மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ஆம் தேதி முதல் 11-ஆமிடமான கும்பத்திற்கு மாறுகிறார். 2-க்குடைய சுக்கிரனும், 12-க்குடைய குருவும் சேர்க்கை. சுபவிரயங்கள் ஏற்பட இடமுண்டு. உடன்பிறந்த சகோதரி- சகோதரவகையில் சுபச் செலவுகளும் நன்மைகளும் உண்டாகும். 13-ஆம் தேதிமுதல் குரு அதிசாரமாக 12-ல் மாறி ஆட்சிபெறுகிறார். 4-ஆமிடம், 6-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். வீடு, வாகனவகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். தேகநலத்தில் மருத்துவச் செலவுகள் விலகி ஆரோக்கியம் ஏற்படும். வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் சொந்தவீடு அல்லது மனையோகம் அமையும். அதற்குண்டான கடனுதவியும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது பரிவர்த்தனை ஏற்படலாம். தாயார் தேகநலனில் முன்னேற் றம் உண்டாகும். ஜென்ம ராகு, சப்தம கேது திருமண முயற்சிகளில் தாமதம் ஏற்படுத்தினா லும் தடை ஆகாது.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் 11-க்கு டைய குருவுடன் கூடி இருக்கிறார். தொழிலில் எடுத்த முயற்சிகள் சித்தியாகும். மனக்குழப் பங்கள் விலகும். 13-ஆம் தேதி வரை சூரியன் 11-ல் இருப்பது மேலும் ஒரு பலம். உங்களுடைய செயல்பாடுகள் எல்லாவற்றிலும் முன்னேற்றகரமான சூழல் உருவாகும். 8, 11-க்குடைய குரு 11-ல் இருப்பது மேலும் ஒரு பலம். உங்களுடைய செயல்பாடுகள் எல்லாவற்றிலும் முன்னேற்றகரமான சூழல் உருவாகும். 8, 11-க்குடைய குரு 11-ல், 13-ஆம் தேதிமுதல் ஆட்சிபெறுகிறார். 3-ஆமிடம், 5-ஆமிடம், 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். உடன்பிறப்புகள்வகையில் நிலவிய தொந்தரவுகள், கருத்து வேறுபாடுகள் விலகி அனுகூலமும் சகாயமும் ஏற்படும். நீண்டகாலத் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளைப் பற்றிய கவலை அகலும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நன்மதிப்பும் உண்டாகும். திருமணத்தடைகள் விலகி திருமண முயற்சிகள் கைகூடும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிக்கும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே வாழ்க்கை, தொழில் இவற்றில் தோல்விக்கும் தொய்வுக்கும் இடமில்லை.

Advertisment

tt

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 3-ஆம் தேதி முதல் நீசம் தெளிந்து 11-ல் மாறுகிறார். அவருடன் 11-ல் ராகுவும் இருக்கிறார். 11-ஆமிடம் ராகுவுக்கு நல்ல இடம். தொழில் அபிவிருத்தி, முன்னேற்றகரமான சூழல் ஆகியவை உருவாகும். 11-க்குடைய புதன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். பூர்வீக சொத்து சம்பந்தமாக ஏதேனும் வில்லங்கம், விவகாரம் இருப்பின் அதில் சாதகமான முடிவுகள் ஏற்படும். 10-க்குடைய குரு 13-ஆம் தேதிமுதல் 10-ல் ஆட்சி. அவர் 2-ஆமிடம், 4-ஆமிடம், 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஏற்கெனவே கூறியபடி உத்தியோகம், வாழ்க்கை, தொழில் இவற்றில் திருப்திகரமான நிலை உண்டாகும். 2-ஆமிடம் குடும்பம், தனம், வாக்கு ஸ்தானமாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொருளாதாரச் சூழல் நன்மைதரும் விதமாக அமையும். அட்டமச்சனியின் வேகம் குறையும். ஒருசிலருக்கு குடியிருப்பு மாற்றம் அல்லது வேலையில் இடமாற்றம் ஏற்படும். அது முன்னேற்றகரமான மாற்றமாகவும் அமையும். ஒரு சிலர் சொந்தவீட்டு முயற்சி களுக்காக கடன்வாங்க நேரிடும். என்றாலும் மதிப்பு, மரியாதை கெடாது; கவலைப்பட வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்கு 13-ஆம் தேதிமுதல் 9-ல் குரு ஆட்சிபெறுகிறார். "அகப்பட்டவனுக்கு அட்டமத்துச் சனி- ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று ஜோதிட சொலவடை உண்டு. 9-ல் மாறும் குரு ஜென்ம ராசி- 3-ஆமிடம், 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். உங்கள் திறமை, புகழ், கீர்த்தி எல்லாம் சிறப் பாக விளங்கும். செயல்பாடுகள் யாவும் வெற்றியாகும். தாமதமான காரியங்கள் துரிதமாக நிறைவேறும். 3-ஆமிடம் தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானம். முடியாது என்று நினைத்து ஒதுக்கிய விஷயங்களில் தைரியமாக இறங்கி வெற்றிபெறுவீர்கள். சகோதரவழியில் நிலவிய சங்கடங்கள் விலகி ஒற்றுமை உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பும், செல்வாக்கும் ஏற்படும். நீண்டகாலத் திட்டங்கள் செயலாகும். ஜோதிட ஞானம் சித்திக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகமாகும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் மாறும். 2-க்குடைய சூரியன் 14-ஆம் தேதிமுதல் 10-ல் உச்சம். தாராள வரவு- செலவுகள் ஏற்படும். சேமிப்பு போன்ற செயல்பாடுகள் கைகொடுக் கும். தொழில் லாபம். நன்மை தரும். ஏற்றம் உண்டாகும். ஒருசிலருக்கு கோவில் டிரஸ்டி அமைப்பில் முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் ஏப்ரல் 14-ஆம் தேதிமுதல் 9-ல் திரிகோணம் பெறுவதோடு உச்சமடைகிறார். 9-ல் ராகு- 3-ல் கேது. ராகு மாறியிருக்கும் இடத்தைவிட கேது மாறியிருப்பது மிக நல்ல இடம். தன்னம்பிக்கை, தைரியம் சகாயம் எல்லாம் உண்டாகும். ஒரு சிலருக்கு உடன்பிறப்பு களால் சஞ்சலம் சங்கடம் ஏற்படலாம். 7-ல் செவ்வாய் கேந்தி ரம் பெறுகிறார். அவரு டன் 10-க்குடைய சுக்கிரனும் சேர்க்கை. மனைவி பெயரில் சிறு தொழில் முயற்சிகள் கைகொடுக்கும். ஒற்றுமை அதிகரிக்கும். 6-ல் சனி ஆட்சிபெறுவதால் போட்டி, பொறாமைகள் விலகும். தொழில் வகையில் சுபக்கடன் உண்டாகும். 13-ஆம் தேதிமுதல் 8-ல் குரு மறைந்தாலும் ஆட்சி பெறுகிறார். எனவே, மறைவுதோஷம் பாதிக் காது. 12-ஆமிடம், 2-ஆமிடம், 4-ஆமிடத்தை குரு பார்க்கிறார். தனவரவுக்கும் இடமுண்டு தாராள செலவுக்கும் குறைவிருக்காது. வரவுக்கேற்ற செலவுகள் அமையும். சிலநேரம் வரவை மீறிய செலவுகள் ஏற்படும். வாகன மாற்றம் அல்லது புதிய வாகனம் வாங்கும் அமைப்பு உருவாகும்.

கன்னி

கன்னி ராசிக்கு 7-ல் குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். இதுவரை வாழ்க் கையே அர்த்தமற்றதாக நினைத்து வாழ்ந்த வர்களுக்கு ஒரு பிடிப்பும், குறிக்கோளை நிறைவேற்றும் வைராக்கியமும் பிறக்கும். 3-ஆம் தேதிமுதல் ராசிநாதன் புதன் 8-ல் மறைந்தா லும், மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதற் கிணங்க வரவுகளும் வரும். பிள்ளைகள் வழியில் சுபநிகழ்வுகளுக்கு இடமுண்டு. அதனால் சுபவிரயங்களுக்கும் இடமுண்டு. 12-க்குடைய சூரியன் 8-ல் உச்சம். என்றாலும் அச்சம் தேவையில்லை. 3-க்குடைய செவ்வாய் 6-ல் மாறுகிறார். கடன்சுமை குறையும். போட்டி, பொறாமைகள் விலகும். சத்ரு ஜெயம் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம், சச்சரவுகள் ஏற்படும். ஆனா லும் பிரிவு, பிளவுக்கு இடமில்லை. பேச்சில் நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அமைதி காப்பது குடும்பத்திற்குள் நிம்மதி தரும். மாதக் கடைசியில் பொருளா தாரத் தேவைகள் நிறைவேறும். குடும்பத் திற்குள் நிலவிய பூசல்கள் மாறும். 5-ல் உள்ள சனி சிலநேரம் மனதில் வீண் கற்பனை பயத்தை ஏற்படுத்தினாலும் குரு ராசியைப் பார்ப்பதால் தெளிவுபெறும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதக் கடைசிவரை 5-ல் திரிகோணமாக இருக்கிறார். 2-க்குடைய செவ்வாயும் சுக்கிரனுடன் சேர்க்கை. எனவே பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். நீண்டநாள் இழுபறியாக இருந்த காரியம் ஒன்று பூர்த்தியாகும். அது மனதில் மகிழ்ச்சியைத் தரும். இந்த மாதம் 13-ஆம் தேதிமுதல் குரு மீன ராசிக்கு அதிசார மாகப் பெயர்ச்சியாகிறார். 6-ல் ஆட்சிபெற்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தாராள வரவு- செலவுகளுக்கு இடமுண்டு. குடும்பத்தில் நிலவிய குழப்பங்களும் விலகும். ஜென்ம கேது சிலநேரம் அலைக்கழித்தாலும் கடைசி நேரத்தில் தேவைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் சற்று தாமதமான பலனை எதிர் கொள்ள நேரிடும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை குறையாது. அன்யோன்யம் அதிகரிக் கும். ஒருசிலர் குடியிருப்பு மாற்றத்தைச் சந்திக்க லாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் தடையாகாது.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 4-ல் கேந்தி ரம் பெறுகிறார். பூமி, வீடு போன்றவகையில் முன்னேற்றகரமான சூழல் தென்படும். 12-க்குடைய சுக்கிரன் செவ்வாயுடன் இணைவ தால் சிலநேரம் பணத்தட்டுப்பாடுகள் உண்டாகும். என்றாலும் மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு ஏற்படாது. கேட்ட இடத்தில் பண உதவிகள் கடனாகவோ, கைமாற்றா கவோ கிடைக்கும். இம்மாதம் 13-ஆம் தேதிமுதல் குரு 5-ல் மாறி ஜென்ம ராசியைப் பார்ப்பார். எனவே, இது வரை உங்களுக்கு நிலவிய காரியத்தடைகள் விலகும். உங்கள் செயல்பாடுகள் வேகம் பெறும். திறமை, ஆற்றலெல்லாம் நன்றாக விளங்கும். வீண் மனக்கவலைகள் விலகும். குரு 1-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். குலதெய்வ அருள்பெறலாம். தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். ஒருசிலர் தான் நடத்திவந்த கம்பெனியை, பார்ட்னர் சேர்த்து பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கும் சூழல் ஏற்படலாம்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு இம்மாதம் 13-ஆம் தேதிமுதல் 4-ல் அதிசாரமாக மாறி ஆட்சிபெறுகிறார். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். தேகம் நலம்பெறும். குடியிருப்புவகையில் நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் நிகழும். 5-ல் உள்ள ராகு உங்கள் கனவு திட்டங்களை செயல்படுத்தித் தருவார். நீண்டநாள் முயற்சி யும் கைகூடும். பயணங்கள்மூலம் அனுகூல மும் ஆதாயமும் உண்டாகும். 11-ஆமிடத்துக் கேது தொழி-ல் லாபம், முன்னேற்றம் போன்ற பலன்களைத் தரும். முயற்சிகளில் தடை விலகி காரிய ஜெயம் ஏற்படும். ஒரு சிலர் உத்தியோகரீதியாக இடமாற்றத்தை மேற்கொள்ளலாம். வாகனவகையில் பரி மாற்றம் அல்லது புதிய வாகனம் வாங்கு வதற்கு யோகம் உண்டாகும். பிள்ளைகள் வகையில் எண்ணியவை நிறைவேறும். மனமகிழ்ச்சி உண்டாகும். திடீர் ராஜயோகத்திற்கு இடமுண்டு. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. வீடு மாற்றம் அல்லது வேலையில் இடமாற்றம் போன்ற வற்றை சந்திக்கலாம். அவ்வப்போது வீண் விரயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. 12-க்குடைய குரு 2-ல் இருப்பதால் தேவைகள் நிறைவேறும். என்றாலும் பொருளாதார சேமிப்புக்கு இடமில்லாத நிலையையும் சந்திக்க நேரும். தேகநலனில் சிறுசிறு வைத்தியச்செலவுகள் உண்டாகலாம். வாகனப் பயணத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் மறையும்! 3-ல் குரு ஆட்சிபெற்று (13-ஆம் தேதிமுதல்) 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமணமுயற்சிகள் கைகூடும் சுபச்செலவுகள் ஏற்படும். பூர்வபுண்ணியம் சிறப்பாக விளங்கும். செய்தொழிலில் முன் னேற்றமும் லாபமும் எதிர்பார்க்கலாம். உத்தி யோகத்தினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

கும்பம்

இம்மாதம் 13-ஆம் தேதிமுதல் 2-க் குடைய குரு 2-ல் ஆட்சிபெறுகிறார். எனவே, குடும்பத்தில் நிலவிய பொருளாதாரப் பிரச் சினைகள் விலகி தேவைகள் பூர்த்தியாகும். மனநிம்மதியும் ஏற்படும். ஏழரைச்சனியால் ஒருசில காரியங்கள் தாமதமாக நடைபெற்றா லும் தடையாகாது. தெய்வ அனுகூலம் உங்களை வழிநடத்தும். 3-ஆமிடத்தில் வந்திருக்கும் ராகு தைரியம், ஆற்றல், தன்னம் பிக்கை இவற்றை அதிகமாக்குவார். 3-ஆமிடம் ராகுவுக்கு நல்ல இடம். உடன்பிறப்புகள் வகையில் மங்களகரமான நிகழ்வுகள் உண்டா கும். இதுவரை இருந்துவந்த கருத்துவேறுபாடு விலகி ஒற்றுமை ஏற்படும். அரசுப் பணியில் இருப்போருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி உண்டாகும். அவ்வப்போது அலைச்சல் திரிச் சல்களை சந்தித்தாலும் ஆதாயமும் உண்டா கும். 3-க்குடைய செவ்வாயும் 4-க்குடைய சுக்கிரனும் ஜென்ம ராசியில் இருப்பதால் ஒருசிலர் சொந்த வீடு வாங்கும் முயற்சிகளில் இறங்கலாம். அதற்குண்டான வங்கிக்கடனும் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 12-ல் விரயத்தில் இருக்கிறார். ஜாண் ஏற முழம் வழுக்கிய கதையாக உங்கள் காரியங்கள் அமைவது வருத்தம் தரலாம். என்றாலும் இம்மாதம் 13-ஆம் தேதிமுதல் மீன ராசிநாதன் குரு ஜென்ம ராசியில் ஆட்சிபெறுகிறார். எனவே காரியத்தடை, தாமதம் எல்லாம் விலகும். அனுகூலம் உண்டாகும். 2-க்குடைய செவ்வாய் 12-ல் இருப்பது ஒருசில விரயங் களை ஏற்படுத்தினாலும் அதை முதலீட்டு விரயமாகக் கருதி செயல்படலாம். 2-ல் உள்ள ராகு குடும்பத்தில் சிலநேரம் சில குழப்பங் களை உண்டாக்கலாம். நீங்களும் சில விஷயங் களில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து செயல்படுவது முக்கியமான ஒன்றாகும். சகோதர- சகோதரிவகையில் சங்கடம் நிகழலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் மகிழ்ச்சியடைலாம். தேகநலன் சுகம்பெறும். உத்தியோகம் அல்லது தொழில்துறையில் சில நல்ல மாற்றங் கள் நிகழும். அதை ஏற்றுக்கொள்ளலாம். அரசுத் துறையினருக்கு பதவி உயர்வு உண்டாகும்.