ஏப்ரல் மாத ராசி பலன்கள்! -சி.எஸ். ஞானமூர்த்தி

/idhalgal/om/april-month-rasispalan

மேஷம்

கடந்த ஒன்றரை வருடமாக 12-ல் இருந்த ராகு 11-ஆமிடத்திற்கும், 6-ல் இருந்த கேது 5-ஆமிடத்திற்கும் மாறுகிறார்கள். "ராகு பதினொன்று மூன்று ஆறாம் இடத்திற் சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாம். ஆகும் காரியங்களுண்டாம் அன்னதானங்களுண்டாம் வாகுமறு மனமுண்டாம் வரத்துமேல் வரத்துண்டாமே'' என்பது பாடல். அதன்படி சௌக்கியங்கள் உண்டாகும். அதிலும் ராகு தசையோ ராகு புக்தியோ நடந்தால் தவறாமல் யோகமுண்டு. கும்ப ராசியில் வந்திருக்கும் ராகு ஜென்ம ராசி, 5-ஆமிடம், 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதேபோல சிம்ம ராசியில் வந்திருக்கும் கேது 3-ஆமிடம், 11-ஆமிடம், 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். பூர்வபுண்ணியத்தில் முன்ஜென்மாவில் செய்த பாவங்கள் விலகி பாவ விமோசனம் உண்டாகும். முன்னோர் தாத்தா, பாட்டனார் வகை சொத்துகள் கிடைக்கும் அனுகூலம் ஏற்படும். பிதுரார்ஜித சொத்துகள் ஏதும் கைக்கு வர அமைப்பில்லையென்றால் சுயமுயற்சியில் தேடிப் பெறும் யோகம் உண்டாகும். ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், தெய்வீகம் போன்ற மார்க்கங்களில் ஈடுபாடும் உண்டாகும். செல்வாக்குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். டிரஸ்ட் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடலாம். ராகு- கேது பெயர்ச்சி திருமணத்தடைகளை அகற்றும். 7-ல் ராகு- கேது இருந்தால் தோஷம். பார்த்தால் தோஷநிவர்த்தி. 5-ல் உள்ள கேது 7-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்ப்பதாலும் ராகுவுக்கு ஆதரவாக திருமணத்தடையைப் போக்கி புத்திர தோஷத்தையும் நீக்கும். 2026 மார்ச்சில் வரும் ஏழரைச்சனி விரயத்தைக் கொடுத்தாலும் அதை சுபவிரயமாக மாற்றும் அமைப்பை ராகு- கேது செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். 11-ஆமிடத்து ராகு 5, 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளின் திருமண வைபவம், சடங்கு போன்ற சுபகாரியத்தால் இதுவரை உறவுகளுக்குள் ஏற்பட்ட மனவருத்தம் விலகி ஒன்றுசேரும் அமைப்பு உண்டாகும். சகோதர சகாயமும் அமையும்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள்: பிள்ளையார்பட்ட கற்பகவிநாயகரை வழிபவும்.

பரணி நட்சத்திரக்காரர்கள்: திருச்சி சமயபுரம் மாரியம்மனை வழிபடவும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்: சூரியனார்கோவில் சென்று வழிபடவும்.

ரிஷபம்

கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 11-ல் இருந்த ராகு இப்போது 10-ஆமிடத்துக்கும், 5-ல் இருந்த கேது இப்போது 4-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ராகு- கேது மாறும் ஸ்தானம் கேந்திர ஸ்தானமாகும். பாவ கிரகங்கள் கேந்திர ஸ்தானத் திலும் சுபகிரகங்கள் திரிகோணத்திலும் பலம் பெறுவர்; நலம் தருவர். எனவே ராகு- கேது நன்மைகளை செய்வார்கள். 11-ஆமிடத்தில் நல்ல இடத்தில் ராகு இருந்தார். அக்காலம் புதிய உத்தியோகம் லாபம் தந்திருக்கலாம். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் கேடு கெடுதியில்லாத யோகத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனாலும் ஜென்மத்தில் நிற்கும் குரு பலவகையில் மனக்குழப்பத்ûக் கொடுத்திருப்பார். சிலநேரம் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாடும் நிலையையும் தந்திருப்பார். நல்லபடிப்பு வேலை சம்பளம் இருந்தும் சிலபேருக்கு திருமணம் அமையாமல் தள்ளிப்போனது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலையை ரிஷப ராசியினர் சந்தித்தார்கள் என்று சொல்லலாம். 10-ல் வரும் ராகு 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில், உத்தியோகம் இவற்றில் கீர்த்தி, செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை உயரும். பூமி, வீடு, வாகன யேகங்களை அடையலாம். கேது 4-ல் இருப்பதால் பரிவர்த்தனையும் செய்துகொள்ளலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது என்பது பரிவர்த்தனையாகும். கும்ப ராகு 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். அபகீர்த்தி, சஞ்சலம், தன்பயம், பீடை, கவலை போன்ற 8-ஆமிடத்துக் கெட்டவற்றை விரட்டியடிப்பார். ஜாதகத்தில் 6, 8-க்குடைய தசாபுக்தி நடந்தால் அவர்களுக்கு 8-ஆமிடத்தைப் பார்க்கும் ராகுவால் சங்கடமும் சஞ்சலமும் ஏற்படலாம். சிம்ம கேது 2-ஆமிடம், 10-ஆமிடம், 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். 4-ல் இருப்பதால் மேற்கூறியபடி பூமி, வீடு, மனை யோகத்தை தருவார். 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் வகைக்காகவும் அல்லது 4-ல் பாவ சம்பந்தமாகவும் கடன்கள் வாங்கலாம். வங்கிக்கடன் அல்லது தனியார் வங்கிக்கடன் கிடைக்கும். குரு 2-ல் மாறியபிறகு திருமண யோகத்தையும் நடத்தி வைப்பார். கேது 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் போட்டி, பொறாமைகளை விலக்குவார். உத்தியோகத்தினருக்கு உத்தியோக உயர்வும் தருவார். 6-ஆமிடத்தைப் பார்க்கும் கேது போட்டி, பொறாமைகளை விலக்குவார். சத்ரு தொல்லைகளை அகற்றுவார்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்: சூரியனார் கோவில் சென்று வழிபடவும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள்: காளஹஸ்தி அல்லது தென் காளஹஸ்தி சென்று வழிபடவும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள்: திண்டிவனம் அருகில் திருவக்கரை சென்று வக்ரகாளி, சந்திர மௌலீஸ்வரர், அம்மாள், குண்ட-னி முனிவர் ஜீவசமாதியை வழிபடவும்.

மிதுனம்

கடந்த ஒன்றரை வருடமாக மிதுன ராசிக்கு 10-ல் இருந்த ராகு இப்போது 9-ஆமிடத்திலும், 4-ல் இருந்த கேது இப்போது 3-ஆமிடத்திலும் மாறுகிறார்கள். 10-ஆமிடமும், 4-ஆமிடமும் கேந்திர ஸ்தானம். சுபர்கள் திரிகோணத்திலும், பாபர்கள் கேந்திரத்திலும் நற்பலன்கள் செய்வார்கள் என்பது பொதுவிதி! அதனடிப்படையில் கடந்த காலத்தில் ராகு- கேது இருந்த இடம் நல்ல இடம்தான். சிலருக்கு நன்மைகளைச் செய்தது. சிலருக்கு பாதகங்களைத் தந்தது. அதற்கு 10-க்குடைய குரு 12-ல் மறைந்ததும் ஒரு காரணம். ஜனன ஜாதக தசாபுக்தி பலன்களும் ஒரு காரணம்! கும்ப ராகு 7-ஆமிடத்தையும், 3-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமணத்தடை விலகும். ஆண்- பெண்களுக்குத் திருமண யோகம் கூடும். 7-ல் ராகு நின்றால் தோஷம். ஆனால் பார்ப்பது விசேஷம். அல்லது 3-ஆமிடத்தை ராகு பார்க்கிறார். அங்கு கேது நிற்கிறார். சகோதர- சகோதரிவகையில் சில குழப்பங்களும் சலசலப்பும் சச்சரவும் உருவாகலாம். நெருங்கிப் பழகிய நண்பர்கள் வட்டாரத்திலும் அர்த்தமற்ற பிரச்சினைகள் உருவாகி பகையை உண்டாக்கும். என்றாலும் கேது நிற்பதால் ஏற்படும் பிரச்சினைகளை ராகு பார்ப்பதன்மூலம் சரிசெய்யும் வாய்ப்புகள் தோன்றும். ராகு 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதனால் காரிய அணுகூலம், முயற்சிகளில் வெற்றி, வில்லங்க, விவகாரத்திலும் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். சிம்ம கேது ஜென்ம ராசியையும், 9-ஆமிடத்தையும், 5-ஆமிடத்தையும் பார்க்கிறார். உங்கள் செல்வாக்கு அந்தஸ்து குறையாது. பூர்வபுண்ணிய பாக்கிய நன்மைகளும் குறையாது. ஜாதக தசாபுக்திகள் பாதகமா

மேஷம்

கடந்த ஒன்றரை வருடமாக 12-ல் இருந்த ராகு 11-ஆமிடத்திற்கும், 6-ல் இருந்த கேது 5-ஆமிடத்திற்கும் மாறுகிறார்கள். "ராகு பதினொன்று மூன்று ஆறாம் இடத்திற் சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாம். ஆகும் காரியங்களுண்டாம் அன்னதானங்களுண்டாம் வாகுமறு மனமுண்டாம் வரத்துமேல் வரத்துண்டாமே'' என்பது பாடல். அதன்படி சௌக்கியங்கள் உண்டாகும். அதிலும் ராகு தசையோ ராகு புக்தியோ நடந்தால் தவறாமல் யோகமுண்டு. கும்ப ராசியில் வந்திருக்கும் ராகு ஜென்ம ராசி, 5-ஆமிடம், 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதேபோல சிம்ம ராசியில் வந்திருக்கும் கேது 3-ஆமிடம், 11-ஆமிடம், 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். பூர்வபுண்ணியத்தில் முன்ஜென்மாவில் செய்த பாவங்கள் விலகி பாவ விமோசனம் உண்டாகும். முன்னோர் தாத்தா, பாட்டனார் வகை சொத்துகள் கிடைக்கும் அனுகூலம் ஏற்படும். பிதுரார்ஜித சொத்துகள் ஏதும் கைக்கு வர அமைப்பில்லையென்றால் சுயமுயற்சியில் தேடிப் பெறும் யோகம் உண்டாகும். ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், தெய்வீகம் போன்ற மார்க்கங்களில் ஈடுபாடும் உண்டாகும். செல்வாக்குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். டிரஸ்ட் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடலாம். ராகு- கேது பெயர்ச்சி திருமணத்தடைகளை அகற்றும். 7-ல் ராகு- கேது இருந்தால் தோஷம். பார்த்தால் தோஷநிவர்த்தி. 5-ல் உள்ள கேது 7-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்ப்பதாலும் ராகுவுக்கு ஆதரவாக திருமணத்தடையைப் போக்கி புத்திர தோஷத்தையும் நீக்கும். 2026 மார்ச்சில் வரும் ஏழரைச்சனி விரயத்தைக் கொடுத்தாலும் அதை சுபவிரயமாக மாற்றும் அமைப்பை ராகு- கேது செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். 11-ஆமிடத்து ராகு 5, 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளின் திருமண வைபவம், சடங்கு போன்ற சுபகாரியத்தால் இதுவரை உறவுகளுக்குள் ஏற்பட்ட மனவருத்தம் விலகி ஒன்றுசேரும் அமைப்பு உண்டாகும். சகோதர சகாயமும் அமையும்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள்: பிள்ளையார்பட்ட கற்பகவிநாயகரை வழிபவும்.

பரணி நட்சத்திரக்காரர்கள்: திருச்சி சமயபுரம் மாரியம்மனை வழிபடவும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்: சூரியனார்கோவில் சென்று வழிபடவும்.

ரிஷபம்

கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 11-ல் இருந்த ராகு இப்போது 10-ஆமிடத்துக்கும், 5-ல் இருந்த கேது இப்போது 4-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ராகு- கேது மாறும் ஸ்தானம் கேந்திர ஸ்தானமாகும். பாவ கிரகங்கள் கேந்திர ஸ்தானத் திலும் சுபகிரகங்கள் திரிகோணத்திலும் பலம் பெறுவர்; நலம் தருவர். எனவே ராகு- கேது நன்மைகளை செய்வார்கள். 11-ஆமிடத்தில் நல்ல இடத்தில் ராகு இருந்தார். அக்காலம் புதிய உத்தியோகம் லாபம் தந்திருக்கலாம். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் கேடு கெடுதியில்லாத யோகத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனாலும் ஜென்மத்தில் நிற்கும் குரு பலவகையில் மனக்குழப்பத்ûக் கொடுத்திருப்பார். சிலநேரம் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாடும் நிலையையும் தந்திருப்பார். நல்லபடிப்பு வேலை சம்பளம் இருந்தும் சிலபேருக்கு திருமணம் அமையாமல் தள்ளிப்போனது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலையை ரிஷப ராசியினர் சந்தித்தார்கள் என்று சொல்லலாம். 10-ல் வரும் ராகு 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழில், உத்தியோகம் இவற்றில் கீர்த்தி, செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை உயரும். பூமி, வீடு, வாகன யேகங்களை அடையலாம். கேது 4-ல் இருப்பதால் பரிவர்த்தனையும் செய்துகொள்ளலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது என்பது பரிவர்த்தனையாகும். கும்ப ராகு 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். அபகீர்த்தி, சஞ்சலம், தன்பயம், பீடை, கவலை போன்ற 8-ஆமிடத்துக் கெட்டவற்றை விரட்டியடிப்பார். ஜாதகத்தில் 6, 8-க்குடைய தசாபுக்தி நடந்தால் அவர்களுக்கு 8-ஆமிடத்தைப் பார்க்கும் ராகுவால் சங்கடமும் சஞ்சலமும் ஏற்படலாம். சிம்ம கேது 2-ஆமிடம், 10-ஆமிடம், 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். 4-ல் இருப்பதால் மேற்கூறியபடி பூமி, வீடு, மனை யோகத்தை தருவார். 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் வகைக்காகவும் அல்லது 4-ல் பாவ சம்பந்தமாகவும் கடன்கள் வாங்கலாம். வங்கிக்கடன் அல்லது தனியார் வங்கிக்கடன் கிடைக்கும். குரு 2-ல் மாறியபிறகு திருமண யோகத்தையும் நடத்தி வைப்பார். கேது 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் போட்டி, பொறாமைகளை விலக்குவார். உத்தியோகத்தினருக்கு உத்தியோக உயர்வும் தருவார். 6-ஆமிடத்தைப் பார்க்கும் கேது போட்டி, பொறாமைகளை விலக்குவார். சத்ரு தொல்லைகளை அகற்றுவார்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்: சூரியனார் கோவில் சென்று வழிபடவும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள்: காளஹஸ்தி அல்லது தென் காளஹஸ்தி சென்று வழிபடவும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள்: திண்டிவனம் அருகில் திருவக்கரை சென்று வக்ரகாளி, சந்திர மௌலீஸ்வரர், அம்மாள், குண்ட-னி முனிவர் ஜீவசமாதியை வழிபடவும்.

மிதுனம்

கடந்த ஒன்றரை வருடமாக மிதுன ராசிக்கு 10-ல் இருந்த ராகு இப்போது 9-ஆமிடத்திலும், 4-ல் இருந்த கேது இப்போது 3-ஆமிடத்திலும் மாறுகிறார்கள். 10-ஆமிடமும், 4-ஆமிடமும் கேந்திர ஸ்தானம். சுபர்கள் திரிகோணத்திலும், பாபர்கள் கேந்திரத்திலும் நற்பலன்கள் செய்வார்கள் என்பது பொதுவிதி! அதனடிப்படையில் கடந்த காலத்தில் ராகு- கேது இருந்த இடம் நல்ல இடம்தான். சிலருக்கு நன்மைகளைச் செய்தது. சிலருக்கு பாதகங்களைத் தந்தது. அதற்கு 10-க்குடைய குரு 12-ல் மறைந்ததும் ஒரு காரணம். ஜனன ஜாதக தசாபுக்தி பலன்களும் ஒரு காரணம்! கும்ப ராகு 7-ஆமிடத்தையும், 3-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமணத்தடை விலகும். ஆண்- பெண்களுக்குத் திருமண யோகம் கூடும். 7-ல் ராகு நின்றால் தோஷம். ஆனால் பார்ப்பது விசேஷம். அல்லது 3-ஆமிடத்தை ராகு பார்க்கிறார். அங்கு கேது நிற்கிறார். சகோதர- சகோதரிவகையில் சில குழப்பங்களும் சலசலப்பும் சச்சரவும் உருவாகலாம். நெருங்கிப் பழகிய நண்பர்கள் வட்டாரத்திலும் அர்த்தமற்ற பிரச்சினைகள் உருவாகி பகையை உண்டாக்கும். என்றாலும் கேது நிற்பதால் ஏற்படும் பிரச்சினைகளை ராகு பார்ப்பதன்மூலம் சரிசெய்யும் வாய்ப்புகள் தோன்றும். ராகு 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். அதனால் காரிய அணுகூலம், முயற்சிகளில் வெற்றி, வில்லங்க, விவகாரத்திலும் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். சிம்ம கேது ஜென்ம ராசியையும், 9-ஆமிடத்தையும், 5-ஆமிடத்தையும் பார்க்கிறார். உங்கள் செல்வாக்கு அந்தஸ்து குறையாது. பூர்வபுண்ணிய பாக்கிய நன்மைகளும் குறையாது. ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தகப்பனாருக்கு அல்லது தகப்பனார் வர்க்கத்தில் கண்டம், வைத்தியச் செலவு அல்லது பொருள் செலவு இழப்புகளும் உண்டாகலாம். 5-ஆமிடத்தைக் கேது பார்ப்பதும் மே மாதம் குரு ஜென்மத்திற்கு மாறி 5-ஆமிடத்தைப் பார்ப்பதும் பிள்ளைகள் வகையில் நன்மைகளைத் தரும். மதிப்பு, மரியாதையும் கூடும். 9-ல் ராகு இருப்பதால் தந்தை- மகன் உறவில் சில சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். ராகு நிற்பது பிரச்சினை. கேது பார்ப்பது பிரச்சினைக்கு நிவர்த்தி. ஆக பிரச்சினைகளை உண்டாக்கி தீர்வை தருவார்கள். மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள்: திருவக்கரை சென்று வக்ரகாளி, சந்திரமௌலீஸ்வரர் அம்பாள், குண்ட-னி ஜீவசமாதியை வழிபடவும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்: சிதம்பரம் தில்லைக்காளி அம்மனை வழிபடவும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்கள்: பூம்புகார் அருகில் கீழ்ப்பெரும் பள்ளம் சென்று பிரார்த்தனை செய்து வழிபடவும்.

கடகம்

கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த ராகு இப்போது 8-ஆமிடத்துக்கும், 3-ல் இருந்த கேது இப்போது 2-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். 8-ஆமிடம் என்பது கெட்ட ஸ்தானம். சஞ்சலம், ஏமாற்றம், விபத்து, பீடை, கௌரவபங்கம், கவலை, விசனம், இழப்பு ஆகியவற்றைக் குறிக்குமிடம். இயற்கையில் பாபகிரகமான ராகு மேற்கண்ட பாவ ஸ்தானத்தில் வருவதால் அந்தப் பாபத் தன்மைகளை விரட்டியடிப்பார் என்று சொல்லலாம். டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பதுபோல! கேதுவுக்கு ஏற்கெனவே இருந்த 3-ஆமிடம் நல்ல இடம்தான் என்றாலும் அட்டமத்துச்சனி நடந்துகொண்டிருப்பதால் நற்பலனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. 2-ல் வரும் கேது தனவரவு பணப்புழக்கத்தைத் தந்தாலும் குடும்பத்தில் சில சலசலப்புகள், உறவுகளில் சங்கடங்கள் போன்றவற்றைத் தரலாம். பேச்சிலும் நிதானம் அவசியம். கும்ப ராகு 6-ஆமிடம், 2-ஆமிடம், 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். சிம்ம கேது 12-ஆமிடம், 8-ஆமிடம், 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். 6-ஆமிடம் என்பது ரோகம், ருணம், சத்ருஸ்தானம். அதைப் பார்ப்பதால் 6-ஆமிடத்துப் பலனைக் கெடுப்பார். அதனால் உங்களுக்கு நற்பலன் உண்டாகும். சத்ருக்கள் தாமாகவே விலகிவிடுவார்கள். பொதுவாக நீங்கள் யாரையும் சத்ருவாக நினைக்கவில்லையென்றாலும் உங்களை சத்ருவாக நினைத்து போட்டி, பொறாமைகளை உங்கள்மீது வளர்த்துக்கொண்டவர்கள் தாமாகவே ஒதுங்குவர். அதேபோல நோயும் விலகிவிடும். கடன் சுமையும் படிப்படியாகக் குறையும். 2-ஆமிடத்தை ராகு பார்க்கிறார். கேதுவும் அங்கு இருக்கிறார். ஞானம் உண்டாகும். வாக்குப் ப-தம் ஏற்படும். படிப்பு, வித்தையில் தடையும் ஏற்படும். 6, 8, 12-க்குடைய தசாபுக்தி நடந்தாலும், சமராகு சமகேது நடந்தாலும் பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில்துறையிலும் வேலை, உத்தியோகத்திலும் நல்ல திருப்பம் ஏற்படும். 12-ஆமிடத்தைப் பார்க்கும் கேது விரயத்தை ஏற்படுத்தினா லும் அதை சுபவிரயமாக மாற்றும் அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் முயற்சிகளில் தடை, தாமதங்களைச் சந்தித்தாலும் விடாமுயற்சியினால் நினைத்ததை நிறைவேற்றலாம். 4-ஆமிடத்தைப் பார்க்கும் கேது புதிய பூமி, மனை இவற்றில் நற்பலனைத் தரலாம். ஒருசிலர் புதிய வாகனம் வாங்கலாம். வாங்கிவைத்த இடத்தில் வீடு கட்டும் பணியும் உருவாகலாம்.

புனர்பூச நட்சத்திரக்காரர்கள்: பூம்புகார் அருகில் கீழ்ப்பெரும்பள்ளம் சென்று பிரார்த்தனை செய்து வழிபடவும்.

பூச நட்சத்திரக்காரர்கள்: திருநெல்வே- மாவட்டம் வள்ளியூர் அருகில் விஜயாபதி சென்று விசுவாமித்திரர் கோவில், தில்லைக்காளியம்மனை வழிபடவும்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்கள்: நாகர்கோவி-லுள்ள நாகராஜா கோவிலுக்கு ஆயில்ய நட்சத்திரத்தன்று சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் அடையலாம்.

சிம்மம்

கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த ராகு இப்போது 7-ஆமிடத்துக்கும், 2-ல் இருந்த கேது இப்போது ஜென்ம ராசி (1-ஆமிடத்துக்கும்) மாறுகிறார் கள். கடந்த காலத்தில் ராகு- கேது இருந்த இடங்கள் அவ்வளவு சிறப்பான இடமென்று சொல்லமுடியாது. சிலருக்கு சில நன்மையும் நடந்தது. பலருக்கு பல கெடுதல்கள் நடந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதில் வேடிக்கை என்னவென்றால் நன்மைகளை அனுபவித்தவர்களில் கெடுதல்களைச் சந்தித்தவர்களும் உண்டு. கெடுதல்களைச் சந்தித்தவர்களில் நன்மைகளை அனுபவித்தவர்களும் உண்டு. பதவி உயர்வு, பண வருமானம், சம்பாத்தியம், கட்டட சீர்திருத்தம் போன்ற பலன்களும் நடந்தன. மனைவிக்கு ஆரோக்கிய குறைவு, தந்தைக்கு கண்டம், உடன்பிறந்தவகையில் மனவருத்தம், கௌரவப் போராட்டம், குடும்பத்தில் சங்கடம், பிரிவினை போன்ற பலன்களைச் சந்தித்தவர்களும் உண்டு. மீன ராகு 6, 10, 2-ஆமிடத்தையும், கன்னி கேது 12, 8, 4-ஆமிடத்தையும் பார்த்தார்கள். எனவே, தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் ஏமாற்றம், அலைக்கழிப்பு, கௌரவப் போராட்டம், இடமாற்றம், பதவியில் சஸ்பெண்ட் போன்ற அவலங்களைக் கொடுத்தது எனலாம். இப்போது கும்ப ராகு 5-ஆமிடம், ஜென்ம ராசி, 9-ஆமிடத்தையும், சிம்ம கேது 11-ஆமிடம், 7-ஆமிடம், 3-ஆமிடத்தையும் பார்க்கிறார்கள். ஜென்ம ராசியில் கேது நிற்க ராகு அதைப் பார்ப்பது ஒருவகையில் நன்மைதான். உங்கள் செல்வாக்கு உயரும். தொழில்முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். கீர்த்தியும் பாராட்டும் கிடைக்கும். கும்ப ராகு 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியைப் பார்ப்பதும் சிம்ம கேது 7-ஆம் பார்வையாக கணவன் அல்லது மனைவி ஸ்தானத்தைப் பார்ப்பதும் உங்கள் செல்வாக்கும் பெருமையில் உங்கள் கணவருக்கும் அல்லது மனைவிக்கும் பங்கு கிடைக்கும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் ராகு பிள்ளைகள்வகையில் சில சங்கடங்களைத் தருவார். கூட்டுக்குடும்பமாக இருந்த பிள்ளைகள் தனிக்ககுடித்தனம் செல்லும் சூழ்நிலையும் உண்டாகும். 9-ஆமிடம் தகப்பனார், பூர்வபுண்ணிய ஸ்தானம். தகப்பனார் வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். 11-ஆமிடத்தைப் பார்க்கும்போது காரிய அனுகூலத்தைத் தருவார். மூத்த சகோதரவகையில் மனக்கிலேசத்தையும் உருவாக்குவார். 7-ஆமிடத்தைப் பார்க்கும் பலன் மேலே குறிப்பிட்டு உள்ளபடி கணவன் அல்லது மனைவிக்கு நன்மை- தீமை பலன்கள் கலந்து நடக்கும். எதையும் எதிர்கொள்ளும் துணிவும் தைரியமும் 3-ஆமிடத்தைப் பார்க்கும் கேது தருவார்.

மக நட்சத்திரக்காரர்கள்: புதுக்கோட்டை பொன்னமரா வதி பாதையில் பேரையூர் சென்று நாகநாதரை வழிபடவும்.

பூர நட்சத்திரக்காரர்கள்: கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் சென்று வழிபடவும்.

உத்திர நட்சத்திரக்காரர்கள்: சீர்காழியிலுள்ள ராகு- கேது கோவிலுக்கு சென்று பூஜை செய்து வழிபடலாம்.

கன்னி

உங்கள் ராசிக்கு கடந்த ஒன்றரை வருடகாலமாக 7-ல் இருந்த ராகு இப்போது 6-ஆமிடத்துக்கும், ஜென்ம ராசியி-ருந்த கேது 12-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஏற்கெனவே ராகுவும் கேதுவும் இருந்த இடங்கள் சாதகமும் இல்லை பாதகமும் இல்லை என்று சொன்னா லும் பெரும்பாலும் கன்னி ராசிக்காரர்கள் பெரிய நன்மைகளை அடையவில்லை என்றுதான் கூறவேண்டும். தொழில் துறையில் எதிர்பாராத சிரமங்களும், சிக்கல்களும் ஏற்பட்டு அதை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த அளவு பலனும் லாபமும் கிடைக்காமல் ஏமாற்றமாகி கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் திகைப்பு, மனவருத்தம் உண்டானதுதான் மிச்சம்! 6-ல் வரும் ராகு, 12-ல் வரும் கேது அப்படியென்ன பெரிய நன்மைகளைத் தந்துவிடப் போகிறார்கள் என்று தோன்றும். ராகு- கேதுவுக்கு 3, 6, 11-ஆமிடம் யோகம் தரும் இடங்கள். 6-ல் வரும் ராகு நன்மை தரலாம். 12-ல் கேது எப்படி நன்மை செய்வார் என்று சந்தேகம் ஏற்படலாம். கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் வருவதால் ஏற்கெனவே கூறியபடி மைனஸ் ஷ் மைனஸ்= பிளஸ் என்ற நியதிப்படி கெடுதல் மறைந்து நன்மை ஏற்படலாம். 6-ஆமிடத்து ராகு- 4-ஆமிடம், 12-ஆமிடம், 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12-ஆமிடத்து கேது- 10-ஆமிடம், 6-ஆமிடம், 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 4, 12-ஆமிடங்களை ராகு பார்ப்பதால் விரயமும் செலவும் ஏற்படும். என்றாலும் பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட செலவுகளாக எடுத்துக்கொள்ளலாம். 12-ஆமிடம் அயனசயன சுகபோக ஸ்தானம் ஆகும். அங்கு கேது இருப்பதால் அந்தவகையிலும் செலவுகள் உண்டாகலாம். 8-ஆமிடம் என்பது விபத்து, வேதனை, இழப்பு, ஏமாற்றம், கௌரவப் போராட்டம், ஆயுள் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அதை ராகு பார்ப்பதால் அவற்றை அழிப்பார். 4-ஆமிடத்தை ராகு பார்ப்பதால் சிலருக்கு உடல்நலக்குறைவு, தாய்வழியில் பீடை (தாயாருக்கு பீடை) ஆகியவை ஏற்படலாம். 10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம். அதற்கு சகாய ஸ்தானத்தில் கேதுவும், பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் இருப்பதால் இந்த ராகு- கேது பெயர்ச்சி தொழில்வகையில் முன்னேற்றத்தையும் அனுகூலத்தையும் தரும் என்று நம்பலாம். 6-ஆமிடத்தை கேது பார்க்கும் பலனாக தொழில் சம்பந்தமாக புதிய கடன்கள் வாங்கலாம். போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளை ஜெயிக்கலாம். 2-ஆமிடத்தைப் பார்க்கும்போது தனவரவைத் தந்தாலும் ராசிக்கு 12-ல் இருப்பதால் செலவையும் தரும்.

உத்திர நட்சத்திரக்காரர்கள்: பரிகாரம்: சீர்காழியில் கடைவீதியிலுள்ள ராகு- கேது ஸ்தலம் சென்று வழிபடலாம்.

அஸ்த நட்சத்திரக்காரர்கள்: திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரரையும், அபிராமி அம்மனையும் வழிபடவும்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள்: பரமக்குடியிருந்து 12 கிலோமீட்டர் தூரமுள்ள நயினார் கோவி-ல் சௌந்திரநாயகி சமேத நாகநாத சுவாமியை வழிபடவும்.

துலாம்

கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த ராகு இப்போது 5-ஆமிடத்திலும், 12-ல் இருந்த கேது இப்போது 11-ஆமிடத்திலும் மாறுகிறார் கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் நல்ல இடங்கள்தான். அதற்காக இப்போது மாறும் இடங்கள் நல்ல இடங்கள் இல்லையென்று அர்த்தமல்ல! குறிப்பாக ராகுவைவிட கேது மாறும் இடம் அற்புதமான இடம்தான்! 5-ஆமிடம் என்பது மக்கள், திட்டம், மனது, உபதேசம், தாய்மாமன், பாட்டனார் பூர்வபுண்ணியம் முத-யவற்றைக் குறிக்குமிடம். அங்கு வரும் ராகு அந்த இடத்துப் பலனைக் கெடுப்பார் என்பது ஜோதிட பொதுவிதி! என்றாலும் குரு 5-ஆமிடத்தைப் பார்க்கப்போவதால் பிள்ளைகள்வகையில் நல்ல காரியங்களுக்காக சுபச்செலவுகள் உண்டாகும். 11-ல் வரும் கேது உங்கள் தொழில் தொய்வடையாமல், தேக்கமாக நின்றுவிடாமலும் காப்பாற்றுவார். எப்படி? தொழில் ஸ்தானமான 10-ஆமிடத்துக்கு 2-ல் கேது நிற்பதுதான் காரணம்! தொழில் லாபம், வரவு- செலவு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கும்ப ராகு 3-ஆமிடம், 11-ஆமிடம் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். சிம்ம கேது 9-ஆமிடம், 5-ஆமிடம், 1-ஆமிடம் (ஜென்ம ராசியைப்) பார்க்கிறார். சகோதர- சகோதரிவகையில் சகாயங்களையும் உதவியையும் நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். ஜாதகரீதியாகக் கோளாறு இருந்தால் உடன்பிறந்தோர் வகையில் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கக்கூடும். தசாபுக்திக்கு ஏற்ற பரிகாரம் தேடிக்கொள்ளவும். 11-ஆமிடத்தைப்பார்ப்பதால் ஏற்கெனவே கூறியபடி லாபம், மறுமணம், தொழில் முன்னேற்றம் உண்டாகும். 7-ஆமிடத்தைப்பார்ப்பதால் திருமண யோகத்தைத் தரும். திருமணத்தில் தாமதம் வரலாமே தவிர, தடை ஏற்படாது. கேது ராசியைப் பார்ப்பதாலும், குருவும் பார்க்கப்போவதாலும் உங்களுக்கு செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உண்டாகும். ஆன்மிகம் அறக்கட்டளை போன்றவகையில் பொறுப்புகளும் பதவிகளும் கௌரவமும் ஏற்படலாம். 5-ஆமிடமும், 9-ஆமிடமும் பூர்வ புண்ணிய ஸ்தானம், பக்தி ஸ்தானம், உபதேச ஸ்தானம். சிலருக்கு தீட்சை உபதேசம் கிடைக்கலாம். நித்திய அனுஷ்டான உபதேசம் பெற்றுக் கடைப்பிடிக்கலாம். புத்திரவகையில் மகிழ்ச்சிகளுக்கு இடமுண்டு. அவர்களின் மேற்படிப்பு அல்லது திருமணம் போன்ற வகையில் நன்மைகள் உண்டாகும். ராகு- கேது பெயர்ச்சி துலா ராசிக்கு அனுகூலமும் ஆதரவும் காட்டும்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள்: பரமக்குடியி-ருந்து 12 கிலோமீட்டர் தூரமுள்ள நயினார் கோவி-ல் சௌந்திரநாயகி சமேத நாகநாத சுவாமியை வழிபடவும்.

சுவாதி நட்சத்திரக்காரர்கள்: கும்பகோணம், நாச்சியார் கோவி-லுள்ள கல் கருட பகவானை வழிபடவும்.

விசாக நட்சத்திரக்காரர்கள்: மயிலாடுதுறை பேரளம் அருகில் திருமீயச்சூர் சென்று ஸ்ரீ ல-தாம்பிகை அம்மனை வழிபடவும். 12 நாகர்களை வழிபடவும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு கடந்த ஒன்றரை வருடகாலமாக 5-ல் இருந்த ராகு இப்போது 4-ஆமிடத்துக்கும், 11-ல் இருந்த கேது இப்போது 10-ஆமிடத்துக்கும் மாறுகிறார் கள். ஏற்கெனவே ராகு இருந்த இடத்தைவிட கேது இருந்த இடம் நல்ல இடம். என்றாலும் மேற்கண்ட நல்ல இடத்தில் இருந்த ராகு- கேது நீங்கள் எதிர்பார்த்த அளவு யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் தந்தார்களா என்பது கேள்விக்குரிய சமாச்சாரம்தான்! அதற்கு அர்த்தாஷ்டமச்சனி மேலும் வக்ரகதியில் பாதிகாலமும் மீதி பாதிகாலம் 7-ல் நின்ற குருவும் வக்ரகதியில் சஞ்சரித்ததும்தான்! 4-ஆமிடத்து ராகு பூமி, வீடு, வாகனம் போன்றவகையில் செலவுகளை ஏற்படுத்தலாம். தாயாருக்கு நோய், வைத்தியச் செலவை உண்டாக்கலாம். 10-ல் வரும் கேது தொழில்துறையில் சில குறுக்கீடுகளும் தடை, தாமதங்களும் ஏற்பட்டாலும் அவை நிரந்தரப் பாதிப்பாக இருக்காது. கும்ப ராகு 2-ஆமிடம், 10-ஆமிடத்தையும், 6-ஆமிடத்தையும் பார்க்கிறார். சிம்ம கேது 8-ஆமிடம், 4-ஆமிடம், 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். 2-ஆமிடத்தைப் பார்க்கும் ராகு தனவரவைத் தருவார். அதேசமயம் குடும்பத்திலும் சில குழப்பங்களைத் தருவார். வாக்கு நாணயத்தை முடிந்தவரை காப்பாற்றப் பார்ப்பீர்கள். தொழில் சார்ந்தவகையில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். ஒருசிலர் உத்தியோக மாற்றத்தை சந்திக்க நேரும். அல்லது இடமாற்றத்தை சந்திக்க நேரும். 6-ஆமிடமான சத்ரு, போட்டி, பொறாமைகள் சம்பந்தப்பட்ட வகையில் விமோசனம் ஏற்படும். தொழில் வகைக்காக கடன் வாங்கவும் நேரிடும். 8-ஆமிடத்தைப் பார்க்கும் கேது வாங்கிய கடனை ஒழுங்காக அடைத்து விட முடியுமா? வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற முடியுமா என்ற கவலையைத் தருவார். 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் தாய்க்கும் பிள்ளைகளுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி பயத்தை உண்டாக்கலாம். எனினும் கேதுவின் வேகத்தை அங்கு நிற்கும் ராகு மட்டுப் படுத்துவார். 12-ஆமிடத்தை கேது பார்க்கிறார். உத்தியோகவகையில் அல்லது தொழில்வகைக்காக வெளிநாடு போகலாம். வி.ஐ.பிக்கள் வெளிநாட்டு பாராட்டு விழாவில் கலந்துகொள்ளலாம்.

விசாக நட்சத்திரக்காரர்கள்: திருமீயச்சூர் சென்று ல-தாம்பிகையையும், 12 நாகரையும் வழிபடவும்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள்: பேரளம்- திருமீயச்சூர் அருகில் திருப்பாம்புரம் சென்று சிவன், ராகு- கேதுவை வழிபடலாம்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள்: மன்னார்குடி அருகில் பாமினி சென்று சிவன் கோவி-ல் வழிபடவும். ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம்.

தனுசு

கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 4-ல் இருந்த ராகு இப்போது 3-ஆமிடத்துக்கும் 10-ல் இருந்த கேது இப்போது 9-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் கேந்திர ஸ்தானங்கள் நல்ல இடங்கள்தான்! இப்போது மாறும் இடங்களும் நல்ல இடம்தான். கேதுவைவிட ராகு மாறும் அற்புதமான இடம். ராகு- கேது, சனி ஆகியோருக்கு 3, 6, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள் ஆகும். 3-ஆமிடம் சகோதர, தைரிய, சகாய ஸ்தானம். உங்கள் கூடப்பிறந்த வர்களும் உற்றார்- உறவினர்களும் உங்களை புறக் கணித்து ஒதுக்கிய நிலை மாறும்! 9-ஆமிடத்துக் கேது ஆன்மிக ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வார். மந்திர உபதேசமும் கிடைக்கும். தெய்வ அனுகூலமும் உண்டாகும். கும்ப ராகு ஜென்ம ராசி, 9-ஆமிடம், 5-ஆமிடத்தையும் பார்க்கிறார். ஜென்ம ராசிக்கு குருவின் பார்வையும் கிடைக்கப் போகிறது. (மே மாதம் முதல்). உங்கள் திறமை, கீர்த்தி, செயல்பாடு இவையெல்லாம் சிறப்பாக செயல்படும். 9-ஆமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானம். மேற்கூறியபடி தெய்வீகம், வழிபாடு, தியானம் போன்றவை உண்டாகும். தகப்பனாருக்கு தேகநலத்தில் சௌகரியக் குறைவுகள் ஏற்படலாம். வைத்தியச் செலவுகளும் உண்டாகும். ஏனெனில் சனியும் அந்த இடத்தைப் பார்க்கிறார் அல்லவா! பூர்வீக சொத்து சம்பந்தமாக சில சங்கடங்களும் சச்சரவும் ஏற்பட்டு விலகும். 5-ஆமிடமான புத்திர ஸ்தானத்தை ராகு பார்க்கிறார். சனியும் 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகள்வகையில் தொல்லைகளை சந்திக்க நேரும். சிம்ம கேது 7-ஆமிடம், 3-ஆமிடம், 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். 7-ல் கேது நின்றால் திருமணத்தடை, தாமதம், 7-ஆமிடத்தைப் பார்த்தால் திருமணம் கைகூடும். 7-ல் குருவும் மாறுகிறார். எனவே கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் நிலவினா லும் பிரிவினைக்கு இடம் ஏற்படாது. 3-ஆமிடத்தைப் பார்க்கும் கேது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவார். தைரியம் புருஷ லட்சணம் என்பதற்கேற்ப காரியவகைகளும் அமையும். அதேபோல ரிஸ்க் எடுத்து சில காரியங்களை செய்துமுடிப்பீர்கள். 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் முன்னேற்றம், காரியனுகூலம், ஜெயம் உண்டாகும். தொழி-ல் லாபகரமான சூழ்நிலைகளை எதிர்பார்க்கலாம். மனைவிவழியில் கூட்டுச்சேர்ந்து தொழில் ஆரம்பிக்கும் யோகம் அமையும்.

மூல நட்சத்திரக்காரர்கள்: கோவையி-ருந்து பூண்டி, வெள்ளியக்கிரி மலைக்கு செல்லும் வழியில் செம்மேடு அருகில் முட்டத்து ஈஸ்வரன்- மனோன்மணி ஆலயம் சென்று வழிபடவும்.

பூராட நட்சத்திரக்காரர்கள்: மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோவில் அருகில் குபேர பத்ர காளியம்மனை வழிபடவும்.

உத்திராட நட்சத்திரக்காரர்கள்: கோவை- அவினாசி சாலையில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் சென்று வழிபடவும்.

மகரம்

கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த ராகு இப்போது 2-ஆமிடத்துக்கு மாறுகிறார். 9-ல் இருந்த கேது 8-ஆமிடத்துக்கு மாறுகிறார். ராகுவும் கேதுவும் கடந்த காலத்தில் இருந்ததைவிட இப்போது மாறுகிற இடங்கள் அவ்வளவு சிறப்பானது என்று கூறமுடியாது என்றாலும் ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடந்துகொண்டிருப்பதால் நல்ல இடத்தில் ராகு இருந்தும் நன்மைகளை அனுபவிக்க முடியவில்லை என்பதுதான் பலரின் அனுபவமாக இருந்தது. இடமாற்றம், உத்தியோக மாற்றம், கணவன்- மனைவிக்குள் சங்கடம், குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை, தொழில்துறையில் நஷ்டம் போன்ற பலன்களைச் சந்தித்தீர்கள்; சந்தித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். கும்ப ராகு 12-ஆமிடம், 8-ஆமிடம், 4-ஆமிடங்களைப் பார்க்கிறார். 12-ஆமிடத்தை குருவும் பார்க்கப்போகிறார். தொழில், புது முயற்சி சம்பந்தமான முதலீட்டு செலவுகளும் அல்லது புது வேலைக்காகவும், கடல் கடந்த வெளிநாட்டு வேலைக்காகவும் செலவுகள் ஏற்படலாம். 8-ஆமிடம் என்பது விபத்து, மாரகம், சஞ்சலம் ஆகியவற்றைக் குறிக்கும். சில நேரம் சந்தேகம், வீண் மணபயம் தோன்றலாம். வாகனவகையில் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம். ஏழரைச்சனி நடப்பதால் ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் கண்டம் அல்லது பொருட் சேதம் போன்றவை ஏற்படலாம். அட்டமத்திலுள்ள கேது 2-ஆமிடத்தைப் பார்க்கும் காலம் குருவும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பும், தனவரவும் உண்டாகும். பூமி, வீடு, வாகன சம்பந்தமான செலவுகளும் வரலாம். சிலர் மனைவிவகையில் அல்லது சுற்றத்தார்வகையில் தவிர்க்கமுடியாத செலவுகளையும் தாங்கத்தான் வேண்டும். சிம்ம கேது 6-ஆமிடம், 10-ஆமிடத்தைப் பார்க்கிறார். மேற்கூறிய பூமி, வீடு, வாகன வகைக்காகவோ அல்லது தொழில் வகைக்காகவோ கடன் வாங்க நேரிடும். 9-ஆமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு 6, 12-ல் ராகு- கேது இருப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்சினைகளும் எழலாம். 3-ஆமிடத்துக்கும் ராகு 12-லும், கேது 6-லும் மறைவதால் சகோதரவகையில் சங்கடங்கள் உண்டாகும். 2-ஆமிடத்தைப் பார்க்கும்போது தனவரவையும் தருவார் என்று மேலே குறிப்பிட்டோம். தொழில்ரீதியான சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம். அந்நிய இனத்து நண்பர்களால் உதவி, ஒத்தாசை அமையும். ராகு- கேது நன்மை- தீமை கலந்த பலனாகத் தரும்.

உத்திராட நட்சத்திரக்காரர்கள்: கோவை அவினாசி சாலையில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் சென்று வழிபடவும்.

திருவோண நட்சத்திரக்காரர்கள்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருச்செந்தூர் பாதையில் தொலைவில்- மங்கலம் என்னும் ராகு- கேது ஸ்தலம் சென்று வழிபடவும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்கள்: திருச்சி- படூர் ரயில்வேகேட் அருகில் சிவன் கோவி-ல் தம்பதி சகிதமாக நவகிரகங்கள் உள்ளனர்கள்; அங்கு சென்று வழிபடவும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு கடந்த ஒன்றரை வருட காலமாக 2-ல் இருந்த ராகு இப்போது ஜென்ம ராசிக்கு மாறுகிறார். 8-ல் இருந்த கேது இப்போது 7-ஆமிடத்துக்கு மாறுகிறார். "ஆமேடம், எருது, சுறா, நண்டு, கன்னி ஐந்து இடத்தில் கருநாகம் அமர்ந்திருக்கில் பூமேஷம் ராஜயோகம் தனித்துயில் என்று புகழலாமே'' என்பது பாடல். அதனடிப்படையில் மீன ராகு கன்னி கேதுவும் உங்களுக்கு யோகத்தைச் செய்தார்களா என்பது கேள்விக்குறிதான்! ஏழரைச்சனி, 2-க்குடைய குரு 4-ல் நின்று 12-ஆமிடமான விரயத்தைப் பார்த்தது என்று அலைச்சல், இடமாற்றம், ஊர்மாற்றம் என அலைக்கழிக்க வைத்தது என்பதுதான் உண்மை! ஜென்ம ராசி என்பது லக்னம் மாதிரி! கௌரவம், செயல்தன்மை, கீர்த்தி, செல்வாக்கு புகழ், பெருமை ஆற்றல் இவற்றைக் குறிக்கும். அங்கு நிற்கும் ராகுவையும் ஜென்ம ராசியையும் குருவும் பார்க்கப் போகிறார். இவற்றையெல்லாம் அன்பளிப்பாக வழங்குவார்கள். 7-ல் உள்ள கேது திருமணத்தடை, தாமதங்களை ஏற்படுத்தலாம். கும்ப ராகு 11-ஆமிடம், 7-ஆமிடம், 3-ஆமிடத்தையும் பார்க்கிறார். சிம்ம கேது 5-ஆமிடம் ஜென்ம ராகு 9-ஆமிடத்தையும் பார்க்கிறார். 11-ஆமிடத்தைப் பார்க்கும் பலனாக லாபம், காரிய ஜெயம், வில்லங்கம், விவகாரத்தில் வெற்றி அனுகூலம், உபய களஸ்திரயோகம் ஆகிய பலன்களை அனுபவிக்கலாம். 7-ஆமிடத்தில் கேது நின்று ஏற்படுத்தும் திருமணத்தடைகளை ராகு பார்வையால் விலகி திருமணயோகம் ஏற்படும். கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது சலசலப்பு உண்டானா லும் பிரிவுக்கு இடம் ஏற்படாது. மனைவி பெயரில் தொழில் அல்லது நண்பர்களோடு கூட்டுசேர்ந்து புதிய தொழில் தொடங்கலாம். 3-ஆமிடத்தைப் பார்க்கும் ராகு சகோதரவகையில் சில நன்மைகளையும், உதவிகளையும் தருவார். உடன்பிறந்தவகையில் கல்வி அல்லது தொழில் அல்லது திருமணம் போன்றவகையில் விரயச்செலவுகள் ஏற்படலாம். கேது 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். குருவும் அங்கு மாறப்போகிறார். புத்திரவகையில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் உண்டாகும். திருமணமாகி வாரிசு யோகத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும். ஜென்ம ராசியைப் பார்ப்பதால் எல்லாரும் வணங்கத்தக்க அளவு மதிப்பும், மரியாதையும் எதிர்பார்க்கலாம். தொழில் சம்பந்தமாகவும் நற்பெயர் எடுக்கலாம். 9-ஆமிடம் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை கேதுவோடு குருவும் பார்க்கப்போவதால் குலதெய்வ வழிபாடு சிறக்கும். ஆன்மிகப் பணிக்கான பொறுப்புகளும் ஏற்படும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்கள்: திருச்சி அருகில் பழூர் சென்று சிவன் கோவி-ல் தம்பதி சகிதமான நவகிரகங்களை வழிபடவும்.

சதய நட்சத்திரக்காரர்கள்: தேனி- உத்தம பாளையத்தில் தென்காளஹஸ்தி எனப்படும் காளத்தீநாதர் கோவிலுக்குச் சென்று வழிபடவும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: சுவாமிமலை போகும் பாதையில் திருவலஞ்சுமி ஸ்வேத விநாயகரையும், பட்டீஸ்வரம் துர்க்கையம்மனையும் வழிபடவும். ராகுவுக்கு துர்க்கை கேதுவுக்கு- விநாயகரும் அதிதேவதைகள்.

மீனம்

கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசியில் நின்ற ராகு இப்போது 12-ஆமிடத்துக்கு மாறுகிறார். 7-ல் நின்ற கேது இப்போது 6-ஆமிடத்துக்கு மாறுகிறார். மீன ராசிக்கு ஏழரைச்சனி நடந்துகொண்டிருக்கிறது. இதில் ஜென்ம ராகு சப்தம கேதுவும் ஒருபுறம் ஆட்டிப் படைகிறது. சிறங்கடித்துக் கொண்டும் இருக்கிறது. ராசிநாதன் 3-ல் மறைவு வேறு. (குரு). ராகு- கேது பாவகிரகங்கள். அவர்கள் பாவஸ்தானமாகிய 12-ஆமிடம், 6-ஆமிடத்தில் வந்திருப்பதால் கெட்ட இடத்தில் கெட்ட கிரகம் நன்மையான பலனைச் செய்யும் என்று நம்பலாம். 12-ஆமிடம், விரயஸ்தானம், வெளியூர், வெளிநாட்டு வேலை, இடமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கும். தசாபுக்தி யோகமாக இருந்தால் வெளிநாட்டுக்கு போய் வேலை பார்க்கலாம். அல்லது குடியிருப்பு மாறலாம். 6-ல் வரும் கேது கடன் சம்பந்தப்பட்ட வகையில் நிவர்த்தி தருவார். அதாவது கடனை அழிப்பார். நோய் நிவர்த்தியும் உண்டாக்குவார். கும்ப ராகு 10-ஆமிடம், 6-ஆமிடம், 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். பழைய கடன்கள் அடை படும். புதிய கடன்கள் உருவாகும். அது தொழில் வகைக் காகவோ அல்லது குடியிருக்கும் வீட்டை சீரமைக்க அமையலாம். போட்டி, பொறாமைகள் விலகும். நோய், நொடிகளும் விலகும். 10-ஆமிடத்தைப் பார்க்கும் ராகுவும், அடுத்து குருவும் பார்க்கப்போவதால் தொழில், வாழ்க்கை இவற்றில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் முயற்சிகளும் கைகூடி வரும். அதற்காக வாங்கும் கடன் சுபக்கடனாகும். 2-ஆமிடத்தை ராகு பார்ப்பதால் தனவரவையும் ஏற்படுத்துவார். செலவு ஏற்படுகிறது என்றால் வரவு வருகிறது என்றுதானே அர்த்தம்! சிம்ம கேது 4-ஆமிடம், 12-ஆமிடம், 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். பூமி, வீடு, மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டாலும் சுபகிரகம் குரு அங்கு வரப்போவதால் தீர்வுகளும் உண்டாகும். நீண்டநாளாக தடைப்பட்ட வீடு வேலைகளும் தொடங்கும். 12-ஆமிடத்தைப் பார்க்கும் கேது விரயத்தைத் தருவார் என்பது நீங்கள் அறிந்ததே! 8-ஆமிடத்தை கேதுவோடு குருவும் பார்க்கப்போகிறார். மனச்சஞ்சலம் உண்டாகலாம். அபகீர்த்தியும் ஏற்படலாம். அதேசமயம் அதிர்ஷ்டத்திற்கும் இடமுண்டு. ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் நற்பலன்களை அடையலாம்; விபரீத ராஜயோகத்தையும் அடையலாம்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: சுவாமிமலை போகும் வழி திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகரையும், பட்டீஸ்வரம் துர்க்கையம்மனையும் வழிபடவும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடவும். நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை பண்ணிய ஸ்தலம்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள்: குண்ட-னி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவஜோதியான சித்தர் களின் ஜீவசமாதி சென்று வழிபட்டால்போதும். ராகு- கேது உங்களுக்கு இனிய பெயர்ச்சி பலனாக மாற்றுவார்கள்.

செல்: 99440 02365

om010425
இதையும் படியுங்கள்
Subscribe