பிரிந்தவரை இணைக்கும் - ஆனைமுகன்!

/idhalgal/om/ainmukan-who-connects-partition

சித்தி விநாயகர் மகா கணபதி மந்திர்...

ந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், கல்யாண் வட்டத்திலுள்ள டிட்வாலா என்னும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. இங்கு மிக அற்புத மான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் விநாயகர்.

கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து தனித்தனிப் பாதைகளில் சென்ற தம்பதிகள், விவாகரத்து செய்து கொண்டவர்கள் இங்குவந்து விநாயகரை வழிபட்டால் நிலைமை சீராகும்.

தினமும் ஏராளமான மக்கள் பக்திப் பெருக்குடன் வந்து விநாயகரை வழிபடுகிறார்கள். செவ்வாய்க்கிழமை அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள்.

இவ்வாலயம் அருகே தண்டகாரண்யம் என்ற வனப் பகுதி இருக்கிறது. அங்கு கட்காரி என்ற மலைவாழ் இனத்த வர் "காலு' நதிக்கரையில் அதிக மாக வாழ்கின்றனர்.

புராண காலத்தில் கன்வ முனிவரின் ஆசிரமம் இங்கு இருந்திருக்கிறது. சகுந்தலை யைத் தத்தெடுத்து வளர்த்தவர் இந்த முனிவர்.

அக்காலகட்டத்தில்

சித்தி விநாயகர் மகா கணபதி மந்திர்...

ந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், கல்யாண் வட்டத்திலுள்ள டிட்வாலா என்னும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. இங்கு மிக அற்புத மான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் விநாயகர்.

கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து தனித்தனிப் பாதைகளில் சென்ற தம்பதிகள், விவாகரத்து செய்து கொண்டவர்கள் இங்குவந்து விநாயகரை வழிபட்டால் நிலைமை சீராகும்.

தினமும் ஏராளமான மக்கள் பக்திப் பெருக்குடன் வந்து விநாயகரை வழிபடுகிறார்கள். செவ்வாய்க்கிழமை அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள்.

இவ்வாலயம் அருகே தண்டகாரண்யம் என்ற வனப் பகுதி இருக்கிறது. அங்கு கட்காரி என்ற மலைவாழ் இனத்த வர் "காலு' நதிக்கரையில் அதிக மாக வாழ்கின்றனர்.

புராண காலத்தில் கன்வ முனிவரின் ஆசிரமம் இங்கு இருந்திருக்கிறது. சகுந்தலை யைத் தத்தெடுத்து வளர்த்தவர் இந்த முனிவர்.

அக்காலகட்டத்தில் மான் வேட்டைக்காக வந்த துஷ்யந் தனை சகுந்தலை சந்திக்கிறாள். தன் செல்லப் பிராணியான மானுக்கு மருந்திடும் துஷ்யந் தன்மீது அவள் காதல் கொள் கிறாள். அந்த மானைக் காயப் படுத்தியதற்காக அவளிடம் துஷ்யந்தன் மன்னிப்பு கேட்கி றான். தொடர்ந்து அவளை காந்தர்வ மணம் புரிந்து கொள்ளும் துஷ்யந்தன் சில நாட்கள் ஆசிரமத்திலேயே தங்குகிறான்.

நிர்வாகத்தின் பொருட்டு தன் தலைநகரத்திற்குத் திரும்பவேண்டிய சூழ்நிலை யில் இருக்கும் மன்னன், புறப்படுவதற்குமுன்பு சகுந்தலை யிடம் அரசு இலச்சினை பதித்த ஒரு மோதிரத்தை காதலி−ன் சின்னமாகக் கொடுத்துவிட்டு, விரைவில் தான் திரும்பி வருவதாக அவளுக்கு சத்தியம் செய்துவிட்டுச் செல்கிறான்.

pillaiyar

அவன் சென்றபிறகு, தினமும் அவன் நினைவாகவே இருக்கி றாள் சகுந்தலை. அப்போது மிகவும் சக்திபடைத்த துர்வாச முனிவர் அந்த ஆசிரமத்திற்கு வருகிறார். துஷ்யந்தன் நினைவாகவே இருந்த சகுந்தலை துர்வாசரை கவனிக்கவில்லை. அதனால் கோபமடைந்த அந்த மாமுனிவர் அவள் கனவு கண்டுகொண்டிருக்கும் மனிதன் அவளை முற்றிலும் மறந்துபோகட்டும் என்று சாபமிடுகிறார்.

பின்னர் மனமிரங்கிய அவர், அவளுக்கு துஷ்யந்தன் வழங்கிய மோதிரத்தைப் பார்த்ததும், அவனுக்கு அவளைப் பற்றிய ஞாபகம் வந்துவிடும் என்று சாபநிவர்த்தி தருகிறார்.

இந்நிலையில் அவள் கருவுற்றிருப்பது தெரியவருகிறது. முனிவரின் சாபத்தால் துஷ்யந்தனுக்கு சகுந்தலையின் நினைவில்லாமல் போனதால் அவன் ஆசிரமத்துக்குச் செல்லவில்லை. கணவன் அருகி−ல்லாமல் கருவைச் சுமப்பது அவமானமல்லவா? எனவே அவள் நகரத்துக்குச் சென்று துஷ்யந்தனைச் சந்திக்க முடிவெடுத்து, தன் தந்தையுட னும் தோழிகளுடனும் பரிசலி−ல் பயணிக் கிறாள். அப்போது பரிசலி−ல் அமர்ந்த வாறு நீரில் கையை வைக்க, அவள் அணிந்திருந்த மோதிரம் கழன்று நீருக்குள் சென்றுவிட்டது.

அரண்மனைக்குச் சென்ற அவளை "யார் நீ?' என்று கேட்கிறான் துஷ்யந்தன். தான் அவனுடைய மனைவி என்று சகுந்தலை கூறுகிறாள். ஆனால், மோதிரம் இல்லாததால் அவளை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.

அவமானப்பட்ட சகுந்தலை மீண்டும் காட்டிற்கு வருகிறாள். சில மாதங்கள் கடந்ததும் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனே பரதன். புலிலி−, சிங்கம் ஆகியவற்றின் வாய்களைப் பிளந்து பற்களை எண்ணும் திறமை கொண்டவன் பரதன்.

இதற்கிடையில் ஒரு மீனவன் தான் பிடித்த மீனின் வயிற்றில் அரசு முத்திரை கொண்ட ஒரு மோதிரம் இருப்பதைப் பார்த்து, அதை அரண்மனைக்கு எடுத்துச் செல்கிறான். அதைப் பார்த்ததும் துஷ்யந்த னுக்கு சகுந்தலை பற்றிய ஞாபகம் வருகிறது. அவளைத்தேடி அவன் வனப் பகுதிக்கு வர, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றுசேர்கிறார்கள். இது புராண காலத்தில் நடைபெற்ற கதை. துஷ்யந்தனை சகுந்தலை பிரிந்திருந்த காலகட்டத்தில், "ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா' என்று கன்வ முனிவர் அவளிடம் கூறினார். அதன்படி அவள் விநாயகர் சந்நிதி அமைத்து, "நானும் என் கணவரும் ஒன்றுசேர அருள்புரியவேண்டும்' என்று வேண்டிவந்தாள். அதன்படியே அவ்விருவரும் விரைவில் இணைந்தனர்.

பிரிந்த கணவன்- மனைவியை மீண்டும் ஒன்றுசேர்ந்து வாழவைக்கிறார் இந்த விநாயகர். சகுந்தலை உண்டாக்கிய இந்த விநாயகர் ஆலயம் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் காண்போரைக் கவரக்கூடிய ஒரு சிவலி−லிங்கமும் உள்ளது.

விநாயகர் சதுர்த்தியன்று சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

சென்னையிலி−ருந்து 1,364 கிலோமீட்டர் தூரத்தில் டிட்வாலா இருக்கிறது. மும்பைக்குச் செல்லும் ரயிலி−ல் பயணம் செய்து, "தானே' ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டிட்வாலா செல்லலாம்.

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து மகிழ்வுடன் வாழ டிட்வாலா சித்தி விநாயகர் மகாகணபதி ஆலயத்திற்குப் பயணமாகுங்கள்! விநாயகரின் பேரருளைப் பெறுங்கள்!

om010619
இதையும் படியுங்கள்
Subscribe