அஷ்ட ஐஸ்வர்யங்கள் வழங்கும் ஆஞ்சனேயர்!

/idhalgal/om/anjaanayar-offering-ashta-aishwarya

ஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கும் ஆஞ்சனேயர், திருநெல்வேலியில் கோவில் கொண்டுள்ளார். இங்கு நலம் பல தருவதால் "கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சனேயர்' என்று போற்றப்படுகிறார்.

ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, சீதாதேவியை இராவணன் இலங்கைக்குக் கடத்திச் சென்றான். சீதாதேவி இருக்கும் இடத்தைக் கண்டறிய ஆஞ்சனேயர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவ்வாறு தென்திசை நோக்கிச்சென்ற ஆஞ்சனேயர் சில நிமிடங்கள் தாமிரபரணி நதிக்கரையில் தங்கி, மாலை நேர வழிபாட்டினை மேற்கொண்டபின் இலங்கை சென்றார் என்கிறது புராணம்.

anjenyarஆஞ்சனேயர், தாமிரபரணி நதிக்கரையில் தங்கிய இடத்தில் ஒரு ஆலயம் நிர்மாணித்தார்கள். அந்தக் கோவில் மூலஸ்தானத்தில் ஸ்ரீஆஞ்சனேயரும், சர்வரோகங்களைப் போக்கும் ரோகஹரவிநாயகரும் எழுந்தருளியுள்ளனர். இங்கு விநாயகருடன் காட்சிதரும் ஆஞ்சனேயரின் உயரம் சுமார் நான்கு அடிக்கும் குறைவாகும். மேற்குதிசை நோக்கி காட்சி தரும் ஸ்ரீஆஞ்சனேயரின் வலதுகரம் வரதஹஸ்தமாகவும், கை மத்

ஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கும் ஆஞ்சனேயர், திருநெல்வேலியில் கோவில் கொண்டுள்ளார். இங்கு நலம் பல தருவதால் "கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சனேயர்' என்று போற்றப்படுகிறார்.

ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, சீதாதேவியை இராவணன் இலங்கைக்குக் கடத்திச் சென்றான். சீதாதேவி இருக்கும் இடத்தைக் கண்டறிய ஆஞ்சனேயர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவ்வாறு தென்திசை நோக்கிச்சென்ற ஆஞ்சனேயர் சில நிமிடங்கள் தாமிரபரணி நதிக்கரையில் தங்கி, மாலை நேர வழிபாட்டினை மேற்கொண்டபின் இலங்கை சென்றார் என்கிறது புராணம்.

anjenyarஆஞ்சனேயர், தாமிரபரணி நதிக்கரையில் தங்கிய இடத்தில் ஒரு ஆலயம் நிர்மாணித்தார்கள். அந்தக் கோவில் மூலஸ்தானத்தில் ஸ்ரீஆஞ்சனேயரும், சர்வரோகங்களைப் போக்கும் ரோகஹரவிநாயகரும் எழுந்தருளியுள்ளனர். இங்கு விநாயகருடன் காட்சிதரும் ஆஞ்சனேயரின் உயரம் சுமார் நான்கு அடிக்கும் குறைவாகும். மேற்குதிசை நோக்கி காட்சி தரும் ஸ்ரீஆஞ்சனேயரின் வலதுகரம் வரதஹஸ்தமாகவும், கை மத்தியில் மகாலட்சுமி உருவத்துடனும் காட்சி தருகிறார். இடதுகையில் கதாயுதம் தாங்கிய இவர், தெற்குதிசை நோக்கிய பாதங்களுடன் திகழ்கிறார். மேலும் இவரது வால்நுனியில் காணப்படும் மணி அரிய காட்சியாகப் போற்றப்படுவதுடன், வடக்கு நோக்கிச் சென்று, சிரசின்மேல் வைத்துள்ளது சிறப்பாகும். இவரது முழுத்தோற்றமும் ருத்ராம்சம் கொண்டு திகழ்கிறது. இவரது கண்கள் நம்முடன் பேசுவதுபோல இருக்கும். இவர் எட்டு அம்சங்கள் கொண்டவர் என்கின்றன ஆகமங்கள்.

விநாயகருடன் இணைந்து ஒரே சந்நிதியில் ஸ்ரீஆஞ்சனேயர் அருள்புரிவதால் எந்த நல்ல காரியங்களும் தடங்கலின்றி வெற்றிபெற்றே தீரும் என்பது ஐதீகம். இது முதல் அம்சம்.

ஆஞ்சனேயரின் திருமுகம் நோக்கியுள்ள மேற்கு திசைப்பகுதியில்தான் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. ராமாயண காலத்தில் இராவணன் படை வீரர்களுக்கும், ராம-லட்சுமணன் மற்றும் வானரப்படைக்கும் நடந்த போரில், வானரங்கள் பலத்த காயங்களுடன் வீழ்ந்தன. அந்த வானர வீரர்களைக் காக்கும் பொருட்டு ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையையே தூக்கிவரும்போது, அந்த மலையிலிருந்து விழுந்த சிறுமண்துகள்கள்தான் மேற்குத் தொடர்ச்சி மலையாக உருவெடுத்தது. அதில் அரிய மூலிகைகள் வளர்ந்திருக்கின்றன. எனவே, மேற்குப் பார்க்கும் ஆஞ்சனேயரின் முகம் பக்தர்களின் நோய் நொடிகளைப் போக்கும் சக்தி கொண்டதாக விளங்குகிறது. இரண்டாவது அம்சம் இது.

பொதுவாக பல கோவில்களில் ஆஞ்சனேயரின் கைகள் அஞ்சலி செலுத்தும் கோலத்தில் காட்சியளிக்கும். ஆனால் இத்திருக்கோவிலில் ஆஞ்சனேயரின் வலக்கரம் சகல வரங்களை அளிக்கும் வரதஹஸ்தமாக விளங்குகிறது. அதில் மகாலட்சுமியின் திருவுருவமும் அமைந்துள்ளதால், இந்த ஆஞ்சனேயரை வழிபட செல்வ வளம் பெருகும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இது மூன்றாம் அம்சம்.

இடக்கையில் கதாயுதம் ஏந்தியுள்ளார். இந்த கதாயுதம் நீதியுடன் விளங்கிய விபீஷண ஆழ்வாரின் அம்சம் என்று போற்றப்படுகிறது. இது தீய சக்திகளை அழிப்பதுடன், மற்றவர்கள் தரும் துன்பங்களையும் அழிக்கும் சக்தி கொண்டு திகழ்கிறது. இது நான்காவது அம்சம்.

இவரது திருப்பாதங்கள் எமனிருக்கும் தெற்கு திசை நோக்கியுள்ளதால், இவரை தரிசிக்கும் பக்தர்களுக்கு எமபயம் இல்லை. எதிர்பாராத விபத்துகள், துர்மரணங்கள் ஆகியவற்றை இவரது "பாத தரிசனம்' தடுத்து நிறுத்துகிறது. இது ஐந்தாவது அம்சம்.

இவரது நீண்ட வால் வடக்கு நோக்கிச்சென்று சிரசின்மேல் வளைந்து காட்சி தருகிறது. வால் கீழ்நோக்கி இருந்தால் அது அமைதியின் அடையாளம். ஆனால் இங்கு மேல்நோக்கி இருப்பதால் அது மட்டற்ற மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதாக வேதநூல்கள் கூறுகின்றன. மேலும், ஆஞ்சனேயரின் வால் பகுதியில்தான் நவகிரகங்கள் அடங்கியுள்ளன. அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் ஆஞ்சனேயர் வைத்திருப்பதால், இவரை தரிசிக்க நவகிரக தோஷங்கள் விலகும். குறிப்பாக சனி பகவானின் தொல்லைகள் இருக்காது. இது ஆறாவது அம்சம்.

சாஸ்திரங்கள் ஆஞ்சனேயரை சிவாம்சம் என்று கூறுகின்றன. இந்த ஆஞ்சனேயரை தரிசித்தபின் கண்மூடி சில நொடிகள் தியானித்தால் ஆஞ்சனேயரின் திருமேனியில் சிவலிங்க தரிசனத்தைக் காணலாம் என்று ஆன்மிகச் செல்வர்கள் கூறுகிறார்கள். இது ஏழாவது அம்சம்.

மேலும், இவரது கண்களின் ஒளி "நான் இருக்கும்போது உனக்கு என்ன பயம்' என்று சொல்வதுபோல் விளங்குகிறது. இவரை எங்கிருந்து பார்த்து வழிபட்டாலும், இவர் நம்மைப் பார்ப்பதுபோல் தெரியும். இவரது பார்வையிலேயே நமது பாவங்கள் அழியும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. இது எட்டாவது அம்சம்.

அதனால்தான் இந்த ஆஞ்சனேயரை வழிபட அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கப்பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதன்காரணமாகவே இந்த ஆஞ்சனேயர் "கெட்வெல் (நலம்பெறுக) ஆஞ்சனேயர்' என்று போற்றப்படுகிறார்.

இத்திருக்கோவில் அருகேயுள்ள மருத்துவமனையின் பெயர் "கெட்வெல்'. அந்த மருத்துவமனைக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe