Advertisment

அடிகளார் மு.அருளானந்தம் (53)

/idhalgal/om/adikalar-m-arulanandam-53

லகிலேயே முதன்முதலில் எண் சுவடிகளை உருவாக்கியது தமிழினம்தான். அதாவது வாய்ப்பாடு முறை. இதில் பூஜ்ஜியத்திற்கு மேலுள்ள பெருக்கல் வாய்ப்பாடுகளை மேல்கணக்கு வாய்ப்பாடுகள் என்றும், ஒன்றிற்குக் கீழுள்ள பின்னங்களைப் பெருக்க உதவும் வாய்ப்பாடுகளை கீழ்க்கணக்கு வாய்ப்பாடுகள் எனவும் அழைத்தனர்.

Advertisment

பூஜ்ஜியத்திற்கான தமிழ்ச்சொல் "பாழ்' எனச் சொல்லப்பட்டு வந்தது. மனப்பாடமாகவே இந்த கணக்கியல் வாய்ப்பாடுகள் பயிற்று விக்கப்பட்டன.

பெரும்பாலும் வருவாய் தரும் நுண்கலைத் தொழில்கள் செய்யும் கலைஞர்கள் இப்பின்ன வாய்ப்பாடுகளை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி வந்தனர். இவற்றைப் பயன்படுத்தியதால் நேர்த்தியான, அழகுபடுத்தப்பட்ட அழகு சாதனங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. சீரும் சிறப்புமாக கலைகள் உருவாவதற்கு இந்த கணக்கியலே அடிப்படைக் காரணியாக விளங்கியது.

எண் சுவடிகளைக் கற்று உருவான கணக்காயர்கள்!

ஆதிமனிதன் நீட்டலளவை, முகத்தலளவை, எடையளவு முதலிய கணக்கியலை, தாங்கள் பயன்படுத்திவந்த உணவு தானியங்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் முதன்முதலில் உருவாக்கினான். ஆகவே, வேளாண்குடி மக்களிடமிருந்துதான் அடிப்படை கணக்கியல் உருவானது. இவற்றையெல்லாம் ஆய்ந்தறிந்து வந்து ஓலைகளில் எழுதி, அறிவர் மட குருமார்கள் பல வகையான எண் சுவடிகளை உருவாக்கினார்கள்.

Advertisment

அந்த எண் சுவடிகளை ஔவையிடம் கொடுத்து, பெருவழிப்பாதையில் பயணிக்கும்போது மக்களுக்கு வழங்கச் செய்தனர். இந்த எண் சுவடிகளைக் கற்று ஆங்காங்கே கணக்காயர்கள் உருவானார்கள். அவர்கள், தாங்கள் கற்றுணர்ந்ததோடல்லாமல் சிறார்களுக்குக் கற்றுத்தரும் முதல்நிலை ஆசிரியர்களாகவும் விளங்கினர்.

பூசணிக்காயை உடைக்காமலே... பலாப்பழத்தை அறுக்காமலே...

உதாரணமாக, ஒரு பூசணிக்காயை உடைத்துப் பார்க்காமலேயே, அதனுள் இருக்கும் விதைகள

உதாரணமாக, ஒரு பூசணிக்காயை உடைத்துப் பார்க்காமலேயே, அதனுள் இருக்கும் விதைகளைக் கண்டறியும் முறை பின்வருமாறு கூறப் பட்டது.

"கீற்றெண்ணி முற்றித்துக் கீழாறி னாற்பெருக்கி

வேற்றஞ்சு தன்னில் மிகப்பெருக்க பார்த்ததிலே

பாதி யதின்மூன்றில் மத்தவிதை யாகும்

பூசணிக்காய் தோறும் விரை.'

இதன் பொருள்: ஒரு பூசணிக்காயில் மேலிருந்து கீழாக தடித்துக் காணப்படும் கீற்றை எண்ணவேண்டும். உதாரணத்திற்கு அதில் 10 கீற்று இருந்தால், 10-ஐ 3-ஆல் பெருக்க 30, இதை 6-ஆல் பெருக்க 180, இதை 5-ஆல் பெருக்க 900, அதில் பாதி 450, இதை மூன்றால் பெருக்க, 1,350 விதைகள் அதற்குள் இருக்கும். இந்தச் செய்யுளில் மத்த என்றால் பெருக்கு என்று பொருள்.

dd

இதேபோல், ஒரு பலாப்பழத்தை அறுக்காமலேயே அப்பழத் திற்குள் இருக்கும் சுளைகளைக் கண்டறியும் கணக்கு கீழ்க் காணுமாறு கூறப்பட்டுள் ளது.

"தூங்குகின்ற பலாவின்

சுளையறிய வேண்டினால்

ஆங்கிருந்த காம்பின் அருகிருந்த

முள்ளெண்ணிப் பாங்காக

ஆற்றினால் மாற்றி அஞ்சினா லாய

உள்ளெண்ண வேண்டாஞ் சுளை.'

பலாப்பழத்தின் காம்பிற்கு அருகில் அதனைச் சுற்றியுள்ள முட்களை எண்ணிப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு 100 முட்கள் இருந்தால், அதனை ஆறால் பெருக்கி, ஐந்தால் வகுத்து வரும் ஈவுதான், பலாப்பழத்திற்குள் இருக்கும் சுளைகளின் எண்ணிக் கையாகும்.

100 ல 6 = 600

600 ÷ 5 = 120

எனவே அப்பலாப்பழத்திற்குள் இருக்கும் சுளைகள் 120 ஆகும்.

இவ்வாறு கடலின் தூரம், வான்வெளியில் வின்மீன்களுக்கு இடையேயான தூரம், நில அளவை, மலைத்தொடர் நீளம், ஒரு மன்னரின் ஆட்சிப் பரப்பளவு போன்ற பெருங்கணக்குகளும் சொல்லித்தரப்பட்டன.

கணக்காயர் இல்லாத துறை பாழாகும்!

கணக்காயர்கள் தங்களிடம் பயிலும் சிறார்கள் தினந் தோறும் காலையில் வந்து மனப் பாடமாக தாங்கள் கற்றுத் தந்த வாய்ப்பாடுகளை ஒப்பிக்க வேண்டும். இம்முறைத் தொன்று தொட்டு வந்ததால் பெருக்கல் வாய்ப்பாடு, கூட்டல் வாய்ப்பாடு, கழித்தல் வாய்ப்பாடு என்றே எண்கணிதம் அழைக் கப்பட்டது. எண்ணும், எழுத்தாகிய இலக் கணமும் என்றும் மறவாமல் நினைவில் இருப்பதற்கு, தினந்தோறும் வாய்ப் பாடாகவே ஒப்பிக்கச் செய்தார்கள்.

கணக்கியலை அடிப்படையாக வைத்தே அறிவியல் இருப்பதனால், எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்று ஔவை பாடினார். வீட்டுப் பெண்களுக்கு ஔவையார் நேரடியாகச் சென்று எண் சுவடிகளை வழங்கி, கற்றும் கொடுத்து, குடும்பப் பொருளாதாரத்தை ஆய்ந்தறிந்து வளப்படுத்த கற்றுத்தந்தார்.

அவர்களுக்காக,

முழு எண் ல முழு எண் வாய்ப்பாடு

முழு எண் ல பின்ன வாய்ப்பாடு

பின்ன ல பின்ன வாய்ப்பாடு

ஆகிய மூன்று வகை எண் சுவடிகளை ஔவை தன்னுடன் எடுத்து வந்திருப்பாள்.

ஒரு கிராமம் கணக்காயர் இல்லாமல் இருக்கக்கூடாது. அதேபோல் ஒரு வணிக நிறுவனம், பண்டகசாலை, கோவில் நிர்வாகம், தொழிற்கூடம், அரசாங்க நிர்வாகம், கடல் வாணிபம் ஆகியவை கணக்காயர் இல்லை யென்றால் சீர்கெடும் என்பது ஆதித் தமிழனின் கூற்று.

aa

எனவே, அறிவர் மடத்தார் ஔவை யாரிடம் அனைத்துத் துறைகள் சார்ந்த எண் சுவடிகளை கூட்டு வண்டியில் கொடுத் தனுப்பினர்.

அவற்றைப் பார்த்து பல படிவங்கள் எடுத்துக்கொள்வதற்கு எழுதா ஏட்டுச்சுவடி கட்டுகளை ஏராளமாக வண்டியில் கொடுத்து அனுப்பியிருந்தனர். ஏடுகளிலுள்ள சொற்கள் புள்ளி வைக்காமல் எழுதப்பட்டிருக்கும். அவற்றை எவ்வாறு படிக்கவேண்டும், பிழையில்லாமல் பிரதிகள் எடுக்கவேண்டும் என்பதை ஔவையின்மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் பரப்பினார்கள். பலவித துறைசார்ந்த எண் சுவடிகளில் பயன்படா துறையில் ஏதேனும் இருந்தால், அவை வருங்காலத்திற்குத் தேவைப்படும் என்பதை வலியுறுத்தி, கோவில்களில் வைத்துப் பாதுகாத்துவரும்படி அவற்றுக்கு முக்கியத் துவம் தந்தனர். அதேபோல் அரண்மனைக் கருவூலத்தில் மொத்த ஏடுகளும் பாதுகாக் கப்பட்டன.

அனைத்துத்துறை எண்ணியலையும் கற்றுணர்ந்தவர்களுக்கு "கணக்காயர்' என்ற பட்டம் தந்து, கிராம சபைகளில் அவருக் கென்று ஒரு இடமும் அளிக்கப்பட்டது. எனவே, கணக்காயர் இல்லாத துறை பாழாகும் என்பதையறிந்து, தலைசிறந்த கணக்காயர்களையே அரண்மனைக் கருவூல அதிகாரியாக நியமித்தனர்.

கோவில் சொத்துகளைப் பாதுகாத்த முழுத்துறவிகள்!

கிராமங்களின் கருவூலமாக கோவில்கள் திகழ்ந்தன. கருவூலங்களுக்கு ஆதியில் பண்டாரம் என்று பெயர். இப்படிப்பட்ட பண்டாரத்தைக் காக்கும் பொறுப்பிலிருக்கும் கணக் காயர்கள், பண்டாரத்தில் சேரும் செல்வத்தின்மீது ஆசையற்ற துறவு நிலையில் இருக்கவேண்டும் என்பது ஆதித்தமிழரின் மரபு.

இவர்களது வாழ்வு நெறி யானது, தூய்மையான, கள வற்ற ஒழுக்க நெறியில் இருக்கவேண்டும் எனக் கருதினர்.

இந்தக் கருவூலக் கணக் காயர்களை பண்டாரத் தார் எனப் பெயரிட்டு அழைத்தனர். செல்வச் செழிப்புமிக்க ஒழுக்க நெறியில் வாழ்ந்த வேளாண்குடியில் பிறந்தவர்களையே பண்டாரத்தார்களாக நியமித்துவந்தனர். கோவில் சொத்துகளை, அங்குள்ள பண்டாரத்தைப் பாதுகாப் பவர்கள், முழுத்துறவி களாக செயல்பட்டு வந்தனர். பெருங் கோவில்களில் பூஜைகளையும் இவர்களே தூய மனதுடன் செய்துவரலாயினர்.

பெருநகரங்களில் இருந்த பெரிய கோவிலைப் பரா மரிக்கும் பண்டாரத் தார்கள், தங்களுக்கென தனிப்பட்ட வாழ்விடங் களை உருவாக்கிக் கொள்ளலாயினர்.

அதனை துறவியர் மடமாகவே பின்னா ளில் பாவித்தனர். இவ்வாறு உருவானவையே, தற்போது திருவாவடுதுறை, போரூர், மதுரை, குன்றக்குடி போன்ற சைவமடங் களாக உள்ளன. இவற்றிலுள்ள பண்டாரத் தார்கள், கல்வி கற்றுக்கொடுப்பதையும், ஆன்மிகப் பயிற்சி அளிப்பதையும், தங்களது தொண்டாகக் கடைப்பிடித்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஆதி வேளாண்குடியைச் சேர்ந்த, இந்த மண்ணிற்குரிய ஆதி இனம் எனப் பொருள்படும் வகையில் "ஆதீனம்' என்ற பட்டத்தைத் தங்களுக்கு சூட்டிக்கொண்ட னர்.

கற்றுத்தரப்பட்ட புவியியல் சார்ந்த அறிவியல்!

சிற்றூர்களில் சிறுதெய்வக் கோவில்களில் முல்லைநில மக்கள் பண்டாரங்களாக இருந்துவந்தனர். தங்களது முல்லைநிலப் பகுதிகளில் பூக்கும் பலவகை மலர்களை ஒன்றுசேர்த்து, பூக்களின் ஆரங்களாகத் தொடுத்து, சிறுதெய்வங்களை அலங்கரித் துப் பூசித்துவந்தனர். பின்னாளில் பூ ஆரங்களை உருவாக்கி, அலங்காரம் தேவைப்படும் இடங்களுக்கெல்லாம் சென்று, பூ அலங்காரங்கள் செய்வதையே தங்கள் தொழிலாகச் செய்யலாயினர்.

பேரரசுகளின் அரசு நிலங்களைக் கணக்கெடுக்க, நில அளவையில் கைதேர்ந்த வர்களுக்கு புவியியல் சார்ந்த அறிவியல் கற்றுத்தரப்பட்டு நியமிக்கப்பட்டனர்.

உத்தமநிலம்- குவளை, சடை கரந்தை, காவேடு, காவேளை, பவளக் கொடி, புல், சோற்றுப்பயிர் விளையும் இடம்.

மத்திம நிலம்- செருப்பை, துராய், கண்டங்கத்திரி, வேல், அறுகு, சாமை, கேழ்வரகு விளையும் இடம்.

அதம நிலம்- பொடுதலை, பொரி, விரை, துடப்பம், பருத்தி விளையும் இடம்.

மாவிடை, மறவிடை, திட்டு, திரவிடை, முதிர்சோலை, மலை, பரம்பு, பெருங்காடு, சிறுகாடு, துடி, முழவு, தோரை, சுளகு, எறும்பு சூலம் போன்ற நிலங்களை எவ்வாறு அளந்து முறைசெய்வது ஆகிய நில அளவைச் சுவடிகளும் அறிவர் மடத்தினரால் உருவாக்கித் தரப்பட்டது.

பொன்னெடை, ரத்தின எடை, மருந்தெடை போன்ற நுண் எடை நிர்ணயம் இவற்றின் தொகுப்புகள் அடங்கிய ஏட்டுக் கட்டுகளை, ஔவை தான் சந்திக்கவிருக்கும் சந்தையூர் பெருமக்களிடம் ஒப்படைக்க ஆயத்தமானார்.

மாலை வேளைதனில் ஔவையை எதிர்பார்த்து காத்திருந்த கிராமசபையோர். தீவெட்டிகள் புடைசூழ கிராம இசை முழக்கத்துடன் செம்பருத்தி மாலையோடு ஔவையையும் வணிகர் குழுக்களையும் வரவேற்றனர்.

இரவின் இனியவேளையில் முழுநிலா உதிக்க சந்தையூரில் ஔவையின் அவை களத்தை வரும் இதழில் காண்போம்!

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்

om010723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe