சென்ற இதழ் தொடர்ச்சி...
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டுக்கு அருகேயுள்ள திருவடிசூலத்தில் பிரம்மாண்டமாய் வீற்றிருக்கும் அன்னை தேவி கரிமாரியம்மன் ஆலயம் பற்றிய சிறப்புகளைக் கடந்த இதழில் கண்டோம். அங்குள்ள பிற சந்நிதிகள் பற்றி இங்கு காணலாம்.
ஸ்ரீவாரு வேங்கடேசப் பெருமாள்
இவ்வாலய வளாகத்தில் அலர்மேலு மங்கை, பத்மாவதி தாயார்களைத் தனது திருமார்பில் தாங்கி, 11.5 அடி உயரத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீவாரு வேங்கடேசப் பெருமாள். திருமலைவாசனின் மறுபிரதியாகவே உள்ள இவர், திருமலைபோன்று ஏழு குன்றுகளால் சூழப்பட்ட வனப்பகுதியில் (சப்த சைலஜ மத்ய பீடம்) அருள் பாலிலிப்பது தனிச்சிறப்பு. 2015 மே மாதம் இவ்வாலயத்திற்கு மகாசம்ப்ரோக்ஷணம் நிறைவேறியது. ஒவ்வொரு மாதமும் திருவோணம் மற்றும் ஹஸ்த நட்சத்திர நாட்களில் இங்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. உற்சவ மூர்த்தி யான மத்திய மலையப்பப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் நித்ய கல்யாணப் பெருமாளாகத் திருவருள் பொழிகிறார். 108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் சந்நிதிகள் அமைந் திருப்பது இங்கேதான். 18 அடி உயர கருடாழ்வார், 18
சென்ற இதழ் தொடர்ச்சி...
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டுக்கு அருகேயுள்ள திருவடிசூலத்தில் பிரம்மாண்டமாய் வீற்றிருக்கும் அன்னை தேவி கரிமாரியம்மன் ஆலயம் பற்றிய சிறப்புகளைக் கடந்த இதழில் கண்டோம். அங்குள்ள பிற சந்நிதிகள் பற்றி இங்கு காணலாம்.
ஸ்ரீவாரு வேங்கடேசப் பெருமாள்
இவ்வாலய வளாகத்தில் அலர்மேலு மங்கை, பத்மாவதி தாயார்களைத் தனது திருமார்பில் தாங்கி, 11.5 அடி உயரத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீவாரு வேங்கடேசப் பெருமாள். திருமலைவாசனின் மறுபிரதியாகவே உள்ள இவர், திருமலைபோன்று ஏழு குன்றுகளால் சூழப்பட்ட வனப்பகுதியில் (சப்த சைலஜ மத்ய பீடம்) அருள் பாலிலிப்பது தனிச்சிறப்பு. 2015 மே மாதம் இவ்வாலயத்திற்கு மகாசம்ப்ரோக்ஷணம் நிறைவேறியது. ஒவ்வொரு மாதமும் திருவோணம் மற்றும் ஹஸ்த நட்சத்திர நாட்களில் இங்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. உற்சவ மூர்த்தி யான மத்திய மலையப்பப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக் கோலத்தில் நித்ய கல்யாணப் பெருமாளாகத் திருவருள் பொழிகிறார். 108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் சந்நிதிகள் அமைந் திருப்பது இங்கேதான். 18 அடி உயர கருடாழ்வார், 18 அடி உயர ஆஞ்சனேயரும் எழுந்தருளியுள்ளனர்.
பிரத்தியங்கரா தேவி
சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றான பிரத்தியங்கரா தேவி சிம்ம முகமும், பெண் உடலும் உடையவள். இந்து தொன்மவியலின் படி திருமால், காளி, துர்க்கை ஆகியோரின் வடிவம். இவள் நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில், எட்டுக் கைகளுடன், மிகக்கோபமான பார்வை, உக்கிர வேகத்தோடு விளங்குபவள். சரபேசுவரரின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவள். எதிரிகளை அழித்து வெற்றிதரும் இந்த தேவிக்கும் இங்கு சந்நிதி உண்டு.
மகா துர்க்கை
துர்க்கம் என்றால் கோட்டை, அரண் என்று பொருள். துர்க்கையானவள் அரண் போல் நின்று, தீய குணங்கள் நம் உள்ளத்தில் புகாமல் காப்பதால் பராசக்தியை துர்க்கை என்பர். வெற்றியின் சின்னமான அவள்மீது நம்பிக்கைக் கொண்டு பக்தி செய்வோர் இகபர சுகங்களை அடைவது திண்ணம். எலுமிச்சை மாலை, விளக்கு, சிவப்புப்பட்டு, செவ்வரளி மாலை, கண்ணாடி வளையல் அணிவித்து நேர்த்திக்கடன் செய்தால் திருமணத்தடை நீக்குவாள்; புத்திர பாக்கியம் அருளுவாள்; காரிய சித்தி தருவாள்.
ராஜமாதங்கி
செல்வம், ஞானம் சேர்த்தருளும் அன்னை ராஜமாதங்கி வித்தை (கல்வி), தனம் ஆகிய இரண்டுக்குமே அதிதேவதை. ஒப்பற்ற அழகும், எவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும் கொண்டவள் அன்னை ராஜமாதங்கி. ஆதிசங்கரர் முதல் சங்கீத மும்மூர்த்திகள்வரை இவளைப் பாடிப் பணிந்து பல சிறப்புகள் பெற்றுள்ளனர். ராஜமாதங்கியே கவி காளிதாசர் சியாமளா தாண்டகத்தில் பாடிப் பரவசப்பட்ட அன்னை. ராஜ சியாமளா என்று லலிலிதா சகஸ்ரநாமம் இவளைக் கொண்டாடுகிறது.
மந்திர வாராகி
அன்னை லலிதாம்பிகை ஒவ்வொரு அரக்கனையும் கொல்ல ஒரு சக்தியை உருவாக்கினாள். அந்த வகையில் விசுக்ரன் எனும் அசுரனைக்கொல்ல வாராகி எனும் சக்தியை அம்பிகை படைத்தாள். லலிதா சகஸ்ர: நாமத்தின் 78-ஆவது சுலோகத் தில் வாராகியின் சிறப்பைக் கூறக் காண்கிறோம். ஒருவர் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் வெற்றிபெற வாராகியின் அருளைப் பெறல் வேண்டும். வாராகி அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். "வாராகி மாலை' எனும் நூல், எத்தனை படைகள் கோடியளவில் நின்றாலும், அவள் பாதம் பணிந்த பக்தனுக்காக அத்தனைப்பேரையும் வீழ்த்திக் காப்பாள் என்று கூறுகிறது. மனித உடலும் விலங்குத் தலையும் உடைய தெய்வங்களுக்கு நூறு மடங்கு சக்தி அதிகமாம்.
அஷ்ட நாகங்கள்
உலகத்துக்கெல்லாம் ஆதிமுதற் சக்தியாய் விளங்கும் அன்னை பராசக்தி நாக லோகத்தவர்கள் செய்த தவப்பயனினால் இக்கலியுகத்தில் கருநாகமாக அவதரித்து, குண்டலினி தத்துவமாய் ஆட்கொண்டு, கரியமாரி என்ற திருநாமம் பூண்டு, பெரிய நாகங்கள் வசிக்கும் மகா ஆரண்ய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ளாள்.
இத்தலத்தில் ஆகம சாஸ்திர விதிகளின்படி எட்டு நாகங்களுக்கும் தனித் தனியாக கோவில்கள் வலமாக அமைத்து, நடுவே எண்கோண வடிவிலான விமானத்துடன்கூடிய திருக் கோவில் அமைத்து, தாயின் திருவுருவை எட்டு நாகங்கள்சூழ பிரதிஷ்டை செய்துள்ளனர்.
பைரவர்
காசியில் உள்ள எட்டு பைரவர் களையும் நம் மக்கள் தோஷங்கள் போக்கிட வணங்கும் வகையில் அஷ்ட பைரவர் திருவுருவினைப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
பதிவிளக்கு
இந்த க்ஷேத்திரத்தில் அன்னை ஆதியும் அந்தமும் ஒன்றிணைந்த மகா ஜோதிர்மயமாக விளங்குகிறாள். ஆதலால் இங்கு வரும் அன்பர்கள் ஆலயத்திலிருக்கும் தூய்மையான பசும் நெய்யை வாங்கி விளக்கிலிட்டு வணங்கவும். இதனால் தரித்திர நிலை அகன்று செல்வப்பெருக்கு உண்டாகும். எல்லா நன்மைகளும் கிட்டும். அன்னையவள் கலியுக நாயகியாய் உதித்தது சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமையாகும். ஆதலால் இங்கு வரும் அன்பர்கள் நெய்யை வாங்கி விளக்கிலிட்டு, தாமரை மலர்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் (அ) துளசி, காசுகள், தங்கம், வெள்ளி அல்லது நம் நாட்டின் நாணயத்தை தாயின் பாதத்தில் வைத்துப் பூஜைசெய்து, அதை எங்கும் செல்லாது நேராக வீட்டிற்குக் கொண்டு சென்று, பூஜையறையில் பால் நெய்வேத்யம் செய்து பெட்டகத்தில் வைத்தால் குடும்பத்தில் செல்வம் பெருகி மனமகிழ்வுடன் வாழ்வார்கள்.
சுயம்பு அம்மன் வழிபாடு
திருவடிசூலம் கரிமாரி திருக்கோவிலில் பீடம் அமைத்திடத் தோண்டுகையில் சுயம்புவாகக் கிடைத்தவள் சுயம்பு அம்மன். கொல்லூரில் உள்ள மூகாம்பிகை போன்று தங்க ரேகையுடன் விளங்குபவள். இந்த அம்மன் தங்க ரேகையுடன் மட்டுமல்லாது குருதியுடன் வெளிப்பட்டவள். பிள்ளைப்பேறு வேண்டி அம்மனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள்:
மஞ்சள் ஆடை அணிந்து, அவரவர்களால் இயன்ற நாட்கள் விரதமிருந்து, அரிசி, எலுமிச்சை, வேப்பிலை, தேங்காய், நெய்யுடன் வந்து சுயம்பு அம்மனுக்கு நெய்யபிஷேகம் செய்து, அந்நெய்யை உண்டு வழிபட்டால் மகப்பேறு முதலியன நிச்சயம் கிட்டும் எனலாம்.
செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் உள்ளது திருவடிசூலம்.