அகமகிழ்வு தரும் கொழையூர் அகத்தீஸ்வரர்! - கோவை ஆறுமுகம்

/idhalgal/om/agaiyeswara-resilient-kolayur-coimbatore-arumugam

"இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.'

என்பது திருக்குறள்.

"வசதியான வாழ்வில்லாத வறியவர்கள் உலகத்தில் பலராக இருப்பதற்குக் காரணம், தவம் செய்பவர்கள் சிலர்; தவம் செய்யாதவர்களோ பலர்' என்பது இதன் பொருள். முற்பிறவியில் செய்த தவத்தால் இப்பிறவி யில் நன்மை உண்டாகிறது. நன்மை பெறுகிறவர்கள் குறை வென்றால், அதற்குக் காரணமான புண்ணியத் தைச் செய்தவர்களும் குறைவென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

நோற்பார் என்பது தவம் செய்பவரைக் குறிக்கும். தவமென்பது காட்டுக்குச் சென்று தனியே யோகம் செய்வது மட்டுமல்ல; தன்னலத்தை மறந்து பிறர் நலத்தைப் பெரிதாக எண்ணி ஒருவன் தியாக வாழ்வு வாழ்ந்தால், அவனைத் தவமுனிவன் என்றே சொல்லவேண்டும். இறைவனிடம் பக்தி செய்து நன்னெறியில் நிற்பதும் ஒருவகைத் தவமே. இவ்வாறு தவம் பலவகைகளில் மேற்கொள்வதற்குரியது.

முற்பிறப்பில் புண்ணியச் செயலைச் செய்தவர்கள், தவம் செய்தவர்கள், தெய்வத்தை வழிபட்டவர்கள் இப்பிறப்பில் நன்மை பெறுகி றார்கள்; மனைவி, மக்களோடு குறையின்றி இருக்கிறார்கள். பொதுவாக நோற்பார் என்று திருவள்ளுவர் சொன்னதையே "இவ்வாறு தவம்புரிபவர்' என்று விளக்குபவரைப்போல அபிராமிபட்டர் பாடுகிறார்.

அம்பிகையை வழிபட்டு மூன்று கரணங் களாலும் அன்பு செய்வதும் தவத்தைச் சார்ந்ததே;

உலகப் பொருட்கள் நிலையாதன என்பதை உணர்ந்து, என்றும் நிலையாக இருப்பது இறைவி யின் திருவருளே என்பதையும் தெரிந்துகொண்டு, உலகியல் இன்பங்களை நாடாமல், அம்பிகை யின் திருவடித் தாமரையையே பற்றாகப் பற்றி வாழ்ந்தவர் அபிராமிபட்டர். அவ்வாறு பற்றிய பற்றே தவம். அதனை உடையவர்கள் அடுத்த பிறவியில் பெருஞ்செல்வர்களாக விளங்குவார்கள்.

aa

அரசருக்கு ஒப்பானவாழ்வு வாழ்வார்கள்.

சூதாட்டத்தில் பாண்டவர்கள் அனைத் தையும் தோற்று வனவாசம் புகுந்த நேரம். சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெறுவதற் காக தவம் செய்துகொண்டிருந்தான் அர்ஜுனன்.

அவனை பலவிதங்களிலும் சோதனை செய்தான் இந்திரன்.

கடும் மழை, வெயில், காற்று எனும் பல சோதனைகûயும் கடந்த அர்ஜுனன்; ரம்பை, ஊர்வசி முதலான தேவலோகப் பெண்கள் வந்து இடையூறு செய்தபோதிலும் மயங்கவில்லை. தவத்தில் தீவிரமாக இருந்தான்.

தேவேந்திரனே முனிவர் வடிவில் வந்து அர்ஜுனனின் மனவுறுதியைக் குலைக்கும் விதமாகப் பேசினான். அப்போதும் அவன் மனவுறுதியை இழக்கவில்லை. சோதனை செய்யவந்த தேவேந்திரன், "சிவனருள் பெறுவாய்' என வாழ்த்திப் போனான்.

அர்ஜுனனின் தவம் கயிலை வரை எட்டியது. அவன்தான் கடுந் த

"இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.'

என்பது திருக்குறள்.

"வசதியான வாழ்வில்லாத வறியவர்கள் உலகத்தில் பலராக இருப்பதற்குக் காரணம், தவம் செய்பவர்கள் சிலர்; தவம் செய்யாதவர்களோ பலர்' என்பது இதன் பொருள். முற்பிறவியில் செய்த தவத்தால் இப்பிறவி யில் நன்மை உண்டாகிறது. நன்மை பெறுகிறவர்கள் குறை வென்றால், அதற்குக் காரணமான புண்ணியத் தைச் செய்தவர்களும் குறைவென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

நோற்பார் என்பது தவம் செய்பவரைக் குறிக்கும். தவமென்பது காட்டுக்குச் சென்று தனியே யோகம் செய்வது மட்டுமல்ல; தன்னலத்தை மறந்து பிறர் நலத்தைப் பெரிதாக எண்ணி ஒருவன் தியாக வாழ்வு வாழ்ந்தால், அவனைத் தவமுனிவன் என்றே சொல்லவேண்டும். இறைவனிடம் பக்தி செய்து நன்னெறியில் நிற்பதும் ஒருவகைத் தவமே. இவ்வாறு தவம் பலவகைகளில் மேற்கொள்வதற்குரியது.

முற்பிறப்பில் புண்ணியச் செயலைச் செய்தவர்கள், தவம் செய்தவர்கள், தெய்வத்தை வழிபட்டவர்கள் இப்பிறப்பில் நன்மை பெறுகி றார்கள்; மனைவி, மக்களோடு குறையின்றி இருக்கிறார்கள். பொதுவாக நோற்பார் என்று திருவள்ளுவர் சொன்னதையே "இவ்வாறு தவம்புரிபவர்' என்று விளக்குபவரைப்போல அபிராமிபட்டர் பாடுகிறார்.

அம்பிகையை வழிபட்டு மூன்று கரணங் களாலும் அன்பு செய்வதும் தவத்தைச் சார்ந்ததே;

உலகப் பொருட்கள் நிலையாதன என்பதை உணர்ந்து, என்றும் நிலையாக இருப்பது இறைவி யின் திருவருளே என்பதையும் தெரிந்துகொண்டு, உலகியல் இன்பங்களை நாடாமல், அம்பிகை யின் திருவடித் தாமரையையே பற்றாகப் பற்றி வாழ்ந்தவர் அபிராமிபட்டர். அவ்வாறு பற்றிய பற்றே தவம். அதனை உடையவர்கள் அடுத்த பிறவியில் பெருஞ்செல்வர்களாக விளங்குவார்கள்.

aa

அரசருக்கு ஒப்பானவாழ்வு வாழ்வார்கள்.

சூதாட்டத்தில் பாண்டவர்கள் அனைத் தையும் தோற்று வனவாசம் புகுந்த நேரம். சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெறுவதற் காக தவம் செய்துகொண்டிருந்தான் அர்ஜுனன்.

அவனை பலவிதங்களிலும் சோதனை செய்தான் இந்திரன்.

கடும் மழை, வெயில், காற்று எனும் பல சோதனைகûயும் கடந்த அர்ஜுனன்; ரம்பை, ஊர்வசி முதலான தேவலோகப் பெண்கள் வந்து இடையூறு செய்தபோதிலும் மயங்கவில்லை. தவத்தில் தீவிரமாக இருந்தான்.

தேவேந்திரனே முனிவர் வடிவில் வந்து அர்ஜுனனின் மனவுறுதியைக் குலைக்கும் விதமாகப் பேசினான். அப்போதும் அவன் மனவுறுதியை இழக்கவில்லை. சோதனை செய்யவந்த தேவேந்திரன், "சிவனருள் பெறுவாய்' என வாழ்த்திப் போனான்.

அர்ஜுனனின் தவம் கயிலை வரை எட்டியது. அவன்தான் கடுந் தவம் செய்து சோதனைகளை வென்று விட்டானே. சிவபெருமான் உடனே அருள் செய்யக்கூடாதா... ஏன் காலதாமதம் செய்யவேண்டும்? இதற்கு உமாதேவியிடம் பதில் சொல்கிறார் சிவபெருமான்.

""தேவி... நம்மை நோக்கித் தவம்செய்யும் அர்ஜுனனை அழிப்பதற்காக துரியோத னன் தன் நண்பனான மூகாசுரனை அனுப்பி யிருக்கிறான். அந்த அசுரனும் இப்போது பன்றியாக மாறி அர்ஜுனனைக் கொல்வ தற்காக வரப்போகிறான்.

மூகாசுரனையும் கொல்லவேண்டும்; அர்ஜுனனுக்கும் அருள்புரிய வேண்டும்.

அதற்காகவே காலம் கருதி காத்திருந்தோம். நீயும் வா. வேடர்களாக உருமாறிப்போய் அர்ஜுனனுக்கு அருள்செய்வோம்'' என்றார்.

இருவரும் வேடுவத் தம்பதியராக மாறிவர, சிவகணங்கள் வேடர் படையாக மாறின. அனைவரும் அர்ஜுனன் தவம் செய்யும் இடத் தையடைந்தனர்.

அங்கே அர்ஜுனனைக் கொல்லும் நோக்கத் தோடு துரியோதனனால் ஏவப்பட்ட மூகாசுரன் பன்றி வடிவில் அவன்மீது பாயத் தயாராக இருந்தான். அவன்மீது சிவபெருமான் அம்பெய்தவேளையில், அர்ஜுனனும் அம்பெய்தான். இரு அம்பு களும் பன்றிவடிவிலிருந்த மூகாசுரன்மீது பாய்ந்தன. அவன் இறந்துவிழுந்தான்.

பிறகென்ன...? யார் எய்த அம்பு முதலில் பாய்ந்ததென்ற வாதம் துவங்கியது. சிவ பெருமானுடன் போரிட்டான் அர்ஜுனன்.

முடிவில் உண்மையுணர்ந்து சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். அர்ஜுனனுக்கு நடந்தவற்றையெல்லாம் விவரித்த சிவபெருமான், அவன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தையும் வழங்கி அருள் புரிந்தார்.

அபிராமிபட்டரின் பக்தியை உலகறியச் செய்ததுபோல, அர்ஜுனனின் தவத்திற்கு காலதாமதமானாலும் முழுஅளவில் பலனளித்து அருள்புரிந்ததுபோல, யாருக்கு, எதை, எப்படி, எப்போது தர வேண்டுமென்பது தெய்வத்திற்குத் தெரியும். அத்தகைய தெய்வம் குடிகொண்டுள்ள திருத்தலம்தான் கொழையூர் அகத்தீஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: அகத்தீஸ்வரர்.

இறைவி: அபிராமி அம்பாள்.

விநாயகர்: இரட்டை விநாயகர்.

புராணப்பெயர்: கூழையூர்.

ஊர்: கொழையூர், நாகை மாவட்டம்.

தலவிருட்சம்: வில்வமரம்.

தீர்த்தம்: அகத்திய புஷ்கரணி.

இணைப்புக் கோவில்: ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்றான தும், அப்பர் பெருமானால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாகத் திகழ்கின்றதும், க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் இடம்பெற்ற பெருமையுடையதும், மூர்த்தி தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்பு களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளையும் பெற்றதொரு திருத்தலம்தான் கொழையூர் அகத் தீஸ்வரர் திருக்கோவில்.

"திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி

தேவூர் சிவபுரம் சிற்றேமம் சேறை

கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்

குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு

அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்

ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்

கண்டியூர் வீரட்டம் கருகாவூரும்

கயிலாய நாதனையே காணலாமே.'

-திருநாவுக்கரசர் 6-ஆம் திருமுறையில் 70-ஆவது பதிகம், 9-ஆவது பாடல்.

அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வரும்போது கோவில் இல்லாத ஊர்களிலெல் லாம் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துவந்தார். அவ்வாறு வரும்போது சூழ்நிலை காரணமாக இறைவனே அவரை இங்கு தங்கவைத்தார். கூழையர் (குள்ளமானவர்- அகத்தியர்) தங்கிய ஊர் கூழையூர் என அப்பர் பெருமானால் பாடப்பட்ட இத்தலம், காலப்போக்கில் மருவி "கொழையூர்' என்றானது.

தல வரலாறு

வில்வலன், வாதாபியின் சூழ்ச்சியால் அகத்திய மாமுனி புலால் உண்ட பாவம் தீர தேரெழுந்தூரில் வீற்றிருக்கும் சிவ பெருமானை வழிபட்டுவந்தார். அது சமயம் மலர்கொண்டு வர அருகிலுள்ள வீரசோழன் மற்றும் மகிமாவை ஆகிய இரண்டு ஆற்றுக்கு நடுவேயுள்ள இடத் துக்கு வருவது வழக்கம்.

அதுபோல ஒருநாள் மலர் பூத்துக் குலுங்கும் இடத்திற்கு வந்து மலர் கொய்து கொண்டிருந்தபோது, கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அவரால் எங்கும் செல்லமுடியாத சூழல் உண்டானது. அப்போது சிவவழிபாடு செய்ய விரும்பிய மாமுனி, அங்கிருந்த ஒரு கல்லையெடுத்து சிவனை அதில் ஆவாஹனம் செய்து பூஜைசெய்தார். சிவனை வழிபடா நாள் அவரது வாழ்க்கையில் ஒரு நாளும் இருந்ததில்லை. அவ்வாறு அகத்திய மாமுனி கையால் தேர்த்தெடுக்கப்பட்ட லிங்கமான இறைவன் அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

இறைவியின் திருநாமம் அபிராமி. அபிராமி என்னும் பெயரைக் கேட்டவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருபவள் திருக்கடவூரில் அருள்புரியும் அன்னை அபிராமி. அமிர்த கடேஸ்வரர் உடனருளும் அன்னையாகிய இவள் தன் பக்தனுக்காக மறைமதியை நிறைமதியாக்கி அற்புதம் நிகழ்த்தியவள்.

அவளே பிறிதொரு காரணத்திற்காக ஒன்றோ டொன்று சூட்சுமத் தொடர்புடைய ஆறு மந்திர சக்திபீடத் தலங்களில் அபிராமி என்ற பெயரை ஏற்றபடி அருள்பாலிக்கிறாள்.

திருக்கடவூரில் காலசம்ஹாரம் நடந்து முடிந்த பிறகு, பரிபூரண ஆயுள்பெற்ற மார்க்கண்டேய ரின் வேண்டுதலுக்கிணங்கி, அவர் வழி பட்ட ஏனைய தலங்களிலும் அன்னை அபிராமி யாகவே காட்சியளிக்கிறாள்.

ஆதாரச் சக்கரங்கள் ஆறினை அடிப்படை யாகக்கொண்டு, இந்தத் தலங்களை ஆறு மந்திர சக்திபீடங்களாக ஸ்தாபித்துள்ளார்கள் பண்டை சோழ மன்னர்கள்.

சகஸ்ராரம்- திருக்கடையூர்.

ஆக்ஞா- மருத்துவக்குடி.

அநாகதம்- பாணாபுரம்.

மணி பூரகம்- கொழையூர்.

சுவாதிஷ்டானம்- இலந்துறை.

மூலாதாரம்- திருமலைராயன்பட்டினம்.

சிறப்பம்சங்கள்

இறைவன், இறைவியின் பெயர் உயிரெழுத்தான "அ' என்னும் அட்சரத்தில் உள்ளது மிகவும் சிறப்புவாய்ந்தது.

✷ சிவபெருமான் கோவிலும் பெருமாள் கோவிலும் அருகருகே ஒரே வளாகத்தில் அமைந்துள்ளதால், இத்தலம் சிதம்பரம் கோவிலுக்கு இணையானதும்கூட

✷ க்ஷேத்திர விநாயகராக உள்ள இரட்டை விநாயகரை வெள்ளப் பிள்ளையார் என்று உள்ளூர் கிராம வாசிகள் அழைக் கின்றனர். இவரைச் சுற்றி தண்ணீர்த் தொட்டி அமைத்து நீர்நிரப்பி வழிபாடு மேற்கொண்டால் நல்ல மழை பெய்யுமென்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

✷ செவ்வாய், வெள்ளி, அமாவாசை தினங் களில் அபிராமி அம்மனுக்கு அபிஷேக அர்ச்சனை செய்தால் உடற்பிணி நீங்கி மனஅமைதி கிட்டும்.

✷ தமிழ் மாதப்பிறப்பன்று விஸ்வநாதர்- விசாலாட்சிக்கும்; திங்கட்கிழமை, பிரதோஷம், மாதசிவராத்திரி, பௌர்ணமி தினங்களில் அகத் தீஸ்வரருக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து அர்ச்சித்தால் அல்லல்கள் அகன்று ஆனந்தம் பிறக்கும்.

✷ சங்கடஹர சதுர்த்தியன்று இத்தல வெள்ளப் பிள்ளையாரை மாலை நேரத்தில் (சாயரட்சை) அபிஷேக அர்ச்சனை செய்தால், கேது கிரகத்தால் வரும் கெடுதல்கள் நீங்கி நல்லது நடக்கும்.

அகத்திய நாடிஜோதிடத்தில் குறிப்பிட்டது போல், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த மலர் கள் உண்டு. அம்மலர்கள்கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடுகள் மேற்கொண்டால் உன்னதப் பலன்கள் ஒருங்கே கிட்டும்.

1. அஸ்வினி- சாமந்தி

2. பரணி- முல்லை

3. கார்த்திகை- செவ்வரளி

4. ரோகிணி- பாரிஜாதம்

5. மிருகசீரிடம்- ஜாதிப்பூ

6. திருவாதிரை- வில்வப்பூ

7. புனர்பூசம்- மரிக்கொழுந்து

8. பூசம்- பன்னீர்மலர்

9. ஆயில்யம்- செவ்வரளி

10. மகம்- மல்லிகை

11. பூரம்- தாமரை

12. உத்திரம்- கதம்பம்

13. அஸ்தம்- வெண்தாமரை

14. சித்திரை- மந்தாரை

15. சுவாதி- மஞ்சள் அரளி

16. விசாகம்- இருவாட்சி

17. அனுஷம்- செம்முல்லை

18. கேட்டை- பன்னீர் ரோஜா

19. மூலம்- வெண்சங்கு புஷ்பம்

20. பூராடம்- விருட்சி

21. உத்திராடம்- சம்பங்கி

22. திருவோணம்- செந்நிற ரோஜா

23. அவிட்டம்- செண்பக மலர்

24. சதயம்- நீலோற்பவமலர்

25. பூரட்டாதி- வெள்ளரளி

26. உத்திரட்டாதி- நந்தியா வர்த்தம்

27. ரேவதி- செம்பருத்தி

ஜென்ம நட்சத்திரத்தன்று வழிபட்டாலும் சரி; ஜாதகமே இல்லாதவர்கள் அன்றைய (கோட்சாரரீதியாக) நட்சத்திரத்திற்குரிய மலர்கொண்டு வழிபட்டாலும் சரி- அதற்கு இணையான பலன் கிடைக்குமென்று அகத் தியநாடி சொல்கிறது.

✷ சனிக்கிழமையன்று யோக ஆஞ்சனேயரை 11 முறை வலம்வந்து வழிபட, சனி கிரகத் தால் ஏற்படும் சங்கடங்கள் விலகி சந்தோஷம் கிட்டும்.

✷ இத்தலத்திலுள்ள வரதராஜப் பெருமாள் மிகுந்த வரப்ரசாதியாக அருள்பாலிக்கி றார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் குணசேகர பட்டாச்சாரியார். "காஞ்சிபுரம் வரதரை தரிசித்த பலன்கிட்டும். சொர்க்கவாசல் இல்லாத இவ்வாலயத்தில் பிரதான வாசலே சொர்க்கவாசலுக்குச் சமம்' என்று கூறுகிறார்.

வீரசோழன் ஆற்றின் வடகரையிலும், காவேரி தென்கரையிலும் அமைந்துள்ள இத்தலம், நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, நான்கில் ஒருபகுதி பெருமாள் கோவிலும், மீதிப்பகுதி சிவன் கோவிலும் கிழக்கு நோக்கிய இரண்டு முகப்புவாயில் களுடன் அமைந்துள்ளது.

பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள் சிறப்பு டன் விளங்குகின்றன.

சூழ்ச்சியினால் வாழ்க்கையில் வீழ்ச்சியை சந்தித்தவர்கள் ஒருமுறை இத்தலத்திற்கு நேரில்வந்து வழிபட்டபின், அவரவர் இருக்கு மிடத்திலிருந்து இத்தல ஈசனை எண்ணி அனு தினமும் 11 முறை கீழ்க்கண்ட சுலோகத்தைப் பாராயணம் செய்தால் வாழ்வில் அமைதி கிட்டுமென்று ஆணித்தர மாகச் சொல்கிறார் சிவாலய அர்ச்சகரான குமார் குருக்கள்.

"நமோ நமஸ்தே ஜகதீஸ் வராய

சிவாய லோகஸ்ய ஹிதாய

சம்பவே அபார சம்ஹார சமுத்பவாய

ஸ்ரீஅபிராமி நாதாய ஸ்ரீ அகஸ்தீஸ்வராய.'

அல்லல்கள் அகற்றி அகமகிழ்வைத் தந்தருளும் அபிராமி சமேத அகத்தீஸ்வரர் அடிபணிவோம்; அகம்மகிழ்வோடு வாழ்வோம்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு: குமார் குருக்கள், அலைபேசி: 94429 33795.

அகத்தீஸ்வரர் திருக்கோவில், கோமல் (வழி), கொழையூர் அஞ்சல், குத்தாலம் வட்டம், நாகை மாவட்டம்- 609 805.

வைகுந்தன் (எ) குணசேகர பட்டர், அலை பேசி: 93855 21702. பொறுப்பாளர் எஸ். கோவிந்தராஜ், அலைபேசி: 89034 42077.

அமைவிடம்: கும்பகோணம்- ஆடுதுறையிலிருந்து தரங்கம்பாடி பேருந்து மார்க்கத்தில் கோமல் பஸ் நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொழையூர் அகத்தீஸ் வரர் ஆலயம். மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர் வழியாக கோமல் வரலாம். தேரெழுந்தூரிலிருந்து தென் கிழக்கே மூன்று கிலோமீட்டர் தெலைவில் உள்ளது.

படங்கள்: போட்டோ கருணா

om010120
இதையும் படியுங்கள்
Subscribe