சிவராத்திரி சிவனுக்குப் பிரதானம்; வைகுண்ட ஏகாதசி பெருமாளுக்குப் பிரதானம்; கந்த சஷ்டி முருகனுக்குப் பிரதானம்.
ராமநவமி ராமருக்குப் பிரதானம்; ஸ்ரீஜெயந்தி கண்ணனுக்குப் பிரதானம்; விநாயகர் சதுர்த்தி கணபதிக்குப் பிரதானம்.
நவராத்திரி ஒன்பது இரவுகள், விஜயதசமியைச் சேர்த்து பத்து நாட்கள் தேவிக்கே- பெண்களுக்கே பிரதானம்.
மகிஷாசுராதி அசுரர்களை அழிக்க மும்மூர்த்திகளாலும் இயலாது; ஒரு கன்னிப் பெண்ணால்தான் அது நடக்கும் என்பது வரம். ஆக பிரம்மா, விஷ்ணு, சிவசக்தியே துர்க்காவாக உதித்து தசமி அன்று வென்றாள்.
ஆக, அத்தினம் விஜயதசமி என்று வெற்றிபெறும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது திருப்பதியில் பாலாஜிக்கு பிரம்மோற்சவம் நடக்கும். ஏன்? லலிதாசஹஸ்ர நாமம் (267) கூறும்- "தேவி கோவிந்தரூபிணி' என்று. கோவிந்த மூலஸ்தான (கல்) விக்ரகத்தில் சங்கு, சக்கரம் இல்லை. வேல், திரிசூலம்போல் பொருத்தப்பட்டுள்ளது. கட்டுவது 18 கஜ புடவை. வெள்ளிக்கிழமை அபிஷேகம். நாகாபரணங்களும் உண்டு. கோபுரம்மேல், முதல் பிராகார மதிலில் சிங்க வாகனமே உள்ளது; கருடன் அல்ல! எம்மதமும், எவ்வுருவமும் சம்மதம். பிரம்மத்திற்கு வடிவு கிடையாதே!
தென்னாட்டில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா, அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி, அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி என பூஜைகள்செய்து, பத்தாம் நாள் மகிஷாசுரனை தேவி அழித்த வெற்றிநாளாக- வீதிவலத்துடன் விழா நடத்துவார்கள். தேவி உபாசகர்கள், பக்தர்கள், லலிதாசஹஸ்ர நாமம், திரிசதி, லட்சார்ச்சனை, நவசண்டி ஹோமம், துர்க்கா சப்தசதி, தேவிபாகவதம் பாராயணம் செய்வார்கள். சங்கீதம் அறிந்தவர்கள் நவாவரணப் பாடல்கள் பாடுவர்.
பல கிராமங்களிலும் ஊர்களிலும் காத்தாயி, மகமாயி, கருமாரி என்றெல்லாம் கோவில்கள் உள்ளன. அவற்றில் சப்த கன்னிமார்கள், சப்த மாதாக்கள் என்று உருவமாகவோ, லிங்கம்போல் அருவுருவமாவோ இருக்கும். பல புராதன சிவன் கோவில்களிலும் சப்த மாதாக்கள் உண்டு. நவராத்திரியில் அபிஷேக ஆராதனைகள், பொங்கலிடுதல் என கோலாகலமாக விளங்கும். அவர்களைப் பற்றி சிறிது சிந்திப்போமா!
சப்த மாதாக்கள்
தேவி பாகவதம், தேவி புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், விஷ்ணு தர்மோ

தேவி பாகவதம், தேவி புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், விஷ்ணு தர்மோத்தரம், பத்ரகாளி மகாத்மியம் முதலியவற்றில் சப்த மாதாக்களைக் காணலாம்.
கண்ணன் பாரதப் போருக்குமுன்பு தூது சென்றபோது, அங்கு தனது விஸ்வரூபம் காட்டியபோது அதனில் சப்த மாதாக்களும் இருந்தனர் என்று, தேவர்கள் கண்ணனை இவ்வாறு போற்றினர்.
"மதனப்புத்தேள் பொடிபட விழித்த
நுதல் பெருநயனத்தொரு பெருங்கடவுளும்
நான்முகத்தொருவனும் வானகத்தரசனும்
அறுமுகத்தொருவனும் உறுசுடர்பரிதியும்
இயமனும் வருணனும் எண்வகை வசுக்களும்
வீரப்பெண்மையின் மெல்லியர் எழுவரும்
போர்விறற் சிலைக்கை பொருகயற் கண்ணியும்v எல்லோரும் வான்மீது நின்று
மாதவா முனியேல் மாயா முனியேல்'
என்று வேண்டுகிறார். இதனில் ருத்ரன், பிரம்மா, இந்திரன், முருகன், சூரியன், எமன், வருணன், அஷ்டவசுக்கள், வீரப்பெண்மணிகளான பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, ஐந்த்ரி, சாமுண்டா முதலான ஏழு தேவிகள், துர்க்கை குறிக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் அவதாரமும் வெவ்வேறுவிதமாய் சிந்திக்கப்படுகிறது. ஆக, அந்த சப்தமாதாக் களை சிந்தித்து வணங்கி அருள்பெறுவோம்.
அந்தகாசுர வதத்திற்காக சிவபெருமான் யோகநிலையில் ஆழ்ந்திருந்தார். அப்போது அந்தகன் பார்வதி தேவியைக் கைப்பற்ற படையெடுத்தான். நிலையை உணர்ந்த பார்வதி, பிரம்மா, திருமால், ஷண்முகன் மற்றும் தேவர்களை நினைத்தாள். பார்வதி தனித் திருக்கும் நிலையில் ஆண் வடிவில் செல்ல வேண்டாமென்று அவர்கள் சக்திப் பெண் வடிவம் கொண்டனர்.
எவ்வாறு?
பிரம்மனின் சக்தியே பிராம்மி.
திருமாலின் சக்தியே வைஷ்ணவி.
முருகனின் சக்தியே கௌமாரி.
இந்திரனின் சக்தியே இந்திராணி.
ஈசனின் சக்தியே சாமுண்டி.
அனந்தரின் சக்தியே வாராஹி.
மகேஸ்வரன் சக்தியே மஹேஸ்வரி.
அந்த சக்திகளிலிருந்து பல துணைசக்திகளும் தோன்றிட,
பார்வதி அவர்களிடம் "அந்தகாசுரனை போரிட்டு வெல்லுங்கள்' என்றாள். போரின் இறுதியில் சிவபெருமான் யோகநிலையிலிருந்து விடுபட்டு, அந்தகாசுரனை சூலத்தால் அழித்தார். அவன் சூலத்தில் தொங்கியபடி சிவபார்வதியரிடம் மன்னிப்புக் கேட்க, அவனை ஒரு கணபதியாக்கினாராம் சிவன். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் நடந்ததாக தலபுராணம் கூறுகிறது.
மார்க்கண்டேய புராணம் இவர்கள் அவதாரத்தை வேறு விதமாகக் கூறும். மகிஷாசுர வதத்திற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒன்றிய சக்தியாக துர்க்கா தோன்றினாள். சண்டமுண்டர்கள் தேவியின் எழிலில் மயங்கி அவளை அடைய எண்ணினர். துர்க்கா, சரஸ்வதி தேவியை போரிடக் கூறினாள். அம்பிகை முகம் கோபத்தினால் ஜுவாலையானது. சண்டமுண்ட அசுரர்களை அழிக்க, ஆதிபராசக்தியின் முகத்திலிருந்து பிராம்மியும், கைகளிலிருந்து வைஷ்ணவியும், கழுத்திலிருந்து கௌமாரியும், பிருஷ்ட பாகத்திலிருந்து வாராஹியும், ஸ்தன மண்டலத்திலிருந்து இந்ராணியும், நெற்றியிலிருந்து சாமுண்டாவும் உதித்தனர். இவர்கள் ஆறு மாதாக்களானார்கள். சரஸ்வதியின் உதவியுடன் சண்டமுண்டர்கள் வதம் செய்யப்பட்டனர். இவர்களுடன் மகாலட்சுமியும் சேர்ந்திட, யந்திரங்கள் அனைத்திலும் அஷ்டதளங்களில் இடம்பெற்றனர். தேவியின் நவாவரண சக்கரத்தில், நாற்கோணங்கள் உடைய த்ரைலோக்ய மோஹன சக்கரத்தில், முதல் ஆவரணத்தில் பூஜிக்கும் வரம்பெற்று, லலிதா தேவிக்கு ஆவரண தேவியாய் சேவை புரிகின்றனர்.
இந்த சப்த மாதாக்களைப் பற்றி தனித் தனியே சிந்திப்போமா!
பிராம்மி
பிரம்மனின் சக்தியான தேவி. அன்ன வாகனம். மேற்குத் திக்கில் இருக்கும் அனைத்தையும் ரட்சிப்பவள். புள்ளிமானின் தோலை ஆடையாக அணிபவள். பிரம்மன் வழிபாடு சூரிய வழிபாட்டுடன் தொடர்புடையது. சூரிய ஒளியைப் பரப்பும் சந்நியாதேவிபோல, பிரம்மனைப்போல நான்கு முகம், கமண்டலம், ஜபமாலை, புத்தகம் ஏந்துபவள். வாக்தேவி. வேள்விகளைக் காப்பவள். போரில் ஆயுதங்களுடன் காணப்படுவாள்.
மந்திரம்: ஓம் ப்ராம் ப்ராம் ஹை நம:
காயத்திரி:
ஓம் ப்ரம்ம சக்தியை ச வித்மஹே
பீதவர்ணாய தீமஹி
தந்நோ ப்ராம்மி ப்ரசோதயாத்.
மாஹேஸ்வரி
மஹேசன் எனும் சிவமூர்த்தியின் சக்தி. இடப வாகனத்தில் மான், மழு ஏந்துபவள். கத்தி, கபாலம், சூலமும் உண்டு. அபய வரத கரங்கள். ஐந்துமுகம்; நெற்றிக்கண்ணும் உண்டு. வெண்மை நிறத்தினள். பிறைச்சந்திரன் தலையில். ரிஷிகள், நந்தி கணங்களின் வேத கோஷப் ப்ரியை. இவளது சூலாயுதத்தினா லேயே மஹிஷாசுரன் அழிந்தான்.
மந்திரம்: ஓம் மாம் மாஹேஸ்வர்யை நம:
காயத்திரி:
ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.
வேள்விகளைக் காப்பவள். மக என்றால் வேள்வி. வேள்வி நன்கு நடந்தாலே மழை பெய்து, தானியங்கள், காய்கனிகள் பெற ஏதுவாகி, ஆகாரம் அளவின்றிக் கிடைக்கும்.
கௌமாரி
குமரனின் சக்தியாக உதித்தவள். எனவே ஆறு முகங்கள், பன்னிரு கைகள், மயில் வாகனம்.
இவளுக்கு சஷ்டி தேவி, தேவசேனா என்றும் பெயர். வேல் தாங்கிய படைத்தலைவி. சிவந்த நிறத்தினள். தேவியின் கழுத்திலிருந்து உதித்தவள். சந்தான ப்ராப்தி அடைவிப்பவள்.
மந்திரம்: ஓம் கௌம் கௌமார்யை நம:
காயத்திரி:
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்.
வைஷ்ணவி
மகாவிஷ்ணுவின் சக்தியே வைஷ்ணவி. பராசக்தியின் கைகளிலிருந்து உதித்தவள். சைவ சமய நூல்கள் பராசக்தியின் ஆண் வடிவமே புருஷ சக்தியான விஷ்ணு என்று சொல்லும். "போகேச பவானி, புருஷேச விஷ்ணு, க்ரோதேச காளி, சமரேச துர்க்கா' என்பது வைஷ்ணவி அவதார உருவங்கள். துர்க்கையின் கைகளில் மகாவிஷ்ணுவுக்குரிய சங்கு, சக்கரம் இருக்கும். வைஷ்ணவி கைகளிலும் அவ்வாறே. காக்கும் தேவி மகாலட்சுமியான வைஷ்ணவி கருட வாகனத்தில் அமர்ந்து, சாந்த முகத்துடன் நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிப்பவள்.
மந்திரம்: ஓம் வை வைஷ்ணவ்யை நம:
காயத்திரி:
ஓம் ஸ்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹிv தந்நோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.v வைஷ்ணவி தலத்தில்,
பிண்ட லிங்க ரூபமாகத் தான் மூன்றாக துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள். நீண்ட கடின பயணம். ஆயினும் மக்கள் தரிசித்து இன்புறுகிறார்கள்.
வாராஹி
தேவியின் பின்புறத்திலிருந்து உதித்தவள். இவள் பூமாதேவியின் அம்சம். விஷ்ணுவின் வராக அவதார அம்சம். பன்றி முகம் கொண்டவள். தேவியின் படைத்தலைவி. பஞ்சமி, தண்டினி, தண்டநாதா என்று பெயர்.
தாருகாசுரனுடன் நடத்திய போரில் காளிக்கு உதவியாகவும், சும்பாசுரனுடன் நடந்த போரில் சண்டிதேவிக்கு உதவியாகவும், பண்டாசுர யுத்தத்தில் லலிதாதேவிக்கு உதவியாகவும் இருந்தவள். சேனைகளின் தலைவி.
எனவே எல்லா சேனைகளாலும் வணங்கப் படுபவள். கலப்பையை ஏந்துபவள். வாராஹி வீரிய நந்தனா. வீரம், தீரம், கோபம் மிகுந்தவள்.
எனவேதான் "வாராஹி பக்தனுடன் வாதாடாதே' என்பர். சிம்மம், மான், சர்ப்பம் ஆகிய வாகனத்தில் அமர்பவள். ஆடி மாத நவராத்திரியை வாராஹி நவராத்திரி என்று தேவி பக்தர்கள் கொண்டாடுவார்கள்.
மந்திரம்: ஓம் வாம் வாராஹ்யை நம:
காயத்திரி:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்.
இந்திராணி (ஐந்த்ரி)
ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தவனே இந்திரப் பதவியடைய முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அஷ்டதிக் பாலர் களுக்கும் தலைவன். அந்த இந்திரனின் அம்சமே இந்திராணி. எனவே ஐராவதமே வாகனம்.
இந்திர நீலக்கல்லின் நிறமுடையவள். குலிசம், வஜ்ராயுதம் தாங்கியவள். தேவியின் ஸ்தன மண்டலத்திலிருந்து உதித்தவள். தன்னை வணங்குபவர்களுக்கு அழகு, தைரியம், வளமுள்ள வாழ்வையும் தருபவள்.
மந்திரம்: ஓம் ஈம் இந்த்ராண்யை நம:
காயத்திரி:
ஓம் ஸ்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்.
சாமுண்டா
தாருகன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கித் தவம்செய்து வரம் பெற்றான். மரணமற்ற நிலை, அம்ருத பலம், பிரம்ம தண்டம் பெற்று அகங்காரத்தினால் யாவரையும் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மனை வேண்ட, அவர் தாருகனை "நீ ஒரு பெண்ணால் அழிவாய்' என சபித்தார். அப்போதும் அவன் திருந்தாமல் தேவலோகத்தைக் கைப்பற்றி யாவரையும் துன்புறுத்த, விஷ்ணு, பிரம்மா, ருத்ரர் தேவியைத் துதிக்க, அவள் உடலிலிருந்து முன்பு கூறியபடி பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி தோன்றினர். மகேஸ்வரி அவனை சூலத்தால் குத்த, ரத்தம் வழிய, அதிலிருந்து அனேக அசுரர்கள் தோன்றினர். தாருகன் சிவனை எக்காளிக்க, மகேஸ்வரன் ருத்ரரூபியாக, அவரது நெற்றிக்கண்ணிலிருந்து பத்ரகாளி தோன்றினாள். வெகுபயங்கர உருவம்.
தாருகனுடன் போர்புரிந்து வென்றாள். தேவி மஹாத்மியம் சண்டமுண்ட அசுரர்களைக் கொன்றதால் அவள் "சாமுண்டி' என்று பெயர் பெற்றாள் என்கிறது.
மைசூரில் சாமுண்டீஸ்வரியை தனிக் கோவிலில் காணலாம். பல கிராமங்களில் இவளே கிராம தேவி. சிவகாளி என்றும் கூறுவர். பிரேதத்தை வாகனமாகக் கொண்டவள். சிவந்த நிறத்தினள். பயங்கர உருவுடைய வள். வீரமிக்கவள். வெற்றியைத் தருபவள்.
மந்திரம்: ஓம் சாம் சாமுண்டாயை நம:
காயத்ரி:
ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்.
இந்த சப்த மாதாக்களை ஆழ்ந்து துதித்திட,
வீரம், தீரம், கல்வி, ஞானம், சௌக்கியம் யாவும்
பெற்று இன்பமாய் வாழலாம்.