1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்களின் அதிபர் சூரியன் ஆவார். இந்த எண்காரர்களுக்கு, 1, 73-ஆம் உச்ச எண்கள் ஆகும். உங்கள் எண்ணின் அதிபதி, இஷ்டங்களை, கஷ்டமில்லாமல் நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையில் உள்ளார். இந்த மாதம் பணவரவை பொறுத்தவரை ஒன்று தடைப்பட்டு, தாமதமாக வரும். அல்லது பின்வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வந்துசேரும். எது எப்படியோ பணவரவு உண்டு. உங்களுடைய தன்னம்பிக்கை மிகும். உங்கள் தொழிலில் வரும் இடைஞ்சல்களை, ஜஸ்ட்லைக் தட் தள்ளி விடுவீர்கள். இதற்கு உங்களின் மன தைரியமும், மன உறுதியும் உறுதிபட கஷ்டங்களை கடக்கச் செய்யும். இந்த மாதம் எதிர்பாராத இடத்திலிருந்து, கொஞ்சமும் நினைத்தறியா இம்சைகள் ஓடிவந்து, உங்கள் பின்னாடி வெடுக்கென்று கிள்ளிவிட்டுவிட்டு போனமாதிரி, திடீர் துன்பங்கள் வரும். உங்கள் கைபேசி வழியே பணம் சம்பாதிக்கும் வழிவகை இருப்பின், அது இந்த மாதம் நல்ல லாபம் கொண்டுவரும். உங்கள் இளைய சகோதரி, வேலை கிடைக்க அல்லது பதவி உயர்வு யோகம் பெறுவார். கடன்மூலம் மனை வாங்குவீர்கள். சிலர் வாகனமும் பெறக்கூடும். உங்களில் சிலருக்கு அறிவு, புத்தி, யோசனை சார்ந்த தொழில் அமையும். பங்கு வர்த்தகம் பலன் தரும். சினிமா கலைஞர்கள் நல்வாய்ப்பு, அதிக லாபத்தோடு ஒரு கெட்ட பெயரும் சேர்த்து பெறுவர். சற்று கலப்பு கல்யாணம் நடக்கும். தொழில் வேலை செய்யும் இடத்தில் எதிரிகளால் மறைமுக இம்சை ஏற்படும். உங்களுடன் நன்றாக நட்புமாதிரி பழகிக்கொண்டிருந்தவர்கள்கூட சில சங்கடம் உண்டாக்குவர். அரசியல்வாதிகள் தங்களின் மந்திரி பதவி எனும் குறிக்கோளை நிறைவேற்றுவர். உங்களின் மாமனாரும்- மாமியாரும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் பெற போகிறார்கள். உங்கள் கால் அல்லது பின்புறத்தில் வலி உண்டாகக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: பேச்சியம்மன், முனிஸ்வரன் போன்று சற்று முரட்டு தெய்வங்களை வணங்குவது நல்லது. வயதான முஸ்லீம் பெரியவருக்கு, மருந்து வாங்க அல்லது கடன் குறைய உதவுங்கள். அருகிலுள்ள துர்க்கையை விளக்கேற்றி வணங்கவும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் அதிபர் சந்திரன் ஆவார். 2, 38, 74 இவை உங்களின் உச்ச எண்கள். இந்த மாதம் உங்களின் லட்சிய வேலை கிடைக்கும். இவ்வளவு நாளாக ஏங்கிக்கொண்டிருந்த வேலை, உள்ளூர் அல்லது வெளிநாடு அல்லது வெளியூரில் கிடைக்கும். இந்த வேலையில் நல்ல சம்பள ஒப்பந்தம் பெறப்படும். அதில் இணைவதற்கு, அதிக அலைச்சலும், அதிக செலவும் ஏற்படும். இந்த மாதம் சற்று செலவுள்ளதாக இருக்கும். அது பணியாளர்கள் அதிக சம்பளம் கேட்பதால் இருக்கும். உங்கள் இளைய சகோதரனால் இருக்கலாம். புது கைபேசி வாங்குவதால் அமையும். உங்களின் சில புதிய முயற்சிகள், பல செலவைக் கொண்டும் அரசு வரி சம்பந்தமாக செலவு இருக்கும். உங்கள் தாயார் அல்லது மூத்த சகோதரிமூலம் விரயமுண்டு. உங்களில் சிலர் அடுக்குமாடி வீடு வாங்க முதலீடு செய்வீர்கள். சிலருக்கு, பதவி உயர்வு, இடமாற்றம் தரும். அரசியல்வாதிகள் தங்கள் பிறந்த இடம் சம்பந்தமாக நிறைய செலவு செய்யவேண்டிய இருக்கும். சமையலில் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. பங்கு வர்த்தகம் எதிர்பாராத பலன் கொடுக்கும். வாரிசுகளின் தொழில் நன்றாக வரும். கலைத்தொழில், விளையாட்டு இவை சார்ந்தோர் அலைச்சலும் பயனும் பலனும் ஒருங்கே பெறுவர். சிலர் தடை, தாமதத்தைச் சந்திப்பர். உ
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்களின் அதிபர் சூரியன் ஆவார். இந்த எண்காரர்களுக்கு, 1, 73-ஆம் உச்ச எண்கள் ஆகும். உங்கள் எண்ணின் அதிபதி, இஷ்டங்களை, கஷ்டமில்லாமல் நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையில் உள்ளார். இந்த மாதம் பணவரவை பொறுத்தவரை ஒன்று தடைப்பட்டு, தாமதமாக வரும். அல்லது பின்வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வந்துசேரும். எது எப்படியோ பணவரவு உண்டு. உங்களுடைய தன்னம்பிக்கை மிகும். உங்கள் தொழிலில் வரும் இடைஞ்சல்களை, ஜஸ்ட்லைக் தட் தள்ளி விடுவீர்கள். இதற்கு உங்களின் மன தைரியமும், மன உறுதியும் உறுதிபட கஷ்டங்களை கடக்கச் செய்யும். இந்த மாதம் எதிர்பாராத இடத்திலிருந்து, கொஞ்சமும் நினைத்தறியா இம்சைகள் ஓடிவந்து, உங்கள் பின்னாடி வெடுக்கென்று கிள்ளிவிட்டுவிட்டு போனமாதிரி, திடீர் துன்பங்கள் வரும். உங்கள் கைபேசி வழியே பணம் சம்பாதிக்கும் வழிவகை இருப்பின், அது இந்த மாதம் நல்ல லாபம் கொண்டுவரும். உங்கள் இளைய சகோதரி, வேலை கிடைக்க அல்லது பதவி உயர்வு யோகம் பெறுவார். கடன்மூலம் மனை வாங்குவீர்கள். சிலர் வாகனமும் பெறக்கூடும். உங்களில் சிலருக்கு அறிவு, புத்தி, யோசனை சார்ந்த தொழில் அமையும். பங்கு வர்த்தகம் பலன் தரும். சினிமா கலைஞர்கள் நல்வாய்ப்பு, அதிக லாபத்தோடு ஒரு கெட்ட பெயரும் சேர்த்து பெறுவர். சற்று கலப்பு கல்யாணம் நடக்கும். தொழில் வேலை செய்யும் இடத்தில் எதிரிகளால் மறைமுக இம்சை ஏற்படும். உங்களுடன் நன்றாக நட்புமாதிரி பழகிக்கொண்டிருந்தவர்கள்கூட சில சங்கடம் உண்டாக்குவர். அரசியல்வாதிகள் தங்களின் மந்திரி பதவி எனும் குறிக்கோளை நிறைவேற்றுவர். உங்களின் மாமனாரும்- மாமியாரும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் பெற போகிறார்கள். உங்கள் கால் அல்லது பின்புறத்தில் வலி உண்டாகக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: பேச்சியம்மன், முனிஸ்வரன் போன்று சற்று முரட்டு தெய்வங்களை வணங்குவது நல்லது. வயதான முஸ்லீம் பெரியவருக்கு, மருந்து வாங்க அல்லது கடன் குறைய உதவுங்கள். அருகிலுள்ள துர்க்கையை விளக்கேற்றி வணங்கவும்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் அதிபர் சந்திரன் ஆவார். 2, 38, 74 இவை உங்களின் உச்ச எண்கள். இந்த மாதம் உங்களின் லட்சிய வேலை கிடைக்கும். இவ்வளவு நாளாக ஏங்கிக்கொண்டிருந்த வேலை, உள்ளூர் அல்லது வெளிநாடு அல்லது வெளியூரில் கிடைக்கும். இந்த வேலையில் நல்ல சம்பள ஒப்பந்தம் பெறப்படும். அதில் இணைவதற்கு, அதிக அலைச்சலும், அதிக செலவும் ஏற்படும். இந்த மாதம் சற்று செலவுள்ளதாக இருக்கும். அது பணியாளர்கள் அதிக சம்பளம் கேட்பதால் இருக்கும். உங்கள் இளைய சகோதரனால் இருக்கலாம். புது கைபேசி வாங்குவதால் அமையும். உங்களின் சில புதிய முயற்சிகள், பல செலவைக் கொண்டும் அரசு வரி சம்பந்தமாக செலவு இருக்கும். உங்கள் தாயார் அல்லது மூத்த சகோதரிமூலம் விரயமுண்டு. உங்களில் சிலர் அடுக்குமாடி வீடு வாங்க முதலீடு செய்வீர்கள். சிலருக்கு, பதவி உயர்வு, இடமாற்றம் தரும். அரசியல்வாதிகள் தங்கள் பிறந்த இடம் சம்பந்தமாக நிறைய செலவு செய்யவேண்டிய இருக்கும். சமையலில் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. பங்கு வர்த்தகம் எதிர்பாராத பலன் கொடுக்கும். வாரிசுகளின் தொழில் நன்றாக வரும். கலைத்தொழில், விளையாட்டு இவை சார்ந்தோர் அலைச்சலும் பயனும் பலனும் ஒருங்கே பெறுவர். சிலர் தடை, தாமதத்தைச் சந்திப்பர். உஷ்ணத்தால், தலையில் நீர் பிடித்து இம்சை தரும். தம்பதிகளுக்குள் மறைமுக நபர் தூண்டுதலால், மனக்கசப்பு ஏற்படும். திருமணம் சற்று கலப்பாக அமையும். தொழில் தொடங்க ஆரம்பிக்கும்போது, சற்று விரும்பத்தகாத தடையை சந்திப்பீர்கள். உங்களில் சிலர் வீடு மாறுவீர்கள். உங்கள் மாமனார் வேறிடம் செல்வார். உங்கள் தந்தை, ஒரு முஸ்லீம் நபருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: பைரவரை வணங்குவது நன்று. உங்கள் தந்தை பெயருக்கு அர்ச்சனை செய்யவும். அடிப்பட்ட இஸ்லாமிய தம்பதிக்கு உதவவும். துர்க்கைக்கு அபிஷேக திரவம் வாங்கிக்கொடுக்கவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் அதிபர் குரு ஆவார். உங்களின் உச்ச எண் 30 ஆகும். இந்த மாதம் வேலை கிடைக்கும். ஆயினும் கிடைக்கும் அந்த வேலை, மனதிற்கு இணக்கமாக இல்லாமல், ஏனோ நெருடலாக அமையும். இந்த மாதம் பாத்ரூம் செல்லும்போது, பத்திரமாக இருக்கவும். இல்லையெனில் வழுக்கி விழ வாய்ப்புள்ளது. உங்கள் தாயாரை மிக கவனமாக பார்த்துக்கொள்ளவும். வெளிநாட்டிலிருந்து வரும் பணவரவு குறித்த தரவுகள் கைபேசியில் பதிவாகும். உங்கள் இளைய சகோதரின் வெளிநாட்டு கல்வி விஷயமான தகவல் கிடைக்கும். பிற மாநில பணியாளர் வேலை செய்ய கிடைப்பார். இந்த மாதம், புதுமையான ஒரு முயற்சியில் ஈடுபடுவீர்கள். இந்த மாதம் வீடு, தோட்ட, வாகன கடன் வாங்கிவிடுங்கள். ஏனெனில் இவ்வகையில் கடன் வாங்காவிடில், மருத்துவ செலவு செய்யும் சூழ்நிலை வந்துவிடும். திருமணம் நடக்கும் வாய்ப்புண்டு. வரும் வரன் தனியார் அல்லது வெளிநாட்டில் தகவல், தரவு, வெகுஜன தொடர்பு துறையில் வேலை செய்வார். இந்த எண்ணுள்ள குழந்தைகளின் தந்தை அரசு பணிபுரிய வாய்ப்புண்டு. அரசு பணியில் இருப்பவர்கள் பணி உயர்வுபெறுவர். தம்பதிகளுக்குள் சில பிணக்குகள் ஏற்படும். தொழிற்சாலை நடத்துபவர்கள், உங்கள் ஆலையில் சாக்கடை அடைப்பை சரி செய்யும்போது, சற்று கவனமாக இருங்கள். அரசு அதிகாரிகள்மூலம் இக்கட்டு வரவாய்ப்புள்ளது. சினிமா, டி.வி., கலைஞர்கள் கிசுகிசு வம்பு செய்திமூலம் மிக பாதிப்படைவார். அரசியல்வாதிகள் தங்களின் சக நட்பாளர்களிடம் மன வேறுபாடு கொள்ளும் நிலை உண்டு. உங்கள் மாமியார் உங்கள்மீது சந்தேக கணைகளை வீசுவார்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: சரபேஸ்வரரை வணங்கவும். அருகிலுள்ள துர்க்கை சந்நிதிக்கு, அபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வாங்கிக்கொடுங்கள். இஸ்லாமிய பெரியவரின் கைபேசி பழுதை நீக்க உதவுங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் அதிபதி ராகு ஆவார். உங்களின் உச்ச எண் 67 ஆகும். நல்ல காலத்திலேயே பேச்சில் குசும்பும் நக்கலும் இருக்கும். இந்த மாதம் வார்த்தைகளில் அனல் பறக்கும். இதற்கு காரணம் உங்கள் நண்பர்போல் நடிக்கும் எதிராளிகளே ஆவர். இந்த மாதம் உங்கள் தொழிலில் ஒரு முன்னேற்றத்துக்கான முன்னெடுப்பு முயற்சியில் இறங்குவீர்கள். இதற்கான யோசனை அதிகமாகும். யோசனை நிறைவேற அலைச்சல் அதிகரிக்கும். அதிக
அலைச்சல் சற்று உடல் தளர்வை தரும். உஷ்ண வியாதிகளின் தாக்கம் இருக்கும். உங்களின் சிலரின் வாழ்க்கைத் துணைக்கு, அரசு வீடு கட்டும் துறையில் பணி கிடைக்கும். சிலர் அரசு சார்ந்தவகையில் வீடு வாங்குவீர்கள். அதற்கு கடனும் கிடைக்கும். உங்கள் இளைய சகோதரி, ஏதேனும் வில்லங்கத்தை இழுத்து வருவார். உங்கள் தந்தை அல்லது அவரது மனை வயல்மூலம் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. உங்கள் தொழிலில் கைபேசியின் தகவல் பரிமாற்றம் அதிகம் இடம்பெறும். வெளிநாடு சம்பந்தமான வரவும், செலவும் உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கவும் இஸ்லாமிய முதியவருக்கு, போக்குவரத்து செலவுக்கு உதவவும். அருகிலுள்ள துர்க்கையை எலுமிச்சம் பழம் கொண்டு வணங்கவும்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகர் புதன் ஆவார். உங்களின் உச்ச எண் 50 ஆகும். இந்த மாதம் நடக்கும் உங்கள் திருமணத்தில், உங்கள் பெற்றோர் முழு மனதாக கலந்துகொண்டு ஆசீர்வாதம் செய்வார்கள். அது காதல் கலப்பு திருமணமாக இருந்தாலும்கூட பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் முதலீடு உண்டு. தொழிலின் வருமானத்துக்குரிய வழிகளை தேடி அமைத்துக்கொள்வீர்கள். அரசு சார்ந்த வெளிநாட்டு பயணம் அமையும். உங்கள் இளைய சகோதரன்மூலம் இன்னல் ஏற்படும். உங்கள் பணியாளர் சில பொருட்களை நஷ்டமடையச் செய்வர். கைபேசி தகவல் காலை வாரிவிடும். வாரிசுகளுடன் மனப்பிணக்கு ஏற்படும். வயிற்றில் கிருமித் தொல்லையால் நோய் ஏற்படும். இந்த மாதம் எப்போதோ கைதவறி காணாமல் போன பொருள், இப்போது கண்ணில் படும். வெளிநாட்டு வேலைக்கு முயன்று கொண்டிருந்தவர்கள் பண்ட மாற்று முறையில் வேலைக்கு செல்வர். அதாவது வேறு ஒருவருக்கு என நியமிக்கப்பட்ட, வேலைக்கு, நீங்கள் சென்றுவரும் சூழ்நிலை அமையும். இந்த மாதம் உங்கள் கௌரவம், புகழ், மரியாதை இவற்றில் ஒருபடி முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிகழ்வும், பணவரவும் ஒருங்கே கிடைக்கும். தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் உடையவர்கள். அது கோடீஸ்வர தொழிலோ அல்லது இட்லிக்கடை வைக்கும் தொழிலோ இந்த மாதம் ஆரம்பித்துவிடுங்கள். தர்மகர்மாதிபதி யோகமும், முதலீட்டு காரகமும் இணைந்து நிற்கிறார்கள். எளிதாக விஷயம் நடக்கும். கலைஞர்கள் வேறு ஒருவருக்கு பதிலாக, இவர்களை நடிக்க அழைத்து பணி தருவர். இந்த திடீர் வரவு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அழைத்துவரும். அரசியல்வாதிகள் சற்று அலைச்சலும், செலவும் செய்யவேண்டியிருக்கும். எனினும் இது இவர்களின் இஷ்ட செலவாக அமையும். உங்கள் மாமியாருக்கு ஒரு யோகமும் சுப செலவும் உண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளையும் கருடனையும் வணங்கவும். அருகிலுள்ள துர்க்கையை தாம்பூலமும் குங்குமும்கொண்டு வழிபடவும். இஸ்லாமிய தம்பதிகளின தேவைக் கேட்டு உதவுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் அதிபதி சுக்கிரன் ஆவார். 24, 60, 96 இவை உங்களின் உச்ச எண்கள் ஆகும். இந்த மாதம் உங்களுக்கு பிறர் செய்யும் தவறினால் ஒரு யோக நிகழ்வு கிடைக்கும். அலைபேசியில், வேறு நம்பருக்கு அனுப்ப வேண்டிய பணம், உங்கள் நம்பருக்கு வந்துவிடும். அடடா அடிச்சதுடா பிரைஸ் என குதூகலமாகி, உடனே செலவழித்து விடுவீர்கள். கல்யாண பேச்சுக்கள் வேகமெடுக்கும். உங்கள் முயற்சி ஒன்று தோல்வியில்தான் முடியும் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்க அது வெற்றியை தேடி கொணரும். உங்கள் பணியாளர், இளைய சகோதரம் செய்யும் சொதப்பலான விஷயங்கள் நன்மையே தரும். வேலை விஷயமாக நீங்கள் கொண்டிருந்த கனவு நனவாகும். சிலரின் வாரிசுகள் வெளிநாட்டு வேலைக்கு செல்வர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதில் இடமாற்றம் உண்டு. இந்த மாதம் காதல் வராது என முடிவில் இருப்பவர்களுக்கும் காதல் ஓடி வந்து அமையும். இந்த காதல் வீட்டுக்கு அருகிலோ, வேலை செய்யும் இடத்திலோ, சற்று மத கலப்பாக அமையும். உங்கள் மாமனார் அதிக இனிப்பை சாப்பிட்டு, பின் அனைவருக்கும் அவதியைக் கொடுப்பார். கர்ப்பிணிகள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். கலைஞர்கள் வேறு மொழி படத்தில் நடிக்க வாய்ப்பு வரும். அதில் கொஞ்சம் தடுமாறினாலும் சமாளித்துவிடுவர். அரசியல்வாதிகள் நிறைய ஆன்மிக பயணம் செல்வர். சிலர் இரகசிய வைத்திய சாலைக்கும் செல்வர். இந்த மாதம் உங்களுக்கு ஏற்படும் இம்சை விஷயங்கள், நஷ்டங்கள் அதிர்ஷ்டமாக மாறும் செப்பிடுவித்தை நடக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: சயனத்தில் இருக்கும் பெருமாளுடன்கூடிய மகாலட்சுமியை வணங்கவும். அருகிலுள்ள துர்க்கையை இனிப்புகொண்டு வணங்குகள். இஸ்லாமியரின், வீட்டு வாடகைக்கு பணம் தேவைப்பட்டால் கேட்டு உதவி செய்யுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் கேது ஆவார். உங்களின் அதிர்ஷ்ட எண் 70 ஆகும். இந்த மாதம் பணவரவு மிக அதிகமாக வரும். செலவு அதைவிட அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் காது குத்து, கல்யாணம் என மாறி மாறி வரும். இதற்கு அலைந்து, மொய் வைத்து, உங்கள் மணிபர்ஸ் இளைத்துவிடும். கார்டு தேய்ந்துவிடும். உங்களின் வீரம், சற்று இளைத்து போய், சொய்ங் என்றாகிவிடும். இதனால் வீண் சண்டைக்குப் போய், எதிரிகள் பிரித்து மேய்ந்துவிட்டால் என் செய்வது என அடக்கி வாசிப்பீர்கள். சற்று எதிர்மறை அறிவு சார்ந்த வேலை கிடைக்கும். சிறு பயணங்களில் கவனம் தேவை. வீட்டில் ஹோமம் போன்றவை செய்யும்போது, சற்று கவனமாக இருக்கவும். சிறு சலசலப்பு ஏற்படக்கூடும். ஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதிக்களுக்குள் சில விஷயங்கள் சரியாக புரிபடாமல், தெளிவில்லாததால் மனஸ்தாபம் வரும். அதுவும் குழந்தைகள், அரோக்கியம், தெரிந்தவர்கள் என இவ்விஷயங்களில் மேம் போக்காக நடந்துகொள்ள வேண்டாம். அரசுவகையில் செலவுகள் வரும். வியாபார கணக்கு வழக்குகளில் சற்று சரியாக இருக்கவும். கலைஞர்கள், தங்கள் தொழில் நிமித்தம் வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். இந்த பயணம் இவர்களுக்கு கௌரவம் தரும். அரசியல்வாதிகள் வெளிநாட்டு தொழில்கள் பற்றியும், அதற்குரிய முதலீடு விஷயம் பற்றியும், வெகு ஆவலாக விசாரித்து அறிவார்கள். உங்கள் மாமியார் ஏதேனும் நகை வாங்கவேண்டும் என செலவை இழுத்து விட்டுவிடுவார். சிலர் தங்களின் இரகசிய தொடர்புகளை விட்டு விலக எத்தனிப்பர்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: விஷ்ணு, துர்க்கையை வணங்கவும். அருகிலுள்ள விநாயகருக்கு, அபிஷேகத்திற்குரிய பால், தயிர் வாங்கிக்கொடுத்து வணங்கவும். வயதான கிறிஸ்துவ பெண்ணிற்கு, உணவு வாங்கிக்கொடுங்கள்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சனி, உங்களின் உச்ச எண் 62 ஆகும். இந்த மாதம் உங்களின் அத்தனை பணவரவுகளும், கைபேசிமூலம் பரிவர்த்தனை ஆகும். வெளியூர், வெளிநாட்டு பணபுழக்கமும் இவ்விதமே நடக்கும். உங்கள் இளைய சகோதரம் வெளிநாட்டு பணம் கையாள்வார். உங்கள் வாரிசுகளின் முன்னேற்றத்திற்கு, வெகு அலைச்சல் அலைய வேண்டியிருக்கும். மனை விஷயம் கூடிவரும். உங்கள் தாயாரின் அணுசரணை கிடைக்கும். விவசாய
வாகனம் வாங்குவீர்கள். வீட்டு தோட்டம் அமைப்பீர்கள். மழை சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவீர்கள். பூமி தோண்டும் தொழில் உடையவர்கள் செழிப்பு பெறுவர். வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். உங்களில் சிலருக்கு, மிக ஆச்சர்யமாக அரசாங்க வேலை கிடைக்கும். இதுவரையில் அரசு சார்ந்து ஏதாவது இடைஞ்சல் இருப்பின், அது இம்மாதம் தீர்ந்துவிடும். இம்மாதம் கிடைக்கும் வேலை புத்தி சார்ந்தமாக இருக்கும். சிலர் அமைச்சர்களிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் சிலர் சினிமா உலகில் காலடி எடுத்துவைப்பர். சிலர் விளையாட்டுத் துறையில் நுழைவர். சிலரோ குழந்தைகள் சம்பந்தமாக சேவைபுரிவர். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்தவர்கள் நிறைய கோவில்களில் உழவாரப் பணி செய்வர். ஆன்மிக சேவைசெய்து, மனம் நிறைக்கப் பெறுவர். இந்த மாதம் வெகு அதிசயமாக, உங்களின் நிறைய இன்னல் மறையும். எதிரிகள் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னலால், உங்களின் நினைப்பே இல்லாமல் போய்விடும். திருமண பேச்சுக்கள் நடக்கும். சொந்தத் தொழில் தொடங்குவோர், அரசுவகை நன்மையும் ஆதரவும், கடனும் பெறுவர். அரசியல்வாதிகள், தங்களின் பிறந்த இடத்தில் பெருமை பெறுவர். கர்ப்ப ஸ்திரிகள் கவனமுடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: காலபைரவரை வணங்கவும். சனீஸ்வர பெருமாளுக்கு, கொஞ்சம் உளுந்தும், எள் மிட்டாயும் படைத்து வணங்கி, அங்குள்ள அர்ச்சகரிடம் கொடுத்துவிடவும். வயதான இஸ்லாமிய பெண்ணிற்கு, காது கேட்கும் கருவி சம்பந்த உதவிசெய்யவும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களின் நாயகர் செவ்வாய். உங்களின் உச்ச எண் 90 ஆகும். இந்த மாதம் பண சம்பாத்தியம் பொருட்டு, வெளியூர், வெளிநாடு அலைச்சல் உண்டு. வாயைத் திறந்தால், தகவல்களாக கொட்டுவீர்கள். பத்திரிகை, டி.வி., விமான நிலையம், டிக்கெட் புக்கிங், வெகுஜன தொடர்பு, சினிமா, கலைத்துறை, விளம்பரத்துறை என இதில் ஏதாவது ஒரு வேலை கேரண்டி. கைபேசி, பண பெருக்கம் தரும். திருமண பற்றிய நற்செய்திகள் வந்து, திருமண ஏற்பாட்டை விரைவுபடுத்தும். உங்கள் தந்தை, சில பண விஷய பத்திரங்களை உங்களுக்கு கொடுப்பார். இதில் உங்கள் இளைய சகோதரனுக்கும் பங்கு கிடைக்கும். இந்த மாதம் புத்திசாலித்தனமும், வெகு முயற்சியும் மன தைரியமும் ஊக்கமும் அதிகரித்து வெற்றியின் பாதையைக் காட்டும். வேலை செய்யும் இடத்தில், சிலரின் குசும்பு செயலுக்கு ஆளாவீர்கள். இந்த வம்பு விஷயத்தை வயதான பெண்கள் கிளப்பிவிடுவர். தற்போது வரும் திருமண வரன், தகவல் துறையில் வேலை செய்வார். நீங்கள் வெளியில் செல்லும்போது, பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து அடிபடுவீர்கள். ஆன்மிக சொற்பொழிவாளர்கள், கண்டம் விட்டு கண்டம் சென்று விரிவுரை ஆற்றுவர். தொழில் மேன்மை எளிதாக அதிகரிக்கும். அந்த "எளிதாக' என்பதன் உள்ளிடான அர்த்தம், நிறைய லஞ்சம் கொடுத்து, தொழில் வளம் பெறுகும் என்பதாகும். கலைஞர்கள் பற்றிய பெருமையான செய்தி பத்திரிகை, டி.வி.யில் வெளியாகும். அரசியல்வாதிகள் வழக்கம்போல லஞ்சம் வாங்கி அமோகமாக இருப்பர்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: வீரபத்திரரை வணங்கவும். சமையல் வேலை செய்யும் வயதான இஸ்லாமிய பெரியவருக்கு, தொழில் வாய்ப்பும், லாபமும் கிடைக்க வழி காட்டுங்கள். துர்க்கையை குங்குமம், எலுமிச்சம் பழம்கொண்டு வணங்கவும்.
செல்: 94449 61845