1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சுறுசுறுப்பான சூரியனை எண்ணின் நாயகனாகக் கொண்டவர்கள். எப்போதும் ஐப்பசி மாதம் வந்தவுடன், உங்கள் எண் நாயகனான சூரியன், தன்னிச்சையாக துலா ராசியில் பிரவேசித்து நீசமடைந்து விடுவார். ஆனால் இந்த 2023 வருட ஐப்பசி மாதத்தில் அவர் குரு பார்வையைப் பெறுவதால், அந்த நீசம் பங்கமாகி, நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். மேலும் இந்த குரு உங்களின் எண்ணின் நாயகன் வீடான சிம்மத்தையும், எண்ணின் நாயகன் சூரியனையும் ஒருசேர பார்க்கிறார். எனவே, இந்த மாதம் இதுவரையில் இருந்துவந்த தடைகள் இந்த மாதம் நீங்கிவிடும். செயல்கள் உத்வேகம் பெறும். நீங்கள் ரொம்ப சுறுசுறுப்படைவீர்கள். பணவரவு பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களில் நிறைய பேர், தகவல் தொடர்ப்புத்துறை சார்ந்த வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்னும் சிலர் தகவல் தொடர்புத்துறை சாதனங்களின் டீலர்ஷிப் பெறுவீர்கள். சிலர் அவை சார்ந்த சொந்தத்தொழில் துவங்கிவிடுவீர்கள். உங்களில் சிலர், சினிமா, டி.வி. எனும் பொழுதுபோக்கு இனங் களில் பிரகாசிக்க வாய்ப்பு வரும். சில சினிமா கலைஞர்கள் சொந்தமாக சினிமா தயாரிப்பு எடுப்பதும், டி.வி. தொடர் தொடங்குவதும் நடக்கும். பணவரவு செழிப்பாக இருக்கும். சிலசமயம் பணவரவில் தாமதம் ஏற்படும். புதுமனை வாங்கும் யோகம் உண்டு. உங்களின் வாரிசுகளுக்கு திருமணம் கைகூடும். இந்த மாதம் கர்ப்பஸ்திரிகள், மருத்துவரின் அறிவுரையை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவேண்டும். இளைய சகோதரியின் கணவருடன் தொழில் சம்பந்தமான, உதவியும், ஆதரவும் கிடைக்கும். இந்த மாதம், உங்களுக்கு தன்னம் பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வீடு மாற்றம் கண்டிப்பாக உண்டு. இந்த மாதம் பண விஷயங்களை, பெரும் போக்கில் கையாள வேண்டியிருக்கும் சூழலில், அதன் பாதுகாப்பில் கவனமாக இருங்கள். அரசியல்வாதிகள் மிகப்பெரிய பதவியில் அமர்ந்தாலும், உங்களின் சில சொற்களின்மீது, முழு கட்டுப்பாடு அவசியம். மிகப்பெரிய அவமானம் தரகாத்திருக்கிறது.

பரிகாரம்

கும்பகோணம் ஸ்ரீ படவேட்டு மாரியம்மனை வணங்கவும். கஷ்டப்படும் மூத்த சகோதரர் அல்லது சமையல் கலைஞருக்கு பண உதவி செய்யவும். ஐப்பசி 12, 13, 14-ஆம் தேதிகள் நன்மை தரலாம்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

ss

Advertisment

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் சந்திரன் வேக கிரகம் ஆதலால், வேகம் இருக்கும். எனினும் அந்த வேகம் விவேகம் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதம் பணவரவுகள் வந்தோமா, செலவழித்தோமா என இருக்காது. வரும் ஆனா வராது எனும் கதையில், பண வரவு ஆட்டம் காட்டும். எனினும் தேவைப்பட்ட நேரத்திற்கு கிடைத்துவிடும். அரசியல்வாதிகளும், தங்களின் பதவி நாற்காலி பொருட்டு சற்று அல்லாட நேரிடும். எனினும் உங்களின் முழு முயற்சியால் கிடைத்துவிடும். பூர்வீக வீடு விற்பனை சம்பந்தமாக இளைய சகோதரருடன் சிறிது மனக்கசப்பு உண்டாகும். சிலரின் இளைய சகோதரர் கல்வி விஷயமாக வெளிநாடு செல்லக்கூடும். உங்கள் தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம், மனை, தோட்டம் இவை சம்பந்தமாக விற்பதும், வாங்குவதும் இந்த மாதம் சுபத்தன்மையுடன் நடக்கும். உங்கள் வீட்டில், தகுதியுடைய ஒருவருக்கு, அரசு பணி கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக, வெளிநாடு செல்வர். பணியில், பதவி உயர்வு, இடமாற்றத்துடன் கிடைக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழிலை, முதல் போட்டு தொடங்குவீர்கள் சிலருக்கு மருமகள் வரும் நேரமிது. சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இடமாற்றம் பெறுவர். சில டி.வி. கலைஞர்கள், ஒரு பணி நிலையில் இருந்து, வேறு வித வேலைக்கு மாறுவீர்கள். அது நன்மை தரும் விதத்தில் அமையும். உங்கள் மாமனார், மாமியார் வீடு, சொத்து சம்பந்த ஒரு தகவல் கிடைக்கும். இந்த மாதம் பண விஷயமாக கைபேசித் தகவல்களை நம்பி, எந்த தரவுத் தொடர்பு கணக்கை திறக்க வேண்டாம். மொத்த பணமும் போய்விட வாய்ப்புண்டு.

பரிகாரம்

நாகாபரண விநாயகரை வணங்கவும். சமயபுரம் மாரியம்மனை வணங்குவது நலம். காது கேட்காத மழலையர் பயலும் பள்ளிக்கு, தேவையறிந்து உதவி செய்யுங்கள். ஐப்பசி 14, 15, 16-ஆம் தேதிகளில் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் குரு. உங்களின் வாழ்வியலின் அடிப்படை, தர்மமும், நியாயமும் கொண்டு கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். இந்த மாதம் உங்கள் எண்ணின் நாயகன், ராகு எனும் அசுப, பாப கிரகத்திலிருந்து விடுபட்டு, ஸ், அப்பாடா என ரிலாக்ஸ் ஆகிறார். இந்த தெளிவு நிலை, உங்களை உங்கள் குலதெய்வ வழிபாட்டுக்கு வழிவகுக்கும். பணம் கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்கும் போலிருக்கே என நீங்கள் யோசிக்கும் நிலையில், ஒன்று உபரிபணம் கைக்கு கிடைக்கும். அல்லது செலவு கட்டுப்பாடாக இருக்கும். வாரிசுகளின் திருமணம் கண்டிப்பாக நடக்கும். உங்களில் சிலர் அரசுத் துறையில், ஒரு பகுதியில் இருந்து இன்னொரு, மாற்றுப்பணி வேலைக்குச் செல்வீர்கள். திருமணம் சம்பந்தமாக வரனின் மாமியாருடன் சந்திப்பு நடக்கும். சில மறுமணங்கள் நன்கு கூடிவரும். உங்களின் மறைவான துணைகள், வெகு செலவை இழுத்துவிடுவர். உங்கள் தொழில், சில கொடுக்கல்- வாங்கல்மூலம் வெகு. லாபம் பெறும். சில அரசியல்வாதிகளின் துறை மாற்றம் பெறும். மாணவர்கள், புதுமையான கல்வி மாற்றம் பெறுவர். உங்கள் மூத்த சகோதரி, தன்னின் வேலை பதவி உயர்வுக்கு, உங்கள் தந்தையின் உதவியை கோரிப்பெறுவார். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், சற்று கவனமாக இருக்கவேண்டும். உங்களில் சிலர் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, சற்று மருந்து எடுத்துக்கொள்வர். கலைத்துறையினர், தாங்கள் சார்ந்த துறையில், தாங்கள் மிக விரும்பிய, லாபமான மாற்றம் பெறுவர். ஐப்பசி 18, 19, 20-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16 25.

இந்த மாதம் வேலை மாற்றம் மற்றும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட சந்திப்புகளில் சற்று கவனமாக இருக்கவும்.

பரிகாரம்

பண்ணாரி மாரியம்மனை வணங்கவும். உங்களுடன் வேலை செய்பவர்கள், அல்லது உங்கள் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களின், குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான ஜ்யோமெட்ரிக் பாக்ஸ் போன்ற பொருட்களை வாங்கி, பரிசாகக் கொடுங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் ராகு பகவான் ஆவார். அவர் இப்போது தனது இடத்தை மாற்றி, புது வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், உங்கள் செயல்களில் புது மாற்றத்தைக் காண்பீர்கள். உங்களில் சிலர், இதுவரையில் இருந்துவந்த, வேலையை உதறிவிட்டு, புதுவேலையில் சேர்வீர்கள். சிலர் வேலை அலுவலக கிளையை மாற்றித் தரும்படி, உங்கள் உயரதிகாரி யிடம் நச்சரித்து, புது பிரிவு நோக்கி ஓடுவீர்கள். சிலர் தொழிலை, வேறுவிதமாக வடிவமைப்பீர்கள். தொழிலில் சில பணியாளர்களை மாற்றுவீர்கள். திருமணம், சற்று வேறு பிரிவில் நடக்கும். இந்த திருமண விஷயமாக, சற்று குளறுபடி, கோல்மால் செய்து, நல்ல பண வரவை உண்டாக்கிவிடுவீர்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை, அசால்ட்டாக தள்ளிவிடுவீர்கள். நாங்கெல்லாம் ரிஸ்க்கை, ரஸ்க் மாதிரி சாப்பிடுவோம் என கொக்கரிப்பீர்கள். இன்னும் உங்களில் சிலர், மனைவியையும், சின்ன வீட்டையும் அட் எ டைம் ஏமாற்றுவீர்கள். சினிமா கலைஞர்கள் புதுமையான கலைச்சேவை செய்து, சுற்றியுள்ளவர்களை அதிரடிப்பர். உங்களின் சில செயல்கள், அரசாங்கத்தையும், காவல் துறையையும் மண்டை காயவைத்துவிடும். சிலர் தாய் அல்லது தாரத்துக்கு தெரியாமல் சில மறைவு செயல்களைச் செய்வீர்கள். வீடு விஷயமாக ஒரு எதிர்மறை லாபமுண்டு. உங்களைச் சுற்றி உள்ளவர்களை, ஒருவித யோசனையில் ஆழ்த்துவீர்கள், எது எப்படியாயினும் அதிர்ஷ்டத்தை பின்வாசல் வழியாக இழுத்துவந்து விடுவீர்கள். ஐப்பசி 16-ஆம் தேதி நல்லவை நடக்கக் கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

இந்த மாதம் பயணங்களில் கவனமாக இருக்கவேண்டும். பெரிதாக சிந்திச்சு செய்கிறேன் என ஏடாகூடாமாக எதையும் செய்யாதீர்கள்.

பரிகாரம்

கடல் ஓரம் கோவில்கொண்ட துர்க்கையை வணங்கவும். அரசுப்பள்ளிகளில், கட்டடம் சம்பந்தமான பழுது பார்க்கும் செலவை ஏற்றுக்கொள்வது நலம். இதனால் உங்களுக்கு சிராய்ப்பு ஏற்பட்டு, மருத்துவரிடம் செல்லும் செலவு மறையும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் புத்திசாலி புதன் ஆவார். இந்த மாதம் சற்று வியப்பான செயல்கள் உங்களுக்கு நடக்கும். உங்களுக்கு, நிறைய செலவு வரும் என்று யோசித்த செயல்களில், செலவு நீங்கி பணம் வந்துசேரும். அதுபோல், கால் காசு செலவு இல்லாமல் முடித்துவிடலாம் என நினைத்த விஷயம், எக்கச்சக்க செலவுகளை நீடித்து தரும். நம்ம ஒன்னு நினைச்சா, அது ஒன்னு நடக்குது என மண்டை காய்ந்து போவீர்கள். இந்த மாதம், இந்த மாதிரி செயல்களால் குழப்பமும் சந்தேகமும் இருந்துகொண்டே இருக்கும். மேற்கண்ட குழப்பத்திற்கு, உங்கள் இளைய சகோதரன் முக்கிய காரணம் ஆவார். உங்கள் தாயாருக்கு இருப்பிடம் மாறும். அது உங்கள் தந்தையால் உண்டாகும். உங்கள் வாரிசுகளின் சில பணவிஷயம் உங்களை பீதியில் ஆழ்த்தும். கர்ப்பம் தரித்த பெண்கள், சற்று கவனமாக இருக்கவேண்டும். இந்த மாதம் வாய்ப்புண் அல்லது கண்வலி வர வாய்ப்புள்ளது. திருமண விஷயம் வேகம் எடுக்கும். வீட்டு பழுதுபார்க்கும் செலவு அல்லது மாற்றும் செலவு உண்டு. உங்களின் சில வார்த்தைகள், உங்களுக்கு அடி வாங்கித் தரும். சொந்தத் தொழிலில் சில, மறைமுக பணபரிவர்த்தனை செய்யவேண்டியிருக்கும். உங்கள் மாமியார் ஒரு சண்டையை இழுத்துவிடுவார். அதனால் உங்கள் மாமனார் செமத்தியாக வாங்கி கட்டிடக்கொள்வார். கலைஞர்கள் கட்டாயத்தின் பேரில் மாற்றம் அனுபவிப்பர். இந்த மாற்றம் சில கலைஞர்களுக்கு நன்மையும் தரும். அரசியல்வாதிகள் எந்தச் செயலையும், பலமுறை யோசித்துச் செய்யவும். இல்லையெனில் கொஞ்சம் அவமானம் சந்திக்க நேரிடும். இந்த மாதம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் அதே வேளையில் சில எதிர்பாராத சிக்கலும் வரக்கூடும்.

பரிகாரம்

தில்லைக் காளியை வணங்கவும். வீட்டு புரோக்கர் வேலை செய்யும் நபர்களுக்கு, கேட்ட கமிஷனை கொடுப்பதோடு, அவர்களின் தேவையறிந்து உதவிகள் செய்யுங்கள். ஐப்பசி 23, 24, 25-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவார். இந்த மாதம், அரசு சம்பந்தமான நிகழ்வுகள், சற்று தடைக்குப்பின் நடக்கும். இதற்குரிய பணச் செலவுகளும் அதிகமாகும். அரசியல்வாதிகள், தாங்கள் விரும்பிய பதவியை அடைய, சற்று அலைச்சல், சிரமம், பணபங்களிப்பு இவற்றை மேற்கொண்டு விரும்பியதிற்கு மேலேயே பெற்றுவிடுவர். திருமணம் கைகூடும். திருமணத்தில் உங்கள் தாய் மாமன் சற்று குசும்பு பண்ணுவார். இந்த மாதம், தகவல் தொடர்பு சம்பந்த வேலை கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். உங்கள் மூத்த சகோதரி கால் வலியால் சிரமப்படுவார். உங்களின் மனை, வீடு விற்று கையில் பணம் புரரும். உங்களில் சிலர் உங்கள் வீடு பற்றிய பலவித யோசனைகளால் அல்லல்படுவீர்கள். நெருங்கிய மனிதர்களிடம் ஆலோசனை நடத்துவீர்கள். கலைஞர்கள், தங்கள் வாழ்வின் லட்சியம் ஈடேற, சில பிடிக்காதவர்களிடமும் பணியாற்றும் நிர்பந்தம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. உங்களில் சிலர், வியாபாரம், வேலை விஷயமாக குடும்பத்தைவிட்டு வேறிடம் செல்வீர்கள். உயர் கல்வி மாணவர்கள், படிப்பின் பொருட்டு, வேறிடம் நகர்வர். உங்கள் பெற்றோர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வர். இளைய சகோதரனின் வேலையின் பொருட்டு, சிலருடன் சந்திப்பு நடத்துவீர்கள். உங்கள் வீட்டில், வேலை செய்யும் பணியாளர்களை மாற்றுவீர்கள். உங்களில் சிலருக்கு பணம் மற்றும் டாக்குமெண்ட்கள் திருட்டுப் போகும் வாய்ப்புண்டு. இந்த மாதம், மிக முக்கியமான விஷயங்களின் பொருட்டு, அடிக்கடி பெருந்தொகை பரிமாற்றம் செய்வீர்கள். அதன்விளைவாக அரசு சம்பந்த மனிதர்களை சந்திக்கவும் செய்வீர்கள். அந்த நேரங்களின் கூடுமானவரை, எழுத்தில் பதிவுசெய்வது நலம்பேச்சு மாறிவிடக்கூடும்.

பரிகாரம்

சமையல், அரசு உணவகம், அரசியலில் அடிமட்டத் தொண்டர் என இவர்களைப்போல் வசதி குறைந்த நபர்களின் தேவை கேட்டறிந்து உதவவும். சென்னை காளிகாம்பாளை வணங்குவது நலம். ஐப்பசி 9, 10, 11-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் கேது ஆவார். இந்த மாதம் திருமண செலவுகள் அதிகரிக்கும். சினிமா கலைஞர்கள் வெளிநாடு செல்வர். சில பெண் அரசியல்வாதிகள், உயரிய பதவியை அடைவதற்கு, இப்போது இருக்கும் பதவியை விட்டுககொடுப்பர். இதற்கு சிலசமயம் சிலபல வதந்திகளும் காரணமாக இருக்கும். உங்கள் தந்தை பண விஷயமான சிக்கலில் மாட்டி பின் அதிலிருந்து மீள்வார். இந்த மாதம் உங்கள்மீதும், உங்கள் தொழில்மீதும் வேண்டாத வதந்திகள் வேகமாக பரவும். எனினும் தெய்வாதீனமாக அவையெல்லாம் பொய் என அனைவரும் அறிவர். இந்த எண்ணின் மாணவர்கள் கல்வித் தடை காண்பர். வாகனம் அல்லது வீடு பழுதாகி, எரிச்சலைத் தரும். இந்த மாதம் நீங்கள் பழகும் ஆட்கள் சற்று கோணல் மாணலாக இருப்பர். அதனால் உங்களுக்கு நேர் சீரான சிந்தனைகள் ஏற்படுவது அரிது. உங்கள் வாரிசுகளின் சில செயல்கள், உங்களை சங்கடத்தில் ஆழ்த்துவதுடன் வேண்டாத செலவையும் இழுத்துவிடும். உங்கள் வாழ்க்கைத் துணையும், உங்கள் தாய்மாமனும் மோதிக்கொள்வர். இதில் உங்கள் தந்தை நடுவில் மாட்டிக்கொண்டு முழிப்பார். வேலை செய்யும் இடத்தில், சில முட்டல் மோதல்கள் உருவாகும். கொஞ்சம் அனுசரித்து அமைதியாக நடந்து, அதனைக் கடந்துவிடுங்கள். இளம் பெண்களிடம் பழகும்போது கவனம் தேவை. உங்களில் சிலர், உங்களின் காதலிக்கு காத்திருக்கும்போது, அவளது தகப்பன் வந்து உருட்டி மிரட்டுவார். இந்த மாதம் நீங்கள் சந்திக்கும் நபர்கள் உங்கள் மூளையை குழப்பிட்டு வேடிக்கை பார்ப்பார். அதனால் எவர் பேச்சையும் கேட்டு சட்டென்று ஒரு முடிவும் எடுக்காதீர்கள்.

பரிகாரம்

பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்கவும். விநாயகர் கோவில் அர்ச்சகரிடம், தேவை கேட்டறிந்து உதவுங்கள். ஐப்பசி 30-ஆம் தேதி நல்லது நடக்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சனி. இந்த மாதம் அவர் சற்று அல்லாடிக் கொண்டு, முன்னும் பின்னுமாக அலைந்துகொண்டு இருக்கிறார். இது முக்கியமாக அரசியல்வாதிகளை ரொம்ப பாதிக்கும். இந்த எண்ணில் பிறந்த அரசியல் சம்பந்தம் உடையவர்கள் எந்த முடிவு எடுப்பது என தவிக்க நேரிடும். சிலரின் நண்பர்கள் அல்லது இளைய சகோதரம் தவறான வழி காட்டுவர். வீடு விற்பனை விஷயத்தில், ஒரு தவறான முடிவு எடுப்பீர்கள். இந்த மாதம், உங்கள் பெண்ணின் விஷயமாக சிறு சங்கடம் ஏற்பட்டு பின் சரியாகும். உங்களில் சிலர் பண விரயத்தின்மூலம், குறுக்குவழியில் அரசு பணி பெறமுடியும். உங்கள் தொழிலில், இளம் பெண் ஒருவரால் அவமானம் ஏற்பட்டு, பின் அதனை நிவர்த்தி செய்வீர்கள். உங்களில் சிலரின் தந்தை கால் வலியால் சிரமப்படுவார். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள், சில அரசியல்வாதிகளால் இம்சைக்கு உள்ளாவர். சிலரின் பணியாளர்கள், வேலை செய்யமுடியாது என அடம் பண்ணுவர். இந்த மாதம் இந்த எண்ணில் பிறந்த வர்கள் சற்று ஒழுக்கமாக இருக்க முயற்சி செய்யவும். இல்லையெனில் பெரும் கௌரவக் குறைச்சல் ஏற்படும். உங்கள் சகோதரருக்கும், உங்களுக்கும் மன நெருடல் வருவதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் மாமியார் ஏதாவது ஏடாகூடம் செய்துவைப்பார். இதனால் உங்கள் அம்மாவுக்கும், மாமியாருக்கும் இடையே சண்டை வரக்கூடும். குழந்தை பேறுக்காக முதன்முறையாக மருத்துவரை சந்திக்கும் யோசனை இருப்பின் அடுத்த மாதம் அதை தள்ளிவைக்கவும். இந்த மாதம் வாழ்க்கையின் அடிகளை கவனமாக பதித்து பதவிசாக நடக்கவும்.

பரிகாரம்

சேலம் கோட்டைமாரியை வணங்கவும். பெண்களைப்பற்றி அவதூறு பேசவேண்டாம். குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கு, தேவை கேட்டறிந்து உதவுங்கள். ஐப்பசி 25, 26, 27-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.

எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய். இந்த மாதம் உங்களுக்கு அரேன்ஜ்டு மேரேஜ் அல்லது காதல் கல்யாணம் என எதுவானாலும், பெரிய கலாட்டாவிற்கு பின்தான் நடக்கும். ஆக, ஏதோ ஒருவிதமாக, திருமணம் நடந்துவிடும். உயர்கல்வி மாணவர்கள் வேறிடம் மாறுவர். உங்கள் பூர்வீக சொத்தை, பரிமாற்றம் செய்து, தற்போது குடியிருக்கும் இடத்தில் வீடோ, மனையோ வாங்கிவிடுவீர்கள். இந்த மாதிரி யோசனை இருப்பின், இம்மாதம் செயல்படுத்துவது உசிதம். உங்கள் வாரிசுகள் சிலபல சேட்டைகளுக்குப்பின் சரியாவர். சினிமா, டி.வி. கலைஞர்களுக்கு, தற்போதைய வாய்ப்பு கை நழுவி விடும் நிலை ஏற்பட்டு, பின் கடவுள் அருளால் கைகூடும். அரசியல்வாதிகளின் நாற்காலி, மந்திரி பதவி பறிக்கப்படும் எனும் நிலை ஏற்பட்டு, பின் சில பரிகார நிவர்த்திக்குப்பின் மந்திரி பதவி காப்பாற்றப்படும். குறுக்குவழியில் போனால், அரசு வேலை கிடைக்கும். எனினும் அரசுப்பணி நியமனக் கடிதம் கையில் கிடைத்தவுடன், யாராவது கட்டையை போட வாய்ப்புள்ளது. சூதனமாக நடந்துகொள்ளவும். உங்களின் வாழ்க்கைத் துணைக்கு சற்று சிராய்ப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் வியாபார பங்குதாரர் சற்று ஒழுக்கங்கெட்டதனமாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் செய்பவர்கள், ரொம்ப விழிப்புடன் இருக்கவேண்டிய மாதமிது. பணமுதலீடுகளை கவனமாக செய்யவேண்டும். குடும்பத்தில், மூன்றாம் நபர் நுழைந்து கும்மியடித்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். சில வில்லங்கமான நபர்கள் செய்யும் விஷயங்கள், உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். அதனால் மனிதர்களின் தகுதி அறிந்து பழகவும்.

பரிகாரம்

திருமண விஷயங்களுக்கும், சிலர் கல்வி, வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும்போது, அவர்களுக்கு ஏற்படும் தரவுகளின் சிக்கலை நீக்க வழிகாட்டுங்கள். திருவேற்காடு கருமாரியம்மனை வணங்கவும். ஐப்பசி 5, 6, 7-ந்தேதிகள் நன்மை தரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

செல்: 94449 61845