ழ்கடலின் நீலநிறமும், ஆகாயத்தன்மை எனப்படும் ஆழ்மனதின் வெண்ணிறமும் கொண்டு சாந்த வடிவாய் அருள்பாலிக்கும் ஸ்ரீநாராயண ருக்கு, 22-2-2019 வெள்ளிக் கிழமை அன்று, வெண்மேகங் கள் சுற்றிவர, கருட பகவான் வட்டமிட, "ஓம் நமோ நாராயணா' என திரளான பக்தர்கள் கோஷமிட மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.

a

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் நகரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது மணற்பாங்கான கொத்தலரிவிளை கிராமம். அங்கேதான் ஜீவராசிகளின் கர்மவினையைப் போக்கி நற்கதியடையச் செய்யும் நாராயணசுவாமி நின்றநிலை யில் அருள்பாலிக்கிறார்.

Advertisment

இதுபோன்ற ஒரு சிற்றூ ருக்கு நாராயணர் வந்தமரக் காரணம் என்ன? கொத்தலரி விளையின் மண் தன்மை காரணமாக, சிவபெருமானுக்கும் பராசக்தி தேவியாருக்கும் பிடித்த சிவப்பு அரளிப்பூக்கள், நோக்குகிற இடமெல்லாம் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கின்றன. அதன்காரணமாக கொத்தலரிவிளை என்றானது இந்தக் கிராமம்.

அம்பிகையின் அம்சமான பத்ரகாளியம்மனையே அந்தக் கிராம மக்கள் தொழுது வந்திருக்கிறார்கள். ஆனால், அம்மக்க ளின் இஷ்டதெய்வமான பத்ரகாளியம்மனின் திருவுருவம் அங்கில்லை.

அதன்பின் அவர்களின் வழித்தோன்றல்களில் முன்னோடி யான ஆர். சின்னப்பழ நாடார், ஊர் மக்கள் சகிதமாக பத்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் குரங்கணியம்மனை கால்நடை யாகச் சென்று வழிபட்டு வந்திருக்கிறார்.

Advertisment

நினைத்த நேரத்தில் அம்மனை வழிபட முடியவில்லையே என்ற ஏக்கம் அம்மக்களை வாட்ட, சின்னப்பழ நாடாரின் வகையறாக்கள் அருகிலுள்ள திருச்செந்து கிராமம் சென்று அம்மனை தரிசித்திருக்கி றார்கள். அந்த ஆலயம் தொடர்பான வழிபாட்டுமுறை, முதல் மரியாதை போன்ற மரபுகளிலிருக்கும் போட்டி காரணமாக, அங்கே மனக்கசப்பு ஏற்பட்டு அந்தக் கிராமத்தவர்களே வழிபாட்டு முறைகளில் விவகாரத்தை ஏற்படுத்தி சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட சின்னப்பழ நாடார், தன் குலதெய்வம் குரங்கணி அம்மன் ஆலயம் சென்றார். அங்கு பிடிமண் எடுத்துக் கொண்டு கொத்தலரிவிளை கிராமம் திரும்பியவர், அம்மனின் அவதாரமான உச்சினி மாகாளியம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார். இதனால் மனம் பூரித்த கிராம மக்கள் அங்கேயே அம்மனை வழிபடத் தொடங்கினார்கள். தங்களின் தெய்வம் தங்களது கிராமத்தில் குடியேறி அருட் கொடையளிப்பதைக் கொண்டாடினார்கள்.

"கோவில் வாழ்ந்தால் குடி வாழும்;

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே'

d

என்பது ஆன்றோர் வாக்கு. அதற்கேற்ப உச்சினி மாகாளியம்மனை அமைத்த சின்னப்பழ நாடார், அடுத்ததாக உச்சினியின் மூத்த சகோதரியான முத்துமாலையம்மனை கிராமத்தின் மறுபுறம் அமைத்துக் கோவிலாக்கினார். தொடர்ந்து அம்மனின் சகோதரரான நாராயணசுவாமியை இவர்களின் நேர் பார்வையிலிருக்கும்படி அமைத்தார். 1930-களுக் குள்ளேயே இம்மூன்று ஆலயங்களையும் மக்கள் நன்மை பொருட்டு அமைத்தார். கிராம மக்கள், அவர் களின் மனதிற்கேற்ற வழிபாட்டுமுறைகளை அப்போது மேற்கொண்டிருக்கிறார்கள் என்று இந்த ஆலயங்களின் வரலாறைச் சொன்னார் சின்னப்பழ நாடாரின் வாரிசு களில் ஒருவரான பாலசுப்பிரமணியம்.

விதி வலியது. சில வேளைகளில் அது சில அதிசயங் களை மனித வடிவில் நடத்தி வைக்கும்.

பிழைப்பிற்காக சென்னை சென்ற சின்னப்பழ நாடாரின் வாரிசுகளான பாலசுப்பிரமணியம், ராஜபாண்டி, ஸ்ரீதர் சகோதரர்கள் கடும் உழைப்பின் காரணமாக வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டார் கள். இந்த வளமை தம் வம்ச தெய்வம் கொடுத்த அருட்கொடை என்று உணர்ந்தவர்கள், அதனை தங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், மனதிலிருந்த ஏக்கத்தைப் போக்கும்வகையில் தங்கள் ஊரிலிருந்த உச்சினி மாகாளியம்மன், முத்துமாலையம் மன் ஆகியோருக்குச் சிறப்பாக ஆலயங்கள் அமைத் துக் கும்பாபிஷேகம் செய்தார்கள். தற்போது மூன்றாவது ஆலயமாக ஸ்ரீநாராயணருக்கும் முறையா கக் கோவில் அமைத்து கும்பாபிஷேகத்தையும் ஊர் மெச்ச நடத்தி முடித்திருக்கிறார்கள்.

""இந்தச் செயல்பாடுகள் ஊர் நன்மைக்கானது''

என்று சொல்லும் பாலசுப்பிரமணியம், ""இன்றுவரை கிராம உறவுகளும், நாங்களும் அம்மனிடம் அருள் வாக்கு கேட்டபிறகே அவர்களுக்குத் தனித்தனியாகக் கொடைவிழாவை நடத்திவருகிறோம்'' என்றார்.

முன்பொரு சமயம், ஆன்மிகப் பணியிலிருக்கும் பாலசுப்பிரமணியத் தின் பெரியப்பா அண்ணாமலை நாடார் தனது நிர்வாகத்திலிருக்கும் சிவலிங்க பீடம் விரிசல் கண்டுவிட்டதால் அதைச் சரிசெய்யும் பொருட்டு ஸ்தபதியைத் தேடியிருக்கிறார். புதுக்கோட்டையிலிருக்கும் ஸ்தபதி ஆறுமுகம் பற்றித் தெரியவர, அவரை நாடியிருக்கிறார். விரிசல்கண்ட சிவலிங்க பீடம் போன்றே அச்சுஅசலாக பீடம் அமைத்துக் கொடுத்தார் அவர்.

தற்போது நாராயணர் கோவிலைப் புதிதாக அமைப்பதற்கு திட்டமிட்டபோது அவரது நினைவு வந்தது. 35 ஆண்டுகளாக தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களை அமைத்து பெயர்பெற்ற ஸ்தபதி ஆறுமுகத்தை வரவழைத்து நாராயணர் சிலையையும் கோவிலையும் மறுவடிவமைக்க ஏற்பாடு செய்தனர்.

n

""கல்மண்டபக் கோவில், மூன்றே முக்கால் அடி உயர ஸ்ரீநாராயணர் சிலையை நாங்கள் 35 பேர்கள், ஒன்பது மாதங்களில் அமைத்து முடித்தோம். மிகச்சிறப்பாக எங்கள் பணி நிறைந்ததில் ஆத்ம திருப்தி'' என்கிறார் ஸ்தபதி ஆறுமுகம்.

மூன்று யாகசாலைகளை அமைத்து சாஸ்திர விதிகளின்படி யாகம் நடத்திய பட்டர்களில் முன்னோடியான மங்களேஸ்வர பட்டர், ""நீலமும் வெண்மையும் சேர்ந்த முகப் பொலிவோடு, அருட்கடாட்சப் பார்வையோடு நிற்கிற நாராயணர் அசாதாரணமானவர். விஸ்வரூபமாய் நிற்கிற விஷ்ணுவின் அம்சம் அவர்.

கிருஷ்ணரின் நிறம் கருப்பு. நாராயணரின் நிறம் நீலம். அவர் ஆதிநாராயணர். ஆதி என்பது விஸ்வரூபம். ஆதியிலிருந்துதான் பஞ்ச பூதங்கள் உருவாகின. இதனை உள்ளடக்கிய பிறப்பிடமே ஆதி. ஆதிசிவனே பராசக்தியைத் தோற்றுவித்தவர். அதாவது ஆதிசிவனுடைய நகத்திலிருந்து உருவானவர் பராசக்தி. அது வரை அருவமும் உருவமுமாயிருந்த உலகத்தை இயக்கும் சக்தியை ஆதிபராசக்திக்கு அளித்தார் சிவன். அந்த ஆதிபராசக்தியே ஆக்கல், அழித்தல், காத்தல் என்னும் மூன்று தொழிலுக் கும் காரணியாக இருப்பவள்.

அனைத்திற்கும் ஆதிதான் மூலம். அதனால் தான் விஷ்ணுவின் விஸ்வரூபமாய் இங்கே நிற்கிறார் ஆதிநாராயணர்.

ஆகாயம் நீலமாக இருக்கும். அருவமும் உருவமுமாய் இருக்கும் ஆதிதெய்வம் வெண்மை நிறம் கொண்டது. அந்த ஆதியே ஆன்மா எனப்படுகிறது. அதைத்தான் சிவ தத்துவம் என்கிறார்கள். அதேபோன்று நாராயணசாமியின் ஆழ்மனது வெண்மை யானது. ஆகாயத்தின் நீலத்தையும், ஆழ்மனதை வெளிப்படுத்துகிற வெண்மையையும் ஒருசேர முகம் கொண்டவராய் இருப்பவர்தான் இந்த ஆதிநாராயணர். பிறப்பிலிருந்து இறப்பு வரை உடனிருந்து ஜீவராசிகளைக் காத்து, அந்த ஜீவராசிகளின் கர்மாவின்படி பாரபட்சமில்லாது அருள்பாலிப்பவர் இந்த ஆதிநாராயணர். இவரை தரிசிப்பது விஷ்ணு பகவானை தரிசிப்பதற்கு ஒப்பாகும். ஆதி நாராயணரின் ஆன்மா, ஊழ்வினையைக்கூட மாற்றி அமைக்கும். ஆதி நாராயணரை மனதார நம்பி சரணாகதம் அடைந்தால் நற்கதி யடையலாம்'' என்கிறார் மேனி சிலிர்க்க.

கொத்தலரிவிளையின் கீர்த்தியை உலகறிய வைத்திருக்கிறார் ஆதிநாராயண சுவாமி.

படங்கள்: ப. ராம்குமார்