ஈஸ்வரன் நிலையானவன். பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவன். ஆனந்தக்கூத்தாடியவன். அதனால் அவன் ஆடலரசன். ஈடுபாடு, பக்தி, ஞானம் என்ற மூன்றுவகைப்பட்ட நித்யாசனத்தை தலைமுதல் பாதம்வரை காட்டுபவன்.
சிவபெருமான் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும், காளிகா தாண்டவம், கௌரி தாண்டவம், சங்கரா தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் ஆகிய தாண்டவங்கள் மூலம் புரிகிறார்.
இந்த ஐந்தொழில்களையும் ஒன்றுசேர்த்துச் செய்யும் தாண்டவமே ஆனந்தத் தாண்டவம்.
தாண்டவமாடும் பரமேஸ்வரனே "நடராஜர்' என்று அழைக்கப்படுகிறார். அவர் முகத்தில் முக்கண், சடாமுடியில் பிறைச்சந்திரன், புனித கங்கை, உடம்பில் திருவெண்ணீறு, திருச்செவியில் தோடு, முன்கழுத்தில் நீலகண்டம், கையில்அபயம், இடுப்பில் கோவணம், தூக்கிய திருவடி, ஊன்றிய திருவடி, கழுத்தில் கபால மாலை, பாம்பணிகலன்கள்என்று அவர் உடல்முழுவதும் தத்துவமாகவும், மந்திர வடிவாகவும் அமைந்துள்ளன. ஞானக்கண்கொண்டு பார்த்தால் இவற்றின் தத்துவம் விளங்கும்.
முக்கண்: எதிரே இருப்பது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே காண்பிக்கக்கூடியவை நமது இரண்டு கண்கள். கண்கள் இரண்டிருந்தாலும் காட்சிகள் இரண்டு தெரிவதில்லை. கண்களுக்கு உணர்ச்சியூட்டும் புற ஒளிகளாகியசூரியன், சந்திரன், நெருப்பு ஆகியமுச்சுடரே அவரது மூன்றாவது கண்.
ஈஸ்வரன் நிலையானவன். பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவன். ஆனந்தக்கூத்தாடியவன். அதனால் அவன் ஆடலரசன். ஈடுபாடு, பக்தி, ஞானம் என்ற மூன்றுவகைப்பட்ட நித்யாசனத்தை தலைமுதல் பாதம்வரை காட்டுபவன்.
சிவபெருமான் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும், காளிகா தாண்டவம், கௌரி தாண்டவம், சங்கரா தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் ஆகிய தாண்டவங்கள் மூலம் புரிகிறார்.
இந்த ஐந்தொழில்களையும் ஒன்றுசேர்த்துச் செய்யும் தாண்டவமே ஆனந்தத் தாண்டவம்.
தாண்டவமாடும் பரமேஸ்வரனே "நடராஜர்' என்று அழைக்கப்படுகிறார். அவர் முகத்தில் முக்கண், சடாமுடியில் பிறைச்சந்திரன், புனித கங்கை, உடம்பில் திருவெண்ணீறு, திருச்செவியில் தோடு, முன்கழுத்தில் நீலகண்டம், கையில்அபயம், இடுப்பில் கோவணம், தூக்கிய திருவடி, ஊன்றிய திருவடி, கழுத்தில் கபால மாலை, பாம்பணிகலன்கள்என்று அவர் உடல்முழுவதும் தத்துவமாகவும், மந்திர வடிவாகவும் அமைந்துள்ளன. ஞானக்கண்கொண்டு பார்த்தால் இவற்றின் தத்துவம் விளங்கும்.
முக்கண்: எதிரே இருப்பது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே காண்பிக்கக்கூடியவை நமது இரண்டு கண்கள். கண்கள் இரண்டிருந்தாலும் காட்சிகள் இரண்டு தெரிவதில்லை. கண்களுக்கு உணர்ச்சியூட்டும் புற ஒளிகளாகியசூரியன், சந்திரன், நெருப்பு ஆகியமுச்சுடரே அவரது மூன்றாவது கண். இதைப் பட்டினத்தார்-
"முக்கண் என்பது முத்தீ வேள்வியில்
தொக்கது என்னிடை என்பது ஓர் சுருக்கே'
என்று பாடுகிறார்.
ஆடலரசனின் புன்சிரிப்பு நம்மை ஈர்க்கிறது. இந்த ஆனந்தக்கூத்தனின் முகத்தோற்றம் மின்னும் தங்கத்துக்கு இணையானது. அவரது புன்முறுவல்அற்புதம். இந்த புன்முறுவல் உயிர்களுடைய நல்வினை, தீவினை என்னும் இருவினைகளைக் கெடுப்பது. இந்த இருவினைகளையும் அந்தப் புன்முறுவல் ஆகாமியம், சஞ்சிதம், பிராப்தம் என்ற மூன்று வடிவில் வந்து செயல்படுகிறது. ஒருசமயம் ஈசனின் சிரிப்பு முப்புரங்களையும் அழித்தது. அதனால் இது இரண்டோடு மூன்று வினைகளையும் அழிப்பதாகக் கருதப்படுகிறது.
இதை சிவதருமோத்திர நூல்,
"இடர் மூன்றும் இழித்தருளும்
இளமுறுவல் முகமலரிலங்க'
என்று கூறுகிறது.
இவரது சடைமுடி ஞானத்தை அள்ளித்தருவது. எனவே சிவபெருமான் ஞானேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். செஞ்சடை, பனித்தசடை, பரந்தசடை, முடிச்சடை என்று இச்சடைகள் பிரித்துக் கூறப்படுகின்றன. இந்த சடைகள் ஒன்றுபட்டு குவிந்து, குவிந்த ஞானத்தையும், விரிந்து பரந்த சடை உயிர்களுக்கு ஞானம் ஊட்டும் பரந்த நிலையையும் உணர்த்துகிறது.
இவர் சடைமுடியிலுள்ள பிறைமதி இறைவனின் அளவில்லா ஞானத்தை அளிப்பது;தட்சனின் சாபம் நீங்க ஈசனிடம் அடைக்கலமான பிறைச்சந்திரனை தனது திருமுடிமேல் வைத்துக்கொண்டது,வினை கெடுத்து உயர்வளிப்பதைக் காட்டுகிறது.
இவர் சடைமுடியிலுள்ள கங்கை,ஈசனின் அளவற்ற எண்ணிக்கை நிறைந்தஆற்றல்களை அறிவிக்கக்கூடியது. ஆர்ப்பரித்து ஓடிவரும் பெரும்கங்கையைக்கூட தனது ஒரு மயிர்க்காலில் கட்டிப்போடும் ஆற்றல் பெற்றவர் ஈசன் என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறது.
சடைமுடியிலுள்ள ஊமத்தம்பூஅவரது விருப்பு, வெறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகும்.
தனது உடல்முழுவதும் வெண்ணீறு பூசிக்கொண்டிருப்பது, அநாதி நித்யமானது என்பதை அறிவிக்கிறது. அதாவதுசாணத்திலிருந்து ஆக்கப்பட்ட திருநீறு வெண்மை நிறமாகிறது. சாணம் கருப்பு.
அதைப் புடம் போட்டு சுட்டபின் வெண்மையாகிறது. ஆன்மாக்களும் தம் பொய்மைத் தன்மையைச் சுட்டுவிட்டால் தூய பொருளாக விளங்கும். திருநீறை மீண்டும் தீயிலிட்டாலும் அதன் வெண்மைத் தன்மை எப்படி மாறாதோ, அப்படி மாற்றமற்ற தனிப்பொருளாய் விளங்குமென்பதைக் குறிக்கிறது. மேலும் திருநீறென்பது பராசக்தியின் வடிவாய்,நித்தியப் பொருளாயும் விளங்குகிறது.
இறைவனின் படைப்புத்தொழிலை அறிவிப்பது அவரது பின்வலக்கரத்திலிருக்கும் உடுக்கையாகும். உடுக்கையை ஒலிக்கச்செய்து, அந்த ஒலியை வலச்செவியில் ஏற்று ஒலியுலகை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார். இந்த ஒலியை இடச்செவியிலுள்ள மான் ஏற்றுக்கொள்கிறது. ஒலிகளில் நன்மை தரும் ஒலி, தீமை கொடுக்கும் ஒலி என்று இரண்டு உள்ளன. நல்லவற்றைக் காதில் கேட்பது நன்மை தரும் ஒலி. அழுவது, அபாய ஒலி, கேட்கக்கூடாதவற்றைக் கேட்கும் ஒலி தீமை பயப்பதாகும். இந்த ஒலிகளை சீர்படுத்தி மக்களுக்கு அளிப்பது, அல்லது அடக்கி ஆள்வது இடச்செவியாகும்.
வலக்காதில் குழையும், இடக்காதில் தோடும் கூத்தப்பெருமான் அணிந்திருப்பது அவர் அர்த்தநாரீஸ்வரர் என்பதைக் காட்டுவதாகும். ஆண் பாதி, பெண் பாதி- இரண்டும் சரிபாதி என்பதை உணர்த்துகிறது.
அமுதத்தை உண்ட தேவர்கள் இறந்தனர். ஆனால் நஞ்சை உண்டும் அவர்இறக்கவில்லை. இதுதான் இறைவனுடைய நித்யத்தன்மையை விளக்குகிறது. இதுதான் நீலகண்டம் என்பது. இறைவன் தனது இடக்கையில் நெருப்பை ஏந்தியிருப்பது அவரது அழிக்கும் செயலை அறிவிப்பதாகும். வலக்கையில் காட்டும் அபயம், பிறவிச்சுழலில்-அதாவது முற்பிறவி ஊழ்வினையில்அகப்பட்டு வருந்துபவர்களுக்கு ஓடிவந்து அபயம் (உதவுவது) அளிக்கும் கையாகும். இது காத்தல் தொழிலையும் காட்டுகிறது. "கஜஹஸ்தம்' என்ற இந்த நிலையானது(இடக்கைகளில் ஒன்று குறுக்காக "திரிபாதகை' முத்திரையோடு தூக்கிய திருவடியைக் குறித்து நீண்டு நிற்பது) ஆன்மாக்களை நோக்கி, "இதுதான் நீஅடையக்கூடிய இன்பமயமான இடம்' என்று சுட்டிக்காட்டும் நிலையாகும்.
இவர் அணிந்திருக்கும் கோவணம் என்பது வேதத்தின் முடியாகிய பிரணவ காயத்திரி மந்திரத்தின் மகிமையைக் குறிப்பிடுவதாகும். இதை, "அறுபத்துநான்கு கலை மற்றும் நான்கு வேதங்களை அரைஞானில் கோர்த்து அணிந்திருக்கிறார் இறைவன்' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். இறைவன் தனதுகாலில் அணிந்திருக்கும் சிலம்பும்வேதங்கள் என்று சொல்லப்படுகிறது.
தூக்கிய திருவடியைப் பற்றி பட்டினத்தார் பாடும்போது, "திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே' என்கிறார். அதாவதுதூக்கிய திருவடி என்ற இந்த நிலை முக்தி இன்பத்தை அளிக்கக்கூடியது என்கிறார்.
அதேபோல ஊன்றிய திருவடி என்பது, இரவும் பகலும் சேரும் காலத்தை எப்படிஇரவென்றும் பகலென்றும் சொல்லமுடியாதோ- அப்படி ஒரு இடைப்பட்ட காலத்தைக் குறிப்பதுபோல, இவரது ஊன்றிய திருவடி முயலகனைத் தீண்டியும் தீண்டாத நிலையில், ஒளியும் இருளும் ஒன்றினால் இப்படித்தான் இருக்கும் என்பதையும் காட்டுகிறது. அதாவது மனதை அடக்கவேண்டும். முயலகனைத் தனது காலால் மிதித்து அடக்குவதுபோல மனதை அடக்கவேண்டும். மனது அடங்கினால் நடப்பதெல்லாம் நன்மையே.
இதுபோன்று கபால மாலை, பாம்பணி, பரசு, கோடரி, வாள், அங்குசம், மணி,சூலம் போன்ற ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் உள்ளன. இவையெல்லாம் பரம்பொருளான ஈஸ்வரனின் ஆற்றல், மோட்சமளிக்கும் அபயம், முத்தொழில் புரிவது போன்றவற்றைக் காட்டுகின்றன.
ஈஸ்வரனின் நடராஜர் என்ற திருவுருவ அமைப்பு பல தத்துவக் கருத்தை உணர்த்துவதாகும். இவற்றை ஞானம் கொண்டுபார்த்து அனுபவித்து அவர் காட்டும் மோட்சம் என்ற பிறவாமையை அடையவேண்டும்.