Advertisment

அம்மனே விரும்பி அமர்ந்த தில்லைவனம்! - கோவிலாம்பூண்டி பொ.பாலாஜிகணேஷ்

/idhalgal/om/amman-wants-sit-down

க்தி தலங்களில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் தலம் மிக முக்கியமானது. மேல்மலையனூரில் மட்டுமல்ல; பல இடங்களிலும் அங்காள பரமேஸ்வரிக்கு ஆலயங்கள் உண்டு. சில இடங்களில் அவளே சென்று விரும்பி அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயங்களும் உள்ளன. அப்படியொரு ஆலயத்தைப்பற்றி இப்போது பார்ப்போம்.

Advertisment

இவ்வுலகில் சக்தியின் வேலைகளுக்கு அளவேது! அவள் என்ன நினைக்கி றாளோ அதுதான் இப்பூவுலகில் நடக்கும். வள்ளாள மகாராஜனின் கொடுமைகளைத் தாங்கமுடியாத மக்கள் அம்பாளிடம் முறையிட்டனர். ஆங்காளியாக உருவெடுத்த அம்மன் வள்ளாள மகாராஜனையும், அவன் நகரத்தையும் சூறையாடி அழித்தாள். அதன்பின்னரும் அவளது ஆங்காரம் குறையாததைக்கண்டு அனைவரும் செய்வதறியாமல் தவித்தனர்.

thh

இவற்றையெல்லாம் கண்ட அவளது பரிவாரங்களின் தலைவரான பாவாடைராயர், தில்லைவனம் அழைத்துச் சென்றால் ஆங்காளியின் சினம் தணியு மென்பதை உணர்ந்தார்.

பின்னர் ஆங்காரமாக இருக்கும் அவளை அழைத்துவர, அவள் மனதை ஈர்க்கும் பம்பை ஒலியையும் சிலம்பொலியையும் இசைக்கச் செய்து தில்லைவனம் நோக்கி அழைத்துவந்தனர். தில்லைவனத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாக வரும்பொழுது புங்கைமரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் விழிமலர்ந்து அமர்ந்தாள்.

அப்போதுதான் அவளது கையிலிருந்த பிரம்ம கபாலம் அவளின் கால் திருவடிக்கு வந்தடைந்தது. அவளது சினம் தணிந்ததோடு மட்டுமல்லாமல் மனதிலும் ஒரு ஆனந்தப் பரவசம் அடையப் பெற்றாள்.

அழகான நீரோடை, அற்புதமான தில்லைவனம் பராசக்தியின் மனதைக் கவர்ந்துவிட்டது. தன்னுடன் வந்த பெரியாண்டவர், பாவாடைராயர் மற்றும் துவார சக்திகளிடம், "நான் இங்கு அமர்ந்து மன அமைதிபெற, அம்பலத்திலிருக்கும் அம்பலவாணனை நோக்கித் தவம்செய்யப் போகிறேன். நீங்கள் என்னோடு இருந்தாலும் சரி; சென்றுவிட்டாலும் சரி'' என்றாள்.

"உங்களைவிட்டு எங்கே செல்லப்போகி றோம்? நாங்களும் உங்களுடனேயே இருக்கிறோம்'' என்று கூறி அவர்களும் அங்கேயே அமர்ந்துவிட்டனர்.

இரவுப்பொழுது முடிந்து சூரியன் உதிக்கத் தொடங்கியது. தில்லைவனத்தில் மக்கள் நடமாட்டம் தொடங்கியது.

அப்போது ஒரு குறிப்பிட

அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒளி வர, சிலர் அந்த இடத்தை நோக்கிச் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது, ஒரு அற்புதமான அங்காளம்மனின் திருவுருவச்சிலை இருப்பதைக்கண்டு ஊர்மக்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, "ஆற்றங்கரையோரம் இருக்கிறதே... இதை ஊருக்குள் எடுத்துச் செல்லலாம்' என்று முயற்சித்தபோது, அம்மனின் அருள் வந்த ஒரு பக்தர், "நானே விரும்பி அமர்ந்த இடமிது. நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு இங்கேயே வழிபாடு செய்யுங்கள்'' என்று கூற, பக்தர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள். "தாயே பராசக்தி! நீ எங்கே விருப்பப்பட்டு அமர்ந்தாயோ அதே இடத்தில் வைத்து உன்னை நாங்கள் வழிபாடு செய்கிறோம். நீ எங்கள் ஊருக்கு வந்ததே பெரும் பாக்கியம்!'' என்று மனமுருக வேண்டினர். அதேபோல் ஒரு சிறிய கொட்டகையில் அம்மனை வைத்து வழிபாடும் செய்தனர்.

காலங்கள் உருண்டோடின. சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் கருங்கல்லாலான ஆலயம் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் அது நூதன ஆலயமாக மாற்றப்பட்டு தற்போது பிரம்மாண்ட ஆலயமாகக் காட்சியளிக்கிறது.

முதன்முதலில் ஆற்றங்கரையில் கிடைத்த அங்காளம்மன் சிலையை ஆதி அங்காளம்மன் என்னும் திருநாமத்தைச் சூட்டி இவ்வாலயத்தில் இன்றும் வைத்து வழிபாடு நடத்திவருகிறார்கள்.

கோவிலின் முகப்பில் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் பூத கணங்களோடு காட்சிதருகிறாள். முன்மண்டபத்தில் திரிசூலம், பலிபீடம், நந்தி அழகுற அமைந்துள்ளது. மகாமண்டபத்தின்முன் இருபுறமும் அங்காளம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் இரண்டு பிரம்மாண்டமான சுதைச் சிற்ப வடிவில் காட்சிதருகிறாள். மேலேயும் சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் காட்சிதருகிறாள். அவர்களை வணங்கிவிட்டு உள்ளே சென்றால் விநாயகர், முருகன், ஆதி அங்காளம்மன், வீரபத்திரர், சம்பந்தர் சந்நிதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தின் மேலே கஜலட்சுமி; இருபுறமும் துவார சக்திகள். உள்ளே உற்சவர் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

Advertisment

tt

கருவறையில் கிழக்குநோக்கி நான்கு திருக்கரங்களோடு சதுரபீடத்தில் அமர்ந்த கோலத்தில் அற்புதமாய்க் காட்சிதருகிறாள் அங்காளம்மன். அம்மன் அமர்ந்திருக்கும் பீடத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் அருள்பாலிக்கிறார்கள். கருவறையின் மேலே தெய்வங்களில் சுதைச் சிற்பங்கள் நிறைந்த அழகான கோபுரம் மூன்று கலசங்களோடு அற்புதமாய் விளங்குகிறது.

பிராகாரத்தில் சரக்கொன்றை மரத்தடியில் வீரனார் தனிச் சந்நிதியிலும், புங்கைமரத்தடியில் பெரியாண்டவர் தனிச் சந்தியிலும், பாவாடைராயன், பேச்சியம்மன் இருவரும் ஒரே சந்நிதியிலும் காட்சியளிக்கின்றனர்.

மாதந்தோறும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி காட்சிதருவாள். காலையில் மகா அபிஷேகமும், மாலை 7.00 மணிக்கு திருவூஞ்சல் உற்சவமும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சர்வ பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.

மாசி மாதம் ஐந்து நாள் உற்சவம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முதல்நாள் உற்சவம் சீர்வரிசை கொண்டுவந்து லட்சார்ச்சனையோடு தொடங்குகிறது. மகா சிவராத்திரியன்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பாள் அழகுறக் காட்சிதருவாள். மறுநாள் அமாவாசைன்று மயானக் கொள்ளை வைபவம் நடைபெறும். "ஆண்டுக்கொருமுறை நடைபெறும் இந்த வைபவத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்துகொண்டு, இங்கு வழங்கப்படும் சிறப்புப் பிரசாதத்தை தம்பதியினர் இருவரும் கோவிலில் அமர்ந்து சாப்பிடவேண்டும். பின்னர் அம்பாளிடம் சென்று குழந்தைவரம் வேண்டிப் பிரார்த்தனை செய்தால் அடுத்த ஆண்டு மாசி மாதத்திற்குள் குழந்தை பாக்கியத்தைத் தருகிறாள் இந்த மகேஸ்வரி'' என்று பலனடைந்த பக்தர்கள் மெய்சிலிர்க் கக் கூறுகின்றனர். குழந்தைப் பேறுக்கான பிரார்த்தனை ஆண்டுக்கொருமுறை மட்டுமே இவ்வாலயத்தில் செய்யப்படுவது சிறப்பம்சமாகும்.

"ஏனோ தெரியவில்லை... இன்னும் திருமணம் தள்ளிப் போகிறது; தடைப்படுகிறது' என்று வருத்தப்படுபவரா நீங்கள்? கவலையை விடுங்கள். மாதந்தோறும் அமாவாசையன்று இவ்வாலயத்தில் அருள்பாலிக்கும் அங்காளம்மன் மற்றும் பெரியாண்டவருக்கு சம்பங்கிப் பூக்களாலான மாலை அணிவித்துப் பிரார்த்தனை செய்தால் மிக விரைவாகத் திருமணம் கைகூடுவதாக இங்குவரும் பக்தர்கள் கூறுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறி திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் இவ்வாலயத்திற்கு தம்பதிகளாய் வந்து அம்பாளுக்கு மனம்குளிர வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, பொன் பொட்டு கட்டிவிட்டுச் செல்கி றார்கள்.

வீடு கட்டுவதென்பது சாதாரண விஷயமா? எவ்வளவு சிரமங்களை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும்! பணம் இருக்கலாம். ஆனால் வீடுகட்டும் வேலை தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்று எவ்வளவோ பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இறையருள் இருந்தால் மட்டுமே இவையனைத்தும் சாத்தியம். சிலருக்கு வாஸ்து தோஷம்; சிலருக்கு வீடுகட்டத் தடையாக ஜாதகத் தில் பல்வேறு கோளாறுகள் இருக்கும். எப்பேர்ப்பட்ட தடையாக இருந்தாலும் சரி; வீடு கட்டும்முன் ஒரு மஞ்சள்பூசிய செங்கல் இந்த அம்மனிடம் வைத்து வழிபாடு செய்து, அம்மனின் அபிஷேகத் தீர்த்தத்தைப் பெற்றுச்சென்று, பூமி பூஜையின்போது முதல் கல்லாக பூஜிக்கப்பட்ட அந்தக் கல்லை வைத்து அபிஷேக தீர்த்தத்தை அதன்மீது ஊற்றவேண்டும். பிறகு பராசக்தியை மனதில் நினைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்தபிறகு வீடுகட்டும் பணியைத் தொடங்கி னால், தங்குதடையின்றி வேலைகள் முடிந்து புது வீட்டில் குடிபுகுந்து குதூகலமாக வாழலாம். இவையெல்லாமே இந்த அம்பாளின் அருளால் கிடைத்துள்ளதாக பலனடைந்த பல பக்தர்கள் இங்கு கூறுவதைப் பார்க்கலாம்.

புதிய வாகனம் வாங்குவோர் அனைவருமே இக்கோவிலுக்கு வந்து அம்மன் சந்நிதிமுன் நிறுத்தி, எலுமிச்சம்பழ மாலை அணிவித்து, பூ, எலுமிச்சம்பழம் வைத்துப் பூஜைசெய்து, சாவியை அம்பாள் மடியில் வைத்து பூஜிக்கப்பட்ட பிறகே வாகனத்தை எடுத்துச்செல்கின்றனர். "இப்படிச் செய்வதால் வாகனத்தால் எங்களுக்கு எந்தவிதமான விபத்துகளும் ஏற்படுவதில்லை; எங்களை கண்ணிமைபோல் காப்பாற்றுகிறாள் பராசக்தி'' என்று கூறுகிறார்கள்.

"படித்து முடித்துவிட்டோம்; படிப்புக் கேற்ற வேலை கிடைக்கவில்லை' என்ற மன வருத்தத்தில் இருப்பவர்கள் தங்கள் கல்விச் சான்றிதழை அம்மனின் மடியில் வைத்து வழிபாடு செய்தால் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கிறது அப்படி கிடைத்தவர்கள் தாங்கள் வாங்கும் முதல் சம்பளத்தை அம்மனின் மடியில் வைத்துப் பூஜித்தபிறகுதான் வீட்டுக்கு எடுத்துச்செல்கின்றனர்.

நாம் சொல்லடியிலிருந்துகூட தப்பி விடலாம்; ஆனால் கண் திருஷ்டியிலிருந்து தப்பவேமுடியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையை கண்திருஷ்டி புரட்டிப் போட்டுவிடும். எந்தவிதமான திருஷ்டியாக இருந்தாலும் சரி; இவ்வாலயத்திற்கு வந்தால், கண்திருஷ்டி நீங்க பிரார்த்தனை செய்தபின் அம்பாளின் திருப்பாதத்தின் கீழே இருக்கும் திருநீறு நிரப்பிய பிரம்ம கபாலத்தை நம் சிரசில் மூன்றுமுறை வைத்து எடுத்து, பின்னர் அதிலிருக்கும் திருநீறை நமக்குத் தருவார்கள். அதை நாம் நெற்றியில் இட்டுக்கொண்டு, சிறிது வீட்டின் பூஜையறையில் வைத்துவிடவேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு ஏற்பட்டுள்ள கண் திருஷ்டி நீங்கிவிடும். பூஜிக்கப்பட்ட அந்த விபூதி வீட்டில் இருக்கும்வரை எந்த திருஷ்டியும் நம் வீட்டை அண்டாது என்று நம்புகின்றனர்.

இவ்வாலயத்தைப் பொருத்தவரை சர்வ பிரார்த்தனைத் தலம் என்றுகூட கூறலாம். எல்லாவற்றுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். அம்பாளின் அருளால் எல்லாமும் நமக்குக் கிடைக்கும். அப்படிப்பட்ட அம்மனை தரிசிக்க ஒருமுறை சிதம்பரத்திற்கு வாருங்கள்.

கோவில் இருப்பிடம்: சிதம்பரத்தில் அங்காளம்மன் கோவில் தெருவில் ஆலயம் உள்ளது. கடலூர் மார்க்கமாக வந்தால் கஞ்சித்தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும், மயிலாடுதுறை மார்க்கத்திலிருந்து வந்தால் தெற்கு வீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவ்வாலயத்தை அடையலாம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும். மாதந்தோறும் அமாவாசையன்று மட்டும் இருவேளையும் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.

குறிப்பு: கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டால், மாதந் தோறும் அமாவாசையன்று பூஜை செய்யப் படும் பிரசாதம் வெளியூர் பக்தர்களுக்கு கூரியர்மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது.

வி. செல்வம், 98654 90324; எஸ். கவிதா, 85310 47255.

om010722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe