ங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத் தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்தி லுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார். நீர்வளம், நிலவளம் நிறைந்த இந்த கிராமத்தில் அன்னை ஆதிபராசக்தியான அமிர்தவல்லி அம்பாளும், பரம் பொருளான இறைவன் அமிர்தகடேஸ்வரரும் விரும்பிக் குடிகொண்டுள்ளனர். இக்கோவிலைப் புதுப்பித்து, 12-2-2020 அன்று மகாகும்பாபிஷேகத்தை வெகுவிமரிசையாக அறநிலையத்துறை அனுமதி யுடன், காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் ஆதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சாத்தநத்தம் கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து நடத்தியுள்ளனர்.

sivan

இந்த ஆலயத் திருப்பணிக்குப் பெரிதும் துணையாக இருந்த செயலாளர் மா. பரமசிவம், பொருளாளர் சோதிடர் சிவ. ராமசாமி, பொருளாளர் சாத்தநத்தம் பாலகிருஷ்ணப்பிள்ளை மற்றும் இவரது இளவல்களான சிங்கப்பூரில் பணிசெய்யும் கார்த்திகேயன், பரணி ஆகியோர் சிவ அன்பர்கள்மூலம் நிதிதிரட்டி கோவில் பணியை சிறப்புடன் நடத்த உதவியுள்ளனர். பல ஊர்களைச் சேர்ந்த சிவபக்தர்கள் பொருளுதவி செய்துள்ளதையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர் ஆதமங்கலம்- சாத்தநத்தம் கிராமமக்கள்.

இறைவனும் இறைவியும் இங்கு எப்படி கோவில்கொண்டனர் என்பது மெய்சிலிலிர்க்க வைக்கும் வரலாறு. தேவர்களின் தலைவனான இந்திரனைக் காண துர்வாச மகரிஷி இந்திரலோகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். எதிரே ஐராவத யானைமீது வந்துகொண்டிருந்த இந்திரன், மகரிஷியைக் கண்டதும் யானைமீதிருந்து இறங்கி அவரை வணங்கினான். இதைக்கண்டு மகிழ்ந்த மகரிஷி தன்னிடமிருந்த தெய்வசக்தி மாலை ஒன்றை அவனிடம் தந்து ஆசிர்வதித்தார்.

Advertisment

அப்போது இந்திரன் அந்த மாலையை அலட்சிய மாக வாங்கி யானைமீது வைத்துவிட்டு மகரிஷி யிடம் உரையாடிக்கொண்டிருந்தான். மாலையின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட வண்டுகள் ரீங்கார மிட்டு மாலையைச் சுற்றிவந்தன. அது யானைக்குத் தொல்லையாக இருந்ததால், தனது தும்பிக்கையால் மாலையைக் கீழேவீசி காலால் மிதித்து நாசம் செய்துவிட்டது. இதைக்கண்ட மகரிஷி கோபம் கொண்டார். ""நான் பரிசாக அளித்த மாலையைக் கழுத்தில் அணியாமல் யானைமீது வைத்து என்னை அவமதித்து விட்டாய். நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் இளமைப்பொலிவுடன் அழகாக இருக்கிறோம் என்ற மமதையும் ஆணவமுமே இதற்குக் காரணம். நீங்கள் அனைவரும் வயது முதிர்ந்து, நரை திரை தோன்றி, உடல் பலமிழந்து துன்பப்படுவீர்களாக'' என்று சாபமளித்துச் சென்றுவிட்டார் துர்வாச மகரிஷி.

இதனால் இந்திரனும் தேவர்களும் மனம் கலங்கி, சாபத்திலிருந்து விடுபட வழிதேடி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.

அப்போது திருமால், ""திருப்பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தை நீங்கள் அனைவரும் பருகினால் பழைய உருவநிலையை அடைவீர்கள். அதன்பிறகு என்றுமே உங்களுக்கு மரணபயம் ஏற்படாது'' என்று உபாயம் கூறினார்.

Advertisment

தேவர்களால் தனித்துநின்று திருப்பாற்கடலைக் கடையமுடியாது என்பதால், அசுரர்கள் துணையோடு வாசுகிப் பாம்பைக் கயிறாகவும், மேருமலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது வாசுகிப் பாம்பு வலிலிதாங்க முடியாமல் கொடிய ஆலகால விஷத்தைக் கக்கியது. அனைத்துயிர்களையும் காக்கும் பொருட்டு அந்த விஷத்தைப் பரம்பொருளான பரமசிவன் பருகினார்.

ss

இதைக்கண்டு பதறிய உமையவள், விஷம் உள்ளே இறங்காமலிருக்க ஈசனின் தொண்டையைத் தன் திருக்கரங்களால் இறுகப் பற்றினாள். அந்த விஷம் இறைவனின் தொண்டையிலேயே நின்றுபோனது. (இந்நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர் எனப் படுகிறது.) பின்னர் அம்பாளும் ஈஸ்வரனும் கயிலாயம் நோக்கி ஆகாய மார்க்கமாகப் புறப்பட்டனர். அப்படி செல்லும்வழியில் இறைவனுக்குக் களைப்பு மேலிட, கள்ளிக்காடாக இருந்த இந்தப் பகுதியில் இறங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே திருப்பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தைப் பங்கிடுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே போட்டி உருவானது.

அப்போது மகா விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கிவிட்டு, அமிர்தகலசத்தை தேவர்களிடம் கொடுத்தார். கைக்கு அமிர்தகலசம் வந்ததும் தேவர்கள் தாங்கள் மட்டுமே உண்ணவேண்டுமென்று மகிழ்ச்சியுடன் தேவலோகம் நோக்கிப் புறப்பட்டனர்.

செல்லும் வழியில் சித்புருஷர், ஔரவர் எனும் இரு முனிவர்கள் தவம் செய்துகொண்டிருந்தனர்.

அவர்கள் தவக்கோலத்தைக் கண்ட தேவர்கள் தங்களையறியாமல் அவர்களிடம் சென்று பேசினார் கள். அவ்விரு முனிவர்களும் தேவர் களைப் பார்த்து, ""முதன்முதலில் பரம்பொருளான இறைவனுக் கல்லவா நீங்கள் அமிர்தத் தைப் படைத்துப் பூஜித்திருக்க வேண்டும்? அமுதம் கிடைத்த ஆனந்தத்தில் இறைவனையே மறந்து இவ்வளவு தூரம் வரலாமா?'' என்று கூறவும், தன்னிலையடைந்த தேவர்கள் அந்த இரு முனிவர்களையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு இறைவனைத் தேடிச்சென்றனர்.

கள்ளிக்காட்டில் உமாதேவியாரோடு மயக்க நிலையிலிருந்த சிவனைக் கண்டனர். தங்கள் பிழையைப் பொறுக்குமாறு பார்வதிதேவியிடம் மன்னிப்புக்கேட்டு, அமிர்தகலசத்தை பார்வதியிடம் கொடுத்தனர். தேவி தன் கையினால் அமிர்தத்தை அள்ளி இறைவனுக்கு ஊட்டினாள். ஒருவாய் அமிர்தம் உண்டதும் இறைவன் மயக்கம் தெளிந்து எழுந்தார். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் இறைவனை வணங்கினர். அவர்களை இறைவன் ஆசிர்வதித்தார். கயிலாயம் செல்லும் வழியில் இந்தப் பகுதியில் மயக்கத்தினால் தங்கி அமிர்தம் உண்டதால், இவ்வூருக்கு அமிர்த மங்கலம் என்ற பெயர் உருவானது.

இத்தலத்து ஈசன் அமிர்தகடேஸ்வரர், அமுதுகண்ணீஸ்வரர் என்றும், இறைவி அமிர்தவல்லி, அமிர்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார் கள்.

அமிர்தமங்கலம் என்னும் இவ்வூரின் பெயர் காலப்போக்கில் ஆதமங்கலம் என்று மருவிவிட்டது.

காமதேனுப்பசு தன் மரணபயத்தைப் போக்கிட இத்தல இறைவனைப் பூஜை செய்துள்ளது. அதற்கான சிற்பம் கோவிலில் உள்ளது. ஆஞ்சனேயரும் இவ்வாலய இறைவனைப் பூஜைசெய்து மரணபயம் நீங்கப்பெற்றார்.

ss

மனிதனின் இறுதி நாட்களில் உண்டாகும் கனவுகள் பலவகை. அவற்றுள் சில கனவுகள் பற்றி இவ்வாலயக் கல்வெட்டுச் செய்தியில் கூறப்பட்டுள்ளன. கனவில் கரிய பல்லுடைய மனிதனைக் கண்டாலும், பெரும் சூறா வளிக்காற்று தன்னைத் தூக்கிச் செல்வதுபோலவும், பொன்பொருளைத் தானே வாரி இரைப்பதுபோலவும், தாமரைத் தண்டுகளை உண்பதுபோலவும், குரங்கு தன்னை இழுத்துச் செல்வதுபோலவும், கழுதை வண்டியில் சவாரி செய்வதுபோலவும், எமவாகனத்தில் மனம்கலங்கிச் செல்வதுபோலவும், காராம்பசு அல்லது கருப்புக் கன்றுக் குட்டியைக் கட்டுவதுபோலவும், கோரை மாலையை அணிந்து தெற்கு நோக்கிச் செல்வது போலவும் கனவு காண்பவர்கள் இறுதிக் காலத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கனவு கண்டவர்கள்கூட இவ்வாலய இறைவனையும் இறைவியையும் வந்து வணங்கினால் இன்னும் சிலகாலம் நீண்டுவாழ இறைவன் அருள்செய்கிறார் என்ற தகவல் கல்வெட்டுச் சான்றாக உள்ளது.

இவ்வாலயத்தில் விநாயகர், நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான், வள்ளி, தெய்வானையுடன் முருகன், மோகினித் தாயார், துர்க்கை, நவகிரகங்கள், கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி என அனைவரும் தனித் தனி சந்நிதியில் ஆட்சி செய்கின்றனர். அம்மன் சந்நிதிக்கு நேர்கிழக்கில் சனி பகவான் காட்சிதருகிறார்.

சனி, இறைவன் உட்பட அனைவரையும் ஏழரை ஆண்டுகள் பிடித்துக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அம்பாளை ஒருமுறை பிடிக்கவந்தார்.

அப்போது அம்பாள், ""இன்றைக்குப்போய் நாளை வா'' என்று சொல்ல, ""இப்படித்தான் தங்கள் மூத்தபிள்ளை விநாயகர் சொல்லிலி என்னை இன்றளவும் ஏமாற்றுகிறார். அப்படி நீங்களும் ஏமாற்றவா?'' என்று சனி பகவான் கேட்க, ""இல்லை; அப்படிச் செய்ய மாட்டேன்'' என்று சனிபகவான் கைமேல் உறுதியளித்தாள் அம்மன். அப்போது அம்மை நோய், பெரியம்மை நோய்களை தன் கைகள்மூலம் சனிபகவான் உடலிலில் இறக்கிவிட்டாள் அம்மன். இதனால் சனிபகவான் மிகுந்த சிரமத்திற்காளானார்.

அம்மனைப் பிடித்த ஏழரை ஆண்டுகள் அம்மை நோயால் சனிபகவான் துன்பப் பட்டதால், அம்மனுக்கு எந்தத் துன்பத்தை யும் சனிபகவானால் ஏற்படுத்த முடியவில்லை. அம்மன் தன் கடமைகளை நிறைவேற்றினாள்.

அப்படிப்பட்ட அம்மனுக்கு எதிரே சனிபகவான் உள்ளதால், சனிதோஷம் மற்றும் ஜாதகரீதியாக ஏழரைச் சனி, நான்கில் சனி, எட்டில் சனி உள்ளவர்கள் இவ்வாலய அம்மனையும், எதிரேயுள்ள நவகிரக சனிபகவானையும் ஒருசேர வணங்கினால், அந்த பாதிப்புகளிலிருந்து நிவர்த்திபெறலாம் என்கிறார்கள் பலன்பெற்ற பக்தர்கள்.

""இவ்வாலயத்திலுள்ள துர்க்கையின் சக்தியைக் கண்கூடாகக் கண்டுள்ளோம்'' என்கிறார்கள் திருக்கோவிலூரைப் பூர்வீக மாகக் கொண்டு தற்போது சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் வசித்து வரும் மராட்டிய மொழியைத் தாய்மொழி யாகக் கொண்ட மாதவ் மற்றும் சாய் பிரசாத்தும் அவரது பங்காளிகளும். இதுபற்றி சாய்பிரசாத், ""ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குலதெய்வம் உண்டு. அதுபோல் எங்கள் குலதெய்வம்பெருமாள் என்றெண்ணி வழிபட்டுவந்தோம். ஆனாலும் குடும்பத்தில் பிரச்சினை, சஞ்சலம், மனக் கஷ்டம், நிம்மதியின்மை இருந்துவந்தது. எனது மகனுக்கு பூணூல் போடும் விழா நடத்த முயன் றோம். பல தடங்கல்கள் ஏற்பட்டன. ஏனிப்படி என யோசித்து, அதற்காகப் பிரசன்னம் பார்த்தோம். அங்கே சொன்னார்கள்- "உங்கள் குலதெய்வம் துர்க்கை. உங்கள் முன்னோர்கள் ஒரு கோவிலையே பராமரித்து வந்துள்ளனர். காலப்போக்கில் அக்கோவிலைப் பராமரிக்க முடியாமல் போய்விட்டது.

அந்த துர்க்கை உங்கள்மீது கோபத்தில் இருக்கி றாள். அந்த அம்மனைத் தேடி வணங்குங்கள்' என்று. அந்த துர்க்கையை எங்கே தேடுவது என யோசித்தபோது, எங்கள் சகோதரர் கனவில் வந்து துர்க்கையே இந்தக் கோவிலையும் இவ்வூரையும் அடையாளம் காட்டினாள். அதன்படி இங்குவந்து துர்க்கையைப் பணிந்து மெய்சிலிலிர்த்தோம்.

அச்சமயம் இக்கோவிலைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கியிருந்தார்கள்.

எங்கள் துர்க்கைக்கு இடமளித்த அமிர்த கடேஸ்வரர், அமிர்தவல்லிக்கு நன்றி செலுத்தும் விதமாக எங்கள் பங்காளிகள், சகோதரர்கள் உதவியுடன் எங்களால் முடிந்ததைத் திருப் பணிக்கு அளித்தோம். துர்க்கைக்கு வெள்ளிக் கவசம் செய்து அணிவித்தோம். அதன்பின் என் மகனுக்குத் தடைப்பட்ட பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேகத்துக்கு எங்கள் சகோதரர்கள், பங்காளிகளுடன் வந்து கலந்துகொண்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, எனது சகோதரருக்கு அவர் வேலைசெய்யும் அலுவலகத்திலிருந்து பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளதாக செல்போன்மூலம் தகவல் வந்தது. எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. அதேபோல் எங்கள் பங்காளிகளுக்கும் மங்கள கரமான நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன'' என்றார் பரவசத்துடன்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு, 34 வயதுள்ள தன் மகனுக்குப் பெண்தேடி பெரிதும் சிரமப்பட்டுள்ளார். இவ்வாலய இறைவனின் மகிமையைக் கேள்விப்பட்டு, இங்குவந்து தன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டி அர்ச்சனை செய்து சென்றுள்ளார். உடனடியாக அவரது மகனுக்குப் பெண் கிடைத்து திருமணமும் நடைபெற்றுள்ளது. இந்த அம்மனின் அருள்தான் இதற்குக் காரணமென்று, அதற்குப் பிரதிபலனாக அமிர்தவல்லி அம்பாளுக்கும், மோகினித் தாயாருக்கும் தங்கத்தில் தாலிலி செய்து காணிக்கையாகச் செலுத்தியுள்ளார். ""இந்த சம்பவம் இக்கோவில் கும்பாபிஷேகத்திற்குப்பிறகு குறைந்த காலத்தில் நடைபெற்றுள்ளது'' என்கி றார் சுரேஷ்பாபு.

இவ்வாலயத்தில் பிரதோஷம், மாசிமக உற்சவம், மகாசிவராத்திரி உட்பட அனைத்து சிவாலய வழி பாட்டு விழாக்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. திருமணம், மணிவிழா, பொன்விழா, வைரவிழா போன்றவற்றை இவ்வாலயத்திற்கு வந்து நடத்திய தம்பதிகளுக்கு நோயற்ற நீண்ட ஆயுளை வழங்குகிறார் இறைவன்.

அமைவிடம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம்- தொழுதூர் சாலை யிலுள்ள ஆவினங்குடி பஸ் நிலையத்திலிலிருந்து வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இவ்வாலயம். அருகில் விருத்தாசலம் பழமலைநாதர், சுந்தரரால் பாடப்பட்ட திருவரத்துறை எனும் திருவட்டத்துறை, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி, நல்லூர் வில்வவனேஸ்வரர், தே.புடையூர் பசுபதீஸ்வரர் கோவில்கள் சுற்றிலும் உள்ளன. போக்குவரத்து வசதிகள் நிறைய உள்ளன. தொடர்புக்கு: ஆலய அர்ச்சகர் மா. கார்த்திகேய குருக்கள், செல்: 83003 48715; ரா. முத்து, செல்: 97864 49905.