Advertisment

ஆனி மாத எண்ணியல் பலன்கள் - ஆர். மகாலட்சுமி

/idhalgal/om/ani-month-numerical-benefits-r-mahalakshmi

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த ஆனி மாதம் உங்களின் பணவரவு பல விதங்களில் பரிமளிக்கும். வரவே வராது- கிடைக்கவே கிடைக்காதென மனம் தளர்ந்த இனங்களில்கூட வரவேண்டிய தொகை வந்துவிடும். முக்கியமாக அரசு தரப்பிலருந்து வரவேண்டிய பணம் உங்கள் கைக்குக் கிடைக்கும். குடும்பத்தில் வாரிசுகளின் திருமணம் நடப்பதால் வளமை பெருகும். இப்போது வரும் மருமகன் அல்லது மருமகள் அரசு சார்புடையவராக அமைவார். உங்கள் இளைய சகோதரி வெளிநாடு செல்வார். அந்த பயணத்தில் கடைசி நிமிடத்தில் வீண் செலவுகள், வீண் அலைச்சல் உண்டாகும்; கவனம் தேவை. சிலரது பணியாளர்கள் வேலையைவிட்டு விலகுவர். உங்களின் அதீத முயற்சிகள் அதிக அலைச்சலைத் தரும். உங்கள் வீடு விற்பதற்கு அல்லது தொழில் முதலீடு விஷயமாக உங்களின் தகுதிக்கு மிகக் குறைந்த நபர்களுடன் சேர்ந்து அலைய வேண்டியிருக்கும். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மேன்மை பெறுவர். உங்கள் பெற்றோரின் வீண் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வாரிசுகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தந்தாலும் அதனூடே சிறிது கசப்பும் உங்களைத் தாக்கும். சிலரது வாரிசுகள் அல்லது இந்த ஜாதகர்கள் உங்களின் குல ஆச்சாரத்தை மீறி நடக்க நேரிடும். தம்பதிகளுக்குள் பிணக்குகள் சகஜம். சிலரின் தந்தை எங்காவது விழுந்து சிராய்ப்பு, காயம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடும். தொழிலில் முதலீடுகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.

Advertisment

கவனம் தேவை: உங்கள் தந்தை, நிலம், வீடு, பணியாளர்கள் விஷயங்களில் சற்று விழிப்புடன் இருக்கவும். கலைஞர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். ஆணி 26, 27, 28-ஆம் தேதிகள் நன்மை தரகூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: சூரிய நாராயணரை வணங்கவும். அருகிலுள்ள வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகப் பெருமானை வணங்கவும். அரசுப் பள்ளிகளுக்கு ஏதேனும் கட்டுமான செலவு இருப்பின் தேவையைக் கேட்ட றிந்து உதவவும். விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொள்ளும் மாணவர்களின் செலவைப் பகிர்ந்துகொள்ளவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். பூர்வீக சொந்தம் தேடி வரும். வீடு முழுக்க உறவுகள் இருப்பின் செலவு அதிகரிப்பும், மனச்சலிப்பும் தவிர்க்க முடி யாதவை தானே. உங்க ளின் வீட்டில் வேலை அதிக மென்று, வீட்டில் வேலைசெய்பவர் கள் விலகிச் சென்று விடுவார்கள். கைபேசி பழுதாகி செலவை இழுத்துவிடும். இந்த மாதம் வீடு சம்பந்த விஷயம் மற்றும் மருமகள் தேடும் விஷயம் என இவற்றில் முடிவை சற்று தள்ளிப் போடவும். உங்கள் வாரிசுகளால் ஒரு அவமானம் சிலருக்கு ஏற்படும். பங்கு வர்த்தகம் காலை வாரிவிடக் கூடும். பூர்வீக நிலம் தொல்லை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதம் கடன் வாங்க நேரிடும். தொழில் செய்யுமிடத்தில் வேலை அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத்தைத் தவிர்க்க வும். உங்கள் மருமகளோடு வீண் தகராறு ஏற்படலாம். பதவி உயர்வு தள்ளிப் போகும். உங்களின் சிலர் அரசு சார்ந்த வீடுகளுக்கு இடம் மாறுவீர்கள். வேறு சிலர் அரசு ஒப்பந்தம், குத்தகைக்கு பணம் முதலீடு செய்வீர்கள். அரசியல்வாதிகளில் பெருமை, கௌரவத்தைக் குலைக்கும் விதமாக சில செய்திகள் பரவும். சில கலைஞர்கள் உடல்நலக்குறைவை சந்திப்பர். உங்களது இளைய சகோதரன் வெளிநாடு செல்ல ஆயத்தமாவார். மாமியார் ஏதாவது வில்லங்கத்தை இழுத்துவிட்டுச் சென்றுவிடுவார். மாமனார் வேறி

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த ஆனி மாதம் உங்களின் பணவரவு பல விதங்களில் பரிமளிக்கும். வரவே வராது- கிடைக்கவே கிடைக்காதென மனம் தளர்ந்த இனங்களில்கூட வரவேண்டிய தொகை வந்துவிடும். முக்கியமாக அரசு தரப்பிலருந்து வரவேண்டிய பணம் உங்கள் கைக்குக் கிடைக்கும். குடும்பத்தில் வாரிசுகளின் திருமணம் நடப்பதால் வளமை பெருகும். இப்போது வரும் மருமகன் அல்லது மருமகள் அரசு சார்புடையவராக அமைவார். உங்கள் இளைய சகோதரி வெளிநாடு செல்வார். அந்த பயணத்தில் கடைசி நிமிடத்தில் வீண் செலவுகள், வீண் அலைச்சல் உண்டாகும்; கவனம் தேவை. சிலரது பணியாளர்கள் வேலையைவிட்டு விலகுவர். உங்களின் அதீத முயற்சிகள் அதிக அலைச்சலைத் தரும். உங்கள் வீடு விற்பதற்கு அல்லது தொழில் முதலீடு விஷயமாக உங்களின் தகுதிக்கு மிகக் குறைந்த நபர்களுடன் சேர்ந்து அலைய வேண்டியிருக்கும். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மேன்மை பெறுவர். உங்கள் பெற்றோரின் வீண் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வாரிசுகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தந்தாலும் அதனூடே சிறிது கசப்பும் உங்களைத் தாக்கும். சிலரது வாரிசுகள் அல்லது இந்த ஜாதகர்கள் உங்களின் குல ஆச்சாரத்தை மீறி நடக்க நேரிடும். தம்பதிகளுக்குள் பிணக்குகள் சகஜம். சிலரின் தந்தை எங்காவது விழுந்து சிராய்ப்பு, காயம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடும். தொழிலில் முதலீடுகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.

Advertisment

கவனம் தேவை: உங்கள் தந்தை, நிலம், வீடு, பணியாளர்கள் விஷயங்களில் சற்று விழிப்புடன் இருக்கவும். கலைஞர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். ஆணி 26, 27, 28-ஆம் தேதிகள் நன்மை தரகூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: சூரிய நாராயணரை வணங்கவும். அருகிலுள்ள வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகப் பெருமானை வணங்கவும். அரசுப் பள்ளிகளுக்கு ஏதேனும் கட்டுமான செலவு இருப்பின் தேவையைக் கேட்ட றிந்து உதவவும். விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொள்ளும் மாணவர்களின் செலவைப் பகிர்ந்துகொள்ளவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். பூர்வீக சொந்தம் தேடி வரும். வீடு முழுக்க உறவுகள் இருப்பின் செலவு அதிகரிப்பும், மனச்சலிப்பும் தவிர்க்க முடி யாதவை தானே. உங்க ளின் வீட்டில் வேலை அதிக மென்று, வீட்டில் வேலைசெய்பவர் கள் விலகிச் சென்று விடுவார்கள். கைபேசி பழுதாகி செலவை இழுத்துவிடும். இந்த மாதம் வீடு சம்பந்த விஷயம் மற்றும் மருமகள் தேடும் விஷயம் என இவற்றில் முடிவை சற்று தள்ளிப் போடவும். உங்கள் வாரிசுகளால் ஒரு அவமானம் சிலருக்கு ஏற்படும். பங்கு வர்த்தகம் காலை வாரிவிடக் கூடும். பூர்வீக நிலம் தொல்லை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதம் கடன் வாங்க நேரிடும். தொழில் செய்யுமிடத்தில் வேலை அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத்தைத் தவிர்க்க வும். உங்கள் மருமகளோடு வீண் தகராறு ஏற்படலாம். பதவி உயர்வு தள்ளிப் போகும். உங்களின் சிலர் அரசு சார்ந்த வீடுகளுக்கு இடம் மாறுவீர்கள். வேறு சிலர் அரசு ஒப்பந்தம், குத்தகைக்கு பணம் முதலீடு செய்வீர்கள். அரசியல்வாதிகளில் பெருமை, கௌரவத்தைக் குலைக்கும் விதமாக சில செய்திகள் பரவும். சில கலைஞர்கள் உடல்நலக்குறைவை சந்திப்பர். உங்களது இளைய சகோதரன் வெளிநாடு செல்ல ஆயத்தமாவார். மாமியார் ஏதாவது வில்லங்கத்தை இழுத்துவிட்டுச் சென்றுவிடுவார். மாமனார் வேறிடம் செல்வார். உங்களில் சில அரசு அதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.

Advertisment

கவனம் தேவை: உங்கள் கௌர வம் புகழ், நன்னடத்தை ஆகியவை பாழாகும் விதத்தில் சில செயல்கள் நடக்கும்.

ஆணி 28, 29, 30-ஆம் தேதிகளில் நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: அருகிலுள்ள கோவில்களில் விஷ்ணு, துர்க்கையை வணங்கவும். கோவில்களில் வேலைசெய்யும் அந்தணர் களின் தேவையைக் கேட்டறிந்து உதவி செய்யவும். பிற மத குருக்களுக்கு வஸ்திர தானம் செய்யவும்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களின் பலருக்குத் திருமணம் கைகூடிவரும். வரன் அநேகமாக சொந்தத்தில் அமைவார். பணவரவு என்பது கணக்கில் நிறைய இருக்கும். கையில் கிடைக்க தாமதமாகும். ஒப்பந்த குத்தகை தாரர்கள் நிலை சற்று தடுமாறி பின் சரியாகும். உங்கள் பணியாளர்கள் சற்று கோபித்துக் கொள்ளக்கூடும். உங்கள் வீட்டில் பழுதுபார்க்கும் செலவுகள் ஏற்படும். உங்களின் ஒரு தீய பழக்கம் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்கு வர்த்தகத்தில் கவனமாக இருக்கவும். கலையுலக நடிகர்-நடிகைகள் பணிபுரியும் விஷயத்தில் தடை, தாமதம் உண்டாகும். படப்பிடிப்புத் தளத்திலும் எச்சரிக்கை தேவை. மிகச்சில கலைஞர்கள் எதிர்பாராத லாபம் பெறுவர். உங்கள் மூத்த சகோதரி பணிச்சுமையால் சிரமப்படுவார். உங்கள் தந்தையின் சிபாரிசினால் ஒரு மனிதர் உங்கள் வியாபாரத்திற்கு உதவிசெய்வா.ர் உங்கள் மருமகள் கருவுற்று இருப்பின் மிக கவனமாக இருக்கவேண்டும். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வாரிசு பிறப்பு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் பெண்களின் தவறான தொடர்பால் அவதிப்பட நேரிடும். வயிறு சம்பந்தமான கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இந்த எண் மாணவர்கள் அரசியல்வாதிகளின் பரிந்துரையால் நல்ல கல்லூரியில் கல்வி பயில வாய்ப்புண்டு.

கவனம் தேவை: உடலில் சற்று வலி ஏற்படலாம். கொஞ்சம் சோடா குடித் தால் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருக்கவேண்டாம். உடனே ஒரு மருத்துவ ரைக் கலந்தாலோசிக்கவும்.

ஆணி 5, 6, 7-ஆம் தேதிகள் நன்மை தரகூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எங்கள்: 9, 18, 27.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கவும். அந்தணர்களின் வீட்டுப் பழுது நீக்கும் செலவுக்கு முடிந்த உதவிசெய்யவும். திருமண முறிவுக்கு காத்துக் கொண்டிருக்கும் தம்பதியரிடம் முறிவை முறிக்க யோசனைகள் கூறுங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களின் செயல்பாடுகள் பிறரை மிக குழப்பத்தில் ஆழ்த்தும். நீங்கள் நல்லவரா- கெட்டவரா அல்லது நல்லவர் போல் நடிக்கும் கெட்டவரா என குழம்பிப் போய்விடுவார்கள். உங்களில் சிலருக்கு அரசு சார்பு பணியாளர் கிடைப்பர். அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். அரசு கல்லூரியில் கணக்கு சார்ந்த கல்வியில் சேர்வீர்கள். நிலப் பிரச்சினை தீரும். வாரிசுகள் வேலை கிடைக்கப் பெறுவர். சிலருக்கு கலப்பு மணம் நடக்கும். உங்களின் முயற்சியும் முன்னேற்றமும் கண்டு எதிரிகள் பொறாமை கொள்வர். பழைய பகையாளியை சந்திக்கக் கூடும். அரசியல்வாதிகள் தங்கள் குடும்பத்தார் சொத்துகளால் மனச்சுமை அதிகரிக்கப் பெறுவர். இந்த மாதம் தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் எதைச் செய்தாலும் அதில் ஒரு பண வரவும் வில்லங்கமும் கைகோர்த்து வரும். தர்மத்துக்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு, நிறைய தொகைக்கு வீடு வாங்கி வைத்துக்கொள்வீர்கள். திரைப் படம், தொலைக்காட்சி, நாடகக் கலைஞர் கள் புகழ்பெறும் பொருட்டு அதிக அக்கறை எடுத்துக்கொள்வர். இந்த மாதம் சிறு முயற்சியே பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும். எனவே வேலை தேடுவோர் சிறிது முயன்றாலும் நல்ல வேலை கிடைத்துவிடும்.

கவனம் தேவை: வீடு கட்டிக் கொண்டிருப் பவர்கள் தளவாடப் பொருட்களை கவனமா கக் கையாளவும். பண விஷயங்களில் கறாரா கவும் கண்டிப்புடனும் இருக்கவும்.

ஆணி 26-ஆம் தேதி நற்செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: உங்கள் வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தில் இரு நாகர்கள் இணைந்த நிலை யிலுள்ள சிலைக்கு மஞ்சள் பூசி மலர்கள், ஆடை சாற்றவும். வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கும் மனிதர்களின் தேவையறிந்து உங்களால் முடிந்த உதவிசெய்யவும்..

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் அரசாங்கம் சார்ந்து ஒரு முக்கிய நிகழ்வுண்டு. அது அரசு வேலை கிடைக்கலாம். அரசு வேலைக்கு பணம் கொடுக் கலாம். கல்வி சம்பந்தமாக அல்லது ஆசிரியப் பணி சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசலாம். சிலர் தந்தையின் தொழிலை எடுத்து நடத்து முனைவார்கள். வியாபாரத்திற்கு முதலீடு செய்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. தாயாரின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். எனவே இந்த மாதம் புதுவிதமான முயற்சிகளை எடுக்காமல் தள்ளிப் போடவும். உங்கள் இளைய சகோதரன் ஏதேனும் வில்லங் கத்தைக் கொண்டுவருவார். உங்களில் சிலர் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்க சில வேண்டாத வேலைகளைச் செய்து கடன் வாங்குவீர்கள். சிலர் நிறைய வட்டி கிடைக்கும்; நல்ல லாபம் வரும் என்று தெரியாத நிறுவனங் களில் பணம் செலுத்துவீர்கள். இப்போது நடக்கும் திருமணத்தில் சற்று கலப்பு கலந்திருக்கும். உங்கள் வீடு எதிர்பாராமல் ஏதேனும் சிக்கலுக்கு உள்ளாகக்கூடும். ஆயினும் இந்த செயல் உங்களுக்கு ஒரு நல்ல லாபம் பெற்றுத் தரும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் வம்பு செய்யக்கூடும். இந்த மாதம் வரும் பணவரவில் எதிர்மறைத் தன்மை அதிகமிருக்கும். உங்கள் தொழில் அதிக அலைச்சல் தரும். உங்களில் சிலர் வெளிநாட்டுக்கு செல்வீர்கள்.

கவனம் தேவை: வீடு, வாகனம், மனை போன்ற விஷயங்களில் கொடுக்கல்- வாங்கல் சம்பந்தமாக மிக விழிப்புடன் இருப்பது அவசியம். உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள்.

ஆனி மாதம் 11, 12, 13-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: சங்கரன்கோவில் சங்கர நாராயணரை வணங்கவும். அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு தொலைபேசிக் கட்டணம் கட்டலாம் அல்லது கோவில் அர்ச்சகருக்கு அலைபேசி கட்டணம் செலுத்த உதவுங்கள். சமையல் செய்யும் பெண்களுக்குத் தேவையறிந்து உதவுங்கள்.

ss

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் சொற்கள் எடுபடாமல் போகலாம். அல்லது பண விஷயம் முடங்கலாம். அந்த சமயங்களில் ஆபத்பாந்தனாக உங்கள் தந்தை முன்நிற்பார். உங்களுக்குத் தேவையானவற்றை அவரே பார்த்துக்கொள்வார். இப்போது நடக்கும் திருமணப் பேச்சுகளில் உங்கள் இளைய உடன்பிறப்பு இடையில் புகுந்து தகராறு செய்வார். இதனால் திருமணத்தடை ஏற்பட வாய்ப்புண்டு. உங்களின் சிலரின் காதல் விஷயங்களிலுள்ள தீமைகள் தெரிய வரும். இது உங்களுக்கு நன்மையாகவே அமையும். குலதெய்வ வழிபாட்டில் சில பங்காளிகள் தொல்லை தருவர். பங்கு வர்த்தக விஷயத்தில் இந்த மாதம் முக்கிய முடிவெடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலைசெய்ய அயல் இன ஆட்கள் வந்து சேர்வர். தொழில் பங்குதாரிடம் எச்சரிக்கை யாக இருங்கள். பண விஷயத்தில் அனைத் தும் எழுத்துப்பூர்வமாக இருக்கட்டும். வாய் வார்த்தை நம்பிக்கை காலை வாரிவிடும். கொடுக்கல்- வாங்கலிலும் விழிப்புடன் இருங்கள். திருமண விஷயங்களில் பேச்சுவார்த்தை நடக்கலாம். ஆனால் முடிவெடுக்க ஒரு மாதகால அவகாசம் கேட்டுக்கொள்ளவும். உங்கள் மருமகன் ஏதேனும் செலவை இழுத்துவிடுவார். சமையல் கலைஞர்கள் மற்றும் பெண்கள் வீட்டில் சமையல் செய்யும்போது சற்று விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசியல் வாதிகள் தர்மம், கல்வி சார்ந்து செலவும் அலைச்சலும் பெறுவர்.

கவனம் தேவை: கலைஞர்கள் தொழில் அதிகம் பெறுவர். இருப்பினும் நிறைய அவமானங்களும் பெறுவர். இந்த எண் பெண்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். முக்கியமாக கைபேசி சம்பந்த விழிப்புணர்வு அவசியம்.

ஆனி மாதம் 23, 24, 25-ஆம் தேதிகளில் நன்மை நடக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: அஷ்டபுஜ துர்க்கையை வணங்குவது நல்லது. அருகிலுள்ள கோவி லில் துர்க்கைக்கு குங்குமம், எலுமிச்சை சமர்ப்பித்து வணங்கவும். உங்களுக்குத் தெரிந்த தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள். இந்த மாதம் இந்த தேதிகளில் பிறந்த தம்பதிகளுக்குள் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம்.

7, 16 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் அயல் இன, வேற்று மத மனிதர்களுடன் பழக்கம் அதிகரிக்கும். ஆட்கள் பழக்கம் பெருகுமே ஒழிய, பணப் புழக்கம் அதிகரிக்குமென்று சொல்ல முடியாது. ஒருவித அசட்டு தைரியம் ஆட்கொள்ளும். இந்த தைரியம் போலியான தன்னம்பிக்கை தரும். இந்த எண்ணம்- நீங்களே உங்களைப் பெரிய மனிதராக- சிறந்த வராக கற்பித்துக்கொள்வீர்கள். இந்த வீண் கௌரவம் சில சமயம் அவமானத்தையோ இழப்புகளையோ ஏற்படுத்தலாம். சிலர் காதல் விஷயங்களில் பொய் சொல்லி தங்களை உயர்வாகக் காட்டிக்கொள்வார்கள். கையில் பணமில்லாவிட்டாலும், கணக்கில்லா கார்டு வைத்திருக்கிறேன் என்பார்கள். திரைப்படக் கலைஞர்கள் வேலை வாய்ப்பே இல்லாவிட்டாலும் கால்ஷீட் டைட் என்பார்கள். சிலர் அகடவிகடம் பேசி அடுத்தவர் பர்சை காலி செய்துவிடுவார்கள். இந்த எண் குழந்தைகள் பக்கத்து பையனைப் பார்த்து எழுதி தேர்ச்சிபெற்று விடுவார்கள். இந்த தேதிகளில் பிறந்த கோவில் குருக்கள் சிலருக்கு சட்டென்று மந்திரம் மறந்து போகும். ஆனாலும் தெரிந்ததை வைத்து சமாளித்துவிடுவார்கள். உங்கள் மாமியார் உங்களின் சிலபல வேண்டாத வேலைகளைத் தெரிந்துகொள்வார். உங்கள் தாய்மாமன் அவசர உதவிக்கு வருவார்.

கவனம் தேவை: இந்த மாதம் நிறைய வாழ்வியல் சிக்கலை இழுத்துவிட்டுக் கொள்வர். பிறகு அவர்களே ஏதாவது செய்து தப்பித்துவிடுவார்கள். கட்டடம் சார்ந்து தொழில் செய்வோர் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனி 8-ஆம் தேதி நன்மை நடக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: இந்த எண்காரர்கள் உங்களுக்கு விருப்பமான சித்தரை வணங்கவும். மடங்கள், பசு வளர்ப்போரின் தேவையறிந்து உதவிசெய்யவும். விநாயகரை வணங்கவும்.

8 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி யாக அரசு சார்ந்த அல்லது அரசு வேலை கிடைக்கும். உங்களின் சிலரது வாரிசு அடிப்படை வேலைக்குச் சென்று கொண்டிருந்தால் அது இந்த மாதம் கிடைக்கும். பண விஷயத்தைப் பொருத்தவரை உங்களுக்கு வரவேண்டிய பணத்தை உங்கள் பங்குதாரர் அல்லது தெரிந்தவர்களிடம் சிக்கிக்கொள்ளும். பிறகு தருகிறேன் என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். இருக்கும் செல்வத்தை அனுபவிக்க முடியாத சூழ்நிலை அமையும். உங்கள் தாயின் உடல்நலன் பொருட்டு சிறப் புப் பணியாள் வைக்கவேண்டி வரும். வீடு, மனை சம்பந்தமான முடிவுகளை இந்த மாதம் எடுக்கவேண்டாம். மற தீர்மானங் களை ஒரு மாதம் கடந்தபின் நிறைவேற்றவும். உங்களில் சிலர் காதலிக்கும் நபர் ஏற்கெனவே திருமணமானவர் என்று கண்டுபிடிப்பீர்கள். அரசியல்வாதிகள் பெண்கள் விஷயமாக அவமானப்பட நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. கலைஞர்கள்- அதிலும் நடிகைகள் மறுமணம் புரிவர். அந்த நபர் சரியில்லாத மனிதர் என தெரிந்தே திருமணம் செய்வர். கலைஞர்கள் எதிர்மறை வகையில் வாய்ப்பு பெறுவர். அரசு சார்ந்த கடன் கிடைக்கும். சிலர் நகைக்கடை, அடுக்குமாடி கட்டுவது, அழகுக் கலை என இவ்வகை தொழிலை, வில்லங்கம் இருப்பது தெரிந்தே ஆரம்பிக்கக்கூடும்.

கவனம் தேவை: ஆபத்துகள், வில்லங்கம் என தெரிந்தே நிறைய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி சார்ந்த கள ஆய்வு செய்யவும்.

ஆனி 13, 14, 15 ஆகிய தேதிகள் நன்மை தரகூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: அவரவரின் குலதெய்வத்தை நன்கு வழிபடவும். பைரவர் வழிபாடு நன்று. வீட்டில் சமையல் மற்றும் பிற வேலைகள் செய்யும் பணியாளர்களின் தேவையறிந்து உதவிசெய்யவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய். ஆனால் இப்போது அவர் முற்றிலும் பலமிழந்து இருக்கிறார். அவரால் நன்மை தரும் செயல்களைச் செய்ய இயலாது. எனவே இந்த மாதம் மௌனமாக இருப்பது சாலச் சிறந்தது. உங்களின் பூர்வீக நிலத்தை விற்க முன்முயற்சி எடுப்பீர்கள். உங்களது பங்கு வர்த்தக அறிவை அலைபேசியில் தகவல்களாக வெளியிடுவீர்கள். தகவல் தொடர்பு சார்ந்த வேலை கிடைக்கும். உங்களில் சிலருக்கு ஆரோக்கியம் சம்பந்தமான சேவைகள் செய்யும் வாய்ப்பு கிட்டும். திருமணம் சற்று குளறுபடியை சந்திக்கும். உங்கள் வாகனம் பழுதடையும் வாய்ப்புண்டு. சிலசமயம் நீங்களும் வாகனத் தில் இருந்தால், பழுது ஏற்படுவதை நீங்களும் வாகனமும் பங்குபோட்டுக் கொள்ள நேரிடும். யோகமும் செலவும் எதிர்மறைத் தன்மை கொண்டிருக்கும். இந்த மாதம் உங்கள் தொழிலில் ஒன்று லாபம் குறைவாக இருக்கும் அல்லது வரவை வெளியில் சொல்லமுடியாத அளவில் இருக்கும். இந்த மாதம் கடை விரிவாக்கம், தொழிலில் புதிய கிளை திறப்பது என எல்லாவற்றையும் தவிர்க்கவும். வேலை செய்யுமிடத்தில் உங்கள் மேலதிகாரிகள் வேண்டாத வில்லங்கம் செய்வார்கள். சில மருமகன்கள் கோபமுகம் காட்டுவர். உங்கள் மாமியார் சற்று சுகவீனம் அடை வார். இந்த எண்களில் பிறந்த தம்பதியர் ஒற்றுமையாக இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் உள்ளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கண்டிப்பாக சண்டையில் தோற்று பின்வாங்கக் கூடும்.

இந்த மாதம் முழுக்கவே கவனம் தேவைதான்.

ஆனி 20, 21, 22 ஆகிய தேதிகளில் ஓரளவு நன்மை வரலாம்.

அதிர்ஷ்ட எண்கள், எச்சரிக்கை எண்கள் என்று எதையும் சொல்வதற்கில்லை.

பரிகாரம்: பிரத்தியங்கரா, வாராகி போன்ற உக்கிர தெய்வங்களை குங்குமம் கொண்டு வணங்கவும். இந்த மாதம் எச்சரிக்கையாக இருந்தால் ஓரளவு ஒப்பேற்றிவிடலாம். செல்: 94449 61845

om010623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe