1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சூரியன். இந்த ஆடி மாதத்தில் அம்மி பறக்குமோ என்னவோ- நீங்கள் அதைவிட அதிகமாக அலைவீர் கள். அது பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்ப தற்கோ அல்லது பள்ளி மாற்றுவதற்கோ அல்லது கல்லூரி சம்பந்த விஷயமாகவோ இருக்கும். நீங்கள் அரசுப் பதவியில் இருந்தால் பணியிட மாற்றம் உண்டு. அரசியல்வாதியாக இருந்தால் பதவி மாறுதல் உண்டு. சிலர் பதவி உயர்வுடள் இடமாற்றம் பெறுவார்கள். எத்தனை அலைச்சல்கள் மற்றும் மாற்றங் கள் வந்தாலும் உங்களின் மன உறுதியும் நம்பிக்கையும் அதிகமாகவே இருக்கும். சிலருக்குக் கிடைக்கும் மாறுதல்கள் நல்ல பண வசதியை அள்ளிவந்து கொட்டச் செய்யும். இந்த அதிகப்படியான பணவரவு நிறைய முதலீடுகளைச் செய்யவைக்கும். சிலர் மறைவாக அல்லது பினாமி பெயரில் முதலீடு செய்வார்கள். வேலை செய்யுமிடத்தில் தொழிலாளிகள்- முதலாளிகள் பரஸ்பரம் புரிதலோடு வேலை நடப்பதால், தொழில் சார்ந்த நிம்மதி கிடைக்கும். வேலை மாறுதல் தம்பதிகளிடையே தற்காலிகப் பிரிவை ஏற்படுத்தும். உங்கள் இளைய சகோதரி ஒரு நன்மை கொண்டுவருவார். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். உங்களின் சிலர் மனையைக் கொடுத்து அடுக்குமாடி வீடு கட்டும் திட்டம் வகுப்பீர்கள். உங்கள் வாரிசுகள் நன்மையும் தீமையும் கலந்து தருவர். கல்வி கற்கும் இந்த எண் மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பைக் கற்கமுடியும் நீங்கள் வெளியிட வேலைக்குச் செல்லும்போது வீட்டில் உங்களுக்கு உங்கள் மாமனார்- மாமியார் அல்லது மருமகன் அல்லது இளைய சகோதரி உதவிக்கு வருவார்கள். இந்த மாதம் உங்களுக்கு உஷ்ண தலைவலி வரும். ஏற்கெனவே வாங்கிய பங்குகளை விற்று புதிய பங்குகள் வாங்குவீர்கள். கவனம் தேவை: இந்த மாதம் பயணங்கள் அதிகரிப்பதால் உணவு, உடல் நிலையிலும், பண விஷயத்திலும் கவனம் தேவை. சிலருக்கு திருட்டு நடக்க வாய்ப்புள்ளது; எச்சரிக்கை அவசியம்.
ஆடி மாதம் 23, 24, 25-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: கடல் அருகிலுள்ள சிவன்- அம்பாள் கோவில்சென்று வழிபடவும். எப்போதும் அலைந்து வேலைசெய்யும் நபர் அல்லது மடப்பள்ளியில் வேலைசெய்யும் அந்தணருக்கு குடிப்பதற்கு நல்ல தண்ணீர் வாங்கிக்கொடுங்கள்.
2, 11, 20, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இந்த மாதம் உங்கள் காட்டில்- சாரி- வீட்டில் பணம் மழைதான். வீடு, மனை விற்ற பணம் வரும். அரசுவகை பாக்கிகள் திரும்பக் கிடைக்கும். பத்திரிகை, தொலைக்காட்சியில் பங்குபெற்ற வகையில் காசோலை கைக்கு கிடைக்கும். உங்கள் தாயார் அல்லது மூத்த சகோதரி அல்லது மருமகள் உங்களுக்கு மிகச்சிறந்த பரிசு கொடுப்பார்கள். உங்கள் வாரிசுகளின் திருமணம் நடந்து நிறைய பரிசுகள் கிடைக்கும். பங்கு வர்த்தகம் பணம் தரும். இந்த பண வரவுகள் புதிய வீட்டுப் பொருட்களை வாங்கவும், சிலர் முதலீடு செய்யவும் பயன்படும். சுபச் செலவாகவே அமையும். இந்த பண வரவுகள் சில தம்பதி களிடம் கருத்து மோதலை உருவாக்கும். சிலரது காதல் விஷயம் வீட்டுக்குத் தெரிந்து வீடு ரணகளமாகும். வேறு சிலருக்கு மனைவிக்குத் தெரிந்து சம்பந்தப்பட்டவர் பிரச்சினைகளை எதிர்கொள்வார். சிலருக்கு மாமியாருடன் மோதல் ஏற்படும். இந்த வீட்டு களேபுரத்தில் தொழில் என்னவோ குதூகலமாக நடக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். படிக்கும் மாணவர்கள் தொழில் சார்ந்த கல்வியில் மேன்மை பெறுவார்கள். நீங்கள் தொழிலில் எந்த தளத்தில் இருந்தாலும், உங்கள் தொழில் நல்ல லாபம் கொடுக்கும். இந்த வெகுலாபம் திருஷ்டியை ஏற்படுத்தும்.
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சூரியன். இந்த ஆடி மாதத்தில் அம்மி பறக்குமோ என்னவோ- நீங்கள் அதைவிட அதிகமாக அலைவீர் கள். அது பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்ப தற்கோ அல்லது பள்ளி மாற்றுவதற்கோ அல்லது கல்லூரி சம்பந்த விஷயமாகவோ இருக்கும். நீங்கள் அரசுப் பதவியில் இருந்தால் பணியிட மாற்றம் உண்டு. அரசியல்வாதியாக இருந்தால் பதவி மாறுதல் உண்டு. சிலர் பதவி உயர்வுடள் இடமாற்றம் பெறுவார்கள். எத்தனை அலைச்சல்கள் மற்றும் மாற்றங் கள் வந்தாலும் உங்களின் மன உறுதியும் நம்பிக்கையும் அதிகமாகவே இருக்கும். சிலருக்குக் கிடைக்கும் மாறுதல்கள் நல்ல பண வசதியை அள்ளிவந்து கொட்டச் செய்யும். இந்த அதிகப்படியான பணவரவு நிறைய முதலீடுகளைச் செய்யவைக்கும். சிலர் மறைவாக அல்லது பினாமி பெயரில் முதலீடு செய்வார்கள். வேலை செய்யுமிடத்தில் தொழிலாளிகள்- முதலாளிகள் பரஸ்பரம் புரிதலோடு வேலை நடப்பதால், தொழில் சார்ந்த நிம்மதி கிடைக்கும். வேலை மாறுதல் தம்பதிகளிடையே தற்காலிகப் பிரிவை ஏற்படுத்தும். உங்கள் இளைய சகோதரி ஒரு நன்மை கொண்டுவருவார். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். உங்களின் சிலர் மனையைக் கொடுத்து அடுக்குமாடி வீடு கட்டும் திட்டம் வகுப்பீர்கள். உங்கள் வாரிசுகள் நன்மையும் தீமையும் கலந்து தருவர். கல்வி கற்கும் இந்த எண் மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பைக் கற்கமுடியும் நீங்கள் வெளியிட வேலைக்குச் செல்லும்போது வீட்டில் உங்களுக்கு உங்கள் மாமனார்- மாமியார் அல்லது மருமகன் அல்லது இளைய சகோதரி உதவிக்கு வருவார்கள். இந்த மாதம் உங்களுக்கு உஷ்ண தலைவலி வரும். ஏற்கெனவே வாங்கிய பங்குகளை விற்று புதிய பங்குகள் வாங்குவீர்கள். கவனம் தேவை: இந்த மாதம் பயணங்கள் அதிகரிப்பதால் உணவு, உடல் நிலையிலும், பண விஷயத்திலும் கவனம் தேவை. சிலருக்கு திருட்டு நடக்க வாய்ப்புள்ளது; எச்சரிக்கை அவசியம்.
ஆடி மாதம் 23, 24, 25-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: கடல் அருகிலுள்ள சிவன்- அம்பாள் கோவில்சென்று வழிபடவும். எப்போதும் அலைந்து வேலைசெய்யும் நபர் அல்லது மடப்பள்ளியில் வேலைசெய்யும் அந்தணருக்கு குடிப்பதற்கு நல்ல தண்ணீர் வாங்கிக்கொடுங்கள்.
2, 11, 20, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இந்த மாதம் உங்கள் காட்டில்- சாரி- வீட்டில் பணம் மழைதான். வீடு, மனை விற்ற பணம் வரும். அரசுவகை பாக்கிகள் திரும்பக் கிடைக்கும். பத்திரிகை, தொலைக்காட்சியில் பங்குபெற்ற வகையில் காசோலை கைக்கு கிடைக்கும். உங்கள் தாயார் அல்லது மூத்த சகோதரி அல்லது மருமகள் உங்களுக்கு மிகச்சிறந்த பரிசு கொடுப்பார்கள். உங்கள் வாரிசுகளின் திருமணம் நடந்து நிறைய பரிசுகள் கிடைக்கும். பங்கு வர்த்தகம் பணம் தரும். இந்த பண வரவுகள் புதிய வீட்டுப் பொருட்களை வாங்கவும், சிலர் முதலீடு செய்யவும் பயன்படும். சுபச் செலவாகவே அமையும். இந்த பண வரவுகள் சில தம்பதி களிடம் கருத்து மோதலை உருவாக்கும். சிலரது காதல் விஷயம் வீட்டுக்குத் தெரிந்து வீடு ரணகளமாகும். வேறு சிலருக்கு மனைவிக்குத் தெரிந்து சம்பந்தப்பட்டவர் பிரச்சினைகளை எதிர்கொள்வார். சிலருக்கு மாமியாருடன் மோதல் ஏற்படும். இந்த வீட்டு களேபுரத்தில் தொழில் என்னவோ குதூகலமாக நடக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். படிக்கும் மாணவர்கள் தொழில் சார்ந்த கல்வியில் மேன்மை பெறுவார்கள். நீங்கள் தொழிலில் எந்த தளத்தில் இருந்தாலும், உங்கள் தொழில் நல்ல லாபம் கொடுக்கும். இந்த வெகுலாபம் திருஷ்டியை ஏற்படுத்தும். இந்த திருஷ்டி உங்கள் தந்தையை பாதிக்கும். கவனம் தேவை: இந்த மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல செல்வச் செழிப்பைத் தரும். உடனே நிறைய பணம் வருகிறதே- டாஸ்மாக் போகலாமா அல்லது வேறு ஏதாவது செய்யலாமா என்று ஆசைப் படக்கூடாது. பிரச்சினை நிச்சயம். அதிக அலைச்சலால் சிலருக்கு முழங்கால் பாதிக்கும்.
ஆடி மாதம் 25, 26, 27-ஆம் தேதிகள் நன்மை தரகூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: இந்த மாதம் 8, 17, 26 ஆகிய எண்கள் தவிர மற்ற அனைத்து எண்களுமே நன்மை தரும்.
பரிகாரம்: கடல், நதி இதுபோன்று நீர்நிலைகள் அருகிலுள்ள சிவனையும் அம்பாளையும் வழிபடவும். அதிக பணவரவு தன்னிச்சையாக ஒரு இறுமாப்புத் தன்மையைக் கொடுக்கும். அதனால் வார்த்தைகளில் குதர்க்கம் மிகும். எனவே யாரையும் அதிக சுடு சொற்களால் புண்படுத்தாமல் இருக்கவும். இதுவே இந்த மாதப் பரிகாரம்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணின் அதிபதி குரு. இந்த மாதம் உங்களின் பூர்வீகப் பெருமையை பறைசாற்றவே நேரம் சரியாக இருக்கும். குலதெய்வக் கோவிலுக்குச் செல்வீர்கள். உங்களில் சிலர் வீட்டை இடித்துக் கட்டுவது அல்லது புதுப்பிப்பது போன்ற வேலைகளைச் செய்வீர்கள். வாரிசுகளுக்கு சற்று கலப்புத் திருமணம் நடக்கும். சிலருக்கு தனியார் துறையில் வேலை கிடைக்கும். அரசு சம்பந்த வேலைகள் ஏமாற்றம் தரக்கூடும். அரசியல் வாதிகள் சங்கடத்துக்கு உள்ளார்கள். உங்கள் பங்கு வர்த்தகம் எதிர்பாராத இனங்களில் லாபம் கிடைக்கச் செய்யும். உங்கள் மூத்த சகோதரியால் உங்கள் தந்தை மன வருத்தம் அடைவார். இந்த மாதம் உங்கள் திருமணம் சொந்தத்தில் நிச்சயமாகும். அரசு விஷயம், அரசு அதிகாரிகளுடன் எந்த பிரச்சினையும் வைத்துக் கொள்ளக்கூடாது. உங்களில் சிலருக்கு தந்தையின் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம், தொழில் செய்வதற்கு உங்கள் வாரிசு, மருமகன் அல்லது மருமகளும் பங்கேற்க முற்படுவர். இது உங்கள் தந்தையின் உடல்நலக் குறைவால் உண்டாகும் சூழ்நிலையால் ஏற்படும். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்வகை மருத்துவச் செலவு ஏற்படலாம். நீங்கள் கல்வி விஷயமாக வெளிநாடு செல்லும்போது அரசு சார்ந்த தரவுகள் தொல்லை தரக்கூடும். கவனம் தேவை: இந்த மாதம் உங்கள் தந்தையின் நலம் சார்ந்த பிரச்சினைகள் வரும். மற்றும் அரசு சார்ந்த தொல்லைகளும் அவமானங்களும் உண்டாகக்கூடும். உணவு விஷயத்திலும் கவனம் தேவை. அஜீரணக் கோளாறு ஏற்படலாம்.
ஆடி மாதம் 1, 2, 3-ஆம் தேதிகள் நன்மை தரகூடும். அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எங்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: மலைமீதுள்ள சிவனை வழிபடவும். மிகவும் சிரமப்படும் வயதான அந்தணருக்கு உதவிசெய்யவும். மருத்துவமனை யில் சிகிச்சைபெறும் வயதான முதியவருக்கு உதவிசெய்யவும்.
4, 13, 22, 3-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் ராகு ஆவார். இந்த மாதம் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு மற்றும் கோவில்களுக்குச் சென்றுவர நிறைய திட்டம் தீட்டுவீர்கள். ஆனால் அதற்கு ஆகும் செலவுகளை யார் தலையில் கட்டலாம் என மிகுந்த யோசனை வரும். கடைசியில் செலவை பங்கீட்டு முறைக்குக் கொண்டுவந்து விடுவீர்கள். இந்த மாதம் லஞ்சப் பணம் கொடுக்கல்- வாங்கல் தொடங்கும். இளைய சகோதரரின் திருமணம் நடக்கும் அல்லது நிச்சயதார்த்தம் நடக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சற்று அறிவுத் தடங்கல் ஏற்படலாம். உங்கள் பூர்வீக நிலம் அல்லது முன்னர் எப்போதோ வாங்கிப்போட்ட நிலத்தில் அரசு தலையீடு நுழையும். உங்களுக்கும் உங்கள் தாய்மாமனுக் கும் இடையே மனக்கசப்பு ஏற்படும். உங்கள் முயற்சிகளில் சில தடை, தாமதங்கள் காணப்படும். சிலர் அரசு சார்புடைய வேலை களில் சேர்வார்கள். ஆனால் அரசுப் பணிக்கு பணம் கொடுத்தவர்கள் சற்று காத்திருக்க நேரிடும். திருமண நிகழ்வில் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. உங்களின் நீண்டநாள் எதிரிகள் பலமிழந்து வேறிடம் செல்லும் நிலை ஏற்படும். உங்கள் மருமகன் அல்லது மருமகள் உங்களது சொத்து விவரம் பற்றி விவாதிப்பார்கள். வியாபாரம் செய்யுமிடத்தில் ஏதோவொரு வகையில் பிரிவினை ஏற்படும். அது நிறைய பொருட்களை அடுக்கும் அலமாரியாகவும் இருக்கலாம். கவனம் தேவை: இந்த மாதம் நீங்கள் வெளியாட்களைவிட குடும்ப உறுப்பினர் களிடம் கவனமாக இருக்கவேண்டும். மற்றும் அரசு இனங்களில், அரசு உத்தரவை முதலிலேயே செயல்படுத்த முயற்சி எடுக்கவும்.
ஆடி மாதம் 28-ஆம் தேதி நற்செய்தி கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: உங்கள் குலதெய்வ பூஜைக் கானபோது உங்களால் முடிந்த மற்றும் நல்லவிதமாக செலவழியுங்கள். அங்கு பூஜைசெய்யும் அர்ச்சகர்களுக்கும் முடிந்தவரை வஸ்திரம் போன்ற தானம் கொடுங்கள். படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு டியூஷன் ஃபீஸ் கட்ட உதவுங்கள்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் புதன் ஆவார். இந்த மாதம் எதைத் தொட்டாலும் அலைச்சல், செலவுகள் ஏற்படும். உங்களில் சிலர் புதிதாக வியாபாரம் ஆரம்பிக்க முனைவதால் அதன்பொருட்டு முதலீட்டு செலவிருக்கும். மனையை விற்று அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குவீர்கள். தந்தையின் ஆன்மிகப் பயணத்திற்கு பணம் கொடுப்பீர் கள். வீட்டில் மராமத்து பணி நடக்கும். இதன் பொருட்டு உங்கள் தாய்க்கும் வாழ்க்கைத் துணைக்குமிடையே மனஸ்தாபம் ஏற்படும். வயிற்றில் வலி வரலாம். உங்களில் சிலரது காதல் ஈகோ விஷயமாக பிரிய நேரிடும். திருமணத்தில் எதிர்பாராத செலவு அல்லது இடையூறு ஏற்படலாம். சிலரின் மாங்கல்யம் திருட்டு போக இருந்து காப்பாற்றப்படும். சிலர் தாலிதானம் செய்வீர்கள். உங்கள் கான்ட்ராக்ட், ஒப்பந்த விஷயம் கைநழுவிப் போவதுபோல் இருந்தாலும் கடைசி நேரத்தில் கிடைத்துவிடும். வெளிநாட்டுப் பயணம் சிலருக்கு அமையும். அது மேற்படிப்பு அல்லது பேரன், பேத்தியைப் பார்ப்பதற்காக அமையும். உங்களின் பதவி உயர்வு இடமாற்றம் கொண்டுவரும். சிலரின் மூத்த சகோதரர் அவர் விருப்பப்படி எங்காவது சென்று விடுவார். சமையல் செய்யும்போது பொருட் கள் வீணாக வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் நிறைய செலவுசெய்து ஒரு பதவியைப் பிடித்துவிடுவார்கள். மேற்கல்வி மாணவர்கள் ஒரு தடைக்குப்பிறகு மேன்மை காண்பர். கவனம் தேவை: பயணங்களின்போது கவனம் தேவை. கைபேசி மற்றும் காதுகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். இந்த மாதம் நிறைய செலவு செய்யவேண்டி இருப்பதால், அவற்றுக்கான அத்தாட்சிகளை பத்திரப்படுத்தவும்.
ஆடி மாதம் 7, 8, 9-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: மறைவாக, பள்ளத்தில் அமைந் துள்ள சிவனை வணங்கவும். வெளியே நடமாட இயலாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பெரியவருக்கு- அவர் வேற்று மத, இன, மொழி நபராக இருந்தாலும் தேவை யைக் கேட்டு உதவிசெய்யுங்கள். பள்ளிக்கூட கட்டுமான செலவு அல்லது பழுதுபார்க் கும் செலவை முடிந்து மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவா.ர் இந்த மாதம் உங்களுக்கு மிக வேறு பாடான நிகழ்வுகள் நடக்கும். உங்கள் தொழிலில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படப் போகும் நிமித்தம் தெரியும்போது, அது எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய நன்மையைத் தந்துவிட்டு புன்முறுவல் பூக்கும். குடும்ப சொத்து வராததுபோல் இருந்து, பின் ஏதோ வொரு காரணத்தால் பெரும்பகுதி உங்கள் கையில் கிடைக்கும். நீங்கள் விரும்பிய நபர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என தெரியவந்தாலும், வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என சாதாரணமாகப் போய்விடுவீர்கள். மறுமணம் நடக்கும்போது வரும் சிக்கல்களையும் சாதாரணமாக அகற்றிவிடுவீர்கள். வாரிசுகளுக்குத் திருமணம் நிச்சயமாகும்போது, வரும் மருமகன் சில விஷயங்களில் பிடிவாதம் பிடிக்கும்போது மட்டும் சற்று திணறிவிடுவீர்கள். இந்த மாதம் பணவரவு பல வழிகளில் வந்தாலும் அது பற்பல விஷயங்களில் செலவும் தரும். உங்கள் திருமணத்தில் சற்று கலப்பு இருக்கும். உங்கள் திருமண விஷயத்தின்போது வரப்போகும் மாமனார்- மாமியார் சற்று அமைதியாக வில்லத்தனம் செய்வர். அதன் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்கவேண்டும். கொழுப்பு சம்பந்தமான பிரச்சினை வரலாம். கவனம் தேவை: இந்த மாதம் மலைபோல் வரும் பிரச்சினைகள் பணிபோல் நீங்கும். இதற்கு உங்கள் மனம், அறிவு போன்றவற்றை உறுதியாக- ஸ்திரமாக- தைரியமாக வைத்துக்கொள்வது அவசியம். கூடவே நிறைய முன்யோசனைகளும் தேவை.
ஆடி மாதம் 20, 21, 22-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: பெருமாளும் தாயாரும் இணைந்திருக்கும் கோவில்களில் வழிபடுங்கள். அந்தணர்களின் திருமணத்திற்கு உதவுங்கள். கோவில் மடப்பள்ளிக்கு ஏதேனும் பழுதிருப்பின் அதனை நீக்க ஏற்பாடு செய்யுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் கேது. இந்த ஆடி மாதம் நீங்கள் யோசனை செய்த காரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். நேர்மறை, எதிர்மறை பணம் கொடுக்கல்- வாங்கல் வேகம் பெறும். உங்கள் திருமணம் சற்று கலப்பாக இருந்தாலும் அல்லது காதல் மணமாக இருந்தாலும் பண வரவுக்கு ஒரு குறையும் இருக்காது. மறுமணத்திற்குக் காத்திருப்போருக்கு அது கைகூடி வரும். உங்கள் அடுக்குமாடி பற்றிய வில்லங்கம், எல்லாவித முயற்சியாலும் சரியாகிவிடும். உங்களின் பலரின் வாரிசுகளுக்குத் திருமணம் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு பண விஷயங்கள் எதிர்பாராத தொல்லை தரும் என்றாலும், உங்களது குயுக்தியால் அதிலிருந்து மீண்டுவிடுவீர்கள். உயர்கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மாணவர்கள் சற்று தடை, வில்லங்கத்தை சந்திக்கவேண்டி வரும். முழங்கால் வலிவர வாய்ப்புண்டு. சிலரது வேண்டாத பழக்கங்கள் குடும்பத்துக்குத் தெரியவரும். பங்கு முதலீடுகள் தொடர்ச்சியாக லாபம் கொடுக்க இயலாது. கலைத்துறையினர் நன்மையில் தீமையும், தீமையில் நன்மையும் பெறுவார்கள். எப்போதும் அழுத்தமாக- அமைதியாக யோசிக்கும் நீங்கள் இந்த மாதம் சற்று ஆர்ப்பாட்டம் கொல்வீர்கள். எங்களுக்கும் கோபமெல்லாம் வரும் என முழக்கமிடுவீர்கள். கவனம் தேவை: உயர்கல்வி, வீடு, மனை விஷயங்களில் சற்று கவனமாக இருக்கவும். இந்த மாதம் கடன் வாங்கினால் அது பெருகிவிடும்; வட்டி அதிகம் வந்துவிடும். கவனம். ஆடி மாதம் 5-ஆம் தேதி நற்செய்தி கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: மலைமீதுள்ள விநாயகரை வணங்கவும். சமையல் வேலை செய்பவருடைய தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சனி ஆவார். இந்த மாதம் மறைமுக வருமானம் அதிகம் கிடைக்கும். அதிக பணவரவு வீடு, வாகனம், மனையில் முதலீடு செய்யவைக்கும். பூர்வீக வீட்டைப் பழுதுபார்க்க நேரிடும். சிலர் வாரிசுகளின் வேலை, தொழிலின் பொருட்டு மறைமுக லஞ்சம் கொடுக்கவேண்டி வரும். இந்த மாதம் உங்களின் சில சொற்கள் பிறரை காயப்படுத்தும். குடும்பத்தில் வரும் சண்டைகளுக்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். கைபேசி பழுதுபட வாய்ப் புண்டு. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது மிக கவனமாக இருப்பது அவசியம். வீடு, மனை, வாகன விஷயங்களை இந்த மாதம் தவிர்த்துவிடுங்கள். முன்னேற்பாடுகளை மட்டும் செய்துகொள்ளுங்கள். கேட்ட கடன் கிடைக்கும். உங்களில் சிலர் கடனை அடைத்துவிடுவீர்கள். திருமண விஷயம் யோசனை அளவில் இருக்கும். உங்கள் தந்தையால் சிறு சங்கடம் நேரும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். உயர்கல்வி மற்றும் வேலை கிடைப்பதில் சிறுசிறு தடை, தாமதம் ஏற்படும். கையில் பணம் இருந்தாலும் வியாபாரத்தில் முதலீடு செய்வதிலோ, வணிகத்தை விருத்தி செய்வதிலோ சில நடைமுறை சங்கடங்களை எதிர்கொள்வீர்கள்.. உங்களில் சிலரின் மருமகன் ஏதோவொரு கோபம்கொண்டு வெகுண்டெழுவார். அரசியல்வாதிகளால் எதையும் விளம்பரமாக செய்யமுடியாத சூழ்நிலை உருவாகும். கலைஞர்கள் வேளையில் ஏதோவொரு மறைவுநிலை தடை காண்பர். மாமியார் நல்லது செய்கிறேன் என்று ஒரு இம்சையை இழுத்துவிடுவார். பெற்றோர்வகையில் ஒரு துன்பமுண்டு. கவனம் தேவை: இந்த மாதம் நிறைய எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும். அதற்கு முக்கிய காரணம் உங்களின் அதீத பண வரவாக இருக்கலாம். மேலும் உங்கள் பேச்சு நீளமாக அமைவதால், வாக்கிலும், வங்கி விஷயத்திலும் கவனமாக இருங்கள்.
ஆடி மாதம் 9, 10, 11-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 6, 15, 24.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கவும். சமையல் வேலை செய்யும் அந்தணப் பெண்களிடம் தேவையைக் கேட்டறிந்து உதவிசெய்யுங்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு பை, சாக்ஸ் என வாங்கிக் கொடுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய். இந்த மாதம் திருமணம் நடக்கும். நிச்சயம், தாம்பூலம் மாற்றுவது என திருமணம் சார்ந்த வேலைகள் நடக்கும். அவற்றின் பொருட்டு செலவும் அதிகமாகும். பூர்வீக சொத்து பணம் தரும். இது பூர்வீக நிலத்தை குத்தவைக்கு விடுவதாலும் இருக்கும். உங்கள் வாரிசுகள் பள்ளி மாறக்கூடும் அல்லது வேலை மாறுவர். உங்களில் சிலர் முன்பு பார்த்த வேலைக்குச் செல்வீர்கள். உங்களில் சிலர் கண் பிரச்சினைக்கு மருத்துவரிடம் செல்வீர்கள். இந்த எண் களிலுள்ள கருவுற்ற பெண்களுக்கு சிசேரியன் செய்ய வாய்ப்புள்ளது. அல்லது குழந்தைப் பிறப்புக்காக கர்ப்பப்பை சிகிச்சை நடக்கும் வாய்ப்புண்டு. குரு பார்வை இருப்பதால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். தொழில் புரிவோர் தொழிலில் நல்ல லாபம் கண்டாலும், ஏதோவொரு சிறு நெருடல் இருந்துகொண்டே இருக்கும். அரசியல்வாதிகள் நன்மையில் தீமை காண்பர். கலைஞர்கள் பிரபலமடைவதாலும் விளம்பரப் படங்களில் நடிப்பதாலும் நல்ல பணப்புழக்கம் பெறுவர். திருஷ்டி கழிப்புபோல் எங்காவது அடிபடவும் நேரிடும். நிறைய ஆன்மிக தரிசனம் உண்டு. பங்கு வர்த்தகம் சில இனங்களில் அதிக ரிஸ்க் எடுக்கவேண்டாம். கவனம் தேவை: வயிறு சம்பந்தமாக கவனம் தேவை. கர்ப்பப்பை பிரச்சினைகளில் மருத்துவர் சொல்வதை கவனமாகக் கடைப்பிடிக்கவும்.
ஆடி மாதம் 16, 17, 18-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: குன்றுதோறும் உள்ள முருகனை வணங்கவும். வள்ளி, தெய்வானையுடன் சேர்ந் துள்ள கல்யாண தோற்றம்கொண்ட கந்தனை வணங்குவது சிறப்பு. நோய்க்கு மாற்று மருந்து தேவைப்படுபவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.
செல்: 94449 61845