Advertisment

அதிசயம் புரியும் ஒட்டனந்தல் அருட்பிரசாதம்! - எஸ்.பி.சேகர்

/idhalgal/om/amazing-ottanandal-aruprasad-sp-shekhar

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்பது அனைவரும் அறிந்ததே.

Advertisment

சக்திபாலன், சரவணன், சுப்பிரமணியன், குருபரன், கார்த்திகேயன், சுவாமிநாதன், தண்டபாணி, அமுதன், பாலசுப்பிரமணியன், அழகன், உதயகுமாரன், பரமகுரு, குமரகுரு, உமைபாலன், சத்குணசீலன், குமரேசன், மயில்வாகனன், தணிகைவேலன், சண்முகன், உத்தமசீலன், ஆறுமுகன், பிரபாகரன், சௌந்தரன், படையப்பா, கருணாகரன், சேனாபதி, குகன், சித்தன், முத்துக்குமரன், வேல்முருகன், கந்தவேள், வேலாயுதன், வேலவன், வைரவேல், தங்கவேல், முத்துவேல், பழனி வேல், கதிர்வேல் என அழகன் முருகன் பல்வேறு பெயர்களுடன் தமிழகத்தில் கோவில்கொண்டுள்ளார். குமரக்கடவுள் முருகனை குறிஞ்சிநில தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள்.

ar

சேவல் கொடி, வஜ்ஜிரம், அங்குசம், அம்பு, வேல், தண்டாயுதம் போன்றவற்றை ஏந்திலிருப்பார் முருகன். இவற்றில் முதன்மை யான ஆயுதம் வேல். அந்தவகையில் பாலசுப்பிர மணியர் என்னும் பெயரில், தன் மணவாட்டி கள் வள்ளி, தெய்வானை சமேதராக ஒட்டனந் தல் கிராமத்தில் கோவில் கொண்டுள்ளார். இவருக்கு ஏவல் தெய்வங்களாக இடும்பன் சாமி, மொட்டையாண்டி ஆகியோர் உள்ளனர். இவர்கள் பாலசுப்பிரமணியரிடம் பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை, அவரின் உத்தரவுப்படி நிறைவேற்றி வருகிறார் கள்.

விநாயகப் பெருமானுக்கு மாதந்தோறும் சதுர்த்தி. அதேபோல் சிவபெருமானுக்கு மாத சிவராத்திரி; மகா விஷ்ணுவான பெருமாளுக்கு மாத ஏகாதசி. குமரக் கடவுளான முருகனுக்கு சஷ்டி. இப்படி மாதந்தோறும் வரும் சஷ்டியன்று இக்கோவிலில் பாலசுப்பிர மணியருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து, கோவிலுக்குவரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்பது அனைவரும் அறிந்ததே.

Advertisment

சக்திபாலன், சரவணன், சுப்பிரமணியன், குருபரன், கார்த்திகேயன், சுவாமிநாதன், தண்டபாணி, அமுதன், பாலசுப்பிரமணியன், அழகன், உதயகுமாரன், பரமகுரு, குமரகுரு, உமைபாலன், சத்குணசீலன், குமரேசன், மயில்வாகனன், தணிகைவேலன், சண்முகன், உத்தமசீலன், ஆறுமுகன், பிரபாகரன், சௌந்தரன், படையப்பா, கருணாகரன், சேனாபதி, குகன், சித்தன், முத்துக்குமரன், வேல்முருகன், கந்தவேள், வேலாயுதன், வேலவன், வைரவேல், தங்கவேல், முத்துவேல், பழனி வேல், கதிர்வேல் என அழகன் முருகன் பல்வேறு பெயர்களுடன் தமிழகத்தில் கோவில்கொண்டுள்ளார். குமரக்கடவுள் முருகனை குறிஞ்சிநில தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள்.

ar

சேவல் கொடி, வஜ்ஜிரம், அங்குசம், அம்பு, வேல், தண்டாயுதம் போன்றவற்றை ஏந்திலிருப்பார் முருகன். இவற்றில் முதன்மை யான ஆயுதம் வேல். அந்தவகையில் பாலசுப்பிர மணியர் என்னும் பெயரில், தன் மணவாட்டி கள் வள்ளி, தெய்வானை சமேதராக ஒட்டனந் தல் கிராமத்தில் கோவில் கொண்டுள்ளார். இவருக்கு ஏவல் தெய்வங்களாக இடும்பன் சாமி, மொட்டையாண்டி ஆகியோர் உள்ளனர். இவர்கள் பாலசுப்பிரமணியரிடம் பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை, அவரின் உத்தரவுப்படி நிறைவேற்றி வருகிறார் கள்.

விநாயகப் பெருமானுக்கு மாதந்தோறும் சதுர்த்தி. அதேபோல் சிவபெருமானுக்கு மாத சிவராத்திரி; மகா விஷ்ணுவான பெருமாளுக்கு மாத ஏகாதசி. குமரக் கடவுளான முருகனுக்கு சஷ்டி. இப்படி மாதந்தோறும் வரும் சஷ்டியன்று இக்கோவிலில் பாலசுப்பிர மணியருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து, கோவிலுக்குவரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது. இதை விருப்பப்படும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் முன்கூட்டியே கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று செய்துவருகிறார்கள்.

Advertisment

ar

தெய்வங்களில் "மூர்த்தி பெரிதா கீர்த்தி பெரிதா' என்ற கேள்விக்கு, "கீர்த்தியே பெரிது' என்பார்கள். அப்படி இங்குள்ள பாலசுப்பிரமணி யரின் கீர்த்தி தமிழகத்தைக் கடந்து ஆந்திரா, கர்நாடகா, மும்பை என இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியுள்ளது.

அப்படிப்பட்ட கீர்த்தி என்னவென்பது குறித்து ஊர் முக்கியஸ்தர்களான புருஷோத்த மன், தண்டபாணி, இளங்கோவன் ஆகியோரி டம் கேட்டோம்.

ar

"சுமார் 1,000 தலைக்கட்டு குடும்பங்கள் வாழும் எங்கள் ஊர் ஒற்றுமையானது. எங்களின் பிரதான தெய் வம் பாலசுப்பிர மணியர். கோவிலுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரத் திருவிழாவுக்கு, ஒன்பது நாட்களுக்கு முன்பு காப்புக் கட்டி திருவிழா தொடங்கப் படும். முதல்நாள் திருவிழாவின்போது சுவாமிகளுக்கு செய்யப்படும் பூஜையில் ஒரு எலுமிச்சம் பழம் வைக்கப்படும். பூஜை முடிந்தபிறகு அந்த எலுமிச்சம் பழத்தையெடுத்து முருகனின் ஆயுதமான வேலின் முனையில் குத்திவைக்கப்படும். அன்றைய பூஜை முடிந்து சுவாமி கோவிலைச் சுற்றி ஊர்வலம் வரும். அதன் பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை யெடுத்து இடும்பன் சாமிமுன்பு கொண்டு சென்று வைக்கப்படும். அப்படி முதல்நாள் வைக்கப்படும் எலுமிச்சம்பழம் இடும்பன் சாமிக்குரியது. இந்த பழத்திற்கு மிகப்பெரிய சக்தியுள்ளது. அதேபோல் தொடர்ந்து ஒன்பது நாட்களும் பூஜைக்கு வைக்கப்படும் ஒவ்வொரு எலுமிச்சம் பழங்களும் தினசரி வரிசையாக எடுத்துவைத்துப் பாதுகாக்கப்படும். ஒன்பதாவது நாள் தேர்த் திருவிழா வெகுவிமர்சையாக வாணவேடிக்கைகளுடன் தொடங்கி, பக்தர்கள் அலகு குத்துதல், பால்குடம், காவடி எடுத்தல் என தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள். பத்தாவது நாள் மஞ்சள் நீராட்டு விழா.

பிறகு 11-ஆவது நாள் இரவு எட்டுமணியளவில் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அவர்கள் முன்னிலையில் எலுமிச்சம் பழ ஏலம் நடைபெறும்.

கோவில் பூசாரி முதல்நாள் சூலத்தில் வைத்து எடுக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை எடுத்துக்காட்டி, "இது இடும்பன் சாமிக்குரிய எலுமிச்சம்பழம். இதை ஏலம் விடப்போகிறோம். ஏலத்தொகை ஆயிரம் ரூபாய்' என்று துவக்கிவைப்பார். இதையடுத்து அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் அந்த ஒரு எலுமிச்சம் பழத்தை ஐந்தாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் என ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு தொகையை உயர்த்தி ஏலம் கேட்பார்கள். அதிக தொகைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களிடம் அந்த எலுமிச்சம் பழத்தைக் கொடுப்பார்கள். அதன்பிறகு மீதியுள்ள எட்டு எலுமிச்சம் பழங்களையும் ஏலத்தின்மூலம் பக்தர்கள் வாங்கிச்செல்வார்கள். இந்த எலுமிச்சம் பழங்களைப் பெற்றுச்செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில்- மாநிலங்களிலிருந்தும் வருவார்கள்.

arr

பாலசுப்பிரமணியரின் அருளால் அந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறுகிறது. அதிலும் குறிப்பாக- இடும்பன் சாமிக்குரிய முதல்நாள் எலுமிச்சம்பழத்தை அதிக தொகைக்கு ஏலம் எடுப்பார்கள். இதற்குக் கடும் போட்டியிருக்கும். காரணம், திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப் பேறில்லாத தம்பதிகள் அந்த பழத்தை சாப்பிட்டால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப் பேறுண்டு. இந்தப் பழத்தை சாப்பிட்ட பல தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. அதிலும் பலருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்கள் அந்தக் குழந்தைகளுடன் வந்து, ஆலயத்தில் குழந்தையைக் கிடத்தி, குழந்தைக்குப் பெயர் வைத்து சாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

கடந்த ஆண்டு திருவிழாவின் போது நடைபெற்ற ஏலத்தில் முதல் எலுமிச்சம் பழம் மட்டும் 73 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. இப்படி மொத்தம் ஒன்பது எலுமிச்சம் பழங்களும் ஏலத்தில் விடப்பட்டதில் கிடைத்த மொத்த தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய். இந்தப் பணம் அனைத் தும் கோவில் திருவிழாக்களுக்கு செலவிடப்படுகிறது. இவையல்லா மல் ஊர்மக்களும் வெளியூர் பக்தர்களும் கோவிலுக்குத் தங்கள் விருப்பம்போல் காணிக்கை செலுத்திவருகிறார்கள். கோவிலுக்கு சுமார் பத்து ஏக்கர் நிலமுள்ளது. அதில் வரும் வருமானத் தைக் கொண்டும் ஆலய விழாக்களை மிகச் சிறப் பாக நடத்திவருகிறோம்.

arr

இங்கு எலுமிச்சம் பழம் ஏலமெடுப்பதற்காக வெளியூரிலிருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். ஆனால் அவர்கள் ஏலத்தில் பங்குகொண்டு பழத்தை வாங்கமுடியாது. உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஏலம்கேட்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிமுறையை கட்டாயமாக நடைமுறைப் படுத்தி வருகிறோம். காரணம், வெளியூர் பக்தர்கள் போட்டிபோட்டு ஏலம் கேட்கும்போது தேவையற்ற பிரச்சினைகள் வரக்கூடாது. அதேநேரத்தில் எலுமிச்சம் பழத்தைப் பெற நினைக்கும் வெளியூர் பக்தர்கள், உள்ளூர் ஆட்கள்மூலம் தங்களுக்குக் கட்டுப்படியாகும் தொகைவரை ஏலத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்வார்கள், அப்படி உள்ளூர் பக்தர்கள் ஏலமெடுத்து வெளியூர் பக்தர்களுக்கு வழங்குவார்கள். இந்த ஏலம் இரவு 8.00 மணிக்குத் தொடங்கி இரவு 2.00 மணிவரை நடைபெறும். காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் திருவிழாவும் ஏல வைபவமும் நடைபெறும்'' என்றார்கள்.

"ஆலயம் எப்போது உருவானது என்பது எங்களுக்கே தெரியாது. சுமார் 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் எங்கள் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழிவழியாக இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றிவந்தனர்.

அதை நாங்களும் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.

நாங்கள் சிறுவயதாக இருந்தபோது, எங்கள் முன்னோர்கள் எலுமிச்சம்பழம் ஏலம்விடும்போது ஆரம்பத்தொகை 25 பைசாவில் தொடங்கி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்வரை மட்டுமே தொகை உயரும். காலமாற்றம், முருகனின் அருளால் இந்த எலுமிச்சம் பழத்தின் மகிமையறிந்து தற்போது பல ஆயிரக்கணக்கில் ஏலமெடுக்கிறார்கள். இது பாலசுப்பிரமணியரின் மகிமையைத் தவிர வேறில்லை'' என்கிறார் கோவில் பூசாரி சுப்பிரமணியன்.

இக்கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் பாலசுப்பிர மணியர் இருந்தாலும், கருவறையில் வேல் மட்டுமே மூலவ ராக வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

dd

அசுரர்களை அழிக்க அன்னை ஆதிபராசக்தியான பார்வதி தேவியால் முருகனுக்கு வழங்கப்பட்டது வேல். பகைவரை அழித்து தேவர்களைக் காத்த அந்த வேல் தற்போது ஒட்டனந்தல் கிராமத்தில் மக்களின் துயரத்தைத் துடைத்து அவர்களை வாழ்வை வளமாக்கிவருகிறது. மக்களின் வினை தர்க்கும் வேலும், பாலசுப்பிரமணியர் ஆட்சிசெய்யும் ஒட்டனந்தல் கிராமம் எங்குள்ளது?

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்துள்ளது மடப்பட்டு. இங்கிருந்து மேற்கே திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டரிலும், அதேபோல் திருவண்ணாமலை- கடலூர் சாலையில் திருக்கோவிலூரிலிருந்து கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் சாலையை ஒட்டி உள்ளது ஒட்டனந்தல் பாலசுப்பிரமணியர் ஆலயம். திருக்கோவிலூர், மடப்பட்டிலிருந்து அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. தொடர்புக்கு: 76396 06879.

om010423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe