இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இறைவனைக் காண்பது நமது மரபு.
அதன்படி இயற்கையை இறைசக்தியாகக் கொண்டு வழிபடும் பண்டிகை தமிழர் திருநாள். சூரிய ஒளி இல்லாத இடத்தில் உயிர்கள் உருவாகாது. புல் பூண்டுகூட முளைக்காது. உலக உயிர்களுக்கு ஒளிதரும் சூரியனைப் போற்றி நன்றிதெரிவிக்கும் நாளான பொங்கல் பண்டிகை, உலக உயிர்களுக்கு உணவுதரும் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யும் திருநாளாகவும் விளங்குகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒரு சிறப்புண்டு. தை மாதத்தில் மக்களின் மனதை மகிழ்விக்கும் பண்டிகைகள், காரியசித்தி தரும் விரத நாட்கள் அதிகமிருப்பதால் தை மாதம் தனித்தன்மை பெறுகிறது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைத்திருநாள் ஒவ்வொரு வருடமும் தைமாதப் பிறப்பன்று, சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளில் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலங்களில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பமாகும் உத்தராயன காலமான தை முதல்நாள் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள், தைத் திருநாள், தமிழர் திருநாள், தைமாதப் பிறப்பு, மகர சங்கராந்தி என பல்வேறு பெயர்களால் போற்றப்படும் தை மாதத்தின் சிறப்புமிக்க விழா, விரத நாட்களைப் பற்றிக் காணலாம்.
போகிப் பண்டிகை மார்கழி- 29 (13-1-2021) வியாழக்கிழமை போகிப் பண்டிகை என்பது, தை மாதத்தில் சூரியனின் பயணத்தை வடக்குநோக்கி மாற்றி வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்படும் விழா. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற அடிப்படையில் தாழ்ந்த, தார்மீகமற்ற உலகியல் ஆசைகளானமண்ணாசை, பெண்ணாசை, பொனனாச ஆகியவற்றை மனதிலிருந்து அழித்து, ஞானமென்னும் அக்னி யால் எரிக்கவேண்டும் என்பதே இந்தப் பண்டிகை யின் தத்துவம். அதாவது மனதிலிருக்கும் தீய- தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதே இதன் தத்துவமாகும். மேலும் தற்காலத்திற்கு ஒத்துவராத கருத்துகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் எல்லா வற்றையும் விடுத்துப் புதிய சிந்தனைகளை, பழக்கங்களை நடைமுறைப் படுத்தவேண்டும். இதன்மூலம் மனித வாழ்க்கையில் தேவையற்ற துயரங்கள் போகும் என்பது நம்பிக்கை.
ஜோதிடரீதியாக போகிப் பண்டிகையைப் பற்றி ஆய்வுசெய்தால், பழமையென்ற சொல்லுக்கு அதிபதி சனி பகவான். புதுமை என்ற சொல்லுக்கு அதிபதி சுக்கிரன். அதே போல் உழைப்பிற்குக் காரகர் சனி பகவான் என்றால், அதன்மூலம் கிடைக்கும் சுகபோக வாழ்வுக்குக் காரகர் சுக்கிரன். சுக்கிரனின் மூலமே புத்தாடை, புத்துணர்ச்சி, புதுவீடு, புதிய வாகனம் போன்ற மனதை மகிழ்விக்கும் அழகு, ஆடம்பரப் பொருட்கள் கிடைக்கும். சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. சுக்கிரனின் ஆதிகத்தை அதிகரித்தால் மட்டுமே வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
மகாலட்சுமியின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது வீட்டில் தடைப்பட்ட திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். புதிய தொழில்வாய்ப்பு, வேலை வாய்ப்பு உருவாகும். பொருள் குற்றம் நீங்கி பணவரவு தங்குதடையின்றித் திருப்திகரமாக இருக்கும்.
ஒருசில வீடுகளில் திரும்பிய திசையெல் லாம் குப்பை, உடைந்த பொருட்கள், பழைய துணிகள், சுகாதாரமற்ற கழிவறைகள் என வீடு முழுவதும் எதிர்மறை எண்ணங்களை மிகுதிப்படுத்தும் விதமாக இருக்கும்.
அத்தகைய பொருட்கள் வீட்டிலிருந்தால் ஆரோக்கியக் குறைபாடு, குடும்பத்தில் கூச்சல் குழப்பம், நிம்மதியின்மை, பொருளாதாரத்தில் மிகுதி யான ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். மேலும் சில வீடுகளில் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கிக்குவிப்பார்கள். பயன்பாடின்றி ஓடாமலிருக்கும் பொ

அத்தகைய பொருட்கள் வீட்டிலிருந்தால் ஆரோக்கியக் குறைபாடு, குடும்பத்தில் கூச்சல் குழப்பம், நிம்மதியின்மை, பொருளாதாரத்தில் மிகுதி யான ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். மேலும் சில வீடுகளில் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கிக்குவிப்பார்கள். பயன்பாடின்றி ஓடாமலிருக்கும் பொருட்கள்மூலமாக எதிர்மறை எண்ணம் அதிகமாகும். இரண்டுமே தவறுதான். ஆக, போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையைக் குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தையும் விலக்கி, புதிய விடியலை ஏற்படுத்தும் சுக்கிரனின் தினமாகும். நமக்குத் தேவையற்ற அதே சமயத்தில், உபயோகப்படக்கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதால் சனியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும்.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துத் தூய்மை செய்து, தேவையற்ற பழைய பொருட்களைக் கழிக்கவேண்டும்.போகியன்று, வீட்டின் வாசலில் பொங்கல் பண்டிகைக்கான காப்பு கட்ட வேண்டும்.அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டுவாசலின் முன்பாக, வீட்டிலிருக்கும் தேவையில்லாத பழைய குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்தவேண்டும். இதனால் வீட்டிலிருக்கும் திருஷ்டி கழியும். அவர்கள் தீயசக்திகள் மற்றும் நோய்களிலிருந்தும் காக்கப்படுகிறார்கள்.
அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்படும்போது, சுத்தமாக்கப்படுவது வீடு மட்டுமல்ல; மனிதர்களின் ஆன்மாவும்தான். ஆன்மா சுத்தமடையும்போது அடையமுடியாத வெற்றியே இல்லை.
தைப்பொங்கல் தை-1, (14-1-2021) வியாழக்கிழமை பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழைமை வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாகத் தமிழர்களின் பண்டிகையாகும். மழைக்காலத்துக்கும் குளிர்காலத்துக்கும் பிறகுவரும் அறுவடைக் காலம் இந்த தினத் தில்தான் தொடங்குகிறது. உழைப்பின் பலனை அறுவடைசெய்யும் நாளிது.
உழவுத்தொழிலுக்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள்.
உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும், உலக இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். பிரபஞ்ச சக்தி உண்மையா என நாத்திகம் பேசுபவருக்கு பதில் சொல்லும் கண்கண்ட தெய்வம் சூரியன். நாட்டின் முதுகெலும்பான உழவுத்தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புத்தரிசியுடன் பொங்கல் செய்யப்படும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள்கொடி கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து, பானையைச் சுற்றிக் கட்டவேண்டும். பின்பு புத்தரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு, பால், நெய், முந்திரி, திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில் வைத்து அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைக்கலாம்.
குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து, பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று மூன்றுமுறை கூவி சூரியனை வணங்குவது நல்லது. முழுக்கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்புப் பூசணிக்கீற்று, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஆகியவற்றையும் சூரிய பகவானுக்குப் படைக்கவேண்டும். பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும், முன்னோர் களை நினைத்துக் காகத்துக்கும் பொங்கல் வைத்தபிறகு அனைவரும் சாப்பிடலாம்.
சூரிய வழிபாட்டை தைப் பொங்கலன்று மட்டுமல்ல; தினமும் செய்லாம்.இயற்கை சக்தியான சூரியனிடமிருந்து அதிகாலையில் வரும் ஒளிக்கதிர்கள் சக்திவாய்ந்தவை. இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து, உற்சாகமடைந்து உடல் வலிமை பெறுகிறது. ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்களிலுள்ள குறைபாடுகள் சீராகும். அறிவுவளரும். பித்ருக்களாகிய முன்னோர்களின் நல்லாசி சூரிய ஒளி மூலமாகக் கிடைக்கும்.
ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதில் சூரியன் இருப்பவர்கள், சூரியன் வலிமை குறைந்தவர்கள், சூரியன், சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றவர்கள் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரிய நமஸ்காரம் செய்வது மிகச்சிறப்பு. தினமும் ஆதித்திய ஹ்ருதயம் படித்து அல்லது கேட்டுவந்தால் சத்ருபயம், கடன் தொல்லை, உஷ்ண நோய்கள் விலகும்.
படிப்படியாக கஷ்டங்கள் விலகும். வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும். அனைத்து விதமான பாவங்களும் விலகி நிரந்தரமான- முழுமையான வெற்றிகள் கிட்டும். மனதிலுள்ள கவலைகள் ஒழியும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். அரசாங்க உதவி, அரசு வேலை, அரசியல் ஆதாயம் போன்றவற்றை சூரிய வழிபாட்டின்மூலமே பெறமுடியும்.
மனிதர்களுக்கு ஆன்மபலம் மிக முக்கியம். பலம்பெற்ற ஒரு ஆன்மாவால் உலகில் அடையமுடியாத வெற்றியே கிடையாது. நவநாகரிக உலகில் பகலில் தூங்குவது, இரவில் விழித்து வேலைபார்ப்பது போன்ற கலாச்சார மாற்றத்தால் பலர் ஆன்ம, ஆத்மபலம் குறைந்து இயந்திரமாக வாழ்கிறார் கள். நாம் எதை அடையவேண்டுமென்று நினைக்கிறோமோ அதை அடைவதற்கு மந்திரம், யந்திரம், தந்திரம், இரவுவேலை என்று அலையவேண்டிய அவசியமில்லை. சூரியன் உதயமாகும்போது ஆத்மார்த்மாக ஆதித்ய ஹ்ருதய சுலோகத்தைச் சொல்லிவந்தால், எல்லா தடைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் ஆத்மபலம், ஞானம் போன்ற அனைத்தும் கிடைக்கும். அதனால் தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச்சிறந்த வழிபாடென்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.
தமிழர் பண்டிகையான தைப் பொங்கலைக் கொண்டாடி, இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றிசெலுத்த பொங்கல் வைக்க நல்லநேரம் காலை 8.45 முதல் 10.45 மணிவரை மற்றும் பகல் 11.45 முதல் 12.45 மணிவரை.
மாட்டுப்பொங்கல் தை- 2 (15-1-2021) வெள்ளிக்கிழமை கடும் உழைப்புக்கும் உழவுக்கும் துணைசெய்யும் கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கும், பால்தரும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் மாட்டுப்பொங்கல்.
வெள்ளியன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் சுக்கிர ஓரையில் கால்நடைகளைத் தூய்மைப்படுத்தி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்கவேண்டும். மாட்டுக் கொட்டைகளைத் தூய்மைசெய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து கோபூஜை செய்வது சிறப்பு. மாடுகளை வணங்கிவிட்டு வாழையிலையில் பொங்கல் வைத்து அவற்றுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும்.
அன்று தமிழக கிராமங்களில் உறவினர் கள்மேல் மஞ்சள் நீர் தெளிப்பது, ஜல்லிக் கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு நடைபெறும்.
இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும். பணமதிப்பில்லாத காலத்தில் ஒருவரிடமுள்ள கால்நடைகளைக் கொண்டே பொருளாதார நிலையை மதிப்பிட்டார்கள். கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கோமாதா என்றழைக்கப்படும் பசு, பிராணிகளில் மிகவும் புனிதமானது; சாதுவானது. உயிரினங்களில் பசு மட்டுமே தனக்கென வாழாத, மிக உயர்ந்த பிறவியாகும். பசுவை வணங்குபவர்களும் தனக்கென வாழாது பிறருக்கென வாழும் தியாகப் பண்பைப் பெறுவார்கள். அதனால் நமது பாரம்பரியத்தில் கோமாதா வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பசுவைத் தொடுவது புனிதம்.
அதன் மூச்சுக்காற்று பட்ட இடத்தில் நோய் அண்டாது என்பதால்தான் நமது முன்னோர் கள் பசுவை தெய்வமாக வழிபட்டார்கள். இனி, பசுவை வழிபடும் முறையையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் காணலாம்.
கோபூஜை செய்தால் கோடிநன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு. தினமும் கோபூஜை செய்வது சிறப்பு. தினமும் செய்யமுடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்யவேண்டும்.
அதுவும் முடியாதவர்கள் சகல ஐஸ்வர்யத் தையும் அள்ளித்தரும் கோபூஜையை வருடம் ஒருமுறையாவது செய்துவரவேண்டும்.
பசுவை அதிகாலையில் பார்ப்பதும், வணங்குவதும் புண்ணியமாகும். எனவே தினமும் பசுவுக்கு ஒருபிடி அறுகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ உணவாகக் கொடுக்கவேண்டும். தனித்த பசுவை வழிபடுவதுடன், கன்றுடன் சேர்ந்த பசுவைப் பூஜிக்கவேண்டும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமைகளில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடுதேடி வரும். பௌர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி வீட்டில் நித்தியவாசம் புரிவாள்.
வருடத்திற்கு ஒருமுறையாவது பசுவை வீட்டிற்கு அழைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புத்தாடை அணிவித்து, பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை தானியங் களுடன் சாப்பிடக் கொடுத்து, நெய்விளக்கேற்றி, தீபாராதனை செய்யவேண்டும். பிறகு நெய்விளக்கைக் கையிலெடுத்து அந்தப் பசுவைச் சுற்றி மூன்றுமுறை வலம்வர வேண்டும்.
இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்துவந்தால், நம் இஷ்டதெய்வ குலதெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிட்சம் கிடைக்கும்.
உயர்ஜாதிப் பசுவை கன்றுடன் ஸ்ரீசுக்தம் சொல்லி கோபூஜைசெய்து தானம் செய்தால் நீதிமன்ற விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும். விரோதம் நீங்கும். பிதுர்சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகின்றன.
தை- 3, காணும் (16-1-2021) பொங்கல் சனிக்கிழமை
போக்குவரத்து வசதி அதிகமில்லாத காலத்தில், மனதை உற்சாகப்படுத்தும் சுற்றுலாத் தலங்களுக்கு எளிதில் சென்றுவர முடியாது. அதனால் முற்காலத்தில் காணும் பொங்கலன்று உற் றார்- உறவினர், நண்பர்கள் அனைவரும் ஊரின் அருகிலிருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்குச் சென்று அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.
கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரமேறல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும். இந்த நாளில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்திற்குப் பொங்கல்வைத்து வழிபட, ஊர்மக்களை எளிதில் எந்த கொடிய நோயும், இயற்கை சீற்றங்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. காலச்சூழல் மாற்றத்தால் பல ஊர்களில் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது. காவல் தெய்வத்திற்குரிய பூஜை, வழிபாடு முறையாக இருந்தால் மட்டுமே ஊர் மக்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில் வளர்ச்சிபோன்ற பல காரணிகள் சிறப்பாக இருக்கும். இதுவரை காவல்தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். அன்று திருமணமாகாத பெண்களுக்காக கன்னிப் பொங்கலும் ஆண்களுக்காக கன்றுப் பொங்கலும் வைத்து, விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம்.
காணும் பொங்கலன்று வயது முதிர்ந்த பெரியோர்களை நேரில்கண்டு ஆசிபெறுவது சிறப்பு. அன்று சனிக்கிழமை என்பதால் உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற வசதி குறைந்த வயோதிகர்களுக்கு அல்லது ஆதரவற்ற இல்லத்தில் இருப்பவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால் சனிபகவானின் நல்லாசிகள் கிடைக்கும்.
தை- 14, தைப்பூசம், பௌர்ணமி (28-1-2021) வியாக்கிழமை
வியாழக்கிழமை குரு வாரம் குருவின் ஆதிக்கம் நிறைந்த நாள். பூசம் சனியின் நட்சத்திரம். ஆக குரு, சனியின் ஆதிக்கம் இணைந்த நாளென்று கூறலாம். ஒரு மனிதன் தன் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் பெற குரு, சனியின் ஆதரவு வேண்டும். சனி என்றால் கர்மப்பலன். குரு என்றால் விருப்பம்.
ஒருவருடைய விருப்பமும் அவர் அனுபவிக் கப்போகும் கர்மப்பலன்களும் ஒன்றாக இருந்துவிட்டால் அவர் நினைப்பதுபோல தான் நடக்கும். ஒருவருடைய விருப்பமும் அனுபவிக்கப்போகும் கர்மப்பலன்களும் வெவ்வேறாக இருந்தால் அவர் நினைப் பதுபோல் நடக்காது.
ஜனன கால ஜாதகத்தில் அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாத குரு, சனி இணைவு தர்மகர்மாதிபதி யோகம். இது அளவிடமுடியாத வெற்றியைத் தரும் யோகமாகும். அஷ்டம, பாதக ஸ்தானங் களுடன் தொடர்பு பெறும் குரு, சனி சம்பந்தம் பலவிதமான இன்னல்களை பிரம்மஹத்தி தோஷமாக, சாபமாக செயல்படுத்தும்.
தர்மகர்மாதிபதி யோகத்தால் மேலும் சாதகமான சுபப்பலனை அனுபவிக்க தைப்பூச நன்னாளில் இயன்ற தானதர்மங்களைச் செய்ய பலன் இரட்டிப்பாகும்.
பிரம்மஹத்தி தோஷத்தால் மிகுதியான வினைப்பயனை அனுபவிப்பவர்கள், தைப்பூசத்தன்று திருவிடைமருதூர் மகாலிங் கேஸ்வரர் கோவில் சென்று, அங்குள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம்வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
தை மாதத்தின் பூச நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி திதியும் இணைந்த நாள் தைப்பூசம். முருகன் மற்றும் சிவ வழிபாட்டிற்குத் தைப்பூசம் உகந்த நாள் என்பதால், சுப்ரமணிய புஜங்கம், ஸகஸ்ர நாமம், கந்தசஷ்டிக் கவசம் போன்ற ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்தால் கஷ்டங் கள் நீங்கி, வாழ்வில் வளம் சேரும்.
ஜோதியே கடவுளின் சொரூபம். ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறைய உணர்ந்து முக்தியடையலாம் என்பதால், ஜீவசமாதியடைந்த மகான்களை ஜோதி வடிவில் வழிபடுவது சிறப்பு.
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மிக உண்மையை உலகுக்கு உணர்த்தி தைப்பூசத்தன்று இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும்விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று நடைபெறும் ஜோதி தரிசன விழாவில் கலந்துகொள்வது சிறப்பு.
தை மாதச் செவ்வாய், வெள்ளிக்கிழமை வழிபாடு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். இதனோடு உத்தராயனத்துக்குரிய சிறப் பும் சேர்வதால், தைமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு டையவையாகக் கருதப்படுகின்றன. திருமண மான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கி யத்தை அதிகரிக்க செவ்வாய்க்கிழமை அம்மன் வழிபாடு செய்யலாம். கன்னிப் பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வெள்ளிக் கிழமை அம்மன் வழிபாடு செய்யலாம்.
தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமை களில் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து, அம்மனை ஆவாகனம் செய்து, பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு லலிதாசகஸ்ர நாமம் பாராயணம் செய்து வழிபட, வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள்பூசிக் குளித்து மகாலட்சு மியை வழிபட்டால், வீட்டில் செல்வம் சேரும். கணவரின் ஆயுள் அதிகரிக்கும். திருமண மாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.
ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்று வலிமை குறைந்தவர்கள், பெண் சாபத் தால் பாதிக்கப்பட்டோர், தை வெள்ளிக் கிழமை நாளில் சப்த கன்னிகளை வழிபட்டால் திருமணத் தடை அகலும். சுக்கிர தோஷம் நீங்கும்.
ஜனன கால ஜாதகத்தில் 8-ல் செவ்வாய், 8-ல் சனி, கேது போன்ற வற்றால் மாங்கல்ய பாக்கியம் குறைந்த வர்கள், தை செவ்வாய்க் கிழமையன்று வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து, உணவு கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது நலம்.
தற்போதைய கோட்சார ராகு கால புருஷ இரண்டாமிடமான ரிஷபத்தில் பெண் ராசியில் நிற்பது, பெண்களுக்கு சுபிட்சித்துச் சொல்லக்கூடிய காலமல்ல. எனவே பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு வேளையில் துர்க்கை, காளி போன்ற உக்ர தெய்வங்களை வழிபட சுபப் பலன் மிகும்.
இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் நிறைந்த தைமாத விரத நாட்களை அனைவரும் பயன் படுத்தி, சகல சுபப்பலன்களுமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.