சித்தர் கால சிறந்த நாகரிகம்!
11
பேரறிவாற்றலுடைய மருதப் பெரியோர்களின் ஆன்மிக அறிவால் கண்டறிந்த வித்தொலிதான் "அ+உ+ம் = ஓம்' ஆகும். இந்த ஒலி அலைகள், தத்தமது குரல்வளை வழியே வழிந்தோடத் தொடங்கியதும் உற்சாகம் நிறைந்த அதிர்வுகள் ஏற்படலாயின. அப்போது, ஒவ்வொருவருடைய முதுகுத்தண்டின் வழியாகவும், கீழிருந்து மேல் நோக்கி, ஓர் அற்புத ஆற்றல் கடத்தப்படுவதை உணர்ந்தனர். இதில் ஏதோ ஒருவித உற்சாகமும் இன்ப அதிர்வுகளும் உருவாவதை உணரத் தொடங்கினர். இவ்வாறு இன்புற்றிருந்த வேளையில், முதுகுத்தண்டுப் பகுதியில் கழுத்திலிருந்து இடுப்புப் பகுதிகள் வரை ஐந்து இடங்களில் அவ்வதிர்வுகள் குவிவதை உணர்ந்தனர். குவிந்த ஒவ்வொரு புள்ளியிலும் தன் மனதை நிலைநிறுத்திப் பார்த்தார்கள். இடுப்பின் கீழே முதுகுத்தண்டு முடிகின்ற இடத்தில் மட்டும் அதிக அளவு இன்பமான அதிர்வுகள் உருவாவதைக் கண்டுபிடித்தனர். இதுவே அதிர்வு களின் ஆரம்பப்புள்ளி என்பதை உணர்ந்து, அதற்குத் தொடக்கநிலை அல்லது மூல ஆதாரம் என்று பெயரிட்டனர்.
தினம் ஆசைகொள்ளும் மனம்!
இதை, நின்ற நிலையிலிருந்து உச்சரிப்பதைவிட அமர்ந்த நிலையிலிருந்து உச்சரிக்கும்போதுதான், அதிக அளவு அதிர்வுகள் மூலாதாரத்திலிருந்து முதுகுத்தண்டு வழியே மேல்நோக்கிச் செல்கின்றன என்பதை அனுபவரீதியாக உணர்ந்தனர். இவ்வாறு அமர்ந்த நிலையில் இருந்துகொண்டு, வெளிப்புறத் தொந்தரவில்லாத மலைக்குன்றுகளின் உச்சியில் சென்று, இதே ஒலியை ஒரு மூச்சிற்கு ஒருமுறை சத்தமாக உச்சரிக்கும்போது, ஏதோ ஒருவகையான வெப்ப ஆற்றல் முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் உருவாவதைக் கண்டறிந்தனர். அதில் ஒருவித மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருகுவதை உணர்ந்தனர்.
இதை தினம்தினம் செய்யவேண்டுமென மனம் ஆசைப்படுவதை அறிந்தனர். அவ்வாறு மனம் ஆசைப்படும்போதெல்லாம் அமர்ந்த நிலையில் இருந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, மூலாதாரத்தில் மனதை வைத்துக்கொண்டு, ஓம் என்ற ஒலியை உச்சரித்துப் பார்த்தனர். அப்போது, கண்களில் ஒரு பிரகாச ஒளி தென்படுவதைப் பார்த்தனர். அப்பிரகாச ஒளியைப் பார்க்கின்ற பொழுதெல்லாம் வயதிற்கு மீறிய ஒரு உற்சாகப் பேரின்பத்தை அனுபவித்தனர். ஒவ்வொரு நாளிலும் தங்களின் செயல்பாடுகளில் ஒருவித சுறுசுறுப்பான மாற்றங்கள் உருவானதைக் கண்டு, தாம் வாழ்ந்து முடிந்த காலம் மீண்டும் தங்களுக்கு வருவது போன்று உற்சாகமடைந்தனர். தாம் அனுபவித்த மாற்றங்களைப் பிறருக்கும் சொல்லி, அவ
சித்தர் கால சிறந்த நாகரிகம்!
11
பேரறிவாற்றலுடைய மருதப் பெரியோர்களின் ஆன்மிக அறிவால் கண்டறிந்த வித்தொலிதான் "அ+உ+ம் = ஓம்' ஆகும். இந்த ஒலி அலைகள், தத்தமது குரல்வளை வழியே வழிந்தோடத் தொடங்கியதும் உற்சாகம் நிறைந்த அதிர்வுகள் ஏற்படலாயின. அப்போது, ஒவ்வொருவருடைய முதுகுத்தண்டின் வழியாகவும், கீழிருந்து மேல் நோக்கி, ஓர் அற்புத ஆற்றல் கடத்தப்படுவதை உணர்ந்தனர். இதில் ஏதோ ஒருவித உற்சாகமும் இன்ப அதிர்வுகளும் உருவாவதை உணரத் தொடங்கினர். இவ்வாறு இன்புற்றிருந்த வேளையில், முதுகுத்தண்டுப் பகுதியில் கழுத்திலிருந்து இடுப்புப் பகுதிகள் வரை ஐந்து இடங்களில் அவ்வதிர்வுகள் குவிவதை உணர்ந்தனர். குவிந்த ஒவ்வொரு புள்ளியிலும் தன் மனதை நிலைநிறுத்திப் பார்த்தார்கள். இடுப்பின் கீழே முதுகுத்தண்டு முடிகின்ற இடத்தில் மட்டும் அதிக அளவு இன்பமான அதிர்வுகள் உருவாவதைக் கண்டுபிடித்தனர். இதுவே அதிர்வு களின் ஆரம்பப்புள்ளி என்பதை உணர்ந்து, அதற்குத் தொடக்கநிலை அல்லது மூல ஆதாரம் என்று பெயரிட்டனர்.
தினம் ஆசைகொள்ளும் மனம்!
இதை, நின்ற நிலையிலிருந்து உச்சரிப்பதைவிட அமர்ந்த நிலையிலிருந்து உச்சரிக்கும்போதுதான், அதிக அளவு அதிர்வுகள் மூலாதாரத்திலிருந்து முதுகுத்தண்டு வழியே மேல்நோக்கிச் செல்கின்றன என்பதை அனுபவரீதியாக உணர்ந்தனர். இவ்வாறு அமர்ந்த நிலையில் இருந்துகொண்டு, வெளிப்புறத் தொந்தரவில்லாத மலைக்குன்றுகளின் உச்சியில் சென்று, இதே ஒலியை ஒரு மூச்சிற்கு ஒருமுறை சத்தமாக உச்சரிக்கும்போது, ஏதோ ஒருவகையான வெப்ப ஆற்றல் முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் உருவாவதைக் கண்டறிந்தனர். அதில் ஒருவித மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருகுவதை உணர்ந்தனர்.
இதை தினம்தினம் செய்யவேண்டுமென மனம் ஆசைப்படுவதை அறிந்தனர். அவ்வாறு மனம் ஆசைப்படும்போதெல்லாம் அமர்ந்த நிலையில் இருந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டு, மூலாதாரத்தில் மனதை வைத்துக்கொண்டு, ஓம் என்ற ஒலியை உச்சரித்துப் பார்த்தனர். அப்போது, கண்களில் ஒரு பிரகாச ஒளி தென்படுவதைப் பார்த்தனர். அப்பிரகாச ஒளியைப் பார்க்கின்ற பொழுதெல்லாம் வயதிற்கு மீறிய ஒரு உற்சாகப் பேரின்பத்தை அனுபவித்தனர். ஒவ்வொரு நாளிலும் தங்களின் செயல்பாடுகளில் ஒருவித சுறுசுறுப்பான மாற்றங்கள் உருவானதைக் கண்டு, தாம் வாழ்ந்து முடிந்த காலம் மீண்டும் தங்களுக்கு வருவது போன்று உற்சாகமடைந்தனர். தாம் அனுபவித்த மாற்றங்களைப் பிறருக்கும் சொல்லி, அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களைக் கேட்டனர். அனைவரும், ஒரே மாதிரியான ஆற்றல் மீண்டும் தங்களுக்குள் பரவுவதாகச் சொல்ல, அவ்வொலியே ஒவ்வொரு பிரபஞ்ச ஆற்றலுக்கும் தொடக்கமானதாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டனர். மேலும், அதிலிருந்துதான் வேறு பலவகைகளான ஆற்றல்கள் பிறந்திருக்க வேண்டும் என்பதையும் அறிந்தனர்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல்!
இதனை மேலும் ஆராய்ந்து அறிவதற்காக, மலை உச்சிகளில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் அமர்ந்து செய்வதைத் தவம்’ என்றனர். இவ்வாறு செய்வதால் கிடைக்கின்ற ஆற்றலால், அவர்களின் நிகழ்காலத்தில் உள்ள பிரச்சிசனைகளுக்கும், எதிர்காலத்தில் வரவிருக்கும் வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றலைப் பெற்றனர். இதன்மூலம், சுற்றுப்புற இயற்கைச் சூழல்களை நன்குணர்ந்து, அதை வெற்றிகொள்ளும் திறன்கள் படைத்த மூளையாக மனிதமூளை செயல்படுவதை உணர்ந்தனர். தம் மக்களுக்குத் தங்களால் அறியப்பட்ட உண்மைகளிலிருந்து, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு வழிவகை சொல்லும் அறிவுரைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு தாங்கள் மேன்மேலும் வளர்ந்து, தங்களை அண்டி யிருப்போருக்கும் வழிகாட்டி வளப் படுத்துவதை ஒரு தொண்டாகவே கருதினார்கள். மக்களும் தங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் இப்பெரியோர்கள் இருக்குமிடத்திற்கு நேரடியாக வந்து, தீர்வு காணவேண்டிய அத்தனை பிரச்சினைகளையும் கூறி, அவர்களிடமிருந்து தெளிவான அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்றுச் சென்றனர். இத்தகைய பெரியோர் வாழ்ந்த மலைக்குன்றுகளை "ஆசிவகம்' என்றழைத்தனர்.
ஐயனுக்காக குதிரை எடுப்பு உற்சவம்!
ஆசிவகத்தில் ஆய்வுகளை மேற் கொண்டு தவமியற்றும் பெரியோர்களை "ஐயா' என்றும், "ஐயன்' என்றும், "ஊர்க்காவல் ஐயன்' என்றும் அழைத்து வந்தனர். அவர்கள் சாப்பிடுவதற்குத் தேவையான பதார்த்தங்களை அளித்தனர்.
ஆரம்பகாலத்தில், பலப்பல இடங்களுக்கு அவர்கள் செல்வதற்கு வாகனங்களாக இருந்த யானைகளையும், பின்பு தாம் பயன்படுத்திய குதிரைகளையும் கொடுத்து உதவினர். இவ்வாறிருந்த ஆசிவகப் பெரியோர்களைத்தான் பின்னா ளில் ஊர்க்காவல் ஐயன், ஐயனார்’ என்ற பெயரில் வழிபடத் தொடங்கி னர். அவர் களுக்குத் தங்கள் குதிரைகளைக் கொடுத்து வந்ததன் நினைவாக, அவர்களுக்கென கொண்டாடும் திருவிழாக்களில் முக்கிய நிகழ்வாக, குதிரை எடுப்பு என்ற உற்சவம் நடந்தது. ஒரு ஊரில் வாழும் பல தலைக்கட்டுகளுக்கும், தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தங்களுக்கென களிமண் எடுத்து, மொத்தமாக ஒரு குயவரிடம் கொடுத்து, 48 நாட்களுக்குள் தனித்தனியாக மண் குதிரைகள் செய்து ஊர்வலமாக எடுத்துவந்து, ஆதிகால ஆசிவக குருவான ஐயனார் கோவிலுக்குக் குதிரைகளைக் காணிக்கையாகத் தந்து, தங்களின் வாழ்வு சிறக்க உதவிய ஐயனாரை நன்றியோடு வணங்கினர்.
நோய் போக்கிட சித்தர்கள் மேற்கொண்ட ஆய்வு!
முற்காலத்தில் வாழ்ந்த ஆசிவகப் பெரியோர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட இடம், காலம், இயற்கை மாற்றம் ஆகிய துறைகளை எவ்வாறு ஆளுமை செய்வது என்பது போன்ற தீர்வுகளை மேலும் மேலும் பல கூறுகளாகப் பிரித்து, அவற்றை ஆராய பல்வேறுபட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய முற்பட்டவர்கள்தான், பின்னாளில் சித்தர்கள் என்று போற்றப்பட்டனர். இவர்கள் இவ்வாறு போற்றப்படுவதற்குக் காரணம்- மக்களுக்காக இரவு- பகல் பாராமல், பல மாறுபட்ட இயற்கைச் சூழலில் தாங்கள் தேடும் விடயங்களுக்காக பாடுபட்டு ஆய்வினை மேற்கொண்டதுதான். அப்பெரிய விடயங்கள் என்னவெனில், மரணத்தையும் மரணத்துக்குக் காரணமான நோய்களையும் போக்கி, இயற்கையை வென்றெடுத்து, இயற்கை மீறலை உருவாக்கிப் பேராற்றல் மிக்க இறைத்தன்மையாக மாற்றவேண்டுமென்பதே.
இதற்கு ஒரு மனித ஆயுட்காலம் போதாது. ஆதலால், நீண்டகாலம் உயிர்வாழும், ஆயுட்காலத்தை நீட்டிக்கச் செய்யும் மருத்துவ முறைகளைக் கண்டறிய முற்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். தாங்கள் கண்டறிந்த உண்மைகளை ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாப்பாக பத்திரப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். அதற்காக, தங்களுக்கு உண்மை உதவியாளனாக இருக்கக்கூடிய நியாய மனமுடைய, நேர்மையும் பரிசுத்தமும் உள்ள சீடனைத்தேடி அலைந்தனர். தங்களின் நோக்கத்திற்குச் சரியாக இருப்பவர்களா என்பதை அறிந்திட, சில பரிசோதனைகளை அவர்களுக்கு வைத்தனர். அவற்றில் வெற்றி கண்டவர்களைத் தனது மானசீக சீடனாக்கி அவர்களிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு அடுத்தகட்ட ஆய்வை மேற்கொண்டனர்.
தங்கமாக மாறும் ரசவாத வித்தை!
சித்தர்கள், ஆசிவக குருமார்களிடமிருந்து வாழ்வியல் வெற்றிகளைக் கண்டறிந்து, பின் மருத்துவ வெற்றிகளையும் கண்டறிந்து, அதன்பிறகு ரசவாதம் எனும் வேதியியலுக்குள் நுழைந்தனர்.
தாங்கள் கற்றுணர்ந்த இயற்கையின் அங்கங் களைச் செயற்கையாக உருவாக்குவது, உருவாக்கியதை வேறொன்றாக மாற்றுவது போன்ற சோதனைகளைச் செய்தனர். தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள தாவரங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்டு, அவற்றின் இயல்புகளை உணர்ந்து, அவற்றிலிருந்து எளிதாகக் கிடைக்கும் உலோகங்களிலிருந்து அரிதாகக் கிடைக்கும் உலோகத்தை, தாவரங்களிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்கள்மூலம் உருவாக்கினர். இந்தப் பணிகளுக்கு பலர் தேவைப்பட்டனர். எனவே, ஒத்த நல்லியல்புடைய பலரைத் தன் சீடர்களாக உருவாக்கி, அவர்களை ஒரே இடத்தில் தங்கவைத்து, அந்த அமைப்பை ஆசிரமம் அல்லது குருமடம் என்று பெயரிட்டு அழைத்தனர்.
ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்றும் வல்லமை படைத்தவை பாதரசமும் கந்தகமும்தான் என்ற அடிப்படை ஆதாரப்பொருட்களைக் கண்டறிந்தனர்.
எனவே, பாதரசத்தை ஈசனின் (தந்தை) விந்து என்றும், கந்தகத்தை பார்வதியின் நாதம் (அன்னையின் அண்டம்) எனவும் அழைத்தனர். பாதரசத்தைக் கொண்டு பல உலோகங்களை தாவரங்களிலுள்ள வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் அறிவியலுக்கு "ரசவாதம்' என்று பெயரிட்டனர்.
இந்த ரசவாதத்தால் இரும்பை, செம்பை, வெள்ளியைத் தங்கமாக்கும் முறையை, எளிதாகச் செய்யும் செயல்முறையைக் கற்றுக்கொண்டனர். இவ்வாறுதான், இரும்பு பல படிகளில் மாற்றமடைந்து தங்கமாக மாறும். இதில் நிகழும் ஒவ்வொரு படிகளிலும் உருவாக்கும் பொருட்களிலிருந்து சில வித்தைகள் அல்லது ஆற்றல்கள் வெளிப்படுவதை உணர்ந்தனர். அவ்வாற்றலானது மனிதனின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு வல்லமை வாய்ந்தது என்றறிந்தனர்.
பண்டார அறையில் பஞ்சபூத மணி!
இதனைப் பயன்படுத்தி சில ஆக்கப்பூர்வ நிகழ்வுகளையும், சில அழிவு நிகழ்வுகளையும், சில மருத்துவப் பயன்பாட்டிலுள்ள நிகழ்வுகளையும் உருவாக்கலாம் எனவும் அறிந்துகொண்டனர். ஆதலால், தத்தமது மடத்தில் வலுவான ஒரு சீடரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மட்டுமே இதைக் கற்றுத் தந்தனர். இதைக்கொண்டு, வள்ளல்களாகத் திகழ்ந்த சில மன்னர்களுக்கு’ தங்கத்தைப் பெருமளவில் தயாரித்தும் தந்தனர். அவர்களுக்கு உயரிய மருத்துவ உதவிகளையும் செய்துவந்தனர். இந்த உலோகவியலில் மிகப்பெரிய சக்தி படைத்த உலோகக் கலவையை ஒரு உருண்டையாகச் செய்து, அது இருக்கும் இடத்தில் அத்தனை ஆக்கப்பூர்வப் பணிகளும் மக்கள் விரும்பியபடியே நடக்கும் என்று செய்து காட்டினர். அந்த உலோகக் கலவையை பஞ்சபூத மணி எனவும் காமதேனு எனவும் பெயரிட்டு அழைத்தனர். அதில், பஞ்சலோகம் என்பது காரீயம், வெள்ளீயம், செம்பு, வெள்ளி, தங்கம் ஆகியவை. இவற்றை பூமியில் இருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து திறன்களின் அளவை ஒத்த விகிதத்தில் மேற்கண்ட ஐந்து உலோகங்களையும் சேர்த்தால், பூமியில் இருக்கும்வரை நம்மைத் துன்பம் அணுகாது என்று செய்துகாட்டி, அவற்றின் விகிதங்களை முக்கிய சிவன் கோவில் பண்டார அறையில் வைத்துப் பாதுகாத்தனர்.
மகா சக்தியின் வெளிப்பாடே குண்டலினி!
சித்தர்கள், இந்த உலோகவியலைப்போல் ஒன்பது வகை கொடிய விடயங்கள் திடநிலையில் பூமியில் இருப்பதைக் கண்டறிந்து எடுத்தனர். இவற்றை சில பச்சிலைகளைக் கொண்டு முறித்தால், அல்லது செயலிழக்கச் செய்தால், அவை மகா மருந்தாகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்தனர். இவ்வாறு செய்த மகா மருந்துகளை ஒன்றாக்கி பிற்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையில், தங்கள் இஷ்ட தெய்வங்கள், பாத்திரங்கள், லிங்கங்கள் போன்று, பல வடிவங்களில் என்றும் அழியாத மருத்துவப் பொருளாக்கி பத்திரப்படுத்தினர்.
இவ்வாறு ஆசிவகப் பெரியோர்களைத் தொடர்ந்து, அடுத்த பரிணாம வளர்ச்சியடைந்த சித்தர்கள், இயற்கை ஆற்றல்களைத் தம் மன சித்தத்தின் அடிப்படையில் மாற்றத் தெரிந்துகொண்டவர்கள். இவர்களுக்கு இவ்வளவு அறிவாற்றலைக் கொடுத்தது ‘"ஓம்'’ எனும் வித்தொலிதான். அதனை மாறாமல் தியானம் செய்யும்போது, முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதி முனையில் அளவற்ற ஆற்றல் படைத்த மூலாதாரம் என்னும் புள்ளியிலுள்ள, மனித ஆற்றலின் மொத்த அடக்கமாகவுள்ள, மகா ஆற்றல் வடிவமாகத் திகழக்கூடிய குண்டலினியை, மகா சக்தியின் வெளிப்பாடு என்றனர்.
மறைபொருளை உணரும் அதிசய சக்தி!
இந்தப் பயிற்சியின் காரணமாக, மன எண்ணங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் குவியமடைந்து, அதனால் மூளைப்பகுதியின் "மெடுலா' என்ற மேடு பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, அது இயற்கையின் ரகசியங்களை அறியும் மிகப்பெரிய சூட்சும மூளையாக மாறிவிடும் என்றும்; அவ்வாறு மாறியபின் அம்மூலாதாரப் புள்ளி இருக்கும் இடத்தில் ஒரு கரு ஊதா நிறத்தில் ஒரு முக்கோண வடிவத்தில் ஒரு ஒளிச்சுடர் நம் கண்களுக்கு எப்போதும் காட்சியளிக்கும்- அக்காட்சி தெரிந்தால் இப்புவியுலகிலுள்ள அத்தனை மறைபொருளும் தெரியும்- அதிசய சக்தி படைத்த மனித மூளையாக நம் மூளை பரிணாம வளர்ச்சியடையும் என்றும்; அதில் வாசம் செய்யும் மகாசக்தியான குண்டலினி நம்மை அடுத்த பரிணாம வளர்ச்சியடைந்த மூளையுடைய மனிதப் படைப்பாக மாற்றும் எனவும் சித்தர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு சித்தர்கள் காட்டிய அடுத்த பாதை வரும் இதழில்.
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்