வைணவர்கள் ஸ்ரீரங்கத்தை "பூலோக வைகுண்டம்' என்று பெருமையாகச் சொல்வதுபோல சைவர்கள் சிதம்பரத்தை "பூலோக கயிலாயம்' எனப் போற்றுவார்கள். தென்னாட்டைப் பொருத்தவரை சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோவில் முதன்மையானதும், முக்கியமானதுமான புனிதத்தலம். இங்குதான் அடியாருக்கு ஆனந்தத் தாண்டவ தரிசனத்தை நடராஜப் பெருமான் காட்டியருள்கிறார்.
"ஆனந்தக் கூத்தன் அருள்பெறில்
நாம் அவ் வண்ணமே
ஆனந்தமாகி நின்று
ஆடாமோ தோள் நோக்கம்'
என மாணிக்கவாசகர் ஆனந்தத் தாண்டவம் பற்றிப் பாடுகிறார்.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தைக் குறிக்கும் தலமாகவும், ஐந்து சபைகளில் பொற்சபையாகவும் நடராஜர் திருக்கோவில் விளங்கு கிறது. இதைவிட அறிவியல்ரீதி யாகவும் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், உலகின் பூமத் திய ரேகையின் மையப்பகுதியாக (Centre Point of world's Magnetic Equator) மூலவர் தில்லை நடராஜப் பெருமானின் சந்நிதி விளங்குகிறது என ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர். உத்தரகோசமங்கையில் வீற்றிருக் கும் மரகத நடராஜப் பெருமான் "ஆதிசிதம்பரேசன்' என்றழைக்கப்படுகிறார். அதேபோல் இங்குள்ள சபையை ரத்தினசபை எனவும் சொல்கிறார்கள். மாணிக்கவாசகருக்கு இறைவன் தனது உருவக் காட்சியை அருளிய தலமிது.
வைகுண்டத்தில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணுவை தரிசனம் செய்ய தினமும் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் எனப் பலரும் வருவதுண்டு. ஒருநாள் அங்ஙனம் வந்த மகரிஷிகளை வைகுண்டத்தின் துவாரபாலகர்களான ஜெயன், விஜயன் என்னும் இருவரும் தடுத்தனர். இதை யறிந்த மகாவிஷ்ணு மகரிஷிகளை
வைணவர்கள் ஸ்ரீரங்கத்தை "பூலோக வைகுண்டம்' என்று பெருமையாகச் சொல்வதுபோல சைவர்கள் சிதம்பரத்தை "பூலோக கயிலாயம்' எனப் போற்றுவார்கள். தென்னாட்டைப் பொருத்தவரை சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோவில் முதன்மையானதும், முக்கியமானதுமான புனிதத்தலம். இங்குதான் அடியாருக்கு ஆனந்தத் தாண்டவ தரிசனத்தை நடராஜப் பெருமான் காட்டியருள்கிறார்.
"ஆனந்தக் கூத்தன் அருள்பெறில்
நாம் அவ் வண்ணமே
ஆனந்தமாகி நின்று
ஆடாமோ தோள் நோக்கம்'
என மாணிக்கவாசகர் ஆனந்தத் தாண்டவம் பற்றிப் பாடுகிறார்.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தைக் குறிக்கும் தலமாகவும், ஐந்து சபைகளில் பொற்சபையாகவும் நடராஜர் திருக்கோவில் விளங்கு கிறது. இதைவிட அறிவியல்ரீதி யாகவும் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், உலகின் பூமத் திய ரேகையின் மையப்பகுதியாக (Centre Point of world's Magnetic Equator) மூலவர் தில்லை நடராஜப் பெருமானின் சந்நிதி விளங்குகிறது என ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர். உத்தரகோசமங்கையில் வீற்றிருக் கும் மரகத நடராஜப் பெருமான் "ஆதிசிதம்பரேசன்' என்றழைக்கப்படுகிறார். அதேபோல் இங்குள்ள சபையை ரத்தினசபை எனவும் சொல்கிறார்கள். மாணிக்கவாசகருக்கு இறைவன் தனது உருவக் காட்சியை அருளிய தலமிது.
வைகுண்டத்தில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணுவை தரிசனம் செய்ய தினமும் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் எனப் பலரும் வருவதுண்டு. ஒருநாள் அங்ஙனம் வந்த மகரிஷிகளை வைகுண்டத்தின் துவாரபாலகர்களான ஜெயன், விஜயன் என்னும் இருவரும் தடுத்தனர். இதை யறிந்த மகாவிஷ்ணு மகரிஷிகளை உள்ளே அழைத்து ஆசிவழங்கி அனுப்பி வைத்தார். மகரிஷிகளை தேவை யில்லாமல் தடுத்து, அலட்சியப் படுத் திய துவாரபாலகர்களை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்தார்.
தாங்கள் செய்த பிழைக்கு விமோசனம் தருமாறு அவர்கள் மகாவிஷ்ணு விடம் வேண்ட, அவரும் கருணை யுடன், ""நீங்கள் இருவரும் பூலோகத்தில் அரக்கர்களாகப் பிறப்பீர்கள். உங்களை வதம் செய்யும்போது இந்த சாபம் நீங்கும்'' எனக் கூறினார். அதன் படி இருவரும் பூலோகத்தில் அரக்கர் களாகப் பிறந்து மக்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தேவர்கள் சிவபெருமானி டம் முறையிட, அவர் மக்களைக் காக்க மார்கழி மாத திருவாதிரையன்று நடராஜப் பெருமானாகத் தோன்றி அரக்கர்களைப் போரிட்டு வென்றார். இதனால் துவாரபாலகர்களின் சாபம் நீங்கியது. இப்படி ஒரு புராணக் கதை நடராஜப் பெருமானின் அவதாரத் தைப் பற்றிச் சொல்கிறது.
பொதுவாக திருவாதிரை நட்சத் திரம் சிவபூஜை செய்ய உகந்த நாள். அதிலும் மார்கழி மாத திருவாதிரைத் திருநாளில் வரும் ஆருத்ரா தரிசனம் முக்கிய நாளாகும்.
"ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தமாக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே'
எனத் திருமூலர் நாட்டியக்கலைக்கு நாயகனான ஆடல்வல்லானின் ஆனந்த நடனத்தைப் பற்றி திருமந்திரத்தில் (2725) விளக்குகிறார்.
நான்கு திருக்கரங்கள், மூன்று கண்களுடன், பரந்த சடை, இடுப்பில் பு−த்தோலை ஆடையாக அணிந்து, நெற்றியில் திருநீறணிந்து, முடியில் கங்கை, பிறைச்சந்திரன், ஊமத்தம்பூ போன்றவற்றைச் சூடி, வலது காதில் மகர குண்டலம், இடது காதில் இலை, பாம்பணிகள் உடலில் சூழ, திருப்பாதத்தில் (குஞ்சித பாதம்) கிங்கிணி என்கிற பெரிய கொலுசு புனைந்தவராகக் காட்சிதருகிறார்.
சபாநாயகனாகிய நடராஜப் பெருமான் எவ்வாறு ஆனந் தத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஆடினார் என்றால், வலக்கரத்தில் டமருகம் எனப்படும் உடுக்கையை அடித்தவண்ணம், மற்றொரு வலக்கரத்தில் அபயம், இடக்கரத்தில் தீச்சட்டி ஏந்தி, மற்றொரு இடக்கரத்தைக் குறுக்காக நீட்டி திரிபதாகை முத்திரை காட்டி, ஒரு திருவடியை தூக்கிய நிலையிலும், மற்றொரு திருவடியை முயலகன் (அபீஸ்மாரம்) என்னும் அரக் கன்மீது ஊன்றியும் நடராஜப் பெருமான் ஆனந்த மாக ஆடியவண்ணம் காட்சிதருகிறார்.
சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள் நூற்றெட்டு என பரதசாஸ்திரம் கூறுகிறது. இந்த தாண்டவங் களை சிவபெருமான் மாலைவேளையில் ஆடினார்.
தாண்டவத்தின் ஒரு பகுதிதான் நாட்டியம். நாட்டியக் கலைக்கு நாயகனாக நடராஜப் பெருமான் இருப்பதால், தாண்டவக்கலைக்கும் சைவத்திற்கும் நெருங்கிய தொடர்பேற்பட்டது. நூற்றெட்டு தாண்டவங்களில் ஆனந்தத் தாண்டவம். சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், சங்கார தாண்டவம் என்னும் ஏழு தாண்டவங்கள் முக்கியமானவை என சிற்ப சாஸ்திர நூல் தெரிவிக்கிறது. ஆனந்தத் தாண்டவ மூர்த்திதான் பெரும்பாலும் நடராஜப் பெருமானின் மூர்த்தியாக அறியப்படுகிறது.
நடராஜப் பெருமானைப்பற்றி சங்க இலக்கியமான கலித்தொகை, சிலப்பதிகாரத்திலும் குறிப்புகள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர்களும்; சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி, பட்டினத் தார், நாயன்மார்கள் எனப் பலரும் நடராஜப் பெருமானைத் துதித்துப் பாடியுள்ளனர். சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதுவதற்கு தில்லை நடராஜப் பெருமானே "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என அடியெடுத்துக் கொடுத்தார் என்பது வரலாறு.
இராமநாதபுர சமஸ்தானத்தின்கீழ் சேதுபதி மன்னர் வம்சத்தவரால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருவதுதான் மங்களாம்பிகை உடனுறை மங்களேசுவரர் திருக்கோவில். இது உத்தரகோசமங்கையில் அமைந்துள்ளது.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இத்தலத்தைப் பற்றி,
"வளர்கின்ற நின் கருணைக் கையில்
வாங்கவு நீங்கி யிருப்பான்
மிளர்கின்ற என்னை விடுதி கண்டாய்
வெண்மதிக் கொழுக்தொன் றொளிர்கின்
நீண்முடி யுத்தரகோச மங்கைக் கரசே
தெளிகின்ற பொன்னு மின்னும் மன்ன
தோற்றச் செழுஞ் சுடரே'
என்று "நீத்தல் விண்ணப்பம்' எனும் தலைப்பில் பாடியுள்ளார்.
மிகவும் பழமைவாய்ந்த இத்தலத்தில்தான் சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதத்தின் பொருளை ரகசியமாக உபதேசம் செய்தார். இக்கோவில் கண்டி (இலங்கை) மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்னர் பல தமிழக மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
இங்கு ஆதிசிதம்பரம் என அழைக்கப்படும் தனிக்கோவிலில் சுமார் ஆறடி உயர முள்ள மரகதத் திருமேனியில் நடராஜப் பெருமான் காட்சிதருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன நாளில்மட்டும் சிறப்பு அபிஷேகம் செய்வார் கள். பின்னர் சந்தனத்தால் திருமேனி முழுவதும் அலங்கரிப்பார்கள். அந்த சந்தனக் காப்பு ஓராண்டுக்கு அப்படியே இருக்கும். மீண்டும் அதை அடுத்த வருடம் மார்கழித் திருவாதிரையன்றுதான் களைந்து, அதை பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருவது வழக்கம். இந்த சந்தனம் நோய்தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
ஆருத்ரா தரிசனம் இங்கு வெகுவிமர்சனமாகக் கொண்டாடப்படுகிறது. நடராஜப் பெருமானுக்கு வருடத்திற்கு ஆறு நாட்கள் சிறப்புப் பூஜையும், அபிஷேகமும் நடை பெற்றாலும், ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜப் பெருமானை வழிபடுவது சாலச்சிறந் தது. அன்று சிறப்பு அபிஷேகம், பூஜை போன்ற வற்றைச் செய்து "திருவாதிரைக்களி'யை நிவேதனம் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் உண்டு. இந்த வழக்கம், ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர் சேந்தனா ரால் ஏற்பட்டது எனச் சொல்வதுண்டு. தில்லையில் வாழ்ந்த இந்த தீவிர சிவபக்தரின் இல்லத் திற்கு வந்து நடராஜப் பெருமானே மார்கழித் திருவாதிரையன்று களியை விரும்பி உண்டார்.
"மன்னுக தில்லை வளர்க நம்
பக்தர்கள் வஞ்சகர் போயகல...'
எனத் தொடங்கும் "திருப்பல்லாண்டு' எனும் 13 பாடல்களை சேந்தனார் பாட, தில்லை யில் ஓடாமல் நின்ற கோவில் தேர் ஓட ஆரம்பித்தது.
கலைகளுக்கு நாயகனான நடராஜப் பெருமானை "ஆருத்ரா தரிசனம்' அன்று வீட்டில் வழிபட்டு தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப்பாடல்களைப் பாடி, அருகிலிருக்கும் சிவாலயம் சென்று நடராஜப் பெருமானை வணங்கி அவரது அருளைப் பெறலாம்.
"நமச்சிவாய வாஅழ்க
நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!'