அறியாமை அகற்றும் ஆனி முழுமதி!

/idhalgal/om/annie-fuller

ஆனிப் பௌர்ணமி- 17-6-2019

பொன்மலை பரிமளம்

னிப் பௌர்ணமி நன்னாளில், வழி காட்டிய குருநாதரிடம் ஆசிபெற்றால் கல்வி, ஞானம் பெருகி வாழ்வில் சிறந்து விளங்கலாம். தகுந்த குருவிடம் உபதேசம் பெறவும், புதிய கல்வி கற்கவும் உகந்த நாள் ஆனிப் பௌர்ணமி என்றும் ஞான நூல்கள் கூறுகின்றன.

full

அந்தக் காலத்தில் குருகுலம் மூலமாகக் கல்வி கற்றார்கள். தற்பொழுது, கல்விக்கூடங்கள் மூலமாக பல ஆசிரியர்களிடம் மாணவ- மாணவி கள் கற்பதால், யாரை குருவாக ஏற்பது என்று தடுமாற்றம் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஆதிகுருவான தட்சிணாமூர்த்தியை இந்நாளில் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் பேறுகள் பெறலாம் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

ஆனிப் பௌர்ணமியன்றுதான் துறவிகள், சந்நியாசிகள், ஆன்மி கப் பெரியவர்கள் சாதுர் மாஸ்ய விரதத்தைத் தொடங்கு கிறார்கள். ஆனிப் பௌர் ணமியில் தொடங்கி கார்த்திகை மாதம் வரை அவர்கள் வெளியூர் களுக்கு ஆன்மிகப் பயணம் செல்லாமல், ஒரே இடத்தில் இருந்து கொண்டு இறைவழி பாடும் உபதேசமும் செய்வார்கள். இது இன்றும்

ஆனிப் பௌர்ணமி- 17-6-2019

பொன்மலை பரிமளம்

னிப் பௌர்ணமி நன்னாளில், வழி காட்டிய குருநாதரிடம் ஆசிபெற்றால் கல்வி, ஞானம் பெருகி வாழ்வில் சிறந்து விளங்கலாம். தகுந்த குருவிடம் உபதேசம் பெறவும், புதிய கல்வி கற்கவும் உகந்த நாள் ஆனிப் பௌர்ணமி என்றும் ஞான நூல்கள் கூறுகின்றன.

full

அந்தக் காலத்தில் குருகுலம் மூலமாகக் கல்வி கற்றார்கள். தற்பொழுது, கல்விக்கூடங்கள் மூலமாக பல ஆசிரியர்களிடம் மாணவ- மாணவி கள் கற்பதால், யாரை குருவாக ஏற்பது என்று தடுமாற்றம் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஆதிகுருவான தட்சிணாமூர்த்தியை இந்நாளில் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் பேறுகள் பெறலாம் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

ஆனிப் பௌர்ணமியன்றுதான் துறவிகள், சந்நியாசிகள், ஆன்மி கப் பெரியவர்கள் சாதுர் மாஸ்ய விரதத்தைத் தொடங்கு கிறார்கள். ஆனிப் பௌர் ணமியில் தொடங்கி கார்த்திகை மாதம் வரை அவர்கள் வெளியூர் களுக்கு ஆன்மிகப் பயணம் செல்லாமல், ஒரே இடத்தில் இருந்து கொண்டு இறைவழி பாடும் உபதேசமும் செய்வார்கள். இது இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

"குரு' என்ற சொல்லில் உள்ள "கு' என்ற எழுத்துக்கு "அறியாமை' என்று பொருள். "ரு' என்ற எழுத்துக்கு "நீக்குபவர்' என்று பொருள். மாணவர்களின் அறியாமையை நீக்கி அறிவைத் தரும் ஆசிரியரை "குரு' என்று போற்றுவர்.

குருவில் இரண்டுவகை உள்ளதாக சாஸ்திரம் கூறுகிறது. உலக வாழ்க்கைக்குத் தேவையான "எண்'களினாலான அறிவை யும், எழுத்தாலான இலக்கியம் மற்றும் அறிவையும் தருபவர் ஒருவகை குருநாதர். உயர்நிலை பொருந்திய மோட்ச உலகை அடையத் தேவையான மெய்ஞ்ஞானத் தைத் தருபவர் அடுத்தவர்.

fullகுருமூலம் உபதேசம் பெற்று, ஞானத் தைப் பெறுவதற்குரிய சுபமான நன்னா ளைத் தெரிவிக்கிறார் திருமூலர். அது... சோதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும், தேள், நண்டு முதலிய ராசிகளும், திங்கள் கிழமைகளும் சிறந்தன. இவற்றின் முதலும் காரணமும் அறியமுடியாது. அதாவது "சோதி' என்பது ஸ்வாதி நட்சத்திரத்தையும், தேள் மற்றும் நண்டு என்பது விருச்சிகம், கடகம் ஆகிய ராசிகளையும் குறிக்கும். இவையே உபதேசத்திற்குரியதாகச் சொல்லப்பட்ட நாட்கள்.

தகுந்த குருவிடம் உபதேசம் பெறு வதற்கு மேலும் சில நாட்கள் உண்டு என்று சாஸ்திரம் கூறுகிறது. கிழமைகளில் வியாழன், திதிகளில் விஜயதசமி ஆகியவை போற்றப்படுகின்றன.

"தகுந்த குருவிடம் உபதேசம் பெறுபவனுக்கு நல்ல குணம், வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை, குருவின் திருவடிகளை நிழல்போல் சிறுபொழுதும் நீங்காதிருத்தல், பர ஞானத்தை சிந்தித்துத் தெளிய உதவும் அறிவு, அற்புதங்களைக் காணப் பெறுதல் ஆகிய அனுபவங்கள் படிப்படியாகத் தோன்றும்' என்கிறார் திருமூலர்.

இந்தக் காலத்தில் தகுந்த குருவைத் தேடி உபதேசம் பெறுவதென்பது சற்றுக் கடினமாக உள்ளது. மேலும் நவீன கல்வியால் சிறந்த கல்வியினைக் கற்க பல கல்விக்கூடங்கள் தோன்றியிருப்பதால், தங்கள் வருங்காலத்திற்குத் தேவையான அவரவர் விருப்பத்திற்குக் கல்வி கற்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே புதிய கல்வி கற்க விரும்புகிறவர்கள் ஆதிகுருவான தட்சிணாமூர்த்தியை வழிபட்டுப் பேறுகள் பெறலாம் என்று கூறப் படுகிறது.

ஆனிப் பௌர்ணமி யன்று பஞ்சபூதத் தலங் களுள் ஏதாவது ஒரு தலத்திற்குச் சென்று, அங்கு எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டுப் பேறுகள் பெறலாம். அந்தத் தலங் களுக்குச் செல்ல இயலாத வர்கள், தங்கள் ஊரிலுள்ள கோவிலுக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை வழி படலாம். வைணவர்கள் பெருமாள் கோவிலில் ஹயக்கிரீவரை தரிசித்துப் பலன் பெறலாம்.

மேலும், "ஆதிமுதல் வன்' என்று போற்றப் படும் விநாயகப் பெருமானை வழிபட்டு வேண்டிக்கொண்டாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம். எழுத்துக்கும், எண்ண ஓட்டத்திற்கும் அதிபதி விநாயகர் என்று வேதநூல்கள் கூறுகின்றன. விநாயகரை முழுமனதுடன் வணங்கி, அவருக்குப் பிடித்தமான தோப்புக்கரணம் போடுவதும், தலையில் குட்டிக்கொள்வதும் நற்பலன் தரும். தலையில் குட்டிக்கொண்டால் சுரப்பிகள் நன்றாகத் தூண்டப்பட்டு, அறிவாற்றல் அதிகமாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும்போது, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து "செல்'கள் தூண்டப்படு கின்றன. இதனால் புரிந்துகொள்ளும் தன்மையும் நினைவாற்றலும் பெருகும் வாய்ப்புள்ளது. இதனை இன்றைய நவீன மருத்துவ நூல்களும் ஆமோதிக்கின்றன.

அதேபோல் கல்வியில் சிறந்து விளங்க, கலைவாணி என்று போற்றப்படும் சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும். சரஸ்வதி தேவியானவள் வாக்கின்தேவி, கலைமகள், நாவரசி என்று போற்றப் படும் தெய்வம். ஆயகலைகள் அறுபத்து நான்கின் உருவமாகத் திகழ்பவள்.

எனவே, சரஸ்வதி தேவியையும் ஆனிப் பௌர்ணமி தினத்தில் வழிபட சகல கல்வி, கலைகளிலும் சிறந்து விளங்கலாம்.

faf

இந்த வருடம் 17-6-2019 திங்கட் கிழமை பௌர்ணமி நன்னாள். திங்கட்கிழமையில் வரும் பௌர்ணமி நாள் சந்திரனுக்கேற்ற தினமாகும். சந்திர தசை நடப்பவர்கள், ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரக்காரர்கள், கடக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் துர்க்கையை வழிபட யோகங்கள் விருத்தியடையும். நினைத்த நல்ல காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

எனவே ஆனிப் பௌர்ணமியன்று மேற்குறிப்பிட்ட தெய்வங்களை வழி பட்டு வாழ்வில் நலம் காண்போம்.

om010619
இதையும் படியுங்கள்
Subscribe