மகா சித்தராக இருந்து, அவரது தவ வலிமையினால் மனித சமுதாயத்திற்கு இன்றளவும் பயனளிக்கும் வகையில் நவ பாஷானத்தை சுத்திசெய்து மகா மருந்தாக மாற்றி, தன் குருவாக வணங்கிவந்த முருகப்பெருமான் சிற்பத்தை அவ்வரிய நவபாஷான மருந்துகளாலே வடிவமைத்த, பழனி மலைப்பகுதிகளில் வாழ்ந்த ஆதிசித்தர் போகர் பெருமானால் வணங்கப்பட்ட அணங்கு, "தொட்டிச்சி' என்றழைக்கப்படும் தெய்வமாகும்.
இது யாருக்கும் தெரியாத ரகசியமாக இருந்து வருகிறது. போகர்தேசம் என்று அழைக்கப்பட்ட பழனி பகுதியில் ஐந்து மலைப்பகுதிகள் உள்ளன. அப்பகுதி களில் வாழ்ந்துவந்த ஆதி குடிமக்களால், அம்மலைகளை ஆட்சி செய்யும் அணங்கு தெய்வமாக "தொட்டிச்சி அம்மன்' வழிபடப்பட்டு வந்தது.
தொட்டிச்சியின் சூட்சும ஆற்றலே பஞ்சபக்ஷி சாஸ்திரம்!
அந்த மகாசக்தியின் சில சூட்சும ஆற்றலை, போகர் பெருமானும் அவரது முதன்மைச் சீடரான புலிப்பாணி சித்தரும், "பஞ்சபக்ஷி சாஸ்திரம்' என இன்று அழைக்கப்படும் மகாகணித ஜோதிட ரகசியங்களுக்குப் பயன்படுத்தினார்கள்.
எனவே தொட்டிச்சி அம்மனை, இந்த ஐந்து பறவைகள் கணிப்பு முறைக்கு வழிபாட்டு தெய்வமாக, கையில் பூச்செண்டு ஏந்திய நிலையில் சிலை வடித்து, அவர்களால் உருவாக்கப்பட்ட அஷ்டமா சித்துகளுக்கு சக்தி தரும் தேவதையாக வழிபட்டு வந்தனர். இதற்கு சாட்சியாக, பழனிமலை அடிவாரத்திலுள்ள புலிப்பாணி சித்தர் மடத்தில், புலிப்பாணி சித்தர் வாரிசுதாரர்களால் இன்றளவும் வழிபடப்பட்டு வருகிறது.
போகர் பெருமான், இந்த பஞ்சபக்ஷி சாஸ்திர அடிப்படையில்தான், அஷ்டமா சித்துகளை ஆதியில் கண்டறிந்தார் என்பது இதுவரை வெளிவராத ரகசியம். இந்த பஞ்சபக்ஷி சாஸ்திர முறையானது, போகருடைய முறைப்படி கீழுள்ளவாறு கணிக்கப்பட்டது. இது சிவதத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சிவதத்துவம் என்பது, நாம் பார்க்கும் அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருட்களும், நிலம் (திடப் பொருள்), நீர் (அனைத்துவகை நீர்மப் பொருள்கள்), காற்று (அசையும் காற்று), நெருப்பு (அனைத்துவகை வெப்ப ஆற்றல்), சுத்தவெளி ஆகிய ஐந்து திறன் களால் ஆனது.
ஐந்து வகை பறவைக் குறியீடுகள்!
இந்த ஐந்து திற

இந்த ஐந்து திறன்களும், இப்புவியில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங் களிலும் உள்ளன. இந்த ஐந்து திறன் களையும், ஐந்துவகைப் பறவைகளைக் கொண்ட குறியீடாகக் காட்டினர், போகர் பெருமானும் மற்ற சித்தர் பெருமக்களும். இந்த ஐந்து பறவைகளும் ஆதியிலிருந்து தமிழ்நாட்டுப் பகுதியில் வாழ்ந்து வருபவை.
1. நிலத்துக்குக் குறியீடாக "வல்லூறு' என்ற பறவையையும்,
2. நீருக்குக் குறியீடாக "ஆந்தை' என்ற பறவையையும்,
3. நெருப்புக்குக் குறியீடாக "காகம்' என்ற பறவையையும்,
4. காற்றுக்குக் குறியீடாக "கோழி அல்லது சேவல்' என்ற பறவையையும்,
5. ஆகாயத் திற்குக் குறியீடாக "மயில்' என்ற பறவையையும் காட்டியுள்ளனர்.
மேற்சொன்ன ஐந்து திறன்களை, பிற்காலத்தில் ஐம்பூதங்கள் என்று குறிப்பிட்டனர். இந்த ஐம்பூதங்கள் மனித உடம்பில் ஒவ்வொரு நாளும் தங்களுடைய ஆளுமைகளை, ஒவ்வொரு யாமத்திலும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு நாளை, பகல் ஐந்து ஜாமம் அதாவது யாமங்களாகவும், இரவு ஐந்து யாமங்களாகவும் பிரித்துள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு பறவை முதல் யாமத்தில் தொடங்கி, அதன் தொடர்ச்சியாக மற்ற பறவைகளின் ஆளுமை செயல்படும். அதாவது ஐந்திறன்கள், ஒவ்வொரு மனிதரின் உடலிலும் மனதிலும் செயல்படும்.
இதேபோல், மற்றொரு முறையில் சித்தர்கள் விளக்குகிறார்கள். ஒருவன் பிறக்கின்றபொழுது, வான் மண்டலத்தில் இருக்கும் ராசிக்கூட்டங்களில், எந்த ராசி மண்டலத்தில் சந்திரன் இருக்கின்றதோ, அதன்படி, அவனது பக்ஷி அல்லது பறவை நிர்ணயிக்கப்படுகிறது.
வான் மண்டலத்திலுள்ள 12 ராசிகளுக்கும், இந்த ஐந்து பறவைகளைப் பிரித்துப் பொருத்திக் காட்டியுள்ளனர்.
அதன்படி, ஒருவன் பிறந்த ராசிப் படி, அவனுக்கு மயில் எனக் குறிப்பிட்டிருந்தால், அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யாமத்திலும் கீழ்கண்டவாறு செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
(1) அரசு, (2) நடை, (3) ஊண், (4) துயில், (5) சாவு என்ற முறையில், பகலிலும் இரவிலும் செயல்படும் என்று கூறுகின்றனர். வாரத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சூரியோதயம் நடக்கும் முதல் யாமத்தில், ஒவ்வொரு பறவை வீதம் அரசு நடக்கும். மற்ற யாமங்களில் அதன்பின் உள்ள செயல்கள் நடக்கும்.
வேறுவிதமாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனில், முதல் யாமத்தில்- உதாரணமாக, மயில் அரசு வேலையில் இருந்தால், அடுத்த யாமத்தில், வல்லூறு அரசுப் பணியில் இருக்கும். அதாவது முதல் யாமத்தில் ஆகாயமாக இருந்தால் அடுத்த யாமத்தில் நிலம் வேலை செய்யும்.
தீயவர்களை அழிப்பதற்கான மரண வித்தை!
இந்த வரிசைப்பட்டியல் மிக ரகசியமாக இன்றளவும் சித்தர்கள் மடத்தில் பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஏனெனில், ஒரு பகைவரை அல்லது தீயோனை வெல்லவேண்டுமெனில், அவனுடைய "பக்ஷி' எது என சித்தர்கள் கண்டறிந்து, நல்லவர்களைப் பாதுகாக்க, தீயவர்களை அழிக்க, அவர்களுக்குரிய பக்ஷி எந்த நேரத்தில் சாவு என்ற நிலையில் இருக்கின்றதோ அந்த நேரத்தில் மரண வித்தையை உபயோகித்து அவர்களை அழித்துவிடுவார்கள்.
ஒருவனை வசியம் செய்யவேண்டுமெனில், அவனது பக்ஷி அந்த நாளில் எந்த நேரம் துயிலில் இருக்கின்றதோ, அந்த நேரத்தில் வசிய வித்தையைப் பிரயோகம் செய்வார்கள். ஒருவனுக்கு நல்ல வெற்றியும், காரிய சித்தியும் அடைய வேண்டுமென்றால், அவனது பக்ஷி அன்றைய நாளில். எந்த நேரம் அரசு செய்கின்றதோ, அந்த நேரம் பார்த்து அந்தக் காரியத்தைத் தொடங்கினால், அவனுக்கு அந்த காரியத்தில் சித்தியும், வெற்றியும் கிடைக்கப்பெறும். இவ்வாறு "அரசு, நடை, ஊண்' செய்யும் காலங்கள் ஒருவனுக்கு நல்ல நேரம் எனவும், "துயில்' கொள்ளும் நேரம், நல்லவையும் கெட்டவையும் நடக்காத சமநோக்கு நேரம் எனவும், "சாவு' நேரம், தவிர்க்கப்படக்கூடிய நேரம் எனவும் கணித்துள்ளனர்.
இந்த சாஸ்திரமானது, நல்லவர்களை தீயசக்தி உடையவர்களிடமிருந்து காப்பதற் கென கண்டறியப்பட்டதனால், நீண்ட காலமாகவே இதை தீயோர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடக்கூடாது என்பதைத் தங்களது வழித்தோன்றல்களிடம் வலியுறுத் திக்கொண்டே வந்துள்ளனர்.
ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட தந்திர உத்திகள்!
மேலும், ஒருவரின் வாழ்க்கையில், ஜோதிடக் கணிப்பின்படி ஏழரைச்சனி என்ற சோதனையான காலக்கட்டம், மூன்றுமுறை வரும். ஒருவரது வாழ்நாளில் 23 வருடங்கள், இந்த சோதனை மிகுந்த காலகட்டங்கள் ஆகிவிடுகிறது.
மேலும் அஷ்டமத்துச்சனி, கண்டச்சனிக் காலங்கள் என, 23 வருடங்கள் நம்மைப் பரிசோதிக்கும் காலங்களாகிவிடுகின்றன. இதுபோக, ராகுதசைக் காலங்கள், கேதுதசைக் காலங்கள், சனிதசைக் காலங்கள் மற்றும் ராகு, கேது, சனிபுக்திக் காலங்கள் என ஒரு மனிதரது வாழ்க்கையில் பெரும்பகுதி எச்சரிக்கை மிகுந்த பகுதிகளாகவே கழிந்துவிடுகிறது.
இதைக் கருத்திற்கொண்ட சித்தர்கள் மக்களை- நல்லவர்களை இவ்விதிகளிலிருந்து காத்து, அவர்களது உயர்ந்த நோக்கங்கள் நிறைவடையவேண்டும் என்பதற்காகவே, இந்த "பஞ்சபக்ஷி' தந்திர உத்திகளைக் கண்டறிந்து, ரகசியமாகப் பாதுகாத்து வந்துள்ளனர்.
மன்னன் இராஜராஜ சோழன் போன்றோர் வாழ்வு முழுவதும் வெற்றியடைந்ததற்கு, அவரது குரு கருவூரார் கணித்துத் தந்த இந்த உத்திகளே காரணம் என சிவயோகிகள் கருதுகிறார்கள்.
இந்த வகையில், சித்தர்கள் ஒவ்வொரு முறையிலும், இவ்வித பஞ்சபூத வித்தை களைக் கண்டறிந்து, இயற்கை விதிகளிலிருந்து தங்களை மீட்டெடுக்கும் தந்திரங்களை, தங்களது சீடர்களுக்குக் கற்றுத் தந்துள்ளனர்.
அச்சத்தால் கோவில்களில் பலி பீடம்!
இவ்வளவு தந்திர உத்திகள் இருந்த போதிலும், எதிரிகளினாலோ அல்லது பக்ஷி சரியில்லாத நேரங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க இருந்தாலோ, அந்த நேரத்தில் பஞ்சபக்ஷி விதிகளையும்மீறிக் காப்பதற்கு, நம்மைப் பாதுகாத்து வெற்றியடையச் செய்வதற்குதான் போகர் பெருமானும், அவரைத் தொடர்ந்து புலிப்பாணி சித்தரும் பெரும் சக்தியான தொட்டிச்சி என்ற "அணங்கு' தெய்வத்தை வழிபட்டனர். இது, பழனியில் போகர் பெருமான் வருவதற்கு முன்பே, வன தேவதையாக இருந்து, அப்பகுதி மக்களை வன விலங்குகளிடமிருந்தும், இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் காத்து வந்ததாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு கோவிலிலும் பூஜைகள் நடந்துமுடிந்தவுடன். சாமி பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவதற்கு முன், தழுகைகளிலிருந்து சிறிது பிரசாதத்தை எடுத்து, கோவில் முன்பிருக்கும் பலிபீடத்தில் அதை வைத்து, அந்தப் பகுதியிலிருந்த வனதேவதையான "அணங்கு' தெய்வத்திற்கு நீர்வார்த்து வழங்குவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
இது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கும். என்னவெனில், பலிபீடம் என்றால் என்ன? ஏன் அதனை கோவில் நுழை வாயிலுக்கு அருகே, கோவில் கருவறைக்கு நேரே வைக்கிறார்கள் என்று. இதற்கான காரணம்- அந்த இடத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக கோவில் கட்டப்பட வேண்டியிருந்தபோது, அதற்கு முன்பே அந்த இடத்தை ஆளுமைசெய்து வந்துள்ள "அணங்கு' என்ற வன தேவதையிடம் உத்தரவு கேட்டு, அதற்கான இடத்தைத் தேர்வுசெய்து, அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தை நிறுவி, அதன்பின் கோவில் எழுப்பும் முறை இருந்துவந்துள்ளது.
இதற்குக் காரணம், அன்றுவரை அப்பகுதி மக்கள் அவ்விடத்திற்குச் சொந்தமான அணங்கை வழிபட்டு வந்துவிட்டு, பிறகு புதிதாக ஒரு தெய்வத்தை நிறுவி வழிபடநேர்ந்தால், அந்த அணங்குக்கு கடுங்கோபம் உருவாகி, சில தண்டனைகளை வழங்கிவிடும் என்று அஞ்சிய மக்கள், அவ்வணங்கைத் திருப்திப்படுத்தவே, புதிய தெய்வத்தை வணங்குகின்றபோது, ஒவ்வொரு பூஜையிலும், அதற்கான படையலை பலிபீடத்தில் வைத்து, அணங்கை வணங்கி வரும் பக்தர்களை ஏதேனும் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதற்காகவும், புதிய தெய்வத்திற்காகப் படைக்கப்பட்ட பிரசாதத்தை நுகராமல் இருப்பதற்காகவும், அக்கருவறைக்குள் சில நெருப்பு விபத்து களையோ, பேரிடர்களையோ விளைவிக் காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவும், பலிபீடத்தை அதன் இருப்பிடமாகக் கொண்டு, அவ்வெல்லைக்குமேல் கோவிலுக்குள் பிரவேசிக்கவேண்டாம் என்று வேண்டிக்கொள்வதேயாகும்.
இவ்வாறு ஒவ்வொரு போர்க்களத்திலும், அணங்கு வந்து கூத்தாடி ஆவேசமிடும் என்று அக்கால மக்கள் நம்பி வந்தனர்.
இவ்வாறு ஆவேசமிடும் அணங்கை வழிபட்டு சாந்தப்படுத்தும் வகையில், "அணங்குக் கூத்து' சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது.
இவ்வழிபாடு பெரும்பாலும் மலைவாழ் மக்களைக்கொண்டே நடத்தப்பட்டு வந்தது. இதனை புறநாநூற்றிலும் மிகுந்த அளவில் குறிப்பிட்டுள்ளனர்.
வரும் இதழில் ஆதி பழங்குடித் தமிழர்களின் துடியான அணங்கு தெய்வ வழிபாட்டு முறைகளை அதன் ஆதிமூலத்திலிருந்து அறிவோம்.
தொடர்புக்கு:
அலைபேசி: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்