ஏப்ரல் மாத ராசிபலன்கள்

/idhalgal/om/april-month-horoscopes

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் 14-ஆம் தேதிமுதல் இரண்டிலிருந்து மூன்றாமிடமான மிதுனத்திற்கு மாறுகிறார். சகோதரவழியில் சகாயத்தை எதிர்பார்க்கலாம். 2-க்குடைய சுக்கிரன் 11-ஆம் தேதிமுதல் மேஷத்திற்கு மாறுகிறார். எனவே, செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் விலகும். 5-ஆம் தேதிமுதல் மகர குரு கும்பத்திற்கு அதிசாரமாக மாறுகி றார். தொழில் மேன்மை, வியாபார விருத்தி, கிளை நிறுவனம் அமைத்தல், புதிய தொழில் தொடங்குதல் போன்ற நன்மைகளை அடைய லாம். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்பட்டா லும் அது சிறப்பானதாக இருக்கும். அடிமை வேலையைவிட்டு சுயதொழில் ஆரம்பிக்கும் வழிவகைகள் சிலருக்கு உண்டாகும். 5-க்குடைய சூரியன் 14-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் உச்சம்பெறுவார். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவம் பெறும். நீண்டகால கற்பனைக் கனவுகள் நனவாகும் நேரமிது. சில குடும்பங்களில் பிள்ளைகளின் திருமணம் நடைபெறும் யோகம் உண்டாகும். பெற்றோர்களின் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். அவர்கள்வழியில் வரவேண்டிய நிலுவைத்தொகை வந்துசேரும். இழுபறியான நிலை மாறும். உழைப்பு நிச்சயம் பலன் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ஆம் தேதிவரை 11-ஆமிடமான மீனத்தில் உச்சமாக இருக்கிறார். முயற்சிகளில் வெற்றியும் காரியங்களில் அனுகூலமும் உண்டாகும். கடமைகளில் நிறைவும் ஏற்படும். சிலருக்கு வெளியூரில் குடியேறும் சூழல் உண்டாகும். யார் உதவியையும் எதிர்பாராமல் உங்கள் சொந்த முயற்சியிலேயே வீடு, வாசல், வாகனம் அமையும் நிலைகள் ஏற்படும். ராசிநாதன் சுக்கிரன் பன்னிரண்டில் மாறும்போது அவ்வப்போது செலவுகள், விரயங்கள் ஏற்படலாம். வாகனவகையில் செலவினங்களும் உண்டாகலாம். மகர குரு கும்பத்திற்கு அதிசாரமாக 5-ஆம் தேதிமுதல் மாறுகிறார். வேலை, தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் நல்ல மாற்றங் கள் நிகழும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அடிக்கடி ஏற்படும் சிறுசிறு பயணங்கள் தவிர்க்க முடியாதவையாக அமையும். தாயின் உடல்நலனில் கவனமும் அக்கறையும் தேவை. அவ்வப்போது மருத்துவச் செலவுகள் வரலாம். உறவினர்கள்மூலம் செலவும், அதனால் கடன்வாங்கும் அவசியமும் ஏற்படலாம். அவற்றை சமாளிக்கும் முயற்சிகளும் கைகூடும். தன்வந்திரி பகவானை வழிபடவும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 10-ஆம் தேதிவரை நீசமாக இருக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் உங்கள் காரியங்களில் தேக்கமும் தடையும் காணப்படல

மிதுன ராசிநாதன் புதன் 10-ஆம் தேதிவரை நீசமாக இருக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் உங்கள் காரியங்களில் தேக்கமும் தடையும் காணப்படலாம். மேஷத்திற்கு புதன் மாறியபிறகு காரிய வெற்றி உண்டாகும். 5-ஆம் தேதிமுதல் மகர குரு கும்ப ராசிக்கு அதிசாரமாக மாறி ராசியைப் பார்க்கிறார். உங்கள் திறமை, செயல்பாடு எல்லாம் சிறப்பாக மாறும். மனதில் தெளிவும் நிம்மதியும் ஏற்படும். முடியாத காரியங்களை முனைந்து செயல்பட்டு முடிக்கலாம். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். பொதுவாழ்வில் புகழும் பெருமையும் ஏற்படும். சோர்வு விலகி புத்துணர்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சில நல்ல சம்பவங்கள் நிகழும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களுடன் அனுசரித் துச் செல்வது அவசியம். தொழில் பிரச்சினைகள் விலகும். தேங்கிக் கிடந்த பணிகள் விரைவில் முடிவுக்கு வரும். பொருளாதாரப் பற்றாக்குறை விலகும். வெளியூர் பயணம்மூலம் நன்மைகள் ஏற்படும். போட்டி, பொறாமை ஒருபுறம் காணப்பட்டாலும், அவற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனும் ஆற்றலும் உண்டாகும். தனியார்துறை அலுவலர்கள் மேலிடத்தின் பாராட்டைப் பெறலாம்.

கடகம்

கடக ராசிக்கு 11-க்குடைய சுக்கிரன் 8-ல் உச்சமாக இருப்பதால், தவிர்க்கமுடியாத திடீர்ச்செலவுகள் ஏற்படலாம். தொழில்துறையில் சில நல்ல மாற்றங் கள் உண்டாகும். 11-ஆம் தேதிமுதல் 10-ஆமிடத்திற்கு சுக்கிரன் மாறுகிறார். கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாக நிறைவேற்றி மேலிடத்தைத் திருப்திப்படுத்தலாம்; பாராட்டும் பெறலாம். அது உங்களுடன் பணிபுரியும் சிலருக்கு பொறாமையாகவும் அமையலாம். குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் ஏற்படும். அவ்வப்போது சிற்சில வாக்குவாதங்கள், பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிக்காது. இளைய சகோதரர்வகையில் நல்லதொரு தகவல் கிடைக்கும். உதவி களும் கிட்டும். திருமணமாகாத இளைஞர் களுக்கும் இளம்பெண்களுக்கும் திருமண வாய்ப்பு கூடிவரும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். இன்னல் களும் இடைஞ்சல்களும் மாறி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள்வகையில் நன்மை களும் நன்மதிப்பும் உருவாகும். நின்றுபோன கட்டட வேலைகள் விறுவிறுப்பாக நடந்துமுடியும். குலதெய்வ வழிபாடுகளும் தடைப்படாமல் நிகழும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் 14-ஆம் தேதிமுதல் 9-ல் உச்சமாக மாறுகிறார். ராசிநாதன் திரிகோணம் ஏறுவது மிகச்சிறப்பு. தொழில், பொருளாதாரம் இரண்டிலும் பிரச்சினைகளுக்கு இடமில்லை. நீங்கள் ஈடுபடும் காரியங்களிலும், செய்யும் முயற்சிகளிலும் வெற்றி உண்டு. தோல்விக்கு இடமில்லை. சில நேரங்களில் உங்கள் வெற்றி உங்களுக்கு மயக்கத்தையும் போதையையும் ஊட்டிவிடும். அதனால் மற்றவர்களை மதிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும். அந்த எண்ணத்தை வளரவிடா மல் பார்த்துக்கொள்வது நல்லது. வெளிவட் டாரப் பழக்கவழக்கம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித்தரும். சமூக அந்தஸ்து உயரும். 5-ஆம் தேதிமுதல் குரு அதிசாரமாக கும்பத்திற்கு மாறி ராசியைப் பார்க்கிறார். எனவே, பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். அதனால் நன்மையும் உண்டாகும். திறமையாக செயல்படும் யுக்திகளைக் கையாள்வீர்கள். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். அது நன்மையாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கை மிக அவசியம். கவனமுடன் செயல்படவும்.

கன்னி

ராசிநாதன் புதன் பத்தாம் தேதிவரை நீசமாக நின்றாலும் ராசியைப் பார்க்கிறார். ஆதலால் உங்கள் வேலை, செயல்பாடு, முயற்சி ஆகியவற்றில் பிரச்சினை ஏற்படாது. ஆனால் நிதானமாகவும் மந்தமாகவும்- அதாவது முயல் வேகத்தில் இல்லாமல் ஆமை வேகத்தில் நகரும். புதன் 8-ல் மறைந்தாலும், (10-ஆம் தேதிக்குப்பிறகு) மறைவு தோஷம் பாதிக்காது. 14-ஆம் தேதிமுதல் மிதுனத் திற்கு மாறும் செவ்வாய்க்கும் புதனுக்கும் பரிவர்த்தனை யோகம் ஏற்படுகிறது. சில குறுக்கீடுகளும், போட்டி பொறாமைகளும், எதிர்ப்பு இடையூறுகளும் இருந்தாலும், அவை சாலையின் குறுக்கே அமைந்த வேகத்தடைகள் போன்றவைதானே தவிர பயணத் தடையல்ல; முறிவல்ல. உங்கள் நம்பிக்கை, முயற்சியைவிட தெய்வபக்தி துணைக்கு வரும். நீண்டகாலமாக நிறைவேறா மலிருந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிவிடலாம். 5-ல் இருக்கும் மகர குரு 6-ல் அதிசாரமாக மாறுவது ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சூரியன் 8-ல் உச்சம்பெறுவதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதற்கேற்ப திடீர் அதிர்ஷ்டமும் ஏற்பட வாய்ப்புண்டு.

துலாம்

துலா ராசிநாதன் 11-ஆம் தேதிமுதல் மேஷத்திற்கு மாறி ராசியைப் பார்க்கிறார். சுறுசுறுப்பும் உற்சாகமும் நிறைந்து காணப்படும். வழக்கு விவகாரங்கள், வியாஜ்ஜியங்கள் ஆகியவற்றில் சாதகமான பலன்கள் ஏற்படும். உள்ளபடி சொன்னால் வெற்றி வாய்ப்பு காத்திருக்கிறது. அதேசமயம் செலவு ஆவதையும் தவிர்க்கமுடியாது. 5-ஆம் தேதிமுதல் மகர குரு கும்பத்திற்கு அதிசாரமாக மாறி ராசியைப் பார்ப்பது மேலுமொரு சிறப்பு. உடல்நலக்குறைவு ஏற்படாது. கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்கள் பொருட்டு ஒருசில செலவினங்களை ஏற்கவேண்டி யிருக்கும். பெரியோரின் ஆதரவும் ஒத்து ழைப்பும் உண்டு. சுய கௌரவம், மரியாதை காப்பாற்றப்படும். பணவிஷயமாக யாருக்கும் ஜாமின் பொறுப்பேற்க வேண்டாம். பிள்ளைகளால் நன்மையும் பாராட்டும் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் பணவரவு நன்றாக இருக்கும். கடன்கள் அடைபடும் வழிபிறக்கும். வீடு, நிலம் போன்றவற்றில் இருந்துவந்த பிரச்சினைகள் விலகி சுமுகமான தீர்வு ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் மாத முற்பகுதிவரை 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். எனவே, பணவரவு- பொருள் வரவு நன்றாக இருக்கும். மனமகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. மாதப் பிற்பகுதியில் செவ்வாய் 8-ல் மறைகிறார். சில வீண் செலவுகளை சந்திக்கநேரும். கணவன்- மனைவிக்குள் ஒருசில கருத்து வேறுபாடுகள் தென்படும். சிறுசிறு சலசலப்புகள்தான் அவை. எனவே ஒற்றுமை பாதிக்காது. மனைவிவழி உறவினர்கள்மூலம் சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் சகாயமும் ஆதரவும் உண்டாகும். சில நண்பர்களின் துணைக்கொண்டு தலையாய பிரச்சினைகளைத் தீர்க்கும் சூழ்நிலை உருவாகும். பணிபுரிவோருக்கு எதிர்பார்த்த இடத்திற்கு இடப்பெயர்ச்சியும் பதவி உயர்வும் கிடைக்கும். வங்கிக் கடன்மூலம் வாகனம் வாங்குதல் அல்லது வீடு பழுது பார்க்கும் நிலை ஏற்படலாம். உடல்நலத்தில் சற்று கவனமுடன் இருப்பது அவசியம். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்து சம்பந்தமாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 3-ல் அதிசாரமாக மாறுகிறார். மூன்றாமிடம் தைரியம், வீரியம், சகோதர ஸ்தானமாகும். அதனால் அங்குவரும் குரு உங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவார். ஒரு மனிதனுக்கு முதலில் தேவைப்படுவது தைரியமும் நம்பிக்கையும்தான். தைரியம் புருஷ லட்சணம் என்பார்கள். கணவன்- மனைவிக்குள் பிணக்குகள் நீங்கி இணக்கம் ஏற்படும். திருமணமாகாத ஆண்- பெண்களுக்குத் திருமணம் நடைபெறும். இது 3-ல் மாறிய குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதன் விளைவு. வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படலாம். சிலருக்கு அதிக வேலைச்சுமை காணப்படலாம். தெய்வ அனுகூலமும், தெய்வ பக்தியும், தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் யோகமும் உண்டாகும். தொழில் வகையில் லாபம் ஏற்படும். முன்னேற்றமும் காணப்படும். ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி நடைபெறுகிறது. சிலருக்கு வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். தொழிலில் போட்டிகள் இருந்தாலும் அவற்றை சமாளித்துவிடலாம்.

மகரம்

மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுகிறது. ஜென்ம ராசியிலுள்ள குரு 2-ஆமிடத்திற்கு அதிசாரமாக மாறுகிறார். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். நிம்மதி ஏற்படும். பணவரவு நல்லமுறையில் அமையும். உத்தியோகத்தில் நல்லபெயரைப் பெறுவீர்கள். தங்களுக்கு ஒதுக்கிய பணிகளைச் செவ்வனே செய்து பாராட்டும் நன்மதிப்பும் பெறலாம். மனைவிவழி உறவினர் ஒருவரால் அலைச்சலும் மனக் கஷ்டமும் ஏற்படும். சிலருக்கு தந்தையின் வேலைதொடர்பாக வெளியூர்ப் பயணங்கள் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் மருத்துவச் செலவுகள் வந்து விலகும். வீடு, வாசல் போன்றவற்றில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் முயற்சிகளை ஒத்திவைப்பது நல்லது. நண்பர்கள்மூலமாக ஒருசில முக்கிய பிரமுகர்களின் தொடர்பு ஏற்படும். அதனால் நல்ல மாற்றம் உண்டாகும். ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 12-ல் இருந்த குரு 5-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசிக்கு மாறுகி றார். 9-க்குடைய சுக்கிரன் 2-ல் உச்சம் பெற்று 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துவகையில் உங்களுக்குச் சேரவேண்டிய நியாயமான பங்குகள் வந்துசேரும். எதிலும் ஒரு நியாயமான ஆசை இருப்பது நல்லதல்லவா? உடன்பிறப்பு கள் வகையில் துன்பங்களை அனுபவித்து உங்களிடம் ஆதரவுகேட்டு வரலாம். நீங்களும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லும் சூழ்நிலைகளும் அமையும். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லைதானே! அடிப்படை வாழ்க்கை, வசதி, சௌகரியங்களுக்குக் குறைவு ஏற்படாது. கடின முயற்சிகள் காணப்பட்டாலும் முக்கியமான காரியங்கள் வெற்றிபெறும். வியாபாரம், தொழில்துறையில் போட்டி, பொறாமை களை சமாளித்துவிடலாம். தசா புக்தியை அனுசரித்து சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். அந்நிய இனத்து நண்பர்களின் உதவியும் ஒத்தாசையும் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 5-ஆம் தேதிமுதல் மகரத்திலிருந்து கும்பத்திற்கு மாறுகிறார். விரய ஸ்தானத்தில் வருவதால் அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. 14-ஆம் தேதிமுதல் 6-க்குடைய சூரியன் உச்சம்பெறுகிறார். பொருளாதாரத்தில் தாராள வரவு- செலவு காணப்படும். அந்நியர் பணம் உங்கள் கைகளில் புரளும். தந்தைவழியில் எதிர்பாராத உதவிகள் மற்றும் பணவரவு வருவதற்கான நிலைகள் தென்படும். புனிதத் தலங்களுக்குச் செல்லும் யோகமும் அமையும். கணவன்- மனைவி உறவில் நெருக்கமான சூழ்நிலை உருவாகும். புகழ், கீர்த்தியில் குறைபாட்டுக்கு இடமில்லை. எதிர்பாராத கௌரவப் பதவி உங்களைத்தேடி வரலாம். 2-ல் புதனும் 4-ல் செவ்வாயும் பரிவர்த்தனை யோகமடைவார்கள். சகோதரவழியில் சகாயமும் நன்மையும் உண்டாகும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த அண்ணன்- தம்பிகள் மீண்டும் ஒன்றுசேரும் அமைப்பு உருவாகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.

om010421
இதையும் படியுங்கள்
Subscribe