Advertisment

அத்தனை அம்சங்களும் அரியாசனத்தில்! -அடிகளார் மு. அருளானந்தம்

/idhalgal/om/all-features-are-throne

சித்தர் கால சிறந்த நாகரிகம்!

5

ன்னெடுங்காலமாக வேளாண் தொழிலை வளர்த்துவந்த தமிழர்கள், காடு கெடுத்து நாடாக்கி குளந்தொட்டு வளம்பெருக்கி, நீண்ட நெடிய நிலங்களைச் செழிக்கச் செய்தனர். அவ்வுயர்குடி மக்கள், தங்களுக் கென்று ஒரு தலைவனை உருவாக்கி நெடுஞ்செழியன்’ எனப்பெயரிட்டு அழைத்தனர்.

Advertisment

அதன்பிறகே உணவு, உடை, உறைவிடத்திற்கான மக்களின் போராட்ட வாழ்க்கை நீங்கியது. உணவுக்காக விலங்கினங் களைக் கொல்லும் கொலைத் தொழிலையும் விட்டொழித்தனர்.

சைவ சித்தாந்தத்தை வளர்த்த யாகங்கள்!

chair

அளவுக்கு மேல் விளைந்த நெல், துவரை போன்ற பருப்பு வகைகள் முதலான பண்டங்களை பசியால் வருந்தும் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பகுத்துக் கொடுக்கின்ற ஈர நெஞ்சமும், ஈகைக் குணமும் கொண்ட பேரறிவுடைய பாண்டிய மன்னர் கள் பலரும், தங்கள் குருவால் உருவாக்கப் பட்டனர். அந்த உயர்குடியினர் விளைவித்த பண்டங்களைப் பிரித்து மக்களுக்கு ஈவதையும், அவற்றை சுவைமி

சித்தர் கால சிறந்த நாகரிகம்!

5

ன்னெடுங்காலமாக வேளாண் தொழிலை வளர்த்துவந்த தமிழர்கள், காடு கெடுத்து நாடாக்கி குளந்தொட்டு வளம்பெருக்கி, நீண்ட நெடிய நிலங்களைச் செழிக்கச் செய்தனர். அவ்வுயர்குடி மக்கள், தங்களுக் கென்று ஒரு தலைவனை உருவாக்கி நெடுஞ்செழியன்’ எனப்பெயரிட்டு அழைத்தனர்.

Advertisment

அதன்பிறகே உணவு, உடை, உறைவிடத்திற்கான மக்களின் போராட்ட வாழ்க்கை நீங்கியது. உணவுக்காக விலங்கினங் களைக் கொல்லும் கொலைத் தொழிலையும் விட்டொழித்தனர்.

சைவ சித்தாந்தத்தை வளர்த்த யாகங்கள்!

chair

அளவுக்கு மேல் விளைந்த நெல், துவரை போன்ற பருப்பு வகைகள் முதலான பண்டங்களை பசியால் வருந்தும் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பகுத்துக் கொடுக்கின்ற ஈர நெஞ்சமும், ஈகைக் குணமும் கொண்ட பேரறிவுடைய பாண்டிய மன்னர் கள் பலரும், தங்கள் குருவால் உருவாக்கப் பட்டனர். அந்த உயர்குடியினர் விளைவித்த பண்டங்களைப் பிரித்து மக்களுக்கு ஈவதையும், அவற்றை சுவைமிக்க உணவாக மாற்றி விருந்தோம்பல் செய்வதையும் மக்கள் வேள்வியாகவே (மானுட யாகம்) போற்றி வளர்த்தனர். தங்களை மட்டுமல்லாது ஏனைய சிற்றுயிர் களையும் பாதுகாக்கும் பொருட்டு மேற்கொண்ட கொல்லா அறத்தினை, உயிர் வேள்வி (பூத யாகம்) எனப் பெயரிட்டு அழைத்தனர்.

Advertisment

இறந்துபட்ட தம் முன்னோர்களை நோக்கிச் செய்யும் நன்றிக்கடன் வழிபாட்டை தென்புலத்தார் வேள்வி (பிதுர் யாகம்) என்று போற்றினர்.

மேற்கண்ட வேள்விகளைச் செய்தமையால் தமக்குப் பயன்தரும் பொருட்டு இறைவனைத் தொழும் முறைகளுக்கு கடவுள் வேள்வி (தேவ யாகம்) எனக் கூறி சிறப்பித்தனர். தமக்கும் பிறருக்கும் அனுபவ அறிவை விளக்கி, அதன்படி முயற்சிகள் யாவும் பயன்பெறச் செய்யும் வழிமுறைகளைத் தெளிவுபடுத்தும் நூலோது முறையைக் கலை வேள்வி (பிரம்ம யாகம்) என்றும் துதித்தனர். இவ்வாறு வகுக்கப்பட்ட ஐவகை வேள்விகளையும், நாட்டை ஆளும் நெடுஞ்செழியன் செய்தாக வேண்டும் என்று அன்றைய சான்றோர் வலியுறுத்தினர். இவ்விதத்தில்தான் சைவ சித்தாந்தக் கருத்துக்கள், மன்னர்கள் மற்றும் மக்களிடையே வளரத் தொடங்கின.

இதுபோன்ற ஒரு வழிகாட்டலில் நடத்தப்படும் மன்னனின் ஆட்சியானது, நீண்ட நெடுங்காலம் எவ்வித உடல் தொந்தரவும், மனத்தொந்தரவும் இல்லாத நிலையில் செழித்திட வேண்டும் என்பதற்காகவே, மன்னனை கவனித்துக் கொள்வதற்கு சிறந்த மருத்துவர் குழுவும், மதிநுட்பம் உடைய அறிஞர் குழுவும், மன்னனின் வாழ்வியல் விதி சிறப்பாக அமைவதற்காக சீரிய வானசாஸ்திர நிபுணர்களும் ஏற்படுத்தி சிரத்தையோடு மன்னனை கவனித்துக்கொண்டனர். இவர்களின் ஆலோசனைகளைப் பெறும் மன்னன், ஒவ்வொரு நாளும் நீதி நெறிமுறைப் படி, குறைதீர்க்கும் கொலுமண்டபத்தில் மக்களைச் சந்தித்தான். அவன் அமரக் கூடிய ஆசனமும், நீதியின் அடையாளச் சின்னமாகத் திகழும் வெண்கொற்றக் குடையும் மிக ரகசியமான முறையில் உருவாக்கப்பட்டன.

வெண்கொற்றக்குடையில் வானவியல் சூத்திரம்!

குடிமக்களின் உயிராகத் திகழும் தென்னவனின் ஆசனம் கீழ்க்கண்ட முறையில் உருவானது.

table

(வரைபடம் 1-ஐக் காண்க).

இவ்வாறு சக்திபீட அட்சரமாகவே உருவாக்கப்பட்டு, நடுவில் உள்ள முக்கோணத்தில் ‘"அ, ‘உ'’ ஆகிய புள்ளிகளுக்கு மேல் இரண்டு சிங்கங்களும், "இ' என்ற இடத்தில் வெண்கொற்றக் குடையைத் தாங்கி நிற்கும் செங்காளி மரத்தண்டமும் நாட்டி, மையத்தில் "ஓம்' என்ற புள்ளிக்கு நேராக மன்னனின் முதுகுத்தண்டு படும்விதத்தில் ஆசனம் அமைத்தனர். மேலும், இந்த ஆசனச் சக்கரத்திற்கு ஒத்த வடிவமுள்ள வெண்கொற்றக்குடையை நிறுவி, அக்குடையின் மையப்புள்ளியில் கீழ்நோக்கிய பொற்குமுழினைப் பொருத்தினர். அக்குமிழை, மன்னனின் ஆசனத்தின் நடுவில் உள்ள ‘"ஓம்' என்ற அட்சரத்திற்கு நேராக இருக்குமாறு செய்தனர். வெண்கொற்றக்குடை விளிம்பில், மன்னனின் ஆசனத்தைச் சுற்றி, கீழே அமைந்துள்ள 16 இதழ்களுக்கு நேராகத் தொங்குமாறு, சோனை முத்துக்களால் ஆன 16 முத்துச்சரங்களைத் தொங்கவிட்டனர். கவரிமான் முடியால் உருவான நூலிழைகளாலும், வெண்பட்டு நூலிழைகளாலும் குடையை உருவாக்கி னர். படத்திலுள்ள அமைப்பில், 12 குடை நாண்களை பொற்கம்பிகளால் பொருத்தினர். இரவு நேரத்தில், ஒரு மலைக்குன்றிலிருந்து பார்க்கும்போது தோன்றும் வானத்தின் அரைக்கோளப் பகுதியை, 30 பாகை கொண்ட 12 பகுதிகளாகப் பிரித்து, அதை வெண்கொற்றக்குடையாக அமைத்தனர்.

table

(வரைபடம் 2-ஐக் காண்க).

12 x 30 = 360 பாகை.

இதில், 1 நட்சத்திரம் 13 பாகை 20 கலைகளைக் கொண்டதாகவும்;

1 பாதம் 3 பாகை 20 கலைகளைக் கொண்டதாகவும்;

ஆக, 1 நட்சத்திரம் 4 பாதங்களைக் கொண்டதாகவும்;

27 x 4 = 108 பாதங்களைக் கொண்டதாகவும்;

1 பாதம்- 3 நாட்கள், 24 நாழிகை- 47 வினாடி காலத்தை உடையதாகவும் வானவியலாளரால் கணிக்கப்பட்டு,

மன்னனை தெய்வத்திற்கு ஒப்பாக மதிக்கும் விதத்தில், இந்த வானவியல் சூத்திரம், அவனுடைய வெண்கொற்றக் குடையாக சமைக்கப்பட்டது.

வரும் அத்தியாயத்தில், மர்மங்கள் பலவற்றுக்கு விடை தேடுவோம்!

(தொடரும்)

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om010219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe