல் போய்விட்டன. அருகி-ருந்த குளத்தில் திருடிய சாமி சிலைகளை போட்டு விட்டு வழிதெரியாமல் இரவு முழுவதும் சுற்றிச்சுற்றி வந்துள்ளார். காலையில் சுவாமிக்கு பூஜை செய்வதற்காக என் தந்தை கோபால் வந்தபோது சிலைகள் இல்லை. அருகி-ருந்த குளக்கரையில் ஒருவர் கண்தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து அவரிடம் நெருங்கிக் கேட்டபோது, அவர் சிலைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டு அதை குளத்தில் போட்டதைக் கூறினார். "நான் செய்த தவறுக்கு எனது இரண்டு கண்களும் தெரியாதவாறு அரிச்சந்திரன் சாமி செய்துவிட்டார். இனிமேல் நான் திருட்டுத் தொழிலை செய்ய மாட்டேன்.

என்னை மன்னித்துவிடுங்கள்' என்று மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்பிறகு குளத்தில் போடப் பட்ட சிலைகளை எடுத்துவந்து மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளார்'' என்கிறார் பூசாரி பழனி.

ஆலயத் தொடர்புக்கு: 63813 24261, 99942 10911.

om011021
இதையும் படியுங்கள்
Subscribe