1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களுக்கு எதிர்பாராமல் நல்ல பலன் கள் கிட்டும். மறைமுகமாக வும் நேரடியாகவும் தொல்லை கொடுத்து வருபவர்கள் விலகிச்செல்வார்கள். பிள்ளைகளின் கல்விக்காக கூடுதல் செலவு ஏற்படலாம். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று நல்ல லாபத்தைப் பெறுவார் கள். வியாபாரிகள் புதிதாகத் தொடங்கும் வர்த்தகம் கை கொடுக்கும்; போட்டியாளர் கள் விலகிச்செல்வார்கள்.
அரசு ஊழியர்களின் பணிச் சுமை கூடும். எனினும் மேலதிகாரி களின் பாராட்டைப் பெறுவார்கள். மனைவிவழி சொத்துகள் வர வேண்டியிருந்தால் ஒரு சிலருக்கு வந்துசேரும். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெற்றோர் பெருமை கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் வந்து சேர்வார்கள். கடிதத் தொடர்புகளில் நல்ல செய்திகள் வரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் கல்வியில் மந்தநிலை மாற கடுமையாகப் படிக்க வேண்டிய மாதம்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களே நடக்கும். அதற்குத் துணைநிற்பது நிதானம்தான். கடந்த மாதம் இருந்த டென்ஷன் இந்த மாதம் முழுவதும் உற்சாகமாக மாறி விடும். பிள்ளைகள்வழியில் நல்ல செய்திகளைக் கேட்கலாம். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள். தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி லாபத்தை அடைவார்கள். தொழில் சம்பந்த மாக தொடர்பு கொள்ளும் போது விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் கொள்முதலை அதிகமாக செய்யாமலிலி−ருந்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறு வார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையும். எதிரிகளின் தொல்லை மாறும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்டநாட்களாக இழுபறி யாக இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வந்து சாதகமான தீர்ப்பைப் பெறுவார்கள். உடற்பிணிகள் அகலும். சிலருக்கு உஷ்ணத்தால் உடல் உபாதைகள் வரலாம். அரசுப் பணியாளர் கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் பெறுவார்கள். பாகப்பிரிவினை சுமுகமாகக் கிட்டும். பெண்கள் புதிய ஆடை, நகைகள் வாங்கி மகிழ்வார்கள். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். அரசியவாதிகள் செல்வாக்கு கூடும்.
அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.
வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் வாழ்க்கையில் நீண்டநாட்களாக நிறைவேறாத காரியங்கள் கைகூடும் மாதம். மாதம் முழுவதும் நன்மைகளே நடக்கும். சிலர் தங்களின் பிடிவாத குணத்தால் நல்ல வாய்ப்புகளை இழக்கநேரும். தொழிலதிபர்கள் லாபத்தைப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கூடும். தொழிலி−ல் இருந்துவரும் முட்டுக்கட்டைகள் மாறும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கி தம்பதியர் நல்ல நிலையில் வாழ்வார்கள். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அரசியல்வாதிகள் எண்ணத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அதனை அவசரமாக முடிவுசெய்வீர்கள்; தலைமையால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் லாபத்தைப் பெறுவார்கள். வசூலாகாம−லிருக்கும்லி பாக்கிகள் வசூலாகும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முறையில் ஈடேறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் ஈடேறும். வீட்டிற்கடங்காத பிள்ளைகள் இனி பெற்றோர்களுக்கு அடங்கி நடப்பார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டிய மாதம் இது. அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாகலாம். ஒருசில ஊழியர்கள் கட்டாய இடமாற்றத்தை அடைவார்கள். சொந்த வாகனத்தில் பயணம் செல்பவர்கள் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். விபத்து வராமல் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.
வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் தெய்வீகப் பணிகளுக் காக அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வியாபாரம் பெருகும். தொல்லை கொடுத்துவரும் கடன்பாக்கிகள் தீரும். புதிய ஆபரணங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் நினைத்தபடி இடமாற்றத்தையும், பதவி உயர்வையும் அடைவார்கள். நிர்வாகத்தால் பணிநீக்கம் பெற்றவர்கள் மீண்டும் பணிக்குச் செல்ல வாய்ப்புகள் கூடும். கண்நோய் வந்து நீங்கும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் சென்றால் நன்மையுண்டு. பிள்ளைகள் சேர்த்துவைத்த பணத்தைப் பெற்றோர்களுக்குக் கொடுத்து மகிழ்வார்கள். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். இந்த மாதம் உங்களை நேசித்த ஒருவரைப் பிரியவேண்டி வரலாம். சிலருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். வழக்குகள் வெற்றி தரும். இளைஞர் கள் நல்ல வேலைகளைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் மே−டத்தின் பாராட்டைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும். தொல்லை காரணமாக சில பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் உள்ளதால், பெற்றோர்கள் கவனத்துடன் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் திட்டம் நிறைவேறும். உயர்கல்வி மாணவர்கள் காம்பஸ் செலக்ஷனை அடைவார் கள். நல்ல ஊதியத்தையும் பெறுவார் கள். கணவன்- மனைவி உறவில் இருந்துவரும் பிணக்குகள் மாறும். பிள்ளைகளின் திருமணம் திட்டமிட்டபடி கைகூடும். தொழிலதிபர்கள் தொழிலாளர் களிடம் நிதானத்தைக் கடைப்பிடித்தால் தொழிற்சாலையில் உற்பத்தி கூடும். வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூ−த்து நிம்மதி பெறுவார்கள். அரசியல் வாதிகள் தலைமையின் பாராட்டைப் பெற்று புதிய பதவியையும் அடைவார்கள். பணவரவுகள் திருப்தியாக இருக்கும். தொல்லை கொடுத்துவரும் உறவினர் கள் விலகிச்செல்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். புதிய வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். அயல்நாட்டிலி−ருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். சிலர் அரசுப்பணிக்கான உத்தரவைப் பெறுவார்கள். பிரிந்து சென்ற தம்பதியர் திடீரென ஒன்றுசேர்வார்கள். ஒருசிலருக்கு இரண்டாவது மனைவி வரும் வாய்ப்புள்ள மாதம். எனவே பெண்களிடம் எச்சரிக்கையாகப் பழகவேணடும்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த தேதியில் பிறந்த பெரும்பான்மையினருக்கு பொன்னும் பொருளும் சேரும் மாதம். அடகுவைத்த நகைகளை சிரமமின்றி மீட்கலாம். பொருளா தார வளர்ச்சி உண்டு. தொழிலதிபர் கள் புதிதாகத் தொழிற்சாலை களைத் துவக்குவார்கள். வியாபாரிகள் அதிக கொள்முதல் செய்து நல்ல லாபம் பெறுவார்கள். சிறு வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் அனைவருமே நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நடை பாதை வியாபாரிகள் எச்சரிக்கை யாக வியாபாரம் செய்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிக்கும். பாகப்பிரிவினையில் நிலவும் மந்தம் மாறி, சுமுகமாக நிறைவேறும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். சிலருக்கு மனைவி, மக்கள்வழியில் மருத்து வச் செலவுகள் வரலாம். இதுவரை வீட்டிற்கே வராத பிள்ளைகள் குடும்பத் தோடு வந்து சேர்வார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிட்டும். அரசு ஊழியர்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். அரசியலிலில் உள்ளவர்கள் செல்வாக்கைப் பெறுவார்கள். மாணவர்கள் அதிக அக்கறை செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். சிலருக்கு புதிய வீடு, புதிய வாகனங் கள் வாங்கும் திட்டம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நிலம், வீடு வாங்கி விற்போர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலர் தீர்த்தயாத்திரை சென்று வருவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உயர்கல்வி மாணவர்கள் காம்பஸ் செலக்ஷனை அடைவார்கள். வெளிநாடு போகும் திட்டம் நிறைவேறும். ஒருசிலருக்கு திடீர் திருமணம் நடக்கும். காணாமல் போனவர் எதிர்பாராமல் வந்து சேர்வார். தங்கள் உடல்நிலையில், பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். அரசு ஊழியர் கள் கவனமாக செயல்பட வேண்டும். லஞ்ச வழக்குகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அரசியல்வாதி கள் புதிய பதவிகளைப் பெறுவார் கள். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமான முடிவுக்கு வரும். தொழிலதிபர் கள் வெளிமாநிலத் தொடர்புகளால் லாபம் பெறுவார் கள். சிலர் புதிய வீட்டில் குடியேறலாம். தேவையான வசதிகளை சுயமாகவே ஏற்படுத்திக்கொள்வீர்கள். கூட்டுத்தொழில் புரிவோரிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16, 25.
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் யோசிக்காமல் செய்யும் காரியம்கூட வெற்றியாக மாறும். பொறுமையால் அனைத்து காரியத்தையும் சாதிப்பீர்கள். ஒருசிலருக்கு, பெருந் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டி ருந்தவர்கள் தாமாகவே முன்வந்து கொடுத்து விடுவார்கள். ஊதாரித்தனமாக வாழும் பிள்ளைகள் திருந்தி நல்ல நிலைக்கு வருவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் யாரை முழுமையாக நம்புகிறீர்களோ அவர்களே துரோகம் செய்வார்கள். அவர்களைவிட்டு விலகுவீர் கள். தொழிலதிபர்கள் "வேலைக்கு ஆளில்லையே' என்று ஏங்கிய நிலை மாறும்; நல்ல ஆட்கள் கிடைப் பார்கள்; உற்பத்தி பெருகும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பெண்கள் கணவரால் நல்ல பலன்களை அடைவார்கள். குடும்பச்சண்டை மாறும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள். ஒருசிலர் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வார் கள். அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் நல்ல மதிப்பைப் பெறுவார்கள். வேலையிழந்த சிலர் மீண்டும் வேலை பெறுவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதல் அடைவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எல்லா காரியமும் கடின முயற்சியால் இனிதே நடக்கும். சிலர் பிள்ளைகளால் நல்ல வசதிகளைப் பெறுவார்கள். இளைஞர்கள் நல்ல வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர்பதவியில் உள்ள சிலர் விருப்பமில்லாத மாற்றத்தை அடைவார்கள். சாதாரண அரசு ஊழியர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். அதிகாரப் பதவியில் உள்ள சிலர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆட்படலாம். பிரிந்துசென்ற தம்பதியரின் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். நண்பர்கள்வழியில் புதிய செலவுகள் வந்துசேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். பெற்றோர் களுக்கு மருத்துவச்செலவுகள் வரலாம். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவரும் வழக்குகள் சாதகமாகும். ஆசிரியர் பணி யில் உள்ளவர்கள் அரசாங் கப் பாராட்டைப் பெறுவார் கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களால் உற்சாக மடைவார்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வாகனங் களால் செலவுகள் வந்து நீங்கும். நீங்கள் அதிகம் நேசித்த ஒருவரைப் பிரியவேண்டி வரலாம். தொலைதூரப் பயணங்கள் செல்லும் திட்டம் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.
செல்: 94871 68174